• Please avoid unfair and unethical methods. If any discrepancies found, the user will be removed. Kindly follow the rules and regulations.

Neengaa Kanale Episode - 5

Devi

Author
Author
#1
ஹாய் பிரெண்ட்ஸ்...

நீங்கா கனலே அத்தியாம் ஐந்து பதிவிட்டு விட்டேன்.. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..

அத்தியாயம் ஐந்து
சித்தார்த் பெயரைக் கேட்டவுடன் என்னவென்று சொல்ல முடியாத உணர்வுகளுக்குள் சென்ற இஷா.. தன்னை மறந்தது எத்தனை நேரமோ , வெளியே கேட்ட பேச்சுக் குரலில் சுற்றுபுறம் உணர்ந்து, தன்னை நிதானபடுத்திக் கொண்டாள்.
பின் ரேஷ்மியை அழைத்தாள்.
உள்ளே வந்த ரேஷ்மி அவளின் முகத்தை ஆராய்ந்தபடி,
“ஆர் யூ ஆல்ரைட் இஷா?” என வினவ,
“ஹ்ம்ம்.. “ என்று மட்டும் கூறியவள், மறுபடி தங்கள் கேஸ் பற்றி விவரங்களை மேலோட்டமாய் பார்த்துக் கொண்டாள்.
சற்று நேரத்தில் இவர்கள் கேஸ் ஹியரிங் வர, இஷானும் வந்து இருந்தான். மூவருமாக கோர்ட் உள்ளே சென்றனர்.
இஷா வக்கீல்கள் அமரும் இடத்தில் அமர, இஷானும், ரேஷ்மியும் பார்வையாளர்கள் அமரும் இடத்தில் அமர்ந்து இருந்தனர்.
இவர்களின் எதிர்கட்சி வக்கீல் யார் என்று எதிரில் அமர்ந்து இருந்தவரை பார்க்க, அவரும் கிட்டத்தட்ட இஷாவின் வயதே.. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவுடன் அதிர்ந்தனர்.
அந்த வக்கீலை அவளுக்கு நன்றாகவே தெரியும்.. இவளின் பேட்ச்மெட் தான்.. நல்ல தோழனும் கூட.. ஆனால் அவன் தனக்கு எதிராக எப்படி என்று யோசித்த போது தான், காலேஜ் படிக்கும் போது இவள் அப்பா பிசினஸ் பண்ணுகிறார் என்ற அளவில் தான் எல்லோருக்கும் தெரியும்.. இஷா க்ரூப்ஸ் வாரிசு என்று யாருக்கும் தெரியாது.. தெரிய வேண்டிய அவசியமும் இல்லாதபடி தான் இஷாவும் நடந்து கொண்டாள்.
அவனை பார்த்து புன்னகைக்கலாமா என்று எண்ணிய போது, ஜட்ஜ் வரும் அரவம் கேட்க, எல்லோரும் எழுந்து நின்றனர்.
சித்தரத்தின் பி.ஏவான விக்ரம் பார்வையாளர் இடம் நோக்கி சென்றான்.. பொதுவாக அவனுக்கு வேலை ஆபீசில் தான்.. ஆனால் விக்ரம் மட்டும் ஆர்க்யுமென்ட் பார்க்க வருவான்..
அவனும் லாயராக ஆசைப்பட்டவன். ஆனால் அவன் வீட்டு சூழ்நிலையில் கவேர்மென்ட் எக்ஸாம் எழுதி வேலையில் சேர நேர்ந்தது. மேலும் சித்தார்த் பி.ஏ என்பதால் சில பாயிண்ட்ஸ் சித்தார்த் டிக்டேட் செய்யும்போது அதை புரிந்து கொள்வதற்காக தனக்கு புரியும் வகையில் குறிப்பெடுத்துக் கொள்வான்.
முதலில் ஒன்று இரண்டு கேஸ்களில் சித்தார்த்துக்கே இந்த குறிப்புகள் கை கொடுக்க, அதன் பின் அவனே விக்ரமை வரசொல்லி விடுவான்.
இன்றைக்கும் உள்ளே வந்தவன், நேராக ரேஷ்மி அருகில் சென்றவன், அவளை சற்று வெறுப்பேற்றும் விதமாக அவள் அருகில் அமர்வது போல் செய்து விட்டு, பின் இஷான் அருகில் சென்று அமர்ந்தான்.
விக்ரமை பார்த்து ரேஷ்மி முறைக்க, அவளை பார்த்து அவனோ சிரித்தான். இதை எல்லாம் கவனிக்காதது போல் கவனித்துக் கொண்டு இருந்தான் இஷான்.
இஷாவின் உள்ளம் படபடப்பாகியது.. கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் கழித்து சித்தார்த்தை காண போகிறாள். அவளின் இதய துடிப்பு குதித்து வெளியே விழுந்து விடுமோ என்று அஞ்சும் அளவிற்கு இருந்தது.
முதலில் டவாலி உள்ளே வர, அவர் பின்னால் சித்தார்த் வந்தான். அவனுக்காக எழுந்து நின்ற அனைவரையும் பார்த்து கை கூப்பி வணக்கம் சொல்லிவிட்டு அமர போனவன், இஷாவை பார்த்து ஒரு நொடி திகைத்தவன் அதை மறைத்து விட்டு சாதாரணமாக அமர்ந்தான்.
அவன் அமரவும், எல்லோரும் அமர, இஷா மட்டும் அவனை கண் எடுக்காமல் பார்த்தாள். அவள் அருகில் அமர்ந்து இருந்த மற்றொரு வக்கீல் அவளின் கோட்டை பிடித்து இழுக்க, சுதாரித்து அமர்ந்தாள்.
அமர்ந்து கேஸ் கட்டை ஆராய்வது போல், சித்தார்த் தோற்றத்தை மனதினுள் கொண்டு வந்தாள். எப்போதுமே அவன் ஆணழகன் தான். இப்போதோ படிப்பும், பதவியும் கொடுத்த மிடுக்கு அவனை அரசனாக்கி காட்டியது. முகத்தில் எப்போதும் இருக்கும் குறும்பு கலந்த புன்னகை மறைந்து, எதையுமே வெளிப்படுத்தாத தன்மை இருந்தது.
அவன் தன்னை அடையாளம் கண்டு கொண்டானா என்று அவளின் மணம் பரிதவித்தது. தன்னோடு படித்த ராஜேஷை தனக்கு அடையாளம் தெரியும்போது, தன் வாழ்கை துணையாக அவளை நினைத்தவனுக்கு அவளை அடையாளம் தெரியாமல் போகுமா என்ற எண்ணம் அவளுக்கு தோன்றவில்லை. அவன் அவளை ஒரு நொடி பார்த்தது கூட அவளுக்கு தெரியவில்லை..
கடவுளே பார்த்த முதல் வினாடியே இப்படி தவிக்கிறேனே, இன்னும் எத்தனை நாட்கள், குறைந்த பட்சம் இந்த கேஸ் முடியும் வரையாவது பார்த்தாக வேண்டுமே.. நான் எப்படி சமாளிக்க போகிறேனோ தெரியவில்லையே..? என்று மனதுக்குள் புலம்பினாள்.
தன் முன்னால் இருக்கும் வழக்கு விவரம் படிப்பதாக காட்டிக் கொண்டு தன்னை சமன் செய்தான் சித்தார்த்.. அவனுக்கு இன்று இஷா க்ரூப்ஸ் கேஸ் ஹியரிங் வருவது தெரியும். ஆனால் இஷாவை எதிர்பார்க்கவில்லை.
எட்டு வருடங்களுக்கு முன் அவள் காலேஜ் பாதியில் விட்டு சென்று இருந்தாள். அதை தொடர்ந்து முடித்து இருப்பாள் என்று தெரியும். இந்த பரந்த உலகில் அவளை மீண்டும் சந்திப்போம் என்று எண்ணவில்லை...
இப்படி அவன் எண்ணங்கள் செல்லும் போதே, சில நாட்கள் முன் காலை -காரில் கேட்ட பாடலுக்கே அவளின் நினைவு வந்ததே.. அதற்கு என்ன சொல்கிறாய்... என்றது மனசாட்சி..
தன் கண்களை அழுந்த மூடி திறந்து உணர்வுகளை கட்டுபடுத்தியவன், ஹியரிங் ஆரம்பிக்க சொல்லி உத்தரவிட,
வழக்கமான கோர்ட் ப்ரோசீஜர் முடிந்தவுடன் வாதியின் சார்பில் ஆஜாராகும் ராஜேஷ் எழுந்து பேச ஆரம்பித்தான்.
“யுவர் ஹானர்... இந்த வழக்கு பொது நலன் கருதி சஹாயதா நிறுவனத்தாரால் தொடரப்பட்டது.. இந்த வழக்கின் பிரதிவாதியான இஷா க்ரூப்ஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகள் முறையாக சுத்திகரீக்கபடவில்லை என்றும், அதன் காரணமாக அந்த கழிவு நீர் ஓடையில் கலந்து சுற்றுபுறத்தை மாசுபடுத்துகிறது என்றும் அந்த பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர். அவர்கள் சார்பாக இந்த சஹாயதா டிரஸ்ட் முறையாக போலீஸ்க்கும், மாசு கட்டுபாட்டு வாரியத்திற்கும் அனுப்பியுள்ள மனுக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.. அதன் காரணாமாக இந்த பிரச்சினைக்கு கோர்ட் மூலம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று முடித்துவிட்டு அமர்ந்தான்
 

Devi

Author
Author
#2
ராஜேஷ் இஷாவை ஒரு பார்வை பார்க்க, இப்போது இஷா எழுந்து கொள்ள முனைந்தாள்.
ஆனால் ஜட்ஜ்ஜோ , மாசு கட்டுபாட்டு வாரிய அதிகாரிகளை விசாரணைக்கு அழைத்தார்.
அவர்கள் வந்தவுடன் “இந்த புகார் மனு உங்களுக்கு கிடைத்ததா? “ என்று வினவ,
“கிடைத்தது யுவர் ஹானர்..” என்றனர்.
“இதற்கு நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?”
“ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். .அதன் நகல் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது..”
அதை வாங்கி படித்து விட்டு, அவர்களிடம் மீண்டும் கேள்வி கேட்டான்.
“இது ஒரு ஷோ காஸ் நோட்டீஸ் மாதிரி தானே இருக்கிறது.. அந்த பகுதியை ஆராய்ந்தீர்களா?”
“எஸ் ..சார்.. ஆராய்ந்ததில் அந்த ஓடையில் கழிவுகள் கலக்கபடுகிறது என்பது உறுதி செய்த பின் தான் இஷா க்ரூப்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அளித்தோம்.”
“அதற்கு அவர்கள் பதில் நடவடிக்கை என்ன எடுத்தார்கள்?”
“அவகாசம் கேட்டு பதில் அனுப்பியுள்ளார்கள்.. அதன் நகலும் இணைத்துள்ளோம்..” என்றார்.
அதை பார்வையிட்ட சித்தார்த் ,
“இந்த பதில் போதுமானதாக இல்லையே ஆபீசர்ஸ். இதை வைத்து நீங்க எப்படி அவங்க மேலே ஆக்ஷன் எடுக்காம இருக்கலாம்?”
பொலுஷன் போர்டு ஆபீசர்ஸ் பதில் சொல்ல தெரியாமல் நிற்க, இப்போது இஷா எழுந்தாள்..
“எக்ஸ்க்யூஸ் மீ யுவர் ஹானர்.. “ என்று கூற,
“எஸ் “ என்றபடி அவளை நேராக பார்த்தான் சித்தார்த்..
ஹியரிங் ஆரம்பித்த பின் அவள் புறம் பார்வையை செலுத்தாதவன், மற்றவர்களிடமே கேள்விகள் கேட்டுக் கொண்டு இருந்தான்.
இஷாவும் இத்தனை நேரம் பொறுத்தவள், இப்போது குறுக்கிட்டாள். அவனின் பார்வையை சந்தித்த நிமிடம் சற்று தினறியவள், பின் நிதானமாக பேச ஆரம்பித்தாள்.
“யுவர் ஹானர். நான் இப்போது பேசலாமா? “ என்று பர்மிஷன் கேட்க,
“உங்களுக்கும் இந்த கேஸ்சுக்கும் என்ன சம்பந்தம்?”
“ஏன் நான் யாருன்னு இவருக்கு தெரியாதாம்மா? என்று மனதிற்குள் அவனை திட்டியவள்”
“நான் இஷா ராஜசேகர் .. இஷா க்ரூப்ஸ் நிறுவனத்தின் சார்பா வாதாட வந்துருக்கேன்.. “ என்று கூற
இப்போது சித்தார்த் மனதிற்குள் கவுன்ட்டர் கொடுத்தான் “இத ஏன் நீ முன்னாடியே என்கிட்ட சொல்லல.. வெறும் இஷான்னு மட்டும் சொல்லி என்னை ஏமாத்திட்டியே ச்சே” என்று திட்டிக் கொண்டான்.
அவளின் அறிமுகத்திற்கு பதிலாக வெறும் “ஓஹோ” என்று மட்டும் கூற, அந்த ஓஹோ வின் அர்த்தம் புரிந்த இஷா உதட்டை கடித்து தன் எண்ணத்தை மறைத்தாள்.
வேறு எதுவும் சொல்லாததால் அதையே அனுமதியாகக் கொண்டு தன் வாதங்களை பேச ஆரம்பித்தாள் இஷா.
“யுவர் ஹானர்.. இந்த வழக்கை பொறுத்தவரை இஷா க்ரூப்ஸ் நிறுவனத்தின் மீது அவர்களின் ரசாயான கழிவுகள் ஓடையில் கலக்கிறது. இதனால் சுற்று சூழலுக்கும், பொது மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது என்பது தான்.. அதை பற்றிய சில விவரங்கள் இங்கே தெரியபடுத்த அனுமதி வழங்க வேண்டும்”
“எஸ். ப்ரோசீட்”
“முதல் விஷயம் ரசாயன கழிவுகள் ஆபத்தானவை அப்படின்னு சொல்றாங்க.. இந்த பாக்டரி கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக நடந்துட்டு இருக்கு.. இது வரைக்கும் இதனால் எந்த பாதிப்பும் ஏற்படல..
அடுத்தது அந்த ஓடையே இந்த நிறுவனத்தால் ஏற்படுத்தப்பட்ட செயற்கை ஓடை தான்.. இந்த பாக்டரி ஆரம்பிக்கும் போதே இப்படி ஒரு ஓடை அமைத்து , அதில் ஆபத்தில்லாத கழிவுகள் கலக்குமாறு செய்து இருந்தார்கள். இதை பற்றிய விவரம் எல்லாம் அந்த நிறுவனத்தின் சேர்மன் இரண்டு நாட்களுக்கு முன் மீடியாவிற்கு கொடுத்த பேட்டியை சான்றாக கொடுக்கப்பட்டுள்ளது,
மூன்றாவது இப்போது இந்த பிரச்சினை பெரிதாக காரணமாக இருக்கும் குறிப்பிட்ட இடத்தில் படுகையாக இருக்கும் ரசாயனம் இந்த பாக்டரியில் இருந்து வெளியேறும் கழிவுதானா என்ற ஆராய்ச்சியும் செய்ய வேண்டி இருக்கிறது. அதற்காகத்தான் நிறுவனத்தின் சார்பில் மாசுக்கட்டுபாட்டு வாரியத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள பதில் அறிக்கையில் அவகாசம் கேட்டுள்ளோம்”
என்று பேசி முடித்தாள். அவளின் வாதத்தை கேட்ட ஜட்ஜ்
“வாதியின் தரப்பில் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?”
“யுவர் ஹானர்.. குறிப்பிட்ட பாக்டரி கழிவு கலப்பதற்காக தான் அந்த ஓடை என்று கூறுகிறவர்கள் , இப்போது அது அந்த பாக்டரி கழிவுதானா என்று ஆராய்ச்சி செய்ய போகிறார்கள் என்றால் என்ன அர்த்தம்? அதில் எதுவும் மாற்ற வாய்ப்பு இருக்கிறது.. அதனால் இந்த பிரச்சினைக்கான முடிவு தெரியும் வரை பாக்டரி நடக்க கூடாது.. இதை சமூக நலன் கருதி தாங்கள் உத்தரவிட வேண்டும்”
இஷா “யுவர் ஹானர். அந்த கழிவுகளுக்கும் , இந்த தொழிற்சாலைக்கும் சம்பந்தம் இல்லை என்பது நிரூபணம் ஆகும் பட்சத்தில், கணிசமான அளவிற்கு அந்நிய செலவாணி பெற்று தரும் இந்நிறுவனம் மூடபட்டால் நஷ்டம் அரசாங்கத்துக்கு உண்டாகும். அதோடு இந்த பாக்டரியில் நிரந்தர தொழிலார்கள் தவிர, கிட்டத்தட்ட நானூறு பேர் தினகூலிகளாக வேலை செய்கின்றனர். அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.. இவற்றை கருத்தில் கொண்டு நிறுவனம் கேட்கும் அவகாசத்தை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்”
இருவரின் வாதத்தையும் கேட்ட ஜட்ஜ்
“இஷா க்ரூப்ஸ் நிறுவனம் கேட்டு கொண்ட அவகாசம் ஒரு மாதமாக வழங்கபடுகிறது. ஆனால் தற்போதைய கழிவுகளை அகற்ற ஒரு வார கால அவகாசமும், பாக்டரி தொடர்ந்து நடக்கும் பட்சத்தில், மேற்கொண்டு அந்த கழிவுகள் அங்கே கலக்காத வண்ணம் மாற்று ஏற்பாடு குறித்தும் அடுத்த வாரம் நிறுவனத்தின் சார்பில் விளக்கம் அளிக்க வேண்டும். அதை கண்காணித்தும், மாற்று ஏற்பாடு பற்றிய பொலுஷன் போர்டு அளிக்கும் சான்றும் வழக்கின் அடுத்த ஹியரிங் போது தெளிவு படுத்த பட்டால் மட்டுமே மேற்கொண்டு அவகாசம் அளிப்பதை பற்றி கோர்ட் உறுதி செய்யும். அடுத்த வாரம் எந்த தேதியில் வழக்கு விசாரணைக்கு வரும் என்பது பற்றியும் நோட்டீஸ் மூலம் தெரியபடுத்தபடும் என்று கோர்ட் உத்தரிவிடுகிறது”
என்று கூறி முடித்தார்.
அப்போதே லஞ்ச் ஹவர் ஆகி விட, அத்தோடு கோர்ட் கலைந்தது அங்கிருந்து எல்லோரும் சேம்பர் நோக்கி சென்றனர்.
சேம்பரில் அதிகம் பேர் நிற்க முடியாது என்பதால் , இஷான் , ரேஷ்மி இருவரும் கான்டீன் நோக்கி செல்ல, இஷா இன்றைய ஜட்ஜ் கொடுத்த ரிபோர்ட்ஸ் எல்லாம் பிரிண்டில் வாங்குவதற்கு தேவையான ஏற்பாடு செய்ய சென்றாள்.
போகும் வழியில் ராஜேஷை பார்க்க, நேராக அவன் பின்னால் சென்று முதகில் அறைந்தாள்.
“அடிப்பாவி இஷா.. இத்தனை வருஷம் கழிச்சும் உன்னோட இந்த பழக்கம் போகலையா?”
“அட.. எப்படி கண்டுபிடிச்ச?”
“உன்னை தவிர வேற யாரு இந்த வேலை செய்வா?”
“ஆமா.. ஏண்டா எனக்கு எதிரா கேஸ் எடுத்து இருக்க? நான் தான் வக்கீலா வருவேன்னு கெஸ் பண்ணல?”
“நீ ரொம்ப உன்னை பத்தி சொல்லிட்ட.. இஷா க்ரூப்ஸ்ன்னு சொன்னவுடனே இந்தம்மா நியாபகம் வர.. ?”
“சரி. .சரி. .வா .. கான்டீன் போகலாம்”
“அம்மா தாயே .. ஆள விடு.. இந்த கேஸ் முடியறவரைக்கும் நீ யாரோ .. நான் யாரோ.. ? எந்த மீடியாவாவது உன்கிட்ட பேசறத போட்டோ போட்டானா, என்னை வச்சு நீயா நானா விளையாட ஆரம்பிச்சுடுவாங்க.. கேஸ் முடிஞ்சதும் நாம மீட் பண்ணலாம் ஓகே வா?” என்று கூறி அவளிடம் இருந்து விடை பெற்றான் ராஜேஷ்.
ஏதோ யோசனையோடு கான்டீன் போக, இஷான் , ரேஷ்மி அருகில் அமர்ந்தவள் ஒன்றும் சொல்லவில்லை.
இஷான் அவளிடம் “என்ன ஆச்சு இஷா?”
‘ஹா. ஒன்னுமில்லை அண்ணா”
“என்னடா ஆச்சு? நீ சொன்னப்போ நான் கூட கொஞ்சம் டென்ஷன் ஆனேன்.. நமக்கு வாய்ப்பே இருக்கதோன்னு.. இப்போ நம்பிக்கை வந்துருக்கு” என்று பேசிக் கொண்டு இருக்க,
“ஹ்ம்ம்.. எல்லாம் சரிதான்.. இத நாம தக்க வசிக்கனும்னா.. சீக்கிரம் அந்த பிரச்சினையை தீர்க்கணும்”
“சரிடா.. இப்போ சாப்பிடு. .நீயும் சாப்பிடு ரேஷ்மி “ என, மூவருக்கும் தேவையானதை ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொண்டு இருந்த போது, விக்ரம் அவர்கள் மூவரையும் பார்த்தபடி தனக்கும் , சித்தார்த்க்கும் சாப்பாடு வாங்கி கொண்டு சென்றான்.
 
#3
நல்லா இருக்கு இஷா கிடைத்த ஒரு மாத அவகாசத்தை எப்படி பயன்படுத்திகெள்ள போகிறாள் சித்தார் இஷா எப்போ பேசிப்பாங்க.
 

Latest profile posts

விரைவில் அப்பலோ - 42
kandharva loga 35 posted friends.. read and give your comments... 🤩🤩
banumathi jayaraman wrote on Krishnan992's profile.
My heartiest birthday wishes to you, Krishnan992 Sir
விரைவில் அப்பலோ - 41
Both Rudrangi and Ennai Ko(Ve)llum vennilavei next episode posted.
இனிய நட்புகளே! செங்கல் பூக்களின் அடுத்த இரு அத்தியாயங்கள் சுடச் சுட வந்து விட்டன. ரசித்து விட்டுக் கருத்தைப் பகிரலாமே!
ஹாய் நட்பூஸ்,
“நேசித்த இரு நெஞ்சங்கள்..” பதினேழாவது அத்தியாயம்..! பதிவிடுகிறேன்.. படித்துவிட்டு உங்களின் கருத்துகளை மறக்காமல் பதிவிடுங்கள் தோழிகளே.. உங்களின் கருத்துகளை ஆவலுடன் எதிர் பார்க்கும் உங்களின் தோழி சந்தியா ஸ்ரீ
தேடி வந்த தேவதையே அத்தியாயம் 13 part 01 போட்டாச்சு படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்!

Today's birthdays

Advertisements

Latest Episodes