Neeye Naan-4(1)

SR.Sharu23

Active member
#1
அச்சோ மாமா இப்படி விடாம முறச்சுகிட்டிருக்காறே ... நாளைக்கு நான் ஊறுக்கு போற டைம் பாத்து இந்த பக்கிக்கு தப்பிச்சு போக ரூட் போட்டு கொடுத்தா. இப்படி சொல்லாம கொள்ளாம இன்னைக்கே திடீர்னு எஸ்கேப் ஆகி குள்ளகத்தரி என்னய கோத்திவிட்டிட்டு போயிறுச்சு.

என்று நெகத்தை கடித்து கொண்டு பதற்றமாய் நின்றிருந்தான் பதினாறு வயது மகேன் அவனையே கோபமாய் பார்வையால் ஊடுறுவி கொண்டு நின்றிருந்த நரேந்திரன் முன்னிலையில்.

தன் போனை எடுத்து போலிஸ்சிடம் விசாரித்தவர் விருத்யுதாவை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றதும் கோபமாய் பக்கத்தில் இருந்த நாக்காலியை எட்டி வேகமாய் உதைத்தார்.

மகேனுக்கு சர்வமும் அடங்கிபோனது போல் அவ்வளவு பயந்துபோய் நின்றிருந்தான்.

மாமாவது தன்னிடம் காட்ட முடியாத கோபத்தை கதிரையில் காட்டுகிறார் என்னும் கொஞ்ச நேரத்தில் மும்பையில் இருந்து அவனின் தாய் மல்லிகா இங்கே வந்துவிடுவாள்...

வந்ததும் வராததுமாய் விடயம் தெரிந்தால் கடவுளே மம்மி உண்டில்லை என்று ஆக்கிடுவாங்களே ..டேடி தயவு செஞ்சு நீயும் மம்மி கூடவா அப்ப தான் நான் அடியில இருந்து கொஞ்சம் நாலும் தப்பிடலாம்.. என்று மகேன் பலவாறு மனதுல் புலம்பி கொண்டிருந்தான்.

வரவர இந்த கழுதையோட திமிர் அதிகமாகிட்டே போகுது . என்ன நெஞ்ச அழுத்தம் இருந்தா இப்படி சத்தியனை (நரேந்திரனின் மகன்) காயபடுத்தியதும் இல்லாமல் காணாமல் போய் என்னை அடுத்தவர் முன்னிலையில் அசிங்கபடுத்த வேண்டும் என்று திட்டமிட்டிருப்பால் வேகமாய் புடைக்கும் தன் கைகளை கட்டுபடுத்தி கொண்டு உதட்டைகடித்தபடி தன்னை சமாளித்திருந்தார்.

மகளை அர்ச்சிக்கும் நரேந்திரனின் மனதில் உரிமையாய் வந்த கோபம் இதுயில்லை . தன் உயிறை வாங்க வந்தவள் இப்படியும் தன்னை படுத்துகிறாளே என்பதால் உண்டான கோபம் இது.
------------------------------------------------------------------------------------------------------------
முகத்தில் தண்ணி தெறித்த வேகத்தில் எழுந்த யாதவன். விருத்யுதாவின் அருகில் எழுந்து செல்ல எங்கே இவன் தன்னை தந்தையிடம் மாட்டி கொடுத்துவிடுவானோ என்ற பயம் மீண்டும் விருத்யுதாக்கு தலை தூக்க அந்த இடத்தை விட்டு வேகமாய் ஓட்டமெடுத்தால். அவள் திடுமென தன்னை கண்டு எதுக்காக ஓடிகிறால் என்பது அவனுக்கை புரிந்தாலும். பாவம் தன்னைவிட சிறியவளை தனியாய் விட்டு செல்ல அவன் மனம் விளையவில்லை . ஒருகட்டத்தில் இருவராலும் ஓட முடியவில்லை .


அவனை மனதுல் அர்ச்சித்தபடி வெளியே மூச்சிறைக்க யேண்டா என்ன இப்படி தொறத்துற என்ன பிடிச்சு கொடுத்தா எங்க அப்பா என்ன தருவாறோ ..அதவிட அதிகமான காசு நீ என்ன தப்பிக்க விட்டா எங்க தாத்தாகிட்ட சொல்லி வாங்கிதரன் என்று கூற.

என்ன காசா ஐயோ கடவுளே எதுக்கு இப்படி பேசுறீங்க சத்தியமா நான் எதுவும் உங்கள புடிச்சு கொடுக்க கூப்பிடல என்று யாதவன் விருத்யுதாவிடம் சைகையில் செய்ய.

இவன நம்பலாமா...ம்ம் என்று தனக்குள் யோசித்தவளுக்கு அப்போது தான் அந்த வழி மண்டையில் உதயமானது.

இவன் தான் கத்தினா மயக்கம் போட்டிறுவான்ல .. இவன் மட்டும் என்ன அவர்கிட்ட கூட்டிட்டு போகட்டும் இவன் காதுசவ்வு கிழியிற அளவு கத்திவைக்கிறன் என்று மனதுக்குள் திட்டம் போட்டு கொண்டவள் அதன் பின்பே தைரியமிய் அவன் அருகில் வந்து நின்றால்.

என்ன நீங்க இப்படி செய்றீங்கள் எதுக்காக இப்படி வீட்ட விட்டு ஓடிவந்தீங்க. அங்க உங்க அப்பா பதட்டமா உங்கள தேடிக்கொன்டிருக்கிறார் என்று தன்னை பார்வையால் எடைபோட்டு கொண்டிருந்த விருத்யுதாவிடம் யாதவன் அமைதிய் எடுத்துறைக்க.

ஐ நீ சிலோனா அவனின் பேச்சினை கேட்ட நொடி உட்சாகமாய் வெளிவந்தது அவளின் வார்தைகள்.

என்ன இந்த பொண்ணு நான் என்ன சொல்லி கொண்டிருக்கிறன் இவங்கள் என்ன கேட்டு கொண்டிருக்கிறாங்கள். இங்க பாரூங்கோ என்று எதோ சொல்ல வந்தவன் உங்க பெயர் என்ன ஆங் ஏதோ அந்த அவர் சொன்னாறே என்று சில நிமிடம் யோசித்து . ஆ ஞாபகம் வந்திட்டு.. விது அது தானே உங்க பெயர். இங்க பாருங்க விது இங்க உங்கள தேடி உங்கட அப்பா வந்தவர் என்று அவர் குரலேயே நீங்க கண்டுபிடிச்சிருப்பீங்கள் . பாவம் ஐயா ரொம்ப களைச்சி போயிருந்தாரு இப்படி உங்கட அப்பாவ நீங்க வருத்தபட வச்சு ஒழிஞ்சு இருக்குறீங்களே இந்த பூமரத்து மரம்செடீல உண்மையிலேயே பாம்பு பூச்சி ஏதும் வந்திருந்தா என்ன பன்னிருப்பியல் .

நீங்க சிலோனா நான் கேட்டதுக்கு என்னும் உங்கிட்டயிருந்து பதில் வரலேயே என்று அவன் பேச்சை புரந்தள்ளியவள் கைகளை கட்டி கொண்டு தன் கேள்வியில் மட்டும் குறியாக நின்றிருந்தாள்.

ஆழ பெறுமூச்சொன்றை விட்ட யாதவனுக்கு ஆயாசமாய் இருந்தது.

ஓம் நான் சிலோன் தான் அத தெரிஞ்சு கொண்டு நீங்க என்ன பன்ன போறியல்.

ஐ!!கிரேட்.. என் அம்மாவும் சிலோன் அங்க யாழ்பாணம் தான் அவங்க இடமாம் நீங்க எந்த இடம் அங்க ? உங்களுக்கு யாழ்பாணத்துல ரெஜிஸ்டரர் வேலாயுதம் பிள்ளை மகள் சித்திராவ தெரியுமா பாத்திருக்கீங்களா. அவங்க தான் என் அம்மா அவங்கள பாத்திருந்தா எப்படி இருப்பாங்கன்னு சொல்லூங்களேன் நான் பிறந்ததுல இருந்தே அவங்கள பாத்ததுயில்ல அப்பாவும் போட்டோ எதுவும் காட்டல பிளீஸ் பிளீஸ் சொல்லுங்களேன். தொடர்ந்து விடாமல் கேள்விகளை கேட்ட அந்த சிறுமி விருத்யுதாவின் கண்களில் ஏக்கம் ,கவலை , ஆர்வம் என்று கலவையாண உணர்வுகள் எட்டிபார்த்தது.

ஐயோ கடவுளே இந்த பொண்ணு கூட அவ அம்மா இப்ப இல்ல போலவே .

நானும் யாழ்பாணம் தான் ஆன நான் அப்படி யாரையும் கேள்வி படவும் இல்ல பார்க்கவும் இல்ல அவங்க யாழ்பாணம் என்டாலும் அதுக்குல வேரவேர இடம் நெறை ய இருக்கு அதனால தெரியல என்ற யாதவனின் பதிலில் சோகமாய் தொங்கி போனது விருத்யுதாவின் தலை.

அவளின் முகத்தினில் தென்பட்ட சோகத்தில் அவனுக்கு கஷ்டமாய் போய்விட
நான் ஒரேஒரு முற பாத்திருக்கன் என்றான் சட்டென்று.


அதில் அகம் குளிர்ந்து முகமலர வெடுக்கென்று நிமிர்ந்தவள் ..நெஜமாவா நீ என் அம்மாவ பாத்திருக்கியா???என்றால்.அந்த குரலில் தான் எத்தனை ஆர்வம்.

ம்ம் என்று தலையை மேலும் கீழும் ஆட்டியவன் எட்டி அருகில் இருந்த குளத்தை பார்க்குமாறு கூற . குழப்பத்தோடு அவனை ஏறிட்ட போதிலும் அவன் சொன்னதை சொன்னபடி செய்தாள்.

அதில் தெறிந்த விம்பத்தை சுட்டிக்காட்டியபடி . இப்படி தான் உங்க அம்மாவும் இருந்தாங்க. என்றான்.

உண்மை தானே அவள் ஜாடையில் அப்படியே அவள் தாயை போன்று என்று சொல்லி அதை மைய காரணமாய் வைத்து தானே காரணமே இல்லாத விடையத்துக்கு அவளை கசக்கிபிழிகிறார் அவள் தந்தை.

கண்களில் நீர் சொட்ட . நெஜமா என்னமாதிரியே இருந்தாங்களா எப்போ நீ அவங்கள பாத்த என்ன நெனச்சு அப்போ அவங்க கவலபட்டிருந்தாங்களா? யாதவனை தன்புறமாய் திருப்பி கேட்ட விருத்யுதா தாயுக்கு ஏங்கும் குழந்தை என்று அப்படியே தெரிந்தாள்.

அவங்கள் அப்ப வருத்தபட்டிருப்பாங்களோ இல்லையோ இப்ப ரொம்ப வருத்தபட்டிருப்பாங்க நீங்க உங்கட வீட்ட விட்டு இப்படி வந்துநிக்கிறத பாத்திருந்தா என தன் நாடியில் கைவைத்து யோசணையாய் கூறினான் யாதவன்.

அவங்களுக்கு என்கதை தெரிஞ்சிருந்தா அங்க இருந்து வந்ததுக்கு நெஜமா சந்தோஷம் தான் பட்டிருப்பாங்க.

யேன் அப்படி சொல்றீங்க என்று அவள் பதிலில் யோசணையாய் உயர்ந்தது அவனது புருவங்கள்

பின்ன எனக்கென்ன வேண்டுதலா இப்படி தனியா வீட்டவிட்டு
எஸ்சாகி அழையனும்னுஂஉண்மைய சொல்ல போனா நான் அங்கயிருந்து வந்ததுக்கு நெஜமா கவலபடுறது என் ஆயாம்மா அண்ணம்மாவா மட்டும் தான் இருக்கும் . அவங்களும் நாலுநாள் வருத்தத்துல இருப்பாங்க அப்புறம் சத்தியன கவணிச்சுக்க கவணிச்சுக்க என்ன சுத்தமா மறந்திடுவாங்க என்று முதலில் சாதரண குரலில் சரளமாய் ஆரம்பித்தவள் சுதி குறைந்த குரலில் கடைசி வரியை சொல்லி முடித்தாள்.


உங்கட அப்பா?

அவரா அவர அவமான படுத்துறமாதிறி வந்திருக்கனே என்டு கோபம் தான் படுவாறே ஒழிய . வேற வருத்தபடுற அளவு என்மேல எந்த பாசமும் அவறுக்கில்ல.

அது நீங்க என்னதான் சொன்னாலும் இப்படி இங்க வந்து நிக்கிறது சரியில்ல நீங்க முதல்ல உங்கட வீட்டுக்கு கலம்புங்க நான் வேணா உங்க அப்பாகிட்ட எதாச்சும் சொல்லி சமாளிச்சுக்குறன்.

இங்க பாரு நீ மட்டும் என்ன எங்க அப்பாகிட்ட கூட்டிட்டு போக டிரை பன்னேன்னு வையன் அப்படியே இந்த குளத்துல குதிச்சிடுவன் பாத்துக்கோ .என்று விருத்யுதா யாதவனை மிறட்ட .

அதுயில்ல என்று அவன் ஏதோ சொல்ல வர முன்பு பக்கதில் எங்கோ கேட்ட போலிஸ் ஜீப்பின் சைலன்சர் சவுண்டில்.

திடுகிட்ட போன விருத்யுதா இப்போது உண்மையாக வே தடுமாறி போய் தண்ணியில் விழுந்துவிட்டாள்.

உடனே நம்ம ஹிரோ சாரூம் தண்ணியில் குதித்து . நீச்சல் தெரியாமல் போறாடும் ஹீரோயின் ச்சயில்ஹுட்டை காப்பாத்தி ஹீரோயிசியம் காட்டிருப்பார் என்று நீங்கள் நினைத்தால் அது மிக தவறு.

அந்த குளத்தின் ஆழம் விருத்யுதாவின் இடுப்பு வரைமட்டுமே இருந்தது.
அடச்சீ இதுலயா நாம குதிக்கிறோம்னு இவன பயம் காட்டினம் அவமானம் அவமானம் என்று மனதில் எண்ணி கொண்டவள்.


முகத்தில் அசடுவடிய அசட்டு சிரிப்புடன் எழுந்துவர. அவனின் பொங்கிய சிரிப்பு சத்தம் பட்டாசாய் அவள் காதுகளுக்கிட்டு அவளை பரிகசித்தது .
 
Last edited:

SR.Sharu23

Active member
#2
------------------------------------------------------------------------------------------------------------
டேய் மகி எங்கடா விருத்யூ இந்த மாதிறி பெரிய காரியத்த நிட்சயமா உன்ஹெல்ப் இல்லாம விருத்யுதாவுக்கு செஞ்சிறுக்க முடியாது. யெனக்கு என்னமோ உன்மேல டவுட்டா இருக்கு அவளுக்கு ஐடியா கொடுக்கிறேன் ஹெல்பன்றன் பேர்வலினு நீ தான் எக்குதப்பா ஏதும் செஞ்சிறுப்ப சொல்லுடா சொல்லு ஏண்டா கல்லு பொம்ம மாதிரி நிக்கிற சொல்லேண்டா பாவம் அவ எங்க தனியா கஷ்டபடுறாலோ என்று மகேனின் தோல்களிலும் கன்னத்திலும் சரமாறியாய் போடுபோட்டபடியே மல்லிகா கேள்வி கேட்டபடி நிற்க.


யாரு அவளா பாவம் உங்கிட்ட மாட்டிட்டு முழிக்கிற நான் தான் பாவம் அவள விட்டா ஊரையே வித்திட்டு வருவா அவள போய் பாவம் என்றீயே. என்று மகேனின தன் மனதில் பேசிக்கொள்ள

அவனின் தந்தை ஈஷ்வரன் நரேந்திரிடம் தற்போதைய நிலவரத்தையும் அதற்கு உண்டான தீர்வுகளை பற்றியும் பேசிக்கொண்டிருந்தவர் மனைவி மகனை தொடர்ந்து அடிப்பதை கண்டு மனம் கேளாமல் அவர்கள் அருகில் வந்தார்.

இந்த அண்ணனும் தங்கச்சியும் பச்சபுள்ளைங்கல இப்படி தான் ஒன்னு பேசி படுத்துவாங்க இல்ல அடிச்சு படுத்துவாங்க சரியான காட்டுமிறாண்டி கூட்டம் இப்படி இவங்க இருந்தா புள்ளைங்க வீட்ட விட்டு ஓடாம என்ன செய்யும் என்று தன் மனதில் நினைத்து பல்லை கடித்த ஈஷ்வர்.

என்ன மல்லிகா நீ புள்ளைய போட்டு இப்படி அடிக்குற அப்புறம் அவனும் இந்த மாதிறி விவரீத முடிவு எடுத்தா நீ என்ன செய்வ என்று மனைவியை கண்டிக்க .

ஆஹா எந்த ஐடியா முன்னமே நம்மலுக்கு வராம போச்சே இவ எஸ்கேப்னு தெரிஞ்ச போது நாமலும் எஸ்சாகி தாத்தாவீட்டுக்கு ஓடியிருந்தா இப்படி இவங்க கிட்ட மாட்டிகிட்டு முழிச்சிறுக்க தேவையில்ல என்று முழித்த மகேன் . தந்தையிடம் இறஞ்சுதலாய் கண்காட்ட. அவர் மனைவியை புறம் தள்ளிவிட்டு தன் மகனை தன் அறுகில் இழுத்து கொண்டு .

வெளியில் வந்தவர் அமைதியாய் என்ன நடந்தது விருத்யூ பத்திறமா தாத்தா வீட்டுக்கு போயிட்டாலா என்று மட்டும் கேட்டார்.

ஆனால் அவனுக்கு தெரிந்ததோ தெரியாது என்ற பதில் மட்டுமே

---------------------------------------------------------------------------------------------
 
Last edited:

sridevi

Well-known member
#3
எப்போதும் heroine தான் மயக்கம் போடுவாங்க இங்க hero interesting:D:D:D:Dவிது அறுந்த வாலு போலயே:):):) nice:):)
 

SR.Sharu23

Active member
#4
ஹீ😆😆ஹீ...கொஞ்சம் மாத்தி போர்முலாவ டிரை பன்னுவமேனு
 

Staff online

Latest posts

Latest profile posts

Kandharva loga - 14 updated friends... pls read and give your precious cmnnts here.. thank u
Sorry Friends... wednesdayல இருந்து laptop issue. இதோ இப்ப சரி ஆகிடும் இதோ இப்பன்னு சொல்லியே இப்பவரை போய்ட்டு... இன்னைக்கு ஈவ்னிங் வந்தா கூட நைட்குள்ள எப்பி postசெய்துடலாம்னு இருந்தேன். நாளைக்காவது சரியாகுதான்னு பார்ப்போம்.
Hi.... Update only on Tuesday... Sry... Little busy... Bye.. Tc
banumathi jayaraman wrote on SR.Sharu23's profile.
My heartiest birthday wishes to you, SR.Sharu23 Madam
banumathi jayaraman wrote on Nandhini's profile.
My heartiest birthday wishes to you, Nandhini Madam
banumathi jayaraman wrote on Koolkeerthi's profile.
My heartiest birthday wishes to you, Koolkeerthi dear
banumathi jayaraman wrote on Jiffy's profile.
My heartiest birthday wishes to you, Jiffy Madam
உன் உயிர் தா..!! நாம் வாழ..!!! 7th எபி போஸ்ட் பண்ணியாச்சு..படிச்சு சொல்லுங்க...
அகத்திய ரகசியத்தில் அடுத்த மூன்று அத்தியாயங்கள் பதிவிடப்பட்டு விட்டன! ஆதவனும் பொன்மகளும் ஆசான் அகத்தியருக்குக் கொஞ்சமும் விருப்பம் இல்லாத செயல்களைச் செய்கிறார்கள். அப்படி என்ன தான் செய்கிறார்கள் என்பதை அறிய அகத்திய ரகசியத்தைப் படியுங்கள் தோழிகளே! என்னிடம் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள்
உயிர் விடும் வரை உன்னோடுதான் -- எபி 5 போட்டாச்சு டியரிஸ் :)

Advertisements

Online statistics

Members online
61
Guests online
1
Total visitors
62