Parakkirama pandiyan kaalam. Aththiyaayam 4.

Srija Venkatesh

Well-known member
#1
அத்தியாயம் 4:

காலம்: கி பி 15ஆம் நூற்றாண்டு

பாண்டிய மன்னர்களது புகழ் குறைந்து சேரர்களும் சோழர்களும் சற்றே தலை தூக்கிய சமயம். அப்போதைய பாண்டிய மன்னனான சடைய வர்மன் சுந்தர பண்டியனை சேரர்களும் சோழர்களும் ஒரு சேரப்படையெடுத்து தலை நகராம் மதுரையிலிருந்து விரட்டியடித்தனர். அவர்களோடு நாயக்கர்களும், இசுலாமியர்களும் சேர்ந்து கொள்ளவே தனியாகத் தத்தளித்த பாண்டியன் நாட்டு மக்களின் நன்மை கருதி மதுரையை விடுத்து பெரும் மக்களோடும் அரச சபையியனரோடும் தென் திசை நோக்கி பயணித்தார். தலை நகரை பகைவர் சூறையாட விட்டு விட்டு இப்படிக் கோழை போல ஓடி வருகிறோமே என மிகவும் மனம் வருந்தினான் சடையவர்மன் சுந்தர பாண்டியன். அவனது சிறு குழந்தைக்கும் சடையவர்மன் என்றே பெயரிட்டிருந்தார்கள். இளவரசனான சடையவர்மனுக்கு அப்போது ஐந்தே வயது தான். அமைச்சர்களும். அரசியரும் புடை சூழ ஏதோ ஒரு கானகத்தில் குதிரை மேல் பயணிப்பது ஒரு விதத்தில் உற்சாகமாகவே இருந்தது அந்தச் சிறுவனுக்கு.

"அமைச்சரே! நமது சூழ்நிலை புரியாமல் விளையாடி வருகிறான் இளவரசன்! தன் தந்தை ஒரு கோழை என்று பின்னாட்களில் அறிந்தால் அவனது இந்த மகிழ்ச்சி நீடிக்குமா?" என்றான் மன்னன் சடையவர்மன்.

மூத்த அமைச்சரான சென்பகப்பொழில் இளந்திரையர் மன்னனை வேதனையோடு நோக்கினார்.

"மன்னா! நான் பல முறை எடுத்துக்கூறியும் தங்கள் இப்படி தங்களைக் கோழை என்று சொல்லிக்கொள்வது எனக்கு மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது! உங்களது தூரத்து சொந்தமான சகோதரர் குலசேகரர் இப்படி வஞ்சனையால் உங்களை வீழ்த்துவார் என்று நாம் எப்படி எதிர்பார்த்திருக்க முடியும்?"

"எத்தனை பேர் சேர்ந்து வந்தாலும் போரிடுவது தான் வீரம் அமைச்சரே! எனது முன்னோர்களும் அப்படித்தான் செய்து வந்தனர். எழுவர் சேர்ந்து இளைஞனான பாண்டிய நெடுஞ்செழியன் மீது இக்கட்டான சூழலில் போர் தொடுக்கவில்லையா? அவர் தனது தலை நகரை விட்டு இப்படித்தான் ஓடி வந்தாரா என்ன? தலையாலங்கானத்தில் அனைவரையும் வென்றாரே? அவரது வழித்தோன்றலாகிய நான் இப்படி நடந்து கொள்வது பெரும் தலைக்குனிவு அல்லவா?"

"மன்னா! நீங்கள் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும்! நெடுஞ்செழியர் மீது முறையாக ஓலை அனுப்பி நாள் குறித்து போர் செய்தார்கள். ஆனால் உங்கள் மீது அப்படி இல்லையே? இரவினில் அனைவரும் உறங்கும் நேரம் தாக்குதல் நடத்தினார்கள். அப்படி இருந்தும் நீங்கள் மனம் தளறாமல் போரிடத்தானே செய்தீர்கள்?"

இப்போது மற்றொரு அமைச்சரான நலங்கிள்ளி சேர்ந்து கொண்டார்.

"ஆம் மன்னா! அவர்கள் ஈவு இரக்கம் எதுவும் இல்லாமல் பெண்களையும் குழந்தைகளையும் துன்புறுத்தத் தொடங்கிய பின்பு தானே மதுரையை விடுத்துச் செல்வது என்ற முடிவுக்கு நீங்கள் வந்தீர்கள்? இதில் கோழைத்தனம் ஏதும் இல்லை மன்னா! இது நீங்கள் நாட்டு மக்கள் மீது வைத்திருக்கும் அன்பையே காட்டுகிறது" என்றார்.

நீண்ட பெருமூச்சொன்று புறப்பட்டது மன்னரிடமிருந்து. தன்னைத்தொடர்ந்து குதிரையிலும் நடந்தும் மாட்டு வண்டிகளிலும் வரும் மக்களை பார்த்தார். மனதில் அன்பும் பச்சாதாபமும் பொங்கியது. மதுரையில் எத்தனை செல்வாக்கோடு இருந்த வணிகர்கள், வீரர்கள் விவசாயிகள் என எத்தனை பேர் என் மீது நம்பிக்கை வைத்து முன் பின் தெரியாத இடத்துக்கு வருகிறார்கள்? நான் எப்படி இவர்களது நம்பிக்கையைக் காப்பாற்றப் போகிறேன்? இவர்களுக்கு எப்படி வாழ்வளிக்கப் போகிறேன் " என்று கவலையில் ஆழ்ந்தார்.

அதுவரையிலும் அடர்ந்த கானகமாக இருந்த அந்தப்பகுதி மேலும் மேலும் சூரிய ஒளியே உட்புக முடியாத அளவு காணப்பட்டது. அரசி மிகவும் களைத்து விட்டார். அரண்மனையை விட்டு அதிகம் வெளியில் வந்திராத அவரால் குதிரையில் தொடர்ந்து பயணிக்க இயலவில்லை. மெல்லிய காய்ச்சல் வேறு அடித்தது. அதனால் மன்னர் அனைவரையும் இளைப்பாற உத்தரவிட்டார். உடன் வந்த வீரர்கள் சிறு சிறு கூடாரங்களை அமைத்து தங்க ஏற்பாடுகள் செய்தனர். சமையற்காரர்கள் கற்களைக் கொண்டு பெரிய பெரிய அடுப்புகளை மூட்டினர். கூடாரம் தயாரானதும் அரசி அதில் சென்று படுத்துக்கொண்டு விட்டார். மன்னர் நாளை எப்போது மீண்டும் பயணத்தைத் துவக்குவது? எங்கே சென்று மீண்டும் நாட்டை உண்டாக்குவது என்ற விவாததில் ஈடுபட்டிருந்தனர். இளவரசன் பக்கத்திலேயே தான் இருந்தான். அவனுக்கு பெரியவர்களின் பேச்சு சலிப்பை ஊட்டியது.

சற்று தள்ளி ஒரு சிறு ஓடை மெல்லிய சத்தத்துடன் ஓடிக்கொண்டிருந்தது. அதன் கரையில் மல்லிகை பூக்கள் நிறைந்த புதர் ஒன்று மணம் பரப்பி நின்றது. இளவரசன் தனது துணையான வீரபத்திரனுடன் அந்த ஓடைக்கரையோரமாக நடந்தான். கைகளில் எப்போதும் இருக்கும் சிறு வாள் இருந்தது. இரு சிறுவர்களும் நடக்க நடக்க ஒரு அரிய காட்சி அவர்கள் முன் விரிந்தது. அந்த ஓடைக்கரையில் சற்றே ஒதுக்குப்புறமாக சிறிய இடம் ஒன்று செடிகொடிகள் அகற்றப்பட்டு காட்சியளித்தது. அதன் மையத்தில் ஒரு பெரிய குடிலும் அதனைச் சுற்றி ஐந்தாறு சிறிய குடில்களும் அமைக்கப்பட்டிருந்தன. மேற்கூரைகளின் மேல் களி மண் தடவப்பட்டு மழை நீர் உட்புகாதவாறு செய்யப்பட்டிருந்தது. வெயிற்காலங்களில் இதனை அகற்றி விட்டுப் புதுக்கூரை வேய்ந்து கொள்வார்களாக இருக்கும்.

ஆர்வம் காரணமாக இளவரசனும் வீர பத்திரனும் மையப்பகுதியிலிருந்த குடிலுக்கு வந்தனர். அங்கே ஒருவரையும் காணவில்லை என்பதால் மேலும் நடந்தன அக்குழந்தைகள். ஒரு ஆல மரத்தடியில் ஒரு எழுத்தாணியைவைத்துக்கொண்டு ஏதோ எழுதியபடி இருந்தார் ஒருவர். அவரது தோற்றமே மரியாதை தரும்படியாக இருந்தது. தலையில் ஜடாமுடி, முகத்தில் தாடி மீசை, நெற்றியில் துலங்கும் திருநீறு என்று தெய்வீகமாகக் காட்சியளித்தார். பெரியவர்களை எங்கு பார்த்தாலு வணங்க வேண்டும் என்று அன்னை கூறியிருந்ததை மறவாத இளவரசன் அவரை வணங்க வந்தான். அப்போது அந்த வயதான முனிவரது பின்னாலிருந்து நல்ல பாம்பு ஒன்று ஊர்ந்தது. எங்கே தாமதித்தால் அவரைக் கடித்து விடுமோவென அஞ்சி தனது சிறு வாளால் அதனை எடுத்து சுழற்றி தூர எறிந்தான் இளவரசன். தலையை நிமிர்த்திப்பார்த்த முனிவர் அப்போது தான் இளவரசனையும் அவனது தோழனையும் கவனித்தார். அவனது வீரச் செயல் அவரைக் கவர்ந்தது.

"சிறுவனே! நீ என்ன செய்தாய் இப்போது?"

"உங்கள் பக்கத்தில் பாம்பு ஒன்று வந்தது ஐயனே! அதனை நான் எனது வாளால் தூக்கி விசினேன் அவ்வளவு தான்" என்றான் அடக்கமாக.

"வாழ்க நீ! எனது தோழனான அந்த நாகத்தைக் கொல்லாமல் தூர எறிந்தாயே! இதிலிருந்தே உன் பெருந்தன்மையையும் வீரத்தையும் நான் புரிந்து கொண்டேன். இந்த அடர்ந்த காட்டில் துணை ஏதுமின்றித் தனியாக இருவரும் வந்தீர்களே? நீங்கள் யார்? உங்களது தாய் தந்தைய்ர் எங்கே?"

"நான் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னனாம் சடையவர்மன் சுந்தர பாண்டியனின் மகன் சடையவர்மன். நாங்கள் இப்போது தென் திசை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம். இவன் எனது தோழன் வீர பத்திரன்? என்றான்.

சிறுவனின் புத்திசாலித்தனமும் அழகும் பெரியவரைக் கவர்ந்தன. ஏதோ ஒரும்பெரிய விஷயத்திற்காகத்தான் இறைவன் இப்படி ஒரு சந்திப்பை நடத்தியிருக்கிறார் என்பதை உணர்ந்து கொண்டார் அந்த முனிவர். இரு சிறுவர்களையும் குடிலினுள் அழைத்துச் சென்று பழங்களும் பாலும் கொடுத்து உபசரித்தார்.

ஆனால் அங்கே இளவரசனையும் அவனது தோழனையும் காணாமல் அனைவரும் மிகவும் பதற்றமடைந்தனர். அரசியோ கதறி விட்டார். அமைச்சரகள் ஒரு புறம் வீரர்கள் ஒரு புறம் என தேடி அலைந்தனர். யாருக்குமே ஓடைக்கரையை ஒட்டிச் சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றாததால் அந்தப்பக்கம் செல்லவேயில்லை.

"அமைச்சரே! நாட்டின் இளவரசன் பட்டம் கட்டாவிட்டாலும் அவன் தானே நாம் அமைக்க இருக்கும் அரசுக்கு அடுத்த வாரிசு? எங்கே போய் விட்டான்? ஒரு வேளை எதிரிகள் அவனைக் கொண்டு சென்றிருப்பார்களோ?" என்றான் மன்னர் சடையவர்மர் கலக்கத்துடன்.

"அப்படி எதுவும் ஆகியிருக்காது மன்னா! நாம் அனைவரும் இங்கேயே தானே இருந்தோம்? இளவரசரும் வீர பத்திரனும் கூட அருகிலேயே தான் இருந்தனர். அவர்கள் வெகு தூரம் சென்றிருக்க முடியாது. இங்கேயே தான் அருகில் எங்காவது விளையாடிக்கொண்டிருப்பார்கள்" என்று ஆறுதல் கூறினார் அமைச்சர் இளந்திரையர். வெளியில் அப்படி சொல்லிவிட்டாரே தவிர இளவரசைக் காணவில்லை என்றதும் அவருக்கும் பகைவர்களின் சதியாகத்தான் இருக்கும் என்று தோன்றியது. அந்த நேரத்தில் சமையற்க கலைஞர்களில் ஒருவன் வந்து அரசருடன் பேச விழைந்தான். அதனை அமைச்சர் தடுத்தார்.

""சற்றே பொறுங்கள் அமைச்சரே! நம்மை விட நாட்டு மக்கள் நலனே முக்கியம்! என்ன சொல் சமையற்கலைஞனே"

""மன்னா! நீங்கள் நீடூழி.."

"வெறும் வாழ்த்துக்கக்கும் பேச்சுக்களுக்கும் இப்போது நேரமில்லை! சொல்ல வந்ததை உடனே சொல்வாய்"

""மன்னிக்க வேண்டும் மன்னா! இளவரசரும் அவரது தோழனும் இந்த ஓடைக்கரையோரமாக நடந்து சென்றார்கள். அதனை நான் பார்த்தேன்"

""முட்டாள்! பார்த்தும் அவர்களைத் தடுக்காமல் போக விட்டாயா?" என்றார் அமைச்சர்.

எதுவும் பேசாமல் அமௌனமாக நின்றான் அந்த சமையற்கலைஞன்.

""இனியும் காலத்தைக் கடத்தாமல் எங்களுடன் வந்து அந்த இடத்தைக் காண்பி" என்று சொல்லிவிட்டு மெய்க்காப்பாளர்களுக்குக் கூடக் காத்திராமல் முன்னே நடக்கத் துவங்கினார் அரசர். அவரைத் தொடர்ந்து அரசியார் அமைச்சர்கள் சில வீரர்கள் என சிறு கூட்டம் நடந்தது. ஓடையை ஒட்டி அவர்கள் நடந்து இளவரசன் கண்ட அதே குடிலைக் க்ண்டனர். அதனைக் கண்டதும் அரசியார் முகத்தில் அப்போது தான் மெல்லிய நிம்மதி படர்ந்தது.

"அரசே! நம் மகன் இங்கே தான் பாதுக்காப்பாக இருக்கிறான் என நினைக்கிறேன்! இது யாருடைய இடம்?" என்றாள்.

அரசர் சுற்றுமுற்றும் பார்த்தார் செண்பகப் பொழில் இளந்திரையானர் முன்னே வந்தார்.

"நான் முன்பே சொல்லியிருக்க வேண்டும்! என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் மன்னா! இது அகத்தியரின் பதின்மூன்றாம் தலைமுறை மாணவரான விந்தையன் என்ற முனிவரின் குடில் இது. அவர் மாய வித்தைகளில் வல்லவர். பல மந்திரங்களும் தேர்ந்தவர்" என்றார்.

"மாய வித்தை என்றால்? நமது இளவரசனை மாயம் செய்து மயக்கி விட்டாரா?"

"நிச்சயம் அப்படி இருக்காது மன்னா! விந்தையன் மிகவும் சாதுவான குணம் கொண்டவர். எப்போதும் மூலிகை பச்சிலை என்று ஆராய்ந்து கொண்டிருப்பார். அவருக்குக் கொஞ்சம் கூடப் பொருள் மீது நாட்டமில்லை."

"அப்படியானால் இளவரசன் பத்திரமாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் குரலே கேட்கவில்லையே?" என்று கவலைப்பட்டார். முனிவரது இடம் என்பதால் வீரர்களை அனுப்பித் தேடச் சொல்லவும் மனமில்லை அரசருக்கு. காரணம் அவர் சாபம் ஏதும் கொடுத்து விடுவாரோ எனப்பயந்த்னனர். சற்று நேரம் யாரும் வெளியில் வரவில்லை என்றதும் அரசனும் அரசியும் தானே உள்ளே செல்ல எத்தனித்தார்கள்.

"அமைச்சரே! நாங்கள் இருவர் மட்டும் சென்று பார்க்கிறோம். அனைவரும் வந்தால் முனிவரது தவம் கலையக்கூடும்" என்று சொல்லி விட்டுச் சென்றனர். குடிலின் உள்ளே அவர்கள் கண்ட காட்சி சிலிர்ப்பூட்டியது.
 

Staff online

Latest posts

Latest profile posts

ஹாய் தோழமைகளே,

துரத்தும் நிழல்கள் முதல் அத்தியாயம் பதிவிட்டிருக்கிறேன். வாசித்துக் கருத்துக்களை பகிர கேட்டுக் கொள்கின்றேன் . நன்றி :)
நண்பர்களே அப்பலோ -7 ( ஒரு மரணத்தின் கதை ) பகிர்ந்துள்ளேன். வாசித்து கருத்துச் சொல்லுங்கள்
Kandharva loga - 14 updated friends... pls read and give your precious cmnnts here.. thank u
Sorry Friends... wednesdayல இருந்து laptop issue. இதோ இப்ப சரி ஆகிடும் இதோ இப்பன்னு சொல்லியே இப்பவரை போய்ட்டு... இன்னைக்கு ஈவ்னிங் வந்தா கூட நைட்குள்ள எப்பி postசெய்துடலாம்னு இருந்தேன். நாளைக்காவது சரியாகுதான்னு பார்ப்போம்.
Hi.... Update only on Tuesday... Sry... Little busy... Bye.. Tc
banumathi jayaraman wrote on SR.Sharu23's profile.
My heartiest birthday wishes to you, SR.Sharu23 Madam
banumathi jayaraman wrote on Nandhini's profile.
My heartiest birthday wishes to you, Nandhini Madam
banumathi jayaraman wrote on Koolkeerthi's profile.
My heartiest birthday wishes to you, Koolkeerthi dear
banumathi jayaraman wrote on Jiffy's profile.
My heartiest birthday wishes to you, Jiffy Madam
உன் உயிர் தா..!! நாம் வாழ..!!! 7th எபி போஸ்ட் பண்ணியாச்சு..படிச்சு சொல்லுங்க...

Advertisements

Online statistics

Members online
38
Guests online
1
Total visitors
39