Poorani 3

Thendral

Administrator
Staff member
#1
அத்தியாயம் மூன்று

''நாம் அரசியல் வாதிங்க பத்தியும்,அவங்க குடும்ப ஊழல் பத்தியும் எழுதறோம்,நம்ம பத்திரிகைங்கள்ல்ல நடக்கறதைப்பார்த்தா மகா கேவலமா இருக்கும் பொல இருக்கே??"என்றாள்.

''பூரணி உனக்கு ஒரு குட் நீயூஸ் நம்ம நீயூஸ் சேனல் அப்ரூவ் ஆகற நிலைமையில இருக்கு,இன்னும் ரெண்டு நாள்ல்ல நான்டெல்லிப் போக வேண்டியிருக்கும்,இந்த பத்திரிகை வேலையெல்லாம் முழுக்க முழுக்க உன் தலையில கட்டிட்டுப் போலம்ன்னுஇருக்கேன்"
''இது வேறயா?என்றாள் பூரணி சிரித்துக் கொண்டே.

ராம் எழுதி முடித்து கையெழுத்துப் போட்டு கொடுத்தான்.

இண்டர்காமில் மாலினியை அழைத்த பூரணி உடன் அவள் உதவியாளர் சுதாவையும் அழைத்து வரச் சொன்னாள்.

இருவரும் வர சுருக்கமாய் விஷயத்தை சொன்ன,'ரெண்டு பேருக்கும் சாட்சி கையெழுத்துப் போட ஆட்சபனைஇல்லையே?"என்று கேட்டாள்.

''என்ன மேடம் இப்படி கேட்டீங்க,இது நம்ம அலுவுலக மேட்டர்,இவ்வளவு நம்பிக்கை வச்சு கேட்கும் போது"என்ற படியேபோட்டார்கள்.

அவர்களை வெளியில் அனுப்பினதும் அப்பா அவளைப் பார்த்தார்.

''நீ பேசாம வக்கீல் தொழிலுக்கும்,ப்ரைவேட் டிடெக்டிவ் தொழிலுக்கும் படிச்சிருக்கலாம் போல இருக்கு?"

''அதெல்லாம் ஒண்ணும் இல்ல அப்பா,காமன் சென்ஸ்,ஆறு மாசம் முன்னாடி உங்ககிட்ட வீட்டுக்கு ஏதுலயோ கையெழுத்துவாங்க ராமைப் பார்த்தேன்.டி.வி.ஸ் பிஃப்டியில வந்தான்.போன மாசம் பார்த்தேன் ஸபார்க்ல்ல வந்தான்,அதான் உங்களுக்குதெரியாம கவனம் செலுத்த ஆரம்பிச்சேன்"

''அது சரி இந்த பொறுப்பு ஆசிரியர் விஷயத்தை எப்படி சமாளிக்கறது?"

''அதை நீங்க மறந்துடுங்க,அதுல என் கிட்ட சொல்ல முடியாத சில சங்கடங்கள் எல்லாம் உங்களுக்கு இருக்குன்னு எனக்குநல்லாவே தெரியும்,அதை ரொம்ப ஜாக்கிரதையா கையாளறேன்"

''நாளைக்கு ஸ்டூடண்ட்ஸ் ரிப்போர்டர்ஸ் வராங்க சென்னையில இருந்து மட்டும் எட்டு பேரு,ஒண்ணு ரெண்டு பேரைத் தவிரஎல்லோருமே மெரிட்ல்ல வந்திருக்கறவங்கதான்"என்றார்.

''அந்த லிஸ்ட் யார் கிட்ட இருக்கு?"

''உதவி ஆசிரியர் கிட்ட இருக்கு?"

"ம்''என்றவள் மாலினிக்கு லைனைப் போட்டாள்.

"சொல்லுங்க பூரணி?"

''நாளைக்கு வர்றாங்க இல்லே ஸ்டூடண்டஸ் ரிப்போர்ட்டர்ஸ் அவங்க முகவரி,தொடர்பு எண் எல்லாம் உடனே என்னோடமெயில்ல போடுங்க,இன்னொரு முக்கியமான விஷயம் நாளைக்கு வரணுங்கறதை அவங்களுக்கு ரிப்போர்ட் பண்ணியாச்சா?'

''பண்ணியாச்சு மேடம்,நேத்தே ரிமைண்ட் பண்ணிட்டேன்,இன்னைக்கு காலையிலயும் ஞாபகப் படுத்திட்டேன்"

''அவங்க எத்தனை பேரு சொந்தமா வண்டி வச்சிருக்காங்க?"

''ஆறு பேரு ஹோண்டா ஆக்டிவா வச்சிருக்காங்க மேடம்,ஒரு பொண்ணு பயங்கர ரிச் போல் ஆடி கார்ல தான் வருது,ஒருபொண்ணு பஸ்ஸூல வருது?'

''யார் யார் மெரிட் யார் யாரோட ரெகமெண்டேஷன்னு லிஸ்ட் இருக்கா?"

''இருக்கு மேடம்,ஆடி கார்ல்ல வரப் பொண்ணைத் தவிர அத்தனை பேரும் மெரிட்ல்ல வந்தவங்கதான்,அந்த ஆடி காருபொண்ணு சுஜாதாதான் ரெகமெண்டேஷன்?"

''யாரோட ரெகமெண்டேஷன்?"

''பொறுப்பாசிரியர் மேடம்?"

''ஓ,கே.அவங்க எல்லோருக்கும் மெயில் அனுப்பியிருங்க,ப்ளஸ் போன்ல்லயும் சொல்லிடுங்க,நாளைக்கு காலையில சரியாபதினொரு மணிக்கு இங்க கான்ஃபரன்ஸ் ஹால்ல இருக்கணும்,லஞ்சு இங்கே அரேஞ்ச் பண்ணியிருக்கோம்ங்கறதையும்சொல்லிடுங்க"

''ஷூர் மேடம்"

அப்பா பக்கம் திரும்பினாள்.

''பொறுப்பாசிரியரை என்ன பண்ணலாம்?'

''கொஞ்சம் தீர்க்க வேண்டிய கணக்கு இருக்கும்மா,நாற்பது வருஷமா என் கூட இருந்துட்டான்,'சட்'டுன்னு ஜோக்கரைத் தூக்கிபோடறா மாதிரி அவனை தூக்கிப் போட்டுட முடியாது,எனக்கு நல்லதும் பண்ணியிருக்கான்,கெடுதலும்பண்ணியிருக்கான்,கொஞ்சம் விட்டுப் பிடிப்போம்,ரெண்டே நாளே பெரிய டாக்டரோட மெடிகல் ;ஃபிட்னஸ் சர்டிபிகேட்டோட வந்துநிற்பான் பாரு,கொஞ்சம் காத்திருந்து தான் சுத்தமா காலி பண்ணனும்?"என்றவர் நிறுத்தி அவள் முகத்தையேபார்த்துக்கொண்டிருந்தாள்.
 

Thendral

Administrator
Staff member
#2
''பூரணி நான் உனக்கு பேர் வச்சது எப்படி தெரியுமா,பல தடவை சொல்லியிருக்கேன்,நானும் அம்மாவும் தீபம்நா.பார்த்தசாரதியோட தீவிர ரசிகர்கள்,சொல்லப் போனா மதுரையில மீனாட்சி மில்ல பக்கத்துல தான் இருந்தோம்,அப்பத்தான் நீஎனக்கு பையன் பொறந்தான்,அவனுக்கு நீ பொறந்ததும் பூரணின்னு வச்சோம்,உன்னோட முகமே பரிபூரண நிலா மாதிரிஜொலிக்குது,நானே கண்ணு வச்சுடுவேன் போலிருக்கு?'
பூரணி முகம் சிவந்து வெட்கப் பட்டாள்.

''உங்கப்பன் மட்டும் இப்ப இருந்திருந்தன்னா ரொம்ப சந்தோஷப் பட்டிருப்பான்"மெல்ல கண் கலங்கினார்.

''அப்பா கூல் டவுன்,நான் தான் எல்லாமே இருக்கேன் இல்லே?"

''இன்னொரு முக்கியமான விஷயம்?"

''என்னப்பா.சொல்லுங்க?"

''நாளைக்கு உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு?"

''என்னது சர்ப்ரைசா அது என்ன புதுசா பீடிகைப் போடறீங்க?"

''உனக்கு ரொம்ப பிடிச்ச அரவிந்தன் வர்றான்

சென்னையில இருந்து,அதை விட பெரிய சர்ப்ரைஸ் அவன் உன் கூட தான் இங்க கோ எடிட்டரா ஒர்க் பண்ண போறான்"

முகம் முழுக்க தாமரையாய் மலர்ந்தாள் பூரணி.

அப்பாவின் நெஞ்சில் குத்தினாள்.

''நீங்க ரொம்ப மோசம்,இதை எப்படி இத்தனை நேரம் என் கிட்டயிருந்து மறைச்சீங்க,அவனும் போன்ல கூட சொல்லலைப்பாருங்க,வரட்டும் வச்சுக்கறேன்"

''நான்தான் ஒண்ணும் சொல்ல வேண்டாம்,சஸ்பென்சா இருக்கட்டும்ன்னு அவங்கிட்டயும் சொல்லியிருந்தேன்,உங்கம்மாவுக்குதெரியும்",

''இது வேறயா,வச்சுக்கறேன் அம்மாவுக்கு"என்றாள் பொய் கோபத்துடன்.

அரவிந்தன் பெயரை ஒரு முறை சொல்லிப் பார்த்ததுமே உடல் எல்லாம் சிலிர்த்தது.

பார்த்து மூன்று வருஷம் ஆகி விட்டது.

கடைசியாய் அவன் எழுதிய கடிதம் இன்னமும் அவளிடம் பத்திரமாய் இருந்தது.

''அடிக்கடி கடிதம் எழுதி விஷயங்களைப் பரிமாறிக் கொண்டால் தான் நட்பும் காதலும் நிலைக்குமா,மனசு ஒன்று போதாதாகற்பனை சிறகை விரித்துப் பறக்க?
உண்மைதான்!

மொத்தமே இரண்டு,மூன்று கடிதங்கள் தான்.முத்து முத்துதாய் சில வரிகள் இருக்கும் பல அர்த்தங்களை உள்ளே புதைத்து.

அரவிந்தன் வெறும் நண்பன் அல்ல,வெறும் காதலன் அல்ல.

விவரிக்க முடியாதா உணர்வு.

அவளுக்கு எந்த ஆணைப் பார்த்தாலும் எதுவும் தோன்றாது.

அரவிந்தன் முகத்தை நினைத்தாலே உடல் முழுக்க சிலிர்க்கும்.

நரம்புக்குள் என்னமோ பண்ணும்.

அடிவயிறில் பிடித்து சுருட்டி இழுக்கும்.

மயிர்க் கால்கள் சிலிர்க்கும்.

உதடுகள் என்னமோ சொல்லத் தெரியாமல் தவிக்கும்.
அரவிந்தன்.

அவளின் வாழ்க்கையின் அர்த்தம்.
'
வாடா என் செல்லமே?'என்றாள் மனதிற்குள்.

ஆறடியில் நிற்கும் பெருமாள் போல் 'இதோ இருக்கேன் பூரணி'என்றான் அவள் காதுகளில் சிலிர்க்க.

அரவிந்தன் அவளின் சொந்த அத்தையின் மகன் தான்.அவன் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போதுஸ்ரீரங்கத்திற்க்கு போயிருந்த அத்தையும்,அத்திம்பேரும் எதிர்பாராமல் காவிரியில் பொங்கி வந்த புதுத் தண்ணீரில் அடித்துக்கொண்டு போய் விட்டார்கள்.உடல்கள் கிடைக்கவே இரண்டு நாள் ஆகி விட்டது.

அதன் பின் அரவிந்தன் வளர்ந்தது எல்லாம் பாட்டியின் மதுரை வீட்டில் தான்.

பூரணிக்கு அவனை சீண்டுவதே வேலை.இருவருக்குள்ளும் சொல்ல முடியாத ஒரு பந்தமும் பாசமும் பொங்கி வழியஆரம்பித்திருந்தது.

பூரணியின் தாய் தந்தையும் பாட்டியும் சின்ன வயசிலேயே பூரணி அரவிந்தனுக்குதான் என்று முடிவு செய்துவிட்டார்கள்.அரவிந்தனுக்கு ஒலைப் பக்கோடா என்றால் ரொம்ப பிடிக்கும்.அதனாலேயே பூரணி சின்ன சின்ன சண்டைவரும்போதேல்லாம் 'டேய் ஓலைப் பக்கோடா'என்று அழைத்துதான் கிண்டல் செய்வாள்.
அவனுக்கும் என்னமோ பத்திரிகைத் துறையில் தான் ஆர்வம் இருந்தது.

படிக்க கல்லூரிக்குப் போய் விட்டான்.

கடிதம் அதிகம் எழுத மாட்டான்.

ஒரு முறை அவள் கோபப் பட்டு கடிதம் எழுதியதற்கு பதில் எழுதியிருந்தான்.

''ஒரு கடிதத்தில் வெறும் சொற்ச ஜாலங்களை ரொப்பி எழுதும் கடிதங்களில் தான் நம் அன்பும் காதலும் நிலைக்கும் என்றுநினைக்கிறயா?'என்று.
உண்மைதான்.

எத்தனை சத்தியமான வார்த்தைகள்.ஒருவரை ஒருவர் அடிக்கடி பார்த்துக் கொள்வதாலோ,அடிக்கடி கடிதங்களை பரிமாறிக்கொளவதிலோ அதீத அன்பும் காதலும் வளர்ந்த்து விடுமா,கிடையாது,உள்ளுக்குள்ளேயே 'கண கண' வென்று தகிக்துக்கொண்டிருக்கும் உணர்வுதான் காதல்.இருவருக்கும் அது புரியாமல் இல்லை.அரவிந்தன் பெயரை நினைத்தாலே அவள் மனசும்உடம்பும் பற பற வென்று பற்றிக் கொள்ளும்.அவனுக்கும் அப்படிதான்.

நாளை வருகிறான்.அவன் பத்திரிக்கைத் துறையில் கோல்ட் மெடல்.பல கனவுகளுடன் லட்சியங்களுடன் வருவான்.அவளும்அப்படித்தான்.அவளுக்குள்ளும் சாதிக்க வேண்டும் என்கிற வெறி கொழுந்து விட்டு எரிகிறது.

மதியம் ரிப்போர்ட்டர்களையும் உதவி ஆசிரியர்களையும் கூப்பிட்டு பேசினாள்.
உள்ளே நுழையும் போதே சொல்லி விட்டாள்.

''நான் ஒரு எடிட்டரோட பப்ளிஷரோட பொண்ணு அப்படிங்கற எண்ணத்துல என் கிட்ட யாரும் பேச வேண்டாம்,பழகவேண்டாம்,இந்த பத்திரிகை குழுமத்தை மேலும் வளர்க்க வேண்டும்,என்னோட டார்க்கெட் இன்னும் ஆறு மாசத்துல நம்ம குழுமம்நம்பர் ஒன் குழுமமா வரணும்,எல்லா கேட்டகிரியிலயும் நாமதான் நம்பர் ஒண்ணா இருக்கணும்,இன்னொன்னு உங்களுக்கு நம்பகுழுமம் குறித்த எந்த யோசனை இருந்தாலும் என்னோட பர்சன்ல மின் அஞ்சல்ல பதிவு பண்ணலாம்,புதுசா எதாவது பத்திரிகைக்குஐடியா இருந்தா கூட ஒரு டம்மி ரெடி பண்ணி தாங்க,எல்லோத்துக்கும் மேலே இங்க யாருக்குள்ளேயும் ஈகோ இருக்ககூடாது,யாருக்கு என்ன தேவைன்னாலும் தயங்காம நிர்வாகத்துக்கு எழுதிக் கேட்கலாம்.எல்லாத்துக்கும் மேலே நாளைக்கு எட்டிஸ்டூடண்ட்ஸ் ரிப்போர்டர்ஸ் வராங்க,அவங்களை வழி நடத்த வேண்டியது உங்க பொறுப்பு,புது புது ஐடியாக்கள்,என்ன என்னபண்ணலாம்,சினிமா,பொதுத் துறையில அரசியல்ல என்ன மாதிரி பேட்டி எடுக்கலாம்ன்னு யோசனை கேட்டாங்கன்னாசொல்லுங்க,அவங்க சொல்ற ஐடியா நல்லா இருந்தா அதையும் மேம்படுத்தி வழி நடத்துங்க"என்றாள்.
சுரேஷ் கிரி தான் கேட்டான்.
 

Thendral

Administrator
Staff member
#3
''எட்டு பேரையுமே நம்ம குழுமத்துல ஒரு வருட ட்ரெய்னிங் முடிஞ்சதும் அப்பாய்ண்ட்மெண்ட் பண்ணப் போறோமா மேடம்?"

"அதை இன்னும் முடிவு பண்ணலை,எட்டு பேரும் தகுதியானவங்களா இருந்தா எட்டு பேரையும் அப்ஸ்ரப்பண்ணிக்கலாம்,இல்லே எத்தனை பேர் தேரறாங்களோ அத்தனை பேரு அப்ஸ்ரப் பண்ணிப்போம்"என்றாள்.
எல்லோரும் மௌனமாய் இருந்தார்கள்.

''இன்னொரு விஷயம் தினமும் ஒரு மணி நேரம் எடிட்டோரியல் மீட்டிங் கட்டாயம் நடக்கும்,அசைண்ட்மெண்டுக்கு வெளியிலபோயிருக்கறவங்க தவிர அத்தனை பேரும் நிச்சயம் கலந்துக்கணும்"

''நிச்சயமா மேடம்''என்றார்கள் கோரசாய்.

சுரேஷ் கிரி,''மேடம் ஒரு இம்பார்ட்மெண்ட் மேட்டர்"

''சொல்லுங்க அபிஷியல் மேட்டர் தானே எல்லோரும் கேட்கட்டுமே?"

''சென்னை வடபழனி பஸ் ஸ்டாண்ட சந்துக்குள்ளே ஒரு பெண்கள் கல்லூரி மூணு வருஷமா நடக்குது,அதுல ப்ராபர் வசதிஎதுவுமே கிடையாது,இந்த அழகுல அந்த காலேஜ்ல்ல போன் வருஷம் படிச்ச எம்.பி.ஏ.பொண்ணு ஒண்ணு கோல்ட் மெடல்வாங்கியிருக்கு,எந்த வித வசதியும் கிடையாது,எல்லாத்துக்கும் மேலே டாய்லெட் வசதி கூட கிடையாது,கல்லூரிக்கு வரபொண்ணுங்களுக்கு இயற்கை உபாதை கழிக்க கூட தண்ணி கிடையாது,மேனேஜ்மெண்ட்ல கேட்டா,வீட்ல இருந்து வரும்போதுரெண்டு பாட்டில் தண்ணி கொண்டு வாங்கன்னு கிண்டலா சொல்றாங்களாம்,இன்னும் கொஞ்சம் எதிர்த்துப் பேசினா வற்புறுத்திமாற்றுச் சான்றிதழ் கொடுத்து அனுப்பிடறாங்க,அதைப் பத்தி எழுதின ஒரு லோக்கல் பேப்பர் அலுவுலகத்தை அட்டாக்பண்ணியிருக்காங்க,காலேஜ் வாசல்ல எப்பவும் நாலு அடியாளுங்க வேன்ல்ல நிக்கறாங்களாம்,எந்த பத்திரிகையும் இதைப் பத்திகண்டுக்காதது ஆச்சர்யமா இருக்கு?"

''சுரேஷ் இந்த மேட்டரை நீங்களே டீடைலா பண்ணலாமே,அங்க படிக்கறப் பொண்ணு ஒண்ணு தைரியமா பேட்டி கொடுக்குமாமீடியாவில,ஐ மீன் விடியோவிலயும் ஷூட் பண்ணுவோம்"என்றாள்.
''நிச்சயம் என்னாலே ஏற்பாடு பண்ண முடிய முடியும்,என்னோட தங்கையே அந்த கல்லூரிதான் படிக்கறா"என்றான்.''உங்களுக்குஎந்த ஆட்சேபனை இல்லேன்னா,உங்க தங்கையும் எல்லாத்தையும் சொல்லத் தயாரா இருந்தா உடனே பண்ணுங்க,அடுத்தஇஷ்யூவிலயே வச்சுடலாம்,பயம் மட்டும் இருக்க கூடாது"

''தூள் கிளப்பிடறேன் மேடம்?"

''அந்த காலேஜ் யாருது?"

''அது ஒரு என்.ஆர்.ஐ.பேர்ல்ல இருக்கு மேடம்,பட் அது ஒரு ரூலிங் மினிஸ்டர் சம்பந்தப் பட்டதுன்னு சொல்றாங்க,இந்த அழகுலஅவங்களுக்கு இந்த வருடம் மெடிகல் காலேஜ் மற்றும் மெரைன் காலேஜ் பர்மிஷனும் வந்திருக்கு"என்றான்.

'பீ கேர்ஃபுல்"என்றாள் பூரணி.
அந்த கல்லூரி விஷயம் ஒரு பெரிய பூகம்பத்தை கிளப்பப் போகிறது என்பது அவளுக்கு அப்பொழுது தெரியாது.
 
#5
Oooooo......Meendum Poorani and Aravindhan.....
Seniors mathiri ,juniorsum manathai kavaruvaangala.......?
Let’s me wait......
 

Latest posts

Latest profile posts

Kandharva loga - 14 updated friends... pls read and give your precious cmnnts here.. thank u
Sorry Friends... wednesdayல இருந்து laptop issue. இதோ இப்ப சரி ஆகிடும் இதோ இப்பன்னு சொல்லியே இப்பவரை போய்ட்டு... இன்னைக்கு ஈவ்னிங் வந்தா கூட நைட்குள்ள எப்பி postசெய்துடலாம்னு இருந்தேன். நாளைக்காவது சரியாகுதான்னு பார்ப்போம்.
Hi.... Update only on Tuesday... Sry... Little busy... Bye.. Tc
banumathi jayaraman wrote on SR.Sharu23's profile.
My heartiest birthday wishes to you, SR.Sharu23 Madam
banumathi jayaraman wrote on Nandhini's profile.
My heartiest birthday wishes to you, Nandhini Madam
banumathi jayaraman wrote on Koolkeerthi's profile.
My heartiest birthday wishes to you, Koolkeerthi dear
banumathi jayaraman wrote on Jiffy's profile.
My heartiest birthday wishes to you, Jiffy Madam
உன் உயிர் தா..!! நாம் வாழ..!!! 7th எபி போஸ்ட் பண்ணியாச்சு..படிச்சு சொல்லுங்க...
அகத்திய ரகசியத்தில் அடுத்த மூன்று அத்தியாயங்கள் பதிவிடப்பட்டு விட்டன! ஆதவனும் பொன்மகளும் ஆசான் அகத்தியருக்குக் கொஞ்சமும் விருப்பம் இல்லாத செயல்களைச் செய்கிறார்கள். அப்படி என்ன தான் செய்கிறார்கள் என்பதை அறிய அகத்திய ரகசியத்தைப் படியுங்கள் தோழிகளே! என்னிடம் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள்
உயிர் விடும் வரை உன்னோடுதான் -- எபி 5 போட்டாச்சு டியரிஸ் :)

Advertisements

Online statistics

Members online
60
Guests online
1
Total visitors
61