PRIYANGALUDAN MUGILAN 01

#1
1518411216037.png

ப்ரியங்களுடன்.... முகிலன் 01

உதகமண்டலத்தின் அடர்ந்த காட்டுப்பகுதி அது.. சுற்றிலும் மரங்கள் அடர்ந்திருந்த அந்த வீட்டின் படுக்கை அறையில் கஷ்டப்பட்டு கண்விழித்தாள் அவள். கண்ணாடி மூடிக்கிடந்த ஜன்னல்களையும் தாண்டி குளிர் ஊசிப்போட்டது. எழுந்து அமர்ந்து கைகள் இரண்டையும் தேய்த்துவிட்டுக்கொண்டாள்.

அறை முழுவதும் இருள் சூழ்ந்து கிடந்தது.எப்படி உறங்கிப்போனோம் என்று புரியாதவளாக சுற்றும் முற்றும் பார்த்தாள். நெற்றியை தேய்த்துவிட்டுக்கொண்டாள் ஏதோ நினைவுக்கு வந்தவளாக அவசரமாக எழுந்தவள் ஜன்னலருகே சென்று அந்த கனமான திரை சீலைகளை விலக்கினாள்.

அறைக்குள் மெல்ல வெளிச்ச கீற்றுகள் பரவ அவள் முகத்திலும் மகிழ்ச்சி பரவ ஜன்னலின் வழியே பார்த்தாள். அங்கே தெரிந்தது அந்த கார்.
‘அவன் கார்தானே அது? ஆம் அவன் கார்தான் அது. சொல்லிக்கொண்டாள் அவள். வந்துவிட்டானா? என்னை காப்பாற்ற என்னவன் வந்துவிட்டானா?’ அவள் இதழ்களில் சந்தோஷ புன்னகை.


அந்த சந்தோஷம் அதிக நேரம் நிலைக்காத வகையில் உள்ளுணர்வு தந்த அதிர்ச்சியில் விதிர்த்து போய் திரும்பினாள். குரோதமும், வெறியும் நிறைந்த பார்வையுடனும், இதழ்களில் கள்ளச்சிரிப்புடனும் அவளுக்கு மிக நெருக்கமாக நின்றிருந்தான் அவன்.

‘என்னடி? அவன் வந்துட்டான்னு சந்தோஷமா இருக்கா? மலர்ந்து சிரித்தபடியே குனிந்து அவள் கண்களுக்குள் பார்த்தான் ‘என் மூஞ்சியிலே எங்கேயாவது இளிச்சவாயன்னு எழுதி இருக்கா என்ன?

உடலெங்கும் பூகம்பம்கள் கிளம்ப பயந்து விலகினாள் அவள்

‘நீங்க அவனை ரகசியமா வரச்சொல்லுவீங்களாம். நாங்க அப்படியே ஏமாந்து உங்களை அவனோட அனுப்பி வெச்சிடுவோமாம். நல்லாருக்குடி கதை’ ஈட்டி முனை பார்வையால் அவளை கிழித்தான்

‘ப்ளீஸ்.. ப்ளீஸ்.. வேண்டாம்..’ அவள் பின் வாங்கினாள்.

‘என்ன வேண்டாம்? ம்? அவன் வந்தான். அடிச்சு கார்லே கட்டி வெச்சிருக்கேன். இப்போ அந்த சரிவிலே காரோட உருண்டு போகப்போறான் பார்க்கிறியா? உனக்கு தெரியாம அவனை தள்ளி விட்டுட்டா அதிலே என்ன சுவாரஸ்யம். நீ இங்கிருந்து பார்ப்பியாம். நான் அவனை தள்ளி விடுவேனாம் சரியா? குட் கேர்ள்’

‘வேண்டாம் ப்ளீஸ்.. அவரை விட்டுடு..’ அவள் கத்திக்கொண்டே இருக்க கதவை வெளியே பூட்டிக்கொண்டு நடந்தான். உயிர் நடுங்க அவசரமாக ஓடிச்சென்று அந்த கண்ணாடி ஜன்னலின் வழியே பார்க்க துவங்கினாள் அவள்.

அங்கு நின்றிருந்த காரின் அருகில் வந்தான் அவன். ஒரு முறை திரும்பி அந்த வீட்டின் ஜன்னல் பக்கமாக பார்த்துவிட்டு

‘இன்னையோட நீ ஒழிஞ்சேடா வருண்..’ என சொல்லிவிட்டு அந்த காருக்கு முட்டுக்கொடுத்து வைக்கப்பட்டிருக்கும் பாறையை எத்தி விட வேண்டும் அவன்.

ஏனோ அந்த வார்த்தைகளை உச்சரிக்க தோன்றவில்லை அவனுக்கு. காரணம் அந்த பெயரா? வருண் என்ற அந்த பெயரா?

‘அதெல்லாம் ஏதுமில்லை. அவன் தனக்குதானே சொல்லிக்கொண்டாலும்’ அந்த வார்த்தைகளை சொல்ல மனம் வரவில்லைதான்.
எதுவுமே சொல்லாமல் கண்களில் வெறியை தேக்கி வைத்துக்கொண்டு ஒரு முறை திரும்பி அந்த வீட்டை பார்த்துவிட்டு முழு வேகத்துடன் அந்த பாறையை எத்திவிட்டான் அவன். கார் உருண்டு சரிந்து விழுந்தது அந்த மலைச்சரிவில்.


‘கட். ஷாட் ஒகே.’ ஒலித்தது இயக்குனரின் குரல்.!

சில நிமிடங்கள் கடந்திருக்க இயக்குனர் பேசிக்கொண்டிருந்தார் இணை இயக்குனரிடம். இயக்குனர் வெங்கட்ராமன். வயதில் சற்றே மூத்தவர். திரை உலகில் அவருக்கு சற்று மரியாதை அதிகம்.

‘நான் சொன்னேன் பார்த்தியா? வருண் அப்படிங்கிற பேர்லே எப்படி ஒரு பவர். அவன் முகத்திலே எப்படி ஒரு வெறி. ஷாட் ஒரே டேக்லே ஒகே. இதுக்காகத்தான் அவன் பேரை வருண்னு மாத்த சொன்னேன்.’

‘ஒரு நாள் பார் அந்த வருணை கார்லே வெச்சு இவன் நிஜமாவே தள்ளி விடப்போறான்’ அவர் சொல்ல அங்கே சிரிப்பொலி பரவ

‘ஆஹாங்?’ நெருப்பில் ஊறிய தொனியுடன் ஒலித்த அந்த குரலில் அரண்டு போய் திரும்பினர் இருவரும்.

பேன்ட் பேக்கட்டினுள் கையை நுழைத்தபடி அங்கே நின்றிருந்தான் அவன். விழிகள் கனலை உமிழ்ந்துக்கொண்டிருக்க ரௌத்திர ஸ்வரூபியாய் நின்றிருந்தான் அவன்.

அவன்தான் சற்றுமுன் காமெராவின் முன்னால் நடித்துக்கொண்டிருந்தவன்.
நெடு நெடு உயரம். ஆறடிக்கும் சற்றே மேலே. நேர்த்தியான மீசை. எதற்கும் அஞ்சாத, யாருக்கும் அடங்காத ஒரு கம்பீர பார்வை. இதுவெல்லாம்தான் அவன். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகன். எப்போதுமே விழிகளில் தாண்டவமாடும் கோபமும் அவனது இன்னொரு அடையாளம்.


பெயருக்கு ஏற்றார் போல் மேகவண்ணன்தான் அவன்! அவனது உயரமே மற்றவர்களை அவனுக்கு அடங்கி போக வைக்கும். அதற்கு மேல் அவனது உழைப்பினால் சேர்ந்த செல்வமும் சமூக அந்தஸ்தும் அது தந்த மிடுக்கும் அவனது நடையிலேயே மிளிரும்.
முகிலன் அவனது பெயர்!


‘ஆஹாங்.... ‘என்றான் அவன் அவனது ‘ஆ....ஹாங்..’ எப்போதுமே பல நூறு கோபக்கனல்களை உள்ளடிக்கியதாகவே இருக்கும்.

ஸோ...? என்றபடி அவர்கள் இருவரின் அருகிலும் வந்து நின்று இயக்குனரை பார்வையால் குடைந்தான் .

‘சா....ர்’ அவர் என்ன பேசுவதென்று அறியாமல் திகைக்க

‘நான் இந்த படத்திலிருந்து .விலகிக்கறேன். எனக்கு நீங்க கொடுத்த அட்வான்ஸ் நாளைக்கே வந்து நீங்க திரும்ப வாங்கிக்கலாம். ரெண்டு நாள் ஷூட்டிங்தானே முடிஞ்சு இருக்கு. நீங்க வேறே ஹீரோ பார்த்துக்கோங்க.’ கோபத்தில் இறுகி வெளிவந்தது முகிலனின் குரல். ‘என்னை மீறி வேறே எவன் வந்து இந்த படத்திலே நடிக்கிறான்ன்னு நானும் பார்க்கிறேன்’

அதிர்ந்து போனார் இயக்குனர். ‘அது இல்லை சார். ஆன்டி ஹீரோ சப்ஜெக்ட். சீன் நல்லா வரணும். அதனாலே நான் ஏதோ சும்மா..’

‘சும்மா? சும்மா விளையாடி பார்கறீங்களா? யார்கிட்டே. முகிலன்கிட்டேயா?‘ விழிகள் இன்னமும் கோபத்தை வீசிக்கொண்டிருக்க தலையை இடம் வலமாக அசைத்தான் முகிலன். ‘எனக்கும் வருணுக்கும் நடுவிலே ஆயிரம் இருக்கும். தட்ஸ் நன் ஆஃப் யுவர் பிசினஸ். மிஸ்டர் டைரக்டர். நாம இதோட முடிச்சுக்கலாம்’ கர்ஜித்தான் முகிலன்.

‘சார்.. சார் ப்ளீஸ்..’ அவர் பேசிக்கொண்டே இருக்க

குரலின் உஷ்ணம் பன்மடங்காக உயர்ந்திருக்க ‘முடிச்சுக்கலாம்னு சொன்னேன் சார்..’ என்றான் முகிலன். அவன் குரல் எழுந்த தொனியில் பொங்கியது இயக்குனரின் கோபமும்.

அணிந்திதிருந்த மூக்குக்கண்ணாடியை கழற்றியபடியே ‘முகிலன்...’ என்றார் கடுமை படர்ந்த தொனியில் ‘தமிழ்நாட்டிலே நீங்க மட்டும்தான் ஹீரோன்னு நினைச்சீங்களா? என்ன சொன்னீங்க ‘என்னை மீறி வேறே எவன் வந்து இந்த படத்திலே நடிக்கிறான்ன்னு நானும் பார்க்கிறேன்ன்னா?’.

‘எனக்கு பணம் பெருசில்ல. சுயமரியாதை ரொம்ப முக்கியம். நான் அதே வருணை வெச்சு இந்த படத்தை முடிச்சு காட்டட்டுமா? அவர் நீங்க மறுத்துட்டீங்க தெரிஞ்சா உடனே ஒத்துக்குவார். அப்படி இந்த படத்தை நான் அவரை வெச்சு முடிச்சிட்டா நீங்க எல்லார் முன்னாடியும் என் காலிலே விழுந்து மன்னிப்பு கேட்பீங்களா?’

உடல் மொத்தமும் தீ பற்றிக்கொண்ட உணர்வு பரவ விழிகள் விரிய பார்த்தான் அவரை.

‘இதோ இங்கே நிக்கறாங்க இல்ல இவங்க எல்லாரும் இந்த சவாலுக்கு சாட்சி. என்ன சொல்றீங்க மிஸ்டர் முகிலன்?’

‘ஆஹாங்...’ சுற்றி நின்றவர்களின் மீது விழிகளை சுழற்றியபடியே உச்சரித்தான் முகிலன். சவாலா? சவாலா மிஸ்டர் வெங்கட்ராமன்? வெரி குட். எனக்கு சவால் ரொம்ப பிடிக்கும்’ என்றான் கொதிக்கும் தொனியில். ‘எத்தனை நாள் டைம்?’

‘ஆறு மாசம். மிஞ்சிப்போனா ஆறு மாசம்’ அதுக்குள்ளே நான் படத்தை முடிச்சிடுவேன்’ தனது பங்குக்கு வெடித்தார் வெங்கட்ராமன்.

‘ஆறு மாசத்திலே? அதுவும் வருணை வெச்சு? ம்?’ கேட்டவன் சில நொடிகள் மௌனமாய் நிற்க அவன் விரல்கள் ஏனோ தன்னிச்சையாக அங்கிருந்த காமெராவின் மீது தாளம் போட்டன. ‘அப்படி உங்களாலே முடிக்க முடியலேன்னா என்ன செய்யலாம்?’

தளரவில்லை இயக்குனர் ‘நான் முடிச்சிடுவேன் முகிலன்’ என்றார் அழுத்தமாக.

வாய்விட்டு சிரித்தவனின் சிரிப்பிலும் கோபமே வழிந்தது ‘உங்களாலே முடியாது சார்’ என்றான் இரும்பாக இறுகிய குரலில். ’இந்த முகிலனை நீங்க ஜெயிக்கவே முடியாது. அப்படி முடிக்க முடியலேன்னா நான் என்ன சொன்னாலும் நீங்க செய்யணும். அதுக்கு நீங்க தயாரா?

‘சரி. நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன்’ தீர்மானமாக சொன்னார் அவர்.

‘நிச்சியமா அப்போ நீங்க அடியோட ஆடிப்போற அளவுக்கு நான் சொல்லி, சொல்லி அடிப்பேன். எந்த எல்லைக்கும் போவேன். தயாரா இருங்க மிஸ்டர் டைரக்டர்’ படு அழுத்தமாக சொல்லிவிட்டு

ஒரு முறை சுற்றி நின்றவர்களின் மேல் பார்வையை சுழலவிட்டுவிட்டு அதற்கு மேல் அங்கே நிற்காமல் விறுவிறுவென நடந்து தனது காரில் ஏறி அவன் அமர, எங்கிருந்தோ ஓடி வந்து காரில் ஏறிக்கொண்டான் அவனது மேனேஜர் ஷ்யாம். கிளம்பி பறந்தது அவன் கார்.

அவன் கார் சென்ற திசையை பார்த்தபடியே கண்ணாடியை அணிந்துக்கொண்டார் வெங்கட்ராமன் ‘உன் வயசு என் அனுபவம்டா கண்ணா’ என்றவர் உதவி இயக்குனர் பக்கம் திரும்பினார்.

‘இப்போ வருண் எங்கே இருப்பான்?’


 
#2
லைப்பாதையில் வளைந்து திரும்பி கார் விரைந்துக்கொண்டிருக்க கொதிக்கும் எரிமலைக்கு நிகராக அதனுள்ளே அமர்ந்திருந்தான் முகிலன்.

‘சார் என்ன சார் நீங்க?’ ரொம்ப நல்ல ரோல் அப்படின்னு ஆசைப்பட்டுத்தானே டேட்ஸ் கொடுத்தீங்க? இப்போ திடீர்னு.......’ இது ஷ்யாம்.

‘தேவை இல்லை. எவ்வளவு நல்ல ரோல்னாலும் எனக்கு அது தேவை இல்லை. யாரை? யாரை உரசிப்பாக்குறாங்க? முகிலனையா? வருணை நான் காருக்குள்ளே வெச்சு தள்ளி விடப்போறேனாம். சொல்றானுங்க..’ காயப்பட்ட சிங்கம் போல் உறுமினான் அவன்.

‘சார் நீங்க ரெண்டு பேரும் மோதிக்கறது ஊருக்கே தெரியும் சார். அப்போ இப்படிதான் பேசுவாங்க’ மெல்ல சொன்னான் ஷ்யாம்.

எப்போதும் மனதில் இருப்பதை நேரடியாக அவனிடன் சொல்லிவிடும் தைரியம் ஷ்யாமுக்கு உண்டு. சரியாக சொல்ல வேண்டுமென்றால் ஷ்யாமுக்கு மட்டுமே உண்டு.

‘வில் யூ ஷட் அப்..’ எகிறியது இவன் குரல்.

ஷ்யாம்! சில வருடங்களாகவே அவனது மேனேஜர். அதை தாண்டி அவனது நலம் விரும்பிகளில் முதலாம் இடம் ஷ்யாமுக்குத்தான். அதே நேரத்தில் அவன் வருணுக்கு தீவிரமான ரசிகன். இது முகிலனுக்கு தெரியாத விஷயமும் இல்லை.

‘சவால் விடறாங்க என்கிட்டே. அந்த வருணை வெச்சு இந்த படத்தை முடிக்க போறாங்களாம்’

“இவன் மறுத்தால் வருண் ஒப்புக்கொள்வான் என்ற நம்பிக்கை ஷ்யாமுக்குமே இருந்தது.” அவன் கோபத்தை இன்னமும் கிளறி விட வேண்டாம் எனும் எண்ணத்துடன் பேசாமல் அவனை பார்த்திருந்தான் ஷ்யாம்.

‘என்னடா? என்ன யோசிக்குறே? நடிச்சிடுவானாடா அவன்? என்னை மீறி நடிச்சிடுவானாடா அந்த வருண்? உறுமினான் முகிலன். ‘நோ... நோ.... நோ...’ காரின் சீட்டை ஓங்கி ஓங்கி குத்தினான் அவன்.

கோபம்! முகிலனின் மிகப்பெரிய பலகீனம்! அந்த கோபம் எல்லை மீறும் போது அதை தீர்த்துக்கொள்ள அவன் எந்த எல்லைக்கும் செல்வான் என்பது திரைத்துறையில் இருக்கும் எல்லாருக்குமே தெரியும்.

ஏதோ ஒன்றை எப்போதோ இழந்து விட்டதால் இந்த கோபமா? அல்லது தன்னையும் அறியாமல் அவன் மனம் ஏதோ ஒன்றுக்காக ஏங்குவதால் இந்த கோபமா? தெரியவில்லை ஷ்யாமுக்கு. அவனுக்கென்றில்லை. முகிலனது தந்தைக்கே இந்த கேள்விக்கான பதில் தெரிந்ததில்லை.

ஆனால் ஷ்யாமுக்கு ஒன்றே ஒன்று நன்றாக தெரியும். இந்த கோபத்தை எப்படி தற்காலிகமாக தணிய வைப்பது என்பது நன்றாக தெரியும். அதற்கு அவனிடம் இருக்கிறது ஒரு மருந்து! அற்புதமான மருந்து!

அதை ஷ்யாம் உபயோகிக்க ஆரம்பித்த சில நிமிடங்களில், அது மெல்ல முகிலனுக்குள் இறங்க ஆரம்பித்த அடுத்த சில நிமிடங்களில் மொத்தமாய் தணிந்தான் அவன். அப்படியே கண்களை மூடிக்கொண்டு சீட்டில் சாய்ந்தான் அவன். கார் உதகை மலையின் மலைப்பாதையில் சுழன்று சுழன்று இறங்கிக்கொண்டிருந்தது முகிலனின் மனதைப்போலவே!

‘ஹேய் பேபி. வான்னா கிஸ் யூ பேபி. ஒரு முத்தம். ஒரே ஒரு முத்தம். ப்ளீஸ் பேபி. அட வெட்கமா? என்கிட்டே வெட்கமா? எங்கே பார்ப்போம் உன் முகத்தை’ குரல் குழைய காதலித்துக்கொண்டிருந்தான் அவன்.

ஏசி காற்றில் ஆடும் பளபள சிகையும், சராசரி உயரமும், பார்பவர்கள் இன்னொரு முறை அவனை பார்த்தால் என்ன என்ற எண்ணத்துடன் திரும்பி பார்க்கும் வசீகரமும் அவனது அடையாளங்கள்.

பெற்றவர்கள் யாரென தெரியாது. உடன் பிறந்தவர்கள் என யாரும் இருக்கிறார்களா என்பதும் தெரியாது. எங்கிருந்தோ அவன் தேடாமலே தேடி வந்த சினிமா வாய்ப்பு அவனை இன்று உச்சத்தில் கொண்டு சென்று நிறுத்தி இருக்கிறது.

வாழ்க்கையின் அடி மட்டத்தில் துவங்கி, வாழ்க்கையின் உச்சத்தில் இருக்கும் எல்லா சந்தோஷங்களையும் துக்கங்களையும் அனுபவித்து விட்ட நிலையில் எதற்கும் பெரிதாக அலட்டிக்கொள்ளாத ஒரு சுபாவம் அவனுடையது.

காதலித்துக்கொண்டிருந்தான் அவன். அதாவது திரையில் ஓடிக்கொண்டிருந்த அவன் நடித்த அந்த காதல் காட்சிக்கு டப்பிங் பேசிக்கொண்டிருந்தான் அவன். வேறு யாருமல்ல அவன் நம் வருண்தான்.

குளுகுளு ஏசி காற்றும், மெலிதான வெளிச்சமும் பரவிக்கிடந்த அந்த டப்பிங் தியேட்டரில் அவனருகில் அமர்ந்து தனது பங்குக்கு குரல் கொடுத்துக்கொண்டிருந்தாள் அவள். அனுபமா!

அவளது வசனத்தை பேசிவிட்டு அவள் திரும்ப தான் அமர்ந்திருந்த சுழல் இருக்கையை ஆட்டிக்கொண்டே அவன் அவள் பக்கம் பார்க்க உதடு குவித்து காற்றில் அவன் பக்கம் அனுப்பினாள் ஒரு முத்தத்தை.

நிழல்வாழ்க்கையில் மட்டுமல்லாது நிஜவாழ்க்கையிலும் அவளுடன் இணைந்துவிடத்தான் முடிவு செய்திருந்தான் அவன். திருமணமும் நிச்சியமாகி இருக்கிறது. இன்னும் பத்தே நாட்களில் திருமணம். இதோ நிஜ வாழ்க்கையிலும் அவளை திகட்ட திகட்ட காதலித்துக்கொண்டிருக்கிறான்தான்.

டப்பிங் பேசி முடித்துவிட்டு வெளியே வந்து இருவரும் காருக்குள் அமர அவளை இழுத்து அழுத்தமாய் முத்தமிட்டான்.

‘வருண்..’ அவள் சிணுங்க

‘அது என்னது காத்துல முத்தத்தை பறக்க விடறது? முத்தம் கொடுத்தா இப்படி கொடுக்கணும்’ சொல்லிவிட்டு சரேலென கிளப்பிக்கொண்டு பறந்தான் அந்த ஆடியை.

‘மெதுவா. எதுக்கு எல்லாத்திலேயும் வேகம்?’ கேட்டாள் அனுபமா.

‘வாழ்க்கையோட அடுத்த நிமிஷம் நம்ம கையிலே இல்லை பேபி. ஸோ... அனுபவிச்சிடணும் எல்லாத்தையும் கிடைக்கும் போதே அனுபவிச்சிடணும். எதை செய்தாலும் அதை முழுசா செய்திடணும். அது சண்டை போடறதா இருந்தாலும். மோதி பாக்குறதா இருந்தாலும். இந்த விஷயத்திலே முகிலனை கேட்டுப்பார்’ என்றபடியே சிரித்தான் அவன்.

அப்படியா? நீங்க ரெண்டு பெரும் இதுவரைக்கும் மீட் பண்ணதே இல்லைன்னு கேள்விப்பட்டேன்.’ அவள் ஆச்சரியமாய் கேட்க

‘எஸ். இது வரைக்கும் பார்த்துகிட்டது இல்லை. ரெண்டு பேரும் சந்திச்சுக்கிட்டா நாடு தாங்காது பேபி’ என்று கண் சிமிட்டினான் வருண். ‘என்னை இந்த இண்டஸ்ட்ரிக்கு அறிமுக படுத்தினது அவனோட அப்பா. என்னை அவருக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும் ஆனா எங்க ரெண்டு பேரையும் அவனுக்கு பிடிக்காது’ என்றபடியே கலகலவென சிரித்தான் வருண்

பேசிக்கொண்டே சென்று அவளை அவள் வீட்டில் இறக்கி விட்டுவிட்டு தனது அடையார் பங்களாவை அடைந்தான் அவன். கொஞ்சமும் வேகத்தை குறைக்காமல் அந்த ஆடியை வெகு லாவகமாக கையாண்டு பார்க்கிங்கில் கொண்டு வந்து நிறுத்தினான் வருண்.

நேரம் இரவு எட்டு மணியை தாண்டி இருந்தது. காரை திறந்துக்கொண்டு அவன் இறங்கி நடக்க எதிர்ப்பட்டான் அவனது மானேஜர் தனஞ்செயன்.

‘எஸ் தனா. வாட் நெக்ஸ்ட்?’

‘டைரக்டர் வெங்கட்ராமன் வந்திருக்கார் சார்’ என்றான் தனா

‘அட’ என்றான் ஆச்சரியமாய். ‘இப்போ அவர் முகிலன் படம் டைரக்ட் பண்றார் இல்லையா? இங்கே வந்தது எனக்கு சரியா படலையே’ என்றவனின் மனது மடமடவென கணக்குகள் போட்டன. யோசனையுடன் நெற்றியை தேய்த்துவிட்டுக்கொண்டவன் சட்டென ஒரு புன்னகையுடன் தனஞ்செயனை பார்த்து கண்சிமிட்டினான்

‘ஏதோ ஒரு விளையாட்டு ஆரம்பம்’.

உள்ளே சென்று வெங்கட்ராமனிடம் கைகுலுக்கினான் ‘வாங்க சார் வாங்க வாங்க. காபி, டீ ஏதாவது சாப்பிடீங்களா? ‘தனா ஏதாவது கொடுத்தியா சாருக்கு’

‘சாப்பிட்டேன் சார். சாப்பிட்டேன் ‘ என்றார் அவர்.

‘குட். சொல்லுங்க சார்’ அப்புறம் வேறென்ன விசேஷம்? என்றபடியே அவர் எதிரில் இருந்த சோபாவில் சாய்ந்து ஆயாசமாய் அமர்ந்தான் வருண்.

நேரடியாக விஷயத்துக்கு வந்தார் வெங்கட்ராமன் ‘முகிலன் என் படத்தை விட்டு விலகிட்டான் சார்’

‘காரணம்?’

‘காரணம் கேட்காதீங்க சார் நீங்க. நம்பிக்கை துரோகி சார் அவன். பச்சை துரோகி. உங்களுக்குத்தான் அவனை பத்தி நல்லா தெரியுமே?’

வருண் இதழோரம் ஒரு புன்னகை தேங்கியது. அவரை ஏற இறங்க பார்த்தான் அவன் மெல்ல இடம் வலமாக அசைந்தது அவன் தலை.

‘நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட்.’ என்றான் அவன் ‘எனக்கு தெரியும். முகிலனை பத்தி எனக்கு நல்லா தெரியும். அவன் நேரடியா மோதுவான். நம்பிக்கை துரோகம் கண்டிப்பா பண்ண மாட்டான். நடந்தது என்ன? உண்மையை சொல்லுங்க’ அழுத்தம் திருத்தமாய் வெளி வந்தன வருணின் வார்த்தைகள்.
தொடரும்
 
#3
அன்பு தோழமைகளே
இதோ ப்ரியங்களுடன் முகிலன் தொடரின் முதல் அத்தியாயம் பதிந்துவிட்டேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொன்னால் நான் மகிழ்வேன்.
நன்றிகள் பல
ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்.
 

sridevi

Well-known member
#7
முகிலனுக்கு கோபம் தான்முகவுரையா , என்ன ஒரு கோபம் ,varun இதமான சாரலா nice intro sis(y)(y)(y)(y)
நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட்.’ என்றான் அவன் ‘எனக்கு தெரியும். முகிலனை பத்தி எனக்கு நல்லா தெரியும். அவன் நேரடியா மோதுவான். நம்பிக்கை துரோகம் கண்டிப்பா பண்ண மாட்டான். நடந்தது என்ன? உண்மையை சொல்லுங்க’ அழுத்தம் திருத்தமாய் வெளி வந்தன வருணின் வார்த்தைகள்.
varun mugilanai nanbanaka than ninikirana:unsure::unsure::unsure:nalla arambam sis
 
#8
முகில், வருண் ......இரண்டு நாயகர்கள்......?
முக்கோண காதலா.....?
நல்ல ஆரம்பம்.....
 
#11
இரண்டு துருவங்களா??அதுவும் திரை துறை!!!கோபத்தின் பிடியில் ஒருவன், வேகத்தின் பிடியில் ஒருவன்!! பார்ப்போம்!!
 

Devi

Active member
#15
excellent start Vatshu :eek::eek: Mukil Varun .. rendu peraiyum pidichurukke :love::love: yarukku support pandradhu :unsure: Kobamum vegamum kalandha iruvaraiyum thodarum indha vilayattu endha puyalai nokki pogindradho :unsure: waiting to know Vatshu
 

Afroz

New member
#16
Ada, interesting combo... Mukilan-Varun- total polar opposites. Epdi rendu perum mutti modha poranganu paka aavala iruken. The way Mukhilan says 'ahaaanng' .... Semmmaaaaaa! Epdi ma'am ipdi rasika thakka vagaila asault a eludhureenga? Rendu perukum edho vishayathula modhal, but deep rooted understanding iruku. Lets see how this rolls out..!
 

Staff online

Latest posts

Latest profile posts

ஹாய் தோழமைகளே,

துரத்தும் நிழல்கள் முதல் அத்தியாயம் பதிவிட்டிருக்கிறேன். வாசித்துக் கருத்துக்களை பகிர கேட்டுக் கொள்கின்றேன் . நன்றி :)
நண்பர்களே அப்பலோ -7 ( ஒரு மரணத்தின் கதை ) பகிர்ந்துள்ளேன். வாசித்து கருத்துச் சொல்லுங்கள்
Kandharva loga - 14 updated friends... pls read and give your precious cmnnts here.. thank u
Sorry Friends... wednesdayல இருந்து laptop issue. இதோ இப்ப சரி ஆகிடும் இதோ இப்பன்னு சொல்லியே இப்பவரை போய்ட்டு... இன்னைக்கு ஈவ்னிங் வந்தா கூட நைட்குள்ள எப்பி postசெய்துடலாம்னு இருந்தேன். நாளைக்காவது சரியாகுதான்னு பார்ப்போம்.
Hi.... Update only on Tuesday... Sry... Little busy... Bye.. Tc
banumathi jayaraman wrote on SR.Sharu23's profile.
My heartiest birthday wishes to you, SR.Sharu23 Madam
banumathi jayaraman wrote on Nandhini's profile.
My heartiest birthday wishes to you, Nandhini Madam
banumathi jayaraman wrote on Koolkeerthi's profile.
My heartiest birthday wishes to you, Koolkeerthi dear
banumathi jayaraman wrote on Jiffy's profile.
My heartiest birthday wishes to you, Jiffy Madam
உன் உயிர் தா..!! நாம் வாழ..!!! 7th எபி போஸ்ட் பண்ணியாச்சு..படிச்சு சொல்லுங்க...

Advertisements

Online statistics

Members online
38
Guests online
1
Total visitors
39