Raaja Mohini _ Vijayasri Padmanaban

#27
வாழ்த்துக்கள் தல . சீக்கிரம் ud போட்டு எங்களை அன்பர்தினத்தில் மகிழ்ச்சி படுத்தணும். உன் கதை என்னும் இன்ப வெள்ளத்தில் நீந்த வந்த எங்களை ஏமாற்றி விடாதே விஜி ஏமாற்றி விடாதே ....
 
#28
1


இராஜ மோகினி…..“உம் நெஞ்சில் இலச்சினை போல்

என்னை பொறித்திடுக ;

இலச்சினை போல் உம் கையில்

பதித்திடுக ;

ஆம், அன்பு சாவைப்போல்

வலிமை மிக்கது;

அன்பு வெறி பாதாளம் போல்

பொறாதது;

அதன் பொறி, எரிக்கும் நெருப்புப்

பொறி;

அதன் கொழுந்து பொசுக்கும்

தீக்கொழுந்து.”

(காதல் பற்றி..இனிமைமிகு பாடல்….பைபிளிலிருந்து…)


திருமணம் ….

அதும் பெரும்பணக்காரனோடு...இன்னும் நம்பத்தான் முடியவில்லை நிரல்யாவிற்கு….

வெளிநாடுகள் சுற்ற வேண்டும் என்ற பேராசை இருந்த போதிலும்..பட்டபடிப்புக்கள் இங்கு முடித்தாயிற்று...

அடுத்து ஒரு நல்ல ஜாப்...வேணும்
ஆராய்ச்சி படிப்பை சாக்கு வைத்தாவது ஜெர்மன் ஆஸ்ட்ரலியா அமெரிக்கா லண்டன் .எங்காவது சொருகிக்கொண்டு ஒரு வேலையும் பார்த்துக்கொண்டால்...

முடிந்தது தன் அலைச்சல்கள்….என்று ஸ்கெட்ச் போட்டு தந்தையிடம் சாதித்துக்கொள்ள....

இந்த முறை...தபோவனத்துக்கு வந்தவளுக்கு….

தேவ வாழ்வே வா வா...அழைக்க…படிப்பு பதினாலாம் பட்சமாய் போனது….வேலை காணாமலே போயிடுச்சு...

எளிதில் எல்லாம் திருமணம் முடிந்து கிடைக்கும் என்றால்...எதுக்கு கஷ்டப்பட்டுகிட்டு....

ஆனால் சந்தேகம் வந்தது…eee

காரணம் தன்னை ஒருமுறை கண்ணாடியில் பார்த்துக்கொண்டே …அவ்ளோ ஒன்னும் ஒர்த்தியா இல்லையே...கவலை வேறு பட்டுக்கொண்டாள்…

நிரல்...அப்பாவின் செல்வாக்கால்..இருக்கும்...ம்ம்ம்

அப்பா ...அவனை ராஜ யோகி என்று தான் குறிப்பிட்டார் இவளிடம்…

திருமணத்துக்கு உன்னை பெண் கேட்கிறான்?

உன் மனம் என்ன? என்று….

என்ன சொல்வாள் இவள்? உடனே...

மௌனமாய் இருந்தாள்....

அவரின் முதன்மை மாணவனாம்…

அதனால் அவனுக்கு “ராஜயோகி” பட்டமாம்
உபரி தகவல்கள் தந்தது அம்மா...

சாமியாரில் என்ன பெஸ்ட்?...நிரல் க்கு விளங்கல…

எல்லாமும் எல்லார்க்கும் விளங்கிட்டா இருக்குமிடம் பாண்டி மடம் தான்...தத்துவம்...eee


பேர்போன…..சாமியாருக்கு பொறந்த பெண்ணான தனக்கு இன்னோரு சாமியாரைத்தான் கட்ட ஆசை படுவார்கள் பெற்றவர்கள்…

நான்..அதுக்கு எப்பவும் எஸ் ..சொல்லவே மாட்டேன்..

அது ஒரு பக்கம் கிடக்கட்டும்…

அவன் பரம்பரை பணக்கார வீட்டு வாரிசு என்ற ....

அம்மாவின் எஸ்யேவில் அந்த பார்ட் மட்டும் நிரலின் லைக்கை அள்ளியது…eee

முகர கட்டையை ஒரு முறை பார்த்துவிட்டு...eee

சரி என்போம்...முடிவு பண்ணிட்டா...இலகுவாய்...

கூடவே ஒரு பிடில் சத்தம் இசைத்தது.. சோகமாய் நிரலுக்கு...அப்பாவின் மாணவர்களை தூர இருந்து பார்த்திருக்கிறாள்…

எல்லாம் தாடியும் வீசையுமாய்...அதில் நரை முடிகள் வேறு...முதன்மை சீடப்பிள்ளை என்றால் எப்படியும் 40 வயசு மேல இருக்கும்….

அப்பா சொல்லி கொடுக்கும் வேதமும் யோகமும்..

வருட கணக்கில் பாடம் செய்யணும்...புரிய கூட வயது அனுபவங்கள் தேவை..


பேருக்கு அப்பா மாறி பொண்டாட்டி வேணும் ன்னு கட்டுறானோ?...

காலம்போன கடைசியில் கல்யாணம் பண்ணி...

காலம்போன கடைசியில் …தன் பெற்றோர் மாறி பிள்ளை பெற்றுக்கொள்ளப் போறானோ?

அப்பா அம்மா.... வள்ளுவன் வாசுகி போல வெளி பார்வைக்கு தெய்வீக தம்பதிகளாய் காட்சி அளித்தாலும்….

அவர்களின் அகங்கள் அதிசயமே..!!!


மகளாய் ....அவர்களின் லேசான விரல் தொடுகையை... அருகருகே அமர்வதை.. படுப்பதை…பேசியதை கூட இவள் பார்த்ததே இல்லை…

அவளுக்கு காதல் பற்றி மாயதோற்றங்கள் தந்தது..அவளின் வனத்தை தாண்டிய தொழில் வளர்ச்சியில் நாகரீகங்களில் பண செழிப்பில்....பகட்டில் மின்னிய புற உலகமே...

இங்கு அவளுக்கு பொழுதே நகராது...அமைதி உறுத்தும்...

அங்கென்றால்....விரலில் விளையாடும் தொழில் நுட்பங்களும்..சினிமாக்களும்...நாக்குக்கு ருசி ருசியா பரிமாறும் உணவகங்களும்....வித விதமாய் அணியத் தூண்டும் ஆடை..அணிகலன்களும்...

அப்பப்பா...சுவையோ சுவை...ஈர்க்கும்

இங்கு வாழ அனுபவிக்க ஒரு ஜென்மம் போதாது...

படிப்பு படிப்பு என்று அது பின்னே சுத்தியாச்சு...

இனி தான் நல்லா அனுபவிக்கனும் ன்னு இந்தம்மா ஆசை...eee
 
Last edited:
#29
"சாமியாரிணியாய் தன்னால் வாழவே முடியாது...ம்ம்ம்

அம்மா எப்பவும் சமைப்பதில் தான் பிசி...

எத்தனை ஆட்கள் இருந்தாலும்….அவர்களுக்கு அன்னமிட்டு பரிமாற...அந்த தபோவனத்தின் ஒரே பெண் அம்மா தான்…காலை குளித்து போய் அங்கு நின்றால்... இரவு வரை விறகடுப்பு முன் வேர்வையோடு அம்மாவின் தவம் ..உதவுவதற்கு மாணவர்கள் உண்டு...

இப்படிலாம் நிரலால் முடியாது....சோம்பேறி அவள்...

காரணம் நிரல் ஓர் மிக சாதாரணமான ஒரு லட்சியமும் இல்லாத..ஆனால் கண்ணில் நட்சத்திரங்களின் எண்ணிக்கையளவு கனவுகள் கொண்ட 23 வயதுக்கே உரிய இளம் பெண்....

மானம், ரோஷம்,வெட்கம்,கவுரவம் இவைகளுக்கு மொத்த வியாபாரியாகவும்…

தானே உலக அழகியாக கண்ணாடி பார்த்து பெருமை பட்டுக்கொள்ளும்… சின்ன சின்ன ஆசைகளின் தேவதை…

இவளுக்குத்தான் கவுதமரிஷி @ சற்குரு அப்பா....

ஆனால் மிச்ச பேர் அனைவருக்கும் தெய்வம் என்றால் மெய் ..

நல்ல ஆத்மா...

இளம் வயதிலேயே ஞானம் பெற்று...நகர நரகங்களை விலக்கி… பாலைவனமாய் மாறிக்கொண்டிருந்த…கர்நாடக தமிழக எல்லையில் மலைக்கரட்டை சுந்தரவனக்காடுகள்
போல மாற்றி்...தபோவனம் பெயரிட்டு...குடில்கள் அமைத்து ...ஆதி இயற்கை வாழ்வு ..

சராசரி வாழ்க்கை முறைமைகள் அல்லாது...

இந்த தபோவனம் விந்தையானது...

கைகளாலேயே விவசாயம்...ஓடை சுனை நீர்...

நோ மெஷின்ஸ்...நோ செல்… நோ ஒரிஸ்...

ஞான மார்க்கம் கற்றுக்கொள்ள விரும்பும் அரிதாக வரும் மாணாக்கர்கள் கவுதமரின் செல்ல பிள்ளைகள்..

அவருக்கு எந்நேரமும்..உலகத்தின் உலகமக்களின நலனே நினைவு…ஜெபம் தபங்கள் எப்பவும் அங்கு உண்டு…உலக ஷேமத்துக்காய் ஹோமங்கள் கிரம பிரகாரம் நடந்துகொண்டே இருக்கும்…

மௌன சிரிப்பே அவரின் அடையாளம்...

இந்த குணமும் நிரலுக்கு இல்லை...

கல கலப்பாய் இருப்பாள்...

ஆசையே இல்லாத இவருக்கு....ஆசை மகள்....!!!

அறியாமையில் அவளாவது சதோஷத்தில் இருக்கட்டும் என்று ...எதிர்க்காது ரசிப்பவர்....

அவள் மாறனும் ன்னு கூட எதிர்பார்க்கவில்லை...

இஷ்டம் போல வாழ்வதற்கு எல்லா உரிமைகளும் மகளுக்கு உண்டு என்பதில் நம்பிக்கை கொண்டவர்...

அவர் வாழ்வின் சாயல் கூட மகள் மீது படிய விடவில்லை...கவுதமர்...

கவுதமர் மகள் என்ற ஒன்றே..அவளுக்கு சென்றவிடமெல்லாம் ..மரியாதை கிடைக்க...இவளுக்கு அந்த வித்தியாசம் கூட தெரில... அப்பா அம்மா இருவரும் ஒரு போதும் பள்ளி கல்லூரியில் சேர்ந்துவிட பார்க்க வரவில்லை...என்பது தான் பெரும் குறை...அப்போதில்.

வளர வளர..அது கூட இவளுக்கு தானே யோசிக்க வாழ...முடிவு எடுக்க..கனவு காண வசதியாய் போயிற்று...

தன்னோடு வளரும் படிக்கும் பிள்ளைகளை பார்த்து...ஒப்பிட்டஅங்கு இதைவிட மோசமான குறுக்கீடல்கள் தவறான வழிகாட்டல்கள்..
பாசமின்னை...ஒட்டுதலே இல்லாமை...சுயநலம் புரிந்தது..

இதோ இவளுக்காய் கார்...பேங்க் பணம்...நினைத்த நேரம்...வனத்தில் நுழையலாம் ..பூட்டே கிடையாத வாசல் உண்டு...

போய் அம்மா மடியில் உருண்டு ...புரண்டு கட்டி பிடிச்சு கடிச்சி...முத்தம் கொஞ்ச எப்பவும் சிறகுகள் போல கைகள் விரித்த பேரன்பு கண்ட பின்...

நிரல் ஜாலியோ ஜாலி....

கவுதமருக்கு மகள் முகம் கண்டால் போதும்..

இவளுக்கான ஓர் ஒளிர்வு தெரியும்...

ஹா...என் பெற்றோரிடம் வேறென்ன வேண்டும்?....நிறைவடைந்துவிட்டாள்...

இப்ப இந்த திருமண ப்ரொபோசல்...

அதும் அப்பாவின் மென்மையான அனுமதியில்...

ஏற்கவா?? ஆ......ம்ம்ம்ம்

கிளவனாய் இருந்தால்?அதில் ரொம்ப ஸ்லோவ் வா? ஆசையே இல்லாமல் இருந்தால்?

பணம் இருந்து என்னத்துக்கு?....

தலையாய கேள்வி...இங்கே தான் இருக்கிறாரா?

அந்த இராஜ யோகி?

எந்த புல்லை புடுங்கிட்டு இருக்கு பெரிசு....eee

கேட்ருவோமா?

மடப்பள்ளி பக்கம் இருக்கும் ..தாய் தான் இவள் டார்கெட்...

சோ...அவரைத் தேடி...

தேடி தங்கள் குடில் விட்டு வெளி வந்தாள்...

ஓர் வெள்ளை தொள தொள சுடிதாரில்...

தன் கேசுவல் செப்பல் போட்டு....

அப்பத்தான் தலைக்கு குளித்திருந்தாள்...மஞ்சள் மேனி மினிங்க ...ஈர் கூந்தலில் நுனி முடிச்சிட்டு..

தன் மேக்அப்களை இங்கு உபயோகிக்கல....இந்த காட்டுக்கு வீணே நினைத்து....eee

வழியோரத்தில் யாருமே பறிக்காத...கலர் ரோஜாக்கள்...கொத்து கொத்தாய் கண்ணை பறிக்க...

இந்த வனத்தின் ஏக போக சொந்தகாரியாய்...பிடித்த வண்ணத்தில் ஒவ்வொன்றாய்...

அதிலும் அவளுக்கு ஆசைகள் அதிகம்....இவளுக்கு....

காம்போடு கிள்ளி இடது கையில் சேமிக்க கைகள் பத்தல...

"யாரது..பூக்களை பறிப்பது?"

பின்னிலிருந்து ஓர் பயமூட்டும் கணீர் ஆண் குரல்..

மௌனமான பிரதேசத்தில்...திடும் மென்ற ஒலியில் அதிர்ந்து... கடைசி ரோஜா கை நழுவி மண்ணில் விழுந்தது....நிரலுக்கு...

"யார் யாரை கேள்வி கேட்பது?" முகம் சுருங்கி...

குரல் வந்த திசை திரும்பி பார்க்க....

மூங்கில் கழியில் ரெட்டை குடம் சுமந்தவாறே...

உயரமான உடல் முழுக்க மண்ணும் வேர்வையும்...

கரு கரு தாடியும் ..பட்டை மீசையும்...தோள்வரை அடர்ந்த முடியும்...கண்ணு அப்படி ஒரு கூர்ப்பாய்.....மூக்குக்கு போட்டியா.......இடையில் வேட்டி தார்பாய்ச்சி...
வலிய புஜங்கள் ..ஒட்டிய வயிறு...என்று வடிவாய் வலுவாய் உயரமான ஆண்....

திட்ட வாய் எடுத்தவள்... முடில...

இவளுக்கே அவனின் ஆகிருதி பயம் கொடுக்க...

"நீங்க இங்க புதுசா? " என்று பின்னடித்தாள்... eee

"பூக்கள் இனி பறிக்காத..." கண்டிப்புடன் சொல்லியவன்...

அவள் பின்னே் பார்வை போய்...முகம் மாறி.....

"அசையாதே...மோகினி..." மெல்லிய குரலில் எச்சரிக்க

என் பேர் எப்படி தெரியும்? கேள்வியை தொடர்ந்து ஏன் அசையக்கூடாது?...திகில் அடித்து...

தன் பெரிய கண்கள் இன்னும் விரிய...நிரல் அதிர்ந்து....

இப்படி சொன்னதால் தானாவே பயம் வந்து அசைவு நின்று போச்சு....

மிக மிக மெதுவாய் தன் தோள் சுமையை இறக்கிவைத்து....

அருகிருந்த சிறு குச்சியை தேடி எடுத்து. ..முனையை v யாய் பாதி உடைத்து....

நொடியின் பின்னத்தில் இவள் இடையோரம் படம் எடுத்து நின்று கொண்டிருந்த குட்டி பாம்பொன்றை தட்டி போட்டான்...

அது ஓடியே விட...இன்னும் சிலை உடல் விடாது ....பயத்தில் மோகினி...நடுங்கினாள்.....

"இறங்கும் பொழுதில்...இப்படி பூவும் பறிக்கக்கூடாது... அடர்ந்த செடிகள் பக்கத்தில் போகக்கூடாது... பத்திரமாய் வீட்டுக்கு போ மோகினி...."

அவளுக்கு ஆறுதல் போல சொல்லிட்டு...

அவன் தன் வழியே அவன் சுமையோடு செல்ல...

இப்ப தான் உணருக்கு வந்தவள்...

"ஹலோ...ஹலோ.... " அந்த வீசைக்காரனை அழைக்க...

திரும்பியும் பார்க்கல...அவன்....விடு விடு ன்னு நடக்க தொடங்கினான்...

இங்கிலிஷ் தெரியாது போல......ம்ம்ம்...

பின்னோடே அவன் வேகத்துக்கு எட்டி போட்டு நடந்து...

"நன்றி..பாம்பு கடியிலிருந்து காப்பாத்தினத்துக்கு..."

வலிய பேச்சு கொடுக்க....

அந்த பாம்பு ஒன்றும் செய்திருக்காது.....இங்கு மந்திரத்தின் கட்டுப்பாட்டில் இருப்பவை....அவள் பயப்பட கூடாது என்று தான் தட்டி விட்டது.....

அவன் ஏதும் சொல்லாமல்...அந்த பாரத்தோடு ஓட...

அப்படி என்றால் தான் எளிது சுமை தெரியாது...

பேசமாட்டுறானே....பேரலாம் சொல்றான்..குறை பட்டாள்...நிரல்..

"உங்க குரு வோட பொண்ணு நான்...தெரியுமா? " மிரட்ட...

பலன் கிடைத்தது...!

இப்ப வாய் திறந்தான்..

"நல்லா தெரியும்...."

"நீங்க அப்ரெண்டிஸ் ஆ....உங்களை நான் பார்த்ததே இல்லையே..."

இப்ப அவனும் மடப்பள்ளி ஒத்தையடி பாதையில் தான் நடந்து கொண்டிருந்தான்....

அதனால் இவளுக்கு வசதியா இன்னும் போச்சு...பேச...

"ஆமாம்..."

"அப்ப நீங்க சேர்ந்து ...ஆறுமாசம் தான் இருக்கும் நினைக்கிறேன்...சரிதானே...நான் ஆறுமாசமா இங்கு வரல...."

"ஆமாம்..."

"எங்கப்பா முதலில் வரவங்களுக்கு இந்த மாதிரி தான் பெண்டை கலட்டும் வேலைலாம் தருவார்...இதையெல்லாம் தாங்கி இருக்க முடிஞ்சா தான் யோகம் லாம் சொல்லி தருவார்...பயந்துடாதீங்க... பொறுமையா கத்துக்கோங்கன்ன..வாழ்த்துக்கள்..."

"உனக்கு ரொம்ப நல்ல மனசு மோகினி..."

அவன் குரலில் லேசாய் இளக்கம்....

இந்தம்மாக்கு ஒரே பெருமை ...

என் குணம் யாருக்கு வரும்?...ஒரு சீடப்பிள்ளை கிட்ட ஏற்ற தாழ்வு இல்லாமல் பேசுவதற்கு கூட இருதயம் வேணும் ன்னு..!eee

"உங்க பேர் என்ன அப்ரெண்டிஸ்.."

அவள் காணா அவன் முகத்தில் புன்னகை....

"ஆசீ...."

இங்கு பேர் மாறுமே?....யோசிக்கும் போதே அவன்....உணவு பரிமாறும் கூடத்துக்கு போய்விட...

இவள் தாயை நோக்கி...உள் நடந்தாள்..

கையிலிருந்த பூக்கள் இப்ப மணக்க வில்லை...

அழகு கவரவில்லை..பாம்பு பிடாரன் மீது நோட்டம் வந்தது....

அழகா? தெரியவில்லை...முகம் பூரா முடியா இருந்தா?...eee

ஆனால் ஆளுமை..குரலின் தெளிவு...குரு பொண்ணு சொன்ன பிறகும்...எதுவும் கண்டுக்காதது ...எல்லாம் ரொம்ப பிடிச்சி போச்சு...

இந்த சாமியார் அப்ரெண்டிஸ் தான் ...

ஆனாலும் கை காட்டினால் கட்டிக்கலாம்...இவனுக்கு மட்டும் விதி தளர்த்தலாம்..ஜொள்ளியது மனம்...

ஆனா அப்பா சொன்னது?...ம்ம்ம்..

விசாரிப்போம்...ஒரு முறை ஆளை பார்த்தால் போதும்..முடிவு பண்ணிடலாம்....

வேணாம் ன்னு மனம் முதல் ஒபினியன் சொல்லிட்டா...

வேணவே வேணாம்...!!

இப்ப கல்யாண முடிவில் கொஞ்சம் மாற்றம் செய்தாள்...

மங்கிய மாலை பொழுது தான்...ஆனால் இன்னும் சந்தியா காலம் நெருங்கவில்லை...

தாய் இரா உணவிற்கு அங்கு விளைந்த கேப்பையை திரித்து களி கிண்டி கொண்டிருந்தார்.....மூன்று பெரிய பெரிய உருளைகள்...

ஆட்கள் தின்று போக..மாடுகள் ஆடுகள் நாய் பூனை போன்ற வீட்டு விலங்குகளும் உண்டு...

மினி காற்றாலை மூலம்....இங்கு அளவாய்

விளக்குகளுக்கு மட்டும் வெளிச்சம் உண்டு அதுவும் எட்டு மணிக்கு மேல் இருட்டு ஆகிரும்...

இரவு தியானம் முடிந்த பின் அனைவருக்கும் ஒய்வு...

காலை வேதப்பாடங்களுக்குப் பின்...தோட்டத்தில் வயல்களில்..கடுமையான உடலுழைப்பு உண்டு....

சாயங்காலம்..திரும்ப அப்பாவிடம் ஞானபாடம் நடக்கும்..பின் தியானம்...தூக்கம்..

இது தபோவனஅட்டவணை...

அம்மா நீங்க சொன்ன ஆள் யாரு? ஓரு நிமிஷம் பார்த்துட்டு சொல்றேன்....நான் ஊருக்கு போவதற்குள்ள....அப்பாகிட்ட நீங்களே முடிவு சொல்லிருங்க.....

நிரல் அங்கு ஓர் மர பெஞ்ச் கிடக்க...அதிலிருந்த பொருட்களை தள்ளி வைத்து...சாவகாசமாய் அமர்ந்து தாயிடம் கேட்க....

"உன்கூட பேசிட்டு வந்தாரே அவர் தான் மோகினி...
அவர் சொல்லலியா?...."

ரேணுமா சொன்ன நொடி...

மனம் ...அவன் என்றால் ஏழையாக இருந்தாலும் கட்டுவேனே....

அதிரடி சிறப்பு சலுகை அறிவித்தது...

"ஊர் வேண்டேன்..உலக டூர் வேண்டேன்...

இந்த முடி மூடிய முகமூடி ஆண் வேண்டுமடி.....

ஆயுளுக்கும் அடிமையாய் கிடக்க சம்மதமடி ...சகியே..."

நிரல்ய மோகினி மனம் அந்தர் பல்டி அடித்தது...

"எனக்கு தெரியாது? அவனுக்கு தெரியும்..."

"ஆனா கண்ணில் ஒண்ணுமே இல்லையே...."

மின்னலாய் ஓர் எண்ணம் தோன்றி ஆனால் மரியாதை கொடுத்திருப்பான் என்று மனம் தேத்திக்கொண்டாள்...

இராஜ யோகிக்கு ....அவன் யோகத்துக்கு

இவள் பரி சோதனை எலி ன்னு தெரில..!!

தன் தந்தையிடம் ..தாய் விட்டேடே..சரி சரி சரி....ஆயிரம் முறை சொல்லிவிட்டாள்...

ஆசை..ஆசை..ஆசீ மேல்... ஆசை.

**********

உன்
முதல் பார்வை
என்னைத் தழுவியபோது
உள்ளுக்குள்
உடைந்து நழுவிய
மெளனக் கிண்ணங்களுக்கு
நான்
காதலென்று பெயரிட்டேன்

_ சேவியர்
 
Last edited:

Advertisements

Latest profile posts

banumathi jayaraman wrote on நதியா's profile.
My heartiest birthday wishes to you, நதியா Madam
banumathi jayaraman wrote on Rranii's profile.
My heartiest birthday wishes to you, Rranii Madam
kattangal part 8 updated friends...
banumathi jayaraman wrote on vishnuprasanth's profile.
My heartiest birthday wishes to you, Vishnuprasanth Sir
banumathi jayaraman wrote on priyaanandh's profile.
My heartiest birthday wishes to you, Priyaanandh Madam
banumathi jayaraman wrote on Asath's profile.
My heartiest birthday wishes to you, Asath Sir/Madam
banumathi jayaraman wrote on Arya's profile.
My heartiest birthday wishes to you, Arya dear
sandhiya sri wrote on Arya's profile.
wish you happy birthday sister..

Advertisements

Latest Episodes

Today's birthdays