• Please avoid unfair and unethical methods. If any discrepancies found, the user will be removed. Kindly follow the rules and regulations.

SSM-3

#1
மனம்-3

சுத்ணா ஆபீஸ்க்கு கிளம்பி வெளிய வர மொத்த குடும்பமும் வெளியில் தான் கூடிருந்தது..

சின்னவர்கள் அனைவரும் அவளுக்கு வா்த்துச் சொல்ல,அதை புன்னகை முகமாக ஏற்று நன்றி கூறியவள் முகம், அப்பா,அம்மா,சித்தப்பாக்கள்,சித்திக்கள்,மாமன்கள் மற்றும் அத்தைகளை கண்டவுடன் இறுகியது...


ஆண்கள் பணிகளுக்குச் செல்லவும்,பெண்கள் அவர்களை அனுப்பவும் வெளியில் இருந்தனர்..


சுதர்ணா, தங்களிடம் சொல்லாமல், தங்களை மதிக்காமல்,வேலைக்கு செல்வதை அவர்கள் விரும்பவில்லை, அதுவும் தன் கணவனை மதிக்காமல் செல்வது சுதரின் அம்மாவுக்கு அப்படி ஒரு கோவம் மற்றும் அகங்காரத்தை உண்டு பண்ணியது ...


ராதிகாவுக்கு அவள் கணவர் மாணிக்கவாசகம் சொல்வது தான் வேதவாக்கு,மாணிக்கவாசகம் தான் அவருக்கு முக்கியம், சொந்த பிள்ளைகள் கூட அவருக்கு பிறகு தான்...கணவனுக்கு பிடிப்பவரை இவருக்கு பிடிக்கும், அவருக்கு பிடிக்காதவரை இவருக்கும் பிடிக்காது.. மொத்தத்தில் கணவன் எது செஞ்சாலும் அது காரணமில்லால் இருக்காது என்று நம்பும் குணம்..

ராதிகாவின் வளர்ப்பு கூட அதற்க்கு ஒரு காரணமாக இருக்கலாம்... ராதிகாவுக்கு அவள் கணவர் படித்து பெரிய பதவியில் இருப்பது, எப்பவும் ஒரு பெருமை தான் ..

ஏனென்றால் அவர் குடும்பத்தில் எல்லோரும் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துருந்தனர், அதனால் மாணிக்கவாசகத்தை கண்டு ஒரு பிரமிப்பு எப்பவும் அவர்களள் மனதில்
உண்டு .. இப்பவும் பிள்ளைகள் கல்யாண வயது வந்த பிறகும் அதே கதை தான்...


கணவர்செய்யும் நல்லவைகளுக்கு துணை போவது எப்படி மனைவியின் கடமையோ, அதேப்போல்,அவர் தவறான முடிவு எடுக்கும்போதும், தவறை சுட்டிக்காட்டி திருத்துவதும் மனைவி கடமையே ..


ஆனால் ராதிகா அதை செய்ய தவறி விட்டார்..


மனைவி தான் இப்படியென்றால், மாணிக்கவாசகத்தின் தம்பி தங்கைகள் இதற்கும் மேல்.. அவர்களது பெற்றோரை விட அண்ணன்முக்கியம், அவர் சொல் தான் முக்கியம்.. அவரது பகைவர் இவர்களுக்கும் பகைவரே!!!

\\\நல்லா சேந்தாங்கடா, நல்லா வருவீங்க///..


தங்களிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் கிளம்பும் மகளை கண்டு ராதிகாவிற்கு, ஆத்திரம், கோவம் எல்லாம் சேர்த்து அவள் அறிவை மங்க செய்தது ..


தன்மகளை பார்த்து,"ஏய் நில்லுடி, என்னடி வேலை கிடைச்சுருக்கனு திமுருல,சுத்துறியா ..பாக்கறேன்டி இன்னும் எத்தனை நாளைக்கு என் வீட்டுக்காரரை மதிக்காம சுத்தரேனு பாக்கறேன், வேலைக்கு போற இடத்திலியாவது ஒழுக்கமா இரு , அங்கேயும் போய் குடும்ப மானத்த வாங்கின நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்". \\\இப்போ மட்டும் இருக்க மனுஷியாவா இருக்கறதா உங்களுக்கு நினைப்பா?////


இவரது பேச்சை கேட்டு சிறியவர்கள் முகம் சுருங்க, ஐஸ் பாட்டியோ இது என்ன பேச்சு போல் மருமகளைப் பார்த்தார்..பாட்டியும் மகன்,மருமகளுடன் பேசமாட்டார், ாத்தா தேவைக்கு மட்டும் பேசுவார்...


ராதிகா பேசின வார்த்தைகளின் வீரியம், சுதரின் அடி மனம் வரை சென்று தாக்கினாலும், வெளிில் மெளனமாக ஒரு உணர்வற்ற பார்வையை அவரை நோக்கி வீசினாள்.. அந்த பார்வை நீ என்ன சொன்னாலும் என்னை பாதிக்காது,

நீ எனக்கு யாருமே இல்லை என்பதை சொல்வதை போல் இருந்தது.. அவள் பார்வையை அர்த்தம் புரிந்து வெகுகொர், மறுபடியும் அவளை திட்ட வாய் எடுக்க,..

ஐஸின் விழி அசைவில், மற்ற இரு மருமகளும் ராதாகிவின் பேச்சை திசைத் திருப்பினர்..


"அக்கா, மாமா கிளம்பறாங்க பாருங்க. ரொம்ப நேரமா நிக்கறாக " என கோகிலாவும்,


"ஆமாம் அக்கா பெரிய மாமா ஆபீஸ் கிளம்பற நேரத்துல இந்த திமிறு பிடிச்சவ கிட்ட என்ன வீண் பேச்சு"
என மேனகாவும், ராதிகாவை திசை திருப்பினாள்..


கோகிலாக்கும், மேனகாவுக்கும் "சுதர்" தான் முதல் பிள்ளை போல்..அவர்கள் பெற்ற பசங்களை விட இவள் முக்கியம்..

பாஜி - ஐஸ் மற்றும் பிள்ளைகளுக்கு மட்டும் இவர்கள் இருவரும் "சுதரை செல்லம் கொஞ்சுவது தெரியும்"..

இப்பவும் "சுதர்" முதல்முதலாக வேலை செல்லும் போது, ராதிகா திட்டுவதை கண்டு இவர்களுக்கு கடுங்கோபம் தான்", ஆனால், அவர்களால் நேரடியாக ராதிகாவை எதிர்க்க முடியாதக் காரணத்தால் மாமியாரின் விழி மொழியை சரியாக கேட்ச் செய்து,

"சுதரை நோக்கி வந்த ராதிகா என்னும் சூறாவளி காற்றை தடுத்து, அதனை, அவர் கணவரை நோக்கி தென்றல் காற்றாய் இடம் மாற்றி விட்டனர் ..

" மாமா நேரமாகிடுச்சா மன்னிச்சுருங்க , எல்லாம் இந்த ஏடுபட்டவளால வந்ததுயென்று" முதல இருந்து ஆரம்பித்தார்..


"எல்லாம் நம்ம நேரம் ராதிகா, நம்ப வாங்கி வந்த வரம், மூத்தது தறுதலையா போய்டுச்சு, என்ன பண்ண, எல்லாம் திமிரு, நம்ம பேச்சை கேக்காதப்பவே கைக்காலை உடைத்திருந்தால் இன்னிக்கி வேலைக்கு போகமாட்டா..

கொஞ்சமாச்சும் நம்பள மதிக்கறாளா, நம்ப பேச்ச கேக்காம இருக்கா இல்லை, இதுக்கு எங்கயாவது அடிப்படணும்.. அப்போ தான் நம்ம அருமைத் தெரியும்..இப்போ வேலைக்கு போகணும்னு என்ன அவசியம் பொம்பளை அடக்க ஒடுக்கமா வீட்ல இருக்கலாம் இல்ல..தறுதலை எங்க உருப்படப்போரா, நம்ப மானத்த தான் வாங்கப்போறா" என்றார்..


அன்னை தன்னை பேசும்போது ஏற்படாத ஆழமான வலி,இப்பொழுது தந்தை பேச்சில் ஏற்பட்டது, அது தப்பு செய்யமால் தண்டனை மற்றும் பழி ஏற்ப்பவர்களின் வலி .. இரண்டு வருடம் சுதர் அனுபவித்த வலி வேதனை இப்பொழுது வார்த்தைகளாக வெளிப்பட்டது...


"நான் என்ன பண்ணினேன், வேலைக்கு போறது ஒரு தப்பா, அதற்க்கு எத்தனை பேச்சு, நீங்க பெற்றவங்க மாதிரியா என்கிட்டஇருக்கீங்க, எந்த அன்னை தந்தையாவது பெற்றப் பெண்ணுக்கு சாபம் குடுப்பாங்களா, நீங்க குடுக்கறீங்களே, உங்க பேச்சை என்ன நான் கேட்க்கலை"..


"படிச்ச படிப்பிலிருந்து போடும் டிரஸ் வரை, உங்க விருப்பப்படிதான் நடந்தேன்..அதனால் என்னாச்சு உங்க பேட்ச்சை கேட்டு என் வாழ்க்கை தான் போச்சு..இப்போ இருக்கறது என் உயிர் மட்டும் தான்..அதுவும் போன தான் உங்களுக்கு நிம்மதினா சொல்லுங்க, உயிரையும் விட்டுடறேன்" என்று முகம் சிவக்க மித மிஞ்சிய ஆத்திரத்தில் கத்தினாள் ..


அவள்"உயிரை விடுவேன் " சொன்னதில் எல்லோரும் சிறிது நேரம் உறைந்துப் போனார்கள்!!!
 
Last edited:
#2
அதில் முதலில் சுதாரித்தது மாணிக்கவாசகம் தான்...


"ராதிகா, எனக்கு நேரம் ஆச்சு கிளம்பணும், நீ மார்க்கெட்டுக்கு போகனும்னு சொன்னியே, வந்த விட்டுட்டு போறேன், எல்லோரும் இங்க என்ன கூட்டம், நேரம் ஆகுது இல்ல, எல்லாம் அவங்கவங்க வேலைக்கு கிளம்புங்க" என்று அவர் போட்ட சத்தில் எல்லோரும் புறா கூட்டம் மாறி பறந்துட்டாங்க!!!


விஷி அன்று மீட்டிங் இருப்பதால் அதற் ஏற்பாட்ை செய்ய சீக்கிரம் ஆபீஸ் சென்றுவிட்டான்..


தேவ், சுதர் கத்தும்போது தான் ஆபீஸ்க்கு கிளம்பி வெளிய வந்தான்..


"என்ன இவ இப்படி கத்தறா, கொஞ்சம் கூட பெரியவங்கனு மரியாதை இல்லாம ..சரியான அராத்து" என்று அவன் எண்ணிக்கொண்டிருக்கும்போத, அவன் பக்கத்தில் இருக்கும் அவளது வண்டியை எடுக்க வந்தவளிடம் இவன் ஏதோ பேச வர , அவள் அவனை முறைத்துவிட்டு சென்றாள்..


"இவள் எப்பவும் ஆங்கிரி பேர்டு மோடில் தான் இருப்பாளோ, என்ன டிசைனோ" என்று எண்ணிக்கொண்டான்.....


பாட்டி,தாத்தா மற்றும் யாரும் அறியாமல் சித்திகளிடமும் விடைப்பெற்று தனது வண்டியில் அலுவலகம் சென்றாள் சுதர்.


"KKS exports and import இரண்டு மாடி கட்டிடமாக இருந்தது .. தரைத்தளம் முழுவதும் அன்றாடம் அலுவல நிகழுமிடமாக , முதல் தளம் பணியாளர்களுக்கான கான்டீன் மற்றும் ஒய்வு அறையும் , மீட்டிங் ஹாலும், இரண்டாம் தளம் முழுவதும் கம்பெனி எம்.டியின் தனிப்பட்ட ராஜாங்கமாக திகழ்ந்தது ..


பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தி விட்டு அலுவலகத்தினுள சென்று வரவேற்ப்பில் இருந்த பெண்ணிடம் சென்றாள்..


"ஹை குட் மார்னிங், நான் சுதர்ணா, இங்க இன்னிக்கி வேலைல ஜாயின்ட் பண்ண வந்துருக்கேன்"..

"ஹாய், நான் கிற்ஸ்டி, இங்க ரிசப்ஸ்ஷ்ட், வெல்கம் டு கே.கே.எஸ் குரூப், உங்க ஜாயினிங் ஆர்டர் குடுங்கப்பா" என்றதும், அதை குடுத்து விட்டு அந்த இடத்தை நோட்டமிட்டாள்,

அங்கு ஐந்து நபர்கள் அமரக்கூடிய உயர்ரக சோபாக்கள்,கண்ணாடி மேஜைகள்,அலங்கார ஜாடி, லஸ்தலாம்ப்க்கள் என ஆடம்பரமத்தை பறைசாற்றியதை தவிர, துளிகூட அதில் கலை நயம் இல்லை அவள் எண்ணிக்கொண்டிருக்கும்போது கிற்ஸ்டியின் குரல் அவள் சிந்தனையை கலைத்தது...!

"சுதர்ணா நேர போய் ரைட் சைடு திரும்பினா செகண்ட் ரூம் எம்.டியோடுது, அவரை போய் மீட் பண்ணுங்க, ஆல் தி பெஸ்ட்" என்று வாழ்த்துக்கூறி அவளை அனுப்பினாள்..


"பிரகாஷ் எம்.டி." என்று எழுந்திருந்த கதவை தட்டி "மே ஐ கம் இன்" என்றாள்..

"எஸ் கம் இன்" என்ற பதிலில் உள்ளே சென்றாள்..


"வாங்க சுதர்ணா" என்ற எம்.டி பிரகாஷின் வயது 39, ஆனால், பார்க்க 35 வயது தோற்றமுள்ளவன்...நல்ல உயரம், மாநிறம், அடர் மீசை,சுருள் மாடல் என பார்க்க மாடல் போல் தோற்றமளிப்பவன்...


"டேக் யுவர் சீட்" என்றதும்


"தேங்யு சார்" என்று இருக்கையில் அமர்ந்தாள்..


"நீங்க என் பி.எ.என்கறதுால உங்களுக்கு என் கேபின்க்கு நெக்ஸ்ட் கேபின் உங்களுக்கு அல்லாட் செஞ்சுருக்கேன், இன்னிக்கி பர்ஸ்ட் டேனால கொஞ்சம் ரிலாக்ஸா உங்க ஒர்க் என்னங்கறத ஸ்டடி பண்ணுங்க, நாளையிலிருந்து ஒர்க் ஸ்டார்ட் பண்ணலாம், இப்போ உங்களுக்கு கிற்ஸ்டி உதவுவாங்க" என்றவன்

"கிற்ஸ்டியை அழைத்து சுதர்ணாவிற்கு மற்ற ஸ்டாப்ஸ்க்கு இண்ட்ரோ குடுத்து அவளது பணியை பற்றியும் கூறுமாறு" சொல்லிவிட்டு வெளியச்சென்றுவிட்டான்..


இன்றோடு "சுதர் வேலைக்கு சென்று ஒரு வாரம் ஓடிவிட்டது" அவலுவலகத்தில் சுதர் நன்கு
பொருந்திக்கொண்டாள்..


இந்த ஓரு வாரத்தில் இவள் அதிகாலையில் இவள் பிள்ளையாரை பார்க்கச் செல்வதும், பிள்ளையாரை பார்க்கும் இவளை தேவ் பார்ப்பதும்
வழக்கமாகிவிட்டது !!!


தேவ் மாடியில் இருந்து இவளது முக பாவனையை மட்டும் கவனித்தவன், " பிள்ளையாரிடம் சிறுபிள்ளைபோல பேசும் இவளா"..


" அன்று பெரியவர்களிடம் அத்தனை அலட்சியம், திமிறாக பேசினாள்,.

" இப்போ காண்பது நிஜமா"?


"இல்லை அன்று கேட்டது நிஜமா"?


ராட்சஷி, என்ன இப்படி புலம்ப விட்டுட்டாளே" என்று அவன் எண்ணிக்கொண்டிருக்கும்போதே அவன் ரூமில் ஓடிக்கொண்டிருந்த டிவியில் இருந்து,லஜ்ஜாவதியே என்ன அசத்துர ரதியே,
ராட்ஷசியோ தேவதையோ ரெண்டும் சேர்ந்த பெண்ணோ ,
அடை மழையோ அனல் வெய்யிலோ ரெண்டும் சேர்ந்த கண்ணோ ,
தொட்டவுடன் ஓடுறீயே ,
ஏ.. தொட்டாச்சிணுங்கி பெண்தானோ ,
அழகினாலே அடிமையாக்கும் ராஜ ராஜ ராணி !!!
லஜ்ஜாவதியே என்ன அசத்துற ரதியே !!
லஜ்ஜாவதியே என்ன அசத்துற ரதியே!!!


பாட்டு கேட்க , அதில் கடுப்பானா அவனது மனசாட்சி, "அவ ராட்சஷியா இருந்தா என்ன? இல்லை தேவதையா இருந்தா உனக்கு என்ன? ஒழுங்கா ஆபீஸ் கிளம்ப வழியப்பாரு என்று கடுப்படித்தது..


"வர வர நீ என்ன ரொம்ப நக்கல் பண்ற, நல்லதுக்கு இல்லை சொல்லிட்டேன், ஆனா நீ சொல்றதும் கரெக்ட் தான், அவ யாரா இருந்த எனக்கு என்ன நான் ஆபீஸ்க்கு கிளம்ப வழிய பார்க்கிறேன்" என மனசாட்சியிடம் கூறிவிட்டு, மறக்காமல் தொ(ல்)லைக்காட்சியையும் நிறுத்திவிட்டு குளிக்கச் சென்றான்..


சுதரின் நிஜ முகம் எது??
 
Last edited:
#7
Deiiii dev oru pakkam sight adikura oru pakkam avala thitra ennada neee,en ellarum avala first day velaiku pogumbode torcher panreenga,nee poda chella kutty sudhar,prakash married da enna madiri character nu yosanai🤔🤔🤔🤔🤔,veetladan tension paavam sudhar ku office la yaachum happy ya irukatum😙😙😙
 

Latest profile posts

ஹாய் டியர்ஸ்...
உன் உயிர் தா..!! நாம் வாழ..!!! 24 ( PRE - FINAL ) எபி போடுறேன்..
படிச்சு கருத்தை சொல்லுங்க...
akila kannan's thaagam 18 updated friends...
Porkalathil oru pen puraa... (part-9) posted
Karuppu rojakkal part-17 posted... தன் மனதில் நுழைந்தவள் விபச்சாரியென்று பின் தெரிய வரும்போது மகேசின் மனநிலையென்ன???
ஹாய் நட்பூஸ்,
“நேசித்த இரு நெஞ்சங்கள்..” முப்பத்தி ஒன்பதாவது அத்தியாயம்..! பதிவிடுகிறேன்.. படித்துவிட்டு உங்களின் கருத்துகளை மறக்காமல் பதிவிடுங்கள் தோழிகளே.. உங்களின் கருத்துகளை ஆவலுடன் எதிர் பார்க்கும் உங்களின் தோழி சந்தியா ஸ்ரீ
தேடி வந்த தேவதையே FINAL EPISODE போட்டாச்சு மக்களே இறுதி அத்தியாயத்தை படித்துவிட்டு கருத்தை சொல்லுங்க
Hi Dearies! Idhu Irul Alla! 24th episode updated! Looking forward for your valuable comments! Will come back with Climax soon! Till then, Happy Reading!
banumathi jayaraman wrote on Nalinimani's profile.
My heartiest birthday wishes to you, Nalinimani Madam
தேடி வந்த தேவதையே PREFINAL EPISODE விரைவில் வருகிறது
உமா தீபக்கின் அழகியின் காதல் தவம் பகுதி 9 போட்டாச்சு மக்களே!!

Advertisements

Latest Episodes