• Please avoid unfair and unethical methods. If any discrepancies found, the user will be removed. Kindly follow the rules and regulations.

Teaser for episode 23

Rate this Episode with options

  • Need to be improved

    Votes: 0 0.0%

  • Total voters
    25
#1
“என்னங்க...எழுந்து உட்காரணும் போல இருக்கு.கொஞ்சம் உதவி செய்றீங்களா”ஆதித்யனின் புறம் கைகளை நீட்டினாள் பொழிலரசி.

சட்டென்று அவளருகில் வந்த ஆதித்யன் அவளை தூக்கி அமர வைத்து தலையணையை சரி செய்து அவள் உட்காருவதற்கு ஏதுவாக வைத்தான்.

“ஏதாவது சாப்பிடறியா பொழில்”

“தாகமா இருக்கு.குடிக்க ஏதாவது கொண்டு வர சொல்லுங்க...”

அறைக்கு வெளியில் இருந்த வள்ளியை அழைத்து பழங்கள் வாங்கி வர சொன்னான் ஆதித்யன்.வள்ளி வாங்கி வந்த பழங்களை கத்தியின் மூலம் சிறு துண்டுகளாக போட்டு கப்பில் வைத்து அரசியிடம் நீட்டினான் ஆதித்யன்.பழங்களுக்கு இடையில் தயாராக இருந்த இளநீரையும் ஒரு பார்வை பார்த்தாள்.

ஏதோ யோசனையில் இருந்த அரசியை தோளில் தட்டி கலைத்த ஆதித்யன் அவளிடம் பழக் கிண்ணத்தை ஸ்பூனுடன் வைத்து நீட்டினான்.

“வள்ளி நீ வெளியே இரு...”என்று உத்தரவிட்டு வள்ளியை வெளியே அனுப்பி விட்டு ஆதித்யனை நேராக பார்த்து பேசினாள் பொழிலரசி.

“உங்களுக்கு என்னை ஏற்கனவே தெரியுமா?”துளைக்கும் பார்வையுடன் அவனை பார்த்தாள் பொழிலரசி.

“இன்னும் இரண்டு நாள் நீ இங்கேயே தங்கி இருக்கணும்னு டாக்டர்ஸ் சொல்லி இருக்காங்க பொழில்.அப்புறம் நம்ம வீட்டுக்கு போயிடலாம்.அதுவரை நல்லா தூங்கி ஓய்வெடு”மிகுந்த கவனத்துடன் ஒவ்வொரு வார்த்தையையும் கோர்த்து தெளிவாக பதில் சொன்னான் ஆதித்யன்.

“என் கேள்விக்கு இன்னும் பதில் வரலை.”

“இரண்டு நாளா எந்த வேலையும் பார்க்கலை அரசி.நிறைய வேலை இருக்கு.உன்னுடைய துணைக்கு வள்ளி இருப்பா.நான் போயிட்டு சாயந்திரம் சீக்கிரம் வந்துடட்டுமா?முடிஞ்சா டாக்டர் கிட்ட பேசி உன்னை நாளைக்கே வீட்டுக்கு கூட்டிட்டு போயிடறேன்”

“அந்த வீட்டிற்கு என்னால வர முடியாது”

“பொழில் ஏதோ இந்த ஒருமுறை கவனக்குறைவால் இப்படி ஒரு தவறு நடந்துருச்சு.இனி இப்படி நடக்காது.வீட்டில் பாதுகாப்புக்கு இன்னும் ஏற்பாடு செய்றேன்.அதையே நினைச்சு பயப்படக்கூடாது சரிதானா...விக்ரமாதித்யனோட மனைவிக்கு பயம் அப்படிங்கிறது இருக்கக்கூடாது”

“அந்த வீட்டிற்கு வந்தா என்னை அவன் தொந்தரவு செய்வான்.நான் வரலை”

“உன்னை தொந்தரவு செய்றானா?யார் அவன்? விஜியை சொல்றியா?அந்த அளவுக்கு தைரியம் இனி அவனுக்கு வராது.அதை நான் பார்த்துக் கொள்கிறேன்”உறுதி போல பேசினான் ஆதித்யன்.

“அவர் இல்லை...”

“பின்னே...வேறு யார்?”கண்கள் நொடியில் கோவைப்பழமானது ஆதித்யனுக்கு.

“வேறு யார்...என்னை கல்யாணம் செஞ்சுகிட்ட கடன்காரன் தான்”சலிப்போடு சொன்னாள் பொழிலரசி.

ஒரு நிமிடம் முழித்தவன் சட்டென்று வாய் விட்டு கலகலவென சிரிக்க ஆரம்பித்தான்.

“ஹா ஹா...நான் உனக்கு கடன்காரனா?சுத்தி வளைச்சு என்னை பத்தி என்கிட்டயே கம்ப்ளைன்ட் பண்ணுறியா...கெட்டிக்காரிதான் நீ”

“எவ்வளவு கெட்டிக்காரியா இருந்து என்ன பிரயோஜனம்.உங்க வாயில் இருந்து ஒரு வார்த்தை கூட வாங்க முடியலையே”

சட்டென்று மௌனமானான் ஆதித்யன்.பொழிலரசியும் அவனது முக பாவங்களை கூர்மையாக அளவிட்டாளே தவிர வேறு ஒன்றும் உடனடியாக பேசவில்லை.ஆதித்யனை அவனது செய்கைகளை வெளிப்பார்வைக்கு தெரியாமல் கவனமாக மறைப்பதில் கவனம் செலுத்த, ஆதித்யனால் மறைக்கப் பட்ட அவனின் தடுமாற்றம் அனைத்தையும் பொழிலரசி உணர்ந்து கொண்டாள்.

“எனக்கு என்ன பிடிக்கும்னு உங்களுக்கு தெரியுது.அதை எப்படி கொடுக்கணும்னு உங்களுக்கு தெரியுது.ஆனா என்னை மட்டும் உங்களுக்கு தெரியாது இல்லையா?”

“.....”

‘சரியான கல்லுளி மங்கன்.வாயை திறக்கிறானா பார்.இவனை என்ன செய்றது’ என்று மனதுக்குள் அவள் தாளித்துக் கொண்டு இருக்க ஆதித்யனோ அரசிக்கு உள்ளுக்குள் மலர்களால் அர்ச்சனை செய்து கொண்டு இருந்தான்.அவனின் மனக்கண்ணில் சற்று முன் நடந்த காட்சிகள் அனைத்தும் ஒரு படம் போல அப்படியே ஓடியது.
 
Jovi

New member
#2

Super teaser 😍😍😍
 
#7
மது மிகவும் எதிர்ப்பார்ப்புடன் கொண்டு செல்லுகின்ற உங்கள் எழுத்து நன்றாக உள்ளது

thanks chithra
 
Latest profile posts

ஹாய் நட்பூஸ்,
“நேசித்த இரு நெஞ்சங்கள்..” முப்பத்தி எட்டாவது அத்தியாயம்..! பதிவிடுகிறேன்.. படித்துவிட்டு உங்களின் கருத்துகளை மறக்காமல் பதிவிடுங்கள் தோழிகளே.. உங்களின் கருத்துகளை ஆவலுடன் எதிர் பார்க்கும் உங்களின் தோழி சந்தியா ஸ்ரீ
உன் விழிகளில் விழுந்த நாட்களில் 2 போட்டாச்சு ப்ரெண்ட்ஸ்.. உங்க கமண்ட்ஸ்காக வெய்டிங் யா...
first my wishes to u pritu thentell me ur story name and author name Prittu
banumathi jayaraman wrote on Uma Dhanasekar's profile.
My heartiest birthday wishes to you, Uma Dhanasekar Madam
banumathi jayaraman wrote on Subq's profile.
My heartiest birthday wishes to you, Subq Sir/Madam
banumathi jayaraman wrote on PERIASAMY. M's profile.
My heartiest birthday wishes to you, PERIASAMY. M Sir
banumathi jayaraman wrote on Muthuselvigopal's profile.
My heartiest birthday wishes to you, Muthuselvigopal Madam
banumathi jayaraman wrote on Indra's profile.
My heartiest birthday wishes to you, Indra Madam
banumathi jayaraman wrote on dkk's profile.
My heartiest birthday wishes to you, DKK Sir/Madam
banumathi jayaraman wrote on Dhanasudha's profile.
My heartiest birthday wishes to you, Dhanasudha Madam

Today's birthdays

Advertisements

Latest Episodes