Thedal 2

#1
ருள்.. நூற்றாண்டுகள் கடந்தாலும் பாம்பிற்கு கூட பயப்படாத மனிதனைக் பயம் கொள்ள செய்யும் கொடிய காலன்..

விண்ணில் பறக்கும் வாள் நட்சத்திரங்களின் ஒளி கண்களுக்கு புலப்பட்டாலும் ஷிப்பிற்குள் மண்டிக்கிடக்கும் இருளானது அனைவரையும் சற்று அச்சம் கொள்ளவே செய்தது..

“யாரும் பயப்படாதீங்க.. பவர் சிஸ்டம்ல ஏதோ பிரச்சனைனு நினைக்கிறேன்.. சீக்கிரம் சரி பண்ணிவிடலாம்”, என்ற அத்வைத், “சாய்.. வசிஷ்டரா.. நீங்க ரெண்டு பேரும் டிரைவ் என்ஜின் ரூம்க்கு போங்க.. ஐ தினக் தி ஷிப் இஸ் ஸ்டாப்ட் மூவிங்..”, என்றான்..

“ஓ கே அத்வைத்..”, என்ற சாய் தான் அமர்ந்திருந்த சீட்டிற்கு பக்கவாட்டில் இருக்கும் செல்பைத் திறந்து கேண்டி லைட்ஸ்களை (சிறுவர்கள் விளையாடும் சிறு பந்தைப் போன்றிருக்கும் எமெர்ஜென்சி லைட்ஸ்.. ஒரு பதினாறுக்கு பதினாறு ரூம் முழுதும் வெளிச்சம் பரப்பக்கூடியது..) எடுத்து அனைவருக்கும் கொடுத்துவிட்டு எக்னாவின் நெஞ்சில் இருக்கும் வயிர்களில் விளையாடிக் கொண்டிருந்த அபித்திடம், “எக்னாவிற்கு என்னாச்சு..??”, என்று கேட்டான்..

“ஷீ இஸ் ஹேக்ட்..”

“வாட்ட்ட்..??”, ஒருமித்த குரலில் அதிர்ந்து கேட்டனர் அனைவரும்..

(ஸ்.. ஸ்.. உங்களுக்கெல்லாம் எக்னாவைப் பற்றி சொல்ல மறந்துட்டேன் மக்களே..

எக்னே நமது சிட்டி ரோபோ போல்.. ரோபோடிக்ஸில் எக்னா ஒரு மயில் கல்.. இதுவரை சுமார் ஒரு கோடி ஹேக்கர்கள் ட்ரை செய்தும் ஹேக் செய்ய இயலா ரோபோட்.. அதான் புள்ளைங்களுக்கு இவ்ளோ ஷாக்..)

“எஸ் கய்ஸ்.. எக்னாவின் மதர் போர்டை ஹேக் பன்னிருக்காக.. இதை டிஸ் மேண்டில் பண்ணவில்லை என்றால் ஆபத்து நமக்கு தான்..”, என்ற அபித் அவளது வயர்களை எல்லாம் கட் செய்யத் துவங்கினான்..

ஒருவேளை இது சர்வேஷின் வேலையாக இருக்குமோ..?? சந்தேகம் வரவில்லை யாருக்கும்..

மெயின் சிஸ்டம் ரூமிற்கு விரைந்த அத்வைத் ஒவ்வொரு பாகாமாக பொறுமையாக ஆராய்ந்து கொண்டிருந்தான்..

“என்னடா இது எல்லா கணக்ஷனும் சரியாக இருக்கிறதே..”, என்று வாய் விட்டு சொன்னவனுக்கு தனது தலையில் எதுவோ விழும் உணர்வு..

கேண்டி லைட்டை உயர்த்திப் பிடித்தால் மேல் கூரையை (இரும்பால் செய்யப்பட்டிருக்கும் காற்றுகூட புக முடியாத ரூப்..) கைகளால் பிய்த்து கொண்டு இருவர் உள்ளே இறங்குவது கண்ணில் பட்டது..

திடுதிப்பென்று உள்ளே நுழைந்தவர்களை தடுக்க இயலாமல் உள்ளே புகுந்த வெற்றிடம் அத்வைதிற்கு மூச்சுத்தினறலை ஏற்படுத்தியது..

அதை உணர்ந்தார் போல் மேற் கூரையை ஒருவன் மூடினான் என்றால் மற்றொருவன் அத்வைதை யோசிக்க இடமளிக்காமல் கைகள் இரண்டையும் பின்னால் முறுக்கி சிறு கம்பி போன்ற வஸ்துவால் இருக்கிக் கட்டினான்..

நீல வண்ணக் கண்கள் மட்டும் வெளியே தெரியுமாறு மாஸ்க் அணிந்து நின்றிருந்த இருவரையும் கண்டு, ”யார் நீங்கள்..??”, என்று கோபமாக கேட்க முயன்றாலும் அலட்சிய பாவத்துடன் நின்றிருந்தவர்களைப் பார்த்து அவனது குரலில் பிசிறே தட்டியது..

“இந்தக் கேள்வியை நாங்கள் கேட்க வேண்டும்..?? யார் நீ..?? எங்கிருந்து வருகிறாய்..??”, என்று தமிழில் கேள்வி கேட்டு ஷாக்கை கொடுத்த ஒருவன் தனது மாஸ்கை கழட்டினான் தலையை சிலுப்பியபடி..

ஸ்பைக்ஸ் வைத்தது போல் அடர்த்தியான தலைமுடி.. சற்றே விரிந்த நெற்றி.. கரு நீல நிற கண்கள்.. அதற்கு கீழே மூக்கு..?? இவனது மூக்கு எங்கே..

மூக்கில்லாத அந்த ஜந்துவைக்கண்டு நொடிக்கு நூறு முறை துடிக்கத் துவங்கியது அத்வைத்தின் இதயம்..

“உனது மூக்கு எங்கே..??”, கண்களை அகல விரித்து மற்றவனையும் அளவெடுத்துக் கொண்டே கேட்டான் அத்வைத்..

“எங்களது உலகத்து ஆண்களுக்கு மூக்கென்பதில்லை..”,என்று தனது மாஸ்க்கையும் கழட்டியபடி சாதரனமாக பதிலளித்த மற்றவன் முகத்தை கடினமாக்கிக் கொண்டு, ”சொல்.. யார் நீ..?? எதற்கு எங்களது எல்லைக்குள் நுழைந்திருக்கிராய்..??”, அதிகாரமாகவும் திமிராகவும்..

“நாங்கள் பூமியிலிருந்து...”

“ஓ.. நீங்கள் தான் அந்த பூமியின் மனித ஜந்துக்களா..?? உங்களை நாங்கள் இரண்டு நாட்களுக்கு முன்பே எதிர்பார்த்தோம்..”, அவர்களின் வரவை முன்பே எதிர்பார்த்தது போல் கூறியவன், ”மொத்தம் ஐந்து நபர்கள் என கேள்வி பட்டோம்.. மற்றவர்கள் எங்கே..??”, என்றான் அத்வைதின் தோளில் லேசாக அடித்தபடி..

கான்பெரென்ஸ் ரூமில் அனைவரையும் கட்டிப் போடப் பட்டிருக்க கீழே பீஸ் பீஸாக கிடந்தது எக்னா..

“மிளிர்.. இது என்ன ஜந்து..??”, பக்கத்து அறையிலிருந்த ஒரு கூண்டில் அடைபட்டிருந்த ஒரு பிராணியை தூக்கிக் காட்டியபடி மிளிரிடம் கேட்டான் அத்வைத்தை கட்டிப்போட்டவன்..

“அதை அந்த ஜந்துக்களிடமே கேள் விபு..”, என்றான் மிளிர் அனைவரையும் தனது பார்வையால் எடைபோட்ட படி..

“இந்த ஜந்துவின் பெயர் என்ன ஜந்து..??”

தன்னை ஜந்து என்று விளித்த விபுவின் மேல் கோபம் கொண்ட அத்வைத் பல்லைக் கடித்தபடி, “நான் ஜந்துவல்ல அத்வைத்..”, என்று விட்டு, ”இது பெருச்சாளி..”, என பதில் அளித்தான்..

“அப்படியா ஜந்து.. இந்த ஜந்துவை வைத்து என்ன செய்வீர்கள் ஜந்து..??”, இப்பொழுது படு நக்கலாக..

பதில் உரைக்காமல் தலையைத் திருப்பிய அத்வைத்தைக் கண்டு சிரிப்பு மூண்டாலும் அதை வெளிகாட்டிக்கொல்லாமல், “நான் கேள்வி கேட்டால் பதில் சொல்ல வேண்டும் ஜந்து..”, ஜந்துவில் அழுத்தம் கொடுத்து..

விபுவின் அழுத்தத்தில் அத்வைதின் இரத்த அழுத்தம் உச்சத்தைத் தொட்ட போதும் பொறுமையாகவே, “ஆராய்ச்சி செய்வோம்..”, என்று பதிலளித்தான்..

“நான் இதை உணவிற்கு என்றல்லவா நினைத்தேன்..”, என்ற விபுவிடம், “இதன் விலை தெரியுமா உனக்கு..?? இதை ஒரு வாரம் உணவாகக் கொண்டால் அடுத்த நேர உணவிற்கு பிச்சை எடுக்கவேண்டும்..”, என்றான் அபித் எரிச்சலாக..

“தெரிந்து கொள்கிறேன்.. இதன் விலை என்ன..??”, இப்பொழுது இதழுக்கிடையில் சிரிப்புடன்..

“ஒரு பெருச்சாளிக்கு இரண்டரை லட்சம் ரூபாய் இந்திய மதிப்பில்..”

“ரூபாய்..?? இந்திய மதிப்பு..??”, புரியாமல் கேட்டான் விபு..

“விபு.. நமது உலகை போல் அல்ல அவர்களது பூமி.. மொழியாலும், நிறத்தாலும், இனத்தாலும், மதத்தாலும் ஏன் ஒரு சிறு கோடாலும் அவர்கள் பூமியை பிரித்து வைத்திருக்கிறார்கள்.. அதன் வெளிப்பாடு தான் இந்த மதிப்பும் ரூபாயும்..”, என்று பதில் கொடுத்தான் மிளிர்..

ஓ என்பது போல் தலையசைத்த விபு மிளிரின் இடது கையில் கட்டியிருந்த காப்பு ஒளிர்வதைக் கண்டு, “உன்னை யாரோ அழைக்கிறார்கள் போல.. உனது காப்பு ஒளி வீசுகிறது பார்..”, என்றான்..

ஒளிரும் தனது காப்பை வெறித்துப் பார்த்த மிளிர், “என்னதிது..?? இரத்த சொந்தம் அருகில் இருக்கும் பொழுது ஒளிரும் ஒளியாயிற்றே இது.. ஆனால் இங்கு பூமியின் வாசிகளைத் தவிர வேறு யாரும் இல்லையே..”,என மனதில் நினைத்தபடி விபுவிடம் உண்மையை உரைக்காமல், “அப்பா அழைக்கிறார் போல..”, என்றான்..

“நமது ஸ்டிட்டியை (நம்ம ஊர் புல்லெட் போன்ற வாகனம்.. ப்ரோக்ஸிமாவில் வசிக்கும் இளம் காளைகள் ஸ்பேஸில் ரைட் போக உபயோகிப்பது..) ட்ராக் செய்து விட்டார் போல..”, என்று சிரித்தான் விபு..

அவனுடன் சேர்ந்து சிரித்த மிளிர் இடது கையிலிருந்த காப்பை வலது கையால் பிடித்துக் கொண்டு கண்கள் மூடி மனதிற்குள், “அப்பா.. அப்பா..”, என்றான் இரண்டு முறை..

சில நொடிகளுக்குப் பின், “மிளிர்.. எல்லையில் என்ன செய்கிறாய்..??”, மிளிரின் தந்தை பேசத்துவங்கியதும் காப்பில் இன்னும் இன்னும் பிரகாசமான ஒளி நீல வண்ணத்திலும் பழுப்பு நிறத்திலும் மாறி மாறி ஒளிர்விடத்துவங்கியது..

“அப்பா.. பூமியிலிருந்து ஆட்கள் நமது வட்டத்திற்குள் நுழைந்து விட்டார்கள்..”

“உனது ஸ்டிட்டி அங்கு நிற்கும்பொழுதே யூகித்தேன் மிளிர்..”

“இவர்கள் வந்திருக்கும் வாகனத்தை (ஸ்பேஸ் ஷிப்பை) தூக்கிச் செல்ல பீச்வன் (peechvan – ப்ரோக்ஸிமாவின் ஸ்பேஸ் ஷிப்) தான் சரியாக இருக்கும்..”

“ஐந்து மணி நேரத்திற்குள் அங்கு பீச்வன் வந்துவிடும்..”, என்றவரின் குரல் தோய்ந்து மறைந்தது..

கண்களைத் திறந்து காப்பிலிருந்து கை எடுத்த மிளிருக்கு இப்பொழுது திகைப்பு..

காப்பிலிருந்து நீல ஒளி ஒளி குன்றாமல் வீசிக்கொண்டிருந்தது பிரகாசமாக..
இது எப்படி சாத்தியம் என்று யோசித்தவனுக்கு விடை பூஜ்யமே..
 
#2
மிளிர் யோசனையில் மூழ்கிப்போக தன்னையே குறுகுறுவென பார்த்துக்கொண்டிருந்த வசிஷ்டராவைக் கண்ட விபுவிற்கு அவளை வம்பிழுக்கும் எண்ணம் உருவாக அவளைப் பார்த்து என்னவென்பது போல் புருவம் உயர்த்தினான்..

அவனின் செய்கையைக் கண்டு திகைப்புற்று திரு திருவென விழித்து விபுவிற்கு மேலும் சுவாரஸ்யத்தை மூட்டினாள் அவள்..

“ஓய்.. உன் பேரென்ன..??”

என்னய்யா என்பது போல் பார்த்து வைத்தவள் உன்னைத்தான் என்ற விபுவின் அதட்டலில் சிறிது நடுங்கி வசிஷ்டரா என்றாள் மென்மையாக..

“ஏன் என்ன அப்படிப் பார்த்த..??”

“அது.. வந்து..”, என்று சற்றே இழுத்தவள், “உன் மூஞ்சிய பார்த்தா பிர்டாடோ மாதிரி இருக்கு..”,என்றாள்..

“பிர்டாடோ..??”

“அது ஒரு பொம்மை கதாப்பாத்திரம்.. அதுக்கும் உன்னை மாதிரி நீல கண்கள்.. ஒரே ஒரு வித்யாசம்..”, என நிறுத்தி அவனைப் பார்த்து சிரிப்பை இதழுக்கிடையில் அடக்கினாள்..

தன்னைப் பற்றி அவள் புகழந்து ஏதோ சொல்லப்போகிறாள் என்ற நினைப்பில் ஆர்வமாக ,”என்ன வித்யாசம்..??”, என்று கேட்டான் விபு..

“அதுவா பிர்டாடோவுக்கு சப்பையா மூக்கு இருக்கும்.. அதைப் பார்த்தால் சிரிப்பு சிரிப்பா வரும்.. அதே மாதிரி மூக்கிலாத உன்னை பார்க்கும் பொழுதும் சிரிப்பு சிரிப்பா வருது..”, என்றாள் பொங்கிய சிரிப்புடன்..

அதைக் கேட்டு அனைவரும் சிரிக்க விபுவின் முகம் அஷ்டகோனலானது..

மிளிருக்கும் சிரிப்பு தான் என்றாலும் தான் சிரித்தால் அவனிடம் அடி நிச்சம் என்றுணர்ந்து பொதுவாக, “என்ன சிரிப்பு வேண்டி கெடக்கு எல்லாருக்கும்.. எங்களுக்கும் உங்களைப் பார்த்தால் மனித குரங்குகள் போலத்தான் தெரிகிறது.. பூமியில் உள்ள மனிதர்கள் உருவத்தையும் நிறத்தையும் கொண்டு தான் அனைவரையும் எடை போடுவார்கள் போல..”, என்று கடுமையாக உரைத்து விட்டு, ”இதோ பாருங்கள் நீங்கள் எங்கள் எல்லைக்குள் எங்களது உத்தரவு இல்லாமல் நுழைந்துள்ளீர்கள்.. நீங்கள் செய்திருப்பது மாபெரும் குற்றமாகும்.. எங்கள் கிரகத்தில் நீங்கள் கைதிகள்.. நீங்கள் குற்றம் புரிந்துள்ளீர்கள் என உறுதி செய்யப்பட்டாள் நிச்சயம் தண்டனை உண்டு..”,என்றான் எச்சரிக்கையாக..

அனைவருக்கும் அப்பொழுது தான் தாங்கள் மாட்டிக்கொண்டிருக்கும் இடமும் சூழ்நிலையும் பிடிபடத் துவங்கியது.. மனதில் சிறு கலவரமும்..

நிமிடங்கள் கரைய உணவில்லாமல் சோர்ந்து போயினர் பூமி வாசிகள்..

பசி தாங்காத வசிஷ்டரா சாயிடம், “பசிக்குது..”, என்று மெல்லிய குரலில் முனுமுனுத்தாள்..

முறைப்பை பதிலாக அளித்த சாயை பாவமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள் வசிஷ்டராவைக் கண்ட விபுவிற்கு என்ன தோன்றியதோ “நான் வேண்டும் என்றால் பெருச்சாளியை வாட்டித் தரவா..?? பசி ஒரு நாளைக்கு தாங்கும் என்று நினைக்கறேன்..”, என்று அவளிடம் உரைத்து அனைவரையும் உறைய வைத்தான்..

“அதை எப்படி சாப்பிடுவது..?? ஹார்மூன் ஊசிகள் போட்டல்லவா அதனை உருவாக்கியிக்கிறோம்..”, அவனை இடையிட்டாள் ஆத்யா..

“ஹார்மூன் ஊசிகள்..??”

“ஒரு உயிரினத்தின் வளர்ச்சியை தூண்டும் மருந்து.. இரத்த நாளங்களில் செலுத்துவோம் அதை.. இதனால் ஆறு மாதத்தில் இயற்கையாய் வளர்ச்சி அடையும் உயிரனம் ஏழு எட்டு நாட்களுக்குள் தனது முழு வளர்ச்சியை அடைந்துவிடும்..”

(இருபத்தி ஓராம் நூற்றாண்டில் போடப்படும் ஊசிகளால் கோழிகள் நாற்பது முதல் ஐம்பது நாட்களுக்குள் முழு வளர்ச்சியை அடைந்து விடுகிறது..)

“அப்போ பெருச்சாளி வேண்டாம்.. வேறென்ன இருக்கிறது உண்ண..??”, என அவசரமாக சொன்னான் மிளிர்..

“மாத்திரைகள்..”, இது சாய்..

“என்ன மாத்திரைகளா..?? அது உடலில் நோய் இருந்தால் தானே உட்கொள்வார்கள்..??”, இப்பொழுது அதிர்வது விபுவின் முறையானது..

“இருபத்தி நான்காம் நூற்றாண்டு வரை அப்படித் தான் இருந்தது.. அதற்கு பிறகு வந்த உலக போர்களுக்கு பின் எல்லாம் தலை கீழாய் மாறிவிட்டது.. விவசாயம் அழிந்து விவசாயிகள் அழிந்து இயற்கையும் அழிந்து விட்டது.. அதற்கு மாற்றாய் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தது தான் இந்த மாத்திரைகள்.. ஒரு நாளைக்கு ஒரு முறை ஒன்று அல்லது இரண்டு மாத்திரைகள் வயதிற்கேற்ப எடைக்கேற்ப உட்கொண்டால் போதும்.. பசி அடங்கிவிடும்..”, என்றாள் ஆத்யா..

ஆத்யாவின் பேச்சு நின்றவுடன் அங்கு பெருமழை அடித்து ஓய்ந்த உணர்வு அனைவருக்குள்ளும்..

ஆத்யாவின் கட்டை அவிழ்த்து விட்ட மிளிர், “மாத்திரைகளை அனைவருக்கும் எடுத்துக் கொடு..”, என்றான்..

அனைவரும் உணவருந்தி முடிப்பதற்குள் பீச்வனிலிருந்து விபுவிற்கு செய்தி வந்து சேர்ந்தது..

“மிளிர் நீ இங்கிருப்பவர்களுடன் நமது கிரகத்துக்கு வந்து சேர்.. நான் நமது ஸ்டிட்டியை எடுத்துக்கொண்டு முன்னால் செல்கிறேன்..”, என்று விட்டு ஷிப்பிற்குள் வந்த வழியே திரும்பிச் சென்றான்..

விபு சென்றவுடன் மிளிர் ஸ்பேஸ் ஷிப்பில் உள்ளவர்களிடம், ”உங்களது வாகனத்தை தூக்கிச் செல்ல எங்களது வாகனம் வந்து விட்டது.. எங்களது கிரகத்தில் இயற்கையால் ஒரு வகை படலம் இருக்கிறது.. அந்த இடத்தை நாம் அடையும் வரை நமது வாகனம் செல்வது நமக்கு தெரியாது.. ஆனால் தரை இறங்கும் பொழுது உங்களுக்கு கீழே விழுவது போல் பிரம்மை ஏற்படும்.. ஆகையால் எதையாவது பிடித்துக்கொண்டு அமருங்கள்..”, என்று எச்சரிக்கை செய்தான்..

மிளிர் சொன்னது போலவே அந்த கிரகத்தின் படலத்தை அடையும் வரை ஒன்றும் தெரியவில்லை.. வசிஷ்டராவைத் தவிர..

அந்த கிரகத்தை நெருங்க நெருங்க அவளது பூனை நிறக்கண்கள் அறிக்கத் துவங்கியது..

கைகளால் அதனைத் தேய்த்துக்கொண்டு வந்தவள் அந்த கிரகத்தின் படலத்தை ஸ்பேஸ் ஷிப் கடக்கும் பொழுது மயங்கி சரிந்தாள்..

- தேடலாம்..​
 
Last edited:
#6
arumaiyana ud sis.normalana peuchali 2lakhs nalla karpanai(y)(y)(y)miliril ratha sondhama vashistra :unsure::unsure::unsure:ippovum harmone usi podrankalame broiler chickkuku sis. nice narration sis:):):):)
thank u sissy..:) present la ye aarachi pannum vilangukal konjam costly than.. (Research students sonnanga) future la 2 lakhs enna 2 crores analum aacharya padarathukkilla.. coming to chicken oosi podama kozhiya paakkarathe kashtam than sissy..ippo antibiotic kozhi nu pudhusa varuthe..
 
#7
thank u sissy..:) present la ye aarachi pannum vilangukal konjam costly than.. (Research students sonnanga) future la 2 lakhs enna 2 crores analum aacharya padarathukkilla.. coming to chicken oosi podama kozhiya paakkarathe kashtam than sissy..ippo antibiotic kozhi nu pudhusa varuthe..
ஹாலிவுட் படம் பார்த்த மாதிரி இருக்கு
 

Advertisements

Latest profile posts

banumathi jayaraman wrote on நதியா's profile.
My heartiest birthday wishes to you, நதியா Madam
banumathi jayaraman wrote on Rranii's profile.
My heartiest birthday wishes to you, Rranii Madam
kattangal part 8 updated friends...
banumathi jayaraman wrote on vishnuprasanth's profile.
My heartiest birthday wishes to you, Vishnuprasanth Sir
banumathi jayaraman wrote on priyaanandh's profile.
My heartiest birthday wishes to you, Priyaanandh Madam
banumathi jayaraman wrote on Asath's profile.
My heartiest birthday wishes to you, Asath Sir/Madam
banumathi jayaraman wrote on Arya's profile.
My heartiest birthday wishes to you, Arya dear
sandhiya sri wrote on Arya's profile.
wish you happy birthday sister..
banumathi jayaraman wrote on Sowmi's profile.
My heartiest birthday wishes to you, Sowmi Madam

Advertisements

Latest Episodes

Today's birthdays