• Please avoid unfair and unethical methods. If any discrepancies found, the user will be removed. Kindly follow the rules and regulations.

Thedi vantha devathiye_12 part 01

#1
அத்தியாயம்-12

மறுநாள் காலை அன்புசெல்வியும், இந்துமதியும் தங்கள் பேக்குடன் வந்து நின்றார்கள்.

“அன்பு… நீங்க ரெண்டுபேரும் எங்க கிளம்பிட்டிங்க?” என்று ஆதிரையன் கேட்டான்.

“அண்ணா… அவங்க ரெண்டுபேரும் ஹோமுக்கு கிளம்பி போறாங்க. அவங்க அங்க போயி இங்க வர ஏற்பாடு செஞ்சிட்டு வர்றேன்னு நேத்து நைட்டே எங்கிட்ட சொல்லி பர்மிஷன் வாங்கிட்டாங்க. நானும் சரின்னுட்டேன்” என்று பெரியமனுஷி மாதிரி சொன்னாள் சௌமியா.

“அப்படியம்மா. அப்ப சரிம்மா” என்ற ஆதிரையன் “சரி எப்படி போறிங்க?” என்றான்.

“ஆமாமில்ல. நான் இதை கேட்கவே இல்லியே. அக்கா… நீங்க எப்படி போகப் போறிங்க?” என்றாள் சௌமியா.

“வேற எதில போகப் போறோம். பஸ்சிலதான்” என்று அன்புசெல்வி சொல்ல உடனே அண்ணனைப் பார்த்தாள் சௌமியா.

“வேணாம். கார்ல போயிட்டு திருப்பி அனுப்பிச்சிடுங்க” என்றான் ஆதிரையன்.

“அய்யோ, வேணாங்க. உங்களுக்கு ஏன் சிரமம். நாங்க பஸ்சில போயிக்கிறோம்” என்று அவசரமாய் மறுத்தாள் அன்புசெல்வி.

“அண்ணா… நீங்க காரை ரெடி பன்னுங்க” என்று சொல்லி அனுப்பிவிட்டு “அக்கா… நீங்க கார்லதான் போறிங்க. சரியா?” என்றாள் சௌமியா.

“சரி உன் பேச்சே தட்டலை” என்று அன்பு சம்மதிக்க மூவரும் கிளம்பி வெளியே வந்தனர்.

கார் தயராக டிரைவருடன் இருக்க "அண்ணா… நானும் இவங்க கூட ஹாஸ்பிடல போயிக்கிறேன்” என்று சொல்ல “சரிம்மா” என்றான் அண்ணன்.

கார் ஹாஸ்பிடல் சென்றதும் சௌமியா இறங்கிக் கொள்ள “நாங்க போயிட்டு வர்றறோம் சௌமி.” என்றார்கள்.

“அக்கா… நீங்க ரெண்டு பேரும் போயிட்டு உங்கள் வேலைகளை எல்லாம் முடிச்சிட்டு சீக்கீரமே வந்துடனும். இங்க உங்களுக்காக ஒரு தங்கை காத்திருக்கான்னு நினைப்பு இருக்கட்டும்” என்றால் சௌமியா.

“கண்டிப்பா சௌமி. உன் உடம்ப பத்திரமா பாத்துக்கோ”என்று அவர்கள் சொல்ல “அப்புறம் நான் டெய்லி போன் பன்றேன்” என்று சொல்ல சரி என்றார்கள்.

“சரிக்கா. நீங்க போயிட்டு வாங்க. நீங்களும் உங்க உடம்ப பத்திரமா பாத்துக்கோங்க” என்று சொல்ல இருவரும் டாட்டா காட்ட சௌமியாவும் டாட்டா காட்டினாள்.

கார் ஹாஸ்பிடலை கடந்து சென்று மறைய சௌமியா ஹாஸ்பிடலுக்குள் சென்றாள்.

அன்புசெல்வி சென்றவுடன் போன் செய்தாள். தாங்கள் வந்து சேர்ந்து விட்டதாகவும், தானும் இந்துவும் விரைவில் வருவதாகவும் சொன்னாள்.

அன்புசெல்வி சென்ற சில நாட்களுக்கு பின் காலை வேளையில் ரவுண்ட்ஸ் முடித்து ஓய்வாக சௌமியாவின் அறையில் சௌமியாவும், ஜெயகாந்தனும் இருந்தனர்.

“மே ஐ கம்மின் மேடம்” என்று கேட்டுக் கொண்டு கதவருகே ஒரு அழகிய பெண்ணும், அழகான இளைஞனும் நின்றிருந்தார்கள்.

“யெஸ் கம்மின்” என்று சௌமியா சொல்ல உள்ளே நுழைந்தார்கள்.

“நான் பிரித்வி. இது என் சிஸ்டர் பிரவீணா” என்றான் அந்த இளைஞன்.

“ஒகே” என்று அவள் ஆமோதித்தவள் அவர்களையே பார்க்க ஜெயகாந்தன் அவர்களை உற்றுக் கவனித்தான்.

பிரித்வி நல்ல உயரத்துடன், நல்ல கட்டான உடலுடன் இருந்தான். அவன் நல்ல சிவப்பு நிறத்துடன் அனைவரையும் வசீகரிக்ககூடிய தோற்றத்துடன் புன்னகையுடன் களையான முகத்துடன் இருந்தான். அவனுக்கு வயது இருபத்திஏழு.

பிரவீணாவும் நல்ல சிவப்பு நிறம், சராசரி உயரம், வசீரப் புன்னகை, கண்டவர்களை மயக்கும் தேவதையாக காட்சியளித்தாள். அவளுக்கு இருபத்தி மூன்று வயது.

“என்ன பார்க்கறிங்க? நாங்க யாருன்னுதானே. சௌமியா மேடம்… நாங்க திருச்சியிலிருந்து வர்றோம். எங்கள உங்க பிரண்டு சுசித்ராதான் வேலைக்காக இங்க அனுப்பி வைச்சாங்க” என்றாள் பிரவீணா.

“ஒ… சுசியா? அவ நல்லா இருக்காளா?” என்றாள் சௌமியா.

“அவங்க பைன் மேடம். அவங்க எங்களுக்கு தெரிஞ்சவங்க. அவங்ககிட்டதான் வேலைக்கு போனோம். அவங்கதான் உங்க அட்ரஸ் தந்து நீங்க சௌமியாகிட்ட போங்க. அவ உங்களுக்கு நல்ல வேலைய அவ எஸ்டேட்டில் தருவாங்கன்னு சொன்னாங்க” என்று பிரித்வி சொல்லி முடிக்க சௌமியா போன் அடித்தது.

அவள் எடுத்து பேசினாள்.

“சௌமி… நான் சுசி பேசறேன். நீ நல்லா இருக்கியா?”

“ம். நான் பைன்ப்பா. நீ?”

“நானும் நல்லா இருக்கேன் அப்புறம் சௌமி எனக்கு ஒரு உதவி. உன்னை தேடிட்டு பிரித்வி, பிரவீணான்னு ரெண்டு பேரு வருவாங்க. அவங்க ரெண்டும் பேருக்கும் உன் ஹாஸ்பிடல்ல வேலை போட்டு தா”

“ஏய்… இதை நீ கேட்கனுமா? நான் செய்யறேன்டி” என்று சௌமியா சொல்ல “சரிப்பா அவங்க எனக்கு நல்லா தெரிஞ்சவங்க. நல்லா பாத்துக்கோ. சரிடி நான் ஊட்டி வரும் போது உன்னை கண்டிப்பா வந்து பாக்கிறேன்” என்று போனை வைத்தாள் அவள் தோழி.

“சுசிதான் பேசினா. சரி நீ என்ன படிச்சிருக்கீங்க?” என்றாள் சௌமியா:

“மேடம்… நான் ஒரு டாக்டர். என் சிஸ்டர் நர்ஸ்” என்றான் பிரித்வி.

“சார் நம்ம ஹாஸ்பிடல்லயே இவங்கள் அப்பாயின்ட் பன்னலாமுன்னு நினைக்கிறேன். உங்க அபிப்பிராயம் என்ன?” என்று ஜெயகாந்தனை கேட்டாள்.

“சௌமியா எனக்கு ஒகேதான். நீ தாரளமா செய்யலாம்” என்றான் ஜெயகாந்தன்
 
#2
“ஒகே. உங்கள் என் ஹாஸ்பிடல்லயே அப்பாயின்ட் பன்றேன். நீங்க எப்ப வேணுமுன்னாலும் ஜாயின் பன்னலாம்” என்றாள் சௌமியா.

“மேடம்… நீங்க சொன்னா நாங்க இப்பவே ஜாயின் பன்றோம்”என்றான் பிரித்வி.

“என்னா பாக்கறிங்க மேடம். நாங்க ஜாயின் பன்றதுக்கு ரெடியா எங்க திங்க்ஸ் பேக் பன்னி எடுத்துட்டுதான் வந்து இருக்கோம்” என்று பிரவீணா சொன்னாள்.

“அதுக்கில்லை உங்க பேரண்ட்ஸ்கிட்ட எல்லாம் சொல்லிட்டு வரலாமே.” என்று சௌமியா சொல்ல “மேடம்… எங்களுக்கு பேரண்ட்ஸ் இல்லை. வீ ஆர் ஆர்பன்.” என்று சிரித்தபடி சொன்னான் பிரித்வி.

“ஓ…!” என்று சௌமியா சொல்ல “மேடம்… நாங்க பிறந்தது வளர்ந்தது எல்லாம் திருச்சி கருணைமலர்கள் இல்லத்தில்தான். நாங்க ஸ்காலார்சிப்பிலும், மெரிட்டிலும், உங்கள மாதிரி நல்லவங்க தயவிலும் படிச்சிட்டோம்” என்றாள் பிரவீணா.

“சரி. நீங்க நாளைக்கு டூட்டியில் ஜாயின் பன்னுங்க. நீங்க ரெண்டு பேரும் என் அவுட்ஹவுசில் தங்கிக்கலாம்” என்றாள் சௌமியா.

“இல்லை மேடம். நாங்க ஹாஸ்பிடல்லயே தங்கிக்கிறோமே” என்று பிரவீணா சொல்ல, “நோ, நீங்க என் பிரண்டு சுசிக்கு தெரிஞ்சவங்க. அவளே ரெகமண்ட் செஞ்சு வேற இருக்கா அதனால அவுட் ஹவுசில்தான் தங்கனும்” என்று கண்டிப்பாக சௌமியா சொல்ல இருவரும் சரி என்றார்கள்.

“ஒகே மேடம். நீங்க இவ்வளவு சொல்றதால நாங்க ஒத்துக்கிறோம்.” என்று பிரித்வி சம்மதிக்க “தட்ஸ் குட்” என்றாள் சௌமியா.

“சரி நீங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் வெயிட் பன்னுங்க. நான் மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு போகும்போது கூட்டிட்டு போறேன். நீங்க அங்க தங்கி ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு டூட்டில சேரலாம்” என்றாள் சௌமியா.

“சரிங்க மேடம். நாங்க வெளில வெயிட் பன்றோம்” என்று அவர்கள் சென்றார்க.

மதிய சாப்பாட்டுக்கு சௌமியா செல்லும் வேளையில் அவள் சொல்லியது போல் அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டாள். கார் வீட்டை அடைந்தது.

“நீங்க ரெண்டுபேரும் சாப்பிட்டிங்களா?” என்றாள் சௌமியா.

“உங்க ஹாஸ்பிடல் கேண்டீன்ல சாப்பிட்டோம் மேடம்” என்றாள் பிரவீணா.

சௌமியா உடனே அண்ணனிடம் “அண்ணா… இவங்க யாருன்னு நீ கேட்கவே இல்லியே?” என்றாள்.

“ஏம்மா கேட்கனும். நீயே வீட்டுக்கு கூட்டிட்டு வர்ற அப்படின்னா உனக்கு ரொம்ப தெரிஞ்சவங்களாதான் இருப்பாங்க. சரி யாரும்மா இவங்க? உன் பிரண்ட்ஸ் மாதிரி தெரியலையே?” என்றான் ஆதிரையன்.

“அண்ணா… என் திருச்சி பிரண்டு சுசித்ரா இருக்கா இல்ல அவளுக்கு தெரிஞ்சவங்க. அவதான் எங்கிட்ட உன் ஹாஸ்பிடல்ல சேர்த்துக்கோன்னு சொன்னா. நானும் உன்னை கூட கேட்காம சேர்த்துட்டேன். ஜெயகாந்தன் சாரும் சரின்னுட்டாரு” என்றாள்.

“சரிம்மா. நீ எது செஞ்சாலும் சரியாத்தான் இருக்கும்” என்றான் அண்ணன்.

“அண்ணா... இவரு பேரு பிரித்வி. இவர் ஒரு டாக்டர். இவங்க பேரு பிரவீணா .இவங்க ஒரு நர்ஸ். இவங்கள நம்ம அவுட் ஹவுசில் தங்கவைச்சுக்கலாமுன்னு இருக்கேன். நீ என்ன சொல்ற? ஒகேவா அண்ணா?

“சரிம்மா. அப்படியே செய்” என்று ஆதிரையன் சொல்ல “அண்ணா… “என்று அவள் எதோ சொல்ல வர “சௌமி… நாம அப்புறமா இதைப் பத்தி பேசிக்கலாம். நீ முதல்ல சாப்பிட வா. அன்பு இருந்தப்ப உன்னை அவங்க சாப்பிட வைச்சிருவாங்க.” என்றான்.

“சரி அண்ணா” என்ற சௌமியா பிரவீணா பக்கம் திரும்பி உடனே “நீங்க ஹால்ல வெயிட் செய்யுங்க. நான் இப்ப வந்திடறேன்” என்று சொல்லி சென்றாள்.

சௌமியா சாப்பிடும்போது “அண்ணா… இந்த அன்பக்கா இருக்காங்களே. நான் போயிட்டு உடனே வந்திடறேனங்க. ஒரு வாரமாச்சு, இன்னும் வரலை”

“சௌமி… அவங்களுக்கு அங்க என்ன சூழ்நிலை, அவங்களுக்கு என்ன பிராபளமுன்னு நமக்கு தெரியாதும்மா. அந்த ஹோமுல அவங்க முக்கியமானவங்க வேற அதனால அவங்க வர கொஞ்சம் டைம் ஆகும் சௌமி”

“ஆமாண்ணா, நேத்து நைட் போன பன்னப்ப கூட அன்பக்கா எங்கிட்ட இங்க கொஞ்சம் வேலை இருக்கு சௌமி. அதை முடிச்சுட்டு வர இன்னும் கொஞ்சநாள் ஆகும். எனக்கும் உன் நினைப்புதானாங்க” என்றாள் சௌமியா.

அண்ணனும் தங்கையும் சாப்பிட்டுவிட்டு வந்து சோபாவில் அமர்ந்தார்கள்.

“அண்ணா… இவங்களும் அன்பக்கா மாதிரி கருணைமலர்கள் இல்லத்தை சேர்ந்தவங்க. இவங்க திருச்சி கருணைமலர்கள் இல்லத்தை சேர்ந்தவங்க. இவங்க நல்லா படிச்சு இந்த நிலைக்கு வந்திருக்காங்க” என்றாள் சௌமியா.

“சரிம்மா” என்று அவன் ஆமோதிக்க “அண்ணா… நம்ம அவுட் ஹவுசில் அவங்கள் விட்டுட்டு வர்றேன்” என்று அவுட் ஹவுஸ் சாவியுடன் சௌமியா கிளம்ப இருவரும் அவள் பின்னாடி சென்றனர்.

சௌமியா அவுட் ஹவுஸ் வரை சென்று அவர்களை விட்டுவிட்டு “சரி பிரவீணா, நான் இப்ப கிளம்பறேன். நீங்க நல்லா தங்கி ரெஸ்ட் எடுங்க அப்புறம் சாப்பாட்டுக்கு நீங்க சமைச்சி சாப்பிடறவரைக்கும் எங்க வீட்டுக்கு வந்துடுங்க” என்றாள்.

“மேடம்… நீங்க எங்களுக்கு பெரிய உதவி செய்யறிங்க. இந்த உதவிக்கு எல்லாம் நாங்க என்ன செய்யப் போறோமுன்னு தெரியலை” என்றாள் பிரவீணா.

“பிரவீணா… நான் பெரிசா எதுவும் செய்யலைப்பா. நீங்க ஏதாவது செய்யனுமுன்னா ஹாஸ்பிடல்ல வர்ற பேஷண்ட்டுக்கு ஏதாவது செய்யுங்க போதும்” என்றாள்.

“கண்டிப்பா செய்யறோம் மேடம் ஏன்னா நாங்க மத்தவங்க தயவுல வளர்ந்தவங்கதான்” என்று பிரித்வி ஆமோதிக்க சௌமியா அங்கிருந்து சென்று விட்டாள்.

சௌமியா சென்றபிறகு சோபாவில் அமர்ந்த பிரித்வி “நம்ம வந்தனா மேடம் இவங்கள பத்திச் சொன்னப்ப டாஸ்க் கஷ்டமோன்னு யோசிச்சேன் பிரவி. ஆதிரையன் நம்ம திட்டத்துக்கு பெரிய இடைஞ்சலாக இருப்பானோன்னு நினைச்சேன் ஆனா சௌமியா அவனோட பெரிய பலவீனம் தெரிஞ்சதுக்கப்புறம் எனக்கு கவலையே போச்சு”
 
#5
ரித்வி நல்ல உயரத்துடன், நல்ல கட்டான உடலுடன் இருந்தான். அவன் நல்ல சிவப்பு நிறத்துடன் அனைவரையும் வசீகரிக்ககூடிய தோற்றத்துடன் புன்னகையுடன் களையான முகத்துடன் இருந்தான். அவனுக்கு வயது இருபத்திஏழு.

பிரவீணாவும் நல்ல சிவப்பு நிறம், சராசரி உயரம், வசீரப் புன்னகை, கண்டவர்களை மயக்கும் தேவதையாக காட்சியளித்தாள். அவளுக்கு இருபத்தி மூன்று வயது.
appada naan ethipartha villan villi vantuthangapa appidithane sakthi ini kathai konjam virivirupa pogumnunu ninaikiran appram soumiya ala vaikkama kathai kondu ponga soumi pavam
 

snehasree

Well-known member
#7
சௌமியா சென்றபிறகு சோபாவில் அமர்ந்த பிரித்வி “நம்ம வந்தனா மேடம் இவங்கள பத்திச் சொன்னப்ப டாஸ்க் கஷ்டமோன்னு யோசிச்சேன் பிரவி. ஆதிரையன் நம்ம திட்டத்துக்கு பெரிய இடைஞ்சலாக இருப்பானோன்னு நினைச்சேன் ஆனா சௌமியா அவனோட பெரிய பலவீனம் தெரிஞ்சதுக்கப்புறம் எனக்கு கவலையே போச்சு”
appada villanum vantahchu ini kathai konjam thirilla irukum. anbu indhu soumiyoda pasatha mattum padichu pore adicurucupa vera onnum illpa
 

Jai

Well-known member
#8
பிரித்வி நல்ல உயரத்துடன், நல்ல கட்டான உடலுடன் இருந்தான். அவன் நல்ல சிவப்பு நிறத்துடன் அனைவரையும் வசீகரிக்ககூடிய தோற்றத்துடன் புன்னகையுடன் களையான முகத்துடன் இருந்தான். அவனுக்கு வயது இருபத்திஏழு
Prithvi hero va illa anti-hero va???? Because ippo varaikkum hero intro pannina maathiri theriyalai!!!!! Illa naan miss pannittena??? 😐😐😐😐
 
#9
Prithvi hero va illa anti-hero va???? Because ippo varaikkum hero intro pannina maathiri theriyalai!!!!! Illa naan miss pannittena??? í ½í¸í ½í¸í ½í¸í ½í¸
பிரித்வி நாயகனில்லை யார் நாயகன்னுங்கறது உங்க சாய்ஸ் அது இளந்திரையனா ஜெயகாந்தனா இல்ல ஆதிரையானன்னு நீங்க சொல்லுங்க
 
#10
appada villanum vantahchu ini kathai konjam thirilla irukum. anbu indhu soumiyoda pasatha mattum padichu pore adicurucupa vera onnum illpa
சினேகா அவங்க பாசத்த பத்தி நீங்க கடைசி வரை படிச்சுதான் ஆகனும் ஆனா இனி கூட பிரித்வியின் வில்லத்தனமும் இருக்கும்
 

Latest profile posts

ஹாய் டியர்ஸ்...
உன் உயிர் தா..!! நாம் வாழ..!!! 24 ( PRE - FINAL ) எபி போடுறேன்..
படிச்சு கருத்தை சொல்லுங்க...
akila kannan's thaagam 18 updated friends...
Porkalathil oru pen puraa... (part-9) posted
Karuppu rojakkal part-17 posted... தன் மனதில் நுழைந்தவள் விபச்சாரியென்று பின் தெரிய வரும்போது மகேசின் மனநிலையென்ன???
ஹாய் நட்பூஸ்,
“நேசித்த இரு நெஞ்சங்கள்..” முப்பத்தி ஒன்பதாவது அத்தியாயம்..! பதிவிடுகிறேன்.. படித்துவிட்டு உங்களின் கருத்துகளை மறக்காமல் பதிவிடுங்கள் தோழிகளே.. உங்களின் கருத்துகளை ஆவலுடன் எதிர் பார்க்கும் உங்களின் தோழி சந்தியா ஸ்ரீ
தேடி வந்த தேவதையே FINAL EPISODE போட்டாச்சு மக்களே இறுதி அத்தியாயத்தை படித்துவிட்டு கருத்தை சொல்லுங்க
Hi Dearies! Idhu Irul Alla! 24th episode updated! Looking forward for your valuable comments! Will come back with Climax soon! Till then, Happy Reading!
banumathi jayaraman wrote on Nalinimani's profile.
My heartiest birthday wishes to you, Nalinimani Madam
தேடி வந்த தேவதையே PREFINAL EPISODE விரைவில் வருகிறது
உமா தீபக்கின் அழகியின் காதல் தவம் பகுதி 9 போட்டாச்சு மக்களே!!

Advertisements

Latest Episodes