• Please avoid unfair and unethical methods. If any discrepancies found, the user will be removed. Kindly follow the rules and regulations.

Thedi vantha devathiye_13 part 02

#1
“ஹலோ, என்னைப் பத்திதான் உனக்கு தெரியுமில்ல? அந்த வந்தனா மேடத்த எப்படி சமாளிக்கிறதுன்னு நான் பாத்துக்கிறேன். நீ நம்ம திட்டம் போட்ட மாதிரி நடந்துக்கோ” என்று சொன்னவுடன் சரி என்று சம்மதித்தாள்.

சௌமியா தன் அறையில் ஒய்வாக அமர்ந்திருந்தாள். கதவு திறக்கும் சப்தம் கேட்டது.

“மேடம், நான் உள்ளே வரலாமா?” என்று கேட்டபடி கதவின் அருகே நின்றாள் பிரவீணா.

“வா பிரவீணா” என்றதும் உள்ளே வந்து நின்றுக் கொண்டாள்.

“என்ன விஷயம் பிரவீ” என்று சௌமியா கேட்க “விஷயம் ஒண்ணுமில்லை. சும்மாதான் நீங்க என்ன பன்றிங்கன்னு பாக்கலாமுன்னு வந்தேன்” என்றாள் பிரவீணா.

“நான் என்ன செய்யப் போறேன். பேஷண்ட்ஸ் யாரும் இல்லை அப்படியே வந்தாலும் உங்க அண்ணா பாத்துக்கிறார்.” என்றாள் சௌமியா.

“அண்ணாகிட்ட ஒருதடவை பழக ஆரம்பிச்சிட்டா அப்புறம் அவரை விட மாட்டாங்க. அண்ணாவும் அப்படித்தான்”

“அதான் தெரியுதே. பிரித்வி சார் எங்கேன்னுதான் இப்ப எல்லாம் கேட்கிறாங்க. சௌமியா எங்கன்னு யாரும் தேடலை” என்றாள் சௌமியா.

“அதான் என் அண்ணா” என்ற பிரவீணாவிடம் “உன்னை கூட மக்கள் எல்லாம் தேடறதா கேள்வி பட்டேன். உண்மையா?” என்றாள்.

“அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை மேடம்” என்ற பிரவீணாவிடம் “வர்றவங்ககிட்ட என்னையும் பாக்க சொல்லும்மா. நானும் டாக்டருக்கு படிச்சிருக்கேன். உங்க அண்ணா அள்வு இல்லைன்னாலும் ஏதோ ஒரளவு வைத்தியம் பார்ப்பேன்” என்றாள் சௌமியா.

“மேடம்… உங்களுக்கு முன்னாடி நான் எல்லாம் ஒண்ணும் இல்லை. நீங்க கொடுத்த வேலைய சரியா செய்யறோம் மிச்சபடி நானோ இல்லை அண்ணாவோ உங்கள் மிஞ்ச முடியாது. சௌமியா மேடம், ஜெயகாந்தன் சார் பின்னாடி நீங்க நல்லா பாக்கறததான் சொல்றாங்க” என்றாள் பிரவீணா.

“சரி. யாரால நல்லது நடந்தாலும் எனக்கு ஒகேதான்” என்றாள் சௌமியா.

“இப்படி சொல்ல ஒரு தனி மனசு வேண்டும் அது உங்களுக்கு இருக்கு” என்று பிரவீணா சொல்லும்போது பேஷன்ட் வர சௌமியா பிசியாகி விட்டாள்.

சௌமியாவின் அறையிலிருந்து வெளியில் வந்த பிரவீணா உடனே பிரித்வியின் அறைக்குள் நுழைந்தாள்.

“என்ன பிரவீ நான் சொன்னபடி பேசினியா?” என்று கேட்டான்.

“பின்ன விடுவேனா? கிடைக்கிற வாய்ப்ப எல்லாத்தையும் நான் பயன்படுத்த மாட்டேன்” என்று சொல்லி சிரித்தாள் பிரவீணா.

“சரி… சரி… நம்ம முதல் பிளானே ஜெயகாந்தனுக்கு சௌமியா மேல இருக்கிற காதல வளர்க்கிறதுதான்.” என்றான் பிரித்வி.

“அப்படி செஞ்சா நமக்கு என்ன லாபம்?” என்றாள் பிரவீணா.

“அதை நீ போகப் போக புரிஞ்சுக்கலாம். நீ சௌமியாகிட்ட அடிக்கடி என்னை பத்தி பேசு. நான் ஜெயகாந்தன் இருக்கானா பாத்து நேரம் கிடைக்கிறப்ப எல்லாம் சௌமியா பத்தி பேசறேன்” என்றான் பிரித்வி.

“சரி நான் கிளம்பறேன். ரொம்ப நேரம் இப்படி பேசிகிட்டு இருந்தா நம்ம மேல சந்தேகம் வரும்” என்று சொல்லிவிட்டு சென்றாள் பிரவீணா.

ஜெயகாந்தன் அன்று ஒய்வாக இருந்த நேரத்தில் அவன் அறைக்குள் மெல்ல உள்ளே சென்றான் பிரித்வி.

“வாங்க பிரித்வி…” என்று அவனைப் பார்த்த ஜெயகாந்தன் அழைத்தான். பிரித்வி சென்று எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

“ஒண்ணுமிலை சார். பேஷண்ட்ஸ் யாரும் இல்லை. சரி சும்மாதான் இருக்கோம் அப்படியே உங்கள பாத்து பேசிட்டு போகலாமுன்னு வந்தேன்” என்றான் பிரித்வி.

“அதுவும் சரிதான். இப்படி ரிலாக்சா இருக்க நமக்கு எங்க நேரம் கிடைக்குது?”

“ஆமா. நான் டாக்டராக ஆகறதுக்கு முன்னாடி படத்துக்கு எல்லாம் போயிட்டு வருவேன். இப்ப எல்லாம் செல்போன்ல் பாத்தாதான் உணடு அதையே முழுசா பாக்க முடியலை” என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினான் பிரித்வி.

“எனக்கும் அப்படித்தான் சார்” என்று ஜெயகாந்தன் ஆமோதிக்க பிரித்வி தொடர்ந்து, “சௌமியா மேடம் ரொம்ப நல்ல டைப் இல்ல. அவங்க லெவலுக்கு வேற யாராவது இருந்தா இப்படி பழக மாட்டாங்க” என்றான்.

“ஆமா, சௌமியாவ சின்ன வயசிலிருந்தே நான் பாக்கிறேன் அவ இப்படித்தான். அவ அப்பாவும் இதே மாதிரிதான்” என்றான் ஜெயகாந்தன்.

“சௌமியா மேடத்த சின்ன வயசிலிருந்தே தெரியுமுன்னு சொல்றிங்க. நீங்க தப்பா நினைக்கலைன்னா ஒண்ணு கேட்கட்டுமா?” என்று நிறுத்தினான் பிரித்வி.

ஜெயகாந்தன் அவனையே பார்க்க “வேண்டாமுன்னா கேட்கலை” என்றான் பிரித்வி.

“நீங்க என்ன கேட்கப் போறிங்க? நீங்கதான் சௌமியா கூடவே பழகறிங்க? நீங்க அவங்கள காதலிக்கிறீங்களான்னுதானே?” என்றான் ஜெயகாந்தன்.

“ஆமா, நான் அதைத்தான் கேட்க வந்தேன் அது எப்படி உங்களுக்கு?” என்று அவன் தடுமாற “இதை நீங்க புதுசா கேட்கலை. சௌமிக்கு காதல்ன்னா பிடிக்காது ஏன்னா அவ அப்பா, அண்ணா எல்லாம் காதலிச்சு ஏமாந்தவங்க. நான் அவள் காதலிக்கறதா சொன்னா அவ்வளவுதான்” என்றான் ஜெயகாந்தன்.

“நான் கேட்டது அவங்களுக்கு பிடிக்குமா இல்லையான்னு கிடையாது. நீங்க அவங்கள விரும்பறிங்களா? இல்லையான்னுதான்” என்றான் பிரித்வி.

“சௌமி மாதிரி ஒரு பொண்ண எந்த ஆம்பளையாவது காதலிக்க மாட்டானா? உண்மைய சொல்லுங்க உங்களுக்கே அந்த எண்ணம் வந்திருக்காது?” என்றான் ஜெயகாந்தன்.
 
#2
“ஆமா. ஒத்துக்கிறேன்” என பிரித்வி சொல்ல ஜெயகாந்தன் அதிர்ச்சியாகப் பார்த்தான்.

“ஷாக் ஆகாதீங்க. அவங்களுக்கு பெர்பக்ட் மேட்ச் நீங்கதான். இந்த ஹாஸ்பிடலே ஏன் எஸ்டேட் மக்களே உங்க ரெண்டு பேரு கல்யாண செய்தியதான் எதிர்பாக்கிறாங்க” என்று சொன்னவுடன் நிம்மதியானான் ஜெயகாந்தன்.

“உங்க மேல அவங்களுக்கு மதிப்பு இருக்கு சார் அதனாலதான் இந்த நிமிசம் வரைக்கும் உங்கள சௌமியா மேடம் சாருன்னு கூப்பிடறாங்க” என்றான் பிரித்வி.

‘”அவ என் பேரச் சொல்ல விரும்பல அதான் அப்படி சொல்றா” என்று ஜெயகாந்தன் சமாளிக்க “அப்படி இல்ல சார். உன்ன அவங்க அண்ணான்னு சொல்லாம சாருன்னு சொல்றாங்கன்னா சம்திங் இருக்குதானே” என்றான் பிரித்வி.

கதவு திறக்கும் சப்தம் கேட்டது. அவர்கள் பேச்சு நின்றது. நர்ஸ் நின்றாள்.

“சார் பேஷண்ட் வெயிட் பன்றாங்க. உள்ளே அனுப்பவா?” என்றாள் நர்ஸ்.

“சரி அனுப்புங்க” என்று அவன் சொல்ல “சரி சார் நாம அப்புறம் பேசுவோம்” என்று கிளம்பிச் சென்றான் பிரித்வி.

ஜெயகாந்தன் தன்னை பார்க்க வந்த நோயாளிகளைப் பார்த்து முடித்தபின் பிரிதிவியின் வார்த்தைகள் அவன் மனதில் நிழலாடின.

உண்மைதான். பிரித்வி சொன்ன மாதிரி இதுவரைக்கும் என்னை சௌமியா பேர் சொல்லியும் கூப்பிடலை அதேசமயம் அண்ணானும் சொல்லலை. அவ மரியாதையா சாருன்னு சொல்றா. இளந்திரையன அண்ணாங்கற அப்ப சௌமிக்கு என் மேல ஏதோ ஒண்ணு இருக்கு என்று அவன் மனதில் பலவித எண்ணங்கள் ஒடியது.

மதியம் இரண்டு மணி. சௌமியா தன் வீட்டிற்கு சாப்பாட்டுக்கு வந்திருந்தாள். சௌமியா சாப்பிடும் போது அவளுக்கு விக்கல் வந்தது.

சௌமியா தண்ணீரை எடுத்து குடித்தாள் ஆனால் விக்கல் அடங்கவில்லை.

“சௌமி… அனேகமா யாரோ உன்னை விடாம நினைக்கிறாங்க அதான் உனக்கு விக்கல் நிக்காம இருக்குது” என்றான் அண்ணன்.

“என்னை யார் நினைக்கப் போறாங்க அண்ணா அனேகமாக பிரித்வியும், பிரவீணாவும் இந்த நேரம் சாப்பிட்டுட்டு இருப்பாங்க அவங்கதான் நினைப்பாங்க” என்றாள் சௌமியா.

சௌமியா பேசிக் கொண்டிருக்கும்போது அன்புசெல்வியும், இந்துமதியும் சத்தமில்லாமல் வந்து அவள் பின்னாடி நின்றுக் கொண்டிருந்தார்கள். ஆதிரையன் அவர்கள் இருவரையும் பார்த்து விட்டான்.

நாங்க வந்துட்டோமுன்னு அவகிட்டசொல்லாதீங்கன்னு அன்புசெல்வி சைகை செய்தாள். ஆதிரையனும் சரி என்று தலையசைக்க நீங்க பேசுங்க என்றும் சைகை செய்தார்கள்.

“ஏன் சௌமி… உன் அன்பக்காவும், இந்துவும் உன்னை நினைக்க மாட்டாங்களா?”

“அவங்கதானே அண்ணா. அன்பக்காவும், இந்துவுக்கும் என்னை பத்தி நினைக்க எங்க நேரம் இருக்கு அண்ணா. அவங்களுக்கு ஹோம பத்தியும் அங்க இருக்கறவங்களப் பத்தியும் நினைக்கவே நேரம் பத்தாது” என்றாள் சௌமியா.

இந்து டென்ஷன் ஆக அன்பு செல்வி அவளை அமைதியாக இருக்க சொன்னாள்.

“என்ன சௌமி… இப்படி சொல்லிட்டே? அப்ப உன்னை பத்திய நினைப்பே அவங்களுக்கு இல்லைன்னு சொல்றியா?” என்றான் அண்ணன்.

“ஆமாண்ணா” என்று பட்டென்று பதில் சொல்ல ஆதிரையன் அதிர்ந்தான்.

இந்துமதி சட்டென்று ஒடிவந்து சௌமியாவை பார்த்து “ஏய்…! எங்களுக்கா உன்னை பத்திய நினைப்பு இல்லை?” என்றாள்.

“ஆமா” என்று சௌமியா சொல்லிவிட்டு அவர்களைப் பார்த்தாள்.

“இந்து… நம்ம சௌமி வீட்டுக்கு வராம வேற வீட்டுக்கு அட்ரஸ் மாறி வந்துட்டோம். நாம ஹாஸ்பிடலுக்கு போயி அங்க சௌமியாவ பாத்துக்கலாம்.” என்றாள் அன்புசெல்வி.

“சாரி மேடம்… நாங்க இது எங்க சௌமியா வீடுன்னு நினைச்சு வந்துட்டோம். இது அவ வீடு இல்லை. உங்க லஞ்ச் வேற நாங்க டிஸ்டர்ப் பன்னிட்டோம். நாங்க கிளம்பறோம்.” என்றாள் இந்துமதி.

“வாக்கா மேடம் நம்மளால சாப்பிடாம இருக்காங்க” என்று இந்து சொல்ல இருவரும் அங்கிருந்து கிளம்பி சென்றார்கள்.

சௌமியா உடனே “போங்க… போங்க… சௌமிய விட்டுட்டு நீங்க ரெண்டு பேரும் போறிங்க இல்ல போங்க” என்று சொல்லிவிட்டு டென்ஷனாக போயி அமர்ந்தாள். அவள் அதற்கு மேல் சாப்பிடவில்லை.
 
Last edited:
#3
அன்புசெல்வியும், இந்துமதியும் சில நொடிகளில் திரும்பி வந்து சௌமியாவின் அருகில் இருபக்கங்களிலும் சேரை இழுத்து போட்டு உட்கார்ந்து கொண்டார்கள்.

சௌமியா எந்த பக்கம் திரும்பினாலும் இருவரும் தெரிய அவளால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை.

“ஏய்…! சௌமி… என்ன நாங்க அப்படி பேசுனதும் போயிருவோமுன்னு நினைச்சியா? என்ன நடந்தாலும் சரி எங்க சௌமியா கூட இருப்போம்.” என்றாள் இந்துமதி.

“நாங்க அதுக்குதானே ஹோமுல இருந்து நிரந்தரமா கிளம்பி வந்துட்டோம். இனி நீ பாத்து கொடுக்கிற இடத்துலதான் நாங்க தங்க முடியும்” என்றாள் அன்புசெல்வி.

“எங்க அக்காக்களுக்குதான் நான் ஏற்கனவே தங்க இடம் கொடுத்துட்டுதானே. நான் அந்த இடத்தை தற்காலிகமா தரலைக்கா. நீங்க நிரந்தரமா தங்கதான் கொடுத்தேன் அக்கா. என்ன அண்ணா சரியா?” என்றாள் சௌமியா.

“சௌமி… நீ என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு ஒகேதான்” என்றான் ஆதிரையன்.

“சரி…சரி… நீ இப்ப சாப்பிடறியா?” என்று அன்புசெல்வி கேட்க “நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டிங்களா?” என்றாள் சௌமியா.

“முதல்ல எங்க சௌமி சாப்பிடுவாளாம் அப்புறமா நாங்க சாப்பிடறோம்” என்று அன்பு சொல்லி சாப்பிட்டை எடுத்து ஊட்ட சந்தோஷமாக வாங்கிக் கொண்டாள். இந்துமதியும் தன் பங்குக்கு ஊட்ட சௌமியாவுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

“சரிக்கா. நான் சாப்பிட்டேன். எனக்கு போதும். நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க” என்று சொல்லி இருவருக்கு பரிமாறி விட்டு அவர்கள் சாப்பிடுவதை பார்த்து ரசித்தாள்.
 
Last edited:
#9
prithvi etuthu solli than jeyakandhanuku avan manam theikiratha.......... sowmi madathuku yaa solrathu:unsure::unsure::unsure: nice epi sis(y)(y):):):):)
பிரித்வி சொல்லலைன்னாலும் புரியும் ஆனா புரிஞ்சும் பிரயோஜனமில்லை செளமிகிட்ட காதல சொன்ன கண்டிப்பா ஏத்துகமாட்டா அந்த பயம் தான் செளமிக்கு அடுத்து வரும் எபிகள சொல்லுவாங்க
 
#10
ஆதிரையன்தான் செளமிக்கு செல்லம் கொடுத்து கெடுக்கிறாங்கன்னா நீங்க வேறயா அன்பு உங்கள நான் என்னன்னு சொல்றது
 

Latest profile posts

ஹாய் நட்பூஸ்,
“நேசித்த இரு நெஞ்சங்கள்..” முப்பத்தி எட்டாவது அத்தியாயம்..! பதிவிடுகிறேன்.. படித்துவிட்டு உங்களின் கருத்துகளை மறக்காமல் பதிவிடுங்கள் தோழிகளே.. உங்களின் கருத்துகளை ஆவலுடன் எதிர் பார்க்கும் உங்களின் தோழி சந்தியா ஸ்ரீ
உன் விழிகளில் விழுந்த நாட்களில் 2 போட்டாச்சு ப்ரெண்ட்ஸ்.. உங்க கமண்ட்ஸ்காக வெய்டிங் யா...
first my wishes to u pritu thentell me ur story name and author name Prittu
banumathi jayaraman wrote on Uma Dhanasekar's profile.
My heartiest birthday wishes to you, Uma Dhanasekar Madam
banumathi jayaraman wrote on Subq's profile.
My heartiest birthday wishes to you, Subq Sir/Madam
banumathi jayaraman wrote on PERIASAMY. M's profile.
My heartiest birthday wishes to you, PERIASAMY. M Sir
banumathi jayaraman wrote on Muthuselvigopal's profile.
My heartiest birthday wishes to you, Muthuselvigopal Madam
banumathi jayaraman wrote on Indra's profile.
My heartiest birthday wishes to you, Indra Madam
banumathi jayaraman wrote on dkk's profile.
My heartiest birthday wishes to you, DKK Sir/Madam
banumathi jayaraman wrote on Dhanasudha's profile.
My heartiest birthday wishes to you, Dhanasudha Madam

Today's birthdays

Advertisements

Latest Episodes