• Please avoid unfair and unethical methods. If any discrepancies found, the user will be removed. Kindly follow the rules and regulations.

Thedum nyaanam vignyaanam aayinum 8

#1
இடம் : பரிதி வனம்..

“எவரிதிங் இஸ் வெரி வெல் பிளான்ட்.. (everything is very well planned)”, ஆத்திரம் தாங்காது தன் அருகில் இருந்த மரத்தை ஓங்கிக் குத்தினான் சாய்..

“சாய்.. ரிலாக்ஸ் மேன் (relax man)”, என்று அவனது தோளை தட்டிய ஆத்யா,

“நீங்க அந்த விசாரணைக்கு சென்று வந்ததிலிருந்து சரியில்லை.. ரொம்ப வியர்டா (weird) பீகேவ் பண்றீங்க.. என்னாச்சு சாய்..??”, என்று கேட்டாள்..

“எல்லாத்துக்கும் வசிஷ்டரா தான் காரணம்..”

“வசிஷ்ட்ராவா..?? என்ன சொல்றீங்க..??”, புரியாமல் கேட்டான் அபி..

“ஆமாம்.. வசிஷ்டரா தான்.. அவளுக்காக தான் எல்லாமே நடந்தது இல்லை இல்லை நடத்தப்பட்டது..”, என்ற சாய் தனக்கும் விலாசிக்கும் நடந்த உரையாடலை அனைவரிடம் விளக்கினான்..

அவன் சொன்னதைக் கேட்டு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் அமைதியாயினர்..

சாய் மட்டும் ஆத்திரம் தாளாமல், “வசிஷ்டராவிற்கு கண்டிப்பாக எல்லா விஷயமும் தெரிந்திருக்கிறது.. வேண்டும் என்றே அவள் நம்மிடம் நாடகம் ஆடியிருக்கிறாள்.. பாக் ஸ்டாபர் (back stabber)..”, என்றவன் வாயிலிருந்து இப்பொழுது கேட்க முடியா வார்த்தைகள் வெளிவந்தது கோபத்தின் பயனாக..

“சாய்.. ஜஸ்ட் ஸ்டாப் இட்... (just stop it)..”, தன்னுடன் இருப்பவர்களின் முக சுளிப்பைக் கண்டு சாயை அடக்கிய அத்வைத், “வசிஷ்டராவிற்காகத் தான் எல்லாம் நடந்திருக்கிறது.. ஆனால் அது வசிஷ்ட்ராவிற்கு தெரிந்து நடந்துள்ளதா என்று தெரியாமல் கண்டபடி பேசாதீர்கள் சாய்..”, என்றான் அழுத்தமாக..

“இவ்ளோ நடந்த பிறகும் அவளுக்கு ஒன்றும் தெரியாது என்று நாம் எப்படி நம்ப அத்..??”

“தின்க் ப்ராக்டிகலி (think practically) சாய்.. பூமியிலிருந்து பல ஒளி ஆண்டு காலம் தள்ளி இருக்கும் ஒரு கிரகத்திற்கு தொடர்புகொள்வதற்கு தேவையான தொழில்நுட்ப வசதி இன்னும் நமது பூமியில் கண்டுபிடிப்படவில்லை.. ஆப்படி இருக்கும் பொழுது வசிஷ்ட்ராவால் மட்டும் எப்படி இங்கிருப்பவர்களை தொடர்புகொண்டிருக்க முடியும்..??”

“ஏன் முடியாது..?? அன்று ஆத்யா சொன்னாலே இந்த கிரக மக்களுக்கு டெலிபதி அது இது தெரியும் என்று..”

“தெரியும் தான்.. ஆனால் அந்த டெலிபதி பல ஒளி ஆண்டு தூரம் தொலைவுள்ள கிரகம் வரையிலும் வேலை செய்யுமா என்ன..??”, என்றாள் ஆத்யா தன் ஒற்றைப் புருவம் உயர்த்தியபடி..

ஆத்யாவின் கேள்வியில் கொஞ்சமே கொஞ்சம் யோசிக்கத் துவங்கிய சாய், “ப்ச்.. அமாம்ல..”, என்று சலித்துக் கொண்டவன், “கோபத்தில் நான் அதைப் பற்றி கொஞ்சம் கூட யோசிக்கவே இல்லை.. ஏதோ தெரியாமல் பேசிவிட்டேன்.. சாரி கய்ஸ் (guys)..”, என்றான் குரல் கம்ம..

“பரவாயில்லை சாய்.. எங்களுக்கு புரியுது..”, என்ற அபித், “அவனைத் தனியா விடுங்க.. ஹி நீட்ஸ் சம் டைம் (he needs some time)..”, என்றவன் சொல்லுக்குக் கட்டுப்பட்டார் போல் அனைவரும் அவனுக்கு தனிமை கொடுத்து விட்டு விலகிச் சென்றனர்..

மற்றவர்கள் தன்னை தனிமையில் விட்டு விட்டு விலகியவுடன் தலையைப் பிடித்துக்கொண்டு போதென்று கீழே அமர்ந்தான்..

“ச்சே.. ரொம்ப கீழ்த்தரமாக பெசிவிட்டேனோ நான்..??”, தனக்குள்ளேயே கேள்வி கேட்டுக் கொண்டான் சாய்..

“என்னுடனேயே சுற்றிக் கொண்டிருந்தவளை எப்படி என்னால் எடுத்தெறிந்து பேச முடிந்தது..?? முக்கியமாக எப்படி சந்தேகப்பட முடிந்தது..??”, நெற்றிப் பொட்டில் அறைந்தது போல் இருந்தது சாயிற்கு..

தன்னையே நொந்து கொண்டவன் கற்சிலை போல் அதே இடத்தில் அமர்ந்திருந்தான் மிகி வந்து தோள் தொடும் வரை..

“துலாதரன் மறையும் நேரம் நெருங்கிவிட்டது சாய்.. தங்கியிருக்கும் இடத்திற்கு நாம் இன்னும் சற்று நேரத்தில் சென்றடைய வேண்டும்.. இல்லையென்றால் நம்மைத் தேடி பொழில் வாசிகள் வந்துவிடுவார்கள்..”, என்றான்..

வானை அண்ணாந்து பார்த்த சாய் சரி போகலாம் என்பது போல் தலையசைத்து விட்டு மிகியுடன் நடக்கத் துவங்கினான் தான் தங்கியிருக்கும் குடிலை நோக்கி..

*******************************************************************************************

இடம் : புலரி வனம்..

திரிகளாய் பூக்கள் தலைமீது உதிர ஒரு சிறு பாறையில் அமர்ந்தவாறு வயலில் வேலை செய்பவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வசிஷ்டராவிற்கு கொஞ்ச நேரத்தில் வேடிக்கை பார்ப்பது போர் (bore) அடிக்கத் துவங்கவே ஆற்றின் கரையோரம் காலாற நடக்கத் துவங்கினாள்..

நீரை விட்டு குட்டிக் குட்டி மீன்கள் துள்ளி குதிக்க ஈரமணலிலும் வழுக்கும் பாறையிலும் நடப்பது அவளுக்கு ஒரு புதிய அனுபவம் அளித்துக் கொண்டிருந்தது..

பூச்சிகளின் ரீங்காரமும் பட்சிகளின் ஓசைகளும் அவளை ஓர் குதூகலத்திற்குள் அழைத்துச் சென்று அவளது விளையாட்டுத் தனத்திற்கு தூபம் போட தன்னை யாராவது கவனிக்கிறார்களா என்பதை நோட்டமிட்டுவிட்டு மெதுமெதுவாக கால்களை கண்களுக்கு தென்பட்ட பாறைகள் மீது வைத்து ஆற்றைக் கடக்கத் துவங்கினாள் வசிஷ்டரா..

பாதி ஆற்றைக் கடக்கும் வரை அவிழ்த்து விட்ட கன்றுக் குட்டியாய் துள்ளி குதித்து ஓடியவள் கரையின் எதிர்புறத்தில் இருந்து எழுந்த வினோத சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தாள்..

மரங்கள் ஒன்றோடொன்று பின்னிக் கிடக்க கொடிகள் மரங்ககளை தழுவிக்கொண்டு கம்பீரமாகவும் பயங்கரமாகவும் காட்சியளித்தது அந்த அடர்ந்த வனம்..

திரும்பி போகலாம் என்று திரும்பினால் நீர் ஓட்டம் சில நொடிகளில் அதிகரித்ததன் அறிகுறியாக பாறைகள் இருந்த இடம் கண்ணிற்கு தென்படாமல் நீரால் மூழ்கி இருந்தது..

அக்கறைக்கும் போக முடியாமல் இருக்கரைக்கும் போக முடியாமல் தத்தளிக்க தொடங்கியளை நீரோட்டத்தின் வேகம் அடித்துச் செல்லத் துவங்கியது..

நீச்சல் தெரியாததால் நீரில் நான்கைந்து முறை மூழ்கி முத்ததெடுத்தவள் கையில் வேரொன்று சிக்க அதை கெட்டியாகப் பிடித்து கரை ஏறினாள்..

தொப்பலாக நனைந்து கைகால்களில் ஆற்று மணல் அப்பி ஆங்காங்கு சிறு சிறு கீறல்களுடன் நிற்க முடியாமல் எழுந்த நின்றவளுக்கு அப்பொழுது தான் உரைத்தது தான் வந்து சேர்ந்திருப்பது காட்டு பகுதி என்று..

“அச்சோ.. இப்போ என்ன பன்றதுன்னு தெரியலையே..”, என்று வாய் விட்டு புலம்பியவள் மனதில் தன் தமையனை நினைக்கத் துவங்கினாள்..

“அண்ணா.. விபூ..”

“...............”

“அண்ணா நான் பேசறது கேக்குதா உனக்கு..??”, பயத்தில் கதறியது பெண்ணின் மனம்..

மீண்டும் மௌனமே பதிலாய்..

ச்சே என்று நிலத்தில் காலை உதைத்தவள் மரத்தில் அவ்வளவு நேரம் தொங்கிக் கொண்டிருந்த பாம்பு காலுக்கடியில் விழுந்ததில் பயத்தில் காட்டுக்குள் பிரவேசித்தாள்..

ஓடையொன்று கண்ணில் தென்பட அதில் இறங்கியவள் கைகால்களை கழுகிக்கொண்டு ஒரு வழுக்குப் பாறையின் மேல் அமர்ந்து மீண்டும் விபுவை தொடர்புகொள்ள முயன்றாள்..

அவனிடமிருந்து மீண்டும் எந்த பதிலும் வராமல் போக கையைப் பிசைந்தபடி அங்கேயே அமர்ந்து விட்டாள்..

துலாதரன் (கதிரவன்) மறையும் நேரம் நெருங்க நெருங்க பயம் பிடித்துக்கொண்டது வசிஷ்டராவிற்கு..

என்ன ஆனாலும் பரவாயில்லை என்று தனக்குத் தானே தைரியப்படுத்திக்கொண்டவள் கால் போன திசையில் நடக்கத் துவங்கினாள் வேகமாகவும் விரைவாகவும்..

காலையிலிருந்து சாப்பிடாததால் சோர்வடையத் துவங்கியது வசிஷ்ட்ராவின் உடல்..

முயன்று தன்னைத் தானே ஆசுவாசப் படுத்திக் கொண்டவள் தன் வேகத்தை அதிகப் படுத்தினாள்..

என்ன முயன்றும் ஒரு கட்டத்தில் உடல் தளர மயங்கி சரிந்தாள்..

*******************************************************************************************

-தேடல்கள் தொடரும்..
 

Latest profile posts

ஹாய் நட்பூஸ்,
“நேசித்த இரு நெஞ்சங்கள்..” முப்பத்தி எட்டாவது அத்தியாயம்..! பதிவிடுகிறேன்.. படித்துவிட்டு உங்களின் கருத்துகளை மறக்காமல் பதிவிடுங்கள் தோழிகளே.. உங்களின் கருத்துகளை ஆவலுடன் எதிர் பார்க்கும் உங்களின் தோழி சந்தியா ஸ்ரீ
உன் விழிகளில் விழுந்த நாட்களில் 2 போட்டாச்சு ப்ரெண்ட்ஸ்.. உங்க கமண்ட்ஸ்காக வெய்டிங் யா...
first my wishes to u pritu thentell me ur story name and author name Prittu
banumathi jayaraman wrote on Uma Dhanasekar's profile.
My heartiest birthday wishes to you, Uma Dhanasekar Madam
banumathi jayaraman wrote on Subq's profile.
My heartiest birthday wishes to you, Subq Sir/Madam
banumathi jayaraman wrote on PERIASAMY. M's profile.
My heartiest birthday wishes to you, PERIASAMY. M Sir
banumathi jayaraman wrote on Muthuselvigopal's profile.
My heartiest birthday wishes to you, Muthuselvigopal Madam
banumathi jayaraman wrote on Indra's profile.
My heartiest birthday wishes to you, Indra Madam
banumathi jayaraman wrote on dkk's profile.
My heartiest birthday wishes to you, DKK Sir/Madam
banumathi jayaraman wrote on Dhanasudha's profile.
My heartiest birthday wishes to you, Dhanasudha Madam

Today's birthdays

Advertisements

Latest Episodes