Vaazhkaiyin Varnajalam - 2

#1
அத்தியாயம் – 2
ஈரோடு மாவட்டத்தில் சின்னியம்பாளையம். இங்கே அதிகம் கவுண்டர்கள் வாழும் பகுதி. இந்த இடத்தில் பிரதீபன் இருக்கும் இடம். அவன் அன்னை அவனை இந்த இடத்தில் தான் பண்ணையத்தில் வைத்திருந்தார்.
அவனது தாய் தந்தையர் நல்லசாமி – கண்ணாத்தாள். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள். முதல் பெண் பெயர் மல்லிகா. பிரதீபனை விட ஐந்து வயது பெரியவள். இரண்டாவது மகன் சங்கரன். பிரதீபனை விட மூன்று வருடம் பெரியவன். மூன்றாவது மகன் நம்ம பிரதீபன்...!
இவர்களின் வீட்டில் அப்பாவுடன் அவனின் அன்னை சண்டை போட்டுவிட்டு, பெரிய மகனையும் மகளையும் அவனின் அப்பாவிடம் விட்டுவிட்டு அவனை மட்டும் தன்னுடன் அழைத்து வந்துவிட்டார் அவனின் அன்னை கண்ணாத்தாள்..
அவர்கள் கஷ்டப்பட்டு அவனைப் பள்ளிக்கு அனுப்பினால் அவன் அவர்களுக்கு தெரியாமல் அவன் டென்ட்கொட்டாய் [சினிமா தியேட்டர்] சென்று விட்டுவான்.. அதன் பிறகு அவனின் அன்னை அவனை பள்ளிக்கு அனுப்பாமல் ஒரு கவுண்டர் வீட்டில் அவனை பண்ணையத்திற்கு வைத்தார்..
பண்ணையம் என்பது அவர்களின் வீட்டில் இருக்கும் ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டும், அவைகளுக்கு தண்ணிக்காட்டுதல், மாட்டிற்கு தீவனம் போடுதல், பால் கரத்தல் முதலிய வேலைக்களுக்கு செய்பவர்கள் அந்த வீட்டில் பண்ணையத்திற்கு வைக்கப் பட்டவர்கள்..
அவன் பண்ணையத்தில் வைக்கப்பட்டப் பொழுது அவனுக்கு வயது ஏழு. பண்ணையக்காரர் அவனின் கையில் சாட்டை வாரைக் கொடுத்து ஆடுமாடுகளை மேய்க்க அனுப்புவார்..
இவனைப் போல வேலைக்கு வைக்கப்பட்டவர்கள் ஒரு ஐந்தாறு பொடுசுகள் சேர்ந்து ஆடு மாடு மேய்க்க காட்டுக்கு போவார்கள்..[இவர்கள் அங்கே செய்யும் வேலையை நாம் பார்க்கலாம்]
“ஏய் பிரதீபா இங்கே வரும் வழியில் ஒரு காட்டில் வேர்கடலை நல்ல நல்ல விளைதிருக்கிறது..” என்று முல்லை கூற,
“விடு முல்லா இன்னைக்கு மத்தியானம் ஒரு கைப் பார்த்துவிடலாம்..” என்று அசால்ட்டாக கூறினான் பிரதீபன்
“என்னடா பிரதீபா பண்ண போகிறாய்..?” என்று சீனிவாசன் கேட்க, “முல்லா நீ மாட்டுகளைப் பார்த்துக் கொள்..” என்று கூறியவன்
“டேய் சீனி நீ போய் காட்டுகாரன் வருகிறானா என்று பார்த்துக் கொள்.. வந்த சிக்னல் கொடு..” என்று அவனைக் காடுக்கு காவலுக்கு வைத்தவன்,
“டேய் பார்த்தி, முருகா நான் சொல்வதை நல்ல கேளுங்க” என்று கூறியவன், “காட்டுக்காரன் வருவதற்கு நம்மால் முடிந்த அளவு வேர்கடலையை செடியுடன் பறித்துவிடுங்கள்.. அவன் சிக்னல் தந்தவுடன் காட்டுகாரனிடம் சிக்காமல் நம்ம இடத்திற்கு வந்து விடுங்கள்..” என்று கூறியவன்
காட்டிற்கு சென்று நிலக்கடலையை செடியுடன் பார்க்க சரியாக கால் மணிநேரத்தில் எங்கிருந்தோ கேட்ட “குக்குகூ..” சத்தத்தில் பறித்த கடலைகாய் செடிகளுடன் ஓடிவந்தனர் மூவரும்..
வாய்க்காலுக்கு வந்தவர்கள் கடலைகாய்களை கழுவி சாப்பிட ஆரமித்தனர்.. “ஏய் முல்லா மாடுகளைப் பார்த்துக்கொள்” என்று பிரதீபன் கூற,
“நீயெங்க போற..?” என்றான் சீனி
“டைவ்வடிக்க போகிறேன்..” என்று கூறிவிட்டு தண்ணீருக்குள் குதித்து நீந்த ஆரமிக்க, முருகன் வாய்காலில் அமர்ந்துக் கொள்ள, மற்ற இருவரும் நன்றாக நீந்தியவர்கள்..
கரைக்கு வர, அங்கே அமர்ந்து ஓடிப்பிடித்து விளையாட, தண்ணிரில் தலைகீழாக குதிப்பது போன்றவைகளை செய்துக்கொண்டு இருக்க மாலை ஆகிவிட,
மாடுகளை ஒட்டிக்கொண்டு பண்ணையத்திற்கு வந்து சேர்ந்தனர்.. அங்கே அவனது இன்னொரு சொர்க்கம் என்றே சொல்லலாம்.. அந்த வீட்டில் அண்ணன் மணிமாறன்.. தங்கை மணிமேகலை.. இருவர் மட்டுமே அண்ணன் விவசாயம் செய்ய தங்கை வீட்டைப் பார்த்துக்கொண்டு வீட்டில் இருப்பதே அவளின் வேலை...!
அவளுக்கு பிரதீபன் என்றால் உயிர்...! பதினேழு வயது பெண்ணிற்கு ஒரு நல்ல ஒரு பொழுதுபோக்கு என்றால் அவனுடன் மாலையில் விளையாடுவதே ஆகும்..
மாலை அவன் மாடுகளுடன் வரும் பொழுது, “அண்ணா இந்த மாடுகளை கட்டிவிட்டு, ஆடுக்களைப் பட்டியில் போட்டு அடைத்துவிடு..” என்று கூறியவள் பிரதீபனை முகம் கழுவி வரச்சொல்லி தலையை வாரிவிட்டு,
“எந்த செம்மண் காட்டில் உருண்டு போரண்டாயோ தெரியலை சட்டை முழுக்க மண்ணு..” என்று திட்டிவிட்டு, “இந்த தீபா டீ குடித்துவிட்டு இந்த முறுக்கை சாப்பிடு அக்கா சமையல் முடித்துவிட்டு வருகிறேன்..” என்று சமையலைக்குள் புகுந்தாள் மணி
அவள் சமையலை முடித்து மூவரும் சாப்பிட்டுவிட்டு, மணியும் தீபனும் தங்களின் அறைக்குச் சென்று ரேடியோவில் பட்டுப்போட, அதில் பாடிய பாட்டின் அர்த்தம் புரியாத வயதிலும் அவன் ஆடுவதைப் பார்த்து அவள் சிரித்துக்கொண்டு இருப்பாள்..
ஒரு ஆணை பெண்ணாகவே மணிமேகலை பாவித்தாள். அதன் வெளிப்பாடு பிரதீபன் தன்னை ஒரு ஆணாகவே இருந்தாலும் பெண்களுடன் விளையாடி ஆடிப்பாடி விளையாடியது அவன் ஒரு பெண்ணாக நினைக்க ஆரமித்தான்.. ஆனால் எல்லாவற்றிலும் ஆணாகவே இருப்பவன் பாடுவது, ஆடுவது இந்த விஷயத்தில் மட்டும் தன்னை பெண்ணாக நினைத்துக் கொள்வான்..
அவனுக்கு மற்ற எந்த எண்ணமும் கிடையாது மகிழ்ச்சியோடு அந்த வீட்டில் இருந்தான். தான் ஒரு வேலைக்காரன் என்பதே பாவம் அவனுக்கு தெரியாது..
அடுத்தநாள் காலை அதுபோல கிளம்பினால், “டேய் முருகா அந்த காட்டில் குச்சிக்கிழங்கு நல்ல விளைந்திருக்கிறது.. இன்னைக்கு அதை எப்படி பறித்து விட வேண்டும்..” என்று சீனி கூற,
“அந்த காட்டுகாரன் கண்ணில் பட்டால் தோலை உரித்து உப்பை தடவிவிடுவாண்டா..” என்று கூறினாள் முல்லை..
“அதைப்பற்றி அப்புறம் பார்க்கலாம்.. இப்பொழுது அதைப் பறிப்பதற்கு ஐடியா கொடுப்பியா..? அதை விட்டுவிட்டு மாட்டுவதைப் பற்றி கூறிகிறாள்..” என்று முல்லையைத் திட்டினான் பார்த்தி..
இவர்கள் சொல்லுவதை எல்லாம் கேட்டுக் கொண்டே தென்னை மரத்தின் உச்சியைப் பார்த்துக் குறிவைத்துக் கொண்டிருந்தான் பிரதீபன்..
அவன் உண்டிக்கோளை வைத்துக் குறிப்பார்ப்பதைப் பார்த்த பார்த்தி, “டேய் பிரதீபா என்னடா ஒண்ணுமே சொல்ல மாட்டேன் என்கிறாய்..?” என்று கேட்க,
தென்னை மரத்தில் இருந்த தேங்காய் மட்டையைக் குறிப்பார்த்து அடிக்க, காய்ந்த தேங்காய் மட்டைகள் கீழே விழுக, அதை எடுத்துவந்த சீனி அதன் மேல் ஒரு பெரிய கல்லைத் தூக்கும் போட்டு மட்டையை உரித்தவர்கள் நால்வரும் பங்கிட்டுச் சாப்பிட மாடுகளின் மேல் ஒருக்கண்ணை வைத்துக் கொண்டே சாப்பிட்டனர்..
“டேய் ஏதாவது பேசுடா..” என்று சீனிக் கூறினான்
“இன்னைக்கு காட்டுகாரன் காலையில் வந்ததைப் பார்த்துவிட்டுத்தான் வந்தேன் இன்னைக்கு விட்டுவிடுவோம்.. நாளைப் பார்த்துக் கொள்வோம்..” என்றான் பிரதீபன்
“அதற்கு பதிலாக இன்னைக்கு ஆத்து மீனை ஒரு கைப் பார்க்கலாம்..” என்று யோசனையும் கூறினான்..
“ஏய் முல்லா மாடுகளைப் பார்த்துக்கொண்டே சுருளியைப் பொறிக்கி தீமூட்டு..” என்று கூறிய சீனி கம்மாய்க்குள் டைவடிக்க அவன் பின்னே டைவ் அடித்தான் பிரதீபன்
“டேய் பார்த்தி நீயும் வாடா..” என்றான் சீனி தண்ணிக்குள் நீந்தியப் படியே..
“இல்ல சீனி நான் இங்கேயே இருக்கிறேன்..” என்று கையில் இருந்த துணியை தூக்கி வீச அதை பிடித்த பிரதீபன், “டேய் சீனி அந்த பக்கம் துணியை விரித்துப் பிடி..” என்று தண்ணீருக்குள் துணியை விட்டு மேலே எடுக்க, துணியில் மீன்கள் துள்ளிக் கொண்டிருந்தது..
“டேய் இன்னைக்கு முதல் தடவையே மீன்கள் சிக்கிவிட்டது என்று துணியை சுருட்டிப் பிடித்தது பார்த்தியிடம் கொடுத்தான்
அவன் அதை முல்லையிடம் கொண்டு சென்று கொடுக்க ஆளுக்கொரு குச்சியை எடுத்து மீனை அதில் பிடித்தது சுட்டு தாங்கள் கொண்டுவந்த தூக்குபோசியின் மூடியில் வைத்து சாப்பாட்டுடன் வைத்து சாப்பிட்டனர்..
அந்த வெயிலில் தாக்கம் தெரியாமல் இருக்க மறுபடியும் கம்மாய்க்குள் குதித்து மீன்போல நீந்தியவர்கள் மாலை வீடுவந்து சேர்ந்தனர்..
 
#2
மறுநாள் காலையிலே மாங்காய் தோப்பிற்கு புகுந்தவர்கள் பச்சமாங்காய் பறித்து வந்து வைத்துக் கொண்டு குச்சிக்கிழங்கு காட்டிற்குள் புகுந்தனர் மூவரும்..
மெதுவாக காட்டிற்குள் சென்ற பிரதீபன், இரண்டு குச்சிக்கிழங்கு செடியைப் பிடித்து ஆட்டிப் பிடிங்கியவன், வேரிலிருந்து கிழங்கை மட்டும் எடுத்துவிட்டு செடியை அப்படியே நட்டுவிட்டு ஒட்டிவிட்டார்கள்..
இப்படி இவன் செய்யும் சேட்டைகள் ஏராளம்.. அதற்று அந்த வாண்டுகளும் துணை.. காட்டுக்காரன் பிடித்தால் தோலை உரித்துதான் அனுப்புவான்..
இப்படி அடிவாங்கிவிட்டு வீட்டிற்கு வந்தால், மணிமேகலை அவனுக்கு சுடுதண்ணீரில் ஒத்தரம் கொடுத்து மடியில் படுக்கவைத்து உறங்க வைப்பாள்..
மறுநாள் எத்தனை அறிவுரை சொல்லி அனுப்பினாலும் திரும்பவும் அதே தவறைச் செய்துவிட்டு வந்து நிற்பதைப் பார்த்து அவள் முகம் சிரிப்பில் மலரும்..!
அந்த ஏழுவயதில் தாயின் பாசமும் இன்றி, தந்தையின் கண்டிப்பும் இன்றி, அக்கா, அண்ணாவின் பாசம் இன்றி வளர்ந்தவன் பிரதீபன். அவனுக்கு தேவையான பாசம் கொடுப்பது அந்த வீட்டின் அண்ணன் தங்கை இருவர் மட்டுமே..
பாசம் என்றால் என்ன என்று தெரியாமல் வார்ந்தவனுக்கு பாசத்தைப் போதித்தவள் மணிமேகலை.. அவன் தான் ஏன் இங்கே இருக்கிறோம்.. நமக்கும் இவர்களுக்கும் என்ன சம்மந்தம் என்ற எந்த சிந்தனையும் இன்றி ஒரு கட்டுபாடும் இன்றி வளர்ந்தான் பிரதீபன்..
இப்படியே தினமும் நிலக்கடலை திருடுவது, மாங்காய் பறிப்பது, கம்மாய்க்குள் குதிப்பது, குச்சிக்கிழங்கு திருடுவது மாட்டிக் கொண்டால் முதுகுதோல் உரியும் வரையில் அடிவாங்குவது என்று மூன்று வருடம் சந்தோசமாக கழிந்தது..
அப்படி ஒருநாள் அவன் வளர்ந்த வீட்டில் மணிமாறன் ஒரு அடி அடித்துவிட இனிமேல் நான் இங்கு இருக்க மாட்டேன் என்றுக் கூறி வீட்டிற்கு வந்தவன்
அவர் வந்து மன்னிப்புக் கேட்டும் அவருடன் செல்ல மறுத்து விட்டான்.. அதன் பிறகு அவனை வேறொரு கவுண்டர் வீட்டில் பண்ணையத்திற்கு வைக்கப்பட்டான் பிரதீபன், வயலுக்கு தண்ணீர் கட்டுத்தல், மாடுகளுக்கு தீவனம் போடுவது, நாத்து நடுவது, களையெடுப்பது என்று வேலைகள் கொடுக்க அதை செய்தவன் சில நேரத்தில் மணிமேகலையை நினைத்துக் கொள்வான்
‘அந்த அக்கா வீட்டில் இருக்கும் வரையில் கஷ்டம் என்றால் என்ன என்றே தெரியாது.. ஆனால் இங்கு வந்து வேலை செய்யும் போது தெரிகிறது..’ என்று நினைத்துக் கொள்வான் பிரதீபன்
இப்படியே இரண்டுவருடம் கழிந்தது.. அம்மா மட்டும் அப்போ அப்போ வந்து பார்த்துச் செல்வார்கள்..
இப்படி ஒருநாள் காட்டுக்கு தண்ணிகட்டும் பொழுது, ‘இந்த வயலில் இத்தனை மூட்டை நெல் விளைகிறதே நம்ம அம்மா அங்கே சாப்பாட்டிக்கு இல்லாமல் கஷ்டம் படுகிறார்கள் ஒரு மூட்டை நெல் கொடுத்தால் என்ன குறைந்த போய் விடுவார்கள்’ என்று எண்ணியவன் பண்ணையக்காரருடம் கேட்டும் விட்டான்
அவன் கேள்வியைக் கேட்டு அசந்து போனவர், “பிரதீபா நீ கேட்ட கேள்வி சரிதான் ஆனால் நீ இங்கே வேலை செய்வதற்கு நான் உனது அம்மாவிற்கு பணம் கொடுக்கிறேன்பா..” என்று கூற அடுத்த முறை வரும் பொழுது அன்னையுடன் வீட்டிருக்கு வந்தவன்,
மறுபடியும் அந்த வேலைக்கு போக மறுத்துவிட, இதற்கு மேல் மகன் தனது சொல்லைக் கேட்க மாட்டான் என்று நினைத்த கண்ணாத்தாள்,
மகனை தன்னுடன் அழைத்துக்கொண்டு தனது கணவன் இருக்கும் இடத்திற்கு கணவனுடன் சேர்ந்து விட்டார்.. அவர் இதுவரை சம்மதித்த பணம் அனைத்தும் குடித்தே அளித்திருந்தார்..
அங்கே அவனைக் கண்ட அவனின் அக்காவும், அண்ணனும் தம்பி என்று பாசத்தை பொழியவே இல்லை. ஏதோ வீட்டிற்கு வந்த விருந்தாளியை வேண்டா வெறுப்பாக வரவேற்பது போல வரவேற்றார்கள்..
அவர்கள் வரவேற்றதைப் பார்த்த பிரதீபனுக்கு மணிமேகலையில் முகமே மனதில் வந்தது..
‘நான் ஒரு வேலைக்காரனாக இருந்ததும் அந்த அக்கா நான் வரும் ஓசைக்கேட்டால் வாசல் வரை ஓடிவரும்.. ஆனால் இங்கே கூட பிறந்த அக்கா என்னமோ வேண்டாதவன் வந்துவிட்டது போல பார்க்கிறாள்..’ என்று மனதில் நினைத்துக் கொண்டான்..
அவனின் மனதில் அந்த வீட்டில் வாழ்ந்த வாழ்க்கை அவனது மனதில் பசுமரத்து ஆணிபோல பதிந்து விட்டது.. அங்கே போனவுடன் மல்லிகாவிற்கு திருமணம் செய்து வைத்தார்கள் அவளின் தாய் தந்தையர்..
அப்பொழுது அன்னையிடம் வந்த பிரதீபன், “அம்மா நான் ஐந்து வருடம் சம்பாரித்த பணம் எங்கே...?” என்று கேட்டான்..
“அதை வைத்துதான் உன்னுடைய அக்கா மல்லிகாவின் திருமணம் நடந்தது..” என்று கூறினார்..
விவரம் தெரியாத வயதில் சம்பாரித்து தனது அக்காவின் திருமணத்திற்கு பணம் கொடுத்தவனுக்கு எங்கு தேடியும் அந்த மணிமேகலை அக்கா கொடுத்த பாசம் மட்டும் கிடைக்கவே இல்லை..
ஆகமொத்தம் பிரதீபன் வாழ்க்கையில் வேலை செய்வதற்கு அஞ்சவே மாட்டான்.. அவனுக்கு தேவையான பாசம் மட்டும் அவனுக்கு கிடைக்கவே இல்லை.. அந்த வயதில் அவனுக்கு தெரிந்த அவனைப் பற்றிய இன்னொரு உண்மை அவனை எந்த கனவுகளும் காணாமல் அன்றைய நாளை சந்தோசத்துடன் கழிக்க ஆரமித்தான்...
அந்த வீட்டில் அனைவரும் வீட்டில் இருக்க, இவன் மட்டும் தரிபட்டறைக்கு சென்று நூல் ராட்டை சுற்றி வேலைப் பார்த்து குடும்பத்திற்கே சம்பாதித்து போட்டான்..
அதில் அக்கா மல்லிகா, மற்றும் அவளது கணவர் கணபதி உட்பட அனைவருக்கும் சோறு போடுவது அவன் மட்டுமே.. இவனுக்கு நேர்மூத்தவன் சங்கரன் சுத்தமும் பொறுப்பு கிடையாது.. பதினைந்து வயதில் புகை பிடித்தல், குடிபழக்கம் என்று எல்லா கேட்ட பழக்கத்தையும் பழகி வைத்திருந்தான் அவனின் அண்ணன்..
அந்த வீட்டில் ஒரு நேரம் நிம்மதியாக சாப்பாடு சாப்பிடுவது அவன் சம்பாத்தியம் மூலமாகத்தான்.. ஆனால் அவனுக்கு என்ன தேவை என்று யாருமே கவலைப்பட்டது கிடையாது..
கட்டுபாடு இல்லாமல் வளர்ந்தாலும் எந்த கேட்ட பழக்கமும் இல்லாமல் இருந்தான் பிரதீபன்.. உழைப்பு என்றால் அவனிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும்.. அதேபோல சுதந்திரமாக இருப்பது அதில் தன்னை சுற்றி உள்ளவர்களை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்பவன் பிரதீபன்..
அவன் இருக்கும் இடம் கேலிக்கும், கிண்டலுக்கும் சிரிப்பிருக்கும் பஞ்சம் கிடையாது..
 

sridevi

Well-known member
#3
pradeepanai anbukaga enga vaithu vittarkale kannathal.:(:(:(..... oruvan ulaipil anaivarum utkarnthu sapitukirarakal so sad:(:(:( pratheepanin pillai kurumbukal arumai(y)(y)(y)(y)nalla ulaipali (y)(y)(y) nice ud sis(y)(y)(y)
 

Latest posts

Latest profile posts

Kandharva loga - 14 updated friends... pls read and give your precious cmnnts here.. thank u
Sorry Friends... wednesdayல இருந்து laptop issue. இதோ இப்ப சரி ஆகிடும் இதோ இப்பன்னு சொல்லியே இப்பவரை போய்ட்டு... இன்னைக்கு ஈவ்னிங் வந்தா கூட நைட்குள்ள எப்பி postசெய்துடலாம்னு இருந்தேன். நாளைக்காவது சரியாகுதான்னு பார்ப்போம்.
Hi.... Update only on Tuesday... Sry... Little busy... Bye.. Tc
banumathi jayaraman wrote on SR.Sharu23's profile.
My heartiest birthday wishes to you, SR.Sharu23 Madam
banumathi jayaraman wrote on Nandhini's profile.
My heartiest birthday wishes to you, Nandhini Madam
banumathi jayaraman wrote on Koolkeerthi's profile.
My heartiest birthday wishes to you, Koolkeerthi dear
banumathi jayaraman wrote on Jiffy's profile.
My heartiest birthday wishes to you, Jiffy Madam
உன் உயிர் தா..!! நாம் வாழ..!!! 7th எபி போஸ்ட் பண்ணியாச்சு..படிச்சு சொல்லுங்க...
அகத்திய ரகசியத்தில் அடுத்த மூன்று அத்தியாயங்கள் பதிவிடப்பட்டு விட்டன! ஆதவனும் பொன்மகளும் ஆசான் அகத்தியருக்குக் கொஞ்சமும் விருப்பம் இல்லாத செயல்களைச் செய்கிறார்கள். அப்படி என்ன தான் செய்கிறார்கள் என்பதை அறிய அகத்திய ரகசியத்தைப் படியுங்கள் தோழிகளே! என்னிடம் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள்
உயிர் விடும் வரை உன்னோடுதான் -- எபி 5 போட்டாச்சு டியரிஸ் :)

Advertisements

Online statistics

Members online
64
Guests online
1
Total visitors
65