Yen kalangarai vilakkame 17

Riya Dev

Author
Author
#1
உறங்கினாலும்....
ஓடி செல்லும் ...
உடம்பின் குருதி போல...
என்னுள்ளே....
ஓடி கொண்டிருக்கிறது...
உன் நினைவுகள் ..

அத்தியாயம் பதினேழு


அவர்கள் இருவர் பேசுவதையும் கடுப்புடன் பார்த்து கொண்டிருந்தாள் நிலா.

ரிஷி வந்தவுடன், அந்த மேக் அப் பாக்ஸ் அவனருகில் வந்து,
கைய பிடித்து" ஹே குட்டி!! எப்படி இருக்க?? என்று கேட்டுக்கொண்டிருந்தாள்..

" ஏன் அப்படி பாக்குற !!
மறந்துட்டியா... சின்ன வயசுல புஜ்ஜிமா!! புஜ்ஜிமான்னு!! என் பின்னாடி சுத்திட்டு இருப்பியே!! என்றாள்.

அதை கேட்ட நிலா பேரை பேரு புஜ்ஜிமாவம்...
அதுக்கு பஜ்ஜிமானு... பேரு வைச்சருக்கலாம் !!!
மூஞ்சிய paaru உப்பி போன பஜ்ஜி மாதிரி!!! என மனதுக்குள் திட்ட...

அவள் மனச்சாட்சியோ "அப்பியரன்ஸ் வைச்சு கிண்டல் செய்ரது தப்பு நிலா" "என்றது..

"ஆமா! அவ பண்ணது மட்டும் தப்பு இல்லையா ???கொஞ்சம் கூட மரியாதை தெரியாதவ "என்று எண்ணி கொண்டிருந்தாள் ..

அங்கு நகைக்கடை அம்மாவோ
ஹ்ம்ம்...
எங்களையெல்லாம் ஞாபகம் வைச்ருந்தா...
இப்டி சொல்லாம கல்யாணம் பண்ணுவீங்களா??? என்றாள்..

அதற்கு ரிஷியோ" அத்தை அப்படியெல்லாம் இல்லை"..
உங்க காண்டாக்ட் இல்லை "அதான்!!

" அதனாலென்ன !!இது நம்மோட ரி யூனியன் "என்றான் சிரித்தபடி ...

அவனை விழுங்கும் பார்வை பார்த்து கொண்டிருந்த புஜ்ஜிமா "ஐ நோ நிச்சயம் இது ரி யூனியன் தான்" என்றாள்..

அதற்குள் பகிரதியோ வாங்க "உங்க அண்ணனை பாக்க போகலாம் "என அழைக்க..." வா குட்டி" என்று அத்தை மகள் அழைக்க..

" நீங்க போங்க "என்று அங்கையே நின்று கொண்டான்..

அவர்கள் சென்ற பின்" சொல்லுங்க மிச்செஸ் ரிஷி!! என்றான்..

" இப்போதான்!! மிச்செஸ் ரிஷி உனக்கு கண்ணுக்கு தெரியுதா??? கூப்டாதான... அப்டி அவகூடையே போறது தான ....

அவகிட்ட.. பல்ல! பல்ல !காட்டி பேசிட்ருக்க.. என்றாள்.. கடுப்புடன்..

" ஹே நான் எங்க பல்ல காட்டினேன்" அவ கேட்டதுக்கு பதில் சொன்னேன்.. உனக்கேன் கடுப்பு "என்றான் சிரித்து கொண்டே...

" உனக்கு தெரியுமா சக்திமாவ அவ எப்படி மோசமா நடத்துனான்னு" என கேட்க...

" சரி இனிமே பேசல போதுமா பொண்டாட்டி !!என்றான் அவளை இடித்தபடி...

அதற்குள் அவர்கள் ஹாலுக்கு வர "சாப்பிடு நேரமாச்சு!! வாங்க!! எல்லாரும் சாப்பிடலாம்" என அழைக்க அனைவரும் சாப்ட அமர்ந்தனர்...

ரிஷியின் அருகே பஜ்ஜிமா!! சாரி புஜ்ஜிமா!! அமர்ந்து நிலாவை பார்க்க..

அவளோ சிரித்த முகத்துடன் நின்று கொண்டிருந்தாள் ...

பகிரதி "நிலா நீயும் உக்காருடா !!சாப்பிடு! என்றார் ..

"பரவா இல்லமா! அவர் சாப்பிட்டதும் நான் சாபிட்றேன்" நான் அவருக்கு பரிமாறுறேன்" என கூற ..

ரிஷி ஒரு நிமிடம் கனவோ என நினைத்தான்..
அவனருகே வந்து குனிந்து சாதம் வைத்து "கண்டுக்காத" என கூறி சென்றாள்..

அவர்களை பார்த்து மேக் அப் பாக்ஸ் கடுப்பானாள்...

அனைவரும் சாப்பிட்டு முடிந்ததும் "சரிம்மா எனக்கு வெளில கொஞ்சம் வேலை இருக்கு" நான் திரும்ப போகணும்!! ஓரு பைல் எடுக்க வந்தேன் "என்று அறையை நோக்கி செல்ல..

பகிரதி நிலாவை "நீயும் போய் என்னனு பாரும்மா" என்றார்..

" நான் போய் ஏன்ன பண்ண போறேன்" என நினைத்து அவன் பின்னாடி சென்றாள் நிலா.

அறைக்குள் வந்த நிலாவை பார்த்து "செம ஆக்ட்டிங் போ !என்றான் ரிஷி.

"ஆமா! என் புருஷன் பக்கத்துல அவ உக்காந்து வெறுப்பேத்தினா,

அதான் நானும் வேணும்னே பண்ணேன் "என்றாள்.

அவள் சொன்னத கேட்டு அவளிடம் திரும்பி "அப்போ ஒத்துக்குற! என்றான்.

" ஆமா !!நீ தான சொன்ன காலையில் இது என்று தாலியை காட்டி "என் கழுத்துல இருக்குற வரைக்கும் நீ எனக்கு செய்யலாம்னு"

அந்த மாதிரி நானும் உன்ன கேள்வி கேப்பேன்" என முடிக்கும் முன்...

" ஓஹ் ரியலி!! அவள் தோளின் இருபுறமும் கை போட்டு கேட்க...

படாரென அதை தட்டி விட்டு" பேச்சு பேச்ச்சா இருக்கனும்!!!

இந்த கோட்டை தாண்டி நீ வர கூடாது... நானும் வர மாட்டேன்... என வடிவேலு பாணியில் கூற..

சிரித்து கொண்டே "மிச்சத்தை நைட் பேசிக்கலாம் "என கண்ணடித்து கூறி சென்றான்..

" வெவெவே" என அழகு காட்டி அவன் பின்னே சென்றாள் அவன் மனைவி..

அவர்கள் நிற்பதை பார்த்து இன்னும் கெளம்பலைய !என யோசித்த வாறு சென்ற ரிஷியிடம் ..

"குட்டி போற வழில அவர்களை விட்று" என்றார்..

" அதுக்கு முன்னாடி ஒரு செலஃபீ" என புஜ்ஜிமா ரிஷியுடன் நிற்க...

பகிரதி "நிலா நீயும் போய் நில்லும்மா" என்றார்..

பல்லை கடித்து கொண்டு ரிஷியின் அருகில் நிலா நிற்க அவளை இடையுடன் மெலிதாக அணைத்தவாறு நின்றான் ரிஷி .

அவனை முறைக்க முடியாமல் பார்க்க "கண்டுக்காத" என்று வாயை மட்டும் அசைத்தான்.

" மவனே!! இரு உனக்கு இருக்கு" என மனதில் நினைத்து கொண்டாள்..

பின்னர் வாசல் வரை வந்து வழியனுப்பினார்..

பகிரதியிடம் "ஏன்மா!! இவங்க ரொம்ப வருஷமா உங்களோட காண்டக்ட்ல இல்லை" என்று கேட்க," அது ஒரு பிரச்னைனால மா" என்றார்..


அதற்கு மேல் எதுவும் கேட்காமல் சரிமா!! நான் போய் ,என் திங்செல்லாம் எடுத்து வைக்கிறேன் "என்றாள்.

" இன்னைக்கு ரெஸ்ட் எடேன் டா நாளைக்கு பாத்துக்கலாம் !என்றார்.

" இல்லமா இப்போ தூங்கின நைட் தூக்கம் வராது "அதான் !என்றாள். சரிடா! என்று கூறினார்..


இங்கு ரிஷியின் ஆபிசில் சாய் யுடன் கவலையாக பேசி கொண்டிருந்தான் அமர்.

" கவலைபடாத அமர் சரி ஆயிடும்" என சொல்லி கொண்டிருக்கும் போதே ரிஷி அறைக்குள் வர ..

"சரி உன்கிட்ட அப்புறம் பேசுறேன்" என அமர் போன் வைத்தான்..

" என்னடா கால் பண்ணிருக்க இப்போதான் பாத்தேன்" என்றான்..
மச்சான்!!" அப்பாக்கு உடம்பு சரி இல்லடா செக்கெண்ட் அட்டாக்!

" இன்னும் மூணு நாளுல ஆப்பரேஷன் "என்றான்..

" டேய் இன்னும் கெளம்பாம என்ன பண்ற!! சரி நானும் கூட வரேன் "என்றான் ..

"இல்ல இங்க வேலை அதிகமா இருக்கு!! அதோட மலேஷியாக்கு போகணும் சைட் விசிட் விஷயமா!!என்றான்..

"அதல்லாம் பாத்துக்கலாம் டிக்கெட் புக் பண்ணியா!! என்றதற்கு "ஆச்சுடா" என சொல்ல..

தன் பர்சில் இருந்த கார்டு எடுத்து அவன் கையில் திணித்து
"என்னோட மொபைல் நம்பரோட கடைசி நாலு நம்பர் தான் பின் நம்பர்" என்றான்.

"மச்சான்! காசெல்லாம் இருக்குடா" என மறுத்த அமரிடம்" நேரமாச்சு கெளம்பு" என அனுப்பி வைத்தான்.
ரிஷி.

சில நேரங்களில நண்பர்கள் குடும்பத்தில் ஒருவராய் மாறி போகின்றனர்..

அப்டித்தான் ரிஷியும்.. அமரும்..

இரவு மணி பதினொன்றாகி இருந்தது...

பகிரதியும் நிலாவும் பேசிக்கொண்டிருந்தனர்..

கவலையுடன் உள்ள நுழையும் ரிஷியை பார்த்து இருவரும் ஒரே நேரத்தில்" சாபிடறியா" என கேட்க பகிரதி சிரித்தார்..

நிலா நாக்கை கடித்து கொண்டாள்..

இருவரையும் பார்த்து "வேண்டாம் பசிக்கல" என்றான்.

"மா அமரோட அப்பாக்கு உடம்பு சரி இல்லைம்மா" என விஷயத்தை கூற அவரோ காலையில் "அமரோட அம்மாட்ட பேசுறேன் பா" என்றார்.

அமைதியாக அறையை நோக்கி நடந்தான்..

"மா அமர்நா அவரோட பிரண்ட் கல்யாணத்துக்கு வந்தார்"
அவர்தான!! என கேட்க ..

ஆமாம்மா!! நல்ல புள்ள கடவுளே சோதிக்காத பா "என வேண்டினார்.

நிலாவை பார்த்து" சாப்பிடாம போறான் பார்மா" நீ கொண்டு போய் குடுத்து சாப்ட சொல்றியா!! என்றார்.

நானா?? என யோசித்து பின்னர்" சரி குடுங்கம்மா" என்றாள்..

உணவுடன் உள்ள நுழைந்த நிலா ரிஷி பால்கனியின் ஊஞ்சலில் யோசனையுடன் அமர்ந்திருந்தான் அவனிடம் சென்று..

" சாப்பிடு ரிஷி! என்றாள்.

" பசிக்கலைன்னு சொன்னேன்ல!! என கூற
"ஆனா எனக்கு பசிக்குது" என கூறியவளை கேள்வியாக பார்த்தான்..

" ஆமா மதியம் மா முன்னாடி நீ சாப்பிட்டதும் தான் சாப்பிடுவேன் சொல்லிட்டு, இப்போ மட்டும் சாப்ட்டா அதான்" என்றாள்..

" ஹே லூசு அதல்லாம் ஒன்னும் நினைக்க மாட்டாங்க !!என்றான்..

இல்லை! நீ சாப்பிடு என தட்டை கையில் கொடுக்க..

சரி உனக்கு என்றான்..

" நீ சாப்டுட்டே இரு!! நான் கொண்டு வரேன்" என்றாள்..

அவன் சாப்பிட தொடங்கியதும் கீழே சென்று மீண்டும் வந்தாள்..

சாப்பிட்டு கொண்டிருந்த ரிஷி "சாப்பிடலையா" என கேட்க

வந்து... நான் பசி தாங்க மாட்டேன்.. அம்மாகூட சாப்பிட்டேன்" என்றாள்.

அவளை முறைத்தவாறே "அதான நீயாவது எனக்காக வெயிட் பண்ராதாவது" என கூறி சாப்பிட்டு முடித்து கீழே சென்றான்..

" இவனுக்காக பொய் சொன்ன என்னையே திட்டிட்டு போறான் எருமை!! என்று மனதில் திட்டினாள்..

உறக்கம் வராமல் அங்கையே அமர்ந்திருக்க...

ரிஷி அவள் அருகில் வந்து அமர்ந்து.. "தேங்க்ஸ் சாப்பாடு கொண்டு வந்ததுக்கு" என்றான்..

ஆச்சர்யத்துடன் அவனை பார்த்து "மா குடுக்க சொன்னாங்க" என்றாள்..

ஹ்ம்ம்.. என்று அமைதியாக அமர்ந்திருந்தான்...

நொடிகள் யுகங்களாக கரைய" ரிஷி" என மெல்ல அழைத்து "அமரண்ணாவோட அப்பாவுக்கு சரி ஆயிடும் கவலைப்படாத" என்றாள்..

அப்பொழுதும் ஹ்ம்ம் என்று அமைதியாக இருக்க...

அவன் மூடை மாற்ற அப்புறம் "அந்த புஜ்ஜிமா அண்ட் கோ எறக்கி விட்டியா" ஆமா அவ பேரு புஜ்ஜிமா தானா?? என கேட்க..

மெலிதாக சிரித்தவாறு" ஷிவானி" என்றான்..

" அந்த பெண்ணுக்கு உன் மேல இன்டெரெஸ்ட் இருக்குற.. மாதிரி.... தெரியுது...... என இழுத்து கொண்டே சொல்ல ...

"ஹே மதியம் தான், ஏன் புருஷன் தான் !!எனக்கு மட்டும் தான்!! மாதிரி பேசின என்றான்..

" அது சரிதான் ஆனா என்னோட வேலிடிட்டி மூணு மாசம் தானே!! பாஸ்" என கூற ..

ஒரு நொடி அவளை திரும்பி பார்த்து பின்னர் அமைதியானான்..

" இப்போ என்ன செய்ய சொல்ற!! என கேட்க..
சும்மா சொன்னேன் என்றாள்..

" நானும் யோசிக்கிறேன் நீ சொன்னதை..." நான் வேணும்னா அவளை டேட் பண்ணவா" என வேண்டுமென்றே கேட்க...

" செருப்பு" என சொல்லிவிட்டு "அய்யயோ" என நினைத்தாள்..

அப்பொழுதும் அவன் அவளையே பார்க்க... ஓகே! ஓகே! டாபிக் சேஞ்சு" என்றாள்..

" நிலா நான் இன்னும் த்ரீ டேஸ்ல மலேஷியா போகணும்" ஒரு சைட் விசிட்" என்றான்..

ஒ!!! ரிஷி பாஸ்போர்ட் எடுக்க.. எவ்ளோ நாலு ஆகும்?? என கேட்க

" ஏன் நீ என்னோட வர போறியா?? ஹனி மூன் ட்ரிப் எ!! என வார...

" தம்பி உனக்கெல்லாம் தனி மூன் தான்" என்றாள்...

அவளே தொடர்ந்து "
நான் அப்ராட்ல பி ஹெட்ச் டி பண்ணலாம்னு இருக்கேன் "என்றாள்.

ஹ்ம்ம்...
" எந்த கண்ட்ரி" என கேட்க...

ஒரு நொடி இமை மூடி திறந்து...

" யு எஸ்"... என்றாள்..


வெளிச்சம் வரும்....
 
#5
என்ன ரிஷியும் நிலாவும் சண்டை போடாமல் சமாதானமாக போகிறார்கள். அருமையான பதிவு
 

Advertisements

Latest profile posts

banumathi jayaraman wrote on jaicherie's profile.
My heartiest birthday wishes to you, Jaicherie Sir/Madam
காதலாம் பைங்கிளிக்கு 30க்கும் மேற்பட்ட ரிவ்யூஸ் பதியப்பட்டிருக்கிறது. அதுவும் கல்லூரி மாணவிகள், சக எழுத்தாளர்கள், திருமதிகள், சிங்கிள் கேர்ள்ஸ், ஆண்கள், சிறுமியரின் தாய்மார்கள், கல்லூரி மாணவியின் அம்மா, என்னைவிடவும் வயதில் பெரியவர்கள், நம் ஊரில் வசிப்போர், நம் நாட்டுக்கு வந்தே இராதவர், என பல வகைப் பட்ட, எல்லா வயதினரிடமிருந்தும் வந்திருப்பது ப்ரமிப்பாக இருக்கிறது. இந்த ஊக்கத்திற்கும் பாராட்டுகளுக்கும் ஏராள நன்றிகள
தேடல் 2018-ல் பங்குபெற்ற அனைத்து
எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள்...
என்னருகே நீ இருந்தால் 5 அப்டேட் செஞ்சிட்டேன் மக்களே படிச்சுட்டு கருத்து சொல்லுங்க
https://www.smtamilnovels.com/community/index.php?threads/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-5.2207/
Hi friends,
Aathiye anthamai my second story first epi posted
Hy friends,

Here comes the full link of my story Thedum nyaanam vignyaanam aayinum..

https://www.smtamilnovels.com/community/index.php?categories/madhi-nila.138/

Plz do read it and post ur comments..

Thank you..
Hello friends,

Vilagituvena idhayame story all episodes posted.
24,25,26,27 plus epilogue
5 posts posted.

https://www.smtamilnovels.com/community/index.php?forums/arthy-ravis-vilagiduvenaa-idhayame.65/
banumathi jayaraman wrote on Vijaya Muthukrishnan's profile.
My heartiest birthday wishes to you, Vijaya Muthukrishnan Madam
banumathi jayaraman wrote on Sudarkrish's profile.
My heartiest birthday wishes to you, Sudarkrish Sir/Madam
banumathi jayaraman wrote on Revathiravichandran's profile.
My heartiest birthday wishes to you, Revathiravichandran Madam

Advertisements

Latest Episodes

Today's birthdays