Cp20

Cp20

அத்தியாயம் இருபது

நீ தினமும் தின்னும்

என் நிகழ்காலத்துக்கு

காதல் என்று பெயர்

-டைரியிலிருந்து

சிறு வயதில் பார்த்திருந்த முகம் சற்று மறந்திருக்க… சிதம்பரம் மாமாவை ஒவ்வொரு அங்குலத்திலும் நினைவுப்படுதுமாறு நின்றிருந்தவனை அடையாளம் கண்டு கொண்டது அவளது விழிகள்!

“ஓகே… தேங்க்ஸ் சர்… ” முகம் முழுக்க மலர்ந்த புன்னகையோடும் விழிகளில் அவனை கண்டுகொண்ட சொந்தத்தோடும் தலையாட்டி கொண்டே கூற… ஜிகே அவளை விசித்திரமாக பார்த்தான்… மொத்த வகுப்பறையும் அதே விசித்திர பார்வை பார்த்தது… இது இவளது இயல்பில்லையே… பார்த்து கொண்டிருக்கும் போதே வகுப்பு முடிய…

“ஓகே… தேங்க்ஸ் ஸ்டுடென்ட்ஸ்… சீ யூ டுமாரோ… ” என்று ஜிகே விடைபெற்று கொண்டு வெளியே போக… அவசரமாக அவனை நோக்கி ஓடினாள் ஆதி!

“சர் ஒன் மினிட்… ” அழைத்து கொண்டே அவனருகில் ஓடுவதை கண்ட அனிஷா சாதனாவின் புருவங்கள் மட்டுமல்ல… அந்த வகுப்பறையில் இருந்த அனைவரின் புருவமும் ஏறியது…

“எஸ்… ” திரும்பி அவளை பார்த்தவன்… “எஸ் வாட் கேன் ஐ டூ பார் யூ?” இரண்டாம் முறையாக அழுத்தி கேட்டவனின் குரலில் கிஞ்சிற்றும் சொந்தமில்லை! தான் தவறாக நினைத்து கொண்டோமோ என்ற சந்தேகம் வந்தது ஆதிக்கு… ஆனாலும் எதனாலோ அவன் கௌதம் என்று உறுதிப்படுத்தி கொள்ள மனம் விழைந்தது…

“கௌ… கௌதம் மாமா தானே நீங்க?” திக்கி திணறி அவள் கேட்க… அவனது பார்வையில் சூடு ஏறியது… மெளனமாக அவளை ஊன்றி பார்த்தவன் ஒன்றும் கூறாமல் நகர முற்பட…

“ப்ளீஸ்… சொல்லுங்க… ” அவனோடு வேகமாக நடந்து கொண்டே அவள் கேட்க… அந்த காட்சி பலருக்கு விருந்தாக… தூரத்தில் இருந்து பார்த்த விஷாலுக்கு ஏனோ எரிச்சலாக இருந்தது…

அவளோடு இருந்த ஜிகே கெஸ்ட் லெக்சரர் என்ற செய்தி அவனை முன்னமே அடைந்திருந்தாலும் ஆதிரை அவனை அவ்வளவு சொந்தமாக பார்த்து கொண்டு பேச காரணம் என்ன என்ற எரிச்சலில் பார்த்து கொண்டிருந்தான்… ஆசிரியர் என்ற முறையிலும் கூட அவனிடம் பேசுவதை விஷால் விரும்பவில்லை…

“யூ சீ… ஜஸ்ட் ஸ்டாப் யுவர் கன்வர்ஷேஷன்… எதுவா இருந்தாலும் கிளாஸ்ரூம் உள்ள பேசுங்க… எல்லாரும் பார்க்கறாங்க… ” அவர்களை பார்வையிட்டு கொண்டிருந்தவர்களை காட்டி அவன் கடுப்படிக்க… அவளுக்கு அதெல்லாம் தேவையில்லாத ஒன்றானது…

“நீங்க கௌதம் மாமா தானே… அதை மட்டும் சொல்லுங்க ப்ளீஸ்… ” வேண்டுகோள் கெஞ்சலாக ஆரம்பிக்க… அவனோ எரிச்சலான ஒரே ஒரு பார்வை மட்டும் பார்த்து முறைத்து விட்டு அந்த இடத்தை விட்டு அகன்றான்…

ஆதிரையின் முகத்தில் சிந்தனையின் சாயல்!

“என்னடி இங்கயே நின்னுட்டு இருக்க? சர் போய் பத்து நிமிஷம் ஆகுது… ” அருகில் வந்த அனிஷா கிண்டலாக கூற…

“ஹேய் என்னப்பா விஷயம்… சார்ர பார்த்ததுல இருந்து உன் நடவடிக்கை சரியில்லையே… என்ன மேட்டர்?”கண்ணடித்த சாதனா ஆதிரையை பார்த்து கேட்க…

“ப்ச்… போங்கப்பா… நான் செம மூட் ஆப்… ”என்று அலுத்து கொண்டவளை பார்த்து… சிரித்தவர்கள்…

“மூட எப்படி ஆன் பண்றதுன்னு எங்களுக்கு தெரியும்… வா கேண்டீன் போகலாம்… ” என்று கண்ணடித்த தியாவை பார்த்து முகத்தை சுருக்கினாள் ஆதி…

“அடிப்பாவி என்னை தீனி பண்டாரம்ன்னே முடிவு பண்ணீட்டீங்களா?” வாய் மேல் கை வைத்து அவள் சிணுங்க… உடனிருந்த மூவருமே சிரித்தனர்…

“சரி… நாங்க மூன்று பேரும் சாப்பிடறோம்… நீ வேடிக்கை மட்டும் பாரு… ” தியா குறும்பான பார்வையோடு கூறிவிட்டு அவளை இழுத்து கொண்டு கேண்டீன் நோக்கி நடக்க…

“அய்… ஆசை தோசை… ” என்று கூறிவிட்டு அனைவரையும் முந்தி கொண்டு ஓட… கலாட்டாவாக கழிந்தது அந்த நிமிடங்கள்… சற்று தூரத்திலிருந்து அவளை பார்வையிட்டு கொண்டிருந்த ஒருவனின் முகம் இன்னதென்று கூற முடியாத உணர்ச்சி கலவையில் ஆட்பட்டு கொண்டிருந்தது…

*****

“ப்ளீஸ்… என்னை விட்டுடு அம்மு… என்னால முடியல… ” காதை பிடித்து கொண்டு பாவமாக சோபாவில் அமர்ந்திருந்தவளை சிரிப்போடு பார்த்தாள் வள்ளியம்மை…

“ஏய் உன்னை தவிர வேற யார் கிட்ட சொல்லுவேன் ஆதிகுட்டி? இதை கூடவா எனக்காக பொறுத்துக்க மாட்ட?” செல்லமாக கோபித்த வள்ளியம்மையின் கழுத்தை பிடிக்க போனாள் ஆதிரை…

“ஏய் அம்மு… அளவே இல்லாம நான் ஸ்டாப்பா உன்னோட லவ் புராணத்தை எடுத்து விட்டுட்டே இருந்தா நானும் தான் என்ன பண்ணுவேன்? பாவம் நான்… பச்சைபுள்ள… ” அப்பாவியாக கூறிய ஆதிரையின் கன்னத்தை இரண்டு கைகளாலும் கிள்ளிய வள்ளியம்மை…

“அடிப்பாவி அந்த அந்த பச்சைபுள்ளையோட முகத்தை காட்டு… ”என்று அவளது தாடையை பிடித்து பார்க்க… அவளோ பற்கள் அனைத்தையும் காட்டி சிரிக்க… அந்த சிரிப்பு வள்ளியம்மையையும் தொற்றி கொண்டது…

“நான் இப்படியே சிரிச்சுட்டு இருந்தா ஹிட்லர் கிட்ட மாட்டிக்குவேன் அம்மு… சீக்கிரம் ரெடி ஆகு… டான்ஸ் மாஸ்டர் அதுக்கு அப்புறம் பாட்டு மாஸ்டர்… ஷப்பா பழனி ஆண்டவா… ” மேலே பார்த்து ஆதிரை வேண்டிக்கொள்ள… வள்ளியம்மை குறும்பாக சிரித்து கொண்டே…

“ஆதி… இப்போ நீ சொன்னதில் அந்த ஹிட்லர் சிவகாமி அத்தைதானே… ” நாக்கை துருத்தி கொண்டு கேட்க… ஆதியோ சுற்றும் முற்றும் பார்த்து தன் தாய் அங்கு இல்லாததை உறுதிப்படுத்தி கொண்டு…

“ஏய் அம்மு… என்னை மாட்டி விட்டுடாத ஹிட்லர் கிட்ட… ” முகத்தை பாவமாக வைத்து கொண்டு கெஞ்சியவளை கைகளை உயர்த்தி ஆசிர்வதிப்பது போல காட்டி…

“உமது வேண்டுகோள் பரிசிலனை செய்யப்படும் மகளே… ” என்று மீண்டும் குறும்பு பார்வை பார்த்தவளை அடிப்பதற்காக ஆதி துரத்த… வள்ளியம்மை தப்பித்து ஓட… இருவருமாக போய் முட்டி நின்றது சிவகாமியின் முன்பு!

இருவருமே பயத்தில் ஒருவர் பின் ஒருவர் மறைந்து நிற்க முயல… சிவகாமி எரிச்சலாக கேட்டார்…

“ரெண்டு பேரும் ரெடி ஆகாம என்ன பண்றீங்க? மாஸ்டர் வர போறாங்க… ” சற்று சப்தமாக கேட்க…

“அத்தை… ரெடி ஆகிட்டோம் த்தை… மாஸ்டருக்கு தான் வெய்ட் செய்றோம்… ” பயத்தில் தத்துபித்தென்று உளறினாள் வள்ளியம்மை… பதில் கூறியவளையும் அவளுக்கு பின்னே ஒன்டிகொண்டிருந்த ஆதிரையையும் பார்த்து…

“எப்படி… இப்படித்தானா?”என்று இருவரது லாங் ஸ்கர்ட்டையும் காட்டியவர் முறைக்க… அப்போதுதான் கவனித்தாள் தங்களது ஸ்கர்ட்டை… பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல கூடாதா? இப்படியா மாட்டுவது என்று மனதுக்குள் தலையில் அடித்து கொண்டனர் இருவருமே…

“போய் சுடிதார் மாத்துங்க… பேன்ட் இல்லாம டான்ஸ் கிளாஸுக்கு ரெடி ஆகி… பொறுப்பே இல்லை… ”கடித்து விட்டு அந்த இடத்திலிருந்து அகல… இருவருக்கும் பிடித்து வைத்த மூச்சு விடுதலையானது…

அவசரம் அவசரமாக சுடிதார் மாற்றி முழுதாக தயாராகி வருவதற்கும் மாஸ்டர் ஜதி கட்டையை எடுத்து வைப்பதற்கும் சரியாக இருக்க… அவசரமாக மாஸ்டர் முன்னிலையில் சென்று நின்று வணங்க… அருகில் அமர்ந்திருந்த சிவகாமி திருப்தியாக பார்த்து கொண்டிருந்தார்…

பயிற்சிக்கு நடுவில் ஆதிரையின் செல்பேசி அழைக்க… அவள் சிவகாமியை பார்த்தாள்… அவரோ முறைத்து கொண்டே அனுமதி கொடுக்க… ஓடிச்சென்று எடுத்தாள்…

அனிஷாதான் அழைத்திருந்தாள்…

“சொல்லு அனி… ”பயிற்சியோடு சேர்த்து ஓடி வந்ததில் மேல் மூச்சும் கீழ்மூச்சுமாக வாங்கியது… மார்பை மறைத்து கட்டியிருந்த ஷாலை சரி செய்து கொண்டாள்…

“என்னடி மூச்சு வாங்குது? வேலையா இருந்தியா?”

“இல்லடி… டான்ஸ் கிளாஸ் நடந்துட்டு இருக்கு… சீக்கிரம் சொல்லு… ” அருகில் அமர்ந்திருந்த சிவகாமிக்கு பயந்து கிசுகிசுப்பாக அவளிடம் பேச…

“ஹேய்… நாங்க காபி டேல இருக்கோம்… இங்க ஒரு சர்ப்ரைஸ் ஆதி… ” அனிஷாவின் குரலில் துள்ளல் தென்பட… என்னவாக இருக்குமென யோசித்தாள் ஆதிரை…

“ஏய் என்னடி… சீக்கிரம் சொல்லு… பக்கத்துல அம்மா பார்த்துட்டே இருக்காங்க… ” அதே கிசுகிசுப்பான குரலில் தன் நிலையை விளக்க…

“ஐயோ உன் அம்மாவா… ” என்று பயந்தவள்… “சரி நான் சொல்ல வந்ததை சொல்லிடறேன்… எங்க முன்னாடி இருக்க டேபிள்ல ஜிகே சர் உட்கார்ந்து இருக்கார்… ”என்று நிறுத்தி கொள்ள… ஆதிரை அவளையும் அறியாமல்…

“ஹேய்… வாவ்வ்வ்வ்வ்… ”என்று துள்ளி குதிக்க… சோபாவில் அமர்ந்திருந்த சிவகாமி பார்த்து முறைத்தார்…

“அட பக்கி… இருடி… கூட இருக்கறது ஒரு பொண்ணு… செம்ம்ம அழகு… ” அனிஷா கொளுத்தி போட்ட விஷயத்தில் ஆதிரையின் முகம் பியுஸ் போன பல்பானது…

“வாட்… என்ன சொல்ற அனி… ” மிகவும் இறங்கிய குரலில் அவள் அனிஷாவை கேட்க…

“ஆமா ஆதி… ரொம்ப க்ளோஸ் போல… ரெண்டு பேரும் ரொம்ப நேரமா பேசிட்டே இருக்காங்க… ஒரே ஒரு காப்பசினோவ வெச்சுட்டு… ” அளவுக்கு அதிகமாகவே அவர்கள் முன்னே அமர்ந்திருந்தவனை பற்றி கூறி கொண்டிருக்க… ஆதிக்கு உடனே அவர்களை பார்த்தே ஆக வேண்டும் போல தோன்றி வதைக்க ஆரம்பித்தது…

அவன் கௌதம் தான் என்பதை முழுவதுமாக நம்பினாள்… அதை உறுதிப்படுத்தியே ஆக வேண்டும் என்று திண்மையாக தோன்ற… தாயை பரிதாபமாக பார்த்தாள்… அங்கு செல்ல எப்படி அனுமதி வாங்குவது என்பது மட்டுமே அவளது மனதில் ஓடி கொண்டிருந்தது!

தாய் இதுநாள் வரையிலும் உபதேசம் செய்தவை எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகி போயின! வயதின் கோளாறு அவளது கண்களை மறைக்க ஆரம்பித்து இருந்தது!

தன் தாயிடம் கெஞ்சி கொஞ்சி அனுமதி வாங்க… சந்தேகமாக பார்த்த வள்ளியம்மையை கண்களால் சமாதானப்படுத்தி விட்டு சென்றாள்… வள்ளியம்மைக்கு அவளுடைய கௌதம் அண்ணனை திரும்பவும் அவளுக்கு காட்டி சந்தோஷப்படுத்த வேண்டும் என்று விரும்பினாள் ஆதிரை…

ஆனால் தானாக சென்று சுழலில் சிக்கி கொள்ளபோவது தெரிந்து இருந்தால்… ??

*******

“ஒன் ஸ்ட்ராபெரி ஸ்மூதீ… ” தனக்கும் ஆர்டர் செய்துவிட்டு அனிஷா தியாவுடன் அமர்ந்தாள் ஆதிரை… அனிஷா கூறிய அளவு நெருக்கமில்லை என்றாலும் அதுவும் நெருங்கிய நட்புக்கான நெருக்கமே… அந்த பெண்ணின் கண்கள் கலங்கி இருந்தது போல தோன்றியது… அதுவுமில்லாமல் அந்த பெண்ணையும் எங்கோ பார்த்தது போல ஒரு உணர்வு…

சட்டென ஆதிரைக்கு மூளையில் பல்பு எரிந்தது… அவளை எங்கு பார்த்தோம் என்பது நினைவுக்கு வந்தது… அவள் யார் என்பதும் நினைவுக்கு வந்தது… தனக்குள் சிரித்து கொண்டாள்…

எமினெம் ‘beautiful’ ல் மெல்லிய ராப்பராக வழிந்து கொண்டிருந்தார்…

“Lately I’ve been hard to reach, I’ve been too long on my own
Everybody has a private world where they can be alone…
So are you calling me, are you trying to get through, oh?
Are you reaching out for me, like I’m reaching out for you?
So oh oh

ஆதிரை அவளையும் அறியாமல் பாடல் வரிகளை பாடலோடு சேர்த்து முணுமுணுத்து கொண்டிருக்க தியா அவளை முறைத்து முதுகில் அடி வைத்தாள்…

“ஏய் லூசு… உன்னை வர சொன்னது எதுக்கு… பாட்டு பாடவா?”

“பாட்டு பாடுவது ஒரு குற்றமா யுவர் ஆனர்… ” மேலே பார்த்து குறும்பாக கேட்டவளை

“இதோ முன்னாடி தான் ஜிகே சர் உட்கார்ந்துட்டு இருக்கார்… கேட்டு சொல்லட்டா?” தியாவும் குறும்பாகவே பதிலை கூற… அதே நேரத்தில் அவனும் நிமிர்ந்து இவர்களை பார்த்து முகத்தை சுளித்தான்… கல்லூரிக்கு வெளியிலான அறிமுகத்தை யாருடனும் வளர்க்கவோ முன்னெடுக்கவோ அவன் சற்றும் தயாரில்லை என்று தோன்றியது…

“நீ என்ன கேட்கறது? நானே கேட்கறேன்… ” என்று எழுந்தவள் அந்த டேபிளை நோக்கி போனாள்…

முதலிலேயே ஜிகேவிடம் வாங்கி கட்டியிருந்ததால் அனியும் தியாவும் அவளை தடுக்க பார்க்க… அவற்றையெல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு அவன் முன் சென்று நின்றாள்…

“ஹலோ அக்கா… ” அவன் முன் அமர்ந்திருந்த சௌமினியிடம் கை கொடுக்க… சௌமினியும் ஜிகேவை பார்த்தபடி தயங்கியபடியே அவளிடம் கை கொடுத்தாள்… ஏனென்றால் அப்போதுதான் கௌதம் அவளிடம் கூறியிருந்தான்… கல்லூரியில் பகுதி நேர விரிவுரையாளராக சேர்ந்திருந்த விஷயத்தையும் ஆதியை பார்த்த விஷயத்தையும்…

“அந்த பொண்ணை பார்த்தப்போ எனக்கு முன்னாடி நடந்த ஒவ்வொன்றுமே தான் ஞாபகத்துக்கு வந்தது சௌம்ஸ்… கோபம் வேற… ஆனா அது அப்பாவியா என்கிட்டே வந்து நீங்க கௌதம் மாமா தானேன்னு கேட்கும் போது கோபத்தை இழுத்து பிடிக்க முடியலை… ”

சௌமினியிடம் கூறிக்கொண்டிருக்கும் போதே ஆதி உள்ளே வருவதை கவனித்து விட்டான்… லாங் ஸ்கர்ட்டோடு ஹாப் ஸ்லீவ் டியுனிக் ஷர்ட்டில் அயர்ன் செய்திருந்த நீண்ட தலைமுடியை ஒரு சிறிய கேட்ச் கிளிப்பில் மட்டும் அடக்கியபடி… இடது கையில் பெரிய ஃபாசில் வாட்சோடு கண்களில் மை மட்டும் எழுதி வேறு எந்த அலங்காரமும் இல்லாமல் தேவதையை போல உள்ளே நுழைய அங்கிருந்த இளைஞர் படையினரின் பார்வை மொத்தமும் அவள் மேல் விழ… அதை பார்த்த கௌதமின் முகம் வெளிப்படையாக எரிச்சலை காட்டியது…

சௌமினியும் ஆதியை பார்த்தவள்…

“டேய்… ஆதியா இவ… செம அழகா ஆகிட்டா கௌஸ்… ” என்று சிரிக்க… சற்று நேரம் அவளது தோழிகளிடம் பேசிவிட்டு அவர்களை நோக்கி வந்தவளை எரிச்சல் மாறாமல் பார்த்தான் கௌதம்…

“ஹாய் ஆதி… என்னை ஞாபகம் இருக்கா?” கௌதமை கண்டுகொள்ளாமல் ஆதிரையிடம் சிரித்து கொண்டே வியந்த கேள்வியை கேட்ட சௌமினியின் செயலை பார்த்து மனதுக்குள் தலையிலடித்து கொண்டான்…

“ச்சே… இதுங்கல்லாம் திருந்தாத கேஸ்… ”

சௌமினிக்கு பதில் சொல்வதற்கு முன் கௌதமை பார்த்தவள்…

“எனக்கு நல்லா இருக்கு சௌமினிக்கா… ஆனா உங்களுக்காவது என்னை ஞாபகம் இருக்கே… ஐ ம் ஹேப்பி… ”

“ஏன் ஆதி இப்படி சொல்ற?”

“ஆமா சௌமினிக்கா… நல்லா தெரிஞ்சுகிட்டே தெரியாத மாதிரி போறவங்களும் இருக்காங்க… ” கௌதமை முறைத்து கொண்டு கூற… சௌமினி இருவரையும் பார்த்து சிரித்தாள்…

“இல்ல ஆதி… இப்போ தான் கௌஸ் சொல்லிட்டு இருந்தான்… ஆதியும் அங்க தான் படிக்கறான்னு… ” சௌமினி வெகு இயல்பாக போட்டு கொடுத்து விட… கௌதம் வேறு புறம் திரும்பி கொள்ள… அவனை பார்த்து தீவிரமாக முறைத்தாள் ஆதிரை… சௌமினியிடம் சொல்ல தெரிகிறது ஆனால் தானாக அவனிடம் போய் கேட்டால் அலட்டி கொள்ள வேண்டியது என்று மனதில் வறுத்து கொண்டிருந்தாள் அவனை…

“டேய் கௌதம்… இனிமே தான் நீ என்கிட்டே நீ மாட்ட போற… ” என்று மனதில் சூளுரைத்தவளுக்கு அப்போது தெரியவில்லை… தன்னை சுழலாக சுற்றி வளைத்து அவளது வாழ்கையை அவனது கையில் எடுத்து கொள்ள போகிறான் என்று!

பேசி கொண்டிருக்கும் போதே அவளது ஸ்ட்ராபெரி ஸ்மூதீ வந்துவிட… தோழிகள் அவர்களது டேபிளில் இருந்து அழைக்க…

“ஒரு நிமிஷம் தியா… வந்துடறேன்… ”என்று அவர்களிடம் கூறிவிட்டு சௌமினியின் பக்கம் திரும்பியவள்…

“இந்த ஜிகே சாரை விடுங்க சௌமினிக்கா… வருண் மாமாக்கும் உங்களுக்கும் என்ன இஸ்யுஸ்?” இயல்பாக ஆதிரை கேட்ட கேள்வியில் அதிர்ந்தாள் சௌமினி… கௌதமின் நிலையும் அதுவே என்பது அவனது முகத்தில் இருந்தே தெரிய… தன்னை நிலைப்படுத்தி கொண்டவள்…

“ஏன் ஆதி? அப்படியெல்லாம் ஒன்றுமில்லையே… ”எச்சரிக்கையாக பேச துவங்கினாள் சௌமினி…

“தெரியும்க்கா… வருண் மாமா சொல்லியிருக்காங்க… உங்க போட்டோஸ் கூட காட்டியிருக்காங்க… எனக்கும் வள்ளியம்மைக்கும் மட்டும் தான் தெரியும் உங்க விஷயம்… டூ பி பிரான்க் இன்னமும் வருண் மாமா மனதில் இருப்பது நீங்க மட்டும் தான் சௌமினிக்கா… ” அப்பாவியாக ஆதிரை சொல்லிக்கொண்டே போக…

“ஆதி… பேசுவதை நிறுத்திட்டு கிளம்பறியா?”அவளை முகத்துக்கு நேராக பார்த்து நறுக்கென்று கௌதம் கூற… நிமிர்ந்து அவனது முகம் பார்த்த ஆதி சற்று பயந்து தான் போனாள்… கோபம் கொந்தளித்து கொண்டிருந்தது…

“இப்போது தான் என் பெயர் நினைவுக்கு வருகிறதா கௌதம் மாமா… நோ நோ ஜிகே சர்… ” கேட்க வேண்டியதை கேட்டுவிட்டு குத்தலாக ஆதி முடிக்க… அவன் எரிச்சலாக அவளை பார்த்தான்… பேசவில்லை!

“அப்போ வேண்டுமென்றே தானே என்னை தெரியாத மாதிரி சொன்னீங்க… ” எப்படியாவது தனது பழைய கௌதம் மாமா தென்படுவானா?தன்னுடன் வம்பளப்பானா? தன்னை தோழியாக ஏற்று கொள்வானா என்ற எதிர்பார்ப்போடு அவனை பார்த்து ஆதிரை கேட்க… அவனோ நிதானமாக அவளை பார்த்து…

“ஆதி… வேண்டுமென்றே பேசாமலில்லை… உங்க யாரோட உறவும் வேண்டாம் என்று தான் நான் பேசாமல் போனேன்… அதிலும் நீ கண்டிப்பாக வேண்டாம்… ” அடக்கி வைத்த கோபத்தோடு அவளிடம் ஒவ்வொரு வார்த்தையாக கூற… ஒவ்வொன்றும் ஆதிரையின் மனதை கிழித்து விட்டு சென்றது… அவனது கண்களை பார்த்து கொண்டிருந்தவளுக்கு கண்கள் கலங்க… அதை பார்த்த சௌமினியின் கண்களும் கலங்க துவங்கின…

எதுவோ சரியில்லை என்பதை மட்டுமே அறிந்து இருந்தாள் ஆதிரை… அவளுக்கும் வள்ளியம்மைக்கும் மிகவும் பிடித்த கௌதம் தன்னிடம் பேச கூட விரும்பவில்லை என்பது அவளது மனதை வலிக்க செய்தது… உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அமர்ந்திருந்தவள் தன்னை சமாளித்து கொண்டு நிமிர்ந்தாள்… கௌதமை பார்த்து புன்னகைத்து…

“மாமா… உங்களுக்கு கேப்பசினோ தான் பிடிக்குமா?” சம்பந்தமே இல்லாமல் கேட்டவளை புரியாத பார்வை பார்த்தான் கௌதம்… எப்படி பேசி துரத்தி விட்டாலும் அசைய மாட்டேன் என்கிறாளே என்ற பெருமூச்சு அவனிடமிருந்து வெளிப்பட…

“கேள்வி கேட்டா பதில் சொல்லணும் மாமா… ”என்று மென்மையாகசிரித்தவள்… அவனது கப்பை எடுத்து அவன் மீதம் வைத்திருந்த கேப்பசினோவை ஒரு சொட்டு விடாமல் அருந்தி விட்டு… அவனை பார்த்து மயங்கிய புன்னகையோடு…

“தேங்க்ஸ் பார் யுவர் கேப்பசினோ கௌதம்… ”

கண்ணை சிமிட்டி அவள் கூற… அந்த கண்களோ அவனை சுழட்டி தன் உள்ளே இழுத்து கொள்ள துடித்தது… அவனது காபியை அருந்திய இதழ்களை மீண்டும் சுவைத்து பார்த்த ஆதிரை…

“வெரி ஸ்வீட்… ”என்று உதடுகளை குவித்து முத்தமிடுவது போல சொல்லிவிட்டு போக… கௌதம் அவளது செய்கையில் உறைந்து போனான்…

error: Content is protected !!