அத்தியாயம் 29

பூ நனைதல்

பூவில் நனைதல்

காதல் நெய்தல்

காமம் குழைதல்!

-டைரியிலிருந்து

அதிகாலையிலேயே விழிப்பு வந்து விட்டதாக தோன்றியது ஆதிரைக்கு! இழுத்து போர்த்தி கொண்டு குளிரைஅனுபவித்தாள்… தனது தாய் லண்டனுக்கு சென்றிருந்த வேளையில் மட்டுமே இப்படி உறங்க முடியும் என்றெண்ணி கொண்டவளுக்கு அத்தை ஏன் இன்னும் காப்பியை அனுப்பாமல் இருக்கிறார் என்று கேள்வி வேறு கேட்க தோன்றியது!

“ஏசிய யார் இவ்வளவு அதிகமா வைத்தது… ” உறக்கமும் விழிப்பும் கலந்த நிலையில் ரிமோட்டை தேட… கைக்கு அகப்படவில்லை… கண்களை மெதுவாக திறந்து தூக்கம் கலைந்து விட கூடாது என்றெண்ணி கொண்டு…

“அத்தை… அத்தை… காபி… ” சற்று சப்தமாக கத்த…

“ம்ம்ம்… இங்க எழுந்து பல்லை விளக்கினா தான் காபி கிடைக்கும்… ” கதவுக்கு பின்னால் இருந்து கேட்ட குரல்? கௌதமுடையது அல்லவா!

எங்கு இருக்கிறேன்?

பட்டென்று எழுந்து அமர்ந்தவளுக்கு அது எந்த இடம் என்று தெரியவில்லை… ஜன்னல் திறந்திருக்க குளிர்காற்று வீசி கொண்டிருந்தது… மழை வலுவாக பெய்து கொண்டிருக்க… கதவை திறந்து கொண்டு வந்தவளை டைனிங் டேபிளில் அமர்ந்து லேப்டாப்பை நோண்டி கொண்டிருந்த கௌதம் வரவேற்றான்… மயக்கும் புன்னகையோடு… கையில் சூடாக காபியை அருந்தி கொண்டே அவளது கைகளில் பேஸ்ட்டையும் ப்ரஷயும் திணிக்க…

“ஹை மாமா… ” என்று தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தியவள்…

“நான் எப்படி இங்க?”என்று கேட்டபோது தான் அவளுக்கு குழப்பமே வந்தது… பல்லை விளக்கி விட்டுஅவசரமாக தன்னை வேறு ஆராய்ந்து கொண்டவளை கேலியாக பார்த்தான் கௌதம்…

“ஏய்… உன்னை எதுவுமே பண்ணலைடி… ” என்று சிரிக்க…

“ச்சீ… போங்க மாமா… ” வெட்கபட்டபடி அவனை அடிக்க கையை ஓங்க… அவளது கையை பிடித்து தன்னருகே இழுத்து கொண்டவன்…

“புல்லா அடிச்சுட்டு இப்படியா மட்டையாவ?” வேண்டுமென்றே கேலியாக கௌதம் கண்ணடித்து கேட்க… அவனை முறைத்தவள்…

“நானா? வேண்டாம்… நேற்றே என்னை ரொம்ப கலாய்ச்சுட்டீங்க… மறுபடியும் ஆரம்பிக்காதீங்க… அடி வாங்குவீங்க… சரி அந்த மொக்கச்சாமி,மாயண்ணே மற்றும் உறவினர்கள் எல்லாம் எங்க?” ஹாலில் லோக்கல் சேனல் ஓடி கொண்டிருந்த தொலைகாட்சியை பார்வையிட்டவள்அவனது காபியை இயல்பாக பிடுங்கி கொண்டு அருந்தியபடி கேட்க… அவளது செயலில் அவன் சிரித்து கொண்டு…

“அவங்களை எல்லாம் நேற்றே பாக் பண்ணி அனுப்பியாச்சு… நீ மட்டையானதுனால நான் அழைச்சுட்டு வரேன்னு சொல்லிட்டேன்… ” என்று சிரிக்க…

“ஹை சூப்பர்… ” என்று சிரித்தாலும் தனக்கு எப்படி இவ்வாறு ஆனது என்பது புரியாமல் கேட்க…

“வெளில பார்ட்டி பண்ணா நாம தான் ஜாக்கிரதையா இருக்க வேண்டும் ஆதி… யாரோ உன்னோட ஜூஸ்ல ட்ரக்ஸ் கலந்து இருக்காங்க… ” யோசனையாக கூற… அவளோ முன்னை காட்டிலும் மகிழ்ச்சியாக…

“சோ ஸ்வீட்… யாரா இருந்தாலும் அவங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும்… ” என்று சிரித்து கொண்டே கூற அவன் முறைத்து கொண்டு குழப்பமாக பார்க்க…

“இல்லைன்னா உங்க கூட இப்படி தனியா இருக்கற சான்ஸ் கிடைக்காதே… ”ஹஸ்கியான குரலில் கூறிவிட்டு அவனை நெருங்கி உட்கார… அவளை விட்டு மேலும் தள்ளி அமர்ந்தவனை பார்த்து சிரித்தாள்!

“ஏய் ஒரு மார்கமாத்தான் இருக்க… இப்படியெல்லாம் சிரிக்காதடி… நீயே கிளப்பி விடாத… ” குறும்பாக கூறிவிட்டு கௌதம் கண்ணை சிமிட்ட…

“ஆமா… கிளப்பி விட்டா மட்டும் என்ன மாமா செய்ய போறீங்க? ஹாத்திராமுக்கு பதிலா வேறேதாவது ராமோட வரலாறை டீச் பண்ண போறீங்க!… ” வேண்டுமென்றே அவனை வம்பிழுக்க…

“வேண்டாம் ஆதி… ஒழுங்கா கிளம்பற வேலைய பாரு… மழை வேற… நாம் ஒழுங்கா ஊர் போய் சேர வேண்டும்… ” எச்சரிக்கையாக கூற… ஆதிரை குறும்பாக சிரித்தாள்… தொலைகாட்சியில் ஊட்டி மலைசரிவை பற்றி கூறி கொண்டிருந்ததை பார்த்தவளுக்கு திக்கென்று இருந்தது… ஆனாலும் உடன் கௌதம் இருந்தது அவளது மனதில் இனம் காண முடியாத இன்ப படபடப்பை உண்டாக்கியது!

இருவருமாக மலைச்சரிவை சந்தித்த இடத்தை பார்வையிட்ட போதும்… பார்க்க பயந்து அவனது கைகளை கட்டி கொண்டு முகத்தை மறைத்து கொண்ட போதும் இனம் புரியா உணர்வு! தன் இணையிடம் மட்டுமே கிடைக்கும் பாதுகாப்பு உணர்வு!

எப்படி ஊருக்கு செல்வது என்று அவன் குழம்ப… அவளோ அதை பற்றிய சிந்தனையே இல்லாமல் அவனோடு இருக்கும் அந்த நிமிடங்களை சந்தோஷமாக அனுபவித்து கொண்டிருந்தாள்…

சென்னையில் இதற்கான எதிர்வினை எப்படி இருக்குமென்று அவள் நினைத்து பார்க்க விரும்பவில்லை… மகிழ்ச்சியை குறைக்கும் எந்த விஷயத்தையும் மண்டைக்குள் ஏற்றி கொள்ள விரும்பவே இல்லை… !

******

அது

அவள்

இரவு

ஒரு ஊற்று!

-டைரியிலிருந்து

இருள் கவிழ்ந்து கொண்டிருந்தது… மழை வெளுத்து கட்டி கொண்டிருக்க… குளிர் பற்களை கிட்டிக்க வைத்திருந்தது!

இடைவிடாத மழை!

சோவென மழை கொட்ட வீட்டிற்கு முன் நீர் ஆறாக பள்ளத்தாக்கை நோக்கி ஓடி கொண்டிருந்தது… நெடிது வளர்ந்திருந்த குல்மொஹர் மரம் பூக்களை எல்லாம் உதிர்த்து விட்டு மழை நீரை தன்னுள்ளே வாங்கி கொண்டிருந்தது!

உடலை வெட்டும் குளிர்… வெப்பத்தை தேடியது கைகள்!

இரண்டு கைகளையும் பரபரவென தேய்த்து கன்னத்தோடு அழுந்த வைத்து கொண்டாலும் குளிர் குறைவது போல தெரியவில்லை… ஆனால் இது போன்ற ஒரு சூழ்நிலையை சென்னையில் எதிர்பார்க்க முடியுமா என்ன? அதுவும் கௌதமோடு? ரசித்து மகிழ்ந்து போனாள் ஆதிரை!

வெராண்டாவில் கயிற்று ஊஞ்சலில் அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவளுக்கு மழையில் நனைந்தே ஆக வேண்டும் என்ற அடக்க முடியாத ஆவலில் வீட்டினுள் பார்க்க… கௌதம் சமையலறையில் தீவிரமாக வேலை செய்தபடி இருந்தான்…

அவனுக்கு தெரிந்த சான்ட்விச்சையும் ஆம்லெட்டையும் வைத்து ஒரு நாளை ஓட்டி விட… ஆதிரை கல்மிஷ சிரிப்போடு…

“மாம்ஸ்… எனக்கு ஒரு சிக்கன் பிரியாணி… ” வேண்டுமென்றே கேலி செய்து கொண்டு அவனிடம் முறைப்பு வாங்கியபடி சமையலறையை விட்டு துரத்தியடிக்க பட்டிருந்தாள்…

“டேய் கௌதமா… உனக்கு இம்புட்டு லொள்ளு ஆகாது… ” என்று கூறி கொண்டவளின் உதடுகள் சிரிப்பில் மலர்ந்து இருந்தன…

கௌதம் வராததை உறுதி செய்து கொண்டு… தோட்டத்தில் பெய்து கொண்டிருந்த மழையில் நின்றவளுக்கு சற்று நேரம் கழித்து தான் தான் செய்த முட்டாள் தனத்தின் வீரியம் புரிய ஆரம்பித்து இருந்தது… நடுக்கத்தில் உடல் விரைத்து கொள்ள பற்கள் தடதடவென்ற நடுக்கத்தில்!

*********

ஆதிரையின் கைகளையும் கால்களையும் பரபரவென தேய்த்து விட தொடங்கினான் கௌதம்… அவனது முகத்தில் அதீத கோபம்… அவளை வசைமாறி பொழிந்து கொண்டே தேய்த்து விட… தன்னை குறுக்கி கொண்டு சோபாவில் படுத்திருந்தாள் ஆதிரை! உடல் முழுவதும் தொப்பலாக நனைந்திருக்க… காற்று வீசும் போதெல்லாம் உடல் தூக்கி வாரி போட்டது…

“கொஞ்சமாவது அறிவிருக்கா உனக்கு? இப்படிதான் இந்த குளிர்ல மழைல நனைவியா? மண்டைல மசாலாவா இருக்கு? அறிவுகெட்டவளே!” வாய்க்கு வந்ததை எல்லாம் கூறி திட்டி கொண்டிருந்தான்…

உறைய வைக்கும் குளிரில் இப்படி ஒரு முட்டாள்தனத்தை யாருமே செய்ய மாட்டார்கள் என்ற கோபம் அவனுக்கு!

“ஏன்டி… இப்படி லூசா இருக்க? மேல்மாடி சுத்தமா காலி ஆகிடுச்சா?” திட்டிக்கொண்டே பரபரவென டவலால் அவளை தேய்த்து விட… உதட்டை கடித்து கொண்டு அழுகையை அடக்கினாள் ஆதிரை… மழையில் நனைந்ததில் உடலில் ஒருவித வலி!

“வலிக்குது… ” பற்களை கிட்டித்து கொண்டு அவள் கூற…

“பின்ன வலிக்காம? மசில்ஸ் எல்லாம் காண்ட்ராக்ட் ஆகிடும்… இது கூடவா உனக்கு தெரியாது?” கடுப்பாக அவன் கேட்க…

“உங்களுக்கு தான் பாடி தெர்மோடைனமிக்ஸ் தெரியல… ” வலியோடு முனகியவளின் குரல் தீனமாக அவனது காதில் விழ… அந்த நேரத்திலும் அவளது குறும்பை நினைத்து பக்கென்று சிரித்தான்…

“ஆனாலும் உனக்கு இருக்க கொழுப்பு ஊர்ல யாருக்குமே இருக்காதுடி… ”

நடுங்கி கொண்டு விழித்தவளை குழந்தையாக கைகளில் அள்ளி கொண்டான்…

“எங்க தூக்கிட்டு போறீங்க?” சற்று பழைய நிலைக்கு திரும்பியவள் குறும்பாக கேட்க…

“ம்ம்ம்… வேற எங்க? பெட்ரூமுக்கு தான்… ஏன் கேட்கற?”

“இல்ல… நீங்க தூக்கிட்டு இருக்கற போஸை பார்த்தா எனக்கு என்னவோ மாதிரி இருக்கு மாமா… ” கிசுகிசுப்பாக அவனது காதில் கூற…

“கடவுளே… இவ கிட்ட இருந்து இந்த நைட் மட்டும் என்னை காப்பாத்திடு… … ஒரு மார்கமாவே இருக்காளே… !” சப்தமாக வேண்டி கொண்டவனின் தொனியில் சிரிக்க முடியாமல் வாய்விட்டு சிரித்தாள் ஆதிரை!

ஆதிரையை படுக்கையில் படுக்கவைத்தவனின் மனம் ஒரு நிலையில்லாமல் தவித்தது… நிச்சயமாக அவன் இது போன்ற இரவை எதிர்பார்க்கவில்லை… ஆனால் இந்த மழையோடு கூடிய இந்த இரவு அவனுள் ஏதேதோ மாற்றங்களை செய்விக்க… நிமிர்ந்து அவளது முகத்தை பார்க்க மனதில் தடதட ரயில் வண்டி!

அவளிருந்த நிலையும் அவளது நெகிழ்ந்த உடையும் அவனை புயலில் சிக்கிய பறவையாக அலைகழிக்க, அவனது கட்டுபாட்டை மீறி பயணிக்கின்ற பார்வையை கட்டுபடுத்த முடியாமல் திணறினான் கௌதம்…

அவனது கண்கள் சென்ற பாதையை ஆராய்ந்தவள் அவசரமாக தன்னை சரி செய்ய முயல…

இது சரியில்லை என்று தன்னைத்தானே கடிந்து கொண்டு அவசரமாக நகர்ந்தவன்,

“உடம்பை நல்லா துடைச்சுட்டு ட்ரெஸ்ஸ முதல்ல மாற்று ஆதி… ”என்று கூறிவிட்டு எதிலிருந்தோ தப்பித்து வருவது போல வெளியே வந்து அவசரமாக பாலை காய்ச்சினான்… குளிருக்கு சூடாக உள்ளே இறங்கினாலன்றி சமாளிக்க முடியாதே… !

செல்பேசி அழைத்தது… ஒரு கையால் சர்க்கரையை கலக்கி கொண்டே யாரென பார்த்தவனின் முகம் அந்த அழைப்பை எதிர்பாராததை காட்டினாலும் அதன் பின் படர்ந்த மென்மை அந்த அழைப்புக்கு உரியவரின் அன்பை கூற…

“ஹாய் சௌம்ஸ்… ”

“ஊட்டிலருந்து கிளம்பிட்டியா கௌஸ்… ?”

“இன்னும் இல்லடா… கொஞ்சம் ப்ராப்ளம்… மற்றவர்களை போக சொல்லி விட்டேன்… நான் இங்க தான் இருக்கேன்… ” என்று சற்று நழுவலாக பதில் கூற…

“சரி உன்னோட டார்லிங் வின் பண்ணிட்டாளா?” அவனது காதலை அறிந்தது முதல் கௌதமை கலாய்க்கும் போதெல்லாம் ஆதிரையை வம்பிழுப்பது வழக்கமாகி விட்டிருந்ததால் அவளது கேலிக்கு அவனது பதில் வெறும் புன்னகையாகத்தான் இருக்கும் மற்ற நேரங்களில்… ஆனால் இப்போதோ வீட்டில் அவளை வைத்து கொண்டு எப்படி பேசுவது என்று எண்ணிக்கொண்டு…

“அவ வின் பண்ணிட்டா… சரி நான் அப்புறம் பேசுறேன் சௌம்ஸ்… ” என்று வைத்துவிட பார்க்க…

“டேய்… என்னாச்சு?உண்மைய சொல்… ஏதாவது பிராடுத்தனம் செய்யறியா?” நண்பனின் இயல்பை அறிந்தவள் சிரித்து கொண்டே கேட்க…

“உனக்கு தெரியாம என்ன பிராடுத்தனம் பண்ணிட போறேன்?” என்று சிரித்தவன்… இடைவெளி விட்டு…

“இப்போ ஆதி என்கூட த்தான் இருக்கா… ” என்று புன்னகையோடு கூற… அவள் வாயை மூடாமல் பே வென பார்ப்பதை அங்கே உணர்ந்தான் கௌதம்…

“டேய் பிசாசு… எப்படிடா?” ஆச்சரியமாக கேட்ட சௌமினிக்கு அவனது சிரிப்பு ஒன்றே பதிலாக இருக்க… மறுபுறத்தில் ஆச்சரியத்தில் மூழ்கினாள் சௌமினி…

“கலக்கறே சந்துரு… சரி எப்போ அவ வீட்ல பேச போற?” முன்னமே அவன் வகுத்து வைத்திருந்த திட்டத்தை பற்றி அவள் கேட்க…

“ம்ம்ம் பேசிடனும்… எப்படியும் இந்த ஊட்டி ட்ரிப் அவங்க சைட்ல குழப்பத்தை உண்டாக்கும் சௌம்ஸ்… ஒரு டூ டேஸ் போகட்டும்… எப்படி போகுதுன்னு பார்க்கலாம்… ” யோசனையாக அவன் சௌமினியிடம் கூற…

“கௌஸ்… டூ டேஸ் உன்னோட ஆதிரா தனியாவா? அது சரி வராதுடா… தப்பு… ” அவள் மனதுக்கு அது மிகவும் தவறென்று பட்டது… அதை நேராக அவனிடமே உரைத்தும் விட…

“இல்ல சௌம்ஸ்… என்னை பற்றி உனக்கு தெரியாதா? சிச்சுவேஷனை என்னோட கண்ட்ரோல்ல கொண்டு வர வேண்டும் என்றால் இந்த மாதிரி கம்பல்ஷன் இருந்தே ஆக வேண்டும்டா… நீ ஒர்ரி பண்ணிக்காத… ” என்று முடித்து விட…

“கௌஸ்… உண்மைய சொல்லு… எனக்கு தெரியாம நீயா எதுவும் ப்ளான் பண்ணலை தானே?” தவிப்பாக கேட்ட சௌமினியின் வார்த்தைகளில் மனம் ஏதோ செய்தது அவனுக்கு!

“சௌம்ஸ்… என்னடா இப்படி கேட்கற?”

“இல்லடா… எனக்கு ஏதோ மனசுக்கு தப்பா படுது… நானும் பொண்ணு தானே? ரிஸ்க் எடுத்துடாதே கௌஸ்… ” அவனது நாடியை பர்பெக்ட்டாக பிடித்து வைத்திருந்தவளின் புத்திசாலித்தனம் அவனை எப்போதுமே சரியாக எடைபோட்டு விடுமே!

“நோ ஒர்ரிஸ் சௌம்ஸ்..நான் பார்த்துக்கறேன்… ”

அப்போதும் அவன் அந்த சூழ்நிலையை அவனது கட்டுபாட்டில் கொண்டு வர வேண்டும் என்று நினைத்தானே தவிர வேறு ஒன்றையும் ப்ளான் செய்யவில்லை! ஆனால் சூழ்நிலைகள் அவனது கையை மீறும்போது என்னவாகும் என்பதை அவன் கணக்கிட மறந்திருந்தான்!

சற்று யோசனை செய்த சௌமினி…

“கௌஸ்… நீ நல்ல பையனாவே இருடா… ” என்று அவனிடம் வேண்டியவள்…

“வருண் மாதிரி… ” என்று மனதுக்குள் நினைத்து கொண்டாள்… பிரிந்து விட்டாலும் மறக்கவே முடியாத வருணை எப்படி மறப்பது என்று அவளுக்கு புரியவில்லை…

மறந்தால் தானே நினைக்கணும் மாமா

நினைவே நீதானே நீதானே!

செல்பேசியை வைத்தவள் மனதுக்குள் இளையராஜா சுகமாக இசைக்க… காதலின் வலியையும் நிதானமாக அசைபோட்டு கொண்டிருந்தாள் சௌமினி… எப்போதும் போல!

கௌதம் அவசரமாக பாலை எடுத்து கொண்டு அவள் இருந்த அறைக்கு செல்ல… உடையை மாற்றிக்கொண்டு படுக்கையில் குறுக்கி கொண்டு படுத்திருந்தாள்… பற்கள் கிட்டித்து கொண்டிருக்க… கைகள் நடுங்கி கொண்டிருந்தது…

“ஆதிம்மா… இந்த பாலை குடித்து விட்டு படுடா… ” அவளுக்கு அருகில் அமர்ந்து அவளை எழுப்ப முயல… அவளால் எழுவதற்கும் முடியவில்லை… வாயடித்தாலும் குளிர் அவளை வெகுவாக பாதித்திருந்தது!

ஆதியை அவனது நெஞ்சின் மேல் போட்டு கொண்டு பாலை புகட்ட… ஒரு வழியாக குடித்து முடித்தாள்… ஆனாலும் அவளது நடுக்கம் நிற்கவில்லை… வேறு வழி இல்லாமல் அவளை தன்னோடு இறுக்கி அணைத்து கொண்டு கைகளை தேய்த்து விட… அந்த அணைப்பில் அவளது நடுக்கம் சிறிது சிறிதாக குறைந்தது!

அவளது பாதுகாப்புக்கென அவளை அணைத்தது அவனை முழுவதுமாக புரட்டி போட… இரவும் தனிமையும் மழையும் குளிரும் தூண்டி விட… ஆதிரையின் மென்மையை உணர்ந்தவனுக்கு மனதுக்குள் ஆயிரம் ஆட்டம் பாம் ஒரு சேர வெடித்தது!

அவன் தன்னை மறந்து அணைப்பை இறுக்கி கொண்டே இருக்க… வெளியில் குளிர் குறைந்து உள்ளுக்குள் குளிரெடுக்க ஆரம்பித்தது ஆதிரைக்கு… !

அது வரை அவனது காற்று புகாத அணைப்பில் வாகாக ஒண்டி கொண்டிருந்தவள் குளிர் குறையவும் அவனை விட்டு விலக முயல… அவனையும் மீறி அவளை இழுத்து அணைத்தவன் கட்டுபாட்டை மீறி கழுத்தில் முத்தமிட… சிலிர்த்தது… !

ஆதிரைக்கு உடல் வெளிப்படையாகவே நடுங்கியது… !

வெளியே பெய்து கொண்டிருந்த பேய் மழை,உள்ளே பெய்து கொண்டிருந்த காதல் மழை… தவித்து போனாள் பேதை!

விட்டு விலகு என்று அறிவு உத்தரவிட்டாலும் மனம் அவனது அண்மை வேண்டுமென தவிக்க… முத்த சூட்டில் மெதுவாக கண்கள் சொருகியது அவளுக்கு!

தன்னிலையை மறந்து அவளுக்குள் மூழ்கி விட துடித்த மனதை கண்டு அதிர்ந்தான் கௌதம்… அந்த சூழ்நிலையில் அது எவ்வளவு பெரிய தவறென்பதை உணர்த்தியது அவனது அறிவு!

ஒரு அப்பாவி பெண்ணை, சூழ்நிலையை பயன்படுத்தி அவள் தன் மேல் கொண்ட காதலை பயன்படுத்தி கொள்வதா? அறிவு கேள்வி கேட்க… அவனது இறுக்கம் தளர்ந்தது… எதுவுமே உறுதியாக தெரியாத நிலையில், தன்னுடைய குறிக்கோள் இவ்விதமாக வழிமாறுவது அவனுக்கே குற்ற உணர்வை கொடுக்க… தன்னை தானே திட்டி கொண்டான்.

அதிலும் அவன் எண்ணியது என்ன? இப்போது செய்து கொண்டிருப்பது என்ன? என்று மனசாட்சி கோபமாக கேட்டு வைக்க… பற்றி எரிந்து கொண்டிருந்த மோகத்தீ கொஞ்சமாக அணைய துவங்கியது…

அவன் மனதை அடக்கி விலக முயல… ஆதிரையால் அந்த விலகலை தாள முடியவில்லை… எழுந்து கொள்ள முயன்ற அவனை சட்டென கை பிடித்து தடுக்க பார்க்க… கௌதமுடைய முகம் சொல்ல முடியாத வலியில் ஆழ்ந்தது…

ஆதியை காணும் போதெல்லாம் எழுந்த வலி… இப்போது மனம் முழுக்க வியாபித்து இருக்க… அவன் அந்த இடத்தை விட்டு அகன்றே ஆக வேண்டிய கட்டாயத்தை கசப்பாக உணர துவங்கினான்…

எதையும் காட்டிகொள்ளாமல் ரஜாய்யை எடுத்து அவளுக்கு போர்த்தி விட்டவன்… விலகி போக முயல… தலை குனிந்து கொண்டிருந்த ஆதியால் அந்த சூழ்நிலையையும் கடக்க முடியவில்லை… வெட்கத்தையும் கடக்க முடியவில்லை… எதையும் பேச முடியாமல் அவனது கைகளை பிடித்து கொண்டவளின் கண்களை கௌதம் தீவிரமாக பார்க்க… அதில் தெரிந்த கரை காணவே முடியாத காதலின் அளவு அவனை அதிர வைத்தது…

விலக முடியாத காதல்… விலகவே விருப்பப்படாத காதல்! அவளை காயப்படுத்த போகிறோம் என்பதை அறிந்து கொண்டே அந்த சுழலில் மூழ்க துவங்கினான்… அந்த அப்பாவி பெண்ணின் காதலும் அதீத நம்பிக்கையும் அவனை சுழற்றியடித்து கொண்டிருந்தது…

அந்த ராட்சத காதல் அவனை சுழற்றி உள்ளே இழுத்து கொள்ள… அதற்கும் மேல் அவன் எதையுமே யோசிக்கவில்லை… அவளையும் யோசிக்கவிடவில்லை… !

error: Content is protected !!