பிட்காயின் பணப்பைகள் (Bitcoin Wallet) எத்தனை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அப்படி இருக்கும் பட்சத்தில், அத்தனை பிட்காயின் தனியர் திறவுகள் (Private Keys/Private Address) இருக்கும்.

இத்தனை Private Keys-யை கண்டுபிடிக்க முடியாது என்றில்லை.

ஒரு, பிட்காயின் பணப்பை create பண்ணும்பொழுது… Private Key சேர்த்து generate பண்ணப்படும். அதன்பிறகு, Private Key-லிருந்து… Public Key generate பண்ணப்படும். [ Private Key -> Public Key ]

இது Irreversible!

அதாவது, Public Key தெரிந்தால்… அதைக் கொண்டு Private Key கண்டறிய முடியாது.

இது [ Public Key -> Private Key ] கிடையாது.

இருந்தும் நிறைய Algorithms மற்றும் தளங்கள் இருந்தன, Public Key மற்றும் Hash Value கொண்டு Private Key கண்டறிய!

அப்படியென்றால், நல் கேரின் Public Key-யை வைத்து (இந்த தளங்கள் மற்றும் Algorithm உதவியுடன்) அவனது Private Key-யைக் கண்டறிய முடியும்.

ஆனால், அந்த தளங்களின் விவரங்கள் மற்றும் பெயர்கள் முழுவதும் சொல்ல வேண்டியது வரும். அது தமிழில் மாற்றுவது கொஞ்சம் கடினமாக இருந்தது.

மேலும், Hacking பற்றி நிறைய சொல்வது போன்ற ஒரு எண்ணம்.

ஆதலால், ஒரு பிட்காயின் பணப்பை மட்டும்!

Clear web

இது surface web என்றும் அழைக்கப்படும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் இணையம்.

அதாவது, normal browser (opera, chrome) கொண்டு… search engine (goggle, yahoo, bing) கொண்டு… தகவல்கள் தேடும் பொழுது, சில இணைய தளங்கள் search engine-களால் பரிந்துரைக்கப்படும்/பட்டியலிடப்படும் .

அந்த இணைய தளங்கள் அனைத்தும் indexed websites என்று சொல்லப்படும். அதாவது, இணைய பயன்பாட்டாளர்கள் தேடும் பொழுது, இந்தத் தளங்கள் அவர்களுக்கு தெரிய(visible) வேண்டும்.

Example : Wikipedia, youtube,

Dark Web

இணையத்தின் ஒரு சிறு பகுதிதான், dark web. 

Dark Web பயன்பாட்டிற்கு தனியான Browser உண்டு. அது TOR Browser (The Onion Router).

இதில் பயன்படுத்தப்படும் இணைய தளங்கள் .onion என்ற domain name கொண்டிருக்கும்.

நாம் பயன்படுத்தும் இணைய தளங்கள், .com, .in என்ற domain name கொண்டிப்ருபதுபோல!

பொதுவாக, ஒருவர் பயன்படுத்தும் கணினியின் IP Address தெரிந்தால்… அவரது இருப்பிடம் என்னவென்று தெரிந்து கொள்ள முடியும்.

ஆனால் dark web-ல், IP Address பயன்படுத்தி, ஒருவரது இருப்பிடத்தைக் கண்டறிய முடியாது.

காரணம்??

Normal Browser பயன்படுத்தும் பொழுது, ஒரு user ஒரு DATA REQUEST பண்ணும் பொழுது… அந்த REQUEST இப்படி போகும். (Internet-ல் ஏதாவது Search பண்ணும் பொழுது)

User Computer –> proxy server –> Internet

அதாவது User IP Address மறைந்து… அந்த Server IP Address மட்டுமே Internet-ல் தெரியும்.

இங்கேயும் IP Address மறைக்கப் படுகிறது. ஆனால், அந்த User முறைகேடான செயலில் ஈடுபட்டால்… Internet Service Provider-ரிடம் இருந்து உங்கள் இருப்பிடம் கண்டுபிடிக்கப்படும்.

எளிதும் கூட! ஏனென்றால், ஒரே ஒரு Proxy Server மட்டுமே!!

ஆனால், TOR Browser பயன்படுத்தினால், ஒரு User ஒரு DATA REQUEST பண்ணும் பொழுது… அந்த REQUEST இப்படி போகும்.

User Computer —> Network of relays (proxy servers) —> Internet

REQUEST பண்ற DATA நிறைய network of relays தாண்டிதான் internet போகும்.

அப்போ, ஒருவரின் IP Address மேல்… layer போல, நிறைய IP Address இருக்கும். ஆதலால்தான், dark web பயன்படுத்துவோர் தங்களது அடையாளத்தை, இருப்பிடத்தை மறைக்க முடிகின்றது.

Deep Web

இணையத்தின் முக்கால்வாசி, இந்த deep web-தான். இதிலிருக்கும் இணைய தளங்கள் normal search engine (Google, yahoo) பயன்படுத்தும் பொழுது கிடைக்காது. அதாவது பட்டியலிடப்படாது!

இதிலிருக்கும் இணைய தளங்கள்… invisible websites, not indexed websites என்று சொல்லப்படும்.

மற்றும் எல்லோராலும் இந்த இணைய தளங்களை பயன்படுத்த முடியாது. இதற்கென்று… Secure Login and Password உண்டு!

Please Click the Link…

WEB PICTURE-1

WEB PICTURE-2

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!