dhuruvam19
dhuruvam19
துருவம் 19
அங்கே அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா, மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டு கொண்டு இருந்தது. அந்த கூட்ட நெரிசலில் சிக்கி தவித்த, ஸ்டீஃபனும், ஃபெயிக்க்கும் ஒருவரை ஒருவர் பார்த்து புலம்ப தொடங்கினர்.
“இவ்வளவு கூட்டம் இருக்கும்னு சத்தியமா எனக்கு தெரியாது, உனக்கு தெரிஞ்சு இருக்கும் தான, ஏன் டா சொல்லல?” என்று அவனை வறுத்து எடுத்தான் faiq.
“ஆமா! என்னையவே கேளுங்க, உங்க வுட்பி முன்னாடி தான இருக்காங்க, அவங்களை போய் கேளுங்களேன்” என்று அவன் அதற்கு மேல் சிடுசிடுத்தான்.
அதற்குள் அவர்கள் மேல், தண்ணீர் விழவும் என்னவென்று பார்த்தால், அங்கே சாமி அருகில் உள்ள ஒருவர் எல்லோரின் மீதும் தண்ணீர் தெளித்து கொண்டு இருந்தார்.
இதில் கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷம் வேறு காதை பிளந்து கொண்டு இருந்தது. ஒரு வழியாக அந்த கூட்டத்தில் இருந்து இவர்கள் வெளியே வர, மொத்த கும்பமும் சாமியை நன்றாக தரிசித்த திருப்தியில், சந்தோஷமாக இவர்களை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றனர்.
வீட்டிற்கு வந்த பின்பும், கிழக்கை பார்த்து எல்லோரும் உட்காருங்க என்று ஒரு முதியவர் சொல்லவும், மொத்த குடும்பமும் அவ்வாறு அமர்ந்தனர். இவர்களும், அவர்களை போல் அமர்ந்தனர்.
அதற்குள், பாட்டு பாட சொல்லி உறவு பெண்மணி ஒருவர் கூறவும், அவர்களுக்குள் யார் பாடுவது என்று பேசிக் கொண்டு இருந்தனர்.
தன் வருங்கால கணவனும், தன் கல்லூரி தோழனும் படும் பாட்டை பார்த்து, மனதிற்குள் சிரித்து கொண்டே தானே பாட முடிவு செய்து பாட தொடங்கினாள்.
“என்ன தவம் செய்தனை” யசோதா என்ற பாடலை அனுபவித்து பாடிக் கொண்டு இருந்தாள் அவனின் வனி. அவன் அதை கேட்டு அதிர்ந்தான் என்றால், ஸ்டீஃபன் முழித்துக் கொண்டு இருந்தான்.
ஏனெனில், அவள் அவ்வளவு மென்மையாக பாடிக் கொண்டு இருந்தாள். பத்து நாட்களுக்கு முன், அங்கே நடந்த சம்பவத்திற்கு அவன் மனம், அந்த இடத்திற்கு அழைத்து சென்றது.
ஸ்டீஃபனிடம் இருந்து போன் கால் வரவும், உடனே faiq உடன் அங்கே விரைந்தாள். அங்கே, அந்த கேஷவ் நாயர் தங்களின் கட்சியின் திட்டப்படி தான், இங்கே நாங்கள் இவர்களை இங்கே ஆராய்ச்சி செய்ய அனுமதி அளித்து இருந்தோம்.
ஆனால், இவர்கள் அதை சரிவர செய்யாததால், இதை நிறுத்தி வைக்க அரசு ஆணையிடுகிறது. ஆகையால், நீங்கள் எல்லோரும் செல்லலாம் என்று மீடியாவிடம் அவன் பேசிக் கொண்டு இருந்ததை பார்த்து கொதித்து விட்டாள்.
அருகில் வந்த ஸ்டீஃபனை, பளார் என்று கன்னத்தில் அறைந்தாள்.
“அவன் பேசுற வரை, நீ என்ன டா செஞ்சிகிட்டு இருக்க?” என்று கோபம் குறையாமல் அவனை திட்டி தீர்த்தாள்.
“கொஞ்சம் அங்க பாரு, கலை அவங்க கிட்ட மாட்டிகிட்டு இருக்கா. இப்படி ஒரு சூழ்நிலையில், என்னால என்ன பண்ண முடியும்?”.
“அதுவும் நான் வேற நாட்டுக்காரன், இதுல நான் எப்படி உள்ள நுழைய முடியும்?” என்று பதிலுக்கு அவன் கத்தினான்.
நிலமையின் தீவீரத்தை உணர்ந்தவள், அவர்கள் இருவரையும் இங்கே நிறுத்தி விட்டு, இவள் நேராக மீடியாவின் ஆட்களை சந்தித்து பேச தொடங்கினாள்.
“இதை நீங்க லைவ் telecast பண்ணுறீங்க அப்படினா, நான் இங்க சில உண்மைகளை சொல்ல கடமைபட்டு இருக்கேன். தைரியமா, செய்ரேன்னு சொல்லுறவங்க மட்டும் இருக்கலாம், மத்தவங்க கிளம்பலாம்” என்று அவள் அழுத்தமாக கூறவும், அவளின் அந்த ஆளுமையில், எல்லோரும் அங்கேயே நின்று அதை லைவாக ஓட விட தொடங்கினர்.
“இதோ இங்க நிக்குறார் பாருங்க, மிஸ்டர் கேஷவ் நாயர், இவர் இப்போ ***** கட்சியை சேர்ந்த ஒரு கிரிமினல். இவர் அப்பா, ஒரு நியாயவாதி நாட்டுக்காக சில காலம், இராணுவத்தில் பணி புரிந்தவர்”.
“அப்படிப்பட்ட ஒருத்தருக்கு, இப்படி ஒரு தறுதலை மகன். இவருக்கு கட்சியில் mp பதவி வேண்டும், அதற்காக அந்த கட்சி என்ன சொல்லுதோ, அதை தவறாமல் கடை பிடிக்க கூடியவர்”.
“இப்போ கூட இந்த ஆராய்ச்சியை நிறுத்த, எங்க டீம் பொண்ணை இவர் கடத்தி இருக்கார்” என்று கூறவும், அங்கே ஒரே சலசலப்பு.
“டேய்! உங்களை எல்லாம் அப்போவே போக சொன்னேனே, போங்க. இல்லைனா, உங்க மீடியாவை இல்லாம எங்க ஐயா பண்ணிடுவார். மம்ம்.. இடத்தை காலி பண்ணுங்க டா” என்று அவர் போட்ட சத்தத்தில், மொத்த மீடியா ஆட்களும், இப்பொழுது அவர் மேல் கேள்வி எழுப்ப தொடங்கினர்.
“சார்! பதவி ஆசையில் தான் நீங்க அப்போ, இப்படி செய்தீர்களா? அப்போ, இந்த ஆராய்ச்சி வெற்றி அடைய கூடாதுன்னு உங்க கட்சி தான் தடுத்துகிட்டு இருக்கா?”.
“இந்த ஆராய்ச்சி பற்றி, அவங்க சொன்னது எல்லாம் நம்ம நாட்டுக்கு பெருமை சேர்கிற விஷயங்கள் தான இருக்கு. உங்க கட்சி ஏன், இதை தொடர்ந்து செய்ய விடாம தடுக்குது. என்ன உள்நோக்கம்? எதற்காக இந்த செயல்?” என்று கேட்க தொடங்கினர்.
அதற்கு அவரால், பதில் கூற முடியவில்லை. இதற்கு பதில் கூறினால், அடுதுபென்ன நடக்கும் என்று அவர் நன்கு அறிவார். ஆகையால், அந்த இடத்தில் இருந்து தப்பி செல்ல எண்ணி, தன் அல்லகைகளுக்கு கண்களால் சைகை செய்யவும், அவர்கள் அடுத்து செய்த தகராறில் அந்த இடமே போர்க்களம் ஆனது.
அதற்குள், ஸ்டீஃபன் அவர்களிடம் மாட்டிக் கொண்டு இருந்த கலைசெல்வியை மீட்டு இருந்தான். அவள் பயத்தில் அரை மயக்கத்தில் இருந்ததால், அவளுக்கு எதுவும் தெரியவில்லை.
இதற்குள், காவியஹரிணி குறிப்பிட மீடியா ஆட்களிடம் இந்த ஆராய்ச்சி பற்றி முழுமையாக சொல்லி முடித்து இருந்தாள்.
அதன் பிறகு, அங்கே போலீஸ் அதிகாரிகள் வரவும், இவர்கள் உடனே அங்கு இருந்து புறப்பட்டு சென்றனர். வீட்டிற்கு வந்தவள், முதலில் கலைச்செல்வியின் மயக்கம் தெளிய வைத்து அவளை, அவளுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் படுக்க வைத்தாள்.
அதன் பின்னர், தாத்தாவிடம் எல்லாவற்றையும் எடுத்துக் கூறி, நாளை முதல் இன்னும் மூன்று மாதத்திற்கு அங்கே ஆராய்ச்சி வேலை இருப்பதை கூறி, தன் சந்தோஷத்தை பகிர்ந்தாள்.
“பார்த்தியா நாச்சி! என் பேத்தி என் மாமனார் ஆரம்பிச்ச ஒரு நல்ல விஷயத்தை எப்படி நல்லபடியா முடிச்சு இருக்கான்னு” என்று அவர் பாராட்டவும், அவருக்கும் பெருமை பிடிபடவில்லை.
பின்னர், அவரின் தந்தை ஆரம்பித்ததை இப்பொழுது பேத்தி, அவரின் கனவை அல்லவா நிறைவேற்றி வைத்து இருக்கிறாள்.
“தாத்தா இன்னும் மூணு மாசம் போகனும், எல்லா விஷயமும் தெரிஞ்சிக்க. அதனால, இன்னும் முழுசா வேலை முடியல”.
“இந்த மூணு மாசமும், யாரும் எங்களுக்கு எந்த வித குடைச்சலும் கொடுக்க கூடாது. அதுக்கு நீங்க தான் எல்லா ஏற்பாடும் செய்யணும், முக்கியமா உங்க சிநேகிதர் மகன் வராம பார்த்துக்கோங்க” என்று அழுத்தமாக கூறிவிட்டு மாடி சென்றாள்.
அங்கே நின்று இருந்த faiq, ஸ்டீஃபன் இதை பார்த்து தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர். தாதா, அவர்களையும் வாழ்த்திவிட்டு, உடனே படுக்க செல்லுமாறு பணித்தார்.
அதன் பின் வந்த மூன்று மாதங்களும், அந்த நால்வர் மத்தியிலும் வேலை வேலை மட்டுமே, அவர்கள் கண்ணிலும், கருத்திலும் பதிந்து இருந்தது.
இதற்கிடையில், வீட்டில் கோவில் திருவிழாவுக்கு, அவர்கள் உறவினர்கள் கூடி இருந்தனர். அதில் அவளின் வயது ஒத்த அத்தை மகள்கள், மாமன் மகள்கள் எல்லோரின் பார்வையும், faiq மீது இருக்க, இவள் அவனை அவர்கள் கண்ணில் பட்டு விடாமல், இழுத்துக் கொண்டு ஓடினாள் ஆராய்ச்சி இடத்திற்கு.
அவளின் அந்த உரிமை, அவனுக்கு பிடித்து இருந்தது. இவளை சீண்ட, சில சமயம் இவனே அவர்களிடம் சிக்கி கொள்ளுவான்.
“அங்க இன்னும் அவ்வளவு வேலை இருக்கு, இங்க என்ன பேச்சு. போங்க டி உள்ள, அத்தை உங்களை கோபிடுறாங்க” என்று இவள் சொன்னால், அவர்கள் பதிலுக்கு முறைத்து சண்டைக்கு வருவர்.
“ஏய்! என்னடி கொஞ்சம் அவர் relax ஆ எங்க கூட பேசுறார், அது பொறுக்காதே உனக்கு” என்று பொரிய தொடங்கி விடுவர்.
அவ்வளவு தான் அடுத்து, எளிதில் இவளை சமாளிக்க முடியாது. அவர்களின் அம்மாமார்கள் வந்து விளக்கி விடும்வரை, அந்த இடத்தில் பெரிய யுத்தமே நடந்து விடும்.
“இன்னொரு தடவை, உன்னை அவங்களோட பார்த்தேன், முதல் டெட் பாடி நீ தான்” என்று தன்னை மிரட்டி தான் செல்வாள்.
அந்த மூன்று மாதம் கடும் உழைப்பில், அவர்களின் ஆராய்ச்சிக்கு மிகுந்த வரவேற்பு கிடைக்கவும், அந்த வெற்றியை அவள் கொண்டாடிய விதம், இன்றுவரை அவனால் மறக்க முடியவில்லை.
அத்தை மகள்களுடன், இவள் தான் சண்டையிட்டாள் என்று வேறு யாரும் சொல்லி இருந்தால் நம்பி இருப்பானோ என்னவோ. கண்முன்னே, பார்த்துவிட்டு இப்பொழுது அவர்களுடன் அவள் ஆடும் ஆட்டம் அவனை வாய் பிளக்க செய்தது.
“பாஸ்! என்னது இது? சத்தியமா இது ஹரிணி தானா! நம்பவே முடியல பாஸ்!” என்று ஸ்டீஃபனும் அதிர்ந்து போய் பார்த்தான்.
பாட்டும் அப்படி, ஆட்டமும் அப்படி.
அட்ரா அட்ரா நாக்க முக்க, டங்கமாரி, டன்டணக்கா என்று வரிசையாக குத்து பாடல்களுக்கு, அவர்களோடு சேர்ந்து அந்த ஆட்டம்.
ஏற்கனவே, இப்படி ஒரு பாடலோடு தான் துபாயில் இவளை கவனிக்க தொடங்கி இருந்தான். இப்பொழுது அதை நினைத்து பார்த்தவன், மனதிற்குள் சிரித்துக் கொண்டான்.
மென்மையாக அவள் பாட்டை பாடி முடிக்கவும், எல்லோரும் அதில் லயித்து, அவர்களை அறியாமல் கை தட்டி, அவளை வாழ்த்தினர்.
என்ன தான் எல்லோருடைய வாழ்த்தை பெற்று இருந்தாலும், அவள் கவனம் faiq மீது தான் இருந்தது. அவனோ, அவள் மீது பார்வையை பதித்தவன், வேறு எங்கும் பார்வையை திருப்பாது அவளையே குருகுருவென்று பார்த்தான்.
அவனின், அந்த பார்வை ஏதோ செய்ய அவள் அவனிடம் என்னவென்று கேட்டாள். அவனோ, மேலே வருமாறு அழைத்தான்.
அவளோ, எல்லோரும் இருக்கும் பொழுது, தான் மட்டும் எப்படி எழுந்து செல்வது என்று நினைத்து, அவனிடம் மறுத்தாள். அவனோ, விடாகொண்டனாக அவளை மேலே வருமாறு, சைகையில் கூறிவிட்டு மேலே சென்றான்.
கீழே, அவள் பாட்டியின் காதில் மட்டும், தான் மேலே செல்ல போவதை கூறிவிட்டு, யாரின் கண்களுக்கும் அகப்படாமல் மேலே அவன் அறை கதவு முன் நின்றாள்.
கதவை தட்ட, அவள் கையை உயர்த்தவும், அவன் அவளை உள்ளே இழுத்து, கதவை சாத்தினான். உள்ளே அவளை இழுத்த வேகத்திற்கு, அவன் அவள் முகம் முழுக்க, தன் முத்திரைகள் பதித்து அவளை திண்டாட செய்து விட்டான்.
“என்ன faiq இது! வீட்டில் எல்லோரும் இருக்கும் பொழுது, இப்படி செய்றீங்க!” என்றவளை இப்பொழுது எரிச்சலாக பார்த்தான்.
“என்ன வனி இது? நானும் இங்க நீ வந்ததில் இருந்து பார்கிறேன், அப்படி செய்யாதீங்க, இப்படி செய்யாதீங்க, எல்லோரும் பார்க்கிறாங்க, இப்படியே சொல்லிகிட்டு இருக்க”.
“பிளீஸ் வணி, it is irritating” என்று அவன் கூறவும், அதுவரை இருந்த மோன நிலை களைந்து, அவள் அவனை தீர்க்கமாக பார்த்தாள்.
“faiq! நான் ஆரம்பத்தில் இருந்தே உங்களுக்கு இங்க இருக்கிற culture பற்றி சொல்லி இருக்கேன். இங்க இப்படி தான் நாம இருக்கணும், இடத்துக்கு தகுந்த மாதிரி நடந்துகிறது தான் புத்திசாலித்தனம் faiq” என்று அவள் கூறவும், அவன் அவளையே கூர்ந்து பார்த்தான்.
“ஓகே! தென் let’s break up! என்னால் இங்க நீ சொல்லுற மாதிரி இருக்க முடியும்னு தோணல. அண்ட் உண்ணாலையும் அங்க இருக்கிற culture கூட ஒத்து போக முடியாதுன்னு புரியுது”.
“தாங்க்ஸ் ஃபார் everything! நான் இன்னைக்கே கிளம்புறேன், இனி இங்க இருந்து உன்னையும், உங்க தாத்தாவையும் கஷ்டபடுத்த எனக்கு விருப்பம் இல்லை, பை” என்று கூறிவிட்டு உடனே தன் பொருட்களை எல்லாம் சேகரித்து கொண்டு வெளியேறினான்.
அவன் வெளியேறும் வரை திக் பிரமை பிடித்தது போல் இருந்தவள், அவன் சென்ற பின் உடைந்து அழ தொடங்கினாள். அவளால், அவன் சென்றதை தாங்க முடியவில்லை.
அவனை தடுக்க வேண்டும் என்ற எண்ணம் கூட தோன்றாமல், தன் மேல் மட்டுமே பழி சொல்லிவிட்டு சென்றவனை அப்பொழுது வெறுத்தாள்.
நாட்கள் இப்படியே செல்ல, அவளின் மனதை மாற்ற எல்லோரும் எவ்வளவு முயன்றும், அவர்களால் மாற்ற முடியவில்லை.
இதற்கிடையில், faiq தன் வாரிசு என்று அறிவித்து, அவனை துபாய் பிரின்ஸாக அறிவித்து இருந்தார், அவனின் தந்தை. அதற்கு காரணம், மதுரையில் அவன் ஆராய்ச்சி செய்த விஷயம் தான்.
அவன் தாய்க்காக, அவன் போட்டு இருந்த சபதத்தில் வெற்றி பெற்றாலும், அவனால் முழுமையாக சந்தோஷம் அடைய முடியவில்லை. மனதின் வெறுமை, அதை அனுபவிக்க விடவில்லை என்பது தான் உண்மை.
இந்த ஆறு மாதங்களை நினைத்து பார்த்து, அந்த பாலைவனத்தில் படுத்து இருந்தவன், காலையில் கண் விழிக்கும் பொழுது, அவன் முன் பூர்கா அணிந்த பெண் ஒருத்தி நிற்கவும், அவள் கண்களை உற்று பார்த்தவனுக்கு, வந்து இருப்பது யார் என்று தெரிந்து விட்டது.
“ஹே வணி! வந்துட்டியா!” என்று கூறி அவளை பிடித்து இழுத்து, தன் மேல் போட்டு கொண்டான்.
“விடுடா பக்கி! எப்படி டா நான் தான்னு கண்டு பிடிச்ச?” என்று பூர்காவை விளக்கி கொண்டே கேட்டாள் அவனின் வனி.
“உன் கண்ணாலே நீ என்னை கட்டி போட்டதை, நான் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா டி. ஆமா! நீ எப்படி வந்த? நான் இங்க இருக்கேன் அப்படினு, உனக்கு யார் சொன்னா?” என்று கேள்விகளை அடுக்கினான்.
“நேத்து நைட்டு வந்துட்டேன், ரசாக் அண்ணா தான் இங்க வர ஏற்பாடு செய்தாங்க” என்று அவள் கூறிக் கொண்டு இருக்கும் பொழுது தான், ஒன்றை கவனித்தாள்.
“டேய்! நீ தமிழ் ல பேசின இப்போ! எப்படி டா?” என்று விழி விரித்து கேட்கவும், அவன் கண் சிமிட்டினான்.
“எனக்காகவா டா நீ படிச்ச!” என்று அவள் கேட்க, அவன் அதற்காகவும் தான் என்றான்.
“நான் கண்டுபிடிச்ச விஷயம் அங்க என்னனு, உனக்கு தெரியும் தான. முக்கியமா, நான் கஷ்டபட்டு படிக்க ஆரம்பிச்சதே அதுக்காக தான்” எனவும், அவள் பெருமையாக அவனை பார்த்தாள்.
இருவரும், தங்களின் இணையை வந்து சேர்ந்த மகிழ்ச்சியில், மோன நிலையில் இருந்தனர். இன்னும் எவ்வளவு நேரம் தான் இப்படியே இருக்க போகிறார்கள், என்று நினைத்த ரசாக், தன் தொண்டையை செருமி தானும் இங்கு இருப்பதாக கூறினான்.
“நீ இன்னும் கிளம்பலையா!” என்று கேட்ட faiqகை முறைத்தான்.
“ஏன் டா சொல்லமாட்ட? இப்போ நீ பொறுப்பான பதவியில் இருக்க தெரியுமா, அதுக்கு தகுந்த மாதிரி கொஞ்சம் யோசி டா”.
“உங்க அப்பா, நாலு நாளாக போன் போட்டு, என்னை கொண்ணு எடுக்கிறார். நானும், என் பொண்டாட்டி, பிள்ளைகளை பார்க்க போக வேண்டாமா டா” என்றவனை பார்த்து முறைத்தான்.
“என்னது! நாலு நாளாக இங்கே தான் இருக்கீங்களா!” என்று அதிர்ச்சி பொங்க கேட்டாள்.
“அட நீ வேற மா, நாலு நாளாக அவங்க அப்பா தான் போன் பொடுறார். நாங்க இங்க வந்து, எப்படியும் ஒரு பத்து நாள் இருக்கும் மா” என்று சொல்லவும், faiqகை பார்த்து முறைத்தாள்.
“போட்டு கொடுக்குறியா டா! இரு டி உனக்கு அங்க, வீட்டுல ஆப்பு ready பண்ணிடுறேன்” என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டான்.
இங்கே எல்லாவற்றையும் பேக் செய்து, அவனுக்கு உதவி புரிந்து, அன்று போல் இங்கு ஒரு ஹெலிகாப்டர் வரவும், பல பரிசோதனைக்கு பின் ஏறி அமர்ந்தனர்.
அடுத்த மாதத்தில், மதுரையில் இவர்கள் திருமணம் இந்து முறையிலும், அது முடிந்து துபாயில் சின்ன reception மட்டும் வைத்து நடத்தி முடித்தனர்.
இந்த சமயத்தில், அவன் செய்த ஒரு செயல் தான் எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவனின் தந்தையும், மனைவியும் இதை எதிர்பார்க்கவில்லை.
தொடரும்…