Eedilla Istangal 19.1

Eedilla Istangal 19.1

நேற்றே கேட்பான் என எதிர் பார்த்தக் கேள்வி, இன்று கேட்கிறான் என்று நினைத்தாள்.

“தாரா, பதில் சொல்லு” என்று சரத்தின் குரல் அழுத்தமாக ஒலிக்கவும், மற்ற மூவரும் தாராவைப் பார்த்தனர்.

“சாரு மேரேஜ்க்கு போயிருந்தேன்” என்று சொல்லிவிட்டுச் சாப்பிட ஆரம்பித்தாள். 

“இது தெரியும்ல சரத். அப்புறம் ஏன் கேட்கிற?” என்று ராஜசேகர் தாராவிற்குப் பரிந்து கொண்டு வந்தார்.

“மேரேஜ் மார்னிங்தானா?? அப்புறம் ஏன் ஆஃப்டர்நூன் மீட்டிங் அட்டன் பண்ணலை?” என்று அடுத்தக் கேள்வி கேட்டான்.

“வெதர் நல்லா இருந்தது. அதான்… கொஞ்ச நேரம் கார்ல ரைட் போயிருந்தேன்”

“டாக்டர்ஸ் மீட்டிங் இருக்குன்னு தெரிஞ்சும்… ரைடு போற அளவுக்கு என்ன அவசியம் வந்தது??” 

தாராவின் முகம் ‘பதில் சொல்ல விருப்பமில்லை’ என்ற உணர்வைப் பிரதிபலித்தன. 

“தாரா, அவன் கேட்கிறான்ல பதில் சொல்லு” என்று கீதா சரத்திற்காகப் பேசினார். 

தாராவையே பார்த்துக் கொண்டிருந்த ராஜசேகர், “சரத், சாப்பிடறப்போ சாப்பிட விடு. எதுக்கு இத்தனை கொஸ்டின்? அப்படி உனக்கு கேட்கனும்னா, ஹாஸ்ப்பிட்டல்-ல வச்சிக் கேளு?” என்று அழுத்தமாகச் சொல்லி, அவனை அடக்கி விட்டார். 

ஒரு ஐந்து நிமிடத்திற்கு யாரும், யாரையும் பார்க்காமல், எதுவும் பேசாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். 

அதன் பின், 

“நான் கிளம்புறேன்-ம்மா” என்று சொல்லி, எழுந்து கொள்ளப் போன தாராவிடம், 

“ஒரு நிமிஷம் நில்லு தாரா” என்றவர், தன் அலைபேசியை எடுத்து ஒரு பையனின் புகைப்படத்தைக் காட்டினார். 

இது வழக்கமாயிற்று! 

இந்த பதினைந்து நாட்களில், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இது நிகழ்கிறது. 

அவர் சளைக்காமல் புகைப்படம் காட்டுவதும், அவள் சலிப்புடன் மறுப்பதும்… தொடர்கிறது. 

இன்றும் அதே!

ஒரு நொடி பார்த்த பின், மறுத்துவிட்டு மருத்துவமனை சென்றுவிட்டாள்.

*****

நாட்காட்டியில் ஒரு ஆறு நாட்கள் நகர்ந்திருந்தன.

?தாராவும் தேவாவும் கிடைக்கும் சொற்ப நேரங்களில் அலைபேசியில் பேசிக் கொண்டார்கள்.

பல நேரங்களில் முற்றிலும் காதலாய் பேச ஆரம்பித்திருந்தாள், தாரா! 

அந்த நேரங்களில் மிகக் கவனத்துடன் பேசினான், தேவா.

காதல் ஆசையில், அவள் கொஞ்சம் அதிகப்படியாகப் பேசினால், அவன் அமைதியாகக் கடந்து சென்றான். 

‘என்று இவன் தன்னிடம் இப்படிப் பேசுவான்?’ என்ற காதல் ஏக்கம் தாராவினுள் வந்திருந்நது!!

நேரச் செலவிடல்கள் இருந்த போதிலும், தேவா சொல்லப் போகும் ஒரு வார்த்தையில் மட்டுமே நிரம்ப வேண்டும் என்று அடம்பிடித்துக் கொண்டிருக்கிறது. – காதல் உண்டியல் is feeling silly with காதல் உண்டியல்.?

*****

நாட்காட்டியில் அடுத்து ஒரு இரண்டு நாட்கள் கழிந்தன. 

அன்று ஞாயிற்றுக் கிழமை. 

காலையில் மருத்துவமனை சென்று வந்து, மதியம் வீட்டில் இருந்தாள், தாரா. 

அந்நேரம், கீதா உள்ளே வந்தார். 

ஓய்வில் இருந்தவளிடம் வந்தமர்ந்து கொண்டு, ஓயாமல் திருமணம் செய்து கொள் என வற்புறுத்தினார். 

சில நேரம் மெனக்கெடல் செய்து பதிலளித்தாள். 

பல நேரம் மௌனமாய் இருந்து பதில் மறுத்தாள். 

மொத்தத்தில், கீதா பேசியதில், தாரா ஓய்ந்து போயிருந்தாள். 

அவர் சென்ற பிறகு, தாராவிற்குத் தேவாவைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. 

அது, ஓய்ந்து போன மனதிற்கு, ஒத்தடம் கொடுப்பது போல் அல்லவா!

எண்ணம் வந்ததும், கீதாவிடம் சென்று, ‘கொஞ்ச நேரம் வெளியே போய்ட்டு வர்றேன்’ எனச் சொன்னாள்.

அவர் நிறைய கேள்விகள் கேட்டார். அதையெல்லாம் சமாளித்துவிட்டே கிளம்ப முடிந்தது.

ஆனாலும் கிளம்பிவிட்டாள். 

*****

தேவாவின் அலுவலகம் 

தேவாவின் அலுவலகம் இருக்கும் கட்டிடத்தின் கீழே வந்தவள், ஒருகணம் தயங்கினாள். 

‘தேவா வேலைப் பளுவில் இருந்தால் என்ன செய்ய?’ என்றொரு தயக்கம். 

இவ்வளவு தூரம் வந்தாயிற்று! இனி ஒரு முறை பார்த்துவிட்டே செல்ல வேண்டும் என நினைத்து, படியேறினாள். 

அதே ஒற்றை வழிப்பாதை போன்ற படிக்கட்டுகள். பின், அவன் வசிக்கும் தளம். 

அத்தளத்தின் நடைகூடத்தில் நடந்து வந்தவளுக்கு, தேவா அலுவலகம் முன், மிஸ்டர் அண்ட் மிஸஸ் பாஸ்கர் தம்பதியினர் நிற்பது தெரிந்தது. 

‘இன்று ஏன் இவர்கள் நிற்கிறார்கள்?’ என யோசித்துக் கொண்டே அருகில் சென்றாள்.

அவர்கள் அவளைப் பார்த்ததும், தெரிந்தவர்கள் என்ற ஸ்நேகத்தில் ஒரு புன்னகையும் தந்தாள்.

“குட் ஆஃப்டர்நூன் தாரா” என்றார்கள். 

“குட் ஆஃப்டர்நூன்” என்று சொன்னாள்.

“என்ன விஷயம் தாரா?”

“அது…” என்றவள், தேவாவின் அலுவலகத்தைக் காட்டி… “தேவாவைப் பார்க்கணும்” என்றாள். 

“எனி டொனேஷன் ஆர் கேம்ப் ரிலேட்டட்”

“இல்லை. சும்மாதான்”

அவள் அப்படிச் சொன்னதும், அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

பின், மிஸஸ் பாஸ்கர் பேச ஆரம்பித்தார். 

“லிஸன் தாரா! நீயும் தேவாவும் பேசறது, எங்களுக்குத் தெரியும். பட், அதெல்லாம் அவனோட ஃபிரீ டைம்ல இருக்கனும். நாட் இன் வொர்க் டைம்” என்றார் கறாராக! 

“இப்போ…” என்றாள் கேள்வியாக! 

“இப்போ, அவன் ஒரு நியூஸ் சேனல் இன்டெர்வியூல இருக்கான். அன்ட் நெக்ஸ்ட் ஒரு இம்பார்டென்ட் வொர்க் இருக்கு”

“ஓ!” என்று சொன்னவளுக்கு ஒரு மாதிரி ஆயிற்று! 

“ஸோ வொர்க் அவர்ஸ்ல அவனை டிஸ்டர்ப் பண்ணாத. அன்ட் டோன்ட் மிஸ்டேக்கன் அஸ்” என்று சொல்லி முடித்தார். 

“ஐ அம் ஸாரி. ஹாலிடே, ஸோ தேவா ஃப்ரீயா இருப்பாங்கன்னு நினைச்சேன்” என்று சொல்லித் திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.

அவர்கள் சொல்லுவது சரியென்று தோன்றியது. ஆதலால் அவள் எவ்வித வாக்குவாதமும் செய்யவில்லை.

அவள் சென்றதும்,

“வாங்க பாஸ்கர்” என்று சொல்லி, மிஸஸ் பாஸ்கர் உள்ளே சென்றார்.

அலுவலகத்தின் உள்ளே… 

அவர்கள் சொன்னது போல் ஒரு செய்தி தொலைக்காட்சிக்கான நேர்காணலில் இருந்தான்.

மொத்த நேர்காணலும் கல்விச்ச்சுமை மற்றும் சிறப்பு வகுப்புகள் பற்றியது. 

நேர்காணல் முடிந்துவிட்டது.

“ஓகேவா” என்று கேட்டான். 

“ஓகே தேவா” என்று சொல்லி, அவனிடம் சிலதைக் காட்டினார்கள். 

“பாடப் புத்தகங்களே வழிவிடுங்கள் மாணாக்கர்கள் முன்னேறி செல்லட்டும்… இப்படிக் கேப்ஷன் போட்டுக்கோங்க” என்று கேட்டுக் கொண்டான். 

“ஓகே தேவா” என்று சொல்லிக் கிளம்பத் தயாரானார்கள்.

இதற்கிடையே, மிஸ்டர் அண்ட் மிஸஸ் பாஸ்கர் இருவரும் அவன் அருகில் வந்தார்கள்.

“முடிஞ்சிருச்சு அங்கிள். ஒரு பைவ் மினிட்ஸ்ல கிளம்பிடலாம்” என்றான்.

‘சரி’ என்பது போல் மிஸ்டர் பாஸ்கர் தலையாட்டினார். 

“ஏன் தேவா? அந்த டாக்டரை வரச் சொல்லியிருந்தியா?”

இந்தக் கேள்வி கேட்கப்படும் போதே, தேவாவிடம் சொல்லிவிட்டு நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் விடைபெற்றுக் கொண்டனர்.

“என்ன கேட்கிறீங்க அங்கிள்? சரியா கவனிக்கலை” என்று கேட்டுச் சில கோப்புகளை எடுத்து வைத்தான். 

“தாராவை வரச் சொல்லியிருந்தியா? அதைத்தான் கேட்கிறாரு!”

“இல்லையே ஆன்ட்டி. ஏன் கேட்கிறீங்க?”

“அவ வந்திருந்தா” 

“இங்கேயா அங்கிள்??”

“ம்ம்ம்” 

“இப்போ எங்க?” 

“இன்டெர்வியூ போய்கிட்டிருக்கு. ஸோ டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்-ன்னு சொன்னோம். அவ கிளம்பிட்டா”

“டிஸ்டர்ப்… ஏன் அந்த வேர்டு யூஸ் பண்றீங்க ஆன்ட்டி? அதுவும் தாராக்கிட்ட…” என்று ஒரு கடுகளவு கோபத்தை முகத்தில் காட்டினான். 

‘டீசன்டா அவாய்ட் பண்றேன்’ என்று சொன்னவனா இவன்?! என்பது போல், அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். 

“அங்கிள், நான் எல்லாம் எடுத்து வச்சிட்டேன். ஒரு டென் மினிட்ஸ் டைம் கொடுங்க” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென வெளியேறினான்.

அவன் சென்றதும்,

“பாஸ்கர்” 

“ம்ம்ம்”

“ஐ திங்க் தேவா, தாராவை லவ் பண்றான். இல்லையா பாஸ்கர்?”

“யெஸ், யூ ஆர் கரெக்ட்” என்று சொல்லிவிட்டு, அடுத்து கிளம்ப வேண்டிய இடத்திற்கு ஆயத்தமாயினர்.

வெளியே சென்றவன்…

அவன் வசிக்கும் தளத்தின் படிக்கட்டு வழியே, கீழே பார்த்தான். அவள் இரண்டாவது தளத்தின் படிக்கட்டுகளில் இறங்கிச் செல்வது தெரிந்தது.

கடகடவென இறங்க ஆரம்பித்தான்.

மூன்று நொடிகளில் ஓடி வந்து, அவள் முன் மூச்சு வாங்கியபடி முகத்தைக் காட்டி நின்றான். 

சீராக விட முடியாத சுவாசங்களின் ஊடே, சிரித்தான்.

சின்னதாய் ஒரு சிரிப்பு சிரித்து, அவனைக் கடக்கப் போனாள்.

சட்டெனக் கைநீட்டி பாதையை மறைத்தவன், “என்னைப் பார்க்கத்தான வந்தீங்க. அப்புறம் ஏன் பார்க்காம போறீங்க?” என்றான். 

“இதோ” என்று அவனைக் காட்டி, “பார்த்துட்டேன்ல. ஸோ போறேன்” என்று அவன் கரத்தைத் தட்டி விட்டாள். 

“பேச வேண்டாமா?” என்று கேட்டு, மீண்டும் பாதையின் குறுக்கே வந்து நின்றான். 

அக்கணம், ‘எப்ப பார்த்தாலும் படிக்கட்டுல இப்படியே நிக்கிறது. லவ் பண்ண வேற இடம் கிடைக்கலையா? வழிவிடுங்க” என்றொரு குரல்… 

யாரிது? முதல் முதலாக தாரா தேவாவைப் பார்க்க வரும்பொழுது, இதேமாதிரி படிக்கட்டில் அவள் கைபிடித்து நின்றானே! 

அப்பொழுது கூட நான்கைந்து பேர் கடந்து சென்றார்களே! அவர்களில் ஒருவர்!! 

அவர் அப்படிச் சொன்னதும், இருவரும் ஒதுங்கி நின்று வழிவிட்டார்கள். 

அவர் சென்றதும்,

சிரித்துக் கொண்டே, “நாம ரெண்டு பேரும் லவ் பண்றோம்னு தப்பா நினைச்சிட்டாரு” என்றான்.

“அவர் நினைச்சதுல பாதி சரிதான” என்று சொல்லி, படி இறங்கினாள். 

அவள் பின்னேயே அவனும் இறங்கினான். 

இருவரும் கட்டிடத்தின் வெளியே வந்தார்கள். பூட்டிய ஒரு கடையின் முன்பு நின்று கொண்டார்கள். 

அவள் முகமே சரியில்லாதது போல் இருந்தது. 

“என்னாச்சு தாரா?”

‘ஒன்றுமில்லை’ என்பது போன்று இருபுறமும் தலையசைத்தாள். 

“அங்கிள் ஆன்ட்டி சொன்னதை நினைச்சி, பீல் பண்றீங்களா?”

“அவங்க சொன்னது கரெக்ட்தான?” என்று சொல்லிவிட்டு, வேறு திசை நோக்கிப் பார்வையைத் திருப்பிக் கொண்டாள். 

‘இன்னும் எத்தனை நாள்தான் இப்படி?’ என்ற எண்ணம், தாராவின் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. 

வேறெங்கும் பார்வையைச் செலுத்தாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். 

இரண்டு நிமிடங்கள் ஓடிய பின், 

“தாரா, எனக்கு ஒரு டூ டேய்ஸ் டைம் கொடுங்க. நான், உங்க விஷயத்தில ஒரு முடிவெடுக்கணும்” என்றான் அவள் மனதைப் படித்தவனாக!

“என்ன முடிவு?” என்று கேட்டு, அவனிடம் பார்வையைத் திருப்பினாள். 

“எனக்காக, தாரா யார்கிட்டயும் பேச்சு கேட்கக் கூடாது. அன்னைக்கு சரத் கேள்வி கேட்டாருன்னு சொன்னீங்க. இன்னைக்கு அங்கிள் ஆன்ட்டி… இப்படி. எனக்கு அது பிடிக்கலை”

“… “

“திரும்பத் திரும்ப ஃபோன்ல பேசறது, மீட் பண்றது… இட் வில் இன்கிரீஸ் யூவர் எக்ஸ்பெக்டேஷன். கரெக்டா?”

“… “

“யெஸ் ஆர் நோ… இந்த ரெண்டுல, ஏதாவது ஒரு பாயிண்ட்ல நான் தெளிவா இருக்கணும்” என்றான் தீர்க்கமாக! 

“என்… என்னைப் பிடிக்கலையா?” என்றாள் தயக்கத்துடன். 

ஓரிரு நொடித் தாமதத்திற்குப் பின், “தாராவைத் தேவா-க்கு பிடிச்சிருக்கு” என்றான். 

தடாலென்ற… தேவாவைக் கட்டிப்பிடித்துக் கொள்ள வேண்டும் என்றொரு காதல் ஆசை, தாராவினுள் வந்து சென்றது! 

“பட், லைஃப் பார்ட்னர், மேரேஜ்… அப்படின்னு வர்றப்ப நான் கொஞ்சம் யோசிக்கணும்” என்றான். 

“ம்ம்ம்” 

“டு பி வெரி பிராங்க், நான் மேரேஜ் வேண்டாம்னு இருந்தேன். பட், லவ்… லவ் பெயிலியர்… இதெல்லாம் எக்ஸ்பெக்ட் பண்ணவேயில்லை”

“ம்ம்ம்”

“நீங்களா எதையும் எக்ஸ்பெக்ட் பண்ணிக்காதீங்க. நான் முடிவெடுத்திட்டு கால் பண்றேன்” 

“ம்ம்ம்” என்று தாரா சொல்லுகையில், 

மிஸ்டர் பாஸ்கர்…. ‘தேவா’ எனக் கூப்பிட்டார்.

திரும்பிப் பார்த்தான். 

“தேவா, வீ ஆர் ரெடி” என்று மிஸஸ் பாஸ்கர் சொன்னார்.

“ஒன் மினிட் ஆன்ட்டி” என்று சொல்லியவன்,

“தாரா, ரொம்ப இம்பார்ட்டன்ட் விஷயமா போறோம். சம் லேன்ட் இஸ்யூஸ் அன்ட் பிள்ளைங்களோட எஜுகேஷன்… கொஞ்சம் அரசியல்… கொஞ்சம் அரசாங்கம்… நிறைய ஆர்க்யூமென்ட்ஸ்… இதெல்லாம் பார்க்கணும்” என்று கடகடவென சொன்னான். 

மீண்டும், “தேவா” என்று மிஸஸ் பாஸ்கர் அழைத்தார்.

“இதோ வர்றேன் ஆன்ட்டி” என்றவன், “ஆக்ச்சுவலா… ஒரு ரெண்டு நாள் இந்த வொர்க்கா அலையனும். அதான் டைம் கேட்டேன்” என்று படபடவென்று சொன்னான்.

“இட்ஸ் ஓகே தேவா”

பின்னால் காத்திருக்கும் பாஸ்கர் தம்பதியினரைப் பார்த்தவாரு, “எதுக்காக என்னைப் பார்க்க வந்தீங்க? வீட்ல, மேரேஜுக்கு ஃபோர்ஸ் பண்றங்களா?” என்று கேட்டான். 

அவளிடமிருந்து பதில் வாராமல் போனதால், நிதானமாக அவளைத் திரும்பிப் பார்த்தான். 

அவள் தோற்றம் கண்டவன், “கஷ்டமாயிருக்கா?? ஸாரி தாரா, கண்டிப்பா போயாகனும் அதான்… ” என்றான், அவள் தலைகோதி தேற்றும் தொனியில்! 

தாரா சுதாரித்துக் கொண்டாள்.

ஒதுங்கி நின்று ஒத்துழைப்பு தருவது தானே தன் காதல்! இது என்ன ஒத்துழையாமை இயக்கம்! 

உடனே, “உங்ககூட டைம் ஸ்பென்ட் பண்ணலாம்னுதான் வந்தேன். ஸோ கஷ்டமாதான் இருக்கு தேவா. பட், நீங்க அங்க போகலைன்னா…. இதைவிடக் கஷ்டப்படுவேன். அந்த வேலையை முடிச்சிட்டு வாங்க. எந்த எக்ஸ்பெக்டேஷனும் இல்லாம வெயிட் பண்றேன்” என்று தன் காதலைத் தெளிவு படுத்தி, தெரியவும் படுத்தினாள்.

அவனின் முகத்தில் ஒரு திருப்தி! 

“ஒரே ஒரு ரெக்வஸ்ட்” என்றாள். 

“சொல்லுங்க”

“கொஞ்சம் கேர்ஃபுல்லா இருங்க”

“ம்ம் ஓகே! பட், சின்ன வயசிலருந்தே எனக்கு இது பழகிருச்சி தாரா”

“ஓ!” என்றாள் ஒன்றும் தெரியாதவள் போல! 

மீண்டுமொரு முறை அவனை அழைத்தனர்.

“போங்க, நான் வெயிட் பண்றேன்” என்று சொல்லி, அவனை வழி அனுப்பி வைத்தாள்.

அவர்கள் சென்றதும், தாராவும் கிளம்பினாள். 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!