Eedilla Istangal – 20.1

திரும்பத் திரும்ப தாரா முயற்சி செய்தும் தோல்வியிலே முடிந்தது.  

என்ன செய்ய? யாரிடம் கேட்க? என்ற கேள்வி வருகையில் பாபியின் நியாபகம் வந்தது. உடனே பாபியை அலைபேசியில் அழைத்தாள்.

பாபி அழைப்பை ஏற்றவுடன்… 

“ஹலோ பாபி… ஒரு… ” என்று தாரா அவசரமாகச் சொல்லும் முன், 

“ஹாய் தாரா, எப்படி இருக்கீங்க?” என்று பாபி கேள்வி கேட்டான். 

“ஆங் பாபி… தேவா ஃபோன் பண்ணாங்களா?” என்று பதற்றம் நிறைந்த பதில் கேள்வி கேட்டாள். 

“என்னாச்சு தாரா? இவ்வளவு டென்ஷனா இருக்கீங்க” 

“அது… தேவா ஃபோன் பண்ணாங்களா?” என்றாள், அவன் என்ன பேசுகிறான் என்று கவனிக்காமல்! 

“பண்ணான் தாரா. ஐ திங்க்… நேத்து பண்ணான். எங்கயோ டூ டேய்ஸ் போறதா சொன்னான்”

“இல்லை பாபி. நான் அதைக் கேட்கலை. அதுக்கு அப்புறமா ஏதாவது?” என்றவள் குரல் நடுங்க ஆரம்பித்தது. 

“என்னாச்சு தாரா? ஏன் இவ்ளோ ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கீங்க?”

“என்கிட்டயும் சொன்னாங்க. இன்னைக்கு நிறைய டைம் கால் பண்ணியிருக்காங்க. பட், ஐ மிஸ்ட் இட். இப்போ திரும்பக் கால் பண்ணா… நாட் ரீச்சபிள்-னு வருது” 

“பயப்பிடாதீங்க. ஏதாவது ஜாப் ரிலேட்டடா போயிருப்பான்”

“அவங்க அக்கா-க்குத் தெரியுமா? இல்லை, பாஸ்கர் கபிள்ஸ்…” – எதிரில் என்ன பேசுகிறான் என்று கருத்தில் கொள்ளாமல், கேள்வி கேட்டாள். 

“நான் கேட்டுச் சொல்றேன் தாரா”

“ம்ம், கொஞ்சம் பாஸ்டா. ஐ அம் ரியலி டையிங்”

“டோன்ட் வொரி தாரா. நான் பார்க்கிறேன்” என்று அழைப்பைத் துண்டித்தான்.

அந்த அழைப்பு முடிந்ததும், மீண்டும் தேவாவிற்கு அழைத்துப் பார்த்தாள். 

எந்த பலனுமில்லை! 

பதினைந்து நிமிடங்கள் கழித்து, பாபியின் பெயர் தாராவின் அலைபேசித் திரையில் வந்தது. 

பட்டென எடுத்தாள்.

“சொல்லுங்க பாபி”

“அவங்களுக்கும் எதுவும் தெரியலை. பட், பாஸ்கர் அங்கிள் ஆன்ட்டி ஃபோனும் ரீச் ஆகலை. ஸோ மூணு பேரும் ஏதாவது வொர்க் ரிலேட்டடா போயிருப்பாங்க” என்றான். 

“ஓ!” என்றவள் ஒருதுளி கண்ணீர் சிந்தினாள். 

“நான் சாருகிட்ட கொடுக்கிறேன். கொஞ்சம் நேரம் பேசுங்க” என்று அருகிலிருந்த சாருவிடம், அலைபேசியைக் கொடுத்தான்.

“என்னாச்சு தாரா?”

“ஏன் சாரு, இவன் இப்படிப் பண்ணறான்?” என்று அழ ஆரம்பித்தாள். 

“இப்போ என்னாச்சு? ஜஸ்ட் ஃபோன் அட்டன் பண்ணலை. அதுக்கு எதுக்கு இப்படி ரியாக்ட் பண்ற??”

“உனக்குப் புரியலை. புரியவும் புரியாது. நான் ஃபோன் வைக்கிறேன்”

“தாரா கொஞ்சம் நேரம் என்கிட்ட பேசு. சரியாயிடுவ” 

“இப்போ வேண்டாம் சாரு. என்னவோ பயமா இருக்கு” 

“பயப்பிடாம இரு. நாளைக்கு, பாபியை அவனோட ஆஃபிஸ்ல கேட்டுப் பார்க்கச் சொல்றேன்” 

“ம்ம்ம்”

“பயப்படமா தூங்கு தாரா”

“ம்ம்ம்” என்று சொல்லி அழைப்பு துண்டிக்கப்பட்டது.

கண்கள் நிறைந்து, கண்ணீர் கன்னங்கள் மேல் வழிந்தோடியது. 

மீண்டும் ஒருமுறை தேவா அலைபேசி எண்ணிற்கு முயற்சித்துப் பார்த்தாள். எந்த முன்னேற்றமும் இல்லை.  

அழுதாள்.

மீண்டும் முயற்சித்தாள்.

அடுத்து அழுதாள். 

மாற்றி மாற்றி இது நடந்தது.

நேரம் சென்று கொண்டே இருந்தது.

ஒரு கட்டத்திற்கு மேல், அப்படியே அலைபேசியைக் கையில் வைத்தபடியே உறங்கிப் போனாள். 

******

அடுத்த நாள் காலை 

வழக்கம் போல் எழுந்தாள். யாரிடமும் இன்னலைச் சொல்லி, இதயத்தை இளைப்பாற்ற முடியாது. 

தனக்குத் தானே நம்பிக்கைக்கு கொடுத்துக் கொண்டாள். 

மருத்துவமனை சென்றாள். பணி புரிந்தாள். வீட்டிற்கு வந்தாள். 

கிடைக்கும் இடைவெளியில், அலைபேசி எடுத்துக் கொண்டு அமர்ந்துவிடுவாள். 

தேவாவை அழைத்துப் பார்ப்பாள். குருஞ்செய்தி அனுப்புவாள். 

‘முடிவு எடுக்கிறேன் என்று சொன்னானே? என்ன முடிவு எடுத்திருப்பான்??’ என்று வேறு மனம் குழம்பியது.

ஒவ்வொரு நாளும் இதே நடந்தது.

பாபி, தேவாவின் அலுவலகத்தில் கேட்டுச் சொன்ன தகவல்… தேவா ஒரு ஆறு நாட்கள் விடுமுறை விண்ணப்பத்திருந்தான்.

அது ஓர் நிம்மதி! ஆனால், எங்கு இருக்கிறான் எனத் தெரிய காதல் மனம் ஆசைப்பட்டது. 

ஒவ்வொரு நாளாக கடந்து செல்லச் செல்ல…. 

இதே போல்தான் அம்மாவும் கஷ்டப் பட்டிருப்பார்களோ? என்ற எண்ணம் வந்தது. 

அம்மாவின் நிலைமை புரிந்தது! அவ்வளவுதான்!! 

ஆனால், அதற்காகவெல்லாம் தன் காதலைக் கை விடமுடியாது. 

காதலன் காரியம் யாவிலும் கை கொடுக்க வேண்டும். 

அதுதான் என் காதல்! 

வாழ்க்கைக்கான அம்மாவின் வரையறைகள் வேறு! 

தன் வரையறைகள் வேறு அல்லவா?? 

_இப்படியெல்லாம் எண்ணிக் கொண்டாள். 

இந்த புரிதல்கள்… எண்ணங்கள்… வலிகள்… வேதனைகள்… என்று ஒவ்வொன்றாய் சேர்ந்து, ஒட்டுமொத்தமாகத் தேவாவின் மேல் கோபமாக வளர்ந்து நின்றது. 

பல சமயங்களில்… தேவா அழைத்தால், திட்டித் தீர்த்து விட வேண்டும் என்பது போன்ற ஒரு கோபம் வரும்.

சில சமயம், அவன் அழைத்தாலே போதும் என்று தோன்றும். 

ஆக மொத்தத்தில்… தேவாவை நினைத்து நினைத்து தன்னை நிந்தித்துக் கொண்டிருந்தாள். 

ஏழு நாட்களுக்குப் பின், 

என்றைக்கும் போல் மருத்துவமனையில் இருந்து வந்தாள். 

இரவு உணவை முடித்தாள். 

பின், தன் அறைக்கு வந்தாள்.

இரவு உடைக்கு மாறிக்கொண்டு, அலைபேசியை எடுத்து தேவாவின் இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தினாள். 

எந்த மாற்றமும் இல்லை. அதே தொடர்பு எல்லைக்கு அப்பால் என்ற செய்தி வந்தது. 

தலையணையில் முகம் பதித்து, முசுமுசுவென சற்று நேரம் அழுதுவிட்டு, உறங்கிவிட்டாள்.

இரவு 1:43 

தாராவின் அலைபேசி ஒலி, அவள் தூக்கத்தைக் கலைத்தது.

படுத்திருந்தபடியே எடுத்துப் பார்த்தாள்.

திரையில் தேவாவின் பெயர்.

எழுந்துவிட்டாள்! 

தேவாவா? இல்லை, வேறு யாருமா? என்றொரு பயம், பதற்றம் வந்தது. 

அந்தப் பயத்துடனே அழைப்பை ஏற்றாள். மெதுவாக, அலைபேசியைக் காதிற்குக் கொடுத்தாள்.

“ஹலோ” என்றாள் உயிர் வடிந்துவிட்ட குரலில்.

“ஹாய் தாரா” என்ற தேவாவின் குரலின் முழுதும் குதூகலம் கொட்டிக் கிடந்தது.

இத்தனை நாள், எப்படி வேதனையில் உழன்று கொண்டிருந்தோம், இவன் இப்படி உற்சாகமாக இருக்கிறானே? _என நினைத்துக் கோபம் வந்தது, தாராவிற்கு!! 

“ஹே தாரா. என்ன பேச மாட்டிக்கிறீங்க?” என்றான்.

“டோன்ட் யூ ஹேவ் பிரைன்?” என்றாள் அழுத்தமாக, அடிக்குரலில்! 

மறுமுனையில் தேவா: தன்னைச் சுற்றி நிற்பவர்கள் காதுகளில் இது விழுந்திருக்குமோ என்றொரு பார்வைப் பார்த்தான்! பின், அவர்களிடமிருந்து சற்றுத் தள்ளி வந்தான். 

“தாரா, நான் தேவா பேசறேன்”

“டோன்ட் யு ஹேவ் பிரைன்?” என்று மீண்டும் குரல் உயர்த்தினாள். 

தேவா எப்படி உணர்கிறான் என்று அவன்தான் சொல்ல வேண்டும்! என்னவொன்று அருகில் யாருமில்லை என்றொரு ஆறுதல் அவனுக்கு!

“தாரா என்ன சொல்றீங்க? சரியா கேட்கலை”  

“சரியாதான் கேட்டிருக்கு. இருந்தாலும் கேட்கிறேன்… டோன்ட் யூ ஹேவ் பிரைன்??” 

“என் மேல கோபமா?” என்றான், உடனே அவள் நிலை உணர்ந்து! 

“எங்க போறேன்னு சொல்லிட்டு போக முடியாதா?” என்றாள் உக்கிரமாக! 

“தாரா”

“உயிரே போயிருச்சித் தெரியுமா?” என்று உச்சரித்து உடைந்துவிட்டாள். 

“தாரா… தாரா” 

மறுமுனையில் : அவள் அழுகையின் குரல் மட்டுமே கேட்டது. அருகில் இருந்தாலாவது ஆறுதல் கூறலாம். இப்பொழுது என்ன செய்ய முடியும்? என்று தேவா அரற்றினான்! 

“தாரா… ப்ளீஸ் அழாதீங்க தாரா?” 

“ஒரு ஃபோன் பண்ண முடியாதா தேவா?” என்று அழுகையின் ஊடே அவள் குரல் வந்தது. 

“தாரா… நான் ஃபோன்…”

“பேச வேண்டாம் தேவா. நீங்க பேசவே வேண்டாம்!!”

“தாரா ப்ளீஸ்! “

“சேஃப்தான??”

“பர்ஸ்ட் அழாதீங்க”

“ஐ ஹோப் யூ ஆர் டூயிங் குட்!! ரைட்??” 

“யெஸ்… பட்… “

“சந்தோஷம். ஃபோன வச்சிடறேன்” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.

மீண்டும் தலையணையில் விழுந்தாள். அவனிடம் பேசியாயிற்று! 

கோபமும் கொண்டாயிற்று! 

அழுகை மட்டும் நிற்பதற்கான அறிகுறியே இல்லை! ஏங்கி ஏங்கி அழுதாள்!! 

ஒரு ஐந்து நிமிடத்திற்குப் பின், அழுகை நின்றது. 

எழுந்து அமர்ந்து, அவனுக்கு அழைப்பை ஏற்படுத்தினாள்.

“ஹலோ” என்றான், முழுதாக ஒரு நொடி முடியும் முன்!

“ஹலோ தேவா” என்றாள் எப்போதும் போல்.

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீங்கதான் பேசினீங்களா? நான் வேற யாரோன்னு நினைச்சிட்டேன்” 

“ஸாரி தேவா” என்று அழுதாள்.

“தாரா, நான் சும்மாதான் சொன்னேன். பர்ஸ்ட் அழறதை நிறுத்துங்க”

“ம்ம்ம்” 

“கண்ண நல்லா துடைச்சிக்கோங்க” 

“ம்ம்ம்” என்று புறங்கைகளால் கன்னங்களில் இருந்த கண்ணீரைத் துடைத்தாள். 

“இனிமே அழக்கூடாது”

“ம்ம்ம்! அகைன் ஸாரி தேவா”

“இப்படியா ஸாரி கேட்ப்பீங்க!?” என்றான் அவளை இலகுவாக்கும் முயற்சியாய்! 

“டஸன் டைம்ஸ் ஸாரி”

“ம்ம்ம், இது நல்லா இருக்கு”

அவன், தன்னிடம் பேசும் முறையில் ஏதோ ஒரு மாற்றம் இருப்பது போல் தெரிந்தது, தாராவிற்கு! 

அவள் யோசிக்கும் முன், “ஓகே, சொல்லாம போனதுக்காக நானும் ஸாரி கேட்டுக்கறேன்” என்றான். 

” ‘ஸாரி’ நாட் எனஃப் தேவா! பெனால்டி இருக்கு”

“எங்க போலாம்னு சொல்லுங்க. கூட்டிட்டுப் போறேன்”

“இப்போ எதுவும் தோணலை. எப்போ தோணுதோ அப்போ சொல்றேன்” 

“ஏன் தோணலை?” 

“செவன் டேஸா, உங்களைப் பார்க்கலையா… ஸோ மைன்ட்… ஒருமாதிரி… ஐ வாஸ்… ஐ.. ஸோ… ஐ டோன்ட் நோ ஹவ் டு சே” என்று குழம்பினாள்.

“நீங்க சொல்லைனாலும், எனக்குப் புரியும் தாரா” என்றான்.

சட்டென்று, “நான் தேவாவை ரொம்ப மிஸ் பண்ணேன்” என்றாள், குரலில் எண்ணிலடங்கா ஏக்கங்கள் காட்டி! 

“ம்ம்ம், இப்போதான் உங்க மெசேஜ், மிஸ்ட் கால்ஸ் பார்த்தேன். ஸோ ஐ கேன் அன்டர்ஸ்டான்ட்”

“அதைப் பார்த்தப்புறமாதான் ஃபோன் பண்ணீங்களா?”

“ச்சே ச்சே அதைப் பார்க்கலைனாலும் ஃபோன் பண்ணியிருப்பேன்”

“ஒன்னு சொல்லணும்னு தோணுது தேவா! டு யூ மைன்ட்?”

“நெவர் மைன்ட்”

“ஐ வான்ட் டு ஹக் யூ ஸோ மச் ரைட் நௌவ்” என்றவள் குரலில், அளவுகோல் வைத்து அளவிட முடியா ஆசை! 

அவள் ஆசையை, ரசித்து ருசித்து அசைபோடும் மௌனம் – அவனிடம்! 

“தேவா… இப்படிச் சொன்னதுக்காக நீங்க என்னைய தப்பா நினைச்சாலும், ஐ டோன்ட் மைன்ட்” 

“நான் தப்பா நினைப்பேன்னு சொன்னேனா??”

சட்டென தாராவிற்குத் தோன்றியது, ‘இவனுக்கு என்னாச்சு?’ என்றுதான். 

“தாரா” 

“ம்ம்ம், எங்க போயிருந்தீங்க?”

“அன்னைக்கே சொன்னேனே. லேன்ட் இஸ்யூ… சைல்ட் எஜுகேஷன்”

“பட் ஃபோன் ஏன் அட்டன் பண்ணலை?” 

“இது டிரைபள் ஏரியா ப்யூபிள் ப்ராப்ளம்! ஸோ ஃபாரெஸ்ட் ஏரியா. அதான் சிக்னல் ப்ராப்ளம்”

“ஓ”

“ஸடன் பிளான். அதான் ஃபோன் பண்ணி, உங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணலாம்னு நினைச்சேன். பட், முடியலை”

“மெசேஜ் அனுப்பிருக்கலாமே”

“ஐ சென்ட். பட் டெலிவர் ஆகலை போல”

“எப்போ ரிட்டர்ன்?”

“நாளைக்கு மத்தியானம் சென்னை”

“ம்ம்ம்”

“ஈவினிங் மீட் பண்ணலாம். சரியா தாரா?”

“இப்போவே பார்க்கணும்”

“முடிஞ்சா, சீக்கிரமா மீட் பண்ண ட்ரை பண்றேன்”

“இப்போவே தேவாவைப் பார்க்கணும்” என்று அடம்பிடித்தாள். 

மறுமுனையில் : தேவா, இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போது, மிஸ்டர் அண்ட் மிஸஸ் பாஸ்கர் தேவாவை அழைத்தார்கள். 

அவன் காதில், அவர்கள் குரல் விழவேயில்லை.

உடனே, “தேவா கம்ப்ளீட்டா பிளாட் ஆயிட்டான். கரெக்டா??” என்றார் மிஸ்டர் பாஸ்கர். 

“யெஸ் பாஸ்கர், யூ ஆர் கரெக்ட். உங்களைப் போல” என்று சிரித்தார் மிஸஸ் பாஸ்கர். 

“கொஞ்ச நேரம் பேசிட்டு வரட்டும்” என்று சிரித்துப் பேசிக் கொண்டே சென்றார்கள்.

மீண்டும் அலைபேசி அலைவரிசையில்,

தாரா, ‘உடனே பார்க்க வேண்டும்’ என்று சொல்ல, தேவா ‘நாளை’ என்று சமாதானம் செய்து கொண்டிருந்தான். 

“நாளைக்கு”

“இப்போ… ப்ளீஸ்” என்று சொல்லும் போதே, அவன் அழைப்பைத் துண்டித்து விட்டான். 

‘ச்சே ஏன் கட் பண்ணான்?? லிமிட் கிராஸ் பண்ணிட்டேனா?’ என்று தாரா தன்னைத்தானே நொந்து கொண்டாள்.

திடீரென்று, தாரா அறையின் இருளைக் கிழிக்கும் ஒளி, அவள் அலைபேசியில் இருந்து வந்தது. 

பார்த்தாள். அலைபேசித் திரையில் அன்பிற்குரியவன் பெயர்.

ஆனால், இம்முறை வீடியோ கால் செய்திருந்தான்

அழைப்பை ஏற்றாள்.

“போதுமா, பார்த்தாச்சா?” என்றான் எடுத்தவுடனே. 

“ம்ம்ம்” என்று மட்டும் சொன்னாள். 

“ரொம்ப அடம்பிடிப்பீங்களா??” 

“அப்படியெல்லாம் இல்லை தேவா” 

“சரி, அதை விடுங்க! நானும் தாராவைப் பார்க்கணும். ஸோ லைட் ஆன் பண்ணுங்க”

“ய்யா, ஒன் மினிட் தேவா” என்று சொல்லி, இரவு விளக்கை ஒளிரச் செய்தாள்.

“தேவா இப்போ தெரியுதா?” என்று கேட்டவளைப் பார்த்தவன்,

ஒரு நிமிடம் இமைக்க மறந்தான். அழுது அழுது ஈரமான விழிகள்! அதிலும் அந்த நனைந்த இமைகள்!! 

சற்று நேரத்திற்கு முன்பு, அவள் சொல்லிய ஆசையைச் செய்ய வேண்டும் போல் ஒரு ஆழமான ஆவல், அவனிடம்! 

அதாவது, அவளைக் கட்டிப்பிடித்துக் கொள்ள வேண்டும் என்று ஆசை கொண்டான். 

“தேவா” என்று இரண்டு மூன்று முறை தாரா அழைத்த பின்னரே, அவன் அந்த நொடிக்கு வந்தான். 

“ஒன் மினிட் தேவா” என்றவள் மெத்தையில் இருந்து இறங்கினாள். 

அவள் அறையின் கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு, பால்கனி வந்தாள்! 

அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து கொண்டாள். 

சற்று தூரத்தில் நீலக்கடல். 

இருளுக்குள் இரைச்சலை வாரி இறைத்தன கடல் அலைகள்! 

இதயத்தினுள் இன்னிசை வடிக்க          இருவரின் காதல் பேச்சுக்கள், ஆரம்பமாயின!! 

“வெளியே வந்தாச்சா? பின்னாடி கடலா?” 

“ம்ம்ம், பால்கனி. Sea breeze நல்லா இருக்கும். உங்களுக்குப் பின்னாடி என்ன இருக்கு??” 

“பாரஸ்ட் ஏரியாதான! ஸோ நிறைய மரம்… செடி கொடி…” 

“வாவ்” 

“என்ன வாவ்? நிறைய கொசுக் கடி” 

சிரித்துக் கொண்டே, “தேவா, நாளைக்கு மீட்டிங் எதுக்காக? சும்மா பேசறதுக்காகவா??” என்று கேட்டாள். 

“இல்லை! ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்”

“என்ன விஷயம்?” 

“நாளைக்கு நேரா பார்க்கிறப்போ சொல்றேனே”

சொல்ல வேண்டிய அவசியமே இல்லை!

என்ன சொல்லப் போகிறான் என்பதை, அவன் பேசும் முறையை வைத்து, எளிதாகக் கணிக்க முடிந்தது, தாராவால்! 

இருந்தும் அவனிடம் விளையாட ஆரம்பித்தாள். 

காதல் விளையாட்டு! 

“உங்க முடிவா-ங்க?” என்றாள். 

“ஆமாங்க”

“அப்போ, த்ரீ லிட்டில் வேர்ட்ஸ் சாங் பிடிச்சிருச்சா-ங்க?”

“இல்லைங்க! பிடிக்கவே இல்லைங்க”

“உங்க லவ்வரை நினைச்சுக்கிட்டு கேளுங்க! பிடிக்கும்”

“அப்படியும் கேட்டுப் பார்த்துட்டேன்-ங்க. சாங் பிடிக்கலை. ஆனா பாருங்க! அவங்களைப் பிடிச்சுப் போயிருச்சு”

எத்தனை முறைதான் ‘பிடிக்கும்’ என்ற வார்த்தைக்குள் காதலை மறைத்து வைப்பாய் என்று தேவாவை அடிக்க வேண்டும் போலிருந்தது, தாராவிற்கு! 

இன்னும் விளையாட வேண்டும் என்று நினைத்தாள். 

“அப்புறம் நாளைக்கு ஈவினிங் எங்கங்க மீட்டிங்?? ரூஃப் டாப் ரெஸ்டாரன்ட்டா-ங்க??”

“வேண்டாம்! அதுக்கு எனக்கும் ஒத்து வராதுங்க” 

“அப்புறம் எங்கங்க??” 

“ஏதாவது கேஃபே?!”

“ரெட் ஹார்ட் பலூன்ஸ் உண்டாங்க?”

“இல்லைங்க. என் பட்ஜெட்ல வராது! ஸோ அதெல்லாம் எதிர் பார்க்காதீங்க”

“அந்த சீரியல் லைட்ஸ்-ங்க”

“அதான் கஃபேயில லைட் இருக்கும்ல அப்புறம் எதுக்குங்க?”

“அட்லீஸ்ட் ஒரு கேக்”

“காஃபி ஷாப்ல காஃபி குடிப்போம்… எதுக்குங்க கேக்?”

அவனும் விளையாட ஆரம்பித்து விட்டான்! 

அதே காதல் விளையாட்டு!! 

“தேவா”

“ம்ம்ம்”

“உங்களுக்கு எத்தனை தடவை ஃபோன் பண்ணேன் தெரியுமா??” என்று மீண்டும் ஆரம்பித்த இடத்தில் வந்து நின்றாள். 

“அந்த ஹிஸ்டரியைத்தான் என் கால் ஹிஸ்டரி சொல்லுதே”

“மெசேஜ் டைப் பண்ணி பண்ணி, விரல் நெகமெல்லாம் வலிக்குது தேவா”

“அதுக்குத்தான் அப்பவே ஸாரி கேட்டாச்சே தாரா”

“அவ்ளோதானா??”

“சரி, சிங்கிள் கிஸ் ஆன் யுவர் பிங்கர் டிப். வலி எல்லாம் சரியாயிடும்” என்றான் சாதரணமாக! 

“ம்ன்” என்று விழி விரிய திரையில் தெரிபவனைப் பார்த்தாள். 

அவள் முகமாற்றத்தை மௌனமாக ரசித்தான். 

“என்ன சொன்னீங்க தேவா?”

“சிங்கிள் கிஸ் ஆன் யுவர் பிங்கர் டிப்” என்று சாவகாசமாகச் சொன்னான். 

“நான் கொடுத்துக்கவாங்க?? ” என்று சந்தேகமாகக் கேட்டாள். 

“ஐய்யோ, நீங்க வேற! யாருக்காக டைப் பண்ணீங்களோ, அவங்கதான் கொடுக்கணும்”

“ஓ!”

“நாளைக்கு அவங்களைப் பார்த்தா மறக்காம கேளுங்க”

“கேட்கிறேன்-ங்க. ஆனா, அவங்க இதெல்லாம்… நம்பிக்கை இல்லைங்க”

“கேட்டுப் பார்த்தா-தான தெரியும்”

இன்னும் பேசினார்கள்! 

காதலியாய் அவள் பேசினாள்! 

காதலனாய் அவன் பேசினான்!! 

?எவ்வளவு பேசுகிறான்? ஆனால், தான் நிரம்பத் தேவையான ஒரு வார்த்தை பேசுகிறானா?! – காதல் உண்டியல் is feeling disappointed with தேவா!! ?

“தூக்கம் வருது தேவா” என்று சொன்னாள் சற்று நேரம் பேசியபின்! 

“எத்தனை நாள் கழிச்சுப் பேசறேன். ப்ளீஸ் தூங்காதீங்க”

“இத்தனை நாள் தூக்கமே வரலை தேவா. இன்னைக்குத்தான் நிம்மதியா தூங்குவேன்”

“சரி. நாளைக்குப் பார்க்கலாம்”

“ம்ம்ம்” என்று அலைபேசியை வைக்கப் போனவளிடம், 

“தாரா தாரா”

“ம்ம்ம் சொல்லுங்க”

“நானும் தாராவை ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணேன்” 

“தெரியுது! அதானா இந்த நைட்-ல ஃபோன் பண்ணியிருக்கீங்க” என்றாள் நக்கலாக! 

சிரித்துக் கொண்டான். 

இருவரும் அழைப்பைத் துண்டித்துக் கொண்டனர். 

தாரா… 

சிலுசிலுவென அடிக்கும் அஞ்சன நேர அலைகடல் காற்றை, ஒருமுறை ஆழமாகச் சுவாசித்தாள். 

காட்சிப் பிழையாய் காதலன் தேவா தோற்றம் கண் முன்னே! 

செவசெவ என சிவந்து போனாள், அவன் சொல்லப் போகும் காதலை நினைத்து! 

ஆத்மார்த்தமாக ‘லவ் யூ தேவா’ என்று… ஆர்ப்பரிக்கும் ஆழியை நோக்கிச் சொல்லிவிட்டு, அறைக்குள் சென்றாள்.