Eedilla Istangal – 4

Eedilla Istangal – 4

தன்னை உற்சாகப் படுத்திக் கொண்டதும், தாரா இருக்கையில் வந்து அமர்ந்தாள்.

அதன்பின் ஒரு முக்கால் மணி நேரத்திற்கு, தனக்காக என்று யோசிக்க முடியாமல் பணி செய்தாள்.

அந்த முக்கால் மணி நேரம் முடிந்த அடுத்த நொடியில், தாரா “நெக்ஸ்ட்” என்றாள்.

செவிலியர் ஹேமாவையும், தேவாவையும் உள்ளே அனுப்பினார்.

உள்ளே நுழைந்தவனைப் பார்த்தவள், எந்த மாதிரி எதிர்வினை புரிய என்று தெரியாமல் உட்கார்ந்திருந்தாள்.

“குட் மார்னிங் டாக்டர்” என்று சொல்லியபடி ஹேமா வந்தமர்ந்தாள்.

“ம்ம்ம், ஹேப்பி மோர்னிங்”

“மேம், இவங்க நியூ பேஷன்ட்” என்று சொல்லி, ஹேமாவின் மருத்துவக் கோப்பை செவிலியர் தாரா முன்பு வைத்தார்.

“பைவ் மன்ந் ப்ரெக்னன்ட் டாக்டர். இது என்னோட பழைய பைல். டூ டேய்ஸ்க்கு முன்னதான் இந்தியா வந்தேன்” என்று தன்னைப் பற்றி ஒரு சிறு அறிமுகம் கொடுத்துக் கொண்டாள் ஹேமா.

“ம்ம்ம்” என்று ஒரு மெல்லிய புன்னகை செய்து, தாரா மருத்துவக் கோப்புகளைப் பார்க்க ஆரம்பித்தாள்.

“பர்ஸ்ட் நம்ம ஹாஸ்ப்பிட்டல் பைல் ஓபன் பண்ணிடுங்க” என்று செவிலியரிடம் தாரா சொன்னாள்.

பின் ஹேமாவைப் பார்த்து, “ஒரு ஸ்கேன் எடுத்திரலாம்.. அப்போதான்…” என்று ஆரம்பிக்கும் போதே…

“இவ்வளவு ஏர்லியா ஸ்கேன் எதுக்கு?” என்று தேவா குறுக்கிட்டான்.

‘இதுக்கு பதில் சொல்லியாவது இவனிடம் பேச வேண்டும்’ என நினைத்து, தாரா பதில் சொல்ல வாய் திறக்கும் முன்…

“தேவா, நீ வெளியில இரு. அவங்களுக்கு எல்லாம் தெரியும்” என்று தாராவிற்கு ஆதரவு தந்து, அவள் எண்ணத்தைத் தோற்கடித்தார்.

“சரி. பார்த்திட்டு வா” என்று தேவா வெளியே சென்று விட்டான்.

‘அய்யோ’ என்றிருந்தது தாராவிற்கு!

தேவா சென்றபின்…

“டாக்டர்… அவன் அப்படித்தான். ரொம்ப கேள்வி கேட்பான். நீங்க தப்பா எடுத்துக்காதீங்க”

‘ஏன் இப்படி??’ என்பது போல் தாரா ஹேமாவைப் பார்த்தாள்.

அது ஒரு நொடிதான். அதன்பிறகு அவள் அங்கே மருத்துவர்.

“டூ டைம்ஸ் அபார்சன் ஹிஸ்டரி இருக்கு. ஸோ ட்ராவல் இஸ் நாட் அட்வைஸபில். பட் டிராவல் பண்ணியிருக்கீங்க. அதான் ஸ்கேன் பண்ணி பேஃட்டல் கண்டிஷன் பார்க்கணும்”

ஹேமா முகத்தில் பயம் தெரிந்தது.

“டோன்ட் வொரி… ரிலாக்ஸ்” என்று சொல்லிவிட்டு வழக்கமான பரிசோதனைகள் நடந்தன.

ஹேமாவிற்கு சோதனைகள் முடிந்த பின்பு, அடுத்தடுத்த என பார்வையாளர்கள்… பின் ஒரு பிரசவம்… இதையெல்லாம் முடித்துவிட்டு… ஒரு 2:30 மணி அளவில், அயர்ந்து போய் தன் அறை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.

இது மருத்துவர்களின் ஓய்வு நேரம். ஆதலால் பெரிதாக ஆட்கள் இல்லை. ஒரு சிலர் மட்டும் அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்தனர்.

‘டுடே இஸ் நாட் யுவர் டே தாரா. டோன்ட் பீல் டவுன் கேர்ள். மே பி சம் அதர் டே’ என்று தனக்கு ஆறுதலும், நம்பிக்கையும் சொல்லிக்கொண்டே நடைகூடத்தில் நடந்து வந்து கொண்டிருந்தாள்.

அப்படி எண்ணிக் கொண்டு வருகையில், தேவா நடைகூடத்தின் இருக்கையில் இருப்பதைப் பார்த்தாள்.

என்றுமே தாரா நடக்கும் பாதைகள் எல்லாம், தேவாவின் வாழ்க்கை என்னும் வாசலில் சென்றுதானே முடியும்!

அதாவது தேவா முன்னே வந்து நின்றாள்!!

தாரா வந்ததைக் கண்டு, தேவா எழுந்து நின்றான்.

முதல் முறையாக இருவரும் புன்னகையைப் பரிமாறிக் கொண்டனர்.

‘கொஞ்ச நேரம் பேசணும்’ எனச் சொல்லி, தேவாவிடம் பேச்சை ஆரம்பி என்று தாராவின் மூளை கட்டளையிட்டது.

மூளையின் கட்டளையைச் செயல்படுத்த நினைக்கும் போது…

“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்று தேவா சொன்னான்.

‘வாட்?? நான் சொல்ல வேண்டியதை… இவன் சொல்றான்??’ என்று அவளது காதல் மனது புரியாமல் புலம்பியது.

‘ஓகே… இங்க வேண்டாம். ரூம்ல போய் பேசலாம்’ என்றாவது சொல் என மீண்டும் மூளை கட்டளை பிரப்பித்தது.

மூளையின் கட்டளைக்குக் கட்டுப்பட நினைக்கும் போது…

“இங்க வேண்டாம். உங்க ரூம்ல போய் பேசலாமா??” என்று கேட்டான்.

‘ஹே! ஆர் யு ரீடிங் மை மைண்ட்??’ என்று கேட்கணும் போல் இருந்தது, தாராவிற்கு.

ஆனாலும் அவன் பேச்சால்… காற்றால் நிரப்பிய பலூன் மாதிரி, காதலால் நிரப்பப்பட்டது தாராவினது இதயம்!

“வாங்க” என்று அவளது அறைக்குள் அழைத்துச் சென்றாள்.

உள்ளே நுழைந்தவள், அவனை அமரச் சொல்லிவிட்டு, தன் சுழல் நாற்காலியில் வந்து அமர்ந்தாள்.

பேச்சை ஆரம்பிக்க வேண்டும் என நினைத்து, “என் பேரு தாரா” என்றாள்.

“ம்ம்ம் தெரியும்”

“தெரியுமா? எப்படி??”

“அதான் டோர்ல எழுதியிருக்கே?!! நேம் வித் டிகிரி”

“ஓ! ஏதோ பேசணும்னு…”

“யெஸ். பட் இப்படிக் கேட்கிறேன்னு… டோன்ட் மிஸ்டேக் மீ”

அவனின் அந்தப் பேச்சில்,
காற்று ஏற்றிய பலூன் பறப்பது போல், காதல் ஏற்றப்பட்ட இதயம் பறந்தது.

“நெவர். கேளுங்க”

“ஓகே, தேங்க்ஸ். அக்காவோட டெலிவரி பத்திக் கேட்கணும்” என்றான்.

தேவாவின் அந்தப் பேச்சு, பலூன் போல் பறக்கும் தாராவின் இதயத்திற்கு… ஒரு குண்டூசி!

இதுக்குதானா இத்தனை பேச்சுக்கள்?! சட்டென இதயம் தரையில் வந்து வீழ்ந்தது.

“கேளுங்க” என்றாள் தன்னைச் சமாளித்துக் கொண்டு!

“ம்ம்ம், இங்க நார்மல் டெலிவரின்னா எவ்வளவு ஆகும்ன்னு சொல்ல முடியுமா??”

‘இதை இவன் ப்ளோர் ரிசப்ஷன்ல கேட்டிருக்கலாம். பட் வொய் மீ?’
என நினைத்து மீண்டும் பறக்க ஆரம்பித்த இதயத்தை, ‘டோண்ட் எக்ஸ்பெக்ட் டு மச்’ என்று பிடித்து வைத்தாள்.

“அது எப்படி நார்மல் டெலிவரின்னு இப்பவே சொல்ல முடியும். சி-செக்ஷன் கூட இருக்கலாம். அண்ட் அதெல்லாம் பேபி பொசிஷன் அண்ட் ஹெல்த் கண்டிஷன் வச்சிதான் டிசைடு பண்ணனும்”

“ஓகே.. பட் ஆஃப்ரொக்ஸிமெட்டா நார்மல் டெலிவரிக்கு எவ்வளவுன்னு சொல்லுங்களேன்??”

“யெஸ். ஒரு ஒன் லேக் டு ஒன் பாயிண்ட் டூ”

“நான் நார்மல் டெலிவரிக்கு கேட்டேன்”

அவன் கேட்ட விதம், விசாரிப்பு போல் தெரியவில்லை. விசாரணை போல இருந்தது.

“ம்ம்ம்… நானும் நார்மல் டெலிவரிக்குத்தான் சொன்னேன்” என்றாள் கொஞ்சம் அழுத்தமாக!

“ஓகே. இதேதான் ரிசப்ஷன்ல சொன்னாங்க. இது ஓவர் சார்ஜ்ஜிங் மாதிரி தெரியலையா??” என்று குரலின் டெஸிபல் அளவை சற்று ஏற்றினான்.

மிதமான அளவில் தாராவிற்கு கோபம் வந்திருந்தது.

“ஒன் லேக் ஓவர் சார்ஜ்ஜிங்-னா… வி ஹேவ் இன்சூரன்ஸ் கவரேஜ்… அண்ட்… ”

“ஹலோ… நான் கொடுக்கிறதைப் பத்திப் பேசலை. நீங்க ஏன் இவ்வளவு வாங்கிறீங்க?? அதைப் பத்திக் கேட்கிறேன்”

‘என்ன பேச நினைத்தால், என்ன பேச வைக்கிறான்?’ என்று எண்ணி கோபம் அதிகரித்தது.

“ஓகே லிஸன்! இன் அவர் ஹாஸ்பிட்டல், ரூம் டாரிஃப்… குவாலிட்டி ஆஃப் கேர்… பெஸிலிட்டீஸ்… ” என்று அடுக்கிக் கொண்டு போவதைப் பார்த்தவன்…

“அப்படியே இருந்தாலும், ஒரு எத்திக் வேண்டாமா??” என்று கேள்வியால் குறுக்கிட்டான்.

“ஸீ! வி னோ வாட் இஸ் எத்திக்… வாட் இஸ் நாட் எத்திக்? சிம்பிளா சொல்லணும்னா… இட்ஸ் ஹாஸ்பிட்டல் ப்ரோடோகால்” என்று தெள்ளத் தெளிவாகச் சொல்லிப் பார்த்தாள்.

“ஹூ டிபைஃன் இட்??” என்று அடுத்த கேள்வி வந்து விழுந்தது.

“ஹாஸ்பிட்டல் மேனேஜ்மென்ட்”

“யாரோ மாதிரி சொல்றீங்க?? நீங்கதான் மேனேஜ்மென்ட்??”

அவள் புரியாமல் பார்த்தாள்.

“அதான் நேத்து சொன்னாங்கள, நீங்க ஹாஸ்பிட்டல் ஓனரோட டாட்டர்னு”

“இதான் பேசணும்னு சொன்னீங்களா??”

“யெஸ்! பர்ஸ்ட் ரிசப்ஷன்ல கேட்டேன்.
எனக்கென்னமோ… இந்த பீஸ் அதிகம்னு தோணுச்சு. சரி, மேனேஜ்மென்ட் பெர்ஷன் யார்கிட்டயாவது சொல்லிட்டுப் போகலாம்னு நினைச்சேன்”

தாரா அமைதியாக இருந்தாள்.

“நீங்க ரெஸ்பான்சிபிள் பெர்ஷன்னு நினைச்சு உங்ககிட்ட சொன்னேன்”

தேவையில்லாதவற்றைப் பேசி, தாராவிற்குத் தொண்டைப் பகுதியில் வரண்டது போல் இருந்தது.

“கொஞ்சம் வாட்டர்” என்று அவனைப் பார்த்துக் கேட்டாள்.

“இது உங்க ஹாஸ்ப்பிட்டல். என்கிட்ட கேட்கறீங்க??”

“ச்சே!” என்றவள், மேசையிலிருந்த கிரேப் ஜூஸை எடுத்துக் குடித்தாள்.

தேவா, அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அன்னாந்து குடித்துக் கொண்டே, ‘என்ன?’ என்பது போல் புருவத்தை உயர்த்தினாள்.

“தண்ணி வேணும்னு கேட்டுட்டு… ஜூஸ் குடிக்கிறீங்க?!”

வாய்க்குள் இருந்த ஜூஸ் தொண்டைக்குள் இறங்க மறுத்தது.

யாராவது வந்து, பதில் சொல்லும் நிலையிலிருந்து தன்னைக் காப்பாற்றிட மாட்டார்களா? என்று தாரா நினைக்கும் அளவிற்கு கேள்வி கேட்டான்.

அந்நேரம் கதவைத் திறந்து கொண்டு ஒரு பெண் உள்ளே நுழைந்தாள்.

‘அப்பாடி!’ என்று நினைத்து ஜூஸை விழுங்கிவிட்டு, “சாரு… வா வா” என்று தாரா வரவேற்றாள்.

தற்போதைய தேவைக்காகச் சாருவைப் பற்றி ஒரு வரி மட்டும்… தாராவின் காதல் தெரிந்த ஒரே நபர்.

“பேஷண்ட்??’ என்று கேள்வியாக தாரா முன்னே இருந்த இருக்கையைக் கைகாட்டிக் கேட்டாள்.

“நோ நோ… யு கம்”

சாரு உள்ளே வந்தாள்.

அங்கிருந்த தேவாவைப் பார்த்ததும், “ஹே தேவா! நீங்க எப்படி இங்க??” என்று கேட்டாள்.

ஐயோ! இவள் காப்பாற்ற வந்தாளா? இல்லை, தன் காதலைக் காட்டிக் கொடுக்க வந்திருக்காளா?? என்பது போல் அவஸ்தையாக தாரா சாருவைப் பார்த்தாள்.

தேவாவோ ஆச்சரியமாகப் பார்த்தான்.

“என்ன அப்படிப் பார்க்கறீங்க தேவா??”

“நத்திங். என்னைய எப்படித் தெரியும்??”

என்ன சொல்லப் போகிறாளோ?? என்ற பதற்றத்துடன் தாரா இருந்தாள்.

“ஒரு ஆக்டிவிஸ்ட் நீங்க. உங்களைத் தெரியாதா?”

“ஓ!”

“பை த வே… மைசெல்ஃப் சாருலதா. சிங்கிள் பேரன்ட். Gynecologist” என்று கை நீட்டினாள்.

“கிரேட். நைஸ் டு மீட் யூ” என்று தேவாவும் கை குலுக்கிக் கொண்டான்.

தாராவிற்கு உள்ளுக்குள் உதறியது. பேச்சு நீடித்தால் என்னாகுமோ என நினைத்து, “சாரு, உனக்கு பேஷன்ட்ஸ் வெயிட் பண்ணுவாங்க. கோ அண்ட் ஸீ தெம்” என்றாள்.

“இது லன்ஞ் டைம் தாரா”

“டாக்டர்ஸூக்கு பிராப்பர் பிரேக் கொடுக்கிறதில்லையா??” என்று மீண்டும் தேவா ஆரம்பித்ததான்.

“நீங்க அங்கயே பேசிக்கோங்க” என்று சொல்லி, தாரா சாருவைக் கை காட்டினாள்.

சாரு லேசாக முறுவல் செய்து, “அப்புறம் சொல்லுங்க?? எப்போ, எப்படி மீட் பண்ணீங்க??” என்று தேவாவிடம் கேட்டாள்.

“சாரு… அது” என்று தாரா தொடங்கிய பொழுது….

“நீ பேசாத” என்றவள், “நீங்க சொல்லுங்க தேவா” என்றாள் ஆர்வத்துடன்.

“யாரை மீட் பண்ணதைப் பத்திக் கேட்கறீங்க??”

“தாராவ!”

“ஓ! அதுவா… நேத்து காலையில… இங்கதான்”

“வாவ்! நேத்து நான் லீவ். ஸோ எனக்குத் தெரியலை” என்றவள், “தாரா… நீ போஃன்ல சொல்லியிருக்கலாம்” என்று குறைபட்டுக் கொண்டாள்.

“சாரு… நான் சொல்றதைக்… ” என்று மீண்டும் தாரா பேச ஆரம்பிக்கையில்…

“இரு தாரா…” என்று சொல்லிவிட்டு, “எல்லாம் பேசியாச்சா தேவா??” என்று கேட்டாள்.

“இப்பதான் பேசி முடிச்சோம்”

“சூப்பர்… சூப்பர்… அப்புறம் என்ன முடிவெடுக்கப் போறீங்க??”

“எதைப் பத்தி??”

“அதான் பேசினதைப் பத்தி…”

“நான் ஏன் முடிவெடுக்கணும்? அவங்கதான் எடுக்கணும்”

“அவதான் ஏற்கனவே எடுத்திட்டாளே”

தேவாவிற்கு ஏதோ ‘நான் சிங்-காக’ போகின்ற மாதிரி உணர்வு வந்தது.

இதற்கு மேல் விட்டால், தன் நிலைமை ‘நான் சென்ஸ்-ஸாக’ ஆகிவிடும் என நினைத்த தாரா, “சாரு… நான் சொல்றதைக் கேளு. அவங்க டெலிவரி பீஸ் ரிலேட்டடா பேச வந்திருக்காங்க…” என்றாள் அழுத்தம் திருத்தமாக!

மெதுவாகத் திரும்பி, சாரு தேவாவைப் பார்த்தாள்.

“நான் வர்றப்போ இதான் பேசிக்கிட்டு இருந்தீங்களா??” – சாரு.

“நீங்க வர்றதுக்கு முன்னாடியும் இதான் பேசினோம்” என்று தேவா எழுந்து விட்டான்.

“என்ன எந்திரிச்சிட்டீங்க??” என்று கேட்டுத் தாராவும் எழுந்தாள்.

“ம்ம்ம்… டாக்டர் எழுதிறதுதான் புரியாதுன்னு சொல்லுவாங்க. ஆனா நீங்க பேசுறதே புரியலை” என்று சொல்லிவிட்டு திரும்பி நடக்க ஆரம்பித்தான்.

சாரு சிரித்தாள்.

தாரா சாருவை முறைத்துவிட்டு, “உங்க அக்கா டெலிவரி” என்று கேட்டுக்கொண்டே, தேவாவின் பின் சென்றாள்.

“கவலைப்படாதீங்க… இங்கதான் நடக்கும். அக்காக்கு உங்களைப் பிடிச்சிருக்கு. ஐ மென்ட் தே வே யூ கேர் அண்ட் டாக்.. எக்ஸ்ட்ரா.. ”

சட்டென, ‘உங்களுக்கு?’ என்று அவள் இதயம் கேட்ட கேள்விக்கு ஏற்றபடி இதழ்கள் லேசாக அசைந்தன.

“ஏதாவது கேட்டீங்களா??”

“அது…அது… ” என்று தடுமாறியவள், “ம்ம்ம் அடுத்து எப்போ பார்க்கலாம்??” என்று கேட்டாள்.

“பர்ஸ்ட் டைம்”

“என்னது??”

“ஒரு டாக்டர்… விசிட்டர்கிட்ட இந்தக் கேள்வி கேட்டுப் பார்க்கிறேன்”

இம்முறை சாரு திரும்பி நின்று நன்றாகச் சிரித்தாள்.

தாரா எதுவும் சொல்லாமல் கதவைத் திறந்து விட்டாள். சத்தியமாக அதைத் தவிர வேறு என்ன செய்ய என்று அவளுக்குத் தெரியவில்லை.

தேவா, “தேங்க்ஸ்” என்று சொல்லிச் சென்றுவிட்டான்.

தேவா சென்றதும்…

தாரா வேகமாக நடந்து வந்து, மேசையிலிருந்த கண்ணாடி டம்ளர் தண்ணீரை எடுத்து, இடைவிடாமல் குடித்து முடித்தாள்.

“என்ன முடியலையா?” – சாரு.

“ஒரு மனுஷன் இத்தனைக் கேள்வியா கேட்பான் சாரு?”

அவள் சொன்ன விதத்தில் சாரு அடக்க முடியாமல் சிரித்துவிட்டு, “அவன் கேள்வி கேட்டே பழகினவன். ஈஸியா வரும்” என்றாள்.

“லவ் பத்தி ஏதாவது பேசலாம்னு நினைச்சா… ஹாஸ்பிட்டல் லா பத்திப் பேச வைக்கிறான்” என்று புலம்பித் தள்ளானாள்.

தாரா… புருவங்கள் சுருங்க, கருவிழிகள் இடப்புறம் வலப்புறம் நகர, தன் ஆற்றாமையை வெளிப்படுத்தினாள்.

சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள். சாரு சிரித்துக் கொண்டிருந்தாள். அதைக் கண்டதும், தானும் மட்டியைக் கடித்துக் கொண்டு புன்னகைப் புரிந்தாள்.

பின், நேற்று தேவா மருத்துவமனை வந்திருந்ததைப் பற்றிச் சாருவிற்கு சொல்ல ஆரம்பித்தாள்.

அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே சாருவைப் பற்றி…

முழு பெயர் சாருலதா. இந்த மருத்துவமனையில்தான் பணி புரிகிறாள்.

தாராவை விட மூத்தவள். ஆனாலும் தாராவின் நெருங்கிய தோழி.

திருமணமானவள். ஆனால் திருமணமான ஆறு மாதத்திலே, ஒரு விபத்தில் கணவனை இழந்தவள்.

அப்பொழுது சாரு இரண்டு மாதக் கர்ப்பிணி பெண். அதன்பின் மாமனார், மாமியார்… அம்மா… இவர்கள் துணையுடன் ஒரு பெண் குழந்தையைப் பெற்று எடுத்தாள்.

குழந்தை பெயர் மாலினி. பிறந்து எட்டு மாதம் ஆகிறது. மாலினி ஆறு மாதக் குழந்தையாக இருக்கும் போது, சாரு தன் தாயையும் இழந்து விட்டாள்.

இப்பொழுது மாமனார் மாமியாரிடம் குழந்தையை விட்டுவிட்டு பணிக்கு வருகிறாள். அவர்கள், இவளுக்குப் பக்க பலமாக இருக்கிறார்கள்.

நிறைய பிரச்சனைகள், கவலைகள் இருந்தாலும்… அதைத் தாராவைப் தவிர, எவரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டாள்.

இதுவே சாரு என்கின்ற சாருலதா!!

நேற்றைய கதையைத் தாரா சொல்லி முடித்திருந்தாள்.

“ரெண்டு பேரையும் சேர்ந்து பார்த்ததும், நான்கூட ப்ரோபோசல் ஸீனோன்னு நினைச்சேன்” – சாரு.

“ஹலோ! என்னோட ப்ரோபோசல் இப்படியா இருக்கும்??” என்று தாரா கேட்டுவிட்டு…

காதல் ரசனையுடன் சொல்ல ஆரம்பித்தாள்…

“ரூப் டாப் ரெஸ்டாரண்ட்…
நைட் மோடுல சென்னை சிட்டி… எல்லா டேபிளையும் புக் பண்ணிருப்பேன்…
அங்கங்கே பலூன்ஸ் அண்ட் சீரியல் லைட்ஸ்….
வொயிட் கலர் டேபிள்…
அதுல ஒரு வொயிட் பிளவர் வேஸ் வித் ஒன் ரெட் ரோஸ்…
நானும் தேவாவும் எதிரெதிரே.. என்
முன்னாடி ஒரு ரெட் வெல்வெட் கேக் அண்ட்…
பேக்ரௌண்ட்ல நேட் கிங் கோல்-த்ரீ லிட்டில் வேர்ட்ஸ் சாங்…” என்றவள் நிறுத்திவிட்டு, தன் டோட் பேக்கிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்தாள்.

மீண்டும் தொடர்ந்தாள்…

“தென் இந்த ‘ஜஸ்ட் எ ரிமைன்டர்: ஐ லவ் யூ’ புக்க பிரஷன்ட் பண்ணிட்டு… அப்போ தேவாகிட்ட சொல்லுவேன் ‘லவ் யு தேவான்னு’ ” என்று தன் காதல் வெளிப்படுத்தும் காட்சியை தத்ரூபமாகச் சொல்லிச் சிலிர்த்துக் கொண்டாள்.

பின், “இப்படி இருக்கும் சாரு… என்னோட ப்ரோபோசல் சீன்” என்று முடித்தாள்.

சாரு ஆச்சிரியமாகத் தாராவைப் பார்த்தாள்.

“வாட்??”

“இப்படியா ஒருத்தர லவ் பண்ணுவாங்க. பைத்தியம் மாதிரி இருக்கு தாரா”

“ய்யா… ஐம் கிரேஸி அபௌட் தேவா”

“போதும்… போதும்… நான் கிளம்புறேன்” என்று கிளம்பியவள்… போகும் முன்பு, “தாரா” என்று அழைத்தாள்.

“என்ன சாரு??”

“பெட்டர்… பர்ஸ்ட் லவ்வ கன்பார்ம் பண்ணிக்கோ. உன்னோட நல்லதுக்காகத்தான் சொல்றேன்”

‘சரி… சரி..’ என்கின்றது போல் தலையை மேலும் கீழும் ஆட்டினாள்.

சாரு சென்றதும்,

தாரா தன் கையிலிருந்த ‘ஜஸ்ட் எ ரிமைன்டர்: ஐ லவ் யூ’ புத்தகத்தைப் பார்த்தாள்.

அவளை அறியாமல், அவள் முகம் புன்னகை ஏந்திக் கொண்டது.

அவனுடன் பேசியது காதல் பேச்சுக்களா என்று தெரியவில்லை. ஆனால் காதலனுடன் பேசிய பேச்சுக்கள் என்று நம்பினாள்.

தேவாவுடன் செலவிட்ட நேரங்களை, தாரா தன் காதல் உண்டியலில் சேமித்து வைத்துக் கொண்டாள்.

error: Content is protected !!