En Ayul Neelumadi–EPI 4

269870723_998653174055350_1983985756058693881_n-5bddabe8

அத்தியாயம் 4

 

“எல்லாம் உன்னாலதான்டா ரகு! நல்ல சம்பளம், ஏதோ நாலு காசு வந்தா நல்லதுதானேன்னு நீ அவ்வளவு சொல்லவும் நானும் இந்த வேலைக்குப் போக ஒத்துக்கிட்டேன். இப்போ வந்து எத்தனையோ நாளு ஊட்டிக்குப் போய் தங்கனும்னு அடமா நிக்கறாடா ஒன் பொண்ணு! என்ன செய்தின்னு நீயே கேளு! சும்மாவே எனக்கு நைட்டுல மூச்சு விட கஸ்டமா இருக்கு இப்போலாம்! இவ இல்லாத நேரத்துல ஒன்னு கிடக்க ஒன்னு ஆகிட்டா, பகவானே! நெனைக்கவே பதறுதுடா!” என படபடவென மகனிடம் பொரிந்தார் வைதேகி.

சற்று நேரம் சென்று,

“இந்தா, உங்கப்பா பேசனுமாம்” என சொல்லி தொலைபேசியை அமுதமொழியிடம் நீட்டினார்.

கை நடுங்க வாங்கிக் கொண்டவள்,

“ஹலோ!” என்றாள்.

“என்ன கர்மம் இதெல்லாம்? ஒரு ஆம்பள பையன் கூட, அது வேலை விஷயமா இருந்தாலும், எப்படி மூனு நாள் போய் தனியா தங்கிட்டு வருவ? அதெல்லாம் யோசிக்கத் தெரியாத வயசா உனக்கு?”

“இல்லல்ல..மைத்தி ஆண்ட்டி…” என பேச வந்தவளை இடையிட்ட ரகுவரன்,

“அப்பன்காரன் பக்கத்துல இல்ல, சீக்காளி பாட்டி வேற! அதனால உன் இஸ்டத்துக்கு எப்படி வேணும்னாலும் நடக்கலாம்னு எண்ணமா? பாட்டி நீ இல்லாத நேரம் எப்படி தனியா இருப்பாங்கன்னு கொஞ்சமாச்சும் நெனைச்சுப் பார்த்தியா? இதெல்லாம் சரிப்பட்டு வராது! நீ வேலைப் பார்த்து கிழிச்சது போதும், பார்த்த வரைக்கும் உண்டான காச வாங்கிட்டு நாளைக்கே ரிசைன் பண்ணிடு!” என காட்டுக் கத்தல் கத்தினார் ரகுவரன்.

பிறந்ததில் இருந்து இவர்கள் கண் பார்வையில் வளர்பவளின் நடத்தையைப் பற்றித் தெரியாதா அம்மாவுக்கும் மகனுக்கும்.  அவளைப் போய் பெற்ற தகப்பனே தான்தோன்றியாக நடக்க எண்ணமா என கேட்க, அதை தடுக்காமல் அமைதியாக இருக்கும் பாட்டியை நினைத்து ஆத்திரமாக வந்தது மொழிக்கு. மைத்ரேயியும் இவர்களோடு வருவார் என ஏற்கனவே இவள் பாட்டியிடம் சொல்லி இருக்க, அதைக் கிடப்பில் போட்டு விட்டு தங்கள் இஸ்டத்துக்கு பேசும் இவர்களை நினைத்து ஆதங்கமாக இருந்தது பெண்ணுக்கு. கோபத்தில், துக்கத்திலும் தொண்டைக் கட்டிக் கொள்ள, அழுகை வரவா என பயமுறுத்த, மனதில் உதித்த வார்த்தைகள் எல்லாம் தொண்டைக் குழியில் சிக்கிக் கொள்ள, முகம் கசங்க நின்றிருந்தாள் அமுதமொழி.

“சொன்னது விளங்குச்சா இல்லையா?” என ரகுவரன் கடுப்பாக கேட்க ஆமென தலையசைத்தவள், மெல்லியக் குரலில்,

“ரிசைன் பண்ணா ஃபைன் கட்டனும்!” என்றாள்.

“அந்த தண்டச் செலவு வேறயா? எவ்வளவு?”

“பத்தாயிரம்”

“அவ்ளோதானே! உன்னைப் பெத்த கடனுக்கு குடுத்துத் தொலைக்கறேன்”

“பத்தாயிரம் அமெரிக்கா டாலர்”

“என்னது! அமெரிக்க டாலரா????” என அவர் அதிர்ச்சியாக, வீடியோ அழைப்பில் அவர் முகம் போன போக்கைப் பார்த்து இவளுக்கு உள்ளுக்குள் சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது.

‘கிட்டத்தட்ட ரூபாய் 740,000மாக்கும்! எங்க குடுங்க பார்க்கலாம்! நீங்கத்தான் தைரியமான ஆளாச்சே, குடுங்க பார்க்கலாம்! எனக்கு அப்பாவா நடந்துக்காட்டியும் பெரிய அப்பாடக்கரா நடந்துக்கறீங்கல்ல, குடுங்க, குடுங்க!’ என மனதினுள் பேசிக் கொண்டிருந்தாள் மகள்.

அவரின் அதிர்ச்சி இவளுக்கு அற்ப சந்தோஷத்தைக் கொடுக்க, கண்களில் அந்த மகிழ்ச்சி தெரிந்து விடுமோ எனத் தலையை இன்னும் குனிந்துக் கொண்டாள்.

“என்னவாம் ஒரே ரகளை?” என ரகுவரன் பெற்ற ஆசை மகள் சைந்தவி பின்னிருந்து கேட்க, மீண்டும் நடந்ததெல்லாம் அவள் முன்னே கடைப் பரப்பப்பட்டது.

தொலைபேசியில் முகத்தைக் காட்டிய சைந்தவி,

“ஓய் உம்மு(உம்மணாமூஞ்சியின் சுருக்கம்)!!! பகல்ல வேலைப் பார்க்கற அந்த லேடிய நீ திரும்பற வரைக்கும் பாட்டி கூட தங்க சொல்லிட்டு, நீ ஊட்டிக்குப் போ!” என்றாள்.

“என்னதிது பாப்பா?” எனத் தன் செல்ல மகளிடம் ஆத்திரத்தைக் காட்டாமல் ஆற்றாமையைக் காட்டினார் ரகுவரன்.   

“இந்த இடத்துல உம்மு வேலைக்குப் போகனும்னு கேட்ட போதே சமூகம் பெரிய இடம், இந்த மாதிரி சான்ஸ் கிடைக்காது, அனுப்புங்கப்பான்னு சொன்னேன் தானே! சரி, சரின்னு தலையாட்டிட்டு இப்போ ரிசைன் பண்ண சொல்லுறீங்க! உங்கள எல்லாம் என்னத்த சொல்லறதுன்னு தெரில டாடி. அந்த ஏ.ஜி யார் தெரியுமா? போட்டோகிராபிக்கான ப்ரீஸ்டீஜியஸ் லூசி(Lucie) அவார்ட் வாங்கின ஒரே இந்தியன். அதோட அவர் வேலை செஞ்ச மேகஷின் மூலமா புலிட்ஷேர்(Pulitzer) அவார்ட்கு கூட  அவரைப் பரிந்துரை செஞ்சிருந்தாங்க. அதுல வின் பண்ணலனாலும் அவர் எடுத்திருந்த போட்டோ உலகெங்கும் கொண்டாடப்பட்டுச்சு. எங்கயோ இருக்கற வெள்ளைக்காரன் ஆஸ்கார் வாங்கனான், ஏமி அவார்ட் வாங்கனான்னு ட்வீட்டர்ல போய் வாழ்த்துலாம் சொல்லறீங்க! அதே நம்ம நாட்டுக்காரன் எதையாவது அச்சீவ் பண்ணா அதப் பத்தி என்னன்னு கூட கண்டுக்கறது இல்ல. லூசி அவார்ட் வாங்கன மனுஷன் உங்க வீட்டு லூச வேலைக்கு சேர்த்துக்கிட்டதே பேரதிசயம். அதுல இது நொள்ளை, அது நொட்டைன்னு நீங்க எல்லாத்துக்கும் தடை போட்டுட்டு வேற இருக்கீங்க! ரிடிக்குலஸ்!”

அருணகிரியின் பெருமைகளை தங்கை அடுக்கிக் கொண்டே போக, எந்த விதமான பெருமை பீத்தல்களோ, பந்தாவோ இல்லாமல் பழகும் அவன், அன்று கொதி நிலையில் இருந்து சட்டென பனிமலையாகிப் போன மாயம் நெஞ்சுக்குள் வந்து போனது இவளுக்கு.

இரு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு, இவளைக் குனிந்துப் பார்த்து,

“இங்கிலீஷ்னு ஒரு மொழி இருக்கு தெரியுமா மொழி?” எனக் கேட்டான் அருணகிரி.

தலை ஆமென ஆடியது இவளுக்கு.

“அந்த மொழி இந்த மொழிக்குத் தெரியுமா தெரியாதா?”

“தெரியும் சார்!”

“அப்புறம் என்ன நானும் வரனுமான்னு ஒரு கேள்வி! அக்ரீமெண்ட்ல வெளியூர், வெளிநாடு போக தயாரா இருக்கனும்னு போல்ட் பண்ணி போட்டிருக்கு! அதெல்லாம் படிச்சு தானே சைன் வச்ச?”

வேலை கிடைத்த சந்தோஷத்தில் தலை கால் புரியாமல் திக்கு முக்காடிப் போனவள், அக்ரிமெண்டில் இருந்த சம்பளம் எனும் இடத்தில் போடப்பட்டிருந்த எண்களில் பார்வை நிலைக்குத்திப் போக ஒரு ஜென் நிலையில் கையொப்பமிட்டதை எப்படி சொல்வாள் அவனிடம்!

“நான் அப்ப இருந்த…நிலமைல…படிச்சேன்! ஹ்ம்ம் ஆனா இப்படின்னு ..படிக்கல! வீட்டுல பாட்டி விடமாட்டாங்க சார்!!” என திக்கித் திணறி அவன் மூக்கைப் பார்த்து சொல்லி முடித்தாள்.

கோபத்தில் அவன் மூக்கு விரிய, இவள் பயத்துடன் பார்வையை அருணின் உதட்டுக்கு இறக்கினாள். அங்கோ அவன் வெள்ளை நிறப் பற்கள் கோபத்தில் கீழுதட்டைப் படாதபாடு படுத்திக் கொண்டிருந்தது. அதைப் பார்க்க பயந்து இன்னும் பார்வையை இறக்கி, அவன் தாடையில் பதித்தாள் இவள். அதுவோ இறுகிப் போய் கிடந்தது. இதென்னடா கஸ்டகாலம் என அவன் தொண்டைக்கு வந்தால், ஆதாமின் ஆப்பிளோ ஆத்திரத்தில் ஆடிக் கொண்டிருந்தது.

எதிரில் நின்றவனிடம் அதற்கு மேல் சத்தமில்லாமல் போக, மெல்ல நிமிர்ந்து அவன் கண்களைப் பார்த்தாள் அமுதமொழி. கோபம் காணாமல் போய் சிரிப்பில் அவன் கண்கள் பளபளத்துக் கொண்டிருந்தது.

‘பார்வையை கீழ கீழ இறக்கி அப்படியே என் ஷூ வரைக்கும் போய்டுவா போல! மாஷா அண்ட் தே பேர்ல வர மாஷா மாதிரி செய்யறதெல்லாம் செஞ்சிட்டு முகத்த எப்படி பாவமா வச்சிருக்காப் பாரேன்! அந்த கரடி மாதிரியே எனக்கும் திட்ட வராம நாக்கு சிக்கிக்கிச்சு’

பெருமூச்சொன்றை இழுத்து விட்டவன் சமாதானக் குரலில்,

“நீதான் வரணும் மொழி. அம்மா திட்டுவாங்க, பாட்டி கொட்டுவாங்கன்லாம் சின்னப்புள்ளத்தனமா காரணம் சொல்லக் கூடாது! இது ஒரு பக்கா ப்ரோபெஷனல் ஃபீல்ட். இங்க கமிட்மெண்ட் ரொம்ப முக்கியம். இந்த ஃபீயூ வீக்ஸ்ல நம்ம ரெண்டு பேருக்கும் வேலை விஷயத்துல நல்லா சிங்க் ஆகிருச்சி! என்னால இன்னொரு மேக்கப் ஆர்ட்டிஸ்ட் கூட கம்பர்டபிளா வேலைப் பார்க்க முடியும்னு தோணல! சோ ப்ளிஸ், ப்ளிஸ் டோண்ட் சே யூ காண்ட்” என சொன்னவன் அமைதியாக எடிட்டிங் அறைக்குள் நுழைந்து விட்டான்.

அவன் போன திசையையேப் பார்த்தபடி கைகளைப் பிசைந்து கொண்டு நின்றாள் இவள். அவளிடம் அருணகிரி ப்ளிஸ் என சொல்லியிருக்கத் தேவையே இல்லை. அக்ரிமேண்ட் படி, இவள் மேல் வழக்குக் கூட போடலாம் என நன்றாகப் புரிந்தது அமுதமொழிக்கு. அப்படி மிரட்டாமல், நல்லபடி எடுத்து சொன்னதற்காகவாவது பாட்டியிடம் போய் பேசியே தீர வேண்டும் என முடிவெடுத்தாள் இவள்.  

அருணகிரி உள்ளேப் போக, ஐந்து நிமிடங்களில் மைத்ரேயி வெளியே வந்தார். அவர் கையில் காபி கோப்பைகள் இருந்தன.

“மொழிம்மா, வா காபி குடிக்கலாம்” என புன்னகையுடன் அவர் அழைக்க, தலை தன்னால் சரியென ஆடியது இவளுக்கு.

வரவேற்பறை சோபாவில் அமர்ந்தவர், அவளுக்கு ஒரு கோப்பையை நீட்டினார்.

“காபி வித் மைத்தி!” என சொல்லி அவர் புன்னகைக்க, இவளுக்கும் புன்னகைப் பூத்தது.

எதேதோ சிரிக்க சிரிக்க பேசியவர் கடைசியில்,

“பாட்டி விட மாட்டாங்கன்னு சொன்னியாமே! வீட்டுல நான் வந்து பேசவா மொழி? நானும் கூட வரேன்னு சொன்னா அவங்களுக்கும் கொஞ்சம் நிம்மதியா இருக்கும்ல. ஆம்பளைங்க எங்க வேணா எப்போ வேணா போகலாம்! அந்த மாதிரி எல்லா பொண்ணுங்களாலயும் முடியுமான்னு யோசிக்காம உன்னைத் திட்டிட்டான் போல! நீ வருத்தப்படாதே” என்றார்.

“திட்டனது சரிதான் ஆண்ட்டி! சரியாப் படிக்காம சைன் வச்சது என் தப்புதானே!”

“சரி விடு! இப்போ வா, உன் வீட்டுக்குப் போய் பேசிடலாம்!”

“இல்லல ஆண்ட்டி! நானே பேசிடறேன்!” என்றவள், வீட்டுக்குக் கிளம்ப ஆயத்தமானாள்.

பாட்டி வெளி ஆட்களிடம் சட்டென மரியாதைக் குறைவாய் பேசி விட மாட்டார்தான். ஆனாலும் இவளே பேசாமல் மற்றவர் இவளுக்காக பேசினால் பாட்டி தனிமையில் கரகமில்லாமல் சாமியாடி விடக் கூடும் என்பதால்தான் மைத்தியின் உதவியை மறுத்தாள். அதோடு சின்னப் பிள்ளைப் போல சிபாரிசுக்கு ஆள் கூட்டி போவதை நினைக்கவே அவமானமாக இருந்தது இவளுக்கு.

இவளின் கலங்கிய முகம் அருணை என்னவோ செய்ய, அந்த மனநிலையிலேயே அவள் ஸ்கூட்டி ஓட்டி செல்ல வேண்டாமெனத்தான் தாயை அவளிடம் பேசும்படி அனுப்பினான். இருவரும் பேசுவதை எடிட்டிங் அறையில் இருந்துப் பார்த்துக் கொண்டுதான் இருந்தான் அருணகிரி. அமுதமொழியின் முகத்தில் லேசான சிரிப்பைக் காணவும்தான் மற்ற வேலைகளைப் பார்க்கப் போனான்.

‘இந்த அம்ம்ம்ம்முக்குமொழிய திட்டனது காலை சுத்தி வர பூனைக்குட்டிய எட்டி உதைச்சிட்ட மாதிரி ஃபீல் ஆகுது. திஸ் இஸ் ஹைலி டிஸ்டர்பிங்! இனிமே இவ கூட இருக்கற ப்ரெண்ட்ஷிப்ப கட் பண்ணிட்டு வெறும் முதலாளியா மட்டும் நடந்துக்கனும்!’ என முடிவெடுத்துக் கொண்டான் அருணகிரி.      

“ஏய் உம்மு!!!” எனும் கத்தலில் நிகழ்காலத்துக்கு வந்தவள், தொலைப்பேசியில் தெரிந்த தங்கையை நோக்கினாள்.

“உனக்காக எவ்ளோ சப்போர்ட் பண்ணறேன் நான்! ஒழுங்கு மரியாதையா என் கல்யாணத்துக்கு ஏ.ஜிய ஃப்ரியா போட்டோ ஷூட் எடுத்துக் குடுக்க சொல்ற! சரியா?”

‘என்னமோ நான் சொன்னதும் அந்த அருண் சார் ‘கட்டளையிடு கண்மணி, அதை முடித்துக் கொடுப்பதே என் பணி’ன்னு குனிஞ்சு கும்புடு போடற மாதிரி பேச்சப் பாரு பேச்ச!’ என நினைத்தவள், சரியென தலையாட்டி வைத்தாள்.

சைந்தவியின் தலையீட்டால் இவளுக்கு ஊட்டி பயணம் உறுதியானது. பயணத்துக்கான விமான டிக்கட், தங்குமிடம் எல்லாம் மைத்ரேயியே பார்த்துக் கொண்டார். பயணத்துக்கு முன்பான இரண்டு வாரங்களும் அருண் தேவைக்கு மட்டுமே இவளிடம் பேசினான். சிரிப்பு, கேலி, கிண்டல் எல்லாம் இல்லாமல் போயிருந்தது. அதாவது இவளிடம் மட்டுமே இல்லாமல் போயிருந்தது. மற்றவர்களிடம் எப்பொழுதும் போலதான் இருந்தான். இன்னும் கோபம் போகவில்லையோ என இவளும் அமைதியாக இருந்துக் கொண்டாள்.   

அங்கே ஊட்டியில் அவளைக் கண்டுக் கொள்ளக் கூடாது என இவன் எடுத்திருந்த உறுதியைக் கலைக்கும்படி நடந்துக் கொண்டாள் நம் அமுதமொழி. தலைக்குப் போட்டிருந்த தொப்பியை அவளை நோக்கி விட்டடித்தவன்,

“உன்னை என்ன செஞ்சிருவேன்னு இப்படி பயப் பார்வைப் பார்க்கற? ராஸ்கேல்!!!!!” என உக்கிரமாகிப் போனான்.

அருணகிரி ஆத்திரகிரியாய் மாறியிருக்க, அமுதமொழி அச்சச்சோமொழியாய் நின்றிருந்தாள்.

 

ஊட்டியில போடனும்பா ஸ்வேட்டரு

தள்ளி தள்ளி போறியே(கிரி) என்னவாம் மேட்டரு?????

 

 

(நீளுமா….)

 

(போன எபிக்கு லைக், கமேண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி டியர்ஸ். அடுத்த எபியில சந்திக்கும் வரை லவ் யூ ஆல்…. 🙂