EN Ayul Neelumadi–EPI 7(2)

அருணுக்கு, நேர்காணலின் போது அவள் ஆட மறுத்தது நினைவு வந்தது. என்ன சொல்லப் போகிறாள் என அமைதியாக கவனித்தான் இவன்.

“இல்லங்க! அதெல்லாம்…எனக்கு! வேணாமே ப்ளிஸ்” என இவள் மறுக்க,

“பேபி, டான்ஸ்” என வந்துக் காலைக் கட்டிக் கொண்டான் ஜாக்சன்.

இவள் குனிந்துப் பார்க்க, வாய் கொள்ளா சிரிப்புடன் கண்ணை சுறுக்கி அழகாய்,

“பேபி டான்ஸ்” எனத் திரும்பவும் கேட்டான்.

தன் போல் தலை தன்னால் ஆடியது இவளுக்கு. அருணுக்கோ ஆச்சரியம்!

‘புருஷன் கேட்டா எதுவும் நடக்காது போல! புள்ளைக்கு மட்டும்தான் ஆல் ஓகே கிடைக்கும் போல இருக்கே’ என நினைத்தவனுக்கு புன்னகை வந்தது.

தயக்கமாக, கூச்சத்துடன் ஆரம்பித்தாலும் அவர்களின் டான்ஸ் ரிஹர்சல் அழகாகப் போனது. ஏஞ்சலின் ஆடிக் காட்ட, இவள் அதை அப்படியே திருப்பி செய்ய, இவளைப் பார்த்து சின்னவனும் அழகாய் கை காலை அசைத்தான். ஒரு வழியாக மணலில் படப்பிடிப்பு முடித்து, குடும்பமாய் அவர்கள் கடல் நீரில் விளையாடுவதை எடுக்க ஆரம்பித்தான் அருண்.

மூவரும் குதூகலத்துடன் ஆட்டம் போட, அமுதமொழியோ ஏக்கத்துடன் அந்த குட்டிக் குடும்பத்தைப் பார்த்திருந்தாள்.

“ஏன் அப்படி ஒரு பார்வை?” எனத் தன் வேலையைப் பார்த்துக் கொண்டே, அருகில் நின்றிருந்தவளைக் கேட்டான் அருணகிரி.

“இப்படி ஒரு அம்மா, அப்பா எனக்கு இருந்திருக்கக் கூடாதான்னு ஏக்கமா இருக்கு சார்! ரெண்டு பேரையும் சுண்டு விரல்ல முடிஞ்சு வச்சிருக்கான் ஜாக்சன்”

“இப்படி அமையாமப் போச்சேன்னு கவலைப் படறத விட எப்படி இப்படி அமைச்சுக்கலாம்னு சிந்திக்க ஆரம்பி மொழி”

“எப்படி சார்?”

“சீக்கிரம் என்னை மாதிரி ஒரு நல்ல பையனாப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ! இத விட பெட்டரா ஒரு பேமிலி அமையும் உனக்கு. உன்னை மட்டுமே சுத்தி வரப் போற புருஷன், அம்சமா ஒரு பையன், அழகா ஒரு பொண்ணுன்னு அமோகமா இருப்ப நீ!” எனச் சொல்லி வாய் மூடும் முன் எங்கிருந்தோ பறந்த வந்த ஃபிரிஸ்பீ இவளது நெற்றியில் பட்டென அடித்துக் கீழே விழுந்தது.

அதிர்ச்சியில் பயந்து போன அமுதமொழி, பின்னால் அப்படியே தண்ணீரில் விழுந்தாள்.

“மொழி!” எனக் கத்திய அருண் கையில் காமேரா இருப்பதைக் கூட மறந்து நீரில் பாய்ந்திருந்தான்.

மற்றவர்கள் ஓடி வருவதற்குள், முழுக்க நனைந்திருந்தவளை கைகளில் அள்ளி இருந்தான் இவன். தண்ணீரில் விழுந்திருந்த காமேராவை உதவியாளன் அவசரமாய் கைப்பற்ற, சாம்சனின் குடும்பம் பதட்டத்துடன் அருகே ஓடி வந்திருந்தார்கள்.

மணலில் அமுதமொழியை அமர்த்திய அருணகிரி, ஃபிரிஸ்பீ பட்டிருந்த இடத்தை ஆராய்ந்தான். லேசாய் சிவந்திருந்தது அவளது நெற்றி.

“வலிக்குதா மொழிம்மா?” எனப் பதட்டமாய் கேட்டவனும் முழுதாய் நனைந்திருந்தான்.

“கொஞ்சமா வலிக்குது கிரி” என்றவளுக்கு சுற்றி எல்லோரும் நின்று காட்சிப் பொருள் போலப் பார்ப்பது ஒரு மாதிரி இருந்தது.

இவள் எழ முயல,

“பேசாம உட்காரு! மயக்கம் எதாச்சும் வந்திடப் போகுது!” என அழுத்தமாய் சொன்னான் அருண்.

ஜாக்சனோ அவளது மடியில் அமர்ந்துக் கொண்டு அழவே ஆரம்பித்திருந்தான். பக்கத்து பீச் ஹவுசில் தங்கி இருக்கும் பிள்ளைகளின் விளையாட்டுத்தான் வினையாகிப் போயிருந்தது. அந்த வீட்டுப் பெரியவர்களும், சின்னவர்களும் வந்து மன்னிப்பு கேட்க பொங்கி எழுந்து விட்டான் அடங்காதகிரி.(நன்றி ப்ரியசகி கமேண்ட்ல இத சொன்னதுக்கு. இன்னும் பெயர மாத்தி எப்படி எழுதலாம்னு சிலர் சொல்லி இருக்கீங்க..எழுதறப்போ பொருத்தமா அமைஞ்சா சேர்த்துக்க ட்ரை பண்ணறேன்.)

“எனக்கு ஒன்னும் இல்ல! ப்ளாஸ்டிக் பொருள்தானே! அவ்வளவா வலிக்கக் கூட இல்ல” என வலியைப் பொறுத்துக் கொண்டு சண்டை வேண்டமென அருணை சமாதானப்படுத்தினாள் அகிம்சைமொழி.

கடலில் படம் பிடிப்பதால், வாட்டர்ப்ரூப் கேமிராவை அருண் உபயோகித்ததால் எடுத்த வீடியோவுக்கு எந்த சேதாரமும் வந்திருக்கவில்லை. அதோடு மாலையாகிப் போயிருக்க, அதற்கு மேல் நிற்காமல் கிளம்பி விட்டான் அருணகிரி. ஏஞ்சலினும் சாம்சனும் வருத்தம் தெரிவிக்க, அருண் பேசவேயில்லை. இவள்தான் அவர்களின் மேல் தப்பில்லை எனச் சமாதானப்படுத்த வேண்டியதாகியது.

இவள் எப்பொழுதும் கையோடு கொண்டு வரும் மாற்று உடையை, மாற்றிக் கொண்டு வர, கார் புறப்பட ரெடியாகி இருந்தது. அவனது பேபி கிளம்புகிறாள் என ஜாக்சன் அழ ஆரம்பிக்க, இவள் சமாதானப்படுத்தக் கூட நேரம் கொடுக்காமல் ஹாரனை அழுத்தினான் அருணகிரி. குட்டிக்கு முகம் முழுக்க முத்தமிட்டு, இன்னொரு நாள் பார்க்கலாம் என சொல்லிவிட்டு அவசரமாய் வந்து காரில் ஏறினாள் அமுதமொழி.  

அமைதியாய்தான் போனது அவர்களின் பயணம், அருண் பேபி என அழைக்கும் வரை.

பாதி தூரத்தில் இவள் களைப்பில் தூங்கி விட, சாலையில் ஒரு கண்ணும், சயனித்திருப்பவளின் மேல் ஒரு கண்ணுமாக காரைச் செலுத்தினான் அருணகிரி. அவளது வீட்டு வளாகத்தை அடையும் போது இருட்டி இருந்தது. மொழி இன்னும் தூங்கிக் கொண்டிருக்க, மெல்ல கை நீட்டி மென்மையாய் அவள் நெற்றியை வருடினான் அருணகிரி. அவன் தொடுகையில் கண் மலர்ந்தாள் அமுதமொழி.

அருகில் தெரிந்த அவன் முகத்தைப் பார்த்து,

“என்ன சார்?” எனக் கேட்டாள் பெண்.

“வலிக்குதா?”

“இல்ல! வலிக்கல”

“தலை வலிச்சா என் கிட்ட சொல்லனும்! எந்த நேரமானாலும் வருவேன் ஹாஸ்பிட்டல் கூட்டிப் போக! சொல்வியா?”

“சரி!”

“நல்லா சுடுதண்ணில குளிச்சிட்டு, கை காலுல எல்லாம் தைலம் பூசிட்டுப் படு! கடல் தண்ணில நெனைஞ்சிருக்க! மறுபடி போன லொக்கு லொக்கு வந்திடப் போகுது”

“சரி”

“போன தடவை சார்ஜ் போடாம போனை வீட்டுல விட்டுட்டு ஹாஸ்பிட்டல் போன மாதிரி இந்த தடவையும் செஞ்சிடாதே! போனைப் பக்கதுலயே வச்சிக்கோ!”

“வலிச்சா சொல்லனும், சுடுதண்ணில குளிக்கனும், போனை வச்சிக்கனும்…நோட் பண்ணிட்டேன் சார்”

“கிண்டல் பண்றியா?”

தலையை வேகமாக இல்லையென ஆட்டினாள் அமுதமொழி.

“அக்கறையா சொல்றப்போ அலட்சியப்படுத்த மாட்டேன் சார்!”

“குட் கேர்ள்! இப்போ அந்த டேஷ்போர்ட்ட திற”

அவன் சொன்னது போல காரின் டேஷ்போர்ட்டை திறந்தாள் அமுதமொழி. அங்கே ஒரு ப்ளாஸ்டிக் கவரில் சில தபால் தலைகள் இருந்தன. பட்டென அதை எடுத்து, காரின் உள் விளைக்கைப் போட்டு ஆராய்ந்தாள் இவள். 1980ல் வெளி வந்த ‘இந்தியாவின் மணமகள்’ கலேக்‌ஷனில் உள்ள தபால் தலைகள் அவை. அவ்வளவு அழகாக இருந்தன அந்த மூன்று தபால் தலைகளும். கண்கள் மின்ன,

“எனக்கா சார்?” எனக் கேட்டாள் இவள்.

“ஆமா”

“தேங்க்ஸ் சார்! தேங்க் யூ சோ மச் இந்த கிப்ட்டுக்கு” எனக் குதுகாலித்தாள் அமுதமொழி.

“கிப்ட் இல்ல! ரொம்ப நல்லா வேலைப் பார்க்கறதுக்கு என்னோட டோக்கன் ஆப் அப்ரிஷியேஷன்! கிப்ட் குடுக்க நீ என்ன என் கேர்ள்ப்ரேண்டா! வெறும் ப்ரேண்ட்தான்!” என்றவன் காரைக் கிளப்பிச் சென்று விட்டான்.

போறானே பொன்னுத்தந்தை(தாய்க்கு எதிர்ப்பதமாம்!)

காதல் இல்லை நட்பு என்று

கேக்கற நம்மையெல்லாம் கேணையாக்கி!!!!(போறாளே பொன்னுத்தாயி மெட்டில் பாடவும். சுதி, தாளம், பாவத்தில் கவனம் தேவை!!!!!)

    

(நீளுமா….)

 

(நான் திரும்பி வர வைக்கும் வேய்ட் பண்ண எல்லாருக்கும் நன்றி. என்னோட டவுன் டைம்ல ஆறுதல் சொன்ன அனைவருக்கும் பெரிய தேங்க்ஸ். லவ் யூ ஆல். Thanks from the bottom of my heart dearies…)