En kaadhal kanmaniye 14

En kaadhal kanmaniye 14

“கண்ணா… நான் மறுபடியும் சொல்கிறேன். என் கூட வேலை பார்க்கிற எல்லாம் அசந்து போயி நிற்கிற மாதிரி நீ மேக்கப் பன்னி டிரஸ் பன்னிட்டு வரனும்.  காசை பற்றி கவலைபடாமல் சூப்பராக செஞ்சிட்டு வா. நீ ஏதாவது தப்பு செய்தால் வர எல்லோரும் என்னை இங்கேயும் சரி ஆபிஸ்லயும் கிண்டல் செய்வாங்க. எனக்கு அது ரொம்ப அசிங்கமாகி போய்விடும்” என்றான் ஆனந்தன்.

“சரிங்க” என்று கண்ணாத்தாள் தலையசைத்தாளும் அவளுக்கு உள்ளே பயம் வலுக்க ஆரம்பித்து விட்டது என்றாலும் ரஞ்சிதாவை பார்த்து ஆறுதல் அடைந்தாள்.

சிறிது நேரம் பார்லருக்கு உள்ளே செல்லாமல் காத்திருக்க கூறிய அவன் பின்னர் அவளிடம்,

“கண்ணா… நீ முடித்து விட்டு விட்டு இங்கேயே இரு. நான் ஒரு மணி நேரத்தில் வந்து உங்களை கூட்டிட்டு போய் விடுகிறேன்” என்று சொல்லி விட்டு சென்றான் ஆனந்தன்.

கண்ணாத்தாளும், ரஞ்சிதாவும் பின்னர் உள்ளே சென்றார்கள்.

“அக்கா… உங்களைதான் நான் நம்பி இருக்கிறேன். நீங்கள்தான் அவர் சொல்கிற மாதிரி மேக்கப் போட்டுக்க உதவி செய்யனும்” என்று ரஞ்சிதாவிடம் பயத்துடன் சொல்லியபடி கண்ணாத்தாள் உள்ளே வந்தாள்.

“சரி… நீ வா” என்ற ரஞ்சிதா உள்ளே சென்ற அவர்களிடம் வந்த பார்லரில் இருந்த பெண்களிடம்,

“இவங்களுக்கு ரிசப்ஷன் மேக்கப் போட்டு விடுங்க” என்று சொன்னாள் ரஞ்சிதா.

கண்ணாத்தாள் அங்கிருந்த ஒர் சீட்டில் சென்று அமர்ந்து கொள்ள பார்லர் பெண்களிடம் ஏதோ சொன்ன ரஞ்சிதா பக்கத்து சீட்டில் அமர்ந்து கொண்டாள்.

“கண்ணா… அவர்களிடம் நான் எல்லாம் சொல்லி விட்டேன். அவங்க செஞ்சிடுவாங்க. நானும் கொஞ்சம் ரெடியாகிடறேன்” என்று அமர்ந்து கொள்ள அதிர்ச்சியானாள் கண்ணாத்தாள்.

அவள் அக்கா என்று கூப்பிடும் பொழுது ரஞ்சிதா கண்களை மூடிக் கொள்ள அவள் முகத்தில் ஏதோ செய்ய ஆரம்பித்தார்கள் பார்லர் பெண்கள்.

கண்ணாத்தாளிடம் வந்த பார்லர் பெண்கள் விதவிதமான ஹேர் ஸ்டைல்கள் போட்டோக்களை காட்டி அதில் எவ்வாறு செய்து விட வேண்டும் என்று  கேள்வி கேட்டார்கள்.

அவளுக்கு அதை பார்த்து குழப்பமாகி எதை செய்யலாம் எதை செய்தால் அவரை எல்லோரும் பாராட்டுவார்கள் என்று எண்ணம் தோன்ற அவள் ரஞ்சிதாவை பார்க்க அவள் கண்களை திறப்பதாக தெரியவே இல்லை.

பார்லர் பெண்கள் கேள்வி மேல் கேள்வி கேட்க கண்ணாத்தாள் ரஞ்சிதா அக்கா இப்படி மாட்டி விட்டுட்டாங்களே என்று விழி பிதுங்கிய வேளையில் “எக்ஸ்க்யூஸ் மீ மேடம்”

என்ற குரல் கேட்க அவள் முகம் மலர்ந்தாள்.

அவள் அக்கா தனலட்சுமியின் குரல் தான் அது.

“வாங்க தனா” என்று அவர்கள் வரவேற்க “எனி பிராபளம்” என்றாள் அக்கா தனலட்சுமி.

“இவங்களுக்கு ரிசப்ஷன் மேக்கப் போட சொன்னாங்க. அது எப்படி போட வேண்டும் கேட்டால் யோசிக்கிறாங்க. அதான் கேட்டுகொண்டு இருக்கிறோம்” என்றார்கள் பார்லர் பெண்கள்.

“இவங்களை எனக்கு தெரியும் சரி நான் சொல்றபடி மேக்கப் செய்யுங்கள்” என்று தனலட்சுமி சொல்ல பார்லர் பெண்கள்,

“அவங்ககிட்ட ஒரு வார்த்தை கேட்டுவிடலாம்” என்றார்கள்.

“நானே கேட்கிறேன்” என்று அவளிடம் வந்த தனலட்சுமி “என்ன மேடம் ஒகேவா” என்று கேட்க சரி என்று சந்தோஷமாக சொன்னாள் கண்ணாத்தாள்.

தனலட்சுமி அருகில் வந்து நின்று கொண்டு அவளே எல்லாவற்றையும் சொல்ல  பார்லர் பெண்கள் செய்ய மேக்கப் வேலை முடிந்து கண்ணாடியில் தன்னை பார்க்க அவள் அடையாளம் தெரியாதமாதிரி மாறி இருந்தாள்.

“நாங்க டிரஸ் சேஞ்ச் பன்னி விட்டு வருகிறோம்” என்று தங்கையை அழைத்து கொண்டு டிரஸ்ஸிங் ரூம் சென்றாள் தனலட்சுமி.

அந்த அறைக்குள் சென்ற கண்ணாத்தாள் தன் அக்காவிடம் “நல்லா வேளை நீ வந்தாய்  அக்கா. நீ வரவில்லை என்றால் என் நிலைமை என்ன ஆயிருக்கும் என்று எனக்கே தெரியவில்லை” என்று சிறு அழுகையுடன் சொன்ன தங்கையை பார்த்தாள் தனலட்சுமி.

“லூசு… அதான் அக்கா வந்து விட்டேன் இல்லையா… சரி… சாரி மாற்றலாம் வா” என்று சொல்லிய தனலட்சுமி அவளிடம் இருந்த பேக்கில் இருந்து சாரியை எடுத்து அழகாக கட்டி விட்டாள்.

கண்ணாத்தாள் அழகாகவும் ஸ்டைலாகவும் கட்டி விட பட்ட

டிசைனர் சாரியில் தன்னை பார்த்து ரசித்தாள்.

பிங்க் கலரில் சின்ன சின்ன வெள்ளை ரோஜா பூக்கள் பதிக்கபட்டு ஜரிகை வேலைகள் அமைக்கபட்டு பார்டரில் பெரிய பூக்கள் பதிக்கபட்டு இருந்த சற்று மெல்லிய ரகத்தில் இருந்த சாரியில் அழகாக ஸ்டைலாக அவள் தேவதை போல் ஜொலித்தாள்.

அக்கா தனலட்சுமி தங்கைக்காக பார்த்து போட்ட மேக்கப் மற்றும் சிகை அலங்காரம் அழகை கூட்ட அவள் இப்பொழுது நவநாகரீக கண்ணாத்தாளாக மாறி இருந்தாள்.

“கண்ணா… நீ ஆளே மாறிட்டே. இது என் தங்கையா என்று எனக்கே இப்பொழுது அடையாளம்  தெரியலை” என்றாள் தனலட்சுமி.

“அக்கா… நான் எப்பொழுது உன் கண்ணாதான் அக்கா. சரி நீ சொல்லு. நீ எப்படி இங்கே வந்தாய்? நீயும் மேக்கப் போட வந்தாயா? நான் வேற உன்னை மேக்கப் பன்ன விடாமல் பன்னிட்டேன் சாரிக்கா” என்றாள் கண்ணாத்தாள்.

“நான் மேக்கப் போட வரலை. என் தங்கத்தை ரெடி பன்னதான் வந்தேன்.”

“அப்படியா… அக்கா… ” என்று  ஆச்சரியமடைந்த பின்னர் “அக்கா நான் இங்கேதான்  இருக்கேன்னு உனக்கு எப்படி தெரியும்?” என்று கேட்டாள் கண்ணாத்தாள்.

“எல்லாம் உன் ஹஸ்பென்ட் வேலைதான். அவர்தான் எனக்கு போன் பன்னி கண்ணாவை பார்லர் கூட்டிட்டு போறேன். அவளுக்கு அது புதுசு. அவள் கூட ரஞ்சிதா இருந்தாலும் நீங்க வந்தால் அவள் கம்பார்டபிளாக இருப்பாள் என்றார் அதான் வந்தேன். நான் வந்தபின்னாடி நடந்ததுதான் தெரியுமே” என்றாள் தனலட்சுமி.

“அவரு சொன்னாரா” என்று கேட்டு வெட்கபட்டவளின் முகம் சிவக்க கண்ணாத்தாளுக்கு அழகை கூட்டியது.

“சரிக்கா… நீயும் அர்ச்சனா அக்காவும் நம்ம குடும்பத்துடன் சேர பிளான் போட்டிங்களா?”

“இன்னும் இல்லைடி. நாங்கள் அங்கே வந்து முடிந்தவரை கெஞ்சி பார்க்கிறோம் அப்படி முடியாதுன்னு சொல்லி விட்டார்கள் என்றால் தூரத்தில் நின்று யாரோ ஒருத்தராக வாழ்த்திவிட்டு சாப்பிட்டு விட்டு உங்களுக்கு பரிசு கொடுத்து விட்டு போகிறோம்” என்று வருத்தமாக தனலட்சுமி சொன்னாள்.

“அக்கா… நீங்க வாங்க எல்லாம் நல்லதே நடக்கும். நீங்கள் என் பக்கத்தில் என்னுடைய செல்ல அக்காவாக கண்டிப்பாக நிற்பிங்க.” என்று உறுதியாக சொன்னாள் கண்ணாத்தாள்

“அதெப்படி நீ அவ்வளவு உறுதியாக சொல்றே” என்று தனலட்சுமி கேட்க,

“எனக்கு தோணுதுக்கா” என்று சொல்லிவிட்டு சிரித்தாள் கண்ணாத்தாள்.

“நடந்தால் சரி நான் போயிட்டு ரெடியாகி வருகிறேன்.” என்று தனலட்சுமி சொல்ல,

“சரிக்கா போயிட்டு சீக்கிரமாக வா” என்றாள் கண்ணாத்தாள்.

தனலட்சுமி கிளம்பி செல்லும் வேளை ரஞ்சிதா ரெடியாகி காத்திருந்தாள்.

error: Content is protected !!