En manathu thamarai poo 17

En manathu thamarai poo 17

17
மனசுக்குள்ள நாயன சத்தம்
நான் கேட்டேன்
கனவுக்குள்ள மாலையைக் கட்டி
நான் போட்டேன்
பொன்னாரம்
பூவாரம்
ஓ…..ஓ..
ஓஓ என்று செந்தாமரை ஓங்காரமிட்டுக் கொண்டு இருக்கும்  போதே வாசலில் வண்டிச் சத்தம் கேட்டது.
கதிரவன்தான்!
“வாங்க ஸார்”
“ஓ வந்துட்டேனே. நீ எப்ப என் வட்டத்துக்குள்ள வர்ற?”
“ஸாhhhhர்” என்று கண்களை சொளவு (முறம்) போல விரித்தாள்.
“இதுக்கு எதுக்கு இவ்ளோ பெரிய ஸார்? சின்னதா கவின் னு சொன்னாப் போதுமே?” மறுபடியும் அவள் “ஸாhhhhர்” என்று கண்களை சொளவு (முறம்) போல விரித்தாள்.
“அய்யோ அய்யய்யோனு நான்தான் கத்தனும். உன்னை  எப்ப கடையில உன் பொறுப்பை எடுத்துக்கப் போறேன்னு கேட்டா ஏன் இத்தனை ரவுசு உனக்கு ?”
“கடையில என் பொறுப்பா? அது என்னது?” என்றாள் பயந்து போய். ஏதாவது ஒப்பந்தம் கிப்பந்ததில் அப்பா கையெழுத்து எதுவும் போட்டுத் தொலைத்திருப்பாரோ?’ என்று மூளை ஓவர்டைம் வேலை செய்தது.
“ம். சொல்றேன். சொல்லத்தானே வந்தேன்” என்றான் இனிமையாக.
“சரிங்க சார். காபி? டீ? கூல்டிரிங்க்ஸ்?” என்று ஆஃபர் செய்தாள்.
அதைக் கேட்டு வாங்கி குடித்து விட்டுப் போகாமல் “ஒன்லி டென்டர் கோகனட்” என்று கடுப்பேற்றினான்.
“ஒண்ணா? ரெண்டா? ஏன்று பற்களை கடித்தாள். பொதுவுhக வீட்டிற்கு வருபவர்களுக்கு அவள் மேN குறிப்பிட்ட பானங்களை மட்டும் வழங்கி பழகியதால் அவனது இந்த பதில் அவளை நையாண்டி செய்வது வோல இருந்தது அவளுக்கு
“அஃப்கோர்ஸ். ரெண்டுதான். ஒண்ணு உனக்கு. இன்னொண்ணு எனக்கு” என்று முடிப்பதற்குள் “கவின்ன்ன்….வேணாம்…..” என்று அவன் கட்டைக் காலரை கீரைக் கட்டு போல  கொத்தாகப் பிடிதது இருந்தாள்!
“அப்படி தண்மையா பேசு. இப்படி மரியாதையா நடந்துக்கோ. அதை விட்டுட்டு ஸாராம்! பாதாம் கீராம்?” என்ற கதிரவன் தன் சட்டை காலரில் இருந்த அவளது கைகளைப் பற்றியவன் அதை விட்டால் தானே?
அதை உணர்ந்தவள் ‘இவன் இன்னைக்கு ஆளே சரி இல்ல. தோப்புக்குப் போனா வம்பு வந்து சேரும்னு வீட்டுக்கு வரச் சொன்னா பல்லி எக்கச்சக்கமா துள்ளுதே?’  என்று தன்னைத் தானே நொந்தவள்
“கையை எடுங்க கவின். நீங்க இப்டி ஏடாகூடம் பண்ணுவீங்கன்னுதான் தோப்புக்கு வர மாட்டேன்னு சொன்னேன்” என்று கைகளை உருவும் பொருட்டு  கிட்டத்தட்ட அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு தொங்கினாள்.
“சின்ன வயசில விளையாடுனது. ரொம்ப நாள் கழிச்சு இப்பதான் வது உன் கூட விளையாடுறேன்” என்று மலர்ச்சியுடன் அவன் சொல்ல அவனது ‘வது’ என்ற அழைப்பில் எரிமலை ஆனாள் அவள்.
“அப்டி மட்டும் கூப்பிடாதீங்க. அப்டி ஒருத்தி இருந்தா. அவ செத்துட்டா” என்று ஆவேசமானாள் செந்தாமரை.
அவளது வார்த்தைகளில் இருந்த காயததை உணர்ந்தவன் அவள் கைகளை மெல்ல விடுவித்தான்.
அடுத்து ஒரு சூறாவளி வருதற்கான அறிகுறி தெரியவும் அடக்கி வாசிக்க முடிவு செய்தான். என்ன திட்டனுமோ திட்டி முடிக்கட்டும். அப்றம் மெதுவாகப் போய் பேசலாம் என்று பிளான் ஏ போட்டவன் மனதின் ஓரத்தில் பிளான் பி தயாராக இருந்தது.
கைகளை உதறிய செந்தாமரை “இதப்பாருங்க கவின். ஏதோ அப்பா ஆசைப்படுராறேன்னு உங்களுக்கு ஒரு மரியாதை குடுத்தா அதை தக்க வச்சுக்கோங்க. அதை விட்டுட்டு சின்னக் குழநதை மாதிரி விளையாடுற அளவுக்கு நங்கீ நிம்மதியா இருக்கலாம். நான் அதுக்கு ஆள் இல்ல. என்ன சொல்லனுமோ சொல்லிட்டு கிளம்புங்க.
கையோட இன்னும் ஒரு விஷயமும் தெரிஞ்சுக்கோங்க  நான் உங்க ஆனந்தி ஸ்டோர்ஸ் பக்கம் வர்றதா இல்ல. என் பிரண்டோட அப்பா மூலமா வேற வேலைக்கு ஏற்பாடு பண்ணிட்டேன். எக்ஸாம் முடிஞ்சதும் பெங்களுர்ல அந்தக் கம்பெனில ஜாய்ன் பண்றேன். அப்பாகிட்ட இன்னும் சொல்லலை. ஆனா கண்டிப்பா இனிமேல் அப்பாவோட அம்மாவோட இருக்க நான் விரும்பலை. ஏன்னை Nவுண்டாம்னு சொன்னவங்க எனக்கு வேண்டாம். “ என்று சொல்லிக் கொண்டே போனவள்
 “இது பத்தி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? “ என்று சந்தேகமாகக் கேட்கவும் “எல்லாம் எமனுக்குத் தெரியும். ட்ராலி ஃபார்வேர்ட்” பம்மல் கே. சம்மந்தம் ரீதியில் தலையை அசைத்தான்.  அது மாபெரும் பிழையாகிப் போய் இது வரை குமுறிக்  கொண்டு இருந்த கடல் கொந்தளித்தது.
 “அப்போ? எல்லாம் தெரியும். தெரிஞ்சும் என்னை பிஸினஸை எப்படி மெயின்டைன் பண்ணுவே? சொத்தை எப்படி மெயின்டைன் பண்ணுவே? தென்னமரத் தோப்புல என்ன சொன்னேன்? வீட்டுக்கு வரவான்னு டார்;ச்சர் பண்ணியிருக்கீங்க? அடடா நாம பார்த்து வளர்ந்த பொண்ணாச்சே? இப்படி வீட்டை விட்டு தனியா இருக்கேன்னு ஒரு …ஒரு எண்ணம் வரலை? பெத்தவங்களே தொரத்தி விட்டவதானேன்னு என்னை நக்கல் அடிச்சுப் பேசி இருக்கீங்க? ரொம்ப நல்லா டெவலப் ஆகி இருக்கீங்க. ஏன் டெவலப் ஆக மாட்டீங்க? அதான் எங்க பாட்டி கிழவியும் (இந்த இடத்தில் பாட்டியா? கிழவியா? என்று கதிரவன் குழப்பமுற்றான்!) என்னைப் பெத்த தாயும் வக்கனையா உங்களுக்கு வடிச்சுக் கொட்னாங்களே? கொழுப்பு வைக்காம இருக்குமா?
கதிரவனுக்கு நாக்குத் தள்ள ஆரம்பித்தது.
அடப் பாவமே! நம்ம சம்பாத்தியத்துல நாம சாப்பிடறதும் ஒரு குத்தமா? என்று நொந்து போனான். சொல்லட்டும். சொல்லட்டும். என்னை சொல்லாம யாரை சொல்லுவா? என்னை அவ நெருக்கமா ஃபீல் பண்றதாலதான் லம்ப்பா திட்டறா! சீக்கிரம் வழிக்கு வந்திருவா. ஏதோ இந்த மட்டும் ‘ஸார் ஸார்னு பேசி  கடுப்பைக் கிளப்பாம இருக்காளே? அதுவே நிம்மதி ‘ என்று அவன் பெருமூச்சு விட அது மற்றும் ஒரு பிழையாகிப் போய்
“ஓஹோ ! நீங்க குடுக்கற சம்பளத்துலதான் நான் படிச்சேன்னு சொல்லிக் காட்டுறிங்களா?” என்று குதிக்கவும் ‘குரங்கு! எங்கே இருந்து எங்குட்டு தாவுது பாரு?’ என்று முணு முணுத்தவன் அதற்கும் அவள் பாட்டை ஆரம்பிப்பதற்குள் காணாமல் போய் இருக்க செந்தாமரை சுறு;றும் முற்றும் பார்த்தாள்.
“அதுக்குள்ள எங்க போய்ட்டீங்க!” என்று அவள் குரல் உயர்த்துவதற்குள் “தெய்வமே என்னை மன்னிச்சிடு” என்று அவள் கால்களில் விழுந்து இருந்தான் கதிரவன்!
இதுதாங்க அவன் போட்ட பிளான் பி.
ஒரு வழியாக எரிமலை குளிரத் தொடங்கியது. செந்தாமரை கதிரவனைப் பார்த்து மெல்ல மலர்ந்தாள்.
என்னதான் அவனை விட்டு அவள் விலகி இருந்;தாலும் அவள் மனம் அவனை நெருக்கமாகவே நினைத்து வந்திருக்கிறது என்பது இப்போது இருவருக்குமே தெளிவாகி விட்டபடியால் கதிரவன் சற்று நிம்மதியாக “எழுந்திருக்கலாமா செல்லம். இன்னும் கொஞ்சம் பேசினா…இல்ல..இல்ல…நான் மட்டும் உன்கிட்ட பேசினா நல்லதுன்னு நினைக்கிறேன். அனுமதி கிடைக்குமா?” என்று பம்மி பதுங்க மெல்ல சிரித்த செந்தாமரை “சொல்லுங்க” எனவும்
“இதுதான் உன்கிட்ட எனக்குப் பிடிக்காதது. “ என்று குறைபட்டுக் கொண்டான்.
“என்னைத்தான் உங்க யாருக்கும் பிடிக்காதே.?” என்று அவள் மூக்கை உறிஞ்ச
தடால் எனறு எழுந்தவன் “அடியே  உன்னை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சதாலதான் சொல்றேன். ஏன்னை குட்டி வயசுல கூப்பிட்ட மாதிரி கவின் வாடான்னு கூப்பிடு. அதைச் சொல்றதுக்குள்ள என்னா ஒரு வில்லத்தனம்”
கொஞ்சம் கொஞ்சமாக அவன் பக்கம் வெளிப்படையாகவே அவள் சாய்வதை அறியாத செந்தாமரையோ “ அதுல்லாம் முடியாது. உங்க வயசு என்ன? என் வயசு என்ன? வயசுக்கு மரியாதை குடுக்கனும்னு எங்க டீச்சர் சின்;ன வயசுல சொல்லி இருக்காங்க “ எனவும் ரொம்பவும் வயதாகி விட்ட உணர்வு வந்தது கதிரவனுக்கு.
“ஆனா நீங்க என்னை அந்தப் பேரு சொல்லிக் கூப்பிடக் கூடாது.”
“ஏனாம்?” ஓரளவு அவனுக்கு இதற்கு பதில் தெரியும். இருந்தாலும் அவள் மனதை முழுதாக அறிந்தால் தானே தெற்கு மருந்து போட முடியும்?
பக்கத்தில் இருந்த சோபாவில் சரிந்து விழுநதாள் செந்தாமரை.
“ஏன்? உனக்குத் தெரியாது? திமிரு! என்னைக் கண்டா இளக்காரம்தானே எல்லாருக்கும்! எல்லாம் நானே என் வாயால சொல்லி அழனும்? அதானே நீ எதிர்பார்;க்கறே?” என்று கண்ணீரை மாலையாக தொடுத்தாள்.
“இல்ல தாமரை… அப்படி இல்ல…எனக்கு இந்தப் பேரை ரொம்பக் பிடிக்கும். ஆதைவிட உன்னை ரொம்பப் பிடிக்கும் “ என்று காரியத்தில் கண்ணாக தனது ஸ்டேட்மென்டை கூற, அதை கவனித்தும்  கண்டு கொள்ளாமல்
“சரி. கேட்டுக்கோ. நான் ரொம்ப சந்தோஷமா இருந்த காலத்தில என்னோட பேரு அது. இப்ப நான் அப்படி இல்ல. அந்தப் பேரைக் கேட்டா என் மேல எல்லோர் மேலயும கோபம்தான் வருது. ஆனா .இந்தப் பேரு நான் தனிச்சு நிக்கறதுக்காக வச்ச பேரு. என்னை எல்லாரும் ஒதுக்கின மாதிரி நான் என் பாவப்பட்ட பேரை ஒதுக்க மாட்டேன். இனி என்னை இந்தப் பேரு சொல்லிக் கூப்பிடறதா இருந்தா கூப்பிடு. இல்லன்னா என்னை நீ கூப்பிடவே வேண்டாம். ஏன்கிட்ட நீ பேசி எந்தக் கோட்டையையும் கட்டவும் வேண்டாம்” என்று முடிக்க
இத்தனாம் பெரிய இன்ஞ்சீனியர் அவனது காதல் கோட்டை பேஸ்மென்டிலேயே பெண்டிங் ஆனதை  நினைத்து நொந்தாலும் ‘  எப்படியோ மனசு விட்டு பேசினாளே? அதுவே பெரிசு. சீக்கிரம் பக்கத்துல நெருங்கிரலாம். அதுக்கு இன்னும் எத்தனை தடைவ காலுல விழனுமோ? தெரியலியே ?’ என்று உள்ளுக்குள் புலம்பியவன்
“ச்சே..ச்சே..இந்தப் பேரு அதைவிட சூப்பரு. கதிரவன் செந்தாமரை செமையா மேட்ச் ஆவுதுல்ல” என்று சந்தேகம் கேட்கவும்
“அடப்பாவி. நான் கண்ணீரைப் புழிஞ்சு என் கதையை சொன்னா நீ இன்டர்வெல்ல முறுக்கா கேக்ற? ஓடி;போயிரு” என்று அவள் புன்னகையுடன் வலது சுட்டு விரலை ஆட்டவும் கட கடவென்று சிரித்தவன் அந்த விரலைப் பற்றிக் கொண்டான்.
“மறுபடியும் மொதல்ல இருந்து ஆரம்பிக்காதே. ஏதோ பேசினே! சுpரிச்சே! அதோட நிறுத்திக்கோ. இந்த சோடி போடுற வேலையெல்லாம் நமக்கு செட் ஆகாது என்று முறைத்து அவனை தள்ளி நிறுத்தியவள் “தாறுமாறு தக்காளி சாறு தர்றேன் . குடிச்சிட்டு கௌம்பு. கௌம்பு”  என்று உள்ளே போக
“இவளை எப்படிடா கரெக்ட் பண்றது” என்று சத்தமில்லாமல் தாமரை செல்வனுக்கு ஃபோனை போட்டான்.
அவனோ அது என் ஏரியா இல்ல.  நீ வேணா என் மாமனாரை கேட்டுப் பாரேன்” என்று பினாத்தவும் ‘எதுக்கு? யாரை ? பக்கி!’ என்று தாமரை செல்வனைத் திட்டி விட்டு செந்தாமரை கொண்டு  வந்த திரவத்தை குடித்து விட்டு “பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு “ என்று மறக்காமல் அவளைப் Nhற்றி பாராட்டி விட்டு “ஓகே டி…..” என்றவன் அவள் முறைக்கவும்  தாமரை. நேக்ஸ்ட் கண்டி;h தென்னை மரத் தோப்புக்கு உன் அப்மாகிட்ட சொல்லிட்டு நீ வர்ற” என்றான்.
அதென்ன டி. தாமரை “ என்று அடுத்த சண்டைக்கு ஆயுத்தமானவளைப் பாhத்து வழக்கம் போல துப்பாக்கியை கீழே போட்டவன் “அய்யோ தெய்வமே! டி ஃபார் திருமலை டி தாமரை “ என்று வளாவளா கொளகொளாத்தான்.
“என்ன டி போட்டு பேசறியா? ஒழிஞ்சு போ. பட் நாலுபேர் எதிர்ல டி போட்டு பேசினீங்க? பட்டையக் கிளப்பிறுவேன் “ என்று ஃபைனல் வார்னிங் கொடுத்து வழி அனுப்பி வைத்தாள்.
error: Content is protected !!