En manathu thamarai poo 22

22
கஜாவின் செல்ல மகள் யுவராணி. அவள் கேட்டது எதையும் அவள் மறுத்ததில்லை. ஒன்றே ஒன்று தவிர. அதையும் அவள் அறியாத வண்ணம் செய்து இருந்தார். அது… அவர்கள் குடியிருந்த வீட்டைப் பற்றியது.
 அந்த சொத்தைப் பற்றிய ஷரத்துக்களின்படி யுவராணியின் வசம் வந்த பின் அந்த வீட்டை அவளின் முழு சம்மதத்தின் பேரில் சில நிபந்தனைகளின் அடிப்படையில் அவள் யாருக்கும் அதை வழங்கலாம். அதன்படி அதை கஜாவுக்கும் வழங்கலாம்.
அவளுக்கு சட்டப்படியான உரிமை அந்த வீட்டின் மீது வந்ததும் அவள் அதை கஜாவின் பெயரில் மாற்றி எழுதிக் கொள்ள சொல்லி இருந்தாள். சொன்ன இடத்தில் கையெழுத்து போடுவதாகவும் சொல்லி இருந்தாள்.
ஆனால் அவ்வளவு ரோஷம் இல்லாதவரா கஜா? அளவுக்கு அதிகமான ரோஷமும் வறட்டு கௌரவமுமே அவர் வாழ்க்கையை நிறைத்து இருந்தன. எனவே அதை செய்வதாக போக்குக் காட்டி மகளை ஏமாற்றி வந்திருந்தார்.
இப்போது வீடு பிரச்சனையில் தான் மாற்றி பத்திரம் பதியச் சொன்னதை யுவராணி மறந்துவிடவில்லை என்றாலும் பத்திரத்தில் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை என்பது அவளுக்கு உறுதி.
அதே நேரம் இனி அவர் முகத்தில் கூட விழிக்கப் பிடிக்காதபடி இருந்த இந்த நேரத்தில் அவள் தன் உரிமையை நிலைநாட்டுவதில் தப்பில்லை என்று உறுதியாக நினைத்தாள்.. அதனாலயே கஜாவிற்கு வீட்டை காலி செய்ய நோட்டீஸ் விடப்பட்டது.
கஜாவோ அதைப் பற்றி கவலைப்டாமல் தனது லைன் வீடுகளில் ஒன்றில்…. கிட்டத்தட்ட ஒண்டுக் குடித்தன வாழ்;வு…. வாழ்கிறார்.
“மாமா”
இங்கு பொதுவாக அறியாதவர்களை சற்றும் தயங்காமல் ‘அண்ணா’. ‘தம்பி’ என்பவர்கள் பழகிய மற்றும் தெரிந்தவர்களை ‘மாமா ‘, ‘மச்சான’; என்று அழைப்பார்கள்.
தன் பார்வையை தறிகளிடம் இருந்து மாற்ற முற்பட்டார் கஜா. ஓடிக் கொண்டு இருந்த தறிகளின் மீது நிலைத்திருந்த தன் பார்வையை மாற்ற இமாலய முயற்சி தேவைப்பட்டது அவருக்;கு.
“சொல்லு மாப்ள”
அந்த மாப்பிள்ளைக்கு அவரை விட வயது சற்று அதிகம்தான். பெயர் ‘குஸ்கா’ ரவி;. பல வருடங்களுக்கு முன்பு ‘குஸ்கா’ வியாபாரம் செய்து வந்தார். அதன் பின்பு கஜாவிடம் வேலைக்கு சேர்ந்து விட்டார். குடும்ப நண்பர்கள் என்பதால் ‘மாமா’ ‘மாப்பிள்ளை’ என்பார்கள்.
“தங்கச்சியும் பாப்பாவும் பொள்ளாச்சி போயிருக்கறதா தகவல்”
பொள்ளாச்சி என்றதும் அவர் கண்கள் இடுங்கின. நெற்றியில் இருந்த சுளிப்பு பார்க்க பயங்கரமாக இருந்தது.
“இப்ப எல்லாம் அவ இஷ்டம். இருந்து பார்க்கட்டும்” என்ற போது அவர் நல்ல வார்த்தை சொல்கிறாரா இல்லை கரித்து கொட்டுகிறாரா என்பது ஒருவருக்கும் புரியவில்லை. சொன்ன அவருக்கே புரிந்திருக்குமா என்றும் தெரியவில்லை.
யுவராணி என்ன கேட்டாலும் செய்யத் தயாராக இருப்பவர்தான். ஆனால் தாமரை செல்வனை மணப்பது பற்றி அவள் சொல்லவில்லையே?  அவரிடம் அவள் அதற்காக தகவலோ அனுமதியோ எதும் சொல்லவும் இல்லை, கேட்கவும் இல்லை. சொன்னது தாமரை செல்வன் மட்டும்தான்.
யார் அவன்?! அவரிடம் நேருக்கு நேர் சவாலாகப் பேசி அவர் மகளையே மணந்து கொள்வேன் என்று சூளுரைக்கும் அளவு பெரிய மனிதன்? இதற்கு அவர் மகளும் மனைவியும் ஏன் மகனும் கூட மறுப்பு சொல்லவில்லையே? ஒருவேளை அவர்கள் மறுத்து ஏதாவது சொல்லி இருந்தால் கூட அவர் மனம் ஆறி மாறி இருக்குமோ என்னவோ?
அவர் பலவாறாக கோபமுற்றதில் இறுதியாகக் கிடைத்த முடிவுதான் ‘ அவன் கல்யாணம் செய்து கொள்வதாகச் சொன்ன யுவராணி இல்லையென்றால் அவன் சொன்னதை நிறைவேற விடாமல் செய்யலாம்’ என்பது.
அது மடத்தனமான மூடத்தனமான முடிவுதான். ஆனால் அந்த மாதிரி முடிவுகளே எடுத்துப் பழக்கப்ட்ட அவருக்கு வேறு என்ன நினைப்பு இருக்கும்?
யுவராணிக்கு செல்லில் அழைத்து வரச் சொல்லும் போது கூட இருந்;த வீராப்பு அவளை நேரில் கண்டதும் சற்று குறைந்தது.
எதுவுமே பேசாமல் அவர் நீட்டிய ஸ்வீட் பாக்ஸை கண்களில் நீhக் கசிய வாங்கிக் கொண்ட மகளைப் பார்;க்கையில் உள்ளே ஏதோ  ஆட்டம் காணத்தான் செய்தது.
பேசாமல் உள்ளதையும் அவர் உள்ளத்தையும் சொல்லி விடலாமா என்று அவர் தடுமாறும் போது கறிவேப்பிலைத் தோட்டத்தை காபந்து செய்யும் கடைக்காரன் ஃபோன் செய்து இருந்;தான்.
இவர்களின் கறிவேப்பிலைத் தோட்டத்தில் எதாவது வீட்டு விலங்குகளோ மூன்றாம் நபர்களோ நுழைந்து விட்டாலோ வேறு ஏதும் சில்லறை பிரச்சனை என்றாலோ உடனடி தகவல் அவனிடம் இருந்து வரும். இதை அவன் ஒரு சேவையாகக் கருதி (?) செய்கிறான். ஏதோ அவனால் முடிந்த நல்ல காரியம்.
நாலா பக்கத்திலும் ஒற்றர்களை வைத்து இருந்தும் இந்த தாமரை செல்வனிடம் சறுக்கி விட்டாரே? அதுதான் அவருக்கு மிகுந்த தலையிறக்கமாக இருந்தது. ஆனால் நாலு பேரிடம் கேட்டிருந்;தால்         ‘ மச்சினனையே மாப்பிள்ளை ஆக்கிட்டியா? செம பிரில்லியண்ட்’ என்று பாராட்டுவதைக் கேட்டாவது சற்று தன்னை மெச்சி இருப்பார். யுவராணியின் விதி வலியதாகி விட்டது.
அந்த ஃபோனை அட்டென்ட் செய்வதா? வேண்டாமா? என்று அவர் குழம்பிக் கொண்டு இருக்கும் போது  “ ஃபோன் அடிக்குதுப்பா” என்ற சிரத்தையுடன் அவருக்கு எடுத்துச் சொன்னாள் அவர் மகள்!.
‘சரி. பேசிட்டு வந்துரலாம்’ என்று அவர் பேசப் போனதுதான் மாபெரும் குற்றம். இதற்கும் “அப்பா வந்ததும் சாப்பிடலாம்” என்று சொல்லி விட்டுத்தான் போனார்.
அந்த கடைக்காரனோ வளவளவென்று அறுத்துத் தள்ளிவிட்டு இவர் வைக்கப் போனாலும் தடுத்து நிறுத்தி சொன்ன தகவல் “பக்கத்து ஊருல கொஞ்சம் மழை. அதனால உங்க வயலைப் பார்த்துக்கோங்க” என்பதுதான்.
கறிவேப்பிலைத் தோட்டம் சின்ன மழைக்கு அப்படி என்ன ஆகிவிடும்? என்று எரிச்சல் பட்டவாறே வந்து பார்த்தால் அப்பா ஆசையாக வாங்கிக் கொடுத்த ஸ்வீட்ஸை இணுக்கு கூட மீதி வைக்காமல் தின்று முடித்திருந்தாள் யுவராணி!
செய்வதறியாமல் தலையில் அடித்துக் கொண்டார் கஜா. முகத்தில் வேர்வை வழிந்தோடியது.
“ராணிம்மா” என்று அவர் அழைக்க வாய் திறந்த போது அவள் அவரைப் பார்த்துக் கொண்டே மயங்கி டைனிங் டேபிளில் விழுந்தாள்.
உடலும் மனமும் முதன் முறையாகப் பதறியது அவருக்கு. ஓடிப் போய் அவளுக்கு மூச்சு இருக்கிறதா? என்று மூக்கில் கை வைத்துப் பார்த்தார். ஒன்றும் புரியவில்லை. நாடிப் பிடித்துப் பார்த்தார். அவர் சித்த வைத்தியம் ,யுனானி, அலோபதி ,ஹோமியோபதி ,அக்குபங்சர் மற்றும் இது போன்ற  எந்த மருத்துவமும் படிக்காதவர் பாவம்.
இதற்கு முதலுதவி என்ன என்று யோசித்தும் ஒன்றும் நினைவு வரவில்லை.
ஆனால் ஒரு விஷயம் தானாக நினைவு வந்தது.
அது… சின்ன வயதில் அவரை நம்பிய தெரு நாய்க்கு விஷம் கொடுத்தது!.
தன்னுடைய இத்தனை வருட வாழ்வில் முதல் முறையாக மகளைக் காப்பாற்றுமாறு யாரிடம் வேண்டுவது என்று தெரியாமல் அந்த நாயிடமே வேண்டிக் கொண்டார்.’ உனக்கு நான் செய்தது தப்புதான். என்னை மன்னிச்சிரு. அதுக்குப் பழி வாங்கிராதே. தயவு செஞ்சி என் மகளைக் காப்பாத்து’ என்று பதைத்தார்.
இறந்தவர்கள் கடவுக்குச் சமம் என்றால் இறந்து போன அந்த நாயும் அப்படித்தான் என்பது அவர் எண்ணமோ? என்னவோ?
அப்போதுதான் துளசி வீட்டுக்குள் வந்து கொண்டு இருந்தார்.  இனி பயமில்லை என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டவர் உள் அறையில் போய் மறைந்து கொண்டார்.
ஆம்புலன்சில் ஏறியவர்கள் வீட்டைத் தாழ் கூடப் போடவில்லை. சும்மா கதவை சாற்றி விட்டுப் போய் விட்டார்கள். இவருக்குத்தான் எப்போதும் நல்ல நேரம்,நல்லமனைவி, நல்ல மக்களாகவே உள்ளதே? அதன்பின் இவர் வெளியேறியதை பெரும்பாலும் யாரும் கவனிக்கவில்லை. கவனித்த ஒன்றிரண்டு பேரும் அதை தவறாகக் கருதவும் இல்லை.
அவர் நினைத்தது சரிதான் என்பது போல அனைத்து காரியங்களும் விரைவுடன் நடந்து இப்போது யுவராணி நன்றாகவும் இருக்;கிறாள்.
இவ்வளவு பெரிய வீடு! அதில் கோடிக்கணக்கில் மதிப்புள்ள பொருட்கள்! அத்தனையும் அம்போ என விட்டுவிட்டு தன் மனைவியும் மகனும் சென்றதைப் பார்த்து அவருக்கு இன்னும் மனம் தெளிந்து விட்டது.
;.  கஜா எப்போதும் ஜீப்பில் வலம் வந்தவர். இப்போது தாமரை செல்வன் இல்லாததால் அவர் ஜீப்பில் செல்வதில்லை என்பதை விட இந்தப் பிரச்சனைக்குப் பின் அவனுடன் வலம் வந்த அந்த ஜீப் அவருக்;குப் பிடிக்கவில்லை என்பதுதான் சரியாக இருக்கும்.
இவர்கள் அந்த வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு சென்ற பின் அவரது பழைய டிவிஎஸ் பிப்டியை எடுத்தார்!. அப்போதே தன் குடும்பத்தை விட்டு அவர்கள் விலக்கும் முன் தானாக விலகிக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து இருந்தார். எப்படியும் உண்மை அவர்களுக்குத் தெரியாமல் போகாது என்பதும் அவர் அறிந்திருந்தார்.
அதே நேரம் மனைவி தன்னை விட்டுக் கொடுக்க மாட்டாள் என்பதுவும் அவர் அறிந்து இருந்தார்.
அந்த டிவிஎஸ் பிப்டியை ஓட்டிக் கொண்டு லைன் வீட்டில் கொண்டு போய் நிறுத்தியவர் படிப்படியாக தனது ஜாகையை அங்கே மாற்றிக் கொண்டார்.
மகள் நோட்டீஸ் அனுப்பியது பற்றியோ தன் குடும்பத்தாரின் அதிருப்திக்கு தான் ஆளாகி விட்டோம் என்பதோ இன்றும் அவரை உறுத்தவில்லை.
அவரை இன்னும் பாடாய்ப்படுத்துவது ஒன்றுதான். ‘நீ ஏன் ராணிம்மா என்கிட்ட முதல்ல சொல்லலை? இன்னொருத்தன் சொல்லி நான் தெரிஞ்சுக்கனுமா?’ என்பதுதான்.
சொல்லி இருந்தால் கண்டிப்பாக மறுத்திருப்பார். ஆனால் மகளுக்காக மாறியும் இருப்பார். அக்காவிற்காக தாமரை செல்வன் தன் மனதை மறைத்தான். அதனால் யுவராணி தன் அப்பாவிடம் உறுதியாக எதையும் சொல்ல முடியவில்லை.
கதிரவன் வந்து சென்றபின் அவனுக்கு வேறு எண்ணம் உண்டு என்பதை அறிந்த பின்பு அவன் யுவராணியை மறுத்த பிறகுதான் தாமரை செல்வன் யுவராணியை மணப்பது பற்றிக் கூறியது. ஆனால் கஜாவிடம் சுமுகமாகப் பேசி பழக்கம் இல்லாததாலும் அப்படிப் பேச அவன் எவ்வளவோ முயன்று கஜா முறுக்கிக் கொண்டதாலும் தாமரை செல்வன் ‘எடுத்தோம் கவிழ்த்தோம்’ என்பது போல பேச வேண்டியதாகிவிட்டது.
அவரவர் அபிப்பிராயம் அவரவர்க்கு!
“பொள்ளாச்சியில ‘ஆழியார் டேம்’ போறதுக்;கு ஏற்பாடு பண்ணுங்க மாப்பிள்ளை” என்ற கஜாவை அதிசயமாக நோக்கினார் ‘குஸ்கா’  ரவி.
யுவராணிக்கு கதிரவன் வீட்டை,தோட்டத்தை , மாடு கன்றுகளை எல்லாம் ரொம்பப் பிடித்து இருந்தது.
எல்லாவற்றையும் விட முக்கியமாக கமலாம்மாவைப் பிடித்து இருந்தது. செந்தாமரையும் சுமாராகப் பேசினாள்.
வேம்பு ஆரம்பத்தில் கொஞ்சம் ஒதுக்;கமாகத்தான் நடந்து கொள்வார். ஆனால் கமலாம்மா யுவராணியை அத்தனை நன்றாகக் கவனித்துக் கொண்டார். அதிலும் கதிரவன் பெண் பார்த்துவிட்டு பின் அவரது Nபுத்தியை மணப்பதாகக் கூறியதும் அவருக்கு குற்ற உணர்வு வேறு.
அவரிடம் சம்மதம் வாங்குவதற்குள் போதும் போதும் என்று ஆகி விடடது. கதிரவன் வந்து “நீங்க மட்டும் உங்களக்குப் புடிச்சவரைக் கட்டிக்கிட்டீங்க. நான் அப்படிக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாதா அத்தை? அவ இல்லன்னா வேற யாரையும் கட்டிக்க மாட்டேன்னு புரிலையா அத்தை?” என்றதும் தான் ஒருவாறு சம்மதித்தார். அவரும் இந்தப் பாடெல்லாம் பட்டவர்தானே?
ஆனால் யுவராணி தனக்கு வேறோர் இடத்தில் மணமாகப் போவதாகச் சொல்லியும் அவரது குறைபாடு தீரவில்லை. அந்த வேறு இடம் துளசியின் தம்பி தன் சொந்தத் தாய் மாமன் என்று அவள் சொல்லிவிட்டப் பின்பு அந்த வீட்டில் குதூகலத்திற்குப் பஞ்சம் இருக்;கவில்லை. செந்தாமரை துள்ளிக் குதித்து விட்டாள். இப்போது யுவராணியின் நெருங்கிய தோழியும் ஆகிவிட்டாள்.
வந்தனாவுக்கு ஃபோனைப் போட்டு நிலவரம் விசாரிக்கப்பட்டது. அவள் இவர்கள் ஜாதகப் பொருத்தம் பார்ப்பது தடைபடுவதாகக் கூறி இருந்தாள்.
அது நல்லபடியாக முடிந்தால் பொள்ளாச்சியில் இருந்து அனைவரும் வந்தனாவைப் பெண் கேட்கச் செலலலாம் என்று ஒரு திட்டம்.
அது சுந்தரத்திற்கும் தெரிவிக்கப்பட்டு விட்டது. ஒருவழியாக அந்தத் திருமணம் கிட்டத் தட்ட உறுதிதான்.
துளசிக்கு தன் சண்முகம் அண்ணனையும் Nவும்பு மதனியையும் கமலாம்மாவையும் விட்டுச் செல்ல மனமே வரவிலலை. தெனால் இவர்களுடன் சேர்ந்தே கள்ளிப்பட்டி செல்வதாக முடிவு செய்துவிட்டார்.
பொள்ளாச்சியில் அவர்கள் நாட்கள் ‘விறுவிறு’வென பறந்தோடியது. நாளொரு விருந்;தும் பொழுதொரு வேடிக்கையும் கோவிலுக்குச் செல்வதும் அங்கே கடவுளைத் தொழுது விட்டுப் பின் குரங்குகளை விழி விரித்துப் பாhப்;;பதும்  கடைகண்ணிகளை  சுற்றுவதும் அவர்கள் வாழ்நாளில் சுதந்திரமாக உணர்ந்த நாட்கள் அவையாகத்தான் இருக்கும்.
வந்தனா இப்போது அங்கு இல்லை என்ற ஒரே குறை செந்தாமரைக்கும் யுவராணிக்கும்.
“நமக்கு எல்லாம் ஜாதகம் பார்க்கலை. இந்த வநதனாவுக்கு எதுக்கு பார்க்கறாங்க?”
“ம்ம்ம்… இல்லன்னா மட்டும் நீ செல்வா அண்ணனை விடருவியா? இல்ல கவின்தான் என்னை விட்ருவானா?”
“ராஜ்கமலும் அப்படித்தான்”
“ஆனா அவங்க பேரன்ட்ஸ் ஒத்துக்க மாட்டாங்க போல”
“ஓ… சரி  சரி..வந்தனா எனக்கு அண்ணி… உனக்கு..?”
“எனக்கும் அண்ணிதான்” என்ற போது செந்தாமரையின் முகம் மலர்ந்து பொலிந்தது.
“நம்ம ரெண்டு பேருக்கும் என்ன ரிலேஷன்ஷிப்?”
“உன் அத்தை மகனைக் கட்டிக்கப் போறேன் நான். அதனால நான் உனக்கு அக்கா. வயசுப்படி பார்த்தா நான் உன் தங்கச்சி. அதே நேரம் என் செல்வா அண்ணாவைக் கட்டிக்கப் போறே நீ. அதனால நீ எனக்கு அண்ணி. எதுக்கு கன்பியூஷன்? பிளட் ரிலேஷன்ஷிப்பே இருந்துட்டுப் போகட்டும். பட் நான் என் செல்வா அண்ணனை எப்பவும் அண்ணேனுதான் கூப்பிடுவேன்.
அதே நேரம் என் அண்ணன் ராஜ்கமலும் அண்ணி வந்தனாவும் தான் எனக்கு சீர்வரிசை செய்யனும்”
“கண்டிப்பா. உனக்கும் சரி உன் குழந்தைகளுக்கும் சரி எல்லா சீர் வரிசையும் உன் ரெண்டு அண்ணன் வீட்ல இருந்தும் வரும.; அது சரி.. அப்போ எனக்கு..?
“அடியேய் சீமை சித்ராங்கி, நாட்டு முள்ளாங்கி ! ரெண்டு பேருக்கும் சீர் வரிசைலாம் ஒழுங்கா வந்து சேரும் . பேசாம போய் சோத்தை தின்னுபுட்டு தூங்கற வழியப் பாருங்க.”என்று போகிற போக்கில் இவர்கள் பிடறியில் தட்டிவிட்டுப் போனார் கமலாம்மா.
அவரைப் பின் தொடர்ந்த யுவராணி “கமலாம்மா கமலாம்மா… எத்தனையோ மருந்து செய்ய உங்களுக்கு தெரிஞ்சிருக்குதானே? இந்த வசிய மருந்து எப்படி செய்யறது?” என்று கலாய்க்கவும்
‘இவ ஏன்தான் இங்க வந்தாளோ?’ என்று செல்லமாகத் தலையில் அடித்துக் கொண்டார் கமலாம்மா.