Enathu punnagaiyin mugavari 21

அத்தியாயம் – 21

மலைப்பாதையின் இருபக்கத்திலும் இருந்த மரங்களை அவர்களை கடந்து செல்ல குளிர்காற்று வேகமாக அடித்தது.. அவளோ அந்த குளிர்காற்றை ரசித்தவண்ணம் வர அவளின் முகத்தைப் பார்த்தபடியே காரை செலுத்தினான்.. காருக்குள் அமைதியே நிலவியது.. அந்த பயணம் முழுக்க அவள் யோசனையுடனே வந்தாள்..

அவன் காரை சீரான வேகத்தில் செலுத்தினாலும் அவனது பார்வை முழுக்க முழுக்க அவளின் மீதே இருந்தது.. தென்றலோ மனோவின் பார்வையை உணராமல் அவன் எதற்கு அப்படி சிரித்தான் என்ற யோசனையிலேயே வந்தாள்..

அவளின் யோசனையைப் பார்த்தவன், ‘என்னிடம் கேட்டால் நான் சொல்ல போகிறேன்..? இதுக்கு இந்த அவளுக்கு யோசிக்கிறாலே..’ என்று நினைத்தவனுக்கு சிரிப்புதான் வந்தது..

அவள் ஒன்றும் புரியாமல் வெளியே வேடிக்கை பார்த்து கொண்டே வர, ‘நான் என்ன சொன்னேன்.. இவர் எதுக்கு அர்த்தம் மாறும் என்று சொல்லுகிறார்..’ என்று தனக்கு தானே கேள்வி கேட்டவள் அந்த வாக்கியத்தை மீண்டும் சொல்லிப் பார்த்தாள்..

“நான் தனியாக வாங்கிக் கட்டிக்கணுமா..?” என்று அவள் குழப்பத்தில் அவள் சொன்ன வார்த்தைகளை அவள் மீண்டும் வாய்விட்டு கூற, “தனியாக வந்துக் கட்டிக்கிறது உன்னோட இஸ்டம் புயல்..” என்று அவன் வாக்கியத்தை முடித்துவிட்டு சிரிக்க அவன் சொன்னதைக் கேட்ட தென்றல்,

“டேய் லூசு பாவா.. நான் என்ன அர்த்தத்தில் சொன்னால் நீ என்ன அர்த்தம் எடுக்கிற..?!” என்று அவள் கோபத்தில் அவனை அடிக்க, அவளின் அடிகளை ஒரே கையில் சமாளித்த மனோ, “ஏண்டி எனக்கு உரிமை இல்லையா..?” என்று அவனும் இயல்பாக கேட்டான்.. அவன் அப்படி கேட்டதும் அவள் அமைதியாகிவிட, அவனும் காரை செலுத்தினான்.. அவளின் அமைதிக்கு காரணம் புரியாமலே..

அவனின் கார் ரஞ்சன் எஸ்டேட் என்ற போர்டு மாட்டப்பட்டிருந்த வழியில் செல்ல அதற்கு உள்ளே இருக்கும் அழகிய தேயிலை தோட்டங்களை வேடிக்கைப் பார்த்த தென்றல் அமைதியாகவே வர அவளின் அமைதி அவனை ரொம்ப பாதித்தது.. அவன் அந்த கோபத்தில் வண்டியை செலுத்த தென்றலின் செல் அடிக்க ஆரம்பித்தது..

மனோ தென்றலைக் கேள்வியாகப் பார்க்க தென்றலோ செல்லை எடுத்து, “தாத்தா நாங்க வந்துட்டோம்..” என்று சொல்லவும் அவன் காரை வீட்டின் முன்னே நிறுத்தவும் சரியாக இருந்தது.. ராஜசேகர் கார் நிற்பதைப் பார்த்து தனது அழைப்பை துண்டிக்க வண்டியைவிட்டு முதலில் இறங்கினான் மனோ..

அவனைப் பார்த்த சாரு, “வாடா நல்லவனே..” என்று சிரிப்புடன் சொல்ல அவளைப் பார்த்த மனோ, “உனக்கு இங்கே என்ன வேலை..? ஆமா கனடா உனக்கு என்ன ரொம்ப பக்கத்தில் இருக்கிறது போல.. அடிக்கடி வர..?” என்று கேட்டதும், காரைவிட்டு இறங்கிய தென்றல் இவர்கள் பேசுவதை ஆர்வமாக கவனித்தபடியே காரில் சாய்ந்து நின்றாள்..

“அடப்பாவி விட்டால் இந்திய பக்கமே வரதே என்று சொல்வ போல…” என்று கேட்ட சாரு, “எங்கேடா உன்னோட அந்த அருந்தவாலு தென்றல்..” என்று சொல்ல, “ஏய் என்னோட பொண்டாட்டி உனக்கு அருந்தவாலா..?” என்று சாருவிடம் எகிறினான் மனோ..

அவனின் அருகில் வந்து நின்ற தென்றல், “கொஞ்சநாளில் நாங்க சொன்னாலும் சொல்வோம் அக்கா..” என்று அவள் வழக்கமான குறும்புடன் சொல்ல, “அது எங்களுக்கும் தெரியுமே வாலு..” என்று கூறிய சாரு தென்றலை நோக்கி ‘டன்’ என்று கைகாட்ட, ‘ஓகே ஓகே..’ என்று சைகை செய்தாள் தென்றல்..

அவர்களை நோக்கி வந்த ராஜசேகரைப் பார்த்தவள், “தாத்தா இன்னும் என்ன பண்றீங்க..?!” என்று வாசலில் நின்று கேட்ட தென்றலைக் குழப்பத்துடன் பார்த்தான் மனோ.. “எல்லாம் ரெடி செல்லம்..” என்று சொன்ன ராஜசேகர் அனைவரையும் உள்ளே அழைத்து செல்ல, ‘இங்கே என்ன நடக்குது..?!’ என்ற கேள்வியுடன் நின்றிருந்தான் மனோ..

வீட்டின் உள்ளே நுழைந்த தென்றல் மனோ உடன் வராமல் அங்கேயே நிற்பதைக் கண்டு வாசலுக்கு வந்தவள் அவனின் முகத்தைப் பார்த்து, “ஐயோ என்னோட செல்ல பாவா..” என்றவள் அவனை வீட்டின் உள்ளே அழைத்துச் செல்ல அவளுடன் வீட்டிற்கு நுழைந்தான் மனோ..

வீட்டின் உள்ளே நுழைந்த மனோ அங்கிருந்த நிவாஸ், சுனில், ராகுல், பிரதாப், ஷிவானி, அனு, ரிஷி எல்லோரையும் பார்த்து, “ஏய் புயல் இங்கே என்ன நடக்குது..?” என்று கேட்டதும் அவனை நிமிர்த்துப் பார்த்த தென்றல்,

“ஆளுதான் வளர்ந்திருக்க பனமரம் சைஸ்ல.. அறிவு கொஞ்சம் கூட வேலையே செய்யாதே உனக்கு..” என்று அவள் விளையாட்டாக சொல்லிவிட்டு நாக்கைத்துருத்திக் காட்ட, “ஏய் என்னடி சேட்டை பண்ணி வைச்சுருக்க முதலில் அதை சொல்லு..” என்று அவன் அவளைக் கேட்டான்..

அவனின் முகத்தைப் பார்த்த தென்றல், “காலையில் எதுக்கு சேட்டை செய்தேன் என்று உனக்கு இன்னுமா தெரியல.. மனோ நீ தேறாதா கேஸ்டா..” என்றவள் அவனின் காதருகே சென்று, “விஷ் யூ ஹாப்பி பர்த்டே மை டியர் பாவா..” என்று சொல்ல மெல்லிய குரலில் பிறந்தநாள் வாழ்த்து கூறினாள் அவனின் புயல்..

தென்றலின் கைகளை உதறிவிட்டு வீட்டை விட்டே வெளியே சென்ற மனோ காரை எடுத்துக்கொண்டு செல்ல, ஒன்றும் புரியாமல் அப்படியே நின்றாள் தென்றல்.. அவனுக்கு ஏன் அப்படி கோபம் வந்தது என்று அவள் யோசிக்க அதை அறிந்த இரு ஜீவனும் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க மற்றவர்கள் அமைதியாகவே நின்றனர்..

அவன் செல்லும் திசையைப் பார்த்த தென்றல் கையில் இருந்த செல்லில் அவனுக்கு அழைப்பு விடுக்க அவன் எடுக்கவே இல்ல.. அவளுக்கு கோபம் வர, “தாத்தா அவர் எப்படியும் திரும்பி வருவார்.. அதுவரை யாரும் அவரை டிஸ்டப் பண்ண வேண்டாம்.. அவர் வந்து கேட்டால் தென்றல் எங்கே போனால் என்று தெரியல என்று மட்டும் சொல்லுங்க..” என்று கூறியவள் அவர்கள் தடுக்கும் முன்னே அந்த வீட்டை விட்டு வெளியேறினாள்..

காலையில் இருந்து அவள் பட்ட சந்தோசம் எல்லாம் சென்ற இடம் தெரியாமல் சென்று மறைய அங்கிருந்து வேகமாக நடக்க ஆரம்பித்த தென்றல் எஸ்டேட் பக்கத்தில் இருக்கும் பஸ் ஸ்டாப் சென்று பஸ்சில் ஏறியமரந்தும் பஸ் கிளம்பியது..

அங்கிருந்து கார் எடுத்துக்கொண்டு சென்ற மனோவிற்கு கோபத்தில் முகம் இறுகிக்கிடந்தது.. அவனுக்கு வந்த கோபத்தையெல்லாம் அவன் காரில் காட்ட அது சீறிக்கொண்டு பாய்ந்து சென்றது..

அவன் காரை நிறுத்திய இடம் ஒரு ஓடை மெதுவாக ஓடிக்கொண்டிருந்தது.. ஊட்டியில் இருக்கும் யாருக்குமே இப்படி ஒரு ஓடை அங்கே இருப்பது தெரியாது.. அதை சுற்றிலும் தைல மரங்கள் இருப்பதால் அந்த ஓடை யாரோட கண்களுக்கும் தெரியாது.. ஆனால் மனோ அந்த இடத்தை பலமுறை வந்திருக்கிறான்.. அது அவனுக்கு மிகவும் பிடித்த இடமும் கூட..!

அந்த இடத்தில் கிடைக்கும் அமைதியை இந்த உலகத்தில் எந்த மூலைக்கு போனாலும் கிடைக்காது என்று நினைப்பான் மனோ.. அந்த ஓடைதான் அவனின் மனதிற்கு அமைதியை அதிகம் அள்ளித்தரும்.. காரைவிட்டு இறங்கிய மனோ ஓடை அருகே சென்று அங்கிருந்த புல்வெளியில் அமைதியாக அமர்ந்தான்..

அவனின் கண்கள் அந்த இடத்தை சுற்றி வந்தது.. அதை சுற்றிலும் எந்த ஆள் நடமாட்டமும் இல்லை என்று அறிந்தவனின் மனதில் ஒருவகை அமைதி பரவியது..

அந்த இடத்தை சுற்றிலும் மரங்கள் அரணாக நிற்க பச்சை பாய் விரித்து போலவே இருந்தது புல்வெளிகள்.. அதற்கு இடையில் சின்ன ஓடை அழகாக ஓடவே அந்த நீர் செல்லும் சலசலப்பு கூட இல்லாமல் அந்த ஓடையை கடந்து சென்றது தென்றல் காற்று..

அவனுக்கு ஏன் அப்படி ஒரு கோபம் வந்தது என்று அவனே அறியவில்லை.. அந்த ஓடையில் அருகில் அமர்ந்தவனின் மனம் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பியதும் அவனின் மனம் தென்றலை நினைத்தது..

‘அவள் எவ்வளவு ஆசையாக அந்த ஏற்பாடுகளை செய்தாளோ..?’ என்று நினைத்தவனின் மனம் அவனை அங்கே அமரவிடாமல் செய்ய, ‘இவளைக் கயப்படுத்துவதே எனக்கு வேலையாகப் போய்விட்டது..’ என்று நினைத்தவனின் அதற்குமேல் அங்கிருந்து கிளம்பிச்சென்றான்.. அங்கே நடந்தது எதையும் அறியாமலே..!

அவள் சென்றதும் எல்லோரும் என்ன செய்வது என்ற யோசனையில் ஆளுக்கு ஒரு பக்கம் உட்காத்திருக்க அப்பொழுது கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டு வெளியே வந்த ராஜசேகர் மனோவைப் பார்த்துவிட்டு, ‘இவனை எப்படி இந்த அளவுக்கு புரிந்து வைத்திருக்கிறாள் இந்த தென்றல்..?’ என்ற யோசனையே வந்தது..

காரை விட்டு இறங்கிய மனோ தாத்தா வெளியே நிற்பதைப் பார்த்து, “தாத்தா ஏன் வெளியே நிக்கிறீங்க..?!” என்று புரியாமல் கேட்டான்.. அவனுக்கு எந்த பதிலும் சொல்லாதவர் வீட்டின் உள்ளே செல்ல அவரை பின்தொடர்ந்து வீட்டின் உள்ளே சென்றவனின் கண்கள் அவளையே தேடியது..

வீடு முழுக்க அவளை தேடிய அவனின் பார்வையைக் கண்ட ராஜசேகர் எதுவும் பேசாமல் சோபாவில் அமர மனோவின் அருகில் வந்த சுனில், “மாமா அக்காவை நீங்க கூட்டிட்டு வரலையா..?!” என்று வருத்தமாகக் கேட்டான்..

அவனின் முகத்தைப் பார்த்த மனோ, “அக்கா இங்கேதானே இருந்தால்..?” என்று கேட்டதும், “இல்ல மாமா அக்கா நீங்க போனதும் நான் எங்கயோ போறேன் என்று சொல்லிட்டு போயிருச்சு..” என்று கூறியவன் மனோவின் முகத்தைப் பார்க்க அவனுக்கு எதுவும் புரியவே இல்லை..

‘அவள் ஏன் சென்றாள்..?’ என்று புரியாத மனோ, “தாத்தா..” என்றான்.. அவர் எதுவுமே பேசவே இல்லை.. அவன் அதுக்கு மேல் ஔ நொடி கூட தாமதிக்காமல் காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்த பஸ் நிலையத்திற்கு செல்ல அவள் ஏறிய பஸ் கிளம்பிச் சென்றிருந்தது..

பஸ் கிளம்பியதும் தென்றல் மனம் கேட்கவே இல்லை.. ஏதோவொரு வீம்பில் கிளம்பி வந்துவிட்டாலும் கோபம் மனோ மீது இருந்தாலும் அதற்காக சாரு, அனு, பிரதாப், நிவாஸ், சுனில், ஷிவானி, தாத்தா எல்லோரையும் நினைத்த தென்றல் செல்லை எடுத்து தாத்தாவிற்கு அழைத்தாள்..

அவளின் அழைப்பைப் பார்த்த ராஜசேகர் சாருவிடம், “தென்றல் தாண்டா கூப்பிடுகிறாள்..” என்று சொல்லிவிட்டு போனை எடுத்தவர், “தென்றல் எங்கடா இருக்க..?” என்று கேட்டதும், “தாத்தா நான் பஸில் இருக்கேன்.. வீட்டுக்குத்தான் போகிறேன்.. யாரும் பயப்பட வேண்டாம்..” என்று சொல்ல அவருக்கு நிம்மதியாக இருந்தது..

“சரிடா நான் பயப்படவே இல்ல.. நீ ரொம்ப பயமுறுத்துகிறாய் செல்லம்.. மனோ ரொம்பவே பயந்துவிட்டான்.. உன்னை தேடிட்டு கிளம்பி இருக்கிறான்..” என்று அவர் சொல்ல, “ஒருவரின் மனம் என்ன பாடும்படும் என்று அவர் அறியணும் தாத்தா.. அதுதான் அப்படி சொல்லிட்டு வந்துவிட்டேன்..” என்று அவள் அவளின் செயலுக்கு விளக்கம் கொடுத்தாள்..

“தாத்தா பசங்ககிட்ட சொல்லுங்க.. இல்ல அவனுங்க அழுவாங்க..” என்று சொல்ல, “சரிம்மா..” என்று கூறியவர் போனை வைத்துவிட்டு அவள் சொன்னதை அனைவரிடமும் கூறினார்..  அவர் சொன்னதைக் கேட்ட நிவாஸ், “பாவம் மாமா.. அக்காகிட்ட நல்ல மாட்டிட்டு முழிக்கிறார்..” என்று சொல்ல எல்லோரும் சிரிக்க ஆரம்பித்தனர்..

நிவாஸ் சொன்னது போல மனோவின் நிலைதான் மோசமானது.. தென்றலை அங்கிருந்த இடங்களில் தேடியலைந்த மனோ நேராக கோயம்புத்தூர் செல்ல அங்கே அவனின் வீட்டில் தென்றல் இல்லை.. அவளின் ப்ளாட்டிற்கு சென்றான் அங்கும் தென்றல் இல்லை.. அவள் போன் செய்தாலும், அவள் எடுக்கவே இல்லை.. அவனுக்கு பைத்தியமே பிடிப்பது போலானது..

அவன் அவளின் பிளாட்டில் பார்த்துவிட்டு அவள் இல்லையென்றதும், “தென்றல் எங்கடி இருக்க..” என்று நினைத்தவன் படிகளில் இறங்கிவர அவனைப் பார்த்தவண்ணம் படியேறிக் கொண்டிருந்தாள் தென்றல்..

இதுதான் தென்றல் ஒருவர் தன்னை எந்த அளவுக்கு நேசிக்கிறார்களோ அவர்களை விட பலமடங்கு அதிகமாக நேசிப்பாள்.. அவளுக்கு தெரியும் மனோ எப்படியும் அவளை தேடி வருவான் என்று..!

அவனுடன் வாழ்ந்த இந்த ஒரு மாத வாழ்க்கையில் அவள் உணர்ந்த ஒரே விஷயம் மனோ பார்க்கத்தான் சரியான கோபக்காரன்.. ஆனால் அவனின் மனம் முழுக்க அத்தனை பாசம் இருக்கும்.. ஒரு நொடி கோபத்தில் செய்துவிட்டாலும், மறுநொடியே அவளை தேடி அவன் வருவான் என்று அவனை முழுவதுமாக உணர்ந்து புரிந்து வைத்திருந்தாள் தென்றல்..

பஸ்ஸில் வருவதற்குள் அவன் காரில் வீட்டிற்கு வந்துவிடுவான் என்று அவள் போட்ட கணக்கு கொஞ்சம் கூட மாறவே இல்லை.. அவன் அவளை கவனிக்காமல் படிகட்டில் இறங்கிவர அவனின் முகம் பார்த்த தென்றல் மனம் பதறியது..

ஒரு தாயைத் தொலைத்த ஒரு குழந்தையின் பரிதவிப்பு அவனின் முகத்தில் தெரிய அவளின் கண்கள் கலங்கியது.. அதற்குள் மனோ தென்றலைக் கவனிக்காமல் அவளைக் கடந்து செல்ல அவன் தன்னை கடந்து செல்ல அவனின் கையைப் பிடித்து நிறுத்தினாள் தென்றல்..

அவள் கையைப்பிடித்தும் நின்ற மனோ அவளை நிமிர்ந்துப் பார்த்தான்.. அவனின் கண்களையே அவனால் நம்பவே முடியவில்லை.. அவனின் எதிரே நின்றிருந்தாள் தென்றல்.. அவளைப் பார்த்த மனோ அப்படியே சிலையென நின்றான்..

“வா பாவா எங்க போற..?!” என்று அவனை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றாள்.. அவள் வீட்டின் கதவைத் திறந்து வீட்டின் உள்ளே செல்ல அவளோடு வீட்டின் உள்ளே நுழைந்த மனோ நொடி கூட தாமதிக்காமல் அவளைக் கட்டிப்பிடித்து அழுக ஆரம்பித்தான்.. அவனிடம் இருந்து இந்த செயலை அவள் முற்றிலுமே எதிர்பார்க்கவே இல்லை..

மனோவின் கண்களின் கண்ணீர் அவளின் தோளை நனைக்க அவனின் முதுகை வருடிக் கொடுத்த தென்றல், “பாவா என்ன இது சின்ன குழந்தை போல இப்படி அழுகிறீங்க.. இதுதான் உங்களின் கம்பீரமா..?” என்று கேட்டவளின் குரல் கரகரத்தது..

அவள் அப்படி கேட்டதும், “நான் சின்ன குழந்தைதான்.. எனக்கு என்னோட அப்பா, அம்மா எல்லாம் நீதான்.. உன்னைத் தொலைத்துவிட்டு என்னால் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்..” என்று கேட்டவனின் குரலும் கரகரத்தது..

மனோவிடம் இருந்து இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்காத தென்றல், “என்ன பாவா..? நான் உனக்கு அம்மாவா..?! பொண்டாட்டி இல்லையா..?” என்று சிரிப்புடன் கேட்டாள்.. அவனின் மனநிலையை மாற்றவே இப்படி செய்தாள்..

“எனக்கு உலகத்தில் எத்தனை சொந்தம் இருந்தாலும் உன்னோட அளவுக்கு யாரும் வரமாட்டாங்க.. எனக்கு நீ ரொம்ப ஸ்பெஷல்.. எனக்கு புன்னகையின் முகவரியைக் கொடுத்தவள் நீ.. எனக்கு காதலின் முகவரியைக் கொடுத்தும் நீ.. எனக்கு கண்ணீரைக் கூட அறிமுகம் செய்தவள் நீதான்.. நீமட்டும்தான்..” என்று கூறினான் மனோ..

அவன் சொன்னதைக் கேட்ட தென்றலுக்கு கண்களில் கண்ணீர் மட்டுமே வந்தது.. ஒரு மனைவியை தாயாக, தந்தையாக, தோழியாக, காதலியாக பார்க்கும் கணவர்கள் அதிகம் இருக்கிறார்களா என்றால் எனக்கு அதுக்கு விடை தெரியவில்லை..

எல்லோருக்கும் கோபம் வந்தால் பளார் என்று ஒன்று விழுகும்.. ஆனால் மனோ ரொம்பவே வித்தியாசமான ஒரு மனிதன்.. அவனின் மனதை இன்றுதான் அவன் முழுமையாக உணர்ந்திருக்கிறான்..

ஆனால் இந்த இரும்பு மனிதனுக்கும் மனம் உண்டு என்று தனது காதல் மூலம் உணரவைத்த அந்த நொடி அவளின் வாழ்க்கையில் வெற்றி கண்டாள் தென்றல்..

அவளின் முகத்தைக் கைகளில் ஏந்தி, “தென்றல் நீ என்னை சேட்டை வேண்டும் என்றாலும் பண்ணும்மா.. நான் அதை தாங்கிக்கொள்ள தயாராக இருக்கிறேன்.. ஆனால் என்னைவிட்டு போகணும் என்று மட்டும் நினைக்காதே.. எனக்கு நீ வேண்டும் என் வாழ்க்கை முழுவதும்..” என்று தனது மனதின் காதலுக்கு வார்த்தைகளுக்கு வடிவம் கொடுக்க முடியாமல் தன்னுடைய காதலைக் கூறினான்..

அவன் சொன்னதை கேட்ட தென்றலின் முகம் புன்னகையில் அழகாக மலர, அவளைப் பார்த்த மனோவின் முகமும் மலர்ந்தது..

Written by

Ardent reader, kirukkufying something, want to travel with characters around me.

error: Content is protected !!