ENE– epi 15

ENE– epi 15

அத்தியாயம் 15

அடி பொத்தி வைத்த புயலே தத்தளிக்கும் திமிரே
வெட்கம் விட்டு வா வெளியே
நில் என்று கண்டித்தாய்

உள் சென்று தண்டித்தாய்
சொல் என்று கெஞ்சத்தான்

சொல்லாமல் வஞ்சித்தாய்

“தானு, நில்லு தானு” என்றபடியே அவள் பின்னால் ஓடினான் பிரபு.

காது கேட்காத மாதிரியே வேகமாக நடந்தாள் தானு. அவள் கையை பிடித்து நிறுத்தினான் அவன்.

கையை உதறி திரும்பியவள், விட்டாள் ஒரு அறை. அதிர்ச்சியில் பிரபு கன்னத்தைப் பிடித்து கொண்டான். கடை வெளியே நின்றிருந்த சில பேர் அவர்களை வேடிக்கை பார்க்க துவங்கி விட்டனர் .

“இந்த கன்னம் மட்டும் என்ன பாவம் பண்ணுச்சு, இங்கயும் ஒரு அறை குடு” அதிர்ச்சி தெளிந்தவுடன்  கூலாக கேட்டான் பிரபு.

” குடுக்க மாட்டேன்னு நினைச்சியா” என்றவள் அந்தக் கன்னத்திலும் ஒன்று போட்டாள். அப்பொழுதும் ஆத்திரம் தீராமல் காராத்தே கிக் கொடுக்க பொசிஷன் எடுக்க ஆரம்பித்தாள்.

“அம்மா தாயே. இது பப்ளிக் பிலேஸ். இங்க வைச்சு என்னை அடிச்சு சாச்சிறாதே. உன் அடி ஒவ்வொன்னும் இடி மாதிரி இருக்கும். ஏற்கனவே வாங்குன எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு. அதனாலே தயவு பண்ணி என்னை மன்னிச்சி விட்டுரு”

“பயம் இருக்குல்ல, அப்புறம் ஏண்டா இப்படி செஞ்ச?” என்றவளின் கண்கள் கலங்கி விட்டது.

“எனக்கே விபா இப்படி செய்வான்னு தெரியாது பாப்பா. கூட்டிட்டு வர சொன்னான். திறப்பு விழா தானே, அதோட உனக்கு புடிச்ச சாப்பாடு எல்லாம் அரேஞ் பண்ணான். அதான் ஒத்துகிட்டேன். இப்ப கூட அவன்கிட்ட சண்டை போட்டுட்டு தான் உன்னை தேடி வந்தேன். ”

“போடா! நான் செம்ம கோபத்துல இருக்கேன். அவன் கடைக்கு விளக்கு ஏத்த நான் என்ன அவன் பொண்டாட்டியா? தருணுக்கும், அம்மாவுக்கும் இந்த விஷயம் தெரிஞ்சா என்ன ஆகும்னு உனக்கு தெரியாது?”

” அதெல்லாம் தெரியாம நான் பார்த்துகிறேன். நீயும் இப்போதைக்கு வாயை திறக்காத. கண்ணை துடைச்சுக்க பாப்பா. நீ அழுதா பார்க்க சகிக்கல. நான் எது செஞ்சாலும் உன் நன்மைக்குதான்னு முதல்ல நம்பு. இப்ப வா, சாப்பிடலாம். எல்லாம் நம்மளையே குறுகுறுனு பார்க்கிறாங்க”

“எனக்கு சாப்பாடும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம். என்னை வீட்டுல கொண்டு போய் விடு”

“இன்னும் கொஞ்ச நேரத்துல போகலாம் வாடா” என்றவன் அவள் தோள் மேல் கை போட்டு நகர்த்தி கொண்டு போனான். அவளை ஒரு மேசையின் அருகே அமர வைத்து, அவளுக்கு பிடித்த உணவு வகைகளை போய் எடுத்து வந்தான்.

“சாப்பிடு பாப்பா”

“எனக்கு வேணாம்னு சொல்லுறேன்ல” என்றவள் முகத்தை திருப்பி கொண்டாள்.

வலது கையால் உணவை பிசைந்தவன், இடது கையில் அவள் தாடையை பிடித்து திருப்பினான்.

“ஆ காட்டு”

“வேணா” என அவள் சொல்ல வாய் திறக்கும் போது, சட்டென்று உணவை ஊட்டிவிட்டான்.

“தெம்பா சாப்பிட்டுட்டு அப்புறமா சண்டை போடு” என்றவன் இன்னும் இரண்டு வாய் ஊட்டினான். அமைதியாகவே சாப்பிட்டவள், பிறகு தட்டை கையில் வாங்கி கொண்டாள்.

” நீ போய் உனக்கு சாப்பாடு எடுத்துக்க பிரபு. அப்படியே இன்னொரு தட்டுல அந்த ச்சீஸ் கேக்கும், கறிபாப்பும் போட்டு எடுத்துட்டு வா”

உள்ளுக்குள் நகைத்தபடியே அவள் கேட்டதை எடுத்து வர சென்றான் பிரபு.

அவர்கள் இருவரின் சண்டையையும் , சமாதானத்தையும் தூரத்திலிருந்து கவனித்து கொண்டிருந்தான் விபாகர். ‘இவளை மலை இறக்கனும்னா , அடிக்கடி வாங்கி கட்டணும் போல. அது பெரிய மான பிரச்சனையாச்சே.’ என தனது கன்னத்தை தடவி கொண்டே யோசித்தான். பிறகு மானமா இல்லை தானும்மாவா என்று மூளை கேட்ட கேள்விக்கு தானுதான் என அவன் மனம் சொன்ன முடிவை அப்படியே ஏற்று கொண்டான்.

“பிரபு, வீட்டுக்கு போகும் போது உன் மச்சானையும் நம்ம கூட வர சொல்லு. நான் பேசனும்”

“தானு, அவனோட பிளான் தானே இது. என்னை அடிச்ச மாதிரி அவனையும் நீ அடிக்கனும். அதை கண் குளிர நான் பார்க்கனும். ஷப்பா. என்ன அறை. இன்னும் கூட கன்னம் ரெண்டும் திகு திகுனு எரியுது”

“ஏன் பிரபு, உனக்கு இப்படி ஒரு கொலைவெறி? நீயும் உன் மச்சானும் சமமா? அந்தாளே பயில்வான் மாதிரி இருக்கான். அவன் திருப்பி அடிச்சா நான் தாங்குவேனா?”

‘ஓ! கதை அப்படி போகுதா? நான் மட்டும் உனக்கு இளிச்சவாயன். அதனால அடிப்ப. ஆனா அவனை மட்டும் அடிக்க மாட்ட. கேட்டா அவனை பெரிய பயில்வான் ரங்கநாதன் அளவுக்கு பில்ட் அப் குடுக்குற. டேய் மச்சான் மலையையே சாச்சுப்புட்டியேடா. இனி உன் காட்டுல மழை தான்’.

“சரி, கொஞ்சம் வெயிட் பண்ணலாம். அவன் வேலையை முடிச்சிட்டு வரட்டும்.”

அன்று போலவே மூவரும் ஒரே காரில் பயணித்தனர். விபா காரை ஓட்ட, பிரபு அவன் பக்கத்தில் அமர்ந்து வந்தான். பின் சீட்டில் தான்யா அமர்ந்து கொண்டாள்.

“எங்கே போய் பேசலாம் தானு?” என கேட்டான் விபா.

“நம்ம வீட்டுக்கு போற வழியில ஒரு லேக் கார்டன் இருக்கே, அங்கே நிறுத்த சொல்லு பிரபு” என வெளியே பார்த்த படியே பேசினாள்.

‘என்கிட்ட பேசனும்னு சொல்லிட்டு அவன் கிட்ட பேசுறா. குசும்பு’ கண்ணாடி வழியே அவளை அடிக்கொரு தரம் பார்த்தபடியே காரை செலுத்தினான் விபா.

அந்நேரம் தானுவின் தொலைபேசி இசைத்து அழைத்தது.

“ஹாலோ. சொல்லு டேனி.”

“நான் உங்க வீட்டு முன்னே நிற்கிறேன். நீ எங்க போய்ட்ட?”

“பிரபு கூட வெளியே வந்தேன். கொஞ்சம் லேட் ஆயிருச்சி. இன்னிக்கு நான் வேலைக்கு போகல. மேனேஜர்க்கு போன் பண்ணி சொல்லிருறேன். உனக்கு இன்பார்ம் பண்ணலாம்னு நெனச்சேன். அதுக்குள்ள நீ கோல் பண்ணிட்ட”

“ஏன் வேலைக்கு போகல? குரல் வேற அழுத மாதிரி இருக்கு.”

“என் குரல்லாம் நல்லா தான் இருக்கு. நீயே சும்மா கண்டதையும் கற்பனை செஞ்சுக்காதே.”

“டான்யா!!!”

“நெஜமா டேனி. ஐ அம் ஆல்ரைட்.”

“சரி. லேட்டர் நான் வந்து பிக் அப் பண்ணிக்கிறேன். லேட்ஸ் கோ ப்போர் அ மூவி. உனக்கு பிடிச்ச ட்ரான்ஸ்போர்மர் வந்துருக்கு. நீ தான் வேலைக்கு போகலையே. புக் பண்ணவா?”

“சரி பண்ணு. நம்ம டீல் ஞாபகம் இருக்குல்ல? நீ டீல் படி நடந்தா தான் நான் படத்துக்கு வருவேன். “

“இருக்கு இருக்கு. டிக்கட் நான் வாங்குனா, பாப்கோர்ன் நீ வாங்குனும். அதானே? ஏன் டான்யா, என் கிட்ட கூட கணக்கு பார்க்கணுமா?”

“அப்படி இல்ல டேனி. யாருகிட்டயும் நன்றி கடன் பட கூடாது. அப்புறம் நீ எனக்கு இவ்வளவு செய்யுறியே, அதனால நீ எது கேட்டாலும் எஸ்னு சொல்லுற நிர்பந்தம் எனக்கு வரும். நம்ம ப்ரண்ட்ஷிப்குள்ள இப்படி காம்பரமைஸ் வரது எனக்கு பிடிக்கலே.”

“எது கேட்டாலும் ஒரு அழகான காரணம் சொல்லிரு. எனிவே உன்னோட இந்த குணம் தான் எனக்கு ரொம்ப பிடிச்சதே. ஓகே, எட்டு மணிக்குள்ள கிளம்பி நில்லு.”

“சரி, பாய்”

“பாய்”

அவர்கள் இருவரின் சம்பாஷனையை விபாகர் கேட்டு கொண்டே வந்தான். ‘இவ குரலை வச்சே, இவ என்ன மூட்ல இருக்கான்னு கண்டுபிடிச்சுட்டானே. சமாதானம் செய்ய படத்துக்கு வேற கூட்டிகிட்டு போறான். என் தெய்வீக காதலுக்கு, காதலி மட்டும் எதிரி இல்லை, அவ நண்பனும் தான். இவள சமாளிக்கவே நாக்கு தள்ளுது. அதுல இவன் வேறயா?’ என மனதிற்குள் நொந்து கொண்டே காரை பார்க் செய்தான்.

அதற்குள் பிரபுவுக்கு வாட்ஸ்சாப் மேசேஜ் வந்திருந்தது டேனியிடம் இருந்து.

“தானு, உரிச்சகோழி நீ ஏன் ஒரு மாதிரி இருக்கன்னு கேக்குறான். உன் கூட தானே வந்தா உனக்கு தெரியாதான்னு வேற கேக்குறான். நான் என்ன சொல்லட்டும்?”

“ஏன், சொல்லேன் நீ செஞ்ச வேலையை. உன்னை ஸ்பெஷலா கவனிப்பான். எனக்கு ஏதாச்சும்னா கேக்குறதுக்கும் ஆளுங்க இருக்காங்கன்னு சில பேருக்கு தெரியல்லை. இதெல்லாம் நீ தான் சொல்லி புரியவைக்கணும் பிரபு. அதைவிட்டுட்டு நீயும் கூட சேர்ந்து ஆட கூடாது” மறைமுகமாக மிரட்டியவள் நடந்து சென்று அந்த அழகிய ஏரிக்கரையில் போடப்பட்டிருந்த கல் பெஞ்சில் அமர்ந்து கொண்டாள்.

அந்த ஏரியை சுற்றி போடப்படிருந்த நடைபாதையில் பலர் ஜாகிங் செய்து கொண்டிருந்தார்கள். சிறிய விளையாட்டு மைதானமும் அங்கே இருந்தது. குழந்தைகள் ஆர்ப்பரித்துக் கொண்டு அதில் விளையாடி கொண்டிருந்தார்கள். சில குடும்பங்கள் அங்கு போடபட்டிருந்த மேசையில் உணவு வகைகளை கடை பரப்பி உண்டு கொண்டிருந்தார்கள்.

மாலை நேர காற்று உடலை தழுவ, கண் மூடி அமைதியாக அமர்ந்திருந்தாள் தானு. பக்கத்தில் ஆள் அமரும் அரவம் கேட்டும் அவள் கண்களை திறக்கவில்லை.

“தானு” என மிக மென்மையாக அழைத்தான் விபா.

கண்ணை மெதுவாக திறந்தவள், அவனின் கண்களையே சிறிது நேரம் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தாள். பிறகு தன்னை உலுக்கி கொண்டவள்,

“ஐஸ்கிரீம் சாப்பிடலாமா?” என திடுமென கேட்டாள்.

விபா என்ன ஏது என உணர்வதுக்குள்ளேயே பக்கத்தில் மோட்டார் வாகனத்தில் ஐஸ்கிரீம் விற்பவரை நோக்கி நடக்க தொடங்கிவிட்டாள் தானு. விபாவும் எழுந்து அவள் பின்னோடு சென்றான். இவர்கள் இருவரையும் சற்று தூரத்தில் அமர்ந்து கவனித்து கொண்டிருந்த பிரபுவும் என்னமோ ஏதோ என பின்னாலேயே ஓடினான்.

தனக்கு விலை உயர்ந்த மேக்னம் ஐஸ்கிரீம் ஒன்றை வாங்கியவள், அவர்கள் இருவருக்கும் விலை குறைந்த குச்சி ஐஸ் இரண்டு வாங்கினாள். விபா பணம் கொடுப்பதற்குள் அவளே முந்தி கொண்டு பணத்தைக் கட்டினாள். அவர்களிடம் குச்சி ஐஸ்சை நீட்டியவள்,

“இது தான் என் பட்ஜேட்டுக்கு கட்டுப்படியாகும். சாப்பிடுங்க” என்றாள்.

ஆண்கள் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு அவள் கொடுத்ததை பெற்று கொண்டனர். பிரபு மீண்டும் சென்று அவன் இடத்தில் அமர்ந்து கொண்டு ஜாகிங் செய்யும் பெண்களை சைட் அடிக்க ஆரம்பித்தான்.

தானு அமைதியாக ஏரியை பார்த்தபடியே ருசித்து ஐஸ்கிரீமை உண்டாள்.

“என் கிட்ட என்னமோ பேசனும்னு சொன்னியாமே தானு” என எடுத்து கொடுத்தான் விபாகர்.

அவனின் முகத்துக்கு நேராக திரும்பி சப்பளம் கால் இட்டு அமர்ந்தாள் தானு.

“நீ செய்யறது எதுவுமே எனக்கு பிடிக்கல வேணு”

“வேணுன்னா கூப்பிட்ட?”

“ஆமா, வேணு விபாகர் தானே உன் பேரு. விபா, விபாகர்னு கூப்பிட நான் என்ன உனக்கு க்ளோஸ்சா? நான் வேணுனு தான் கூப்பிடுவேன். அப்பத்தான் அந்நியமா தெரியும்.” என்றாள் தானு.

அவள் கூறிய லோஜிக்கை கேட்டு அசந்து போய்விடான் விபா. அவனை யாரும் இதுவரை அப்படி கூப்பிட்டதில்லை. அவள் கூப்பிடும்போது, இன்னும் தன்னை நெருங்கி விட்டதை போல உணர்ந்தான் அவன். உடலில் ஒரு சிலிர்ப்பு ஓடி அடங்கியது. எங்கே அதை அவளிடம் சொன்னாள் மலை ஏறி விடுவாளோ என்ற பயத்தில், எப்படியோ கூப்பிடு என்பது போல தோளை குலுக்கினான் அவன்.

“சரி சொல்லு வேணு. எதுக்காக என்னை சுத்தி சுத்தி வர?”

“உன்னை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு தானு.”

“புடிச்சிருக்குனா எந்த அடிப்படையில புடிச்சிருக்கு? அந்த அனுவோட ரேஞ்சுலயா?”

“தானூ!!!!” என அதிர்ந்து போய் கத்தினான் விபா.

“ஏன் இந்த அதிர்ச்சி வேணு? நீ பேசுனதெல்லாம் நான் கேட்டேன். நீ எதிர்பார்க்கிற சாமுத்திரிகாலட்சணம் எதுவும் என் கிட்ட இல்லை. இருந்த அடர்த்தியான முடியையும் நீ பேசுனத கேட்ட மறுநாளே புடிச்சு வெட்டிட்டேன். அப்புறமும் நீ என்னை சுத்தி வந்தா நான் என்னன்னு நெனைக்கிறது” என கேட்டாள் தானு.

“தானு, அனுவை என் கிட்ட இருந்து தள்ளி நிறுத்த தான் அப்படி எல்லாம் பேசினேன். என் வருங்கால மனைவி இதையெல்லாம் கேட்டுகிட்டு இருக்கான்னு எனக்கு என்ன ஜோசியமா தெரியும்.”

“ஸ்டாப் சேயிங் தட். நான் உன் வருங்கால மனைவி இல்ல. அத பற்றி பேச தான் நாம இப்ப வந்துருக்கோம்.”

“சரி விடு தானு. இப்ப நான் கேக்குற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு. எனக்கு திருப்தியான பதிலா இருந்தா இனிமே நான் உன் வாழ்க்கையிலிருந்து விலகிக்கிறேன். என் முகத்தையே அதுக்கு அப்புறம் நீ பார்க்க மாட்ட. ஆனா திருப்தி இல்லன்னா, உன்னை என் கிட்ட இருந்து யாராலும் பிரிக்க முடியாது. அது நீயா இருந்தாலும் சரி. எங்கே போனாலும் தொடர்ந்து வருவேன்”

“கேட்டு தொலை வேணு”

“என் மேல உனக்கு எந்த பீலீங்சும் இல்லையா தானு?”

“இல்லை”

“பொய் சொல்லாதே”

“நான் தான் இல்லைன்னு சொல்லுறேன்ல” என கத்தினாள் தானு.

“ரிலேக்ஸ் தானு. சரி பீலீங்ஸ் இல்லைன்னா எதுக்கு முடியை புடிச்சு வெட்டுன?”

“அது வந்து வந்து” என திணறினாள் தானு.

“உன் மனம் என் கிட்ட சாயறதனால உனக்கு பயம் வந்துருச்சி.. அதனால தானே எனக்கு புடிச்ச மாதிரி இருக்க கூடாதுன்னு இப்படி செஞ்ச?”

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை. இது தான் இப்போதைய பேஷன். அதனால தான் இப்படி வெட்டுனேன். என்னமோ நான் உன்னையே நினைச்சி ஏங்கிகிட்டு இருக்குற மாதிரி கற்பனை பண்ணிக்காதே வேணு. ஏமாந்து போயிருவ.”

அவளை நெருங்கி அவளது தலையை செல்லமாக கலைத்துவிட்டான் விபா.

“என்கிட்ட இருந்து தப்பிச்சு போக குடுத்த ச்சான்சை வேஸ்ட் பண்ணிட்ட தானும்மா. இனி இந்த தானு எனக்குதான்”

“டோன்ட் டச் மீ வேணு! நீ எவ்வளவு கற்பனை பண்ணிகிட்டாலும் என் பதில் இதுதான். நீ உன் ஊருக்கே திரும்பி போயிரு. என் வாழ்க்கையிலே காதல், கல்யாணம் எதுக்கும் இடம் இல்லை. பாய் வேணு” என்றவள் கோபமாக எழுந்து நடக்க தொடங்கினாள்.

சிரித்தபடியே தானும் உடன் நடந்தான் விபாகர்.

இரவு 12 மணிக்குமேல் லேப்டாப்பை மூடி வைத்து விட்டு படுக்க ஆயத்தமானான் விபாகர். கதவு படபடவேன தட்டப்படும் ஓசை கேட்டது. இத்தனை மணிக்கு யாரு கதவை தட்டுறா?

“வரேன்” என்றபடி கதவை திறந்தான் விபா.

அங்கே டேனி கோபத்துடன் நின்று கொண்டிருந்தான்.

எட்டி நில்லு….

error: Content is protected !!