ENE— epi 22
ENE— epi 22
அத்தியாயம் 22
நல்லவன் இங்க எவன்டா எவன்டா நல்லவன்
நல்லவன் போல நடிக்க தெரிஞ்ச நல்லவன்
கெட்டவன் இங்க எவன்டா எவன்டா கெட்டவன்
நல்லவன் போல நடிக்க கோட்டை விட்டவன்
வா நான் வரவா வரவா உனை தொரத்தி வரவா
நீ விதைச்ச வலிய உனக்கு திருப்பி தரவா
சோல்மேட் வாட்ஸ் ஆப் குரூப்
தானு: “ஹாய் காய்ஸ். சாப்டீங்களா?”
டேனி: “சாப்டாச்சு டான்யா. இன்னிக்கு நீ வேலைக்குப் போகனும் தானே?”
தானு: “ஆமாடா. இதுக்கு மேல லீவ் போட்டேன்னா வேலையை விட்டு தூக்கிருவான் அந்த சிடுமூஞ்சி மேனேஜர்.”
டேனி: “சரி நான் கொஞ்சம் சீக்கிரமா உன்னை பிக் அப் பண்ணிக்கிறேன். லேட்ஸ் கோ எர்லி டின்னர். கேல்சிசி மால்ல இருக்குற பிட்சா போலாமா? அப்புறம் நீ அப்படியே வேலைக்கு போயிரு.”
தானு: “ஓகே டன். வேணு? பிசியா?”
டேனி: “வேணு பிசினா, நாம ரெண்டு பேர் மட்டும் போலாம் டான்யா.”
வேணு: “ஹாய் காய்ஸ். கொஞ்சம் பிசியா இருந்தேன். இப்ப ப்ரீதான். டின்னர் தானே. கண்டிப்பா போகலாம்.”
டேனி: “சரி லேட்டர் பார்க்கலாம் வேணு. பாய் டான்யா டியர்.”
தானு: “பாய்டா. பாய் வேணு.”
வேணு: “பாய்”
தானுவுக்கு பறக்கும் முத்த எமோஜியை அனுப்பிவிட்டே சேட்டில்லிருந்து வெளியேறினான் டேனி. அவர்கள் இருவரும் வெளியேறிய பிறகும் தொலைபேசியையே வெறிக்க பார்த்து கொண்டிருந்தான் விபா. டேனி மட்டும் நேரில் இருந்தால் முத்தத்தை அனுப்பிய கையை கடித்து வைத்திருப்பான். அவ்வளவு ஆத்திரம் வந்தது அவனுக்கு.
“என்னடா மச்சான் போனை இப்படி கோபமா பார்த்துக்கிட்டு இருக்க?” என கேட்டபடியே அவன் அருகில் வந்து அமர்ந்தான் பிரபு.
“எனக்கு வந்து வில்லனா வாச்சிருக்கானே அந்த டேனி அவனை நினைச்சி தான் இவ்வளவு கோபமா இருக்கேன்.”
“அவன் என்னடா பண்ணான் உனக்கு கோபம் வர அளவுக்கு?”
“என் தானுக்கு பறக்கும் முத்தம் அனுப்பறான்டா வாட்சாப்பில”
“ஹாஹாஹா. இதுக்கு போய் இவ்வளவு சீன் வேணான்டா. அவனுக்கு அதெல்லாம் ரொம்ப காசுவல். டென்ஷன் ஆகாதே. சரி, சரி டின்னர்க்கு போறப்ப என்னையும் மறந்துறாதே.”
“டேய், நாங்க மூனு பேரு தான்டா போறோம்.”
“இப்பத்தான் எனதருமை தங்கச்சி எனக்கு மெசேஜை போட்டு உன் கூட வர சொன்னா. இந்தா பாரு” என போனை காட்டினான்.
‘எல்லாம் என் தலை எழுத்து. ஏன்டி பைரவாவை மட்டும் விட்டு வைச்ச? அதையும் டின்னருக்கு கூட்டிட்டு வர வேண்டிதானே’ என முணுமுணுத்தான்.
“என்ன மச்சான் சொன்ன? சரியா கேக்கல”
“நீ இல்லாம எனக்கு சாப்பாடு இறங்காதுன்னு சொன்னேன் மச்சான்”
“டேய் நடிக்காதடா. பிகரு மாட்டிட்டா நண்பனை கழட்டி விடர கேங் தானே நீங்க எல்லாம்.”
“சேச்சே மச்சான். நாம அப்படியா பழகுறோம். நீ தான்டா முதல்ல. அப்புறம் தான் மத்தவங்க எல்லாம்”
“சரி நம்பிட்டேன். இப்ப போய் என் வேலையை பார்க்குறேன்.அப்புறமா கிளம்பும் போது மேசெஜ் பண்ணு” என்றவாறே வெளியேறினான்.
அதற்கு மேல் விபாவால் கணக்கு வழக்கில் கவனத்தை செலுத்த முடியவில்லை. பிரேமிட்ட போட்டோவை கையில் எடுத்தவன் தானுவையே பார்த்துக் கொண்டிருந்தவன். மெல்ல அவளது பிம்பத்தை தடவி கொடுத்தான். மனம் அமைதி அடைவது போல் இருந்தது.
‘ஐ லவ் யூ சோ மச் தானும்மா’
விபாவும் பிரபுவும், நண்பர்கள் இருவரும் வருவதற்கு முன்பே பீட்சா ரேஸ்டோரன்டை அடைந்திருந்தார்கள். நால்வர் அமரும்படி இருந்த மேசையில் எதிரும் புதிரும் அமர்ந்தார்கள் இருவரும்.
“பிரபு. என்ன செய்வயோ, ஏது செய்வயோ எனக்கு தெரியாது. தானு என் பக்கத்துல உட்காரனும். அவனை புடிச்சு உன் பக்கத்துல உட்கார வை”
“அந்த பிரச்சனையை என் கிட்ட விடு மச்சான். வச்சி செஞ்சிருவோம்.”
தானுவும் டேனியும் உள்ளே நுழைவது கண்ணில் பட்டது. இருவரும் சிரித்துபடியே இவர்களுக்கு கை ஆட்டினர். தானு அவளது ‘ஸ்டார்பக்ஸ்’ கருப்பு டீ ஷர்ட்டும், முட்டியில் கிழிந்த கருப்பு ஜீன்சும் அணிந்திருந்தாள். டேனியும் அவளுக்கு ஏற்றார்போல் கருப்பு டீ ஷர்ட்டும், அவளது போலவே முட்டியில் கிழிந்த ஜீன்ஸ்சும் அணிந்திருந்தான். ஒரே வித்தியாசம் அவனுக்கு வலது காலில் கிழிந்திருந்தது, இவளுக்கு இடது காலில்.
“ஏன்டா விபா. ரெண்டையும் பார்த்தா ராப்பிச்சைக்காரங்க மாதிரி இல்ல”
“அவனை வேணுன்னா அப்படி சொல்லு. என் தானுவ அப்படி சொன்ன பல்லை பேத்து கையில குடுத்துருவேன்”
“ஹ்ம்ம். எல்லாம் காதல் படுத்தும் பாடு.”
அதற்குள் அவர்கள் நெருங்கி இருந்தார்கள்.
“ஹாய் டேனி பாய். வா வா, வந்து என் பக்கத்துல உட்காரு” என அழைத்தான் பிரபு.
“ஹாய் பிரபு. வெளிய மேகி இருக்கு. போய் பார்த்துட்டு வாங்க” என்றான் டேனி.
“என் ஸ்கூல் க்ரஷ் மேகியா? இருடா விபா, நான் போய் பார்த்துட்டு வந்துருரேன்” என அவசர அவசரமாக வெளியேறினான் பிரபு.
தானுவை கைப்பிடித்து பிரபுவின் இடத்தில் அமர வைத்த டேனி, அவளது பக்கத்தில் தான் அமர்ந்து கொண்டான். என்னடா நடக்குது இங்கே என விபா உணர்வதற்குள் தான்யா விபாவின் எதிரே அமர்ந்திருந்தாள்.
“ஹாய் வேணு. இன்னிக்கு வேலை எல்லாம் எப்படி போச்சு?” என கேட்டாள் தானு.
“எப்பொழுதும் போல தான் தானு. இப்ப உடம்புக்கு எப்படி இருக்கு?”
“அவ நல்லா தான் இருக்கா வேணு.” என அவளை முந்தி கொண்டு பதிலலித்தான் டேனி.
அவர்கள் மேனுவை பார்க்க ஆரம்பித்த போது, பிரபு திரும்பி வந்தான்.
“டேய் டேனி. எங்கடா மேகியை காணோம்”
“என்ன பிரபு காணோம்னு சொல்லுறீங்க. வெளிய நல்ல பார்த்தீங்களா? அங்க தான் கூடையிலே மேகி நூடுல்ஸ் அடுக்கி வச்சிருந்தாங்க. நீங்க பார்க்கலியா?”
“என்னா ஜோக்கா? நீ தானடா என் க்ரஷ் மேகின்னு சொன்னே?”
“நான் எங்க அப்படி சொன்னேன்.வெளிய மேகி இருக்குன்னு சொன்னேன். இருக்காங்கன்னா சொன்னேன்?” என சிரித்தான் டேனி. அவனுடன் சேர்ந்து ஹை பைவ் குடுத்து கொண்டே சிரித்தாள் தானு.
அப்பொழுது தான் அவர்கள் சிட்டிங் அரெஞ்மேன்ட் மாறி இருப்பதையும், விபா முறைப்பதையும் கண்டான் பிரபு.
‘பிசாசுங்க ரெண்டும் என்னை வச்சு செஞ்சிருச்சுங்களே’ என முனகியவாறே விபாவின் பக்கத்தில் அமர்ந்தான் பிரபு.
“டான்யா, பெப்பரோனி பிட்சா உனக்கு பிடிக்குமே. அதே ஆர்டர் செய்யட்டா? நாம சேர் பன்ணிக்குவோம்.”
“சரி டேனி. அப்படியே சிக்கன் விங்ஸ் வேணும்”
“குடிக்க ஆப்பிள் ஜீஸ் சொல்லவா?”
“வேண்டாம். ரொம்ப சூடா இருக்கு. வாட்டர்மெலன் ஜீஸ் சொல்லுடா டேனி”
ஏதோ அவர்கள் இருவர் தான் சாப்பிட வந்தது போல் தங்களுக்குள்ளாகவே பேசி கொண்டார்கள் இருவரும்.
விபா டேனியை வெட்டவா குத்தவா என பார்த்துக் கொண்டிருந்தான். பிரபுதான் இடையிட்டு,
“டேனி நாங்களும் இங்கத்தான் இருக்கோம். எங்களுக்கும் பசிக்குது” என ஞாபகபடுத்தினான்.
“ஓ சோரி பிரபு. சொல்லுங்க என்ன வேணும்?” என கேட்டான் டேனி.
“வேணு, இங்க மேக்கரோனி நல்லா இருக்கும். ட்ரை பண்ணுறீயா?” என கேட்டாள் தானு.
“வேணு என்ன சின்ன குழந்தையா? அவருக்கு பிடிச்சத அவரே ஆர்டர் பண்ணிப்பாரு டான்யா. நீ இதை பாரு. புதுசா என்னமோ மெனுல சேர்த்திருக்காங்க. ட்ரை பண்ணுவோமா?” என தான்யாவின் கவனத்தை மீண்டும் அவனிடமே திசை திருப்பினான் டேனி.
ஆர்டர் செய்த உணவு வந்ததும் அமைதியாக சாப்பிட ஆரம்பித்தார்கள் நால்வரும்.
டேனி பீட்சாவை வெட்டி தானுவின் பிளேட்டில் போட்டான். தானுவும் சிக்கன் விங்சை எடுத்து டேனியின் பிளேட்டில் போட்டாள். விபா அவர்களை கவனித்து கொண்டே தான் இருந்தான். தானு அவளது வேலையை பற்றி ஏதோ சுவாரசியமாக பேசி கொண்டே சாப்பிட்டாள். பீட்சாவில் இருந்து ச்சீஸ் அவளது கையில் ஒழுகி விட்டது. டேனி நாப்கின்னை எடுத்து அவளது கையை துடைத்தது மட்டுமில்லாமல், அவளது வாயையும் மெதுவாக துடைத்து விட்டான்.
“டான்யா, நானும் குடிச்சு பார்க்கிறேன் டேஸ்ட் எப்படி இருக்குன்னு” என அவளது ஜீசை எடுத்து குடித்தான் டேனி.
“டேனீ!!! உனக்கு வேணும்னா ஆர்டர் செய்ய வேண்டி தானே. எப்ப பாரு என்னோடதை எடுத்துக்கிறதே வேலையா போச்சு” என சலித்துக் கொண்டாள் தான்யா.
“இப்ப என்ன பிரச்சனை. இந்தா என்னோடது. ரொம்ப டேஸ்டியா இருக்கு. குடிச்சு பாரேன்” என அவனது மெங்கோ ஜீசை அவளருகில் நகர்த்தினான்.
“எனக்கு மேங்கோ வேணாம் டேனி.”
“குடி டான்யா. யூ வில் லைக் இட்” என்றவன் ஸ்டிரோவை அவளது வாயருகில் கொண்டு சென்றான். அவள் குடிக்கும் வரை விடவில்லை.
அதை பார்த்து கொண்டிருந்த விபாவுக்கு கண்கள் சிவந்து, கழுத்து நரம்பு புடைத்தது. கோபத்தை அடக்க பிரபுவின் தொடையில் அவனது கையை வைத்து அழுத்தி கொண்டான்.
ஆவேன பிரபு கத்திய சத்தத்தில் பக்கத்து மேசையில் இருந்தவர்கள் கூட திரும்பி பார்த்தார்கள்.
“என்னாச்சி பிரபு” என பதறினாள் தான்யா.
விபாவை முறைத்தவாறே,
“ஒன்னும் இல்லமா. ரொம்ப நேரம் இப்படியே உட்கார்ந்து இருக்கேன் இல்ல அதான் கால் வலி எடுத்துருச்சு”
“நெஜமாவா பிரபு? யாரோ அடிச்ச மாதிரி கத்தனீங்க. உங்களுக்கேல்லாம் வயசாவுது இல்ல. அதான் அங்க இங்க வலிக்க ஆரம்பிக்குது” என சீண்டினான் டேனி.
“போதும்டா டேனி. என்னமோ எனக்கு நூறு வயசு ஆகிட்ட மாதிரி பேசாதே. ஏற்கனவே உன் மேல நான் செம்ம காண்டுல இருக்கேன். இதுக்கு மேல வாயை திறக்காதே” என்றான் பிரபு.
“வாயை திறக்காம எப்படி சாப்பிடறது” என ஜோக்கடித்த படியே சிரித்த தான்யாவுக்கு புரை ஏறிவிட்டது. கண்களில் கண்ணீர் வழிய இரும்ப ஆரம்பித்தாள் அவள். விபாவும் டேனியும் பதறி போய் ஒரே நேரத்தில் எழுந்தனர். விபாவுக்கு முன் டேனி அவளது தலையை தட்டி, முதுகை நீவி விட தொடங்கினான். விபாவை நிமிர்ந்து பார்த்த டேனி,
“நீங்க ஏன் நிக்கறீங்க வேணு?”
“ஒன்னும் இல்லை. ஐ நீட் டு கோ ரெஸ்ட்ரூம்” என்றவன் மடமடவென அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.
ரெஸ்ட்ரூம் உள்ளே நுழைந்தவன், முகத்தை தண்ணீர் அடித்து கழுவினான். அப்பொழுதும் கோபம் மட்டுப்பட மறுத்தது. சிறுது நேரம் குறுக்கும் நெடுக்கும் நடந்தான். பிறகு கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தான். கண்கள் சிவந்திருந்தன.
‘இன்னிக்கு டேனி நடந்துக்கிற முறையே சரி இல்லையே. எங்க ஏரியா உள்ள வராதே என்கிற மாதிரி இருக்கு அவனோட செயல் ஒவ்னொன்னும். போகட்டும் சின்ன பையனாச்சேன்னு கருணை காட்டுனது தப்பா போச்சு. ஐ நீட் டூ டேக்கல் திஸ் பாஸ்ட். இல்லைன்னா எனக்கு பைத்தியமே புடிச்சுரும். தானு இஸ் மைன், ஒன்லி மைன். டேம்மீட் டேனி’
தலையை உதறி மனதை ஒரு நிலை படுத்தியவன், உதட்டில் புன்னகையை ஒட்ட வைத்துக் கொண்டு மீண்டும் அவர்களை நாடி போனான்.
“வேணு, என்ன ஆச்சி? ஏன் கண்ணெல்லாம் சிவந்து இருக்கு? ஆர் யூ ஆல்ரைட்?” என கேட்டாள் தானு.
“ஒன்னும் இல்லை தானு. கை கழுவுறப்போ சோப் கண்ணுல பட்டுருச்சு. அவ்வளவுதான்.”
“எங்க காட்டு நான் பார்க்கிறேன்” என எழுந்தாள் தானு.
“நீ உட்கார்ந்து சாப்பிடு டான்யா. நான் பார்க்கிறேன்” என எழுந்தான் டேனி.
“பரவாயில்லை டேனி. ஐ எம் பைன்” என அவனை தடுத்தான்.
அப்பொழுதும் விடாமல் விபாவின் அருகில் வந்த டேனி, மெல்ல குனிந்து அவன் காதருகில்,
“என்ன பாஸ், அழுந்தீங்களா? இப்பத்தானே ஸ்டார்ட் பண்ணி இருக்கேன். நான் முடிக்கும் போது கதறிருவீங்க. எப்படி நம்ம அதிரடி?” என கிசுகிசுத்தான்.
கண்கள் இடுங்கினாலும் விபாவின் உதட்டில் பாராட்டுதலாய் ஒரு முறுவல் வந்தது.
“என்ன ரெண்டு பேரும் குசுகுன்னு பேசுறீங்க?” என கேட்டாள் தான்யா.
“அதுவா டான்யா, வேணு சார் சீக்கிரமா ஊருக்கு கிளம்பிருவாராம். ரொம்ப வேலை இருக்காம். நான் தான் இன்னும் கொஞ்ச நாள் இருங்கன்னு சொல்லிகிட்டு இருக்கேன்.”
“ஏன்டா டேனி? லெட் இம் கோ. நமக்காக அவரு வேலைய விட்டுட்டு இங்க இருக்க சொல்லுற. நீ கிளம்பு வேணு. வேலை எல்லாம் முடிச்சுட்டு அப்புறமா வா”
விபாவை மிதப்பாக பார்த்தான் டேனி.
‘நோட் பேட். தானு வாயாலே என்னை போன்னு சொல்ல வச்சிட்டியே. பொடி பையன்னு உன்னை சாதாரணமா எடை போட்டுட்டேன். என் மிஸ்டேக் தான்’ தாடையை தடவியபடியே டேனியை அளவிட்டான் விபா.
இருவருக்கும் இடையில் நடக்கும் பனிப்போரை சுவாரசியமாக பார்த்துக் கொனண்டிருந்தான் பிரபு. மனதுக்குள்ளேயே
‘சபாஷ் சரியான போட்டி’ என சிலாகித்துக் கொண்டான்.
“ஆமா தானு. சீக்கிரம் கிளம்பிருவேன். இன்னிக்கு நைட் நான் உன்னை பிக்கப் பண்ணிக்கவா?”
“உங்களுக்கு ஏன் சிரமம் வேணு. எப்போதும் போல நானே பிக்கப் பண்ணிக்கிறேன்.” என்றான் டேனி.
இருவர் முகத்தையும் மாறி மாறி பார்த்தவள்,
“தருண் அண்ணா வீட்டுல தான் இருக்காங்க. அவங்க வருவாங்க. நீங்க ரெண்டு பேரும் உங்க வேலையை போய் பாருங்க” என்றவள் அவள் சாப்பிட்ட டின்னருக்கு பணத்தை எண்ணி மேசையில் வைத்து விட்டு வேலைக்கு கிளம்பினாள்.
இவர்கள் இருவர் முகமும் போன போக்கைப் பார்த்து பிரபு வாய்விட்டு சிரித்தான்.
“ரெண்டு பேருக்கும் பல்பு குடுத்துட்டாளா? தானுவா கொக்கா. போங்க போய் வேலைய பாருங்க” என்றவன் மீண்டும் சிரிக்க ஆரம்பித்தான்.
தனது உணவுக்கும் பணத்தை மேசையில் வைத்த டேனி,
“வீ வில் மீட் சூன் வேணு” என ஒரு முறைப்புடன் வெளியேறினான்.
“என்னடா விபா, உன்னை முறைச்சிட்டு போறான்?”
“பையனுக்கு விஷயம் தெரிஞ்சிருச்சு. அதான் அந்த முறைப்பு”
“என்ன விஷயம், எப்படி தெரிஞ்சது?”
“அதுவும் கூடிய சீக்கிரம் அவன் வாயாலே வெளிய வரும்”
“என்னவோ பண்ணிட்டு போங்க. இதுல என் தங்கச்சி மட்டும் கண்ணை கசக்கிட்டு வந்தா, அப்புறம் நான் கொலைகாரனா மாறிருவேன்”
“வாடா போலாம். சும்மா காமெடி பண்ணிகிட்டு”
“என்னடா, பாசமலர் சிவாஜி ரேன்ஞ்சுக்கு டயலாக் விட்டா பொசுக்குன்னு காமெடின்னு சொல்லிபுட்ட” என புலம்பியவறே விபாவுடன் கிளம்பினான் பிரபு.
மறுநாள் காலை பத்து மணி வாக்கில் விபாவின் கேபின் கதவு தட்டப்பட்டது.
“கம் இன்”
கதவை திறந்து கொண்டு புயலென நுழைந்தான் டேனி. கையோடு கொண்டு வந்திருந்த பைலை விபாவின் மேசையில் விசிறி அடித்தவன்,
“என் டான்யாவை விட்டு ஒழுங்கு மரியாதையா விலகி போயிரு வேணு விபாகர்.”
“வா டேனி. உன்னைத் தான் எதிர்பார்த்து காத்துகிட்டு இருக்கேன். என்ன சொன்ன? உன் தான்யாவா? குட் ஜோக்.” என்றபடியே டேனி விசிறி அடித்த பைலை திறந்தான். அதில் இருந்ததை வெளியில் எடுத்தவன், அதிர்ச்சியாக டேனியை நிமிர்ந்து பார்த்தான்.