என்ன தவம் செய்தேன்

 தவம் —-20

‘அன்று விஜய் கொண்ட பதட்டம் தனக்கானது…அன்று அவன் காட்டிய அக்கறை தனக்கானது.அவன் பட்ட கவலை அவளுக்கானது ‘என்பது இன்று புரிய உடல் சிலிர்த்தது மதுராவிற்கு.

‘சார் வர குறைந்தது அரை மணி நேரமாது ஆகும்…அது வரை இவளை எப்படி சமாளிப்பது?திரும்பவும் சென்சார் வார்த்தைகளை பேசினால் என்ன செய்வது?’என்று யோசித்தவாறே பாத்ரூமில் இருந்து வெளியே வந்த மதுரா திகைத்தாள்.

சோபாவில் உருண்டு,பிரண்டு கொண்டு இருந்த சோனாவை அந்த அறையில் காணோம்.அவள் புடவை மட்டும் கார்ப்பெட்டில் கிடந்தது.

‘அப்படியே வெளியே போய் விட்டாளா…கடவுளே !’ஒரு கணம் மதுராவின் இதய துடிப்பு நின்றே போனது.அவள் அப்படி செய்ய கூடியவள் தான் என்பதால் மதுரா விதிர்விதித்து போனாள்.ஆனால் அப்படி எதுவும் நடக்காமல்,விஜய் மானம் கப்பல் ஏறாமல் கடவுள் தான் காப்பாற்றினார் போல் இருக்கிறது.சோனா சோபாவில் விழுந்த உடன் கதவை சாத்தி இருந்த மதுரா லாக் செய்ய மறக்கவில்லை.

‘கதவூ லாக் ஆகி தானே இருக்கு…இவ எங்கே போய் தொலைஞ்சா…?’என்று மதுரா நினைப்பதற்கும்,அந்த அறையில் இருந்த விஜய்யின் படுக்கை அறையில் இருந்து ஆங்கில பாடல் ஒலிப்பதற்கும் சரியாக இருந்தது.

விஜய்யின் அந்த ஆபீஸ் அறை நான்கு பகுதிகளாக பிரிக்க பட்டு இருக்கும்.முன்புறம் மதுராவிற்கான பி.ஏ அறை.அவன் அறையில் இருந்து கண்ணாடி தடுப்பால் பிரிக்க பட்டு இருக்கும்.உள்ளே வந்தால் விஜய் ஆபீஸ் அறை.மூன்று அறைகளாக பிரிக்க பட்டு இருக்கும்.ஆபீஸ் அறை,பாத்ரூம்,படுக்கை அறை.வேலை அதிகம் உள்ள நாட்களில் சேதுவும்,விஜய்யும் அங்கேயே உறங்கி விடுவார்கள்.இன்று அந்த அறையில் ஆடை அவிழ்ந்து கிடப்பதை கூட உணராமல் போதை ஊசியினை போட்டு கொண்டு இருந்தாள் சோனா.

மதுராவிற்கு மீண்டும் ஒரு முறை இதயம் நின்று பின் துடித்தது.குடி,போதை மருந்து பழக்கம் சோனாவிற்கு உண்டு என்பதை மதுராவில் ஏற்கவே முடியவில்லை.அந்த அறை கதவை சாத்தியவள்,தன்னை சமாளித்த படி சேரில் வந்து அமர்ந்தாள்.இரண்டு கிளாஸ் தண்ணீர் குடித்த பிறகே அவள் படபடப்பு குறைந்தது.

சோனாவின் வெளிநாட்டு கலாச்சாரம்,உடை,உணவூ பழகும் விதம் என்று அனைத்திலும் மிக அதிகமாவே தெரியும் என்றாலும்,இன்றைய ஆட்டம் வரம்பு மீறிய ஒன்று.

‘ஒருவேளை நாம தான் திருமண உறவை தவறாக நினைக்கிறோமோ…திருமணம் ஆன பின் பெண்கள் தங்கள் கணவனிடம் இப்படி தான் வெளிப்படையாக இருப்பார்களோ…தனக்கு தெரிந்த எந்த பெண்ணும் இது போலெ நடந்தது இல்லையே…இப்படி பட்டவர்த்தனமாக யாரும் இல்லறத்தை மூன்றாம் நபரின் முன் வெளியிட்டதில்லையே…குடி,போதை பழக்கம்…இன்னும் வேறு என்ன எல்லாம் பழகி வைத்து இருக்கிறாள்..’முதன் முறையாக சோனாவின் முகமூடி விலக,அங்கு தென்பட்ட கோரம்,விகாரம் மதுராவை திணற வைக்க,தலை வலிப்பது போலெ தோன்ற இரு கைகளால் தலையை பிடித்து அமர்ந்து விட்டாள்.

அப்படியே எவ்வளவூ நேரம் இருந்தாளோ,கதவூ தட்ட படும் சத்தம் கேட்டு நிமிர்ந்தாள்.விஜய் நின்று இருப்பதை பார்த்து திகைத்து போனாள்.அரை மணி நேர பயணத்தை பதினைந்து நிமிடங்களில் கடந்து வந்து இருக்கிறான்.

‘மனைவி மேல் அவ்வளவூ அக்கறை,காதல் போல் இருக்கு…இப்படியொரு காதலை அடைந்த சோனாவிற்கு வாழ தெரியவில்லையே.’என்று தான் அன்று கவலை பட்டது எல்லாம் வீண்.

விஜய் அவ்வளவூ வேகமாக கார் ஒட்டி,பதினைந்தே நிமிடங்களில் விரைந்து வந்ததிற்கான காரணம் சோனா அல்ல ‘ தான் ‘ என்று,இன்று தெளிவாக புரிந்தது மதுராவிற்கு

மதுரா கதவை திறந்த உடன்,அவசரமாக உள்ளே வந்தவன்,கதவை மூடி தாழ் இட்டு,மதுராவின் இரு தோளிலும் கை வைத்து,”மதுரா !உனக்கு ஏதும் இல்லையே மா…உன்னை ஏதாவது சொன்னாளா…எதுவும் உன்னை செய்யலை தானே…ஆர் யூ ஆல்ரைட்?”என்றான் ஒருவித தவிப்போடு.

இமைக்க மறந்து போய்,வாய் திறந்து திறந்து மூட அவன் கைகளில் தான் சிலையாக நின்ற நிலை இன்று மதுராவிற்கு நினைவுக்கு வந்தது.அவன் கண்களில் இருந்தது என்ன?அவன் முகத்தில் தென்பட்ட பாவம் தான் என்ன?’இரும்பு மனிதன் ‘என்று தொழில் வட்டத்தில் பெயர் எடுத்து இருந்தவனின் அந்த கலக்கம்,தவிப்பு,துடிப்பு அன்று எதற்காக என்று புரியாதவளாய் ஸ்தம்பித்து நின்றாள் மதுரா.

அந்த பூம்பாவை..அவன் கண்களோ,அவன் கைகளின் தொடுகையோ,அவனிடம் இருந்து வெளிப்பட்ட ஏதோ நூதன உணர்வூ மதுராவின் இதய துடிப்பை ஒரு கணம் நிறுத்தி,பின் பன்மடங்கு துடிக்க வைத்தது.நெஞ்சாம் கூடே காலியான உணர்வூ.

பிரபஞ்ச சுழற்சியே நின்று விட்டது போன்ற பிரமை கூட மதுராவிற்கு ஏற்பட்டது.இருவரும் அந்த மௌன நிலையில் எவ்வளவூ நேரம் நின்றார்களோ அவர்களுக்கே தெரியாது.

“மது !”விஜய்யின் அந்த அழைப்பு மதுராவிற்கு புதிது போல தோன்றாத்ததையும்,தனக்கு அந்த அழைப்பு பிடித்து இருப்பதையும் ஒருவித அதிர்ச்சியோடு பார்த்து கொண்டு இருந்தாள்.அந்த அழைப்பு,குரலில் இருந்த ஏதோ ஒன்று அவள் உயிர் வரை பாய்ந்தது.

முதலில் தன்னை மீட்டவள் மதுரா தான்.பெண்மையின் உள் உணர்வூ ஏதோ சூழலில் சிக்குவதை போலெ உணர வைக்க,விஜய்யின் செய்கையின் காரணத்தை ஆராய்வதை மேற்கொள்ளவே இல்லை.அதை செய்து இருந்தால் சோனாவின் குறியாக தான் ஏன் ஆனோம் என்று புரிந்து இருக்கும்.ஆனால் வழக்கம் போலெ தேவையானதை விட்டு விட்டு தேவை அற்ற ஆராய்ச்சியில் இறங்கினாள் மதுரா.

‘சார் எப்படி எவ்வளவூ வேகமா வந்தார்?’என்ற பிரமிப்பு மட்டுமே அது என்று அந்த பேதை மனம் சொல்லி இருந்தது.இது நாள் வரை நம்பிய பொய் இன்று தோட்டத்தில் யோசிக்கும் போது பொய்த்து போனது.

‘அன்று சோனாவிற்காக விஜய் துடிக்கவில்லை.உச்சி முதல் உள்ளங்கால் வரை அன்று தன்னை ஆராய்ந்த அவன் பார்வை,அதில் தெரிந்த பயம்,கலக்கம்,பின் ‘ஒன்றும் இல்லை,நலமாய் இருக்கிறாள் ;என்று அறிந்ததும் முகத்தில் பிரதிபலித்த நிம்மதி,’தேங்க் காட் ‘என்ற முணுமுணுப்பு,கண்களில் கண்ணீர் போன்ற பளபளப்பு ——இவை எல்லாம் எதற்காக?அவன் செயல்கள் எழுப்பிய கேள்விகளுக்கான விடையை மதுரா அன்று தேடவில்லை.தேட துணியவில்லை என்பதே நிதர்சனம்…

எங்கோ கண்ணாடி உடையும் சப்தம் இருவரையும் நிகழ் காலத்திற்கு திருப்பி தன்னிலைக்கு வரவழைத்தது.

“சாரி…சாரி…மிஸ்.மதுராக்ஷி…யூ ஆர் ஆல் ரைட்…நோ?”என்றவன் பெருமூச்சுகளை எடுத்து விட்டு தன்னை சமாளித்தவாறு அவளுக்கு முதுகு காட்டி திரும்பி நின்றான்.

“சார்…எனக்கு என்ன சார்…வந்து விட போகிறது…மேடம் தான் சார்… “என்று அவன் காதல் மனைவியின் நிலையை கூற முடியாதவளாய் திணறினாள்.

தன்னை அக்கா என்றோ,விஜயயை மாமா என்றோ அழைக்க கூடாது.சார்,மேடம் என்று மட்டுமே அழைக்க வேண்டும் என்று ஏற்கனவே கட்டளை இட்டு இருந்தாள் சோனா.அதாவது மதுரா வேலைக்காரி…வேறு எந்த உரிமையும் கிடையாது,என் காலுக்கு கீழ் தான் அவள் என்று விஜய்கான செய்தி அது (அட பிசாசே…இப்படி எல்லாம்…முடியல…எப்படி எல்லாம் torture பண்றதுன்னு அகராதியே போடுவே போல் இருக்கே )

அவன் துடிப்பு,தவிப்பு எல்லாம் பொய்யோ என்னும் விதமாக,திரும்பியவனின் முகம் உணர்ச்சிகள் துடைத்த பாறையாக மாறி இருந்தது.

“எங்கே அவ… “என்றவனின் குரலில் வழிந்தது நிச்சயம் வெறுப்பே

“உங்க பெட்ரூமில்… “என்றவளின் வார்த்தையை கேட்டு வெகு வேகமாக அறையை நோக்கி சென்றவன் சட்டென்று நின்றான்.

அவன் வேக நடைக்கு ஈடு கொடுத்து அவன் பின்னாலேயே ஏறக்குறைய ஓடி வந்தவள்,அவன் அப்படி சட்டென்று நிற்பான் என்று எதிர்பார்த்து இராததால் அவன் முதுகின் மீது மோதியவள்,கீழே விழுந்து விடாமல் இருக்க பின்புறம் இருந்து அவனை அணைத்து இருந்தாள்.

(நம்தன…நம்தன…நம்தன…ஐயோ தேவதைங்க எல்லாம் வைட் ட்ரேஸ்ல ஆடலீங்க…சும்மா நாந்தேன் பாடினேன்…ஹிஹி…)

அவனை ஒரு பிடிமானத்திற்கு தான் மதுரா அணைத்தது…அதில் எந்த தவறான எண்ணமும் இல்லை தான் என்றாலும்,அவன் உடல் அவள் கைகளில் பலமுறை சிலிர்த்தது.கை முஷ்டிகள் இறுக,கண்களை மூடி,வேக மூச்சுகளுடன்,கீழ் உதட்டினை பற்களால் கடித்து,கண்ணை மூடி அவன் நின்ற கோலத்தை எதிரே இருந்த ஆள் உயர கண்ணாடியில் மதுராவினால் பார்க்க முடிந்தது.

அவன் அன்று நின்ற கோலம் இன்று வேறு விதமான சந்தேகங்களை எழுப்ப முயல,தன் எண்ணம் போகும் போக்கினை கண்டு திணற ஆரம்பித்தாள் மதுரா.வலுக்கட்டாயமாக அவன் நின்ற நிலையை ஆராய முற்பட்ட மனசாட்சியை ஒரு தட்டு தட்டி உள்ளே பூட்டினாள்.அதன் பின் நடந்தவை மீண்டும் படமாக ஓட ஆரம்பித்தது அவள் மனக்கண்ணில்

முதலில் சுதாரித்து மதுரா தான். “ஐயோ சாரி அத்தான்…சாரி சாரி கருணா…ஐயோ சாரி சாரி சார்…தெரியாம இடிச்சுட்டேன்…சாரி…” என்று உளறி கொட்டினாள்.

மீண்டும் அவன் தலையை உலுக்கி கொள்வதையும்,தலை முடியை கோதி விடுவதையும் கண்டவள்,கண் முடி திறப்பதற்குள் மீண்டும் அவன் மீண்டு இருந்தான்.

“வாட் இஸ் திஸ்?”என்றான் கையை கீழே காட்டி -அவன் காட்டிய திசையில் கார்ப்பெட்டில் விழுந்து கிடந்தது சோனாவின் புடவை.அதை கண்ட பிறகு தான் அவன் நின்றது.

‘கடவுளே !இது எல்லாம் எனக்கு தேவை தானா…?”என்று தன்னையே நொந்து கொண்டாள் மதுரா.சோனா நடத்திய கூத்தை ஒரு ஆணிடம் எப்படி அவளால் எப்படி சொல்ல முடியும்?

“மிஸ்…மதுராக்ஷி “என்றான் கருணா மீண்டும்

“என்ன வச்சு இருக்கே மதுரக்ஷிக்கு?’மனதிற்குள் கவுண்டர் ஓடியது மதுராவிற்கு.

“வாட் இஸ் திஸ்?”என்றான் விஜய் புடவையை சுட்டி காட்டி

‘ஹ்ம்ம்…பார்த்தா தெரியலை…புடவைன்னு…’

“இது இங்கே என்ன பண்ணுது?”என்றான் விஜய் எரிச்சலுடன்

‘ஹ்ம்ம்ம் சட்டி,பானை பண்ணுது…கேக்கறான் பார் கேனை…’மீண்டும் மனசாட்சி

“என்ன மிஸ் மதுராக்ஷி…கேள்வி கேட்டுட்டு இருக்கேன்…மனதிற்குள் எனக்கு அர்ச்சனை செய்துட்டு இருக்கீங்க போலெ இருக்கே… “என்றான் நக்கலாக

பேய் முழி முழித்து தன்னை தானே காட்டி கொடுத்தவள்,”ச்சே சே…அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை சார்…ஒன்றுமே இல்லை…சார்…அது மேடம் புடவை… “என்றாள் திணறலுடன்.

“லுக் மிஸ் மதுராக்ஷி…நீங்க சுடியில் இருக்கீங்க…எனக்கு புடவை எல்லாம் கட்டி பழக்கம் இல்லை…சோ மீதம் இருப்பது உங்க மேடம் மட்டும் தான்…சோ இது அவங்க புடவையாக தான் இருக்கும்…நான் கேட்டது அது இல்லை…உங்க மேடம் புடவை அவங்க கிட்டே இருக்கமா,என் ஆபீஸ் அறையில்,என் கார்ப்பெட்டில் என்ன செய்யுது என்று தான் கேட்டேன்… “என்றான் விஜய்

“சார்…சார்… “என்று இழுத்தாள் மதுரா.

“கம் டு தி பாயிண்ட் மதுரா…பின் வாயால் தந்தி அடிக்கலாம்…வாட்ஸ் கோயிங் ஆன் ஹியர்?”என்றான் அவன் மீண்டும்.

பெருமூச்சை வெளி இட்ட மதுரா,”சார்…சோனா மேடம்…ட்ரிங்க்ஸ் எடுத்து இருகாங்க சார்…ஷி இஸ் நாட் இன் கண்ட்ரோல்…உங்களை கேட்டு புலம்ப ஆரம்பிச்சுட்டாங்க…உங்க…பெட்…ரூமில் இருகாங்க…உங்க கிட்டே ஏதோ பேசணுமாம்… “என்றாள் முகம்

சோனா குடிப்பது அவனுக்கு புது விஷயம் இல்லை போலெ இருந்தது…அவன் எந்த திகைப்பையும் காட்டாமல்,கை கட்டி தன் டேபிள் மேல் சாய்ந்து நின்றான்.சோனாவை தேடி ஓடுவான்,என்ன ஆச்சோ என்று பதறுவான் என்று மதுரா எதிர்பார்க்க,அவனோ சோனாவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நின்ற விதம் மதுராவிற்கு திகைப்பை உண்டாக்கியது.

மதுரா ஏதோ சொல்ல முயன்ற சமயம்,பெட் ரூம் கதவை திறந்து கொண்டு தள்ளாட்டத்துடன் வெளியே வந்தாள் சோனா.அது வரை இருந்த இலகு தன்மை மறைந்து மேலும் இறுகி நின்றான் கருணா.அவள் வரும் சத்தம் கேட்டு கூட அவன் பார்வை தன் முகத்தை விட்டு ஒரு இன்ச் கூட நகரவில்லை என்பதை கண்ட மதுரா இருவரையும் மாறி மாறி பார்த்து மிடறு விழுங்கினாள்.சோனா நெருங்கி வர வர,விஜய் அந்த டேபிளை சுற்றி நகர்ந்தவனின் கண்கள் மட்டும் என்னவோ தவம் போலெ மதுராக்ஷியின் முகத்தை விட்டு அகலவேயில்லை.

“டேய்…கருணா…கருணா…பிச்சைக்கார பரதேசி…நான் யார் தெரியுமாடா…நான் சோனா…பிரபஞ்ச அழகிடா…என் பின்னால் சுத்தாதவனே இல்லை…என் கண் பார்வைக்கு விழாதவன் எவனுமே இல்லை…தொட்டவங்க என் காலில் அடிமையாக கிடைப்பானுங்கடா…நான் வேண்டும்ன்னு சுத்தி சுத்தி வருவானுங்க…தெரியுமா உனக்கு…ஆனா நீயி…என் பக்கத்துல நிற்க கூட தகுதி இல்லாதவன்டா…போனா போகுதேன்னு உன்னை புருஷன் ஆக்கினேன்…நாலு…நாலு,…வருஷமா…தாலி கட்டும் போது கூட உன் விரல் நுனி கூட என் மேல் படலை…எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா…அதான் சொல்வாங்களே…ஒன்று,இரண்டு,மூன்று முடிச்சு…ஒன்னு கூட நீ போடலை…சொர்ணா மம்மி தான் போட்டுச்சு…தெரியாதுன்னு நினைச்சியா நீ…அப்படி எவளுக்காக டா உன்னை காப்பாத்திட்டு இருக்கே…நாலு வருஷம்…எத்தனை தடவை…நீ வேண்டும் என்று கேட்டு இருக்கேன்…ஒஒஒஒஒஒ…பத்து வருட இதய தேவதை…அவளுக்காகவா…அவளுக்காக…அவளை மட்டும் தான் தொடுவியா…கட்டி பிடிப்பியா…கிஸ் பண்ணுவியா…மத்த…மத்த…ஆல்…ஐ வாண்ட் யு…ஹாவ் மீ கருணா…ஹாவ் மீ…தெரியும் டா அவ யாருன்னு…நீ எனக்கு தான்,…எனக்கு மட்டும் தான்…இப்போ அவ என் கையில்…அவளை அழிக்காம விட மாட்டேன்…அவ சாகனும்…கொல்லுவேன்…துடிக்க துடிக்க…ஹா…அம்ம்ம்ம்ம் மா “என்று அலறியவாறு அந்த அறையின் மூலையில் சென்று விழுந்தாள் சோனா

விஜய்யின் கரம் சோனாவின் கன்னத்தை பதம் பார்த்து இருந்தது.ஆனால் அப்பொழுதும் விஜயின் கண்கள் மதுராவின் முகத்தை விட்டு நகரவேயில்லை.மதுரா தான் சோனா கூறியதை கேட்டு உச்ச கட்ட அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.

‘இவ்வளவூ தரம் கெட்டவளா…சோனா !’உடல் கூசி அருவெறுத்து போனது மதுராவிற்கு.குமட்டி கொண்டு வர பாத்ரூமுக்கு ஓடியவள் உண்மையிலே வாந்தி எடுத்தாள்.மதுரா தன்னை சுத்தம் செய்து கொள்ள தண்ணீர்,டவல் எடுத்து வந்து நின்றான்.

தன்னை சுத்தம் செய்து கொண்டு வெளியே வந்த மதுரா கொடுக்க பட்ட அறையின் வேகத்தில் விழுந்து இருந்த சோனா மயங்கி கிடந்தாள்.உபயம் -அளவுக்கு அதிகமான குடியும்,போதை மருந்தும்,விஜய்யின் தர்ம அடியும்.விழுந்த வேகத்தில் தாறுமாறாக ஏறி இருந்த இன் ஸ்கர்ட்,சோனாவின் இரு தொடைகளிலும் காணப்பட்ட நூற்று கணக்கான சிறு ஊசி தடயங்களை மதுராவிற்கு காட்டியது.

சோனாவின் பேச்சை கேட்டே வெலவெலத்து போய் இருந்த மதுரா,தான் கண்ணால் காண்பதை நம்ப முடியாதவளாய்,உறுதி செய்ய சோனாவையும்,விஜயயையும் மாறி மாறி பார்த்தாள்.அப்பொழுதும் விஜய் கண்கள் மதுராவின் முகத்திலேயே எவ்வித உணர்ச்சியையும் காட்டாமல் நிலைத்து இருந்தது.சோனாவின் பக்கம் அவன் பார்வை திரும்பவே இல்லை

என்ன நினைத்தானோ,மதுராவின் கை பிடித்து,சோனா இருந்த அறையை விட்டு அவளை வெளியே இழுக்காத குறையாக இழுத்து வந்தவன் முன்னறையில் இருந்த சேரில் மதுராவை அமர வைத்தான்.அவள் அருகே இருந்த பிளாஸ்கில் இருந்து சூடான டீயை கப்பில் ஊற்றி,சர்க்கரையை அளவுக்கு அதிகமாகவே போட்டு,குழந்தைக்கு ஊட்டி விடுவது போலெ மதுராவிற்கு பருக கொடுத்தான்.

அதிக இனிப்பால் முகம் சுளித்தவளை கண்டு,”ஷாக் குறையும்…வாந்தி வேறு எடுத்து இருக்கே…குடிமா… “என்றான்

அவள் குடித்து முடித்ததும் சமாளித்து கொண்டாள் என்பதை உறுதி செய்து கொண்டவன்,”இப்போ புரியுதா மதுரா எதற்கு இத்தனை பேர் இவளிடம் வேலைக்கு சேர வேண்டாம் என்று சொன்னோம் என்று…உன்னை போன்ற குடும்ப பெண் இருக்க வேண்டிய நரகம் இது இல்லை…மனித முகமூடி அணிந்து மிருகங்கள் மனிதர்கள் என்ற போர்வையில் வாழும் காடு இது…நீ…உன் அப்பா நினைப்பது போலெ குடும்ப நலன்,ஒற்றுமைக்காக உன்னை அவள் இங்கே வரவழைக்கவில்லை…அதை புரிந்து கொள்…இனிமேலும் நீ இங்கு இருந்தால்…உன் பெயரையும் கெடுத்து விடுவாள்…எந்த நிமிஷம் எப்படி மாறுவாள் என்று தெரியாது…அவள் எது செய்தாலும் அது அவளுக்கு மட்டுமே நன்மையாகும்…மற்றவர்களின் வாழ்வூ குட்டி சுவராகி விடும்…இப்பொழுதாவது புரிந்து இருக்கும் அவ நல்லவ இல்லை மதுரா. “என்றவன் தன் மொபைல் எடுத்து கஜேந்திரனுக்கு அழைப்பு விடுத்தான்.

“மிஸ்டர்…கஜேந்திரன்… “என்று வெகு நக்கலாக அழைத்தவன்,” பேத்தி இங்கே மெயின் ஆபீஸ்யில் வழக்கம் போல FULL போதை ஆகி மட்டை ஆகிட்டாங்க…சொர்ணா மேடத்தை கூட்டி வந்து இவங்களை தூக்கி போங்க…ஒஒஒஒஒஒ…சொர்ணா மேடம் வர மாட்டாங்களா…ஒஒஒஒஒஒ அவங்க என் வேலைக்காரி இல்லையா…அப்பப்போ ஓகே…நீங்களே உங்க கையால் உங்க பேத்திக்கு டிரஸ் போட்டு கூட்டி போங்க…ஹம்ம்ம்ம்ம் என்ன சொல்றேன்னா…சுரக்காய்க்கு உப்பு இல்லைன்னு…FULL போதையில் டிரஸ் அவிழ்ந்து கிடக்காங்க மேடம்…அதை உங்களால் போட முடியுமா?அதற்கு தான் சொர்ணா மேடத்தை கூட்டி வர சொன்னேன்…ஆபீஸ் லேடி ஸ்டாப் வச்சு டிரஸ் போடலாம் தான்…பட் நியூஸ் லீக் ஆகி,நாளை மீடியாகாரங்க மைக்கை உங்க வாயிலேயே சொருகினா என்ன சொல்ல போறீங்கன்னு இப்பவே ரிஹர்சல் பார்த்துக்கோங்க…பாரின் டெலிகேட்ஸ் வராங்க…ஆர்டர் கொடுக்க…அவங்க முன்னாடி உங்க ஆசை பேத்தி ரகளை செஞ்சு ஆர்டர் ‘வெற்றி குரூப்ஸ் ‘க்கு போனா என்னை சொல்லி நோ யூஸ்…பல கோடி ரூபாய் ஆர்டர்…வறீங்களா…குட்… “என்று அழைப்பை துண்டித்தவனை “ஆஆஆஆ ‘வென்று வாயை பிளந்து பார்த்து கொண்டு இருந்தது இன்று நினைவுக்கு வந்தது.

penance will continue… தவம் தொடரும்…

 

 

Written by

Ardent reader, kirukkufying something, want to travel with characters around me.

error: Content is protected !!