Ennai Ko(ve)llum vennilave 10

~10~​


விகாஷையும் கடலையும் மாறி மாறிப் பார்த்தவன் தலையில் அடித்துக் கொண்டு, “கல்யாணம் பண்ணித் தொலையுறேன்..” என்ற வேண்டா வெறுப்பான அவனது சொல்லக் கேட்ட விகாஷ், காரின் ஜன்னலைத் திறந்து தலையை மட்டும் வெளியே நீட்டி,

“டேய் ஆதி..அங்க என்னடா சவுண்டு..?சீக்கிரம் வந்து காரை எடு..” எனக் கத்த, அதில் திரும்பி விகாஷை முறைக்கவும், கண்டும் காணாதது போல் அமர்ந்து கொண்டான்.

அதே முறைப்புடன் காரில் அமர்ந்து ஸ்டார்ட் செய்தவன் அமைதியாய் வண்டியை ஓட்ட, “ஆதி, அம்மாவுக்கு ஃப்ரூட்ஸ் வாங்கனும்..” விகாஷ் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஓரமாய் பழமுதிர் கடை ஒன்று வர, அதன் பக்கத்திலே வண்டியை ஓரங்கட்டி நிறுத்தியவன்.

“வா..” என்று விகாஷை அழைத்தான்

“ஆதி, விளையாடுறீயா..? ஏதாச்சும் சூப்பர் மார்க்கெட் பார்த்து நிறுத்து..இங்க ரோட்டு கடையிலா வாங்குவாங்க..தேட்ஸ் நாட் ஹைஜினிக்..” என்றவனிடம், ‘’அப்படியா..?’ எனப் புருவம் உயர்த்தியவன்..

“விகா..இங்கயும் அங்கயும் ஒரே ஃப்ரூட்ஸ் தான்..அங்க ஏசி’ல வச்சி சேல் பண்ணுறாங்க அவ்வளவு தானே தவிர, எங்க ஃப்ரூட்ஸ் வாங்குனாலும் வாஷ் பண்ணித் தான் சாப்பிட போறோம் அன்ட் ஆல்சோ வீக்லி வாங்க தான் போறோம்…சீப் அன்ட் பெஸ்ட் விகா கம்..” என்றவன் விகாஷை அழைத்துக் கொண்டு தலையில் கேப் மாட்டி முகம் தெரியாதவாறு வர, அவனைப் பார்க்க விகாஷிற்கே சிரிப்பாய் இருந்தது.

ஒருவாறாகப் பழங்களை வாங்கிக் கொண்டு வண்டியில் ஏறியதும், “ஆதி, அது என்ன டா முகமூடிகொள்ளைக் காரன் மாதிரி ஃபேஸ் கவர்பண்ணிட்டு போற..” நக்கலாய் கேட்பவனை முறைத்தவன்..

“ஏன்டா சொல்ல மாட்ட…நம்மோட கம்பெனி வோனர் நீ..வேர்டுல தேர்டு ரிச் மேன்…உன் காலேஜ் போட்டோவ கொடுத்ததோட சரி, பப்ளிகல ஒரு இன்ட்டர்வியூ கூட கொடுக்கமாட்டிக்க..நானும் பிரபல கட்சி இன்னால் முதலமைச்சார் மாதிரி உன் போட்டோவ பின்னாடி மாட்டி வச்சிக்கிட்டு, உன் சார்ப்பா நான் கொடுத்து கொடுத்து இன்னைக்கு என்னால நிம்மதியா எங்கயும் போக முடியல..” முணுமுணுப்பாய் அவன் உரைக்கவும், பலமாய் சிரித்தான் விகாஷ்.

“விடு ஆதி..நீ என்னோட வொர்க்கிங் பார்ட்னர்..”விகாஷ் சொல்லி கொண்டிருக்கும் போதே தடுத்தவன்
“உன்னோட எம்ப்லாயி மட்டும் தான்..வொர்க்கிங் பார்ட்னர் இல்ல..”அவசரமாய் திருத்தியவனை முறைத்து, வெளியே வேடிக்கைப் பார்க்கத் துவங்கினான்.

“விகா..” கோபமாய் இருப்பவனை பாசமான குரலில் அழைத்த ஆதியை நம்பமாட்டாது பார்த்து, என்ன? என்று புருவத்தை உயர்த்தியவனிடம்

“விகா..” என்றான் மறுபடியும்

“சொல்லித் தொலையேன் டா..” விகாஷின் சிடுசிடுப்பில்

“சரி சரி..நோ ஆங்கிரி பேர்ட்..அம்மா கிட்ட நீ பேசி ஆப்ரேஷனுக்கு சம்மதம் வாங்கிக் கொடு டா..” மறுபடியும் முதலில் இருந்தா என்பதைப் போல் பார்த்தவன்..

“ஏன்டா இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான கல்யாணம் பண்ணிக்கப் போகிறதா சொன்ன..அதுக்குள்ள உனக்கு என்ன..?”

“அப்போ ஏதோ கோபத்துல சொல்லிட்டேன்..இப்போ தான் கோபம் இல்லையே..” இந்தப் பதில் சொன்ன ஆதியை எதை வைத்து அடிக்கவென விகாஷ் தீவிரமாய் யோசிக்கவுமே,
“என்னடா விகா யோசிக்கிற..” என்றான் ஆதி

“ம்..உன்னை எதை வச்சி அடிக்கலாம்னு தான்..”

“எதுக்கு டா நான் என்ன பண்ணுனேன்..?”

“என்ன டா நீ பண்ணல..இப்படி மாத்தி மாத்தி பேசுற..” கோபமாய் பேசிய விகாஷை பாவமாய் ஆதி பார்க்கவும்
“சரி அப்படி பார்த்து தொலையாதே அம்மாகிட்ட சொல்லுறேன்..” சரியெனச் சொல்லிய விகாஷைப் பார்த்து ஈயென பல்லைக் காட்ட,

“டேய்..ரோட்டைப் பார்த்து ஓட்டு..” விகாஷ் சாதாரணமாய் சொல்லிவிட்டான் தான் ஆனால் மரணத்தில் வாயிலில் நிற்கும் வேணியிடம் இதை எப்படி சொல்வது என அவன் யோசிக்கும் போதே மருத்துவமனை வந்துவிட்டது..

“விகா, லெப்ட் சைடுல லாஸ்ட் ரூம் நீ போ ..நான் பார்க் பண்ணிட்டு வரேன்..” முன்னாடி பார்க் செய்ய இரண்டு வண்டி நிற்க அதில் கவனத்தைப் பதித்திருந்த ஆதிக் உரைக்கவும்..

“சரி டா..” என்ற விகாஷும் பழப் பையை எடுத்துக் கொண்டு, வேணியின் அறை நோக்கிச் சென்றான்.

வேணி, தர்மர் மற்றும் ராஜின் கூட்டணி இன்னும் விகாஷிடம் இருந்து தகவல் எதுவும் வராததைக் குறித்து தீவிரமாய் விவாதித்துக் கொண்டிருக்க, கதவைப் பூட்ட மறந்து சத்தமாய் பேசிச் சிரித்து கொண்டிருந்தனர்.

அறைக்குள் விகாஷ் நுழையும் முன்னே ராஜின் கேலியும் அதற்கு வேணியின் திடமான குரலில் கவுண்டரும் எனச் சத்தம் காதைக் கிழிக்க, அவர்களின் நடிப்பு புரிந்து விகாஷிற்கே ஒரு நிமிடம் தலை சுத்திவிட்டது.

கையில் வைத்திருந்த பழப்பை அவனைப் பார்த்து பல்லைக் காட்ட, வேகமாய் கதவுத் திறந்ததும் சிரித்துக் கொண்டிருந்த வேணி, மயக்கம் வருவது போல் நடிக்க, விகாஷைப் பார்த்த ராஜோ ஒருபடி மேலே சென்று அழத் துவங்கினான்.

மயக்கம் வருவதைப் போல் நடிக்கும் வேணி ஒருபுறம், அழுது நடிக்கும் ராஜ் ஒருபுறம் என்றால் என்ன செய்வது எனப் புரியாமல் பேந்த பேந்த விழிக்கும் தர்மர் மறுபுறம்..மூவரையும் ஒரு பார்வை பார்த்த விகாஷிற்கே இப்போது அழுகை வந்துவிடும் போல,

“கொஞ்சம் நாடகத்தை நிறுத்துறீங்களா..?” இருக்கை கூப்பி விகாஷ் கேட்கவும் சுவிட்ச் போட்டது போல், இருவரும் தர்மரை போல் அலங்க மலங்க விழிக்க

“யப்பா சாமி..என்னா ஒரு நடிப்பு..?” நெஞ்சில் கை வைத்து விகாஷ் சொல்லவும்

“விகா..கண்டுபிடிச்சிட்டியா..?” வேணியின் கேள்விக்கு முறைத்தவன்

“கதவைத் திறந்து வச்சிட்டு தான் உங்க ஊருல பேசுவாங்களா..?” என்றான்

“எருமை..எல்லாம் உன்னால தான்..” பக்கத்தில் இருந்த ராஜை அடிக்க, அவனோ, “எல்லாம் அப்பா தான்..அவர் தான டோர் பக்கத்துல இருக்கார்..” என அவசரமாய் அன்னையைத் தந்தையின் பக்கம் திசை திருப்பிவிட
“அந்த ஆளு ஒரு காசுக்கு ஆக மாட்டாரு டா..விகா, எப்படி அம்மா ஆக்டிங்” புருஷரை திட்டிவிட்டு விகாஷிடம் பெருமையாய் வேணி கேட்க,

“ஆனாலும் மம்மி ஒரு பேமஸ் ஆடிட்டர் அதுவும் எங்க கம்பெனிக்கு கூட ஆடிட் பண்ண டைம் இல்லாத பிஸி மேன்’ன இப்படி சொல்லுறதுலாம் ஓவர்…” நமட்டு சிரிப்பில் விகாஷ் சொல்ல, அவனை முறைத்த தர்மர்
“போன மாசம் தான டா, உன் ஹெட் ஆபிஸ்க்கு வந்துட்டு போனேன்..” என்றவருக்கு உண்மையில் கழுத்தை நெறிக்கும் வேலை தான்..

“விகா, அவர் கிடக்காரு…நீ நம்ம விஷயத்துக்கு வா..ஆதி சரி சொல்லிட்டானா டா..?” தர்மரின் பேச்சில் இடைப் புகுந்து அவரது முறைப்பையும் பொருட்படுத்தாமல் பேசும் வேணியைப் பார்த்து குபீரென மற்ற இருவரும் சிரிக்க..
“பொண்ணு பார்த்த விஷயத்தை சொன்ன நீங்க..இதப் பத்தி சொல்லவே இல்லை..” ஆம்! பெண் பார்த்ததும் முதல் அழைப்பு விகாஷுக்கு தான் பறந்தது அவனிடம் தான் முதலில் போட்டோவும் காண்பித்தனர், அதற்கு பின் தான் ராஜிடமே சொன்னார்கள்.

“விகா, இது எனக்கே திடீர்னு தான்டா தோணுச்சு..எப்படியும் நாம அவன்கிட்ட கொஞ்சி கெஞ்சி சம்மதம் வாங்குறதுக்குள்ள அவனுக்கு அறுபது வயசு ஆகிடும் அதான் இப்படி அதிரடியா இறங்கிட்டோம்..” விகாஷின் தாடையைப் பற்றி வேணி சொல்ல..

சரியெனத் தலையசைத்தவன் ராஜிடம் திரும்பி, “டேய் ராஜ் நீ கூட என்கிட்ட சொல்லல பார்த்தியா..?”
“அய்யோ விகா அண்ணா..எனக்கே நேத்து தான் தெரியும்..” வேகமாய் பதில் சொல்லும் ராஜைப் பார்த்து சிரித்தவன் சரியென தலையசைத்து ஆதிக்கிடம் பேசியதை அனைத்தும் சொல்லி முடித்தான்.
விகாஷ், “அப்பா நீங்களும் ராஜும் வெளில இருங்க..இப்போ ஆதி வருவான்..வந்ததும், எதுக்கு வெளில இருக்கீங்கன்னு கேட்பான்..அவன்கிட்ட நான் அம்மாகிட்ட ஏதோ பேசனும்னு சொன்னதுனால நீங்க வெளில வந்ததா சொல்லுங்க..சரியா..” என்றதும் இருவரும் தலையசைத்து வெளியேறிவிட, விகாஷ் சொன்னது போல ஆதிக்கும் வந்து அதே கேள்வியைக் கேட்க, அவனிடம் விகாஷ் சொல்ல சொன்னதையே சொல்லி காத்திருக்கத் துவங்கினர்.

உள்ளே விகாஷ் வேணியிடம் நெஞ்சு வலி வந்தது போல நடிக்கச் சொல்ல, சிறிது நேரத்தில் வேணியும் நடிக்கத் தொடங்கினார்..

இதற்குமேல் ஆப்ரேஷன் செய்தால் மட்டுமே வேணி உயிர் பிழைப்பார் என விகாஷ் சொல்லச் சொன்னதை சொல்லி, மூன்று நாட்களில் ஆப்ரேஷன் பண்ணியே ஆகவேண்டும் எனத் தீர்மானமாய் சொல்லிச் சென்றார் இவர்களது குடும்ப மருத்துவரும்..

ராஜும் தனது அபார நடிப்பை கணக்கச்சிதமாய் செய்ய, தர்மர் அமைதியாய் அமர்ந்தே ஒப்பேத்த, ஆதி தான் உண்மையில் துவண்டு போனான்.

அருகருகே நின்ற ஆதிக்கையும் விகாஷையும் அருகே அழைத்த வேணி, “விகா..ஒருவேளை எனக்கெதுவும் ஆகிட்டுனா இவங்கள பார்த்துக்கோ..” வராத கண்ணீரை விரல் கொண்டு துடைத்து வேணி பேசியதும்..
“அம்மா..அப்படிலாம் ஒண்ணும் ஆகாது..ஆப்ரேஷன் பண்ணுனா எல்லாம் சரியாகி விடும்..” என்ற விகாஷிடம்
“ஆப்ரேஷன் பண்ணுனா தான சரியாகும்..” கேள்வியை முன்வைத்து ஆதிக்கை அர்த்தமாய் பார்த்தார்.. இப்போது அனைவரின் பார்வையும் ஆதிக்கிடம் கேள்வியெழுப்ப

கத்தி முனையின் நிற்க வைத்துக் கேட்டிருந்தால் கூடச் சரியென சொல்லியிருக்க மாட்டான், அப்படிப்பட்டவன் வேறு வழியில்லாமல், “சரி நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்..நீங்க ஆப்ரேஷன் பண்ணிக்கோங்க..” என்றான் வறண்டக் குரலில்

‘ஹே’ சந்தோஷமாய் சத்தமிட்ட மனதை அடக்கிய வேணி, “உன் கல்யாணம் முடிந்ததும் தான் ஆப்ரேஷன்” என்றார் உறுதியாய்..

“அம்மா மூணு நாளுல கல்யாணம் நடக்கிறது எல்லாம் முடியாத காரியம்..பொண்ணு கூட பார்க்காம எப்படி..ஆப்ரேஷன் முடிச்சிட்டு வாங்கக் கண்டிப்பா நீங்க சொல்லுற பொண்ண கல்யாணம் பண்ணிக்கிறேன்..”
“கல்யாணத்துக்கு நான் தான் பொண்ணு பார்த்து வச்சிட்டேனே..” வேணியின் உளலறில் ஆதிக்கு எதுவோ பொறி தட்டக் கேள்வியாய் அன்னையைப் பார்த்தான்..

சொன்னதன் அர்த்தம் புரிந்து மற்ற மூவரும், ‘அய்யோ வேணி’ என்றதொரு பார்வை வீச, அவசரமாய் மயக்கத்திற்குச் சென்றார் வேணி..

அன்னை மயங்கியதைக் கண்டு ஆதிக் பாய்ந்து இன்ட்டர்காமில் டாக்டருக்கு அழைக்க, “நல்லவேளை அம்மா மயங்கிட்டாங்க..” என்ற ராஜின் முணுமுணுப்பை அவன் கவனித்திருக்க வாய்ப்பில்லை..

டாக்டர் வந்து பார்த்து அடுத்து வேணி பேசத் துவங்கும் முன் ஆதிக்கு முன்னவை எல்லாம் மறந்து போயிருக்க, “சரிமா மூணு நாளுல கல்யாணத்தை வச்சிக்கலாம்..” என்றவன் தந்தையிடம் திரும்பி, “அப்பா தரகர் வரச்சொல்லி பொண்ணு பாருங்க..” என்றான்.

சட்டியில் ஏறி உட்கார்ந்துவிட்ட கோழியை பிரியாணி செய்துவிடும் மும்முரத்தில் ஏற்கெனவே பார்த்து வைத்திருந்த பொண்ணுக்கே சரியென சொல்லிவிட்டு, நாளை மாப்பிள்ளையுடன் வருவதாய் உறுதியளித்து போனை வைத்தார் தர்மர்.

அப்போது இருந்த மனநிலையில் சுற்றத்தை கவனிக்காமல் போய்விட்டது அவனது விதி என்பதைத் தவிர வேறென்ன சொல்ல… சம்மதம் சொல்லிவிட்ட ஆதிக்கை பரவசத்துடன் பார்த்திருந்த வேணியின் கரத்தை லேசாய் தட்டிய விகாஷ், ஜாடையாய் ராஜை காட்டினான்..

அவருக்கும் அப்போது தான் நினைவு வந்தது, மெதுவாய் ஆதிக்கை அழைத்தவர் ராஜையும் செய்கையில் வரச் சொல்ல, அவனும் சமத்தாய் வந்து ஆதிக்கின் அருகே நின்று கொண்டான்..

“ஆதிக்..ரொம்ப சந்தோஷம் பா..எனக்காக நீ இன்னொன்னும் பண்ணுவியா..?” அடுத்து என்ன என்பதைத் தன் முகத்தில் தாங்கி

“இன்னொரு கல்யாணமும் பண்ணனுமா மா..?” சலிப்பாய் வந்த ஆதிக்கின் குரலில் மற்றவருக்குச் சிரிப்பு வந்தாலும் அடக்கிக் கொண்டு

“நீ எனக்காக ஒரு கல்யாணம் பண்ணுறதே பெரிசு டா..உன்னைப் போய் இன்னொரு கல்யாணம் பண்ணச் சொல்லி நான் கஷ்டப் படுத்துவேனா..?” நெஞ்சைப் பிடித்து நடித்துக் கொண்டிருக்கும் போதும் வேணி வக்கணையாய் பேச, ஆதிக்கு தான் தலையைப் பிய்த்து கொண்டு ஓடிவிடலாம் போல இருந்தது…வேணியின் அலம்பலில் தர்மரும் அதே நிலையில் தான் இருந்தார் என்பது வேறு கதை!

“அது என்ன அதையும் சொல்லித்….சொல்லுங்க..” சொல்லித் தொலைங்க என வந்து வார்த்தையை அடக்கி சொல்லுங்க என முடிக்க..

அதை அனைவரும் குறித்துக் கொண்டாலும் யாரும் கண்டு கொள்ளவில்லை..

“ஆதி, உன் கல்யாணத்தையும் ராஜ் கல்யாணத்தையும் ஒரே மேடையில பார்க்கணும்னு நான் ஆசைப் படுறேன் டா..” ராஜின் முகத்தை ஏற்றெடுத்தும் பார்க்காமல் ஆதிக்கின் முகத்தையும் விகாஷின் முகத்தையுமே கவனமாய் பார்த்துச் சொல்ல..

“நோ மை மம்மி..” அலறலாய் அவன் கத்தியதும், ஆதிக்கின் மனதில், “யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்..” என்ற வாசகம் தவறாமல் வந்து சென்றது.

இவ்வளவு நேரம் கடுப்பில் நின்ற ஆதிக்,பவ்யமாய் வேணியின் கரம் பிடித்து, “கவலைப் படாதீங்க மா..கண்டிப்பா அவனுக்கு நடக்கும்..” என்ற உறுதிமொழியுடன் கூடிய சம்மதத்தை ராஜின் அனுமதியில்லாமல் ஆதிக்கே கொடுத்துவிட..

யாரை முறைக்க எனத் தெரியாமல் உஷ்ணமாய் மூச்சு விட்டுக் கொண்டிருக்கும் போதே, ஆதிக்கு ஒரு முக்கிய அழைப்பு வந்துவிட்டது.. அவன் அந்த அறையை விட்டு அகன்றதும் தான் தாமதம் வேணியின் கழுத்தை நெறிக்கத் துவங்கினான்.

“டேய் அம்மாவயே கொல்ல பார்க்குறீயா எருமை..” லேசாகப் பிடித்ததிற்கே லபோ திபோவென கத்தும் வேணியை முடிந்த மட்டிலும் ராஜ் முறைக்க, விகாஷும் தர்மரும் வாய்விட்டு நகைத்தனர்..

“மீன் பிடிக்கச் சொல்லிக் கொடுத்தா அதுக்கு இரையா என்னையவே போடுவியா அம்மா..” அவன் கத்தலுக்கு பதில் சொல்லாமல் காதைக் குடைந்த வேணி

“சரி உனக்கு விருப்பம் இல்லைனா உன் அண்ணன் கிட்ட போய் சொல்லு..” என்றவர் சொல்லி முடிக்கவும் ஆதிக் உள்நுழைந்திருக்க, பிறகு எங்கிருந்து வாயைத் திறப்பது..

ஆதிக் ஒரு முடிவை எடுத்துவிட்டால் அதில் இருந்து பின் வாங்க வைப்பது சிரமம் என உணர்ந்தவன் வாயை மூடி வேணியை முறைத்துக் கொண்டு ஒதுங்கி நின்றான்.

மறுநாள் ஆதிக்கை அழைத்துக் கொண்டு பெண் வீட்டாரைப் பார்க்க தனது தூரத்து சொந்தக்காரரான நடராஜ் வீட்டுக்குச் செல்ல, அங்கே தான் செழியனும் குழலியும் இருந்தார்கள்.. ஒருவகையில் கிருஷ்ணவேணியின் குடும்பமும் நடராஜின் குடும்பமும் நெருங்கிய சொந்தம், அதை வைத்துத் தான் செழியன்-குழலியின் பெண்ணுக்கு தன் மகன் ஆதிக்கை பார்க்கலாம் என்று நினைத்தனர்.

இவர்கள் நினைத்துவிட்டாள் போதுமா மணமக்கள் நினைக்க வேண்டாமா?!

செழியன்-குழலியின் குணத்தை வைத்தே தர்மருக்கு அவ்விடம் பிடித்துவிட, வேண்டாவெறுப்பாய் வந்த ஆதிக்கு பார்ப்பதெல்லாம் பாண்டா கரடியாய் தான் தெரிந்தது.

ஒரு மணி நேரப் பேச்சுக்குப்பின் ஒரு வழியாய் இரண்டு நாளில் திருமணத்தை வைக்க வேண்டும் எனத் தர்மர் சொல்லிவிட, இவ்வளவு அவசரம் ஏன் எனத் தயங்கியவர்களிடம் வேணியின் உடல்நிலையைச் சாக்காய் சொல்லியது, மொத்த உறவும் சரியென்றும், பெண் இன்று இந்தியா வந்துவிடுவாள் என்பதையும் சொல்லி வெற்றிலை பாக்கை மட்டும் கை மாற்றிக் கொண்டனர்.

தர்மருக்கு பொய் சொல்லி கல்யாணத்தை நடத்துவதில் மனம் சுனங்க, தனியாகச் செழியன் மற்றும் குழலியை அழைத்தவர், நடந்த அனைத்தையும் சுருக்கமாய் சொல்லி மன்னிப்பு வேண்டவும் மறக்கவில்லை.

தர்மரின் குணத்தாலும், தன் பெண்ணின் அராஜகத்துக்கு ஆதிக் தான் சரியெனத் தோன்றியதாலும் தம்பதி சகிதமாய் சம்மதமாய் தலையசைத்துவிட, சொந்தமாய் இருந்தாலும் பரஸ்பரமாய் ஒரு நெருக்கம் வந்தது.

இவ்வளவும் இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் போது தான் மதியழகி தனது பொற்பாதங்களை சென்னையில் பதித்து வீட்டு வாசலிலும் பதித்து, இவ்வளவு ஏன் போன் பேச தற்செயலாய் வெளியே வந்த ஆதிக்கின் இடுப்பிலும் பதித்திருந்தாள்..

ஏற்கெனவே திருமணம் என்பதில் ஏகபோக கடுப்பில் வந்த கிளைன்ட் காலை அட்டென்ட் செய்ய வெளியே வந்தவனின் மேல் மதியழகி அம்சமாய் அமர்ந்து கொள்ள,
நாயைப் பார்த்து பயந்து அவள் செய்த திடீர் செயலில் ஆதிக் தான் தடுமாறிப் போனான்..அது அழகாலோ காதலாலோ என நீங்கள் தவறாய் புரிந்து கொண்டாள் அதற்கு கம்பெனி பொறுப்பாகாது மக்களே!

அவள் அமர்ந்த வேகத்தினால் தான் ஆதிக் தடுமாறியது.

முயன்று சமாளித்து அவளையும் இறக்கி நாயையும் அனுப்பியவனுக்கு அவளது நாயுடனான பேச்சில் கொஞ்சம் சுவாரசியம் வந்தது என்பது மட்டும் அவன் மறுக்க நான் மறைக்க முடியாத உண்மை. (பயபுள்ள அவ்வளவு ஓப்பனா வாட்டர் ஃபால்ஸ் ஓப்பன் பண்ணிட்டான்)

அந்த சுவாரசியம் கூட மரியாதை இல்லாத அவளது பேச்சினால் காது தூரம் ஓடியிருக்க, அடிக்க கை ஓங்க இழுத்துத் திருப்பியதில் கால் தவறி அவன் மீதே சரிந்து விழுந்தாள் மதியழகி..

‘பஞ்சு மெத்தையாய், பூப் பந்தாய் தன் மீது விழுந்தவளை ஆதிக்கின் கை அனுமதியில்லாமல் அணைக்க..’
இப்படிலாம் எனக்கு எழுதனும்னு ஆசை தான்..ஆனா இங்கே நம்ம ஹிரோவோ..

“அய்யோ கடவுளே..என்ன கணம் கணக்குற..எந்திரிச்சு தொலையேன் டி..” வெறுப்பாய் அவன் கத்தவும் அவன் மீதிருந்து எழ மறந்து முறைத்தவள்..

“யேய் நான் ஜீரோ சைஸ் டா பன்னி..” தன்னை குண்டு எனச் சொன்னவனை சும்மா விடலாமா என அவள் சண்டையிட துவங்கினாள்..

“ஆமா டி நீ ஜிரோ சைஸ் தான்..ஆனா எந்த வருஷம் ஜிரோ சைஸ்ன்னு சொன்னா நல்லா இருக்கும்..முதல்ல இறங்கித் தொலை டி..” அவனது பதிலில் கோபமாய் எழ முயன்றவளுக்கு கால் இடறி அவன் மேல் மறுமுறையும் விழ

“அய்யோ என்னைக் கொலைப் பண்ணப் பார்க்குறாளே..” என்ற ஆதிக்கின் அலறலில் குடும்பம் மொத்தமும் வெளியே வந்தது.

சரியாக மதி எழ முயலும் போது குடும்பத்தினர் வெளிவந்துவிட, அவர்கள் பார்க்கும் போது ஆதிக்கின் வயிற்றில் மதி அமர்ந்திருப்பது போல் இருந்தது.

குழலிக்கு எங்கே மாப்பிள்ளையைத் தனது மகள் அடித்திருப்பாளோ? என்ற கவலை வந்தது என்றால், தர்மருக்கு எங்கே தனது மகன் மருமகளிடம் சண்டையிட்டிருப்பானோ? என்ற பயம் எழுந்தது.

இவர்களின் எண்ணத்திற்கு முட்டுக்கட்டை போடுவது போல, மதியை நேராய் நிற்க வைத்து அவனும் நின்றுவிட, அங்கு நின்ற அனைவரையும் பார்க்க அவனுக்குத் தான் சங்கோஜமாய் இருந்தது..அவளுக்கு அதெல்லாம் பிறப்பிலே கிடையாதே..எதிரே நின்ற அன்னையைத் தாவி அணைத்தவள்
“மாம்..” என்று கூச்சலிட, ஆனாலப்பட்ட ஆதிக்கையே அதிர வைத்துவிட்டாள்..

இவள் தான் எனக்குப் பார்த்திருக்கும் பெண்ணா எனத் தந்தையிடம் விழியால் வினவ, அவரும் ஆமோதிப்பாய் தலையசைக்க அந்த பதிலைத் தான் அவனால் தாங்க முடியவில்லை.

அன்னையும் தந்தையையும் கொஞ்சியவளிடம், தனியே அழைத்துச் சென்ற குழலி ஆதிக்கை காட்டி அவர் தான் உனக்குப் பார்த்திருக்கும் மாப்பிள்ளை என்று சொல்ல

அதற்கு அவள் கொடுத்த பதிலில் வேணிக்கு பொய்யாய் வந்த நெஞ்சு வலி குழலிக்கு உண்மையாய் வந்துவிட்டது..!

ஆதியும் மதியும் வருவார்கள்…

கருத்துக்களை தெரிவிக்க 

Written by

Ardent reader, kirukkufying something, want to travel with characters around me.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!