Ennama ipadi panreengalema- full

Ennama ipadi panreengalema- full

என்னம்மா இப்புடி பண்றீங்களேம்மா

1

“ஏண்டி,குழந்த கால் வலிக்கப் போகுது,செத்த இப்புடி உட்காருடி” ,குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டு இருந்த தனது பேத்தியை பார்த்த மங்களத்திற்குப் பாவமாக இருந்தது,தந்தை, தாயை ஒரு சேர விபத்தில் பறி கொடுத்தவள்,தனது அத்தை மகனின் ஆதரவை பெற சென்னைக்கு வந்துள்ளாள்.

ராஜசேகருக்கும்,அலமேலுக்கும் பிறந்த தவப் புதல்வி தான் மீனு,அவர்கள் இருவரும் காதல் திருமணம்,ராஜசேகர் கூலி வேலை செய்பவர்,அலமேலு பிராம்மணப் பெண்,இருவருக்கும் எப்படிக் காதல் மலர்ந்தது  என்று ஆண்டவனுக்கே வெளிச்சம்,சாகும் தருவாயில் அவரது சொத்தையும்,மகளையும் தனது தங்கை மகன் ராஜேஷுக்கு தாரைவார்த்து கொடுத்துவிட்டு இறந்து விட்டார்,ஆதரவை தேடி பேத்தியும்,பாட்டியும் இதோ இன்று சென்னையில்.

“பாட்டி நேக்கு ரொம்பப் பயமா இருக்கு,அந்த மாமிய பார்த்தாலே, இதுல அவர் எப்புடி இருப்பாருனு தெரியல,எனக்கும் அவாளுக்கும்  சத்தியமா ஒத்துப் போகாது பாட்டி, என்று கெஞ்சிய பேத்தியை பார்த்துக் கனிவு பிறந்தாலும் ஒரு பெரு மூச்சுடன் ,”நேக்கு மட்டும் ஆசையாடி,உன்ன மட்டுமா அந்தக் குடும்பத்துக்குத் தாரைவார்த்து கொடுத்திருக்கார்,என்னையும் சேர்ந்துள்ள கொடுத்துண்டு போய்ட்டார்,நேக்கே வாய்த்த பேசையுற மாதிரி இருக்குடி,அந்த பெருமாள் தான் காப்பாத்தணும்.”

அவர்கள் இங்குப் போராட அங்கு ராஜேஷோ வானத்துக்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டு இருந்தான்,”இன்னம்மா சொல்லுற,தங்கச்சின்னு கூடப் பாக்காம உன்ன தனியா உட்டுட்டு ஓடி போன அந்த ஆளு பொண்ண நான் கட்டிக் கிணுமா போவியா?”,அதுவும் உங்க அண்ணண் அருக்காணி மாதிரி பேத்து வச்சுட்டு போய் இருந்தா,நினைக்கவே அல்லு வுடுது,”.

உடனே தனது ஆய்தத்தைக் கையில் எடுத்த காமாட்சி கண்ணைக் கசக்க ஆரமித்துவிட்டார்,”இப்ப இன்னாத்துக்குக் கண்ணுல வேர்க்குது உனக்கு,கண்ணாலத்துக்கு நாள பாரு,அதுங்கள இழுத்துகினு வரேன்”, என்று கோபமாக செருப்பை மாட்டி கொண்டு சென்று விட்டான்.

அதுவரை நடித்த காமாட்சி கண்ணைத் துடைத்து விட்டு சிரித்த முகமாக உள்ளே சென்றார்,ராஜேஷின் பலவீனம் காமாட்சி தான் அன்னை சொல் தட்டாத பிள்ளை,தன்னுடைய அண்ணண் தன்னைச் சிறு வயதில் அனாதையாக விட்டு சென்றாலும்,அவரது மீது பாசம் கொண்ட காமாட்சியால் அண்ணண் மரணத்தை ஏற்க முடியவில்லை,அதுவும் மீனாட்சி அம்மன் சிலை போல் இருக்கும் தனது அண்ணண் மகளை எக்காலத்திலும் விட முடியாது என்று முடிவு செய்து விட்டார்,அதற்குக் கடவுளே ஒரு சந்தர்ப்பம் அமைத்து கொடுத்து விட்டார்.

ராஜேஷ் பெரிய பட்டறை வைத்து உள்ளான்,அப்பா ஒரு குடிமகன் இருபத்தி நான்கு மணி நேரமும் அரசாங்க சேவை தான்,அதாவது டாஸ்மாக் கடையில் இன்றும் குடித்து விட்டு பட்டறையின் முன்பு மல்லாந்து படுத்திருந்தார்.

ஏற்கனவே ஏக கடுப்பில் இருந்தவன் அவரைப் பார்த்ததும் கொதித்து விட்டான்,”டேய்,கொசு”,

“இன்னா அண்ணே”,

“இந்த ஆளா தூக்கி கெடச்சுடா,காலங் காத்தலையே ஊத்திகினு மல்லாந்து கடக்கு”,அவரை தாண்டி தனது வண்டியை எடுத்தவன் மாமன் மகள் மரிக்கொழுந்தை பார்க்க விரைந்தான்..

வண்டியில் பறந்தவன் மனம் ஒரு நிலையில் இல்லை கோதுமை நிறத்தவன்,ஆறடி ஆஜானுபாகுவான உடல் கட்டு (உழைக்கும் வர்கம் அல்லவா) அழுத்தமான உதடுகள் அடர்ந்த மீசைக்குள் பதுங்கி இருந்தது, கோபத்தில் சிவந்த கண்கள்,கூர் நாசி என்று அழகாக இருந்தான்.

வீட்டின் முன் வண்டியை நிறுத்தியவன் புயலாக உள்ளே நுழைய,அவனது வருகை கண்டு பாட்டியிடம் பதுக்கினால் அந்தப் பதுமை.

“அவனோ அவர்களைக் கண்டு கொள்ளாமல் அவர்கள் மூட்டை கட்டி இருக்கும் சாமான்களைப் பார்த்தவன் அதற்குத் தகுந்த வண்டியை வரவழைத்து விட்டு தான் நிமிர்ந்து பார்த்தான்,பார்த்தவன் பார்வை நிலை குத்தி நின்றது மீனுவிடம்.

“இன்னம்மா இருக்கா,வெண்ணையில செஞ்ச சேல மாதிரி,மெய்யாலுமே என் மாமே மக தானா”,அதை உறுதி செய்யும் விதமாக ஒலித்தது மங்களத்தின் குரல் ,”என்ன தம்பி போகலாமா காத்தால இருந்து குழந்தை சாப்புடாம இருக்கா”.

“சரி ,வண்டில சாமான் ஏத்திட்டு நீங்க வண்டில வாங்க,நீ என்கூட வா”என்று மீனுவை அழைக்க ,மறுத்து தலை அசைத்தவளை பார்த்து அவன் மனமும் அசைந்தது.

“நானும் பாட்டி கூடையே வரேன்”,சிறு பவள வாய் திறந்து பேச,ராஜேஷுக்கு அந்தச் சிறு உதடு அசைந்தது வெறி ஏறியது,அதனை மறைத்தவன் “இன்னா பாட்டி உங்க பேத்தி மக்கர் பண்ணுது,என்னய்யா……..பார்த்த புள்ள புடிக்கறவன் மாதிரியா இருக்கு,அங்க அம்மா புலம்பிக்கினு இருக்கு,நான் கடைய தொறக்கணும் என்னவாம் கேட்டு சொல்லுங்க, இல்லாட்டி நான் இப்புடிக்க நடைய கட்டுறேன்”.

இல்ல தம்பி அவ புது மனுஷால் பார்த்து பயந்து போய் இருக்கா வேற ஒண்ணுமில்லை என்று சமாளித்தவர் மீனுவிடம் “மீனு குட்டி அடம் புடிக்காம போடா ராஜாத்தி, சாமானை எல்லாம் பத்திரமா பார்த்து ஏத்திட்டு வரணும் நான் பின்னாடியே வரேன்”,அவர் சொல்லவே அரை மனதாகக் கிளம்பி சென்றாள்.

‘வாடி மல்கோவா மாமி,முதல அம்மாகிட்ட சொல்லி தேதிய முன்னாடி பார்க்க சொல்லணும்,என்று எண்ணியவன் அவள் வண்டியில் உட்கார ஒரு புன்னைகையோடு வண்டியை எடுத்தான்’.

அவன் மீது சாய்ந்து விடக் கூடாதென்று அவள் நுனியில் உட்காந்து வர ‘மாமி விவரம்தாண்டி நீ ‘என்று மனதுக்குள் சிரித்து கொண்டான் உற்சாகமாக வண்டியை செலுத்தினான்.அவன் முடிவெடுத்து விட்டான் இனி இவளுடன் தான் தன் வாழ்க்கையென்று.

ஆனால் அவள்………….

  2

“குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் அங்கே கூடி இருக்கும் பெண்களுக்கு வண்டாட்டம் திண்டாட்டம் …………..குன்றத்திலே ………..ஹே ஹே குன்றத்திலே……………. ஹே ஹே………………… குமரனுக்கு ……….கொண்டா….. ட……….. ம் …………… “முருகன் காதுகளை இறுக்க முடி கொள்ளும் அளவிற்கு இருந்தது ராஜேஷின் அப்பா காளை முத்து பாடிய பாடல்,கைலியை நெஞ்சு வரை ஏற்றி கட்டி கொண்டு நிற்க முடியாமல் தள்ளாடிய படியே வந்தார்.

பயத்தில் உணவு கூட உண்ணாமல் முழித்துக் கொண்டு இருக்கும் இரு ஜீவன்களும் இவரது பாடலில் அடுத்துப் பிடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தனர்,வழக்கம் போல் பாட்டியின் கையை இறுக்கப் பற்றிக் கொண்டால்,ஆனால் காமாட்சியும்,ராஜேஷும் ஒன்றுமே நடவாதது போல இருக்கவும்,இது தினமும் நடக்கும் கூத்து என்பது புரிந்தது.

“இன்னாத்துக்கு அலறிக்கினு இருக்க,சோறு போட்டு வச்சு இருக்கேன்,துண்ணுட்டு தூங்கு”,என்று காமாட்சி சொல்ல அவரும் “டங்க்ஸ் காமு” என்று சலூட் அடித்தார்.

“முசரக்கட்டை எப்போ பாரு ஊத்திக்கினு வந்து உசுர வாங்குது”, என்று புலம்பியவரே காமாட்சி செல்ல அவரும் அவர் இடத்திற்குச் சென்றார்,அப்போதுதான் பாட்டிக்கும்,பேத்திக்கும் நின்ற மூச்சு வந்தது,அவர் போன வேகத்தில் திரும்பவும் மீண்டும் பயம் வந்து ஒட்டி கொண்டது.

வந்தவர் கண்களைச் சுருக்கி, விரித்து, கசக்கி, மீனுவை உத்து பார்க்க,சரவமும் அடங்கியது நம் மீனுவிற்கு “யாருடி காமு இது கூவத்துக்குள்ள கோல்ட் பிஷ் “,”யோவ்,புளகிட்ட முச்சிய காமிக்காதயா பயப்படப் போகுது,இந்தாண்ட வா, அரட்டிய காமாட்சி,”பார்த்தா  தெரியல என் அண்ணே பொண்ணு மீனு”.

“ஓ………………… அவன் பொண்ண நீ,என் தங்கச்சி பால் மாதிரி இருக்கும் போல,நல்ல வேலை நீ அவனை மாதிரி டிக்காசனா இல்ல”.

“ஆமா எங்க அண்ணே கருப்பு ஐயா அப்புடியே சூர்யா குஞ்சு,அம்மி கல்ல எடுத்து மண்டியல போட்டுருவேன் கம்முனு போய்  படுய்யா நாளைக்கி நம்ம பயனுக்கும் என் அண்ணே பொண்ணுக்கும் கண்ணாலம் சீக்கரம் தூங்கு”.

“இன்னாது கண்ணாலமா என்னடி சொல்லுற “முத்து அதிர்ந்து கேட்க.

காமாட்சி பதில் சொல்லும் முன்னே ராஜேஷ் பேசினான்”எதுக்கு ஜெர்க் ஆகுற,ஒழுங்கா அப்பனா வந்து நின்னு கண்ணாலத்தை நடத்து,இல்ல” என்று பல்லை கடிக்க,ஜகா வாங்கினார் நமது முத்து, வீரமெல்லாம் வெளியில் மட்டும் தான்,மகனிடம் அவர்க்குப் பயம் கலந்த மரியாதை உண்டு,தனது பொறுப்பைத் தான் தட்டி கழிக்க,பொறுப்பான தலை மகனாகப் பி.இ.மெக்கானிக் படித்து இன்று பெரிய மெக்கானிக் ஷெட் வைத்து,குடும்பத்தைத் தாங்கும் மகனை அவரால் எதிர்த்து ஒரு வார்த்தை கூடப் பேச முடியவில்லை.

அவரும் நல்ல பிள்ளையாகப் போய்ப் படுத்து கொண்டார்,மீனு தான் கண்ணீருடன் “என்ன பாட்டி நாளைக்கே கல்யாணமுன்னு சொல்லுறாங்க,நான் அவர்கிட்ட பேச போறேன்”,மங்களம் தடுத்தும் அவள் அவனது அறைக்குச் செல்ல (இப்புடி தான் நீயா போய்ச் சிக்கனும்).

அங்கு அவனோ கல்யாண கனவில் மிதந்து கொண்டு இருந்தான்,கட்டிலில் படுத்துக் கொண்டு விட்டதை வெறித்தவனைக் கலைத்தது மீனுவின் குரல்,”உள்ள வரலாமா”அவள் குரலில் வேகமாக எழுந்தவன் “வா மீன்னு”என்று அழைக்க”கொஞ்சம் பயந்து கொண்டே தான் சென்றால்,’எங்க அம்மா அசையா மீனு பேரு வச்சா எப்படிக் கூப்புடுறான் பாரு அவளுக்குப் பத்தி கொண்டு வந்தது’

அவன் அருகில் சென்றவள் முதலில் தயங்கி பின் அவனது கண் பார்த்து “நேக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பமில்லை,நான் பி.எ எக்னாமிக்ஸ் முடிச்சு இருக்கேன்,இங்கே கம்பெனி எந்த இடத்துல இருக்குனு சொல்லுங்கோ,நானே வேலை தேடுகிறேன்,அப்புறமா வேலை கிடைச்சதும் தனி விடு பார்த்து நானும் பாட்டியும் போயிடுறோம்,நான் உங்களண்டை அப்பா சொத்தையெல்லாம் கேட்க மாட்டேன்,நீங்களே வச்சுக்கோங்க,இந்த ஹெல்ப் மட்டும் பண்ணுங்களேன் ப்ளீஸ்”.

அவள் பேச்சில் கோபம் கொண்டவன் அதனை வெளியில் காட்டிக்கொள்ளாமல்”ஓ………. வேலை தானே என் பிரெண்டு நல்ல கம்பெனில தான் வேலை பாக்குறான் அவனாடா சொல்லி வாங்கித் தரேன்,அம்மா கிட்ட சொல்லி கண்ணாலத்தை நிறுத்திடலாம் என்ன”அவன் சொல்லவே முத்துப் பற்கள் தெரிய சிரித்தவள் “ரொம்பத் தேங்க்ஸ் அத்தான்,பயந்துண்டே இருந்தேன் நீங்க உடனே சரினு சொல்லுவிங்கனு நெனைச்சு கூடப் பார்க்கலை,தாங்க யூ சோ மச்,நான் வரேன்”என்று செல்ல போனவளை தடுத்தவன்.

அவளை நெருங்கி அவள் முகம் நோக்கி குனிய பயந்து பின் வாங்கினால்,மீண்டும் அவளை நெருங்கியவன் அவள் இடை பற்றிக் குனிந்து காதில் எதுவோ சொல்ல கண்கள் பெரிதாகி அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தால் மீனு,அதே அதிரிச்சியுடன் அவனைப் பார்க்க அவனோ பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு “நானும் உன்னாண்ட சொல்ல கொடுத்தனு தான் இருந்தேன்,நீ தான் கண்ணாலம் வேணான்னு சொல்லிட்டியா அதான் மனசு கேட்கல”.

அவன் சொல்லி முடிக்கவே உதடு துடிக்கக் கண்ணில் அக பட்ட தலைனையை எடுத்து அவன் மேல் எறிந்தவள்,”வாய்ல என்ன கொலுக்கட்டாயா வச்சு இருந்தேல் சொல்ல வேண்டியது தானே,நான் உள்ள இருக்கேனு,போச்சு போச்சு எல்லாம் போச்சு”என்று தலையில் கை வைத்து அமர்ந்து அழுக ஆரமித்து விட்டால்.

அவனும் அவள் பக்கத்தில் சரிந்து அமர்ந்து “நான் வேணாம் மறந்துடுறேன் மீன்னு”என்று சொல்ல எங்கு இருந்துதான் அவளுக்குக் கோபம் வந்ததோ,”சீ…….பொறுக்கி பொறுக்கி என்று சரமாரியாக அவனை அடிக்க ஆரமித்து விட்டால்.

சிரித்துக் கொண்டே அவளது அடியை வாங்கியவன்”பின்ன என்னடி மாமி,உன்ன பார்த்ததுல இருந்து கிறுக்கு புடுச்சு போய் நான் தெரியுறேன்,அசலாட்ட கண்ணாலத்தை நிறுத்த சொல்லுற,நானே உன்ன புடிக்கலைனு தான் சொன்னேன் உன்ன பாக்குறதுக்கு முன்னாடி,பருப்பும் ,நெய்யும் சாப்பிட்டு சாப்பிட்டு சும்மா கும்முனு இருக்குற உன்ன பார்த்த உடனே முடிவு பண்ணிட்டான் நீ தான் என் இதயத் தேவதைனு”.

அவன் பேசியது கேட்டு கதை பொத்தியவள்,”ச்சே கசமா பேசத்தேல் நேக்கு கஷ்டமா இருக்கு”.

“உங்கிட்ட பேசாம வேற யாருகிட்டடி பேசுறது,சரி சரி காலையில சுருக்கா கிளம்பனும் போய்ப் பாட்டியாண்ட படுத்துக்கோ ஓடு “,சொன்னவன் அவள் அசையாமல் இருக்கவும் “ஐய்த்தான் தூக்கிக்கினு போனாதான் வருவியா மீன்னு,சரி வா”,என்று அவளைத் தூக்க வர அந்த இடத்தை விட்டு ஓடியே விட்டால்.

“ஒய் ………………..மாமி ஓடிரிய…..ஓடு ஓடு ………இன்னக்கி ஒரு நாள்,அப்புறம் பேசிக்குறேன் உன்ன”.

அழுது வடிந்து கொண்டு வரும் பேத்தியை பார்த்த மங்களம் பதிரி கொண்டு “என்னடி ஆச்சு கண்ணுல ஜலத்தை விட்டுண்டு இருக்க” அவர் கேட்டது தான் தாமதம் அவள் அனைத்தையும் கொட்டிவிட,அவளை தான் இரண்டு அடி அடித்தார்.

“ஏண்டி ஜடம் ஜடம்,ரூமுக்குள்ள யாரும் இருக்காங்களா இல்லையானு பார்த்து துணிய மாத்தமாட்டா என்ன பொண்ணுடி நீ,பொண்ணுகளுக்கு நாளா பக்கமும் கண்ணு இருக்கணும்,ஐயோ நான் என்னத்த சொல்ல”,என்று தலையில் கை வைத்து அமர்ந்து கொண்டார்.

அவளும் சிறுது நேரத்திற்கு முன் ராஜேஷ் சொன்னதை அசை போட்டாள்,காலையில் இவர்களைத் தனது தாயிடம் ஒப்படைத்தவன் மதிய உணவிற்கு முன்னதாகவே வீட்டுக்கு வர அப்போதுதான் குளித்து முடித்து ராஜேஷின் அறையில் துணியை மாற்றிக் கொள்ளச் சென்றால் மீனு,காமாட்சி தான் ‘ராஜேஷ் இப்பொழுது வர மாட்டான் நீ அந்த ரூமில் மாற்றிக் கொள்’ என்று சென்று விட்டார்.

அது தெரியாத ராஜேஷ் அவனது ரூமின் ஒரு புறத்தில் உள்ள மர தடுப்பில் துணிகளைக் கலைத்து அதில் போட்டுக் கொண்டு இருந்தான்,தாழ்பாள் சத்தம் கேட்கவும் அவன் எட்டி பார்க்க மார்பு வரை பாவாடையை ஏற்றி கட்டி கொண்டு மீனு வருவது தெரிந்தது,சத்தம் செய்யாமல் அவன் அங்க தங்கவே இவன் இருப்பது அறியாமலே அவள் உடைகளை மாற்ற,அவன் ரெத்த நாடியெல்லாம் பித்தாகி போனது தான் மிச்சம்’அதை இப்போது எண்ணியவள் கண்களை இறுக்க மூடி கொண்டாள்.விடிந்தால் திருமணம்……………….

 3

சூரியன் மேக காதலியை மொகத்தோடு முத்தமிட்டு அவளது உடலை துளைத்துக் கொண்டு வெளியில் வர,அழகாக விடிந்தது அந்த விடியல்,கூடலில் கழித்த மேகம் வெட்கம் கொண்டு கலைந்து சென்றது ,கதிரவனே இந்த மூடில் இருந்தால் நம் கதா நாயகன்?………

காலையில் யாரோ தன்னை எழுப்ப கண்களைக் கசக்கி கொண்டு எழுந்தாள் மீனு,குழந்தை போன்று அவள் செய்யும் செயலை இமைக்காமல் பார்த்திருந்தார் காமாட்சி “என்னமா இருக்க எங்க அண்ணி மாதிரியே,நீ மருமகளா என்னடா வர போறத நெனச்சா,எப்புடி இக்குது தெரியுமா, கோடி ரூபா இருந்தா எப்புடி இருக்கும் அது மாதிரி இக்குது,நான் பயந்து கினே இருந்தேன்,கண்ணாலம் வேணான்னு சொல்லிடிவியோன்னு,ஆனா மாமன தான் கட்டிக்குவேன்னு சொன்னியாமே”.

‘நான் எப்போ சொன்னேன் மாமாவாம் மாமா சரியான ரவுடி ,பொறுக்கி,நேக்கு பத்திகிட்டு வருது என் மானமே போச்சுன்னு தான் இந்தக் கல்யாணத்துக்கே உத்துண்டேன்’,மனதால் அவனை அர்ச்சிக்க மட்டுமே முடித்தது,அதிலும் தனக்குப் பார்த்து பார்த்து ஒவ்வொன்றும்  செய்யும் மாமியின் அன்பை அவளால புறக்கணிக்க முடியவில்லை.

பல நாட்கள் தனது அன்னையிடம் கேட்டதுண்டு “எப்புடிம்மா அப்பாவை கல்யாணம் பண்ணிண்டா”,அதற்கு அவர் சிரித்துக் கொண்டே,”உண்மையான அன்பு மட்டுமே கண்டு” என்பார், அந்த அன்பை இங்குக் கண்டாள்,ஆர்ப்பாட்டம் இல்லாத,அலட்டல் இல்லாத,யாரு என்ன நினைப்பார்கள் என்று அடுத்தவர்களை எண்ணாமல் நான் இப்படித் தான் என்று வாழும் மனிதர்கள்,யாரும் அண்டாமல்,அண்ட விடாமல் அவர்கள் பழக்க வழக்கம் அவர்களைத் தள்ளி வைத்தாலும், ஏதோ ஒரு தனித்துவம் அந்த மக்களிடத்தில்,அவர்களைப் போல மகிழிச்சியுடன் நாம் வாழ்கிறோமா என்று கேட்டால்? இல்லை என்பதே விடை……….

தன்னையே வெறித்துப் பார்க்கும் மருமகளை வாஞ்சையுடன் எழுப்பிச் “சுருக்கா கிளம்பனும் கண்ணு,கோவிலாண்ட ஒரே கும்பலா இருக்கும்”,சரியென்று தலைஅட்டியவளை கை கொடுத்து எழுப்பி அவரே தலைக்குத் தேய்த்து குளிக்க வைத்தார், மங்களத்திற்கு ஒரு புறம் நிம்மதி மறு புறம் மீனுவை எண்ணி கலக்கமும் கொண்டார்.

அங்கோ,நமது மாப்பிள்ளை ஜமென்று கிளம்பி இருந்தான் கூட அவனது அல்ல கை கொசு வேறு அவனைப் புகழ்ந்து தள்ளி கொண்டு இருந்தான்.”அண்ணே,சும்மா அசித் குமார் மாதிரி ஜோரா இக்குது,அண்ணி பாத்தா பச்சக்குனு ஓட்டிகிவாங்க போ”.

‘ஹ்ம்ம்………..பார்த்து ஓடாம இருந்தா சரி இவன் வேற உசுப்பேத்திக்கினு’மூணு முணுத்த வாரே கிழே வர,அங்கு மீனுவும் தயாராகி இருந்தால்,கண்களால் அவளை விழுங்கியவன் பார்த்த படி நிற்க,அவனைத் தாண்டி வண்டியில் ஏறினால்,பாட்டியிடம் ஒரு வார்த்தை கூட  பேசவில்லை,அவள் மனம் புரிந்து அவரும் அவளிடம் நெருங்கவில்லை.

அவர்களை தொடர்ந்து அனைவரும் ஏற,காமாட்சி மட்டும் தங்கினார் “என்னம்மா”வண்டியில் இருந்து ராஜேஷ் குரல் குடுக்க “உங்க அப்பன தாண்ட தேடிக்கினு இருக்கேன்,படுச்சு படுச்சு சொன்னேன் கண்ணாலம் முடியுற வர,பொறுமையா இரு,அப்புறம் நீ ஊத்திகினு என்ன வெனப் பண்ணுனு ,வரட்டும் இன்னக்கி அந்த ஆளா? நானுன்னு? பாப்போம்”, காமாட்சி அவரைக் கிழித்துத் தோரணம் கட்டும் வெறியில் இருக்க.

அவரோ பட்டு வெட்டி சட்டையில் அமசமாக வந்து நின்றார்,கழுத்தில் ஒரு துண்டு வேறு அதனை எடுத்து மீண்டும் கழுத்தில் சுத்தி கொண்டவர் சிவாஜி ஸ்டைலில் நடந்து வர,ராஜேஷுக்கு பத்தி கொண்டு வந்தது, காமாட்சியிடம் வந்தவர்”மாமா சோக்கா இக்கேனா”என்று காது வரை பல்லை இளித்துக் கொண்டு கேட்க,அவர் தலையில் கொட்டி அவரை இழுத்து சென்றார் காமாட்சி.

தலையை தேய்த்த வாரே ஆத்தாளுக்கும் மவனுக்கும் பொறாமைடி ,அவர் சொன்னது தாமதம் இருவரும் சேர்ந்து முறைக்க அவர் வாய்யை  மூடி நல்ல பிள்ளையாக அமர்ந்து கொண்டார்,பின்ன இரவில் மனைவி அடித்து துவைத்து விட்டால்,அவர் இருக்கும் ஜிம் பாடிக்கு, அவர் தரும் அடிகளை தாங்கும் அளவிற்கு சக்தில்லை பாவம்.

கோவிலை அடைந்து முருகன் சன்னிதியில் சென்று நின்றவர்கள் தாலியை எடுத்து கொடுக்க,முருகன் சிரித்த முகமாகவே அவர்களை ஆசிர்வதிக்க இனிதே நடந்தேறியது மீனு,ராஜேஷ் திருமணம்,மங்கள மேளம் இல்லை,சுற்றி வாழ்த்த உறவினர்கள் இல்லை,ஆடம்பரமில்லை இல்லை,ஆர்பரிப்பில்லை,அதற்குப் பதில் அன்பிருந்தது,நல்ல மனம் கொண்ட நான்கு மனிதர்கள் இருந்தார்கள் தெய்வமே முன்னின்று நடத்தியது போல இருந்தது இத்திருமணம்,கலகத்திலும் ஓர் அமைதி மீனுவிடம்.

அணைத்து தெய்வங்களையும் ஒரு முறை தரிசித்து விட்டு வீட்டுக்கு வந்தனர்,அக்கம் பக்கம் இருக்கும் மனிதர்கள் ஆர்த்தி எடுக்க,அந்த வீட்டில் அடி எடுத்து வைத்தால் மீனு,இப்போது பயம் சற்று தெளிந்திருந்தது.

திருமணம் நடந்த வீடு போல் இல்லாமல் அவரவர் வேலைகளைப் பார்க்க சென்றனர்,முத்துவிற்கு எப்போதுடா டாஸ்மாக் செல்வோம் என்று இருந்தது,காமாட்சி சமைக்கக் கிளம்ப,அவருக்கு உதவ மங்களமும் பின்னே சென்றார்,ராஜேஷ் ஓர் ஆழ்ந்த பார்வையோடு மீனுவுடன் நெருங்கவும், சரோஜா வரவும் சரியாக இருந்தது.

வந்தவள் நேராக மீனுவிடும் சென்று அவளது தாலியை பார்த்து விட்டு ஐயோ ஐயோ நான் இன்னா பண்ணுவேன்,ஏய்…… நெய் உருண்டை மாதிரி இருந்துகினு என் ஆள அபேஸ் பண்ணிட்டியே பாவி “அவள் மீது பாய,அதற்கு முன் அவளைத் தடுத்திருந்தான் ராஜேஷ்.

“ஏண்டி,சவுண்ட் சரோஜா எதுக்குக் கூவிக்கினு இருக்க,என் பொண்டாட்டி பாரு ஜெர்க் அவுரா”,இது தான் வாய்ப்பென்று அவளை அனைத்துப் பிடித்துக் கொண்டான் ராஜேஷ்.

சரோஜா முத்துவின் தங்கை மகள்,ராஜேஷின் ரசிகை (கவனிக்கவும் ரசிகை) கோபமாக நிற்கும் சரோஜாவையும்,பயந்து கொண்டு தன் மகனின் கைக்குள் நடுங்கி கொண்டு இருக்கும் மீனுவையும் பார்த்த காமாட்சி,”இவள”.

“இன்னாடி,சவுண்ட் சரோஜா என் மருமக கிட்ட சலம்பிக்கினு,ஹா…………..”

“ஏய், அய்த்த உன் அண்ணே மவுளா கட்டி வச்சிக்கினு,என் இதயக் காதலை ஒடச்சு புட்ட,எங்க அந்த நாய் மாமே”.

“உன் மாமே அரசாங்கத்துக்கு வரி கட்ட போய்க்குது,போ போய் டாஸ்மாக் கடையாண்ட பாரு,ஊத்திகினு மல்லாந்து கடக்கும் வந்துட்டாளுக”, கோபமாகப் பொரிந்து விட்டு வேடிக்கை பார்க்கும் மங்களத்தையும் இழுத்துக் கொண்டு சென்றார்,அவருக்குப் பேத்தியின் நிலையை எண்ணி வயிற்றில் புளியை கரைத்தது.

“யோவ்,எப்புடி இவள கட்டிகினு குடும்ப நடத்துரணு பாக்குறேன்,ஏய்,நெய் புட்டு உன்ன பெசஞ்சுட்டு தாண்டி மறுவேல”,அவள் சென்று உடன் ராஜேஷ் பிடித்துத் தள்ளியவள் உதடு பிதுக்கி அழுது கொண்டே முறைக்க,ராஜேஷிற்கு ஜொள்ளு ஊற்றியது.

பாவம் படும் நிலையில் அவனில்லை,அவன் நிலை அறியாத மங்களம் காமாட்சியிடம் பெரிய குண்டு ஒன்றை அழகாகத் தூக்கி போட்டார்,”காமாட்சி”,சொல்லுமே “ஒன்னுமில்லை கல்யாணம் தான் நாள் நட்சத்திரம் பார்க்காம நடந்துடுத்து,சாந்தி முகூர்த்தம் அப்புடி வைக்க முடியாது இல்லையா நம்ம குழந்தைங்க நன்னா இருக்கணும்,நான் சொல்லிட்டான் அப்புறம் உன் இஷ்டம்,நேக்கும் என் பேத்தி நன்னா இருக்கணும் அவள வீட்டா வேற நாதி இல்லை”.

அய்ய,எனக்கு தெரியாத நீ எம்மா பெரிய மனுசி அத்த வுடு நான் பாத்துக்குறேன்,மதியம் உணவை முடித்து, மாலை பொழுதை தள்ளி,இரவுக்கு வழிவிட்டுக் காத்திருக்க,காமாட்சி மெல்ல அதை ராஜேஷிடம் சொன்னார்,சொன்னது தான் தாமதம் அவன் கத்திய கத்தில் அனைவரும் அவனை வினோதமாகப் பார்த்தனர்.

“அய்ய ,இன்னாத்துக்கு இப்புடி பாக்குற”,”டேய் கண்ணாலம் தான் நீ சொன்ன மாறி பண்ணிடுச்சுல அப்புறம் என்ன எல்லாம் உனக்காகத்தான் சரியா”,அவர் சொல்லுவதை மறுக்க முடியாமல் “ம்மா ,என்னம்மா இப்புடி பண்ணுற என்று சொல்ல கரெக்டாக அந்த இடத்தில் ஆஜர் ஆனார் நம் முத்து.

“ஏய்,மவனே மாடுலேஷன் மிஸ் ஆகுது அத்த அப்புடி சொல்ல கூடாது”,”என்னம்மா இப்புடி பண்றீங்களேம்மா”, அவர் சொல்லிவிட்டு சிரிக்க,அவரை அடிக்க துரத்தினான் ராஜேஷ்,”அப்பனு கூடப் பாக்கமாட்டேன் யோவ் நில்லுய்யா” ……(வட போச்சே).

4

கண்ணைக் கசக்கி கொண்டு அமர்ந்து இருந்தாள் சரோஜா  தேற்றுவார் யாருமின்றி அமர்ந்திருந்தவளை வாஞ்சையாகத் தலையை வருடினார் முத்து,”போ மாமா அங்குட்டு,நீ ஒன்னும் கொஞ்ச வேண்டாம்”.

“இன்னா புள்ள சிலிப்பிக்குற உன் மாமனுக்கு அந்தப் புள்ளைய தான் புய்ச்சுருக்கு,நான் இன்னா செய்வேன், இங்க பாரு புள்ள மனசு ஒத்துபோகம கண்ணாலம் பண்ணா,என் நிலைமை தான் உனக்கும்,நானே பயந்துகினு இருக்கேன்,உன் மாமனுக்குத் தான் அந்தப் புள்ளைய புடுச்சு இருக்கு,அந்த புள்ள அவனைக் கண்டா தல தெறிக்க ஓடுது,அது மேல உசுர வச்சுட்டான்,அதுவே எனக்கு அடி வயித்துக்குள்ள ரயில் ஓடுது புள்ள”.

“இது இன்னா புதுக் கதையா இருக்கு உனக்கும் ஹார்ட்ல அம்பு உட்டுச்சா “……………”இன்னா புள்ள நக்கலா உன் மாமனுக்கு என்ன குறைச்சல் சொல்லு”,அவரது மீசையை முறுக்கிய வனஜா, “குடுச்சுக்கினு உடம்பக் கெடுத்து வச்சுருக்க மாமா இல்லாட்டி,ஏன் மாமே முன்னாடி நிக்க முடியாது”.

அவரும் சிரிப்புடனே “அந்தப் பாழா போன காமாட்சி அண்ணே அதான் என் பொஞ்சாதியோட அண்ணேஅந்தக் காசுமாலம் காதலுக்காக என் காதல காவா குடுத்துப் புட்டேன் புள்ள,அவன் அந்தப் பொண்ண இழுத்துகினு ஓடிட்டான் காமாட்சி தனியா வூட்டுல இருந்தவ விஷத்தை குடிக்கப் போய்ட்டா,எங்க அம்மாதான் கூட்டியாந்து,இவள நீ கட்டிக்கணும் சொல்லிடுச்சு,உங்க அம்மாயி பத்தி தான் தெரியுமே,அப்பாலதான் காமாட்சியா கட்டிகினே”.

“ஆத்தி,பாவம் மாமா நீ காமாட்சி அய்தைக்குத் தெரியுமா”,”இந்த ராஜேஷ் பொறந்தப்ப லலிதா பாக்க வந்துச்சு”,……. “யாரு மாமா அது” ,”அதான் என் டாவு லலிதா ஆஸ்பத்திரி செவிலி அவதான்,அங்கன மாட்னே, அன்னையில இருந்து காமாட்சி என்னடா பேசமாட்ட பக்கத்துல கூட நிக்க மாட்ட,படுக்கக் கூட வெளில தான் புள்ள”.

“ஐயோ…….இன்னா மாமா சொல்லுறா”

“இன்னாத்த சொல்ல,என் வாழ்க்கை தான் விளங்காம போச்சு, இந்த ராஜேஷ் பய ஆசை பட்ட பொண்ணு கூட நல்ல வாழனும் புள்ள,அதான் என் ஆசை”.

அவளுக்கும் கண்ணில் நீர் எட்டி பார்க்க “ஐய்யா,இன்னாத்துக்கு அழகுற கண்ணா துடை மாமா நான் இருக்கேன் ல,அந்த மல்கோவா மாம்பழத்தை மாமா கூடக் கொத்து வுடுறது என் பொறுப்பு”.

கையைப் பற்றிக் கொண்டு நன்றி உரைக்க “இன்னா நீ வள்ளுவர் இன்னா சொல்லிக்காரு யாரு உனக்குக் கெடுதல் செஞ்சாலும்,நீ அவுங்களுக்கு நல்லதே செய்னு”அது மாதிரி தான் மாமா என்ன கண்ணாலம் கட்டிக்காட்டியும்,அது வாழ்க்கையாவது நல்ல இருக்கணும்.

கவலை நீங்கியவராக மடியில் சொருகி இருந்த பாட்டிலை வாய்க்குள் சரித்துக் கொண்டார்.

காலையில் வேலைக்கு வந்தவனை ஒரு மார்கமாகத் தான் வரவேற்றான் கொசு,அவனதும் இளிப்பும் வரவேற்ற விதமும் எரிச்சலை கிளப்ப,”இன்னாடா லந்தா,பாத்து சிரி வாய் சுளிக்கப் போகுது”.

“இன்னா அண்ணே ஐஸ்ல வச்ச குல்பி மாதிரி குளு குளுனு வருவன்னு பார்த்தா,எண்ணெயிலா பட்ட தண்ணி மாதிரி சிடு சிடுன்னு இருக்க”.

உன் கேள்விக்குப் பதில் சொல்லுறா மாதிரி நான் இல்ல,மரியாதையா வேலை கவனி இல்ல அடிபட்டு சாவா “.,அதற்கு மேல் கொசு பேசுமா என்ன யூ டர்ன் போட்டு அந்த இடத்தை விட்டு பறந்து விட்டது.

‘சாப்பாடு கூட வைக்க மாட்டலாமா இருக்கட்டும்,கண்ணாமூச்சிய ஆடுற இன்னைக்கு யாரு இன்னா சொன்னாலும் சரி,உன்ன தூக்கினு போய்டணும்,முழிய பாரு சாவா அடிக்குற சா’…………………………

அவனுக்கு இருப்பு கொள்ளவில்லை வேலை செய்யும் எண்ணமில்லாமல் “டேய் கொசு கடைய பாத்துக்கோ”,என்று சொல்லியவன் பைக்கில் பறந்துவிட்டான்.

அவன் பச்சை கிள்ளியோ பவ்வியமாக மாவத்தல் போட்டு கொண்டு இருந்தது (ரொம்ப முக்கியம்).

“என்னடிம்மா,உன் ஆத்துக்காரர் அங்க தலை வலின்னு தலையைப் புடுஞ்சுண்டு உட்காந்து இருக்கார்,நீ என்னனா மாவத்தல் போட்டுண்டு இருக்க”. 

“அவர் வந்ததே நேக்குத் தெரியாது பாட்டி,இதோ போய்ப் பாக்குறேன்”,அவள் வேகமாகச் செல்ல ஒரு மூச்சு கிளம்பியது மங்களத்திற்கு,”இதுங்க எப்போ புருஞ்சுண்டு,குடும்பம் நடத்தி குட்டிய போட்டு ,நான் எப்போ கொள்ளு பாட்டி ஆகுறது,நேக்கு ஒன்னும் புரியமாட்டேங்குது,அவனைக் கண்டாலே என் முந்தானைய புடுச்சுண்டு அதுல ஒழுச்சுக்குற,பெருமாளே நீ தான் இதுங்க இரண்டையும் சேத்து வைக்கணும்”

வாய்விட்டு புலம்பிய வாரே வத்தலை காயா வைத்தார்,பொருத்தம் இல்லாத திருமணம் என்று மனம் நெருடினாலும் இனி அவன் தான் அவள் வாழ்க்கை, அதை தன் பேத்தி புரிந்து கொள்ள வேண்டுமே என்பதே அவரது பயம்.

தங்களது அறைக்குள் காபியோடு நுழைந்தவள்,கண்டது கண் மூடி கட்டிலில் படுத்திருக்கும் கணவனைத் தான்,மெல்ல அவனிடம் நெருங்கியவள் அவன் தோளில் தன் விரல் கூடப் படாமல் காற்றிலே கை அசைத்து அவனை எழுப்ப முயன்றாள்,அதனை உணர்ந்து கொண்டவன் கோபம் வர ‘தொட்டு கூட எழுப்ப மாட்டலாமா இவள’…..,மனதுக்குள் அவளைக் கருவியவன் அவளுக்கு முதுகு காட்டி திரும்பி படுத்துக் கொண்டான்.

“என்ன அந்தப் பக்கம் திரும்பிண்டர்,ஏங்கோ……ஏங்கோ காபி”, ஏங்கோவ ஏங்கி தானடி இருக்கேன்,அப்போதுதான் அவளைக் கவனித்தவன் போல எழுந்து அமர்ந்தான்,கண்களை வேறு மூடி மூடி திறந்தான்.(தூங்கி முழிக்காரராம,அட ராமா).

காபியை கையை அமுத்தி பற்றி வாங்கியவனை பார்த்தால் மீனு,அவன் காதல் போங்க பார்க்க இவளோ கலவரமாக பார்த்தால்,அவன் பருகு பருகுவேனா (காப்பிய தாங்க சொல்லுறேன் )பருகிட்டு அந்த டம்பளரை நீட்ட,அவள் வாங்குவதற்கு அருகில் வர,என்ன நடந்தது என்று உணரும் முன்னே அவளை அனைத்திருந்தான்,அடுத்து என்ன நடந்ததோ ராஜேஷின் கத்தல் அந்த வீட்டை நிறைத்தது.

  5

தனது வயிற்றில் ஊசி போல் குத்தியது எது என்று பார்க்க அவளை விலக்கியவன் கண்ணில் பட்டது ஏவுகணை போல் துருத்தி கொண்டு இருக்கும் அவளது சேலை மடிப்பின் ஊக்கு, அப்போது தான்  கவனித்தான் அவள் சேலை கட்டிய அழகை சுமார் ஒரு டஜன் ஊக்கையும் இழுத்து இழுத்து குத்தி வைத்திருந்தால்,”என்னடி மாமி இது,இத்தனை ஊக்க குத்தி வச்சிருக்க”,”நேக்கு சேலை கட்டி பழக்கமில்லை அதான்”,அவள் தயங்கி தயங்கி சொல்லும் அழகில் தன்னைத் தொலைத்தவன்.

மாமா எதுக்கு இருக்கேன் நான் சொல்லி தரேன் என்று அவள் மீது பாயாத குறையாக நெருங்கியவனை ஒற்றைக் கையில் தள்ளி,முகத்தைத் திருப்பிக் கொண்டால்,” இங்க பாருங்கோ,நேக்கு உங்கள பத்தி எதுவும் தெரியாது, முதல நாம பேசி தெரிஞ்சுக்கலாம்,அப்புறமா இதுல்லாம்”அவசரமாகச் சொல்லியவள் அவனிடம் பதில் இல்லாமல் போக அவனை நிமிர்ந்து பார்த்தால்.

அவனோ “பேசி,பழகி,அறுஞ்சு,தெரிஞ்சு,விளங்கிடும், உன்னாண்ட ஒன்னு சொல்லுறேன் காத திறந்து வச்சு மண்டையில ஏத்திக்கோ,எனக்கு நீ தான் பொண்டாட்டி,பாத்த உடனே நெஞ்சுக்குள்ள பச்சக்குனு ஒட்டிக்கின,நீ எம்மா மோசமா இருந்தாலும் எனக்கு நீ வேணும்,அத பத்தி கவலை பட தேவையில்லை,ஒழுங்கா மாமா கூட சேந்து ஊடு முழுக்க புள்ளைங்க கைய்யா முய்யானு கத்துற மாதிரி குட்டிங்களா போடுறோம்,குஜாலா இருக்கோம் என்ன”.

‘நான் என்ன சொல்லுறேன் இந்தக் கடன்காரன் என்ன சொல்லுறான்,ஐயோ இப்போ என் ஆத்துகார் ஆயிட்டாரே தீட்டக்கூடாது பெருமாளே மனுசிடுப்பா’வேகமாக அவனை மனதில் தீட்டியவள் அவனுக்காக வேண்டவும் செய்தாள்.

மாமி,” சொல்ல மறந்துட்டேன் நாளைக்கி சீக்கரமா கிளம்பி இருக்க  என் ப்ரண்டு கம்பெனில வேலை இருக்காம்,அவனண்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன்,நீ பயப்படாம போலாம் நல்ல கம்பெனி”,அவளுக்கு சந்தோசம் பிடிபடவில்லை என்ன சொல்கிறான் இவன்,”நெஜமாவே,நேக்கு வேலை கிடைக்குமா”,ஆவல் ததும்பும் அவள் குரலில் மயங்கியவன்,” ஆமாடி மாமி கண்டிப்பா கிடைக்கும்,இந்த ராஜேஷ் சொன்னா செய்வான்.

அவன் குரலில் உள்ள கிறக்கம் அறியாமல்,”தேங்க்ஸ் மாமா” என்று சிட்டாக பறந்துவிட்டாள்,சந்தோச மிகுதியில் மாமா என்று அழைத்ததை கூட மறந்து விட்டு சென்றால்,ராஜேஷுக்கு அவளது மாமா என்று விழிப்பு அத்தனை சந்தோசத்தை கொடுத்தது,அதே மனநிலையில் தாயிடம் சென்று மீனுவின் வேலை விடயத்தை பற்றி சொல்லி சம்மதமும் பெற்றான்.

பாட்டிக்கும் அத்தனை ஆனந்தம்,அவனது நடவடிக்கையும்,நல்ல குணமும் அவரது மனத்தாங்கலை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்தது என்றே சொல்லலாம்.

மறு நாள் காலை அவன் சொன்னது போல ரெடியாகக் கிளம்பி இருந்தால் மீனு,தனது அத்தையிடமும், பாட்டியிடமும் ஆசி பெற்றவள் கணவனின் பைக் நோக்கி நடந்தால்,முழுக்கை டாப்ஸ்,லெகின்ஸ் என்று வந்தவளை இமைக்க மறந்து பார்த்துக் கொண்டு இருந்தான் ராஜேஷ்,அவள் அருகில் வரவே சுதாரித்தவன் நல்ல பிள்ளை போல் திரும்பி கொண்டான்,வந்தவள் இருபுறமும் கால் போட்டு உட்கார,விண்ணில் பறந்தான்,ஆனால் அடுத்த நோடியே அவன் சிறகுகள் வெட்டப்பட்டது போலத் தொபுக்கடீர் என்று தரையில் சரிந்தான்.

இருபுறம் கால் போட்டு உட்காந்தவள்,நன்றாக உட்காந்து அவனுக்கும் அவளுக்கும் இடையில் தான் கொண்டு வந்த கை பையும்,சான்றிதழ் கோப்பையும் வைத்து அணைக்கட்டிவிட்டு பின்னல் இருக்கும் கம்பியை இறுக்கப் பற்றிக் கொண்டாள்.

அவனுக்கு வந்த கோபத்திற்கு அளவே இல்லை,முழு தேங்காயை நாய் உருட்டிய கதையாக அவளை வைத்துக் கொண்டு அவன் படும் அவஸ்தை ஐயோ …………..என்று இருந்தது பாவம் … கடுப்பை முழுவதும் வண்டியிடம் செலுத்தினான் என்னம்மா இப்புடி பண்றீங்களேமா……..

அங்கு அவனது நண்பன் முகேஷ் இவர்களுக்கு முன்னமே வந்து காத்திருந்தான்,ராஜேஷை பார்க்கவும் “வாடா புதுமாப்பிள்ளை “அவனை அனைத்து வரவேற்று,மீனுவையும் பார்த்து “வாம்மா”என்றான்,அவளும் சின்னச் சிரிப்புடன் தலை அசைத்தாள்

 

பின்பு அவனிடம் விவரம் கூறி அவளை ஒப்படைத்து விட்டு,அவளிடம்”எதா இருந்தாலும் அவன்கிட்ட சொல்லு,அவன் பத்துக்குவான்”அவன் சொல்லவே,கொஞ்சம் கலக்கமாகத் தான் தலையை ஆட்டினாள்,மனமே இல்லாமல் ஆயிரம் முறை அவளைப் பார்த்துக்கச் சொல்ல,அவன் நண்பன் முறைக்கவும் தான் அந்த இடத்தை விட்டுச் சென்றான்.

அதன் பின் அலுவலகம் சென்று அவள் நேர் கானல் முடியும் வரை முகேஷ் துணை இருந்தான்,அனைத்தயும் முடித்துவிட்டு முகம் மலர வந்தவள்,”ரொம்பத் தேங்க்ஸ் அண்ணா,பயந்துண்டே இருந்தேன்,எங்கே செலக்ட் ஆகாம போய்டுவேனோனு,இப்போதான் நேக்கு நிம்மதியா இருக்கு”.

அவன் சிரித்தவாறே “யாரு நீங்க,தி கிரேட் ராஜேஷ் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் கோல்ட் மெடல் பொண்டாட்டி ஆச்சே,எப்புடி நீங்க இன்டெர்வியூல பாஸ் ஆகாம இருப்பிங்க”,அவன் சொல்லவும் அதிர்ச்சியாகி நின்றவள் வார்த்தைகள் தந்தி அடிக்க “என்னது மெக்கானிக்கல் இன்ஜினீரிங்கா?”,அவளது அதிர்ச்சியில் அவளைப் புரியாமல் பார்த்தவன்.

அவள் அதிர்ச்சியில் “என்னம்மா உனக்குத் தெரியாதா,அது மட்டுமில்ல அவனுக்கு வெளி நாட்டுல வேலை கிடைச்சுது,அவன்தான் சொந்தமா மெக்கானிக் ஷெட் தான் வைக்கணும் ஒத்த காலுல நின்னு வச்சான்,செமயா இங்கிலீஷ் பேசுவான்.

அவன் சொல்லுவது எல்லாம் உண்மையா ?என்பது போலப் பார்த்துக் கொண்டு இருந்தால் மீனு,அவன் நண்பன் அவனுக்காகப் போய்ச் சொல்லிக்கிறானோ என்ற எண்ணமும் தோன்றியது,அவனது தற்போதைய தமிழே அவளுக்குப் படும் சவால் தான்,இதில் அவன் ஆங்கிலம் பேசினால் எப்படி இருக்கும் என்று கற்பனை பண்ணி பார்த்தவளுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை.

முகேஷ் தன்னை மேலும் கீழும் பார்ப்பது தெரியாமல்,அவள் சிரித்துக் கொண்டு இருந்தால்………………………..கேக்க பேக்கானு ……………….

 6

மீனுவின் பார்வை தன் மீது படிந்து மீள்வதை ஓரக்கண்ணால் ரசித்தவரே அமர்ந்து இருந்தான் ராஜேஷ் ‘இன்னாடா இது மாமி இந்தப் பார்வ பார்க்குறா,சரில்லையே யோசித்தவன்’அவளை சீண்டும் பொருட்டு “இன்னாடி மாமி பார்வையாலே முழுங்குற “அவளை இழுத்து அணைத்துக் கொண்டே கேட்க பிடிபட்டவள் போல் திருத் திருவென்று முழித்தாள்.

என்று தனக்கு வேலை வாங்கிக் கொடுத்தானோ,என்று அவனது நண்பன் மூலம் அவனது படிப்பையும் திறமையையும் அறிந்தாளோ அன்றில் இருந்து அவன் மீது மரியாதை கூடியது,அவனிடம் கேட்டு விட வேண்டும்,அதற்குத் தக்க தருணம் பார்த்துக் கொண்டு இருந்தாள்,அந்த சந்தர்ப்பம் கிடைக்க அவள் பார்வையால் தொடர போய்த் தான் மாட்டிக்கொண்டாள்.

அவன் நெருக்கத்தில் திக்கியவள் ஒருவாராகத் தன்னைச் சமாளித்து “நீங்க…நீங்க மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடுச்சு இருக்கீங்களாமே?, ஏன் வெளி நாட்டுக்கு வேலைக்கு போகல?”அவள் திக்கி திக்கி கேட்கும் அழகை ரசித்தவன்,”எனக்கு சுய தொழில் செய்யணும்,கூடவே வண்டியை பிரிச்சு போட்டு வேலை பார்க்க ரொம்பப் புடிக்கும் அதான்,அதுவும் இல்லாம எங்க அம்மாக்கு நான் ஒரே புள்ள, இந்த ஆள நம்பியெல்லாம் எங்க அம்மாவை உட்டுட்டு போக முடியாது.

அவன் மீது கொஞ்சமே கொஞ்சம்  காதல் வந்தது, இருவரது கண்ணும் காதல் மொழி பேச அந்த மோன நிலையைக் கலைக்க வந்தது முத்துவின் பாடல்,

ஊற தெரிஞ்சுகிட்டேன் ,உலகம் புருஞ்சுகிட்டேன் கண்மணி,ஏன் கண்மணி

நாளும் பொறந்துடுச்சு நாலும் புருஞ்சுடுச்சு கண்மணி ஏன் கண்மணி.

பச்ச குழந்தையினு பாலூட்டி வளர்த்தேன்,பால குடுச்சுப்புட்டு

பாம்பாகக் கொத்துதடி…………..

முத்துவின் பாடல் கேட்டு வெக்கப்பட்டு ஓடியே விட்டாள்,ஒரு முத்தமாவது கிடைக்கும் என்ற நப்பாசையில் அவளிடம் நெருங்கியவன் முற்றிலும் ஏமாந்து போனான்,அவனுக்கும் காம தேவனுக்கும் தீராத பகையோ என்னவோ யார் கண்டது.

கடுப்புடன் தந்தையை நெருங்கியவன் “யோவ்,எனக்கு வர கோவத்துக்கு உன்ன அலேக்கா தூக்கி கூவத்துல போட்டுருவேன்,எம்மா பெரிய சீன் தெரியுமா,பாவி பாவி நீயெல்லாம் அப்பனா”,இருக்கும் வெறியில் முத்துவின் குரவளையைக் கடித்துத் துப்பும் வேகத்தில் இருந்தான்.

“ஐயோ………ராசா நீ மருமகளோட குஜாலா இருக்கனுமுனு நானும் சரோஜாவும் நாளைக்கி பெருசா…………………….. “அவர் சொல்லவருவதைத் தடுத்தவன்,”ஒழுங்கா போய்ப் படுத்துடு இல்ல உன்ன கொன்னேபுடுவேன்”……

அதற்கு மேல் பேச நம் முத்து என்ன பைத்தியமா, காமாட்சி ஒரு புறம் லலிதா மறுபுறமென்று கனாவில் சஞ்சரிக்கச் சென்று விட்டார்,அவர் சொல்லுவதை முழுதாகக் கேட்டு இருந்தால்,நாளை வரும் கண்டத்தை கடந்து இருக்கலாம்,ஆனாலும்,விதி வலியது தாப்பா…….

இரவில் இரு துருவங்களாக எதிர் எதிர் புறம் தூங்கும் மீனுவும் ராஜேஷும் இன்று நெருங்கி படுத்து கொண்டனர்,அவள் அருகில் படுத்த நிம்மதியோ என்னவோ நன்கு உறங்கினான் ராஜேஷ்,முதல் முதலில் தன் கணவனை இப்போது தான் பார்க்கிறாள்……. அருகில்.

அலை அலையான கேசம்,அடர்ந்த மீசைக்குள் சிக்கி இருக்கும் மேல் உதடு,கீழ் உதடு அவனது உயர்ந்த குணத்தைப் பறை சாற்ற இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள்,இவள் தன்னைப் பார்க்கிறாள் என்பதை உணர்ந்தானோ என்னவோ, இன்னும் நெருங்கி படுத்து அவளது இடுப்பில் கை போட்டு இறுக்கி அணைக்க,கண்மூடி அதை ரசித்தாள், தூக்கத்தில் எதிர்ச்சியாக நடந்தேறிய சம்பவமாக இருந்தாலும்,அவனைப் பார்க்க வெட்கம் கொண்டு அவனது மார்பில் தஞ்சம் புகுந்தாள்.

மஞ்சள் கயிறு மாயம் என்பது இது தான் போலும்,அவனை கண்டாலே காது தூரம் ஓடுபவள் அவனது குணத்தையும்,எண்ணத்தையும் படிக்க முயன்றாள்,அவனை அறிந்து கொள்ளும் ஆர்வம் வந்தது,இனி தினமும் தனது அத்தையின் மூலம் அவனுக்கும் எது பிடித்தம் என்பதை அறிந்து நடக்க வேண்டும் என்று எண்ணி கொண்டாள்,எண்ணியவை இனிக்க சுகமாக தூங்கிபோனாள் …நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் நான் எதற்கு என்று கேட்டுவைத்தார் கடவுள்………………..

அடுத்த நாள் விடியல் முற்றிலும் ராஜேஷுக்கு ஆப்பு நாளாகத் தான் விடிந்தது,தனது நெஞ்சில் தஞ்சம் புகுந்து இருக்கும் மனைவியைப் பார்க்க பார்க்க மனதில் மத்தாப்புத் தான்,அதிர்ச்சி விலகாமல் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்,அவள் அசைவை உணர்ந்தவன் தூங்குவதைப் போல் பாசாங்கு பண்ண,அவள் கண்ணைக் கசக்கி கொண்டு பார்த்தாள்,இரவை போல் இப்போதும் நல்ல உறக்கத்தில் ராஜேஷ் இருக்கின்றான் என்று நினைத்து முடியை கோதி கொடுத்தாள்,அவனும் சுகமாக ரசித்துக் கொண்டு இருந்தான்,நேரம் ஜெட் வேகத்தில் ஓடுவதை எண்ணி அவள் காலை அலுவலை கவனிக்கச் சென்றுவிட்டாள்.

ராஜேஷுக்கு அத்தனை மகிழ்ச்சி , இனி தாங்கள் சேரும் நாட்கள் வெகு தூரமில்லை என்பது அவனது கணிப்பு.(ஆனா கருத்துக் கண்ணிப்பு படி அப்புடி இல்ல ராஜேஷ் தம்பி ………)

குளியல் முதல் உணவு உண்ணும் வரை இருவரது பார்வையும் மோதி கொண்டே இருந்தது,உணவை உண்ணாமல் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவனைப் பார்த்த காமாட்சிக்கு அத்தனை ஆனந்தமாக இருந்தது,எல்லாம் நமது வனஜா வரும் வரை தான்.

“ராஜேஷ் மாமா “என்று கத்தி கொண்டு வந்தவளை எரிச்சலோடு பார்த்து வைத்தான் ராஜேஷ் “இன்னா” ஏக கடுப்பில் கேட்டவனைக் கண்டு கொள்ளாமல்,”சோக்கா இருக்கா?”என்று சுற்றி சுற்றி காட்டியவளை புரியாமல் பார்த்தான்,”இன்னா மாமா நீ , ஆசையா நீ வாங்கிக் கொடுத்த சீலையைக் கட்டிகினு வந்தா, இன்னாதுனு கேட்குற”,அவள் சொன்ன நொடி முழித்தவன் அதே முழியோடு  தனது மனைவியைப் பார்க்க,மீனு காளி அவதாரத்தோட நின்று கொண்டு இருந்தாள்.

ராஜேஷ் மனதுக்குள் எனக்கு ஜட்டி கூட வாங்க தெரியத்துடி பாவி எங்க அம்மா தான் வாங்கிக் கொடுக்கும்,இந்த லட்சணத்துல நான் எங்க போய்ப் புடவை வாங்க……

அவளது முறைப்பை கண்ட மாமனும்,மருமகளும் சக்ஸஸ் என்று கட்டை விரலை தூங்கி காட்டி கொண்டனர்,மீனுவுக்குப் பொறாமையைத் தூண்டி விட்டு அவளை ராஜேஷுடன் சேர்த்து வைக்க எண்ணி இவர்கள் அடித்த கூத்தில்,அவனைக் காதலாகப் பார்த்த கண்கள் கொலைவெறியோடு பார்த்தது தான் மிச்சம்,மீனு கோபமாகப் பாத்திரத்தை போட்டு விட்டுப் போக,ராஜேஷ் தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான்……………என்னம்மா இப்புடி பண்ணிறீங்களேமா…………

 7

தலையில் துண்டை போட்டுகொண்டு அமர்ந்து இருந்த முத்துவை பார்க்க பாவமாகத் தான் இருந்தது,பிள்ளையார் பிடிக்கப் போய் அது குரங்காய் மாறிய கதை தான் அவரது நிலை,தன் மகன் மருமகளுடன் ஒன்றி வாழவேண்டும் என்று அவரும்,சரோஜாவும் கூட்டு சேர்ந்து முடிவெடுத்து செயல் படுத்த,அது அவர்கள் வாழ்க்கைக்கே வெடி குண்டாக மாறும் என்பதை யார் அறிந்தார்.

பக்கத்தில் அவரைப் பார்த்த வாரே உட்காந்து இருக்கும் வனஜாவை குமுட்டில் குத்தினார் காமாட்சி “சேத்து வைக்குற முகரக்கட்டைய பாரு,இன்னாத்துக்குடி உனக்கு இந்த வேல”,”ஐயோ அயித்த நம்ம முண்டகண்ணியம்மன் மேல சத்தியமா அவுங்க நல்ல இருக்கணும் தான் நானும் மாமாவும் பண்ணுனோம் இப்புடி புட்டுக்கிச்சு”,உண்மையான வருத்தத்துடன் அவள் சொல்ல அதுக்கு மேல் அவரால் கடிந்துக் கொள்ள முடியவில்லை,”சரிடி கெளம்பு உங்க வூட்டுக்கு போக நேரம் ஆகுது அப்புறம் உங்க ஆத்தா ஊர கூட்டி பஞ்சாயத் வச்சுடுவா”,சரி என்பது போலத் தலையை ஆட்டியவள் அவளது வீட்டை நோக்கி சென்றால்,அவள் சென்ற பின்பு திரும்பிய காமாட்சி கணவனைப் பார்த்து.

“பரவாயில்லையா என்னைய தான் உனக்குப் புடுச்சுக்காது பாசம் கிடையாது,புள்ள மேலையாவது வச்சிக்கினியே சந்தோசம்”,கண்ணைக் கசக்கியவரே பேச, அவருக்கு தொண்டையை அடைத்தது ” காமு” முத்துவின்  ஏக்கமான அழைப்பு அவரை அசைத்தாலும் வெளியில்  ,”காமுவாம் காமு கம்முனு படுய்யா கொஞ்சம் பேசுனா போதுமே”கணவனை நொடித்துக் கொண்டு சென்றார் அவருக்கு உள்ளுக்குள் சந்தோசமே, இருக்காதா பின்ன அவருக்கு முத்துவின் மேல் கொள்ளை ஆசை, அவர் வேறு பொண்ணை விரும்பியவர் என்று தெரிந்தோ அன்று முதல் தான் அவரை ஒதுக்கினார் அதுவும் அளவு கடந்த அன்பினால் தான்.(என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்).

இங்கு……………..

தனது அறைக்குள் நுழைந்தவளை ஏக்கமாகச் சுற்றி வந்தது ராஜேஷின் கண்கள்,அவன் பார்ப்பது தெரிந்தாலும் அவனைக் கண்டு கொள்ளாமல் அவள் போக்குக்கு உடை மாற்றி வந்து கட்டிலில் படுத்து விட்டாள்,அவளது அமைதி அவனைக் கொள்ளாமல் கொன்றது,’அவன் அவன் கல்யாணம் பண்ணி மூணு மாசத்துல 90 இரவு கொண்டாடுறானுக,எனக்குக் கல்யாணம் ஆகி ஆறு மாசம் ஆகுது ஓர் இரவுக்கே வழியில்லை,கொசு சொன்ன மாதிரி எனக்கு இந்த விஷியத்துல கண்டம் இருக்குமோ,அந்த பொடி பையேல்லாம் காலாய்க்குற அளவுக்கு இருக்கு என் நிலமை’.

பலவாறாக மனதுக்குள் மருகியவன் மீனுவை பார்த்துக் கொண்டே தூங்கி போனான்.

காலையில் வழக்கமான விடியல் தான் இன்று மீனு வேலைக்கு செல்லவில்லை என்று கூறிவிட்டாள்,அவள் முகமும் சரியில்லை,பாட்டியும்,காமாட்சியும் அத்தனை முறை கேட்டும் எதுவும்  சொல்லவில்லை, ராஜேஷிற்கு அவள் முகம் வதைக்க அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை இன்று அவன் போயே ஆக வேண்டிய சூழ்நிலை வேறு தன்னுடைய தொழிலை விரிவு படுத்துவதற்காகப் பேங்க் மேனேஜரை சந்திக்கச் செல்கிறான், இவள் இப்படி முகத்தைத் தூக்கி கொண்டு திரிந்தால் அவனால் எப்படிச் செல்ல முடியும்.

“மீன்னு” அவன் அழைக்கவே வேகமாக மாடி எறியவள் அவனைப் பார்த்து அசந்து போய் நின்றாள்,பேங்க் செல்வதால் நீல நிற முழு கை சட்டையை இன் செய்து  இருந்தவனைப் பார்க்க இரு கண்கள் போதவில்லை அவளுக்கு,அதையெல்லாம் உணராதவன் அவளிடம் நெருங்கி அவளது கன்னம் பற்றி “ஏண்டி மாமி சோகமா இருக்க,சத்தியமா அந்தப் புடவையை நான் எடுக்கலடி,எனக்கே எங்க அம்மா தான் எடுத்து கொடுக்கும் நம்புடி மாமி”அவன் குரல் அவளை வசியம் செய்ய.

“தேம்பியவரே நான் ஒன்னும் அதுக்குக் கோபமா இல்ல அத்தையும்,மாமாவும்,அந்த பொண்ணு சரோஜாவும் எல்லாம் சொல்லிட்டாங்க நான் உங்க மேல தான் கோபமா இருக்கேன்”,இது என்ன புதுக் கதை என்பதைப் போலப் பார்த்தவன் “இன்னாடி இது வம்பப் போச்சு, அதான் அதுங்களே உண்மைய  சொல்லுடுச்சே அப்புறம் ஏன் என் மேல கோபம்,நான் இன்னாடி மாமி பண்ணுனேன்” அழுது விடுபவன் போல அவன் கேட்க,கோபமாக நிமிரிந்தவள்…..

“உங்களுக்குத் தெரியாது பொய் சொல்லத்தேல்”கண்கள் கலங்க உதடு துடிக்கப் பேசியவளை பார்க்க மனம் அள்ளி கொண்டு போனது,”மெய்யாலுமே தெரியலடி”அவன் அலுத்துக் கொள்ள.

“நேத்து யாரு சமச்சானு தெரியுமா”,அவள் கேட்கும் போதாவது சுதாரித்துக் கொண்டு இருக்கலாம் கொசு சொன்னது போல அவனுக்கு இந்த விஷியத்தில் கண்டம் உறுதி தான் போலும்,”அந்த கண்டராவிய யாரு சமச்சது ” அவன் சொன்னது தான் தாமதம் கத்தி கதறி அழுக ஆரமித்து விட்டால்.

“பாத்திங்களா பாத்திங்களா நான் சமச்சது கண்டராவியா,என்னய்ய….. உங்களுக்குப் பிடிக்கல,என் சமையலும் பிடிக்கல,உங்களுக்கு நான் செட் ஆகல அப்புடி தானே,நேக்கு அடைக்கலம் கொடுத்து வேலை வாங்கி கொடுத்து  இருக்கேள் அந்த நன்றிக்காக நான் ஓரமா இருந்துட்டு போறேன்,நீங்க நன்னா சமைக்குற பொண்ண பார்த்து கட்டிகோங்கோ “அவள் போக்கில் பேசி கொண்டு போக அதிர்ந்து போனான்.

அவனும் என்ன தான் செய்வான் விதி விட்டு விட்டு அடித்தால் பரவாயில்லை,தொடர்ந்து அல்லவா வெளுத்து வாங்குகின்றது,நேற்று நடந்தவை என்னவென்றால்.

அவளுக்கு உண்மை தெரிந்த பின்பு ராஜேஷின் மேல் இருந்த சிறு வருத்தமும் தூரமாகச் செல்ல,பட்டம் பூச்சியாகச் சுற்றி வந்தாள்,”அத்தை நான் இன்னக்கி சமைக்கட்டுமா”,ஆசையாகக் கேட்ட மருமகளைக் கட்டி கொண்டு ஒப்புதல் தந்தார் காமாட்சி,ஆசை ஆசையாகச் சமைத்துக் கணவனுக்கும்,அவளுக்குமாக உணவை எடுத்து வைத்தால் ,”என்னடி உன் ஆம்படையானுக்குச் சமைச்சியா,பரவாயில்லையே நொக்குச் சமைக்கத் தெரியுமா என்ன “கேலி போல் பாட்டி கேட்க “போங்க பாட்டி”அழகாக வெட்க பட்டாள்.

அன்று முழுக்க சிரித்த முகமாக வளைய வந்தவள்,அன்று மாலை ஆவலாக வீட்டுக்குள் நுழைய ,ராஜேஷ் கத்தி கொண்டு இருந்தான்,”அம்மா………………..இன்னா இது”,எது இன்று புரியாமல் முழிக்க “இது” தனது டிபன் சம்படத்தைத் தூக்கி கட்டினான்,”ஏன்டா? “…….

“இன்னா ஏன்?,நான் என்ன ஆடு,மாட பருப்பு,சாம்பார் ,பச்சை பச்சையா காய் வச்சுருக்க”,பருப்புக் கடைந்து,வடகம் தாளித்து மணக்க மணக்க சாம்பார் வைத்து,பீன்ஸ்,கேரட் பொரியல் செய்து வைத்தாள் மீனு,அதற்குத் தான் எப்போது குதித்து கொண்டு இருந்தான், மீனுவை சங்கடமாகப் பார்த்து வைத்தார் காமாட்சி ,’மட பைய கரெக்டா அவ வர நேரத்துக்கா இதப் பேசணும்'”இப்போ இன்னா நாளைக்கி வேற ஆக்கி தரேன் போ போய்க் குளி”,அங்கிருந்து அவனை அகற்ற பார்க்க.

“அவனோ இனிமே இது மாதிரி சமைச்ச” என்று எச்சிரித்து விட்டு வேறு சென்றான்,காமாட்சி மீனுவிடம் வர அவள் அழுது கொண்டே சென்று விட்டாள்,அவனுக்கு என்ன ஜோசியமா தெரியும் இன்று தனது மனைவி சமைத்து இருப்பாள் என்று,அவனையும் சொல்வதற்கில்லை தினமும் கவுச்சியில்லாமல் சோறு இறங்காது,தொட்டுக்கொள்ளக் கருவாடு கண்டிப்பாக வேண்டும் அப்புடி இருப்பவனிடம் பருப்பு சோறு கொடுத்தால்………….

அவள் அழுது கொண்டே இருக்க எழுந்து வந்தவன் அவளிடம் நெருங்கி “எனக்கு நேரமே சரில்லடி மாமி,நான் நேரா வண்டி ஓட்டுனாலும்,அது கோணலா தான் போகுது,வண்டிய மாத்துறத,ஹண்ட் பார மாத்துறதானு தெரியல,அதற்கும் அவள் சிலிர்த்துக் கொண்டு” என்ன மாத்துங்கோ வண்டி நேரா ஓடும்” அவன் மீது பாயாத குறையாக சொல்லி  விட்டு சென்றால்.

தலையில் கை வைத்து அமர்ந்தவனை சோதிப்பது போல் பக்கத்து விட்டு ரேடியோ பொட்டி பாடியது சோதனை மேல் சோதனை போதுமடா சாமி வேதனை தான் வாழ்க்கையென்றால் தாங்காது பூமி.

 8

தனது முன்பு அமர்ந்து இருக்கும் நண்பனை பார்க்க பாவமாகத் தான் இருந்தது முகேஷிற்கு,அதுவும் அவனது தற்போதைய குடும்ப வாழ்க்கையை எண்ணிய போது பாவத்தை மீறி சிரிப்பும்  வந்தது ,உதட்டை மடக்கி சிரிப்பை அடக்கினான்,அவன் முன்பு சிரித்து வைத்தால்,இருக்கும் மனநிலைக்குத் தன்னை உப்புக் கண்டம் போட்டு விடுவான்.

நிமிர்ந்து நண்பனை பார்த்த ராஜேஷ் அவன் சிரிப்பை அடக்கி கொண்டு அமர்ந்து இருப்பது புரிய வேகமாக எழுந்து செல்ல பார்க்க,”டேய்,கோச்சுக்காதடா உட்காரு”.

“பின்ன இன்னாடா உன்னாண்ட சொன்னா,எதாவது ஐடியா கொடுப்பன்னு பார்த்தா,சிரிச்சுக்கினு இருக்க”,ராஜேஷையும் குத்தம் சொல்ல முடியாது அவனது நிலையில் யாராக இருந்தாலும் இந்நேரம் பொறுமை எல்லாம் காற்றில் பறந்து இருக்கும். 

“டேய் உனக்கு இருக்குற பிரச்சனைக்கு நான் என்ன சொல்லுறதுனு தெரியலடா,மாமியார் சண்டை,அந்த பொண்ணு உன் குடும்பத்தோடு ஒத்து போக மாட்டிங்குது,உங்க அம்மா அப்பா வீட்டுல இருக்கக் கூடாது,அவுங்களுக்குக் காசு கொடுக்காத,இந்த மாதிரியெல்லாம் அந்தப் பொண்ணு மக்கர் பண்ணுச்சுனா சரிங்களாம்,அந்த பொண்ணு இருக்குற இடமே தெரியல,ரொம்ப அமைதியா இருக்கா,பிரச்சனை உங்கிட்ட தாண்ட இருக்கு,ஒன்னு அது உன்ன தேடி வருது வனஜா மேட்டர் மாதிரி இல்ல நீ அத தேடி போர சாப்பாடு மேட்டர் மாதிரி”.

“அது மட்டுமா அந்தப் பொண்ண லவ் பண்ணியா கல்யாணம் பண்ணுன,பிளான் பண்ணி பண்ணியிருக்க,அப்போ அதுக்குத் தகுந்த மாதிரி தான் நீ நடந்துக்கணும்,அந்த பொண்ணுக்குக் கொஞ்சம் டைம் கொடுடா,ஒரு நாளுல எத்தனை மணி நேரம் அந்தப் பொண்ணுகூடப் பொதுவா பேசுற சொல்லு”,”எங்க டா இருக்குறது கொஞ்ச நேரம் அவளும் ஆபீஸ் போய்டுற,அந்த கொஞ்ச நேரத்துல நான் மட்டும் தான் பேசுவேன்,அவ ஒரு வார்த்தைக்கு மேல பேசமாட்ட,ஆனா கோபம் வந்தா மச்சி பேச்சையே நிறுத்த மாட்ட”

எல்லாப் பொண்ணுங்களும் இந்த விசியத்துல அப்புடித்தான் மச்சி,நீ கவலை படாத,இனிமே நீயும் அவுங்க கிட்ட டிஸ்டன்ஸ் கீப் பண்ணுட,அந்த பொண்ணுக்கு வேண்டியதை பார்த்து பார்த்துச் செய்,ஆனா கிட்ட போகாத,என்ன பொறுத்த வரைக்கும் அந்தப் பொண்ணுக்கு உன் மேல இஷ்டம் இருக்கு,ஆனா உன் பழக்க வழக்கம்,வாழ்கை முறை தான் இடிக்குது,அதையும் தப்பு சொல்ல முடியாது மச்சி கடவுள் போட்ட முடுச்சு அப்புடி ,ஐயர் ஆத்துக்கும்,ஆரத்துக்கும் கோர்த்து விட எப்புடிடா அந்த ஆளுக்கு மனுசு வந்துச்சு.

சிரியாமல் கலாய்த்த நண்பனை பார்த்து முறைக்க மட்டுமே முடிந்தது ,”எதுக்குடா முறைக்குற உண்மைய சொன்னா கோப படக்கூடாது மச்சி,எதுக்கும் பார்த்து இரு மச்சி,இனிமே சொதப்பாத,ஆனாலும் மச்சான் விதி எல்லார் வாழ்க்கையிலும் வெஸ்டர்ன் டான்ஸ் ஆடுன,உன் வாழ்க்கையில குத்து டான்ஸ் ஆடுதுடா கவனமா இரு.

முகேஷ் அவனைக் கிழித்துத் தோரணம் கட்டினாலும்,உண்மையாக நண்பனுக்காக வருந்தினான்,ராஜேஷின் முகத்தில் புதிய தெளிவு முகேஷ் சொல்வது போலச் செய்வது தான் சரியென்று தோன்றியது,பின்பு நண்பர்கள் இருவரும்  கல கலப்பாக பேசி விடை பெற்றனர்.

நட்பு மட்டுமே செய்யும் மாயம் இது தான்,எத்தனை கடினமான சோதனை வந்தாலும்,நண்பனிடம் வரும் ஓர் ஆறுதல் வார்த்தை அதனைத் தூசியாக எண்ணி தகர்த்து விடும்,ராஜேஷிற்கும் அப்புடித்தான் இருந்தது புதுத் தெளிவோடு வீட்டை நோக்கி சென்றான்.

வீட்டுக்குள் நுழையும் போதே மாமியார் மருமகள் கொஞ்சல் காதில் விழுந்தது,சிறு புன்னைகையோடு வீட்டினில் நுழைந்தான் “மீனு குட்டி கொஞ்சம் சாப்புடு கண்ணு,இந்த அத்தைக்காக, குருவி கொத்துன மாதிரி கொத்துனா,எங்கன உடம்புல ஓட்டும்,பிறகு புள்ள பிறக்கும் போது நீதான் கஷ்ட படுவ”,குழந்தை என்று சொன்னதுமே அவளை அறியாமல் முகத்தில் தோன்றிய வெட்கத்தை ரசித்துக் கொண்டே அவர்களை நெருங்கினான் ராஜேஷ்.

ராஜேஷை பார்த்த காமாட்சி “இன்னாடா வேல இல்ல நேரத்துக்கே வந்துட்ட”.

கொஞ்சம் உடம்பு முடியலம்மா அடுச்சு போட்ட மாதிரி இருக்கு,நான் போய்த் தூங்குறேன் எழுப்பாத.

சாப்ட்டு தூங்கு ராஜேஷு,அவன் தாய் சொல்லுவதைக் கேட்காமல் மேலே சென்று விட்டான்,மீனுவிற்கு வருத்தமாக இருந்தது,அதுவும் அவன் உடல் நிலையை எண்ணி இன்னும் மருகினால்,அவனுடைய வேலையை  நேரில் சென்று பார்த்தவள் ஆயிற்றே,உதவிக்குக் கொசுவை தவிர யாரும் கிடையாது,அனைத்தும் அவனே தான் செய்ய வேண்டும்,கடினமான உழைப்பு தான் அவனது சோர்வுக்குக் காரணம் என்று வருந்தினாள்,அது மட்டுமா என்ற மனசாட்சி கேட்க அதற்கு என்ன பதில் சொல்ல.

அவளுக்கே அலுப்புத் தட்டிவிட்டது,திருமணம் ஆகி மூன்று மாதத்திலே இந்த நிலை என்றால் இனி சோச்ச காலம் எண்ணுகையில் பெரு மூச்சு மட்டுமே விடையாக.

இனி இதைத் தொடர விடகூடாது என்று முடிவு செய்து கொண்டால், இன்று என்ன ஆனாலும் அவருடன் பேசி விட வேண்டும்,அந்த முடிவு அவளையும் சுறு சுறுப்பாக இயங்க வைத்தது,வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க துணிந்து விட்ட இளைய ஜோடிகளுக்குத் தெரியவில்லை அதற்கு இன்னும் சில காலங்கள் இருக்கின்றது என்று.

வேலைகளை முடித்து விட்டு தனது அறைக்கு மீனு செல்ல அந்தப் பத்து படிகளையும் கடக்க அவளுக்குப் பத்து நிமிடங்கள் ஆனது வெட்கம் ஒரு புறம்,தயக்கம் ஒரு புறமென்று அவளை வதைத்தது, அன்றொரு நாள் அவனைப் பார்த்தது போல் இன்றும் அவன் தலைக்கு மேல் கை வைத்து படுத்து இருந்தான்,அவனை நெருங்கியவள் “ஏங்க” என்று அழைக்க,அவனது அழைப்புக்கு ஏங்கி போனவன் எழுந்து அமர்ந்தான்.

இருவரது கண்களும் கலக்க அவளைக் கண்களால் விழுங்கி கொண்டு இருந்தான் ராஜேஷ்,அவளும் சலிக்காமல் அவனது பார்வையை எதிர் கொண்டால்,தன்னை மறந்து அவன் அவளிடம் நெருங்க, அவளும் அவனது கண்களில் மயங்கி கண்களை மூடி அவனுக்கு வாகாகத் தனது முகத்தைக் காட்டிக்கொண்டு இருந்தால்,அவளது மயக்கம் போதை ஏற்ற மேலும் நெருங்கி அவளது தடையைப் பற்றி அவனை நோக்கி இழுக்கவும் ,கீழே இருந்து பாட்டியின் அலறல் சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது.

அதில் சுதாரித்தவள் “ஏன்னா பாட்டி,ஏன் இப்புடி அழறாள் வாங்கோ”என்று அவனையும் இழுத்துக் கொண்டு சென்றால்,உணர்வுகள் வடிந்தவனாக அவனும் பதட்டமாகி கீழே சென்றான்.

அங்கே ………….

பாட்டி கீழே கிடக்க அவர் காலுக்கு அடியில் முத்து இருந்தார்,காமாட்சியும் சத்தம் கேட்டு ஓடி வந்தவர் அவர்களை பார்த்து உறைந்து போய் நின்றார்,இருவரும் மூச்சு விடாமல் தரையில் சரிந்து கிடந்தனர்.

யோசிக்க நேரமின்றிப் பாட்டியை அள்ளி கொண்டு சென்றான் ராஜேஷ்,காமாட்சி முத்துவை எழுப்பிக் கொண்டு இருந்தார்,போதையில் இருந்ததால் அவருக்குச் சுயநினைவே இல்லை,”யோவ்,பாவி மனுஷா அந்த அம்மாவை இன்னாயா பண்ணி தொலைச்ச”,அந்த போதையிலும் நிதானமாக “இன்னாடி பேசுற உன்னைய தவிர………………..”,என்று எதுவோ சொல்லவர,”கசுமாலம் உன் வாயில தீய வைக்க,நான் இன்னா கேட்ட நீ இன்னா சொல்லுற,இரு வந்து உன்ன வச்சுகிறேன்”,பொரிந்து விட்டு அவரும் முகேஷுடன் சென்றார்.

வச்சுக்கோடி காமு மாமா வெயிட்டிங்……………………….. மீண்டும் மயங்கி சரிந்தார் முத்து.

9

தன் முன் அமர்ந்து இருக்கும் நண்பனை அதிர்ச்சி விலகாமல் பார்த்து கொண்டு இருந்தான் முகேஷ் “டேய்,புதுசா கல்யாணம் ஆனவன் பண்ணுற வேலையடா இது”,ராஜேஷை விட முகேஷ் தான் நொந்து போனான்,முருகனுக்கு மாலை அணிந்து இருந்தான் ராஜேஷ்,வாழ்க்கையே வெறுத்து போய் தான் இந்த முடிவை எடுத்து இருந்தான்.

மச்சி,இப்போ என்ன ஆச்சுன்னு இப்புடி வந்து நிக்கிற,வாய்ய திறந்த சொல்லி தொலைடா”,முகேஷ் பொறுமையை இழுத்து பிடித்து கேட்டு கொண்டு இருந்தான்.

இன்னாத்த சொல்ல சொல்லுற,வுடு மச்சி இப்புடியே எங்கயாவது போய்டலாமான்னு இருக்கு, ராஜேஷ் கலங்கி கல்லூரி காலத்தில் பார்த்ததே இல்லை எது நடந்தாலும் தனது வசீகரச் சிரிப்பால் கடந்து செல்லும் நண்பன் உடைந்து பேசுவதை பார்க்க மனம் பிசைந்தது.

தனது கையில் உள்ள டீ டம்பளரை உருட்டியவரே இரு தினங்களுக்கு முன்பு நடந்தவற்றைச் சொல்லலானான்.

நடந்து முடிந்த கூத்தில் அனைவரும் விடிய விடிய மருத்துவமனையில் இருந்தனர்,மீனு அழுது கரைந்தாள்,ராஜேஷ் எத்தனை சமாதானம் சொல்லியும் அவனை முறைத்து விட்டு சென்று தனது அத்தையிடம் அமர்ந்து கொண்டாள்,அவளை எப்புடி கையாள்வது என்று தவித்துப் போனான்,’நான் என்ன செஞ்சேன்னு முறுக்கிட்டு போரா’அதன் பின் ஒரு முடிவு செய்தவனாக அவனும் அவளைக் கண்டு கொள்ளவில்லை.

அவளுக்கு அவனது அருகாமை தொலைந்து கொண்டே போவது ஆற்றாமையாக இருந்தது,அது தான் அவனிடம் கோபமாக வெளிப்படுகிறது என்று அவளும் அறியவில்லை அவனுக்கும் உணர்த்தவில்லை.

பாட்டி அனைவரையும் கலங்க வைத்து விட்டு அதிகாலை ஆறு மணிக்குக் கண் முழித்தார்,மருத்துவர் வந்து பார்த்துவிட்டு அதிர்ச்சி மயக்கம் தான் வீட்டுக்குச் செல்லலாம் என்ற போதுதான் உயர் வந்தது ,அதன் பின் அவர்களை வீட்டுக்கு கூட்டிவர மதியம் ஆகிவிட்டது,வந்த உடன் காமாட்சி முத்துவை ஒரு வழி செய்துவிட்டார்.

யோவ் உனக்கு அறிவு இருக்கா,குடுச்சா இல்லத்தையும் மறந்துடுவியா நீ,அந்த அம்மாவுக்கு ஏதாவது ஆச்சுன்னா இன்னாயா பண்ணுவ, குடிக்காரா………….முத்து தலையைத் தொங்க போட்டுகொண்டார்,அவர் என்ன கனவா கண்டார்,பாட்டி வந்து கதவை திறக்குமென்று,தன்னை கண்டால் காது தூரம் ஓடும் இந்த பாட்டி.

காமாட்சி என்று நினைத்து பாடி கொண்டே கட்டி பிடிக்க எண்ணி அவர் பாயா,வந்தது பாட்டி என்று அறிந்தவர் சுதாரிக்க முடியாமல் தடுமாறி  அவர் மேல் விழுக போனார் , பாட்டி நகரவே கொஞ்சம் தள்ளி அவரது கால் பகுதியில் விழுந்து வைத்தார்.

தன் மீது முத்து விழுக வரவும் பாட்டி அதிர்ச்சியில் கத்தி கொண்டே கீழே சாய்ந்து மட்டை யாகி  விட்டார் பாவம்,இது தான் நடந்தது.

ராஜேஷிற்குத் தெரிந்து விட்டது இனி எதுவும் தனக்கு நடக்கப் போவதில்லையென்று,தனது தந்தையை முடிந்த மட்டும் முறைத்து விட்டுச் சென்றான்.

மீனு பாட்டியுடன் இருந்து அவரைக் கவனித்துக் கொண்டாள்,ராஜேஷ் கிளம்பி செல்லும் வரை தங்களுது அறைக்குச் செல்லவில்லை,அவனும் அவளை எதிர்பார்க்காமல் காலை உணவை கூடத் தவிர்த்து சென்று விட்டான்.

நடந்ததை சொல்லி முடிந்த நண்பனை கண் இமைக்காமல் பார்த்த கொண்டு இருந்தான் முகேஷ்,இதற்கு என்ன சொல்வது அவனுக்கு மண்டையைப் பிய்த்துக் கொள்ளலாம் போல் இருந்தது,”மச்சி,என்ன சொல்லுறதுனே தெரியலடா,விடு என்ன நடக்குமோ நடக்கட்டும் எதையும் நினைச்சு கவலை படாத மச்சி,உங்க அப்பாவா என்ன பண்ணுறது எனக்கே பயங்கரம் கோவம் வருது அவரு மேல”.

அவன் சொல்லவே ராஜேஷிற்கு உதட்டில் ஒரு புன் முறுவல் “என்னடா நான் இங்க கொதுச்சு போய் இருக்கேன் நீ என்னடானா சிரிக்கிற,உனக்கு உங்க அப்பா மேல கோவமே இல்லையா”,முகேஷ் கேட்கவே “இருந்துச்சு இப்போ இல்ல ஆனா ஒன்னுடா எனக்கு மகன் பொறக்காரனோ இல்லையோ எனக்குத் தம்பி கண்டிப்பா உண்டு”.

என்ன?….. அதிர்ந்தவனை பார்த்து இப்போது பலமாக சிரித்தான் ராஜேஷ்.

ஒண்ணுமில்லை வா முகேஷின் தோள் மீது கை போட்டு அழைத்துச் சென்றான் முகத்தில் உறைந்த புன்னகையோடு,இத்தனை நேரம் எதையோ பரி கொடுத்தவன் போல் தன்னிடம் அமர்ந்து இருந்தவன் இப்பொழுது சிரித்துக் கொண்டே வருவதைப் பார்த்த முகேஷ் ராஜேஷை மார்கமாக பார்த்து வைத்தான்.

ராஜேஷின் சிரிப்பிற்குக் காரணம் முத்துவின் அதிரடி தான்,அன்று காமாட்சி முத்துவை சரமாரியாகத் தீட்டிய பின் அவர் உணவு உண்ண கூட வெளியில் வரவில்லை,”இன்னாச்சு இந்த ஆளுக்கு,நாஷ்டா துண்ண கூட வரல” அவர் அறைக்குச் சென்றவர் மெதுவாகக் கதவை தட்ட அது திறக்க படவில்லை,குடுச்சுட்டு மட்டையா கிடக்கும்.தனக்குள் புலம்பியவரே இரண்டு அடி எடுத்து வைத்தவரை,வேகமாக உள் இழுத்துக் கொண்டது முத்துவின் கரங்கள், எதார்த்தமாக இதைப் பார்த்த ராஜேஷ் திகைத்துப் பின் சிரித்துக் கொண்டு சென்றான்.

அவனும் இந்த மூன்று நாட்களாகப் பார்க்கிறான் தான்,தனது தந்தையின் பார்வை தாயை தொடர்வதை, அதுமட்டுமில்லை காலையில் அவர் குடிப்பதில்லை.

அன்று காமாட்சி பேசியதை எண்ணிய முத்து ‘தான் எத்தனை அன்பு வைத்து இருக்கிறேன் என்பதைக் காட்டியே ஆக வேண்டும் என்று உறுதி செய்து கொண்டார்’.

“யோவ்,இன்னாயா “,காமாட்சி பதறி தனது கையை விடுவிக்கப் போராட அவரோ இன்னும் இறுக்கி பிடித்து அவரை இழுத்து அனைத்து கொண்டார்,காமாட்சிக்கு உடல் உதறல் எடுத்தது .

பலம் கொண்டு அவரைத் தள்ளி விட்டு உடல் நடுங்க “யோவ் வயசு புள்ளைய வச்சுக்கினு இன்னாயா பண்ணுற,புள்ள இல்லாத வூட்டுல கிழவன் துள்ளி விளையான்டானம்,அவர் இறுக்கி பிடித்தது வலி கொடுக்கக் கையைத் தேய்த்துக் கொண்டார்.

காமாட்சி பேச்சு காற்றோடு போச்சு என்பது போல் மேலும் மேலும் அவரை நெருங்கி வந்தார் முத்து,அவரது உயரத்திற்குக் காமாட்சி இடுப்பளவு தான் இருந்தார்,”யோவ்,உன் பார்வையே சரியில்ல இன்னாயா இது எதுவும் மண்டையில அடி பட்டுருச்சா”,அவருக்கு அப்புடி தான் தோன்றியது.

மீண்டும் அவரை இழுத்து அனைத்துக் கட்டிலில் சரிந்தார் முத்து,முகம் முழுதும் அவர் ஆவேசமாக முத்தமிட காமாட்சிக்கு வேர்த்து கொட்டியது,”யாருக்குடி உன் மேல பாசமில்லை,ஆசையில்லை,என்ன எங்கடி உங்கிட்ட நெருங்க விட்ட,பாசத்தைக் காட்ட, எப்போ உனக்கு தாலி கட்டுனேனோ அன்னைக்கே லலிதாவா மறந்துட்டேண்டி,இத்தனை வருடம் சொல்லாமல் உள்ளுக்குள் குடித்துக் குடித்து மருகியவர்,இன்று சொல்லிவிட்டார்.

காமாட்சி அதிர்ந்து அவரைப் பார்க்க அவர் மேலும் தொடர்ந்தார் “ஆத்தாளும்,மவனும் என்ன ஒதுக்கி வச்சிட்டீங்களேடி,என் இத்தனை வருஷ வாழ்க்கையே போச்சுடி”,அவரின் கழுத்தில் முகம் புதைத்தவர் குலுங்கி அழுக,”யோவ்,இன்னாயா இது,நான் சொல்லுறதை கேளுய்யா”,கோபமாக நிமிர்ந்தவர்,”நீ கேட்டியாடி அன்னைக்கு எப்புடி கெஞ்சுனே”,அவருக்குப் பதில் சொல்ல முடியாமல் காமாட்சி திகைக்க,அதனை வாகாகப் பயன் படுத்திக் கொண்டவர் தனது வயதையும் மறந்து வன்மையாக அணுகினார்.

பல ஆண்டுகள் பிரிவை ஒரே நாளில் ஈடுகட்ட அவர் எண்ண,காமாட்சி ஓய்ந்து போனார்,களைந்து கலந்த பின்பு நிம்மதியுடன் அவர் உறங்க,காமாட்சியும் உறங்கினார் இருவர் கண்களிலும் கண்ணீர் தடம்………..

அறுபது வயது என்றால் எண்ண காதலுக்கு கண் மட்டுமில்லை வயதும் கிடையாது,காலம் கடந்தாலும் தாம்பத்தியம் புனிதம் அல்லவா,அன்பின் அளவு,காதலின் அளவு,கோபத்தின் அளவு,தாபத்தின்  அளவு என்று வரையறை தெரியாமல் சென்றது இவர்களுது காதல்……..

“ஏண்டி,உன் ஆம்படையான் மாலை போட்டுருக்கார்,கல்யாணம் முடுஞ்சு மூணு மாசத்துல யாராவது மாலை போடுவாளா”,பாட்டி கேட்டதற்கு தலையை குனிந்து கொண்டாள் மீனு “மீனு “என்று அழுத்தமாக அழைத்தவர் அவள் கண்களை உத்து பார்த்த “நீயும்,உன் ஆம்படையானும் இன்னும் தனி தனியா தான் தூங்குறேளா”,அவர் கேட்க கண்ணில் இருந்து கரை புரண்டு ஓடியது ஆறு.

அவள் அமைதியே உண்மையை உரைக்க தவித்து போனார் பாட்டி,”ஏண்டி,குழந்த நோக்கு ராஜேஷை பிடிக்கலையா”,அவர் கேட்கவே பதறி கொண்டு வந்தது பதில் ,”நேக்கு ரொம்ப புடிக்கும் பாட்டி”,அவள் பதிலில் தான் பாட்டிக்கு மூச்சு வந்தது “பின்ன ஏண்டி”,அவர் ஆற்றைமையாக கேட்க நடந்தவை அனைத்தையும் சொல்லி முடித்தால் மீனு ,”இது என்னடீ சோதனை தினுசு தினுசா, இதுல உன் மாமனார் கடங்கரான் வேற நேத்து பதற அடுச்சுட்டான்”,அப்போதும் தான் பாட்டியும் மீனுவும் ஒரு சேர பார்த்து கொண்டனர்.

“எங்கடி உன் மாமி,ரொம்ப நாழியா காணோம்”,”ஆமா எங்க போனாங்கனு தெரியல சொல்லாம எங்கையும் போக மாட்டாளே”,மீனுவும் பாட்டியும் நடு கூடத்தில் உட்காந்து வள வளத்துக் கொண்டு இருக்க,அவர்கள் எதிர் திசையில் இருக்கும் அறையில் கதவு திறக்க பட்டது,அதில் இருந்து சோம்பல் முறிந்து கொண்டே முத்து வர,அவருக்குப் பின்னால் சங்கடமாகத் தலையைக் குனிந்து கொண்டு காமாட்சி வந்தார்,கண் இமைக்கும் நேரத்தில் அவர்களைக் கடந்து சென்று விட்டனர் இருவரும்.

அவர்களது நிலையை பார்த்த பாட்டியும்,பேத்தியும் அதிர்ச்சியில் பேச்சு வராமல் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

10

ராஜேஷ் கோவிலுக்குச் சென்று இருந்தான்,ஒரு மாத காலம் விரதமிருந்து முருகனை காண சென்று இருக்கிறான்,இந்த ஒரு மாத காலம் மீனுவின் காதல் கரை புரண்டு ஓடியது, எதுவுமே பக்கத்தில் இருக்கும் வரை  அதன் அருமை நமக்குப் புரிவதில்லை,சற்று விலகி இருக்கும் போது தான் அதன் அருமை பெருமை புரிக்கின்றது,அது போலத் தான் இத்தனை நாட்கள் தெரியாத ராஜேஷின் காதலும்,அவனின் நற்குணமும் அவன் தள்ளி இருக்கும் போது  தெள்ள தெளிவாக புரிகிறது.

ராஜேஷும் அவளது மாற்றத்தையும்,பார்வையும் எண்ணி சிரித்துக் கொண்டான்,அவனுக்கும் இந்த ஒரு மாத காலம் அவளைப் பற்றி அறிய எதுவாக இருந்தது,அவள் வளர்ந்த விதத்திற்கும்,தான் வளர்க்க பட்ட சூழலையும் எண்ணி பார்த்தவனுக்கு அவளது தயக்கம் பெரிய தவறாகத் தெரியவில்லை,தானும் அவளை நெருக்கடி கொடுத்துத் திருமணம் செய்து இருக்கக் கூடாது என்று எண்ணி வருந்தினான்.

இனி எண்ணி என்ன பயன்,காலம் கடந்த ஞான உதயம்,தனது குடும்பத்தோடு அவள் இத்தனை பங்காகப் பொருந்தியது பெரிய விடயம் அல்லவா,தன்னுடன் அவள் பேச துடிப்பதும்,தன்னை பார்க்க தவிப்பதும்,தான் அதனை மதியாமல் செல்லும் போது உதடு துடிக்க அழுகையை விழுங்குவதையும் பார்க்கும் போது அள்ளி கொண்டு தான் போனது,தன்னை மறந்து அவளை ரசிக்கும் வேலையில் அவ்வப்போது வந்து முத்து இடையூர் செய்து விட்டு போவார்.

போன ஜென்மத்தில் தந்தையும்,மகனும்,பங்காளிகளாக இருந்து இருக்க வேண்டும் என்பது எனது கணிப்பு,ஒரு தகப்பன் போல் அல்லாது மகன் வாழ்க்கைக்கு முதல் எதிரியே அவர் தான்,அதை அவர் உணராமல் போனது தான் விதியின் சதி,அது சரி அவரைச் சொல்லி ஒரு பயனுமில்லை ,மன்மதன் இன்னும் ராஜேஷை நோக்கி காதல் அம்பை எய்தவில்லை.

மன்மதனையும் குற்றம் சொல்ல கூடாது ஒவ்வொரு முறை அவர் அம்பை எய்தும் போது இடையூர் வந்து விடுகிறது,ஒரு வழியாக அதனைத் தகர்த்தெறிந்து அவர் அம்பை விட,விதி அவர் கையைப் பற்றி உலுக்கிய உலுக்கில் அது முத்துவின் இதயத்தைத் தொலைத்து விட்டது,என்னடா இது மன்மதனுக்கே வந்த சோதனை.

அது மட்டுமா இந்த ஒரு மாத காலமும் முத்துவின் ரகளைத் தாங்க முடியவில்லை பாட்டியே வாய்விட்டு புலம்பும் அளவுக்கு இருந்தது அவரின் செய்கை,கூடல் முடிந்த பின்பு காமாட்சி அவரை நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்த்து விட்டார்,முத்துவும் குடிப்பதை நிறுத்திவிட்டதால் அவரது தெளிவும்,காம பார்வையும் காமாட்சிக்குப் பயத்தைக் கொடுத்தது,அவர் காதலும்,அன்பும் புரிந்தாலும்,மகன்,மருமகளை வைத்துக் கொண்டு இவர் சேட்டை அவருக்கு ஒரு வித சங்கடத்தைக் கொடுத்தது.

அவரும் என்ன தான் செய்வார் பாவம்,தொலைத்த வருடங்களை ஈடு செய்யும் வகையில் காதல் போர் செய்து கொண்டு இருந்தார்,அதில் ஒரு நாள் காமாட்சி காபி கொண்டு வந்து முத்துவிடம் கொடுக்க,தலையைக் குனிந்து கொண்டே கொடுக்கும் மனைவியைப் பார்த்து மனதில் சிரித்துக் கொண்டவர், காமாட்சியின் கையை இறுக்கி பற்றிக் கோப்பையை வாங்கிக் கொண்டார்.

அவர் செயலில் பதட்டம் கொண்ட காமாட்சி நிமிர்ந்து பார்க்க,கண் அடித்து உதடு குவித்து காற்றில் முத்தமிட காமாட்சி அந்த இடத்தை விட்டு விரைந்து சென்று விட்டார்,இதை பார்த்த ராஜேஷ் சிரிப்பை அடக்கி கொண்டு தனது அறைக்குச் செல்ல,பாட்டி தான் வாயை பிளந்தார்,”அடப்பாவி மனுசா,பேரப்புள்ள எடுக்குற வயசுல இந்த ஆளுக்கு லொள்ள பாரு,சிறுசுங்க இரண்டும் தண்டவாளமா பிரிஞ்சு நிக்குது,இந்த ஆளு என்னனா ஈசுண்டு நிக்குறான்,கருமம் கருமம் பெருமாளே காலம் போன கடைசில இதெல்லாம் நான் பாக்கணுமா,அதுக்கு நேக்கு மோச்சம் கொடுத்துடுடா அப்பா”,மனமுருகி வேண்டி கொண்டார்.

கோவிலுக்குச் சென்ற ராஜேஷின் மனம் அமைதியில் திளைத்தது,எப்போதுடா தனது ஆசை மனைவியைப் பார்ப்போமென்று மனம் அடித்துக் கொண்டது,இன்னொரு மனமோ அமைதி மனமே பொறுமையைக் கையாளு என்று எடுத்துரைத்து,அதுவே சரியெனப் பட முயன்று தன்னை அடக்கி கொண்டான் ராஜேஷ்.

மறு நாள் காலையில் விடு திரும்பி குளித்து முடித்துப் பொங்கல் வைத்து சாமி கும்பிட்டவன்,மாலையைக் கழற்றி வைத்து விட்டு தனது வேலையைப் பார்க்க சென்று விட்டான், அவனுக்காக காத்துக் கொண்டு இருந்த மீனுவின் கண்ணில் மெல்லிய நீர் படலம்,அவனது வருகைக்காகத் தான் இன்று வேலைக்கு விடுமுறை சொல்லிவிட்டு வீட்டில் இருந்தால்,அதையெல்லாம் எண்ண எண்ண அழுகை வந்தது அறைக்குச் சென்று கதவை சாத்திவிட்டு அழுக தொடங்கி விட்டால்.

காலை உணவையும் தவிர்த்து,மதிய உணவையும் தவிர்த்து உண்ணா விரதம் இருக்க,இரவு நெருங்கும் நேரம் தான் ராஜேஷ் வந்தான்,வந்தவனைப் பாட்டி கோபமாக முறைக்க,அவரை புரியாத பார்வை பார்த்தவன் தாயை நோக்கி சென்றான்.

“இன்னம்மா பாட்டி என்னடா ரொமான்டிக் லுக் உடுது”,”விளையாடாத ராஜேஷு மீனு குட்டி காலைல இருந்தது பச்ச தண்ணி கூடக் குடிகள,இன்னான்னு கேட்டா ஓ………..ன்னு அழுகுது பயந்து வருதுடா போய் இன்னான்னு பாரு”,அவர் சொல்லுவே ஒரு புண் சிரிப்புடன் முன் எச்சரிக்கை முனி சாமியாக,”அதெல்லாம் நான் பாத்துக்குறேன்,இந்த பாட்டி,நீ,உன் புருஷன் மூணு பேருக்கு எது நடந்தாலும் என்ன கூப்புடாத”.

“இன்னாடா உளறிக்கினு இருக்க”,அவனை ஒரு மார்கமாகப் பார்த்துக் கொண்டே கேட்க,”நான் சொன்னதை உன் வூட்டுக்கருக்கு சொல்லு புரியும் என்றவன் சிட்டாகப் பறந்து சென்றான்.

அழுது அழுது தூங்கி இருப்பாள் என்பதை அவளது கண்ணீர் தடமே கூறியது,மெதுவாக அவளின் புறம் வந்தவன்,அவளது காது மடல் மூடியை ஒதுக்கி அதில் மெதுவாக முத்தமிட்டு மாமி தூங்குனது போதுடி,அவன் மீசை மூடி உரச,அடித்துப் பிடித்துக் கொண்டு எழுந்தாள்,தன் முன் நிற்கும் கணவனை மலர்ந்த முகத்துடன் பார்த்தவள்,பின்பு கோபமாகத் திரும்பி கொண்டாள்.

அவளை இடித்துக் கொண்டு அமர்ந்தவன்,அவர் நகரப் போகவே அவளை இழுத்து அனைத்துக் கொண்டான்,”விடுங்கோ,என்னை விடுங்கோ நேக்கு நீங்க வேணாம்,உங்கள பிடிக்கல”,அவனை அடித்துக் கொண்டே சொல்லியவள் அவன் நெஞ்சின் மீதே சரிந்து அழுக தொடங்கினாள்.

“மாமி நீ என்னடா வச்சுக்கிற லவ் எனக்குத் தெரியும்,அழுது,பேசி நேரத்தை வீணாக்காதடி,பேச நேரம் நெறைய இருக்கு, எவன் எப்ப வந்து பிரச்சன பண்ணுவான்னு தெரியாது,இனியும் தள்ளி போன,எனக்குக் காவி உடை தான் பாவம்டி உன் மாமே”,அவன் சொல்லவே வாய் பொத்தி சிரித்தாள் மீனு,” என் பொழைப்பு உனக்கு சிரிப்பா இருக்கா”,கேட்டுக்கொண்டே அவள் மீது பாய்ந்தான்.

காத்திருந்து கை கூடிய கூடல் சொல்லவா வேண்டும்,அகநானுரைம், காமத்து பாலையும் கலந்தடித்து அவன் புகட்ட,மிச்சம் வைக்காமல் அதனை அள்ளி பருகினால் அவனது மனையாட்டி,இரவின் குளுமையும்,இளமையின் இனிமையும் அவனைத் தீ மூட்டி செல்ல,அதனை தனது மனைவிக்கும் உணர செய்தான்…..

 

எங்குப் பிறந்தால் என்ன,எங்கு வளர்ந்தால் என்ன ராஜேஷின் உயர்ந்த குணமும்,நடத்தையும் மீனுவை சுண்டி இழுக்க,மீனுவின் பொறுமையும்,அமைதியும்,குடும்பம் செய்யும் பாங்கும்,அவனைச் சுண்டி இழுக்க மதம் கடந்து,சாதி கடந்து,காதலே அங்கு முதன்மையாக…..

 

முடுச்சு போட்டவன் சரியாகத் தான் முடித்திருக்கிறான்,புரிந்தவனே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறான்,புரியாதவன் அவனை நீந்திதே வாழ்க்கையை தொலைகிறான்………

“இந்தத் தபா மன்மதன் கரெக்டா அம்பா உட்டாரு பா,சாமி”

இவர்கள் கூடி கலந்த பின்,அவனது நெஞ்சில் முகத்தைப் புதைத்துச் சுகமாகத் தேய்த்துக் கொண்டால் மீனு,”அடியே ஏய் மாமி,இப்புடி எல்லாம் பண்ணாதடி அப்புறம் அடுத்த ரவுண்டு கேட்பேன், அவனை தலையை தூக்கி பார்த்தவள் “சீ ………….போங்கோ பேட் பாய்”,அவள் சிணுங்கிய தினுசில் வாய்விட்டுச் சிரித்தான் ராஜேஷ், முத்து பற்கள் மின்ன சிரித்த கணவனைக் கண் இம்மைக்காமல் பார்த்தால் மீனு,அவர்கள் மோன நிலையைக் கலைத்தது முத்துவின் அலறல்.

ராஜேஷும்,மீனுவும் ஒருவரை ஒருவர் பார்த்து முழித்துக் கொண்டனர்,பின்பு நிலை உணர்ந்து உடையை வேகமாகச் சரி செய்து கீழே சென்றனர்,இந்த முறை பாட்டி முறைத்துக் கொண்டு இருக்க,காமாட்சி மயங்கி இருந்தார்,பார்த்த மீனுவுக்கு ஒரு புறம் நிம்மதி,ஒரு புறம் தனது அத்தையை எண்ணி கலக்கமாக இருந்தது.

முத்துவிற்குப் பால் எடுத்துச் சென்ற காமாட்சி மயங்கி சரிய,முத்து அலறிவிட்டார் பாட்டிக்கு ஒருவாறு விடை தெரிந்து விட்டது,அதனால் தான் கோபமாக முத்துவை முறைத்துக் கொண்டு இருந்தார்,ராஜேஷ் மருத்துவ மனைக்கு விரைய அவரைத் தொடர்ந்து சென்றனர் அனைவரும்.

அங்கு மருத்துவர் சொன்ன விடயத்தைக் கேட்ட ராஜேஷும்,மீனுவும் நினைத்து நினைத்துச் சிரித்தனர்,காமாட்சி தலையில் கையை வைத்து உட்காந்துவிட்டார்,முத்துவிற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை,மறந்தும் மகன் மருமகள் இருக்கும் பக்கம் தலையைத் திருப்பவில்லை,பாட்டி தான் காமாட்சியைத் தேற்றினார்,”என்னடிம்மா அந்தக் காலத்துல மகளும்,அம்மாவும் ஒண்ணா தான் குழந்தை பெத்துண்டா,அது மாதிரி நெஞ்சுண்டு போடி,அவ அவ புத்திர பாக்கியம் இல்லனு கோவில் கோவிலா சுத்திண்டு இருக்கா,நீ என்னடானா கண்ணுல தண்ணி விட்டுண்டு இருக்க”,ஆம் காமாட்சி இப்போது கர்ப்பம்.

“என்னம்மா இப்புடி பண்ணிறீங்களேமா”……………

சுபம்.

error: Content is protected !!