Eppothu vilaguvaai anbe 6

Eppothu vilaguvaai anbe 6

மதி மற்றும் ஜெனி இருவரும் விழிகளாலே காதல் யுத்தம் நடத்திக்கொண்டு இருக்க, பிரியாணி வாங்கி வந்து சேர்ந்த ராம்,’ இதுங்களாம் இன்னைக்கே பர்ஸ்ட் நைட்ட முடிச்சாலும் ஆச்சரியம் இல்லை.. இதுல கோவமா இருக்கேன்னு சீன் வேற, நாமளே லேட் ஆச்சேனு வந்தா இதுங்க ரொமன்ஸ் பண்ணுதுங்க’ என்று முணங்கியபடியே..

‘க்கும்..’ என்றவாறே மதியின் கையில் பார்சலைக் கொடுத்தவன், “இன்னைக்கே ஷாப்பிங் போனுமா?? அர்ஜென்டா வேணும்றதை நாம வாங்கலாம்.. நாளைக்கு தங்கச்சி கூட போகலாம்.. வெளியே இன்னும் பரபரப்பா தான் இருக்கு அந்த போலிஸ் மர்டர் கேஸ் விஷயமா.. “

“சரி.. அப்போ தூங்கறதுக்கு பெட்ஷீட் கொடு.. நாளைக்கு போய்க்கலாம்” என்ற மதி, ராமையும் அழைத்து இணைந்தே சாப்பிட்டார்கள்.. மீண்டும் தண்ணீர் எடுக்க சென்ற ராமை நிறுத்தி விட்டு, ஜெனியே தண்ணீர் பிடித்து வந்தாள்..

“டேய் அண்ணா.. எங்க ஊர்ல குரங்கு வந்தா ராமா ராமான்னு தான் கூப்பிடுவாங்க தெரியுமா?? உங்களுக்கு ஏன் ராம்னு பேர் வச்சாங்க??”

“எங்க ஹாஸ்பிடல்ல கூட ஏதாச்சும் மென்டல் வந்தா ஜெனி ஜெனினு தான் கூப்பிடுவாங்க..”

நீ தான் மென்டல், கோட்டி..

நீ தான் செமி..

நீ தான் குரங்கு

நீ தான் பன்னி

நீ எருமை

நீ காட்டெருமை

“வேணாம்.. அசிங்கமா ஏதாச்சும் சொல்லிடப் போறேன்டா போலி டாக்டரு..”

“நானும் சொல்வேன் செமி..”

இடியட்..

ஸ்டுபிட்..

“அய்யோ மதி பாருடா.. எப்படி பேசறான் உன் பிரெண்டுனு.. ஏதாச்சும் சொல்லுடா..”

“டேய் மச்சி.. உனக்கு வேற பொண்ணே கிடைக்கலையா?. இது பேய் மாதிரி கத்துது..”

“மதி.. இவனை வாயை மூடச் சொல்லு”

“அவளை மூடச் சொல்லுடா..”

“ப்ளீஸ் மதி..” என ஜெனி கூறியதும்

“டேய் சும்மா இருடா.. அவ விளையாட்டா பேசறா.. நீ வேற ஏட்டிக்கு போட்டியா.. நீ மேல போ ஜெனி, நான் வர்றேன்” என்றவாறே கைகளை கழுவ மதி சென்றதும்,

“டேய் அண்ணா.. வேணும்னே தானே என்கிட்ட ஓவரா பேசின.. மதி சொல்லி இருக்கான், நீ பொண்ணுங்க கிட்ட அவ்வளவா பேச மாட்டேனு.. இப்ப நீ மதியை என்கிட்ட பேச வைக்கத் தானே என்னை மென்டல்னுலாம் சொன்னே.. லவ் யூ அண்ணா” என்றவாறு அவன் கன்னத்தில் முத்தமிட்டு சென்ற ஜெனியை அதிர்ச்சியாக பார்த்தான் ராம்..

“அது லூசுடா.. நீ விளையாட்டா சொன்னியா என்னன்னு தெரியாது, ஆனா அது உண்மையிலே லூசு தான்.. இப்படித்தான் எனக்கும் கிஸ் பண்ணி தேங்க்ஸ் சொல்லும்.. அவளுக்கு ரொம்ப பிடிச்சவங்களை யோசிக்காம கிஸ் பண்ணுவா.. இவ்ளோ நாள் நான் மட்டும் தான் இருந்தேன்.. இன்னைக்கு மேடம்க்கு உன்னை ரொம்ப பிடிச்சி போச்சு போல.. அதான் இந்த லவ்ஸ்..”

“அது இல்லைடா”.. “நான்”… “அண்ணா”…

“மச்சி நீ அவ கிட்ட அண்ணாவா பழகறே.. அவ உரிமையான தங்கச்சியா பழகறா.. இது எனக்கு புரியும்டா.. நீ ஒன்னும் சொல்ல வேணாம்.. உன் தண்ணியைத் தேடு..”

“ஆமா மச்சி.. காலைல ,அவ கூப்பிட்டதும் தண்ணிய அப்படியே வைச்சிட்டு தான் வந்தேன்.. ஆனா காணும்..”

“போய்த் தேடிப்பாரு.. போடா.. நான் அப்றமா வர்றேன்..”என்றவாறு மாடிக்குச் சென்றான் மதி..

மீண்டும் தண்ணீர் குடிப்பதற்காக உள்ளே சென்ற ராம், அவசர அவசரமாக மேல் வீட்டுக்கு ஓடிச் சென்றான்..

மதீ.. மச்சி… மதி…

“என்ன அண்ணா?? தண்ணியைக் காணோமா??”

அட நீ வேற.. சும்மா இரும்மா.. மச்சி..

இங்கே தான் இருக்கேன்.. சொல்லுடா..

“மச்சி.. நாமலாம் சாப்பிட்டு மீதி ஒரு பார்சல் பிரியாணி வைச்சிருந்தோம்ல.. அது எம்ப்டியா இருக்குடா..”

“வேணாம்.. ஏதாவது சொல்லிடப் போறேன்..”

“மச்சி.. ப்ளீஸ்.. பீ சீரியஸ்.. அம் நாட் அ மென்ட்டலி டிஸ்டர்ப்ட் பேர்சன்.. ப்ளீஸ் மச்சி”

“டேய் என்னடா இப்படிலாம் சொல்ற?? நீ ஒரு டாக்டர்டா..உன்னை அப்படிலாம் நினைப்போமா?? சரி விடு..என்ன ஆச்சு சொல்லு..”

“இல்லை மச்சி.. மார்னிங் நான் வந்து தண்ணீர் பிடிச்சு அதை மூடாமல் தான் வந்தேன்.. எனக்கு காலி பாட்டில் மூடுற பழக்கமே கிடையாது.. ஆனா மூடி இருந்துச்சு.. உங்க கிட்ட சொன்னா என்னையே கன்ஃபியூஸ் பண்ணி விட்டுட்டீங்க.. இப்போ மீதி இருந்த ஒரு பார்சல நான் டைனிங் டேபிள் மேல தான் வைச்சேன்.. இப்போ போனா பார்சல் ஓப்பனா இருக்கு.. உள்ள பிரியாணி இல்லை மச்சி..”

“நான் ஹேண்ட் வாஷ் பண்ண போகும்போது அங்கே பார்சலே இல்லையே மச்சி.. ஏன்னா அங்கே தண்ணீ சிந்தி இருந்ததுன்னு நான் தான் துடைச்சிட்டு வந்தேன்.. அப்ப தான் இந்த லூசு உன்னை கிஸ் பண்ணிட்டு போச்சு..”

“டேய் நான் லூசாடா??”

“ஜெனி ப்ளீஸ்.. பர்ஸ்ட் அவன் ப்ராப்ளம் என்னன்னு பாக்கலாம்.”.  “டேய் நீ சாப்பிடலைல”

“ப்ராமிஸ் டா.. நான் இல்லைடா.. அப்போ தண்ணீ காணும்.. இப்போ பிரியாணி காணும்.. என் வீட்ல யாராச்சும் இருப்பாங்களோ??”

“ராமண்ணா.. மந்திரவாதி கூட்டிட்டு வாங்க.. மந்திரிச்சு பேய் ஓட்டலாம்..”

“ச்சே ச்சே.. யாரோ வீட்ல இருக்கனும்டா.. ஏன்னா நான் வீட்ல நுழையும் போதே யாரோ இருக்கிற மாதிரி ஃபீல் பண்ணேன்டா..”

“அப்போ வா மச்சி.. போய் மூலை முடுக்கு எல்லாம் தேடலாமா மச்சி..”

“இல்லை வேணாம்.. இப்போ மைன்ட் க்ளியர் ஆச்சு.. இனி நான் பாத்துக்கிறேன்.. “

டேய்..

“இல்லை மச்சி.. நௌவ் அம் க்ளியர்.. லீவ் இட்.. ஐ வில் ஹெண்டில் திஸ்.. பை மச்சி..”  “ஜெனிம்மா, உனக்கு பேய் ஓட்டனும்னா சொல்லு.. அண்ணா மந்திரவாதி அழைச்சிட்டு வர்றேன்” என்றவாறு தெளிந்த முகத்தோடு அவன் வீட்டுக்கு சென்றான் ராம்..

ஒருவேளை நான் பிரியாணி வாங்கி வரும்போது நடந்ததுக்கும், இப்போது நடப்பதற்கும் ஏதாவது லிங்க் இருக்குமோ?? வேணாம் ராம், திரும்பவும் நடக்காத எதையும் யோசிக்காதே என தன்னையே நொந்து கொண்டான் ராம்..

error: Content is protected !!