Eswaranin Eswari 12

Eswaranin Eswari 12

அத்தியாயம் – 12

அன்றைய காலை நேரம் மிக தாமதமாக விடிந்தது ஈசுவரிக்கு. நேற்று இரவு அவளுக்கு பிடித்த த்ரில்லர் படம் ஒன்றை பார்த்துவிட்டு படுக்க, மணி இரண்டானது.

அதுவும் சேசிங், ரேசிங் போன்ற படங்கள் தான் அவளின் அதீத விருப்பம். அதிலும் படத்தை பார்க்க அது நன்றாக இருக்கிறது என்று, நாலு பேர் சர்டிபிகேட் கொடுத்தால் மட்டுமே அந்த படம் பார்க்கப்படும் அவளால்.

நேற்று படம் பார்ப்பதற்கு அவளுக்கு விருப்பம் இல்லை, அவள் ஈஸ்வாின் வருகைக்காக தான் காத்துக் கொண்டு இருந்தாள். ஏனெனில், மும்பை செல்ல போவதாக பீட்டர் மூலம் அவள் அறிந்ததில் இருந்தே, அவள் மனம் ஏனோ படபடக்க தொடங்கியது.

இங்க அப்போ தனியா இருக்கணும், நைட் கட்டிபிடிச்சு தூங்க முடியாது. அவன் எனக்கு எலி பரிசோதனையை இருக்க மாட்டான், அப்போ நானே சமைச்சு, நானே சாப்பிடணுமா!”.

ஹையோ! அது கொடுமையே! வரட்டும் வீட்டுக்கு, ரெண்டுல ஒன்னு பார்த்திடுவோம்என்று படபடக்கும் மனதை கட்டுப்படுத்திக் கொண்டு காத்து இருக்க தொடங்கினாள்.

மணி பண்ணிரெண்டை நெருங்கியும் அவன் வரவில்லை எனவும் தான், தனக்கு பிடித்த த்ரில்லர் படம் பார்க்க அமர்ந்துவிட்டாள்.

ரெண்டு மணி நேரத்தில் படம் முடிந்த பின்பும், அவன் வரவில்லை எனவும் இவள் அவளின் பேசியை எடுத்து, அவனுக்கு டயல் செய்தாள்.

தூங்கு ஈஸ்! நான் நாளைக்கு காலையில் தான் வருவேன்என்று கூறிவிட்டு அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று கூட கேட்க நேரமில்லாமல் அதை கட் செய்துவிட்டு ஓடிக் கொண்டு இருந்தான்.

இதை அப்பவே செஞ்சு இருக்கலாம் நானு, இவங்க போன் பண்ணி சொல்லுவாங்க அப்படினு நீயா நினைக்காதே இனிமேஎன்று தனக்கு தானே சொல்லிக் கொண்டு கதவு எல்லாம் சரியாக அடைத்து இருக்கிறதா என்று பார்த்துவிட்டு உறங்க சென்றாள்.

உறக்கம் தான் ஏனோ வரவில்லை அவளுக்கு, காரணம் சிறிது நாட்களாக அவன் அருகில் அவள் உணர்ந்த பாதுகாப்பும், நிம்மதியும் தான்.

அதன் பிறகு எப்பொழுது உறங்கினாள் என்று தெரியவில்லை, அவள் எழும் பொழுதே மணி பத்தாகி இருந்தது.

மணியை பார்த்துவிட்டு அடித்து பிடித்து எழுந்து, உடனே பாத்ரூம் ஓடினாள். கடகடவென்று குளியலை எல்லாம் முடித்துக் கொண்டு வந்தவள், அங்கே ஹாலில் அவளின் கணவனும், நண்பனும் ஊருக்கு கிளம்ப பெட்டியை தயார் நிலையில் வைத்து இருந்தார்கள்.

ஹே ஈஸ் வா! உனக்கு பிடிச்ச ரவா தோசை, முந்திரி எல்லாம் போட்டு செஞ்சு இருக்கேன். வா வந்து சாப்பிடு, மாம்ஸ் இப்போ வந்துடுவாங்கஎன்று பீட்டர் அவளை டைனிங் ஹாலில் அமர வைத்து அவளுக்கு பரிமாறினான்.

பசி வேறு இருக்கவும், முதலில் எதுவாக இருந்தாலும் சாப்பிட்டு முடித்துவிட்டு பின் தெம்பாக சண்டை பிடிக்கலாம் என்ற முடிவிற்கு வந்துவிட்டாள். அதுவும் அவளுக்கு பிடித்த விதத்தில், முருகலாக இருக்கவும் நன்றாக சாம்பாரில் முக்கி எடுத்து சப்பு கொட்டி சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள்.

சரியாக அவள் சாப்பிட்டு முடிக்கவும், ஈஸ்வர் உள்ளே நுழைவதற்கும் சரியாக இருந்தது. அவன் அவளிடம் இப்பொழுதே ஊருக்கு கிளம்ப வேண்டியதன் அவசரத்தை எடுத்துக் கூறிக் கொண்டு இருந்தான்.

அவளுக்கோ, தன்னை விட்டுவிட்டு செல்ல போகிறான் என்று தெரிந்தவுடன் அவளறியாமல் கண்களில் கண்ணீர் எட்டி பார்த்தது.

நோ ஈஸ்! நோ இவன் முன்னாடி அழுதிடாத. அப்புறம் இதை வச்சே, பின்னாடி நம்மளை கிண்டல் அடிப்பான்என்று தனக்கு தானே கூறிக் கொண்டு, கண்ணில் நீர் வராமல் இருக்க பெரும்பாடு பட்டுவிட்டாள்.

அவனிடம் அவளையும் அழைத்து செல்ல கூற, அவனோ முடியவே முடியாது என்றான்.

“கண்டிப்பா நீங்க என்னை கூட்டிட்டு தான் போகனும், எப்போ வருவீங்கன்னு தெரியாம இங்க என்னால எப்படி தனியா இருக்க முடியும்?” என்று வாதிட்டாள் ஈஸ்வரி.

“ஹேய்! நான் என்ன சுத்தி பார்க்கவா போறேன்? கேஸ் விஷயமா போறேன், அங்கேயும் உன்னை ரூம்ல விட்டுட்டு தான் போகனும்”.

“அதுக்கு நீ இங்கேயே இரு, இல்லையா உங்க அம்மா வீட்டுக்கு வேணும்னா கிளம்பி போ. அப்புறம் நான் வந்த உடனே, உன்னை கூப்பிட்டுகிறேன்” என்றவனை பார்த்து முறைத்துவிட்டு உள்ளே சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.

திரும்பி வரும் பொழுது, அவளின் கையில் ஒரு சின்ன பெட்டி.

“என்னை பஸ் ஏத்தி விடுங்க, நான் ஊருக்கு கிளம்புறேன்” என்று எங்கோ பார்த்து கூறினாள்.

அவளின் அந்த செயலில், அவனுக்கு முகம் கொள்ளா சிரிப்பு. அவளை தன்னருகில் இழுத்துக் கொண்டு, அவளின் முகம் பார்த்தான்.

அவளோ, அவனின் இந்த இழுப்பில் அவனை விழிவிரித்துப் பார்த்தாள்.

கண்கள் நான்கும் மௌன மொழி பேச, அங்கே அந்த மௌனத்தை கலைக்க, அவனின் செல்பேசி இம்சையாக கத்தி தொலைத்தது.

செல்லை எடுத்து பேசியவன், அந்த பக்கம் கேட்ட செய்தியில் அவன் உடனே கிளம்ப வேண்டிய நேரம் வந்துவிட்டதை அறிந்தான்.

அவளை பார்க்க, அவளோ அவனை முறைத்துக் கொண்டு நின்று இருந்தாள். இப்பொழுது அவளை இங்கே தனியாக விடுவதில், அவனுக்கும் விருப்பமில்லை. உடனே அவன் இரவு பேருந்திற்கு படுக்கை வசதி கொண்ட ஒரு டிராவல் ஏஜெண்டிற்கு அழைத்து, ஒரு டிக்கெட் ரிசர்வ் செய்தான்.

ஆக! என்னை எங்க அம்மா வீட்டுக்கு பேக் பண்ண ரெடியாகிடீங்கஎன்று கேட்டாள்.

நீ நம்ம வீட்டுக்கு தான் போக போற செல்லம், அப்படியெல்லாம் உன்னை அனுப்புவேனாஎன்று மர்மம் நிறைந்த புன்னகையுடன் அவன் கூற, அவன் கூற வருவதை புரிந்து கொண்டு, அவனை அடிக்க துரத்தினாள் அவனின் இம்சை ஈஸ்.

ஒரு கட்டத்தில் அவர்களின் அறைக்குள் இவர்கள் நுழைய, அங்கே அவள் வேகமாக கதவை சாற்றிவிட்டு, அவனை பிடிக்க ஓடினாள். அவனோ, அவளின் கையில் தானாக சிக்கிக் கொண்டான்.

உங்களுக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கணும், என்னை சண்டைகாரின்னு சொல்லுறீங்க!” என்று கொதித்தாள்.

பின்ன இப்போ கூட என் கூட சண்டை தானே போடுற, அப்புறம் உன்னை அப்படி கூப்பிடாம வேற எப்படி கூப்பிடுவாங்க?” என்று அவளிடம் வம்பு செய்துக் கொண்டு இருந்தான்.

ஒரு கட்டத்தில் அவனை அடிப்பதை எல்லாம் நிறுத்திவிட்டு, அவன் தனியாக விட்டு செல்லுவதை நினைத்து வருத்தம் கொண்டாள்.

ஈஸ்! என் வேலை பத்தி உனக்கு நல்லா தெரியும் தானே, அப்புறம் ஏன் இப்படி வருத்தப்படுற? கேஸ் பத்தி யார்கிட்டேயும் சொல்ல கூடாது, ஆனா இப்போ எடுத்து இருக்கிற கேஸ் குழந்தை கடத்தல் செய்றவனை பிடிக்க”.

இந்த நேரத்தில் நீ தானே, என்னை தைரியமா வழி அனுப்பி வைக்கனும். நீயே இப்படி வருத்தமா இருந்தா, நான் எப்படி கிளம்ப முடியும் உன்னை விட்டு?”.

நம்ம ரெண்டு பேருக்கும் நிறைய விஷயங்கள் ஒத்து போறது இல்லை, அதுவும் அன்னைக்கு அந்த சண்டை தேவையில்லாதது. சீக்கிரம் இந்த கேஸ் முடிச்சிட்டு வரேன், நாம பேசுவோம் மனசு விட்டு சரியாஎன்று கூறியதோடு அல்லாமல், அவளின் நெற்றியில் மென்மையாக இதழ் பதித்தான் ஈஸ்வர்.

அந்த ஒற்றை இதழ் ஒற்றல், அவளுக்கு அவ்வளவு பலமாக இருந்தது. அதுவும், அவன் கூறியதும் சரி தானே, இப்பொழுது நாம் தான் தைரியமாக இருக்க வேண்டும்.

அங்கே தன்னுடைய அத்தையும், இதை எல்லாம் கடந்து தானே வந்து இருக்கிறார்கள். செல்ல மகன் வேலைக்கு சென்றால், எப்பொழுது வீட்டுக்கு வருவான் என்று ஒரு அன்னையாக வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு அல்லவா காத்துக் கொண்டு இருப்பார்கள்.

மனதில் ஒரு தெளிவு வரவும், அவனை பார்த்து இப்பொழுது புன்னகைத்தாள். அவளின் அந்த புன்னகையை பெற்றுக் கொண்டு, அவன் அவளிடம் சொல்லிக் கொண்டு பீட்டருடன் ஏர்போர்ட் செல்ல விரைந்தான்.

அங்கே விஷ்வா, இவனுக்காக காத்துக் கொண்டு இருந்தான். அவனுடன் மேலும் இருவர் இருக்க, அவர்களுடன் உள்ளே சென்றான்.

அங்கே ஈஸ்வரியோ, இரவு பேருந்துக்கு தேவையானதை எல்லாம் எடுத்து வைத்துவிட்டு, தன் அன்னைக்கு அழைத்தாள்.

மம்மி! நான் மதுரைக்கு இன்னைக்கு நைட்டு பஸ் ஏறுரேன். உனக்கு நான் என்ன வாங்கி வரட்டும், கனேஷ்க்கு அவனுக்கு பிடித்த கருப்பட்டி கத்திலி, கிருஷ்ணா ஸ்வீட்ஸ்ல வாங்கிட்டு வரேன்”.

வேற எதுவும் வேணும்னா சொல்லுங்க, இப்போவே வாங்கி வச்சா தான் எல்லாம் பேக் பண்ணிட்டு, நைட் பஸ் ஏற சரியா இருக்கும்என்றாள்.

மாப்பிள்ளை கூட கிளம்பி வரியா! ஹையோ நாளைக்கு புரட்டாசி ஆரம்பிக்குதே டி, கோழி, கறி , மீனு எதுவும் எடுக்க முடியாதேஎன்று கவலை பட்டவரை பார்த்து, கோபம் கொண்டாள்.

எம்மா! உன் மாப்பிள்ளை எல்லாம் வரல, அவர் வேலை விஷயமா வெளியூர் போய் இருக்கார். அதுவரை என்னை அத்தை கூட இருக்க சொல்லி இருக்கார், உன்னை பார்க்க ஒரு நாள் மட்டும் தான் எனக்கு டைம் இருக்கு, பிகாஸ் ஆம் பிஸி யூ நோஎன்று கோபம் கொஞ்சம், அலட்டல் கொஞ்சம் என்று பேசியவளை பார்த்து, அவருக்கு கோபம் வந்தாலும், மகளின் பொறுப்பை உணர்ந்து சந்தோஷம் அடைந்தார்.

நல்லவேளை! நான் கூட என்னடா செய்றதுனு பயந்தேன். சரி! சரி! ஒழுங்கா வீட்டை எல்லாம் பூட்டி, பத்திரமா பஸ் ஏறி வந்து சேருஎன்று கூறிவிட்டு போனை அணைத்தார்.

எனக்கு வில்லி, வெளியே எல்லாம் இல்லை. உள்ளேயே தான் இருக்கு, என் அம்மா வடிவத்தில் என்று மனதில் கருவிவிட்டு தன் அத்தைக்கு அழைத்தாள்.

அவரிடம் விஷயத்தை சொல்லவும், அவர் மகனை பற்றி மருமகளிடம் லட்சார்ச்சனை நடத்தினார்.

பொறுப்பான பதவியில் இருந்துட்டு, அவன் செய்ற வேலை ஒன்னும் சீரா தெரியல. உன்னை இங்க வந்து அவன் விட்டுட்டு, அப்புறம் அவன் எங்க வேணாலும் போய் இருக்க வேண்டியது தானேஎன்று ஒரு பிடி பிடிக்க தொடங்கினார்.

இவளுக்கு இன்றைய பொழுது சிறப்பாக சென்றதற்காக, மிகவும் நொந்து விட்டாள். ஆல் அம்மாஸ் இப்படித்தான் போல, அடுத்து நம்ம அம்மா ஸ்டேஜ் வந்தா இப்படித்தான் இருப்போமா? என்ற கேள்வி மனதிற்குள் சுழற்ற தொடங்கியது.

அதை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, அவள் மற்றதை எல்லாம் ஒழுங்கு படுத்திவிட்டு, வாங்க வேண்டியதை எல்லாம் ஆப் மூலம் டோர் டெலிவரி செய்ய வைத்து எல்லாம் பெட்டியில் அடுக்கிவிட்டாள்.

சரியாக அப்பொழுது ஈஸ்வரிடம் இருந்து அழைப்பு வந்தது, அவளுக்கு.

ஹே! இப்போ ஒரு டிரைவர் வருவான், உன்னை பத்திரமா பஸ் எத்திவிட்டு தான் அவன் அப்புறம் போவான். அவன் போட்டோ, கார் நம்பர் எல்லாம் அனுப்பி இருக்கேன் உனக்கு செக் பண்ணிக்கோ, டேக் கேர் டா! பை!”  என்று கூறிவிட்டு உடனே வைத்து விட்டான்.

இவ்வளவு பிசியிலும், என் சேஃப்டி பார்க்கிறாங்க, அதான் டா உன்னை ஆரம்பத்தில் இருந்தே, உன்னை சைட் அடிக்க வச்சதுஎன்று எண்ணிக் கொண்டு இருக்கும் பொழுது வீட்டின் காலிங் பெல் அடித்தது.

யார் என்று லென்ஸ் வழியாக பார்த்தவள், அங்கே ஈஸ்வர் கூறிய டிரைவர் நின்று கொண்டு இருந்தான். கேள்வி கேட்டு சரி பார்த்து, வீட்டை நன்றாக பூட்டிவிட்டு அவனுடன் சென்று பஸ் நிலையம் சென்றாள்.

பத்திரமாக அவள் பஸ் ஏறிய பிறகு தான், அவன் அங்கு இருந்து சென்றான். கணவனுக்கு ஒரு செல்ஃபி அனுப்பி, பஸ் ஏறிவிட்டதாக அனுப்பினாள்.

அதன் பிறகு ஸ்கிரீனை நன்றாக இழுத்துவிட்டு, காதில் ஹெட்செட் பொருத்தி பாட்டு கேட்டு அப்படியே கண்ணயர்ந்தாள். காலையில் மதுரை, மதுரை என்று கண்டக்டர் கத்திய கத்தில் தான் எழுந்து அமர்ந்து, மாட்டுத்தாவணி நிறுத்தத்தில் இறக்கி விட சொல்லி கூறினாள்.

அங்கே, அவளை பிக் அப் செய்ய அவளின் அத்தையும், மாமாவும் வந்து இருப்பதை பார்த்து, ஓடி சென்று அவர்களை அனைத்துக் கொண்டாள்.

நலம் விசாரிப்பு முடிந்தவுடன், கணவனுக்கு இருவருடனும் சேர்ந்து எடுத்த செல்ஃபியை அனுப்பி வந்து விட்டதாக கூறி மெஸேஜ் தட்டினாள். பதிலுக்கு ஒரு ஸ்மைலி வந்த பிறகு, அவள் முகத்தில் புன்னகை ஓட்டிக் கொண்டது.

இங்கே இவள் பத்திரமாக மதுரை வந்து இறங்க, அங்கே மும்பையில் இவன் இரண்டு பேரை பிடித்து, ஒரு ஸ்டோர் ரூமில் வைத்து போலீஸ் பாணியில், விசாரித்துக் கொண்டு இருந்தான்.

பிள்ளைங்களை, உங்க குரூப் ஆட்கள் தான் ஷிப் மூலமாக ஒரு கன்டெய்னர்ல ஏத்தி விடுறீங்கன்னு தெரியும். அந்த பிள்ளைங்க இப்போ எங்க, எங்க இருந்து எல்லாம் தூக்கிட்டு வந்தீங்க அப்படினு எல்லாம் எனக்கு தெரியனும்என்று ஈஸ்வர் அவர்களை அவனது பாணியில், கேட்டுக் கொண்டு இருந்தான்.

அவர்களோ வலி தாங்கமுடியாமல், இப்பொழுது தாராவி ஏரியாவில் தான் எல்லாம் இருக்கிறார்கள். எங்கு இருந்து வருகிறார்கள் எல்லாம் எதுவும், அவர்களுக்கு தெரியாது என்று சாதித்துக் கொண்டு இருந்தார்கள்.

விஷ்வா! லோக்கல் போலீஸ் வச்சு, அந்த ஏரியாவை செக் பண்ணு. அப்புறம் நானும் பீட்டரும், ஹார்பர் வரை போய்ட்டு வரோம்என்று கூறிவிட்டு சென்றான்.

அவன் இங்கே ஒரு க்ளூ பிடிக்க, அங்கே அவனின் மனைவி ஈஸ்வாியோ அந்த கூட்டத்தின் தலைவனை பிடித்து, ஒரு ஆட்டு ஆட்டிக் கொண்டு இருந்தாள், அவனின் பின்புலம் தெரியாமல்.

தொடரும்..

 

 

 

 

 

error: Content is protected !!