EswaraninEaswari3

EswaraninEaswari3

அத்தியாயம் 3 

ஸ்டடி ஹாலிடேஸ் தொடங்கவும், ஊரில் திருவிழா தொடங்கவும் சரியாக இருந்தது. கடைசி வருட படிப்பு என்று ஈஸ்வரியின் பெற்றோர் அவளை ஊருக்கு அழைத்து செல்ல மிகவும் யோசித்தனர். 

ஆனால் அவளோ, அடுத்து திருமணம் செய்தால் இப்படி திருவிழா பார்க்க முடியுமோ, என்னவோ என்று கண்ணை கசக்கவும், அவளின் அன்னைக்கு சிரிப்பு வந்தது. 

“அடியே! அங்க வந்தா நீ படிக்க மாட்டன்னு தெரிஞ்சு தான் விட்டுட்டு நாங்க மட்டும் போகலாம் நினைச்சோம். தம்பி இங்க சமத்தா சித்தி வீட்டில் இருந்து படிக்கிறேன் சொல்லிட்டான், நீ தான் எங்கேயும் ஒழுங்கா இருக்க மாட்டியே” என்று நொடித்த தாயை பார்த்து இளித்து வைத்தாள். 

“அதான் என்னை பத்தி தெரியுது தானே, அப்புறமும் ஏன் மம்மி இந்த வேலை? அப்பா நானும் வருவேன் திருவிழாவுக்கு, நேரம் ஒதுக்கி படிக்கவும் செய்வேன்” என்றவளை சிரிப்புடன் பார்த்தனர் பெற்றவர்கள். 

ஒருவழியாக பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் தம்பியை, அங்கே சாந்தா தேவியின் தங்கை வீட்டில் விட்டுவிட்டு, இவர்கள் சங்கரனின் பூர்வீக ஊரான கரிசல்பட்டு கிராமம் நோக்கி சென்றனர். 

இங்கே ஈஸ்வர் அவனின் காதலி ஐஷ்வர்யாவை சந்திக்க, அவளின் தாத்தா ஊரான கரிசல்பட்டு கிராமம் நோக்கி அவன் வந்து கொண்டு இருந்தான். 

“ஏலேய் சங்கரா! எப்படி ர இருக்க? திருவிழாவுக்கு தான் உம்மை பார்க்க முடியுது, வா மா சாந்தா எப்படி இருக்க?” என்று சங்கரனின் அண்ணன் தயாளன், அவர்களை வரவேற்று நலம் விசாரித்தார்.

“நாங்க நல்லா இருக்கோம் அண்ணா, நீங்க எப்படி இருக்கீங்க? அண்ணி, ரகு, ரேகா எல்லாம் எப்படி இருக்காங்க?” என்று சங்கரன் நலம் விசாரித்தார். 

“எல்லோரும் நல்லா இருக்காங்க டா தம்பி, ஆமா நம்ம ஈஸ்வரி எங்க?” என்று கேட்கவும் தான் அவள் இன்னும் இங்கு வரவில்லையா என்று பெற்றவர்கள் திரும்பி பார்த்தனர். 

அங்கே அவள் இங்கு வந்தால் முதலில் பார்ப்பது, அவளின் செல்ல பிராணி ஜாக்கை தான். அவள் ஆசையாக வளர்த்த நாய்குட்டி, இன்று அவள் உயரம் வளர்ந்து நிற்கிறது. 

“டேய் ஜாக்! எப்படி இருக்க டா பையா? உன்னை பார்த்து எவ்வளவு நாள் ஆகிடுச்சு! அப்புறம் வரேன் உன் கூட விளையாட என்ன, இப்போ போய் ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு, குளிச்சிட்டு, சாப்பிடணும் ரொம்ப பசிக்குது டா” என்று அதனுடன் பேசி கொஞ்சிவிட்டு வந்தவளை பார்த்து புன்னகைத்தார் அவளின் பெரியப்பா. 

“வந்த உடனே அதை போய் கொஞ்சினா தான், உமக்கு எங்களை எல்லாம் தெரியுமா மா ஈசு” என்று அவள் தலையை வாஞ்சையாக தடவிக் கொண்டு கேட்டார் அவளின் பெரியப்பா. 

“பெரியப்பா! நீங்க பேச கூடாது, என் நிச்சயதார்த்தத்திற்கு நீங்க வரவே இல்லை, அதனால நான் கோபமா இருக்கேன்” என்று கூறியவளை பார்த்து வெடி சிரிப்பு சிரித்தார். 

“அது சரி, நாங்க வராத காரணம் தெரிஞ்சும் இப்படி பேசுறியே ஈசு” என்றவரை பார்த்து செல்லமாக முறைத்தாள். 

“பெரிப்பா! ஈசு சொல்லாதீங்க, எனக்கு பிடிக்காது என்று தெரியும் தானே உங்களுக்கு” என்றவள் அவரின் நலம் விசாரிக்க தொடங்கினாள். 

அப்படியே பேசிக் கொண்டே எல்லோரும் வீட்டின் உள்ளே வந்தனர். வீட்டில் அவளின் பாட்டி, பெரியம்மா, அவர்களின் மக்கள், சித்தப்பா, சித்தி என்று வீடே ஆட்களால் நிரம்பி வழிந்தது. 

இப்படி திருவிழா சமயம், எல்லோரும் சேர்ந்து இருப்பதால் இதை ஈஸ்வரி எப்பொழுதும் தவற விட மாட்டாள். அவளுக்கு இப்படி எல்லோரிடமும் சிரித்து பேசி மகிழ வேண்டும், அதற்காகவே இங்கே வருவதை தவற விட மாட்டாள். 

அரட்டை அடித்து கொண்டு இருக்கும் பொழுதே, அங்கு வந்த அவளின் பாட்டி காமாட்சி அவளை சீக்கிரம் கோவிலுக்கு செல்ல தயாராக சொன்னார். 

இன்று அங்கே கொடியேற்றும் விழா நடக்க இருக்கிறது, அதற்கு செல்ல தான் காமாட்சி பாட்டி எல்லோரையும் விரட்டிக் கொண்டு இருந்தார். அன்று அவளுக்கு பிடித்த பச்சை கலர் பாவாடையும், சிவப்பு நிற தாவனியும் அணிந்து கொண்டு வரவேற்பறைக்கு வந்தாள். 

“அடியே! உனக்கு தான் நிச்சயம் ஆகிடுச்சுல, அப்புறம் இன்னமும் என்னாத்துக்கு இந்த உடுப்பு போடுரவ” என்று திட்ட தொடங்கினார் அவளின் பெரிய பாட்டி லீலாவதி. 

“பாட்டி! இன்னைக்கு ஒரு நாளைக்கு நான் தாவணி தான் உடுத்திகிட்டு போக போறேன், காமாட்சி பாட்டி கூட சரினு சொல்லிட்டாங்க. ஆமா! உன்ற பேரன் பெரிய போலீஸ் அதிகாரின்னு பெருமை பீத்துக்குவியே, எங்க பாட்டி அவரு?” என்று அவரை வம்பு வளர்த்தாள். 

“அவனுக்கு வேலை வெட்டி இல்லை பாரு, அம்புட்டு அக்கறை இருக்கிறவ அவனுக்கு போனை போட்டு நீயே பேசிக்கணும்” என்று நொடித்துக் கொண்டார். 

“அது சரி, போன் போட்ட உடனே அந்த பனைமரம் உடனே எடுத்துட்டா மழை வந்திடாது” என்று அவரின் ஆசை பேரனை மேலும் இவள் கிண்டல் செய்ய, அவர் தன் வயதையும் பொருட்படுத்தாமல் இவளை அடிக்க ஓடினார் இவள் பின்னே. 

“இவளுக்கும், அவளுக்கும் இதே பொலைப்பா போச்சு. ஏய் ஈசு! அவ வயசு என்ன? உன் வயசு என்ன? அவளை வம்பு வளர்க்கல அப்படினா தூக்கம் வராதோ உமக்கு?” என்று காமாட்சி பாட்டி அதட்டவும், சிரித்துக் கொண்டே லீலாவதி பாட்டியை கட்டிக் கொண்டு கொஞ்ச தொடங்கினாள். 

“நான் வம்பு வளர்த்தா தான் லீலா பாட்டிக்கு தூக்கம் வருமாம், காமு பாட்டி” என்று கூறி விட்டு சிட்டாக அவளின் பெரியப்பா மகள் ரேகா அக்காவுடனும், சித்தப்பா மகள் ராஜியுடனும் கோவில் செல்ல ஓடினாள். 

குடும்பத்தினர் எல்லோரும் அவளின் குறும்பு புரிந்து, சிரித்துக் கொண்டே தங்கள் வீட்டில் இருந்து சிறிது நேர நடையில் இருக்கும், பெரிய மாரியம்மன் கோவிலுக்கு நடந்து சென்றனர். 

முன்னே இளையவர்கள் செல்ல, பின்னே பெரியவர்கள் நடந்து வந்தனர். எதிர்ப்பட்ட தெரிந்தவர்கள் எல்லோரும், இவர்களிடம் நலம் விசாரிக்க என்று அங்கு அங்கு நின்று பேசிவிட்டு மொத்தமாக எல்லோரும் கோவிலுக்குள் நுழைந்தனர். 

அம்மனை தரிசித்துவிட்டு, கொடியேற்றும் இடத்திற்கு வந்து பூஜையை காண வந்தனர். அம்மனே போற்றி!போற்றி! அம்மனே போற்றி!போற்றி! என்று கோஷம் எழுப்பி கொடி ஏற்றி திருவிழா தொடங்கி வைத்தனர். 

இங்கே தரிசனம் முடிந்து அன்னதானம் ஒரு பக்கம் நடக்க, அதை கவனிக்க பெரியவர்கள் செல்ல, சிறியவர்கள் அவர்களிடம் சொல்லிக் கொண்டு வெளியே இருக்கும் கடைகளை சுற்றி பார்க்க சென்றனர்.

“ஆமா! உன் கிட்ட கேட்கணும் நினைச்சேன், வந்ததுல இருந்து உன் மாப்பிள்ளை பத்தி நாங்களும் கேட்குறோம், ஒண்ணுமே சொல்ல மாட்டேங்குற. இதுக்குள்ள நீ அவரை பத்தி எங்க கிட்ட பக்கம், பக்கமா பேசி இருக்கணுமே, ஏன் எதுவும் சொல்ல மாட்டேங்குற?” என்று ரேகா அக்கா கேட்கவும், அவள் மற்றவர்களை பார்த்தாள்.

அதை புரிந்து கொண்ட ரேகா, ராஜியை அழைத்து தாங்கள் வீட்டிற்க்கு சென்றுவிட்டு வருவதாக கூறிவிட்டு, ஈஸ்வரியை அழைத்துக் கொண்டு அங்கு இருந்து கிளம்பினாள். வீடு அருகே நெருங்கும் பொழுது, அவள் தனக்கு நிச்சயம் செய்தவனை பற்றி கூற தொடங்கினாள்.

அவளிடம் அன்று அவன் ஒரு பெண்ணை காதல் செய்கிறேன் என்று கூறிய விஷயம் வரை, எல்லாவற்றையும் ஒளிவு மறைவு இல்லாமல் கூறினாள். அதைக் கேட்ட ரேகாவிற்கு, ஒன்று மட்டும் புரிந்தது நன்றாக.

அது இவளுக்கு அவன் மேல் காதல் இருக்கிறது, ஆனால் அதை அவள் உணராமல் இருக்கிறாள் என்று. அத்தோடு, அவளுக்கு ஈஸ்வரின் குடும்பம் பற்றி ஒன்றும் தெரியவில்லை என்றும் புரிந்து கொண்டாள்

“நீ தப்பு பண்ணிட்ட அப்படின்னு தோணுது ஈஸ்வரி, அவர் நிஜமாவே வேற ஒரு பொண்ணை விரும்பி, அது அவங்க வீட்டுக்கு பிடிக்காம டக்குன்னு உன்னை பேசி இருந்துக்கனும்”. 

“அதனால தான் அவர் உன் கிட்ட சொல்லி நிப்பாட்ட பேசி இருக்கணும், நீ அவர் மேல இருந்த கடுப்புல சொன்னியா, இல்லை நிஜமாவே பிடிச்சு சரின்னு சொன்னியா அப்படின்னு தான் தெரியல எனக்கு” என்று ரேகா கூறவும், சிலிர்த்து விட்டாள்

“அக்கா! உனக்கு தான் விபரம் தெரியல, காலேஜ்ல இதுவரை ஒரு பொன்னை கூட நிமிர்ந்து பார்த்து பேசி இருக்க மாட்டார். என் மேலே ஏன் கோபம் தெரியுமா, நான் பீட்டர் அண்ணா கூட பைக்ல போறது பிடிக்கல போல”.

“அதனால எப்போ பார்த்தாலும், என்னை முறைச்சிகிட்டே திரிவார். இது பரவாலை, pshycology says அப்படின்னு ஆண், பெண் நட்பு எப்படி பார்க்கப்படுகிறது சமுதாயத்தில் அப்படின்னு ஒரு பெரிய கட்டுரையே கொடுத்தார்”

“அது மட்டும் இல்லாம, ஏதோ சொன்னாரே கொஞ்சம் ஏத்துக்கிற மாதிரி இருக்கவும், அடுத்த நாள் நான் தனியா வண்டியில் போய் இறங்கினேன். அதுக்கு ஒரு பாராட்டு, ஒன்னும் கிடையாது. வழக்கம் போல ஏதோ ஜந்துவை பார்க்கிற மாதிரி, பார்த்துகிட்டு போறார்”.

“இருந்த கோபத்தில், நான் திரும்ப பீட்டர் அண்ணா கூட போய் இறங்கினேன். அந்த கோபத்தில் தான் அன்னைக்கு பொண்ணு பார்க்க வந்தப்ப, அவர் இப்படி பொய் சொல்லி என்னை கடுப்பு ஏத்திட்டு போய் இருக்கார்” என்று பொரிந்து தள்ளி விட்டாள்.

“இல்லை ஈஸ், எனக்கு என்னமோ நீ இதை உடனே அவர் கிட்ட பேசி தெளிவு படுதிக்கிறது நல்லதுன்னு தோணுது. கல்யாணம் விளையாட்டு விஷயம் இல்லை, சொன்னா கேளு” என்று ரேகா சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுது, அங்கே ஈஸ்வரன் குடும்பத்தினர் அவர்கள் வீட்டின் முன் காரில் இருந்து இறங்கிக் கொண்டு இருந்தனர். 

“ரேகா அக்கா, அவங்க அவரோட அப்பா, அம்மா. நம்ம பாட்டி வீடு எப்படி தெரியும் அவங்களுக்கு? அப்பா ஏதும் வர சொல்லி இருந்தாங்களா?” என்று கேள்விகளை அடுக்கினாள் ஈஸ்வரி.

“எனக்கு எப்படி தெரியும்? நீ போய் சித்தி, சித்தப்பா எல்லோரையும் கூட்டிட்டு வா. நான் போய் அவங்க எல்லோரையும், நம்ம வீட்டுக்குள்ள அழைச்சிட்டு போறேன்” என்று கூறிவிட்டு ரேகா அங்கு விரைய, இவள் தன் பெற்றோரிடமும், பாட்டியிடமும் விஷயத்தை தெரிவிக்க ஓடினாள்.

அவள் செல்லும் வழியிலே, அவர்கள் வீடு நோக்கி வரவும் விஷயத்தை அவர்களிடம் கூறினாள். அவர்களும் தாமதிக்காமல், அவர்களை வரவேற்க சென்றனர். 

இவர்கள் முன்னே செல்ல, ஈஸ்வரி அப்பொழுது அங்கே ஈஸ்வரனுடன் இருந்த மங்கையை கண்டு கோபத்தின் எல்லையை கடந்தாள். வீட்டிற்க்கு செல்லாமல், அவள் நேராக அங்கே அவர்களை நோக்கி சென்றாள்.

“மாமா! என்ன மாம்ஸ் அங்க உங்க அப்பா, அம்மா எல்லாம் வந்து இருக்காங்க நீங்க இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க? நம்ம கல்யாணத்துக்கு நாள் குறிசிட்டாங்க போல, அதை சொல்ல தான் வந்து இருக்காங்க” என்று அவனின் கையோடு, கை கோர்த்துக் கொண்டும், உரசிக் கொண்டும் சிரித்துக் கொண்டே அவனின் முகம் பார்த்து பேசினாள்.

“ஆமா! இந்த ஆன்ட்டி யாரு? உங்களுக்கு தெரிஞ்சவங்களா மாம்ஸ், ஹல்லோ ஆன்ட்டி நான் ஈஸ்வரி, எங்க மாமாவை தான் நான் கல்யாணம் பண்ணிக்க போறேன், மறக்காம வந்திடுங்க எங்க கல்யாணத்திற்கு” என்று அவளிடம் இவன் என்னவன் என்று உணர்த்தினாள்.

ஈஸ்வருக்கு, இவள் எப்படி இங்கு என்பது முதலில் புரியவில்லை. அதை விட, தன் அப்பா, அம்மா வந்து இருக்காங்க அப்படின்னு சொல்லுறா, என்ன நடக்குது இங்க? என்று சற்று குழம்பி போனான்.

ஏனெனில், அவன் இங்கு வருவதே யாருக்கும் தெரியாது. அப்படி இருக்க, இங்கே இவளை பார்த்து அதிர்ச்சி என்றால், அவள் கூறிய விஷயத்தை கேட்டு மற்றொரு அதிர்ச்சி. 

அவளோ, அவனை அங்கு இருந்து அழைத்து செல்வதில் ஒரே குறியாக இருந்ததால், அவனின் கை பிடித்து கிட்டத்தட்ட இழுத்து சென்றாள். அவளின் இழுப்புக்கு சென்றவன், நேராக அவர்கள் வீட்டிற்கு வந்ததும் தான் தெளிந்தான்.

“உங்க சங்காத்தமே வேண்டாம்ன்னு தான், இவளை நான் உங்க கிட்ட இருந்து இத்தனை நாள் பிரிச்சு வச்சேன். பையனுக்கு முடிவாகி இருக்கிறதை சொல்லனும்ன்னு ரொம்ப கெஞ்சினா, அதனால தான் நீங்க இருக்கிற இடம் தெரிஞ்சிகிட்டு, உங்க கிட்ட சொல்லிட்டு போக வந்தோம்”.

“ஆனா, நாங்க வந்ததும் நல்லதா போச்சு. என் பையனுக்கு இந்த வீட்டோட பேசி இருந்த சம்மந்தம், இனி நடக்கவே நடக்காது. உங்க அம்மா கிட்ட சொல்லிடு, இனி நீ அவங்களை பார்க்க வர போவது இல்லைன்னு”.

“எக்காரணம் கொண்டும், திரும்ப ஓட்டணும்ன்னு நினைக்க சொல்லாத. மரியாதை இல்லாத இடத்தில் சம்மந்தம் பேசிட்டேன் ச, வாங்க மச்சான் கிளம்பலாம்” என்று ருத்ரன் கோபமாக பேசியதை கேட்டு அதிர்ந்து போனாள் ஈஸ்வரி. 

அவளை விட அதிர்ச்சியில் இருந்தான் ஈஸ்வர், ஏனெனில் பல வருடம் கழித்து அவன் தனது பாட்டியை பார்க்கிறான் அல்லவா.

ஈஸ்வரிக்கு, அங்கு நடந்ததை ஓரளவு கிரகிக்க முடிந்தது. ருத்ரனின் கோபம், சாரதாவின் கண்ணீர், பாட்டியின் சோர்ந்த முகம் எல்லாம் பார்த்தவள், நடந்ததை புரிந்து கொண்டாள்.

அவள் பாட்டியின் நிலையை காண பிடிக்காமல், பாட்டிக்கு நியாயம் செய்ய நினைத்து பெரியவர்களுடன் ஆலோசிக்காமல் அப்பொழுது ஒரு முடிவை எடுத்து விட்டாள். அது அவளையே தாக்க கூடிய அபாயம் இருப்பதை உணர்ந்து, தைரியமாக களத்தில் இறங்கினாள்.

“ருத்ரன் மாமா, உங்க பையன் அப்படியே யோக்கியம் மாதிரி பேச கூடாது. ஏற்கனவே கல்யாணமான ஒரு பொண்ணு கூட, ஊர் சுத்திகிட்டு இருக்கார். கேட்டா, அவளை தான் பிடிச்சு இருக்கு, கல்யாணம் பண்ண போறேன்னு சொல்லுறார்”.

“இந்த விஷயம் உங்களுக்கு தெரிஞ்சு தானே, நீங்க உங்க பையனை அவசரமா என்னை பேசி முடிச்சீங்க. அது மட்டுமா, காலேஜ்ல வேலை பார்க்கிறார் அப்படின்னு சொன்னீங்க, உங்க பையன் போலிஸ்ல தான் வேலை பார்க்கிறார்”.

“உங்களுக்கு தெரியாம நாளைக்கே திருட்டு கல்யாணம் பண்ணிகிட்டா, என்ன செய்வீங்க? ஏன் சொல்லுறேனா இப்போ கூட அந்த பொண்ணு கூட தான் ஓடி போக பிளான் போட்டுகிட்டு இருந்தார்”.

“இப்போ உங்க கௌரவம், மரியாதை எல்லாம் எங்க போச்சு மாமா?” என்று அவள் அடுத்து அடுத்து தாக்கியதில் அதிர்ந்து போனான் ஈஸ்வர்.

“வாயை மூடு! அவளுக்கு இன்னும் கல்யாணமாகல, இப்படியா ஒரு பொண்ணு மேல அபாண்டமா பழியை தூக்கி போடுவ. நான் போலிஸ் வேலையில் இருக்கிறது பாட்டியை தவிர, வேற யாருக்கும் தெரியாது, உமக்கு எப்படி தெரியும்? வேவு பார்கிறியா டி என்னை” என்று அவன் கத்திய கத்தலில், அவள் சிரிக்க தொடங்கினாள்.

“உன்னை அப்படியே வேவு பார்த்துட்டாலும், இருப்பதி நாலு நேரமும் உன்னை மட்டுமே நினைக்கிறாங்க பாட்டி. அவங்க என் கிட்ட மட்டும் தான், உன்னை பத்தி பேசுவாங்க”.

“வேற யார் கிட்ட பேசினாலும், அன்னைக்கு அவங்க பண்ண தப்பை சுட்டி காட்டிடுவாங்களோ அப்படின்னு பயந்து, பயந்து ஒவ்வொரு முறையும் செத்து செத்து பொளைக்குறாங்க”.

“ஆமா நீ மட்டும் எப்படி பாட்டி கூட டச் ல இருக்க? உங்க அம்மாவுக்காகவா” என்று சரியாக கேட்டாள்.

அவனின் ஆமாம் என்ற மண்டை ஆட்டலில், ருத்ரன் கொதித்து போனார். அந்த கோபத்தை அப்படியே மனைவி மேல் காட்ட எண்ணி, அவரை அடித்து விட்டார்.

“துரோகி! அப்போ இந்த சம்மந்தம் வரும் பொழுது உனக்கு இவங்க அம்மா வீட்டு ஆட்கள் அப்படின்னு தெரியும், அப்படித்தானே!” என்று கேட்டார்.

“ஆமா! தெரியும் இப்போ அதுக்கு என்ன? எனக்கு என் பையன் வாழ்க்கை தான் முக்கியம், உங்க பிடிவாதத்துக்கு என் பையனை நான் பழியாக்க விரும்பல. இந்த கல்யாணம் நடக்கும், நான் நடத்தி காட்டுவேன்” என்று பேசிய மனைவியை இப்பொழுது அதிர்ந்து பார்த்தார்.

அதற்குள் இங்கே ஈஸ்வரி, ரேகாவிடம் அந்த ஐஸ்வர்யா பற்றிய தகவலை எல்லாம் திரட்டி கொண்டு வர செய்து இருந்தாள். அதை அப்படியே ஈஸ்வரனின் கையில் கொடுத்து, மிதப்பாக அவனை ஒரு பார்வை பார்த்தாள்.

அவனின் போலிஸ் மூளை சட்டென்று, ஒவ்வொன்றையும் ஆராய தொடங்கியது. அது அத்தனையும் உண்மை என்று புரிந்தவுடன், தான் ஏமாந்த விதத்தை நினைத்து தன்னையே வெறுத்து போனான். 

இங்கே ஈஸ்வரனின் தாய் சபதம் போட, ருத்ரன் முதல் முறையாக மனைவியின் இந்த பரிமாணத்தில் அதிர்ந்து போனார். இருந்தாலும், அவரின் வீம்பு அவரை விட்டு போகுமா, எப்படி நடத்துகிறாய் என்று பார்கிறேன் என்று கூறிவிட்டு மனைவியை மகனுடன் விட்டுவிட்டு மற்றவருடன் சென்றார்.

பாட்டியையும், தாயையும் கவனிக்க வேண்டும் என்று நினைத்தவன் தாயின் அருகில் சென்று, அவரை அனைத்துக் கொண்டான். இத்தனை நாட்கள் அடைத்து வைத்து இருந்த துக்கம் வெளியேற, அவன் தோளில் சாய்ந்து அழுது தீர்த்தார்.

தாயை தேற்றியவன், பாட்டியை பார்க்க அங்கே ஈஸ்வரி அவரை கை தாங்கலாக அழைத்துக் கொண்டு அவரின் அறைக்கு சென்றாள். முதல் முறையாக, அவனுக்கு தன் தந்தை போல் தானும் தப்பு செய்கிறோமோ என்று யோசிக்க தொடங்கினான்.

யோசனையின் முடிவில், அப்படித்தான் என்று அவனின் மனசாட்சி அடித்துக் கூறியது. இனி அடுத்து என்ன? என்ற குழப்பத்தில் இருந்தான் அவன். ஆனால் ஈஸ்வரி, இனி அடுத்து எடுத்து வைக்க வேண்டிய அடியை யோசித்து விட்டாள். 

அதில் ஈஸ்வரன் அவளிடம் சிக்கி தவிக்க போறானா? இல்லை அவளே அவனிடம் சிக்கிக் கொள்வாளா? பார்க்கலாம்.

தொடரும்..

 

error: Content is protected !!