id-7

id-7

16

கனவல்லவே!

எழுத்து சுதந்திரம்தான் நம் தேசத்தின் சுதந்திரத்திற்கு அஸ்திவாரம் என்பதை யாரும் மறுக்க முடியாது. மனிதசக்தியை திரட்டி நம் நாட்டில் நடைபெறுகின்ற அநியாயங்களுக்கு எதிராகப் பெரும் போராட்டத்தை நடத்தி மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

ஆனால் இன்று நம்மைச் சுற்றியுள்ள பத்திரிக்கை எல்லாம் அக்கிரமங்களைத் தூண்டிவிடுவதும்,கலவரங்களை ஏற்படுத்தவும்மொத்தத்தில் தவறுகளின் துணைவனாய் அமைந்திருக்கும் நிலையில்ட்ரூத்’ என்ற இந்தியாவின் பெரும் மாநகரங்களில் வெளியாகும் ஆங்கில நாளிதழ் உண்மையைக் கொணர்வதையே தங்கள் பத்திரிக்கையின் கொள்கையாகக் கொண்டுள்ளது.

அந்த பத்திரிக்கையில் வெளியான ‘28 வயது பெண்ணின் சாதனைகள்’ என்று இறந்த போன கேத்ரீனைப் பற்றிய ஆர்டிக்கல் இந்தியாவைத் திரும்பி பார்க்க வைத்தது.

கேத்ரீனை பார்க்க இந்தியப் பெண்களின் சாயலிலில்லாத போதும் அவள் பிறந்து வளர்ந்த தாய் நாடு இந்தியா. அவளுடைய தந்தை தமிழ் நாட்டில் சிறிய கிராமத்தில் பிறந்த மகேந்திரன்.

அவருக்குள் இருந்த சாதிக்கும் எண்ணமும்அயராத உழைப்புமே அவரை இளமையிலேயே பெரிய வளர்ச்சியை அடைய வைத்தது. மகேந்திரன் தன்னுடைய பெயரை அமரேஷ் என்று மாற்றிக் கொண்டுவிட்டார்.

ஒரு வருடத்திற்கே பல கோடி ரூபாய்க்கு லாபம் ஈட்டும் கோவாவில் அமைந்துள்ள அமரேஷ் லிக்கர் பேஃக்டரியின் வளர்ச்சி அபரிமிதமானது. உலகளவில் அவருடைய நிறுவனம் வளர்ந்து நிற்பதற்குக் காரணம் அமரேஷ் மட்டுமல்ல. அவருடைய மனைவி சோஃபியாவும்தான்.

 பிரான்ஸ் நாட்டில் மருத்துவம் படித்து விட்டு தன் காதல் கணவனுக்காக கோவாவிலேயே தங்கி விட்டாள். அதுமட்டுமின்றி அவள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள குடும்பச் சொத்தை கணவனின் வளர்ச்சிக்காகத் தாரை வார்த்தவள். அவர்களின் காதலின் சின்னமாகப் பிறந்தவள்தான் வேலட்டினா கேத்தரீன்’.

சோஃபியா மருத்துவம் மட்டும் பார்ப்பதில்லை. சில மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியும் செய்து கொண்டிருந்தாள். அதன் விளைவாக ஏற்பட்ட விபத்தில் சோஃபியாவின் இரு கண்களும் பாதிக்கப்பட்டன.

 கணக்கு வழக்கில்லாத பணம் கூட அவளைக் குணப்படுத்த இயலவில்லை. சில நாட்கள் அந்த மனத்துயரில் இருந்த சோஃபியா, கேத்ரீனின் பன்னிரண்டாவது வயதில் இறந்தும் போனாள்.

தாயை இழந்து விட்ட கேத்ரீன்அப்பொழுதிலிருந்து தனிமையைப் பழகி இருந்தாள். ஐ. ஐ. எம் பெங்களூரில் எம். பி. ஏ முடித்த கேத்ரீன் தன் தந்தையோடு சேர்ந்து நிறுவனத்தின் முக்கியப் பொறுப்புகளைப் பார்த்து கொண்டாள்.

துரதிஷ்டவசமாக அமரேஷும் இறந்து விட அந்த நிறுவனத்தின் பங்குகள் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தது. கேத்ரீனால் தனியாக நிர்வாகம் செய்ய முடியுமா?’ என அவள் வீழ்ச்சியை எதிர்பார்த்துக் கொண்டிருந்த எல்லோருமே அதிர்ச்சி அடையும் விதமாய் அவள் தன்னுடைய திறமையால் அந்த நிறுவனத்தைப் பன்மடங்கு லாபம் பெருகச் செய்தாள்.

இது கேத்ரீனை பற்றி எல்லோருக்கும் தெரிந்த ஒரு முகம். ஆனால் ட்ரூத் ‘ இதழ் வெளிச்சம் போட்டுக் காட்டியது அவளுடைய இன்னொரு முகம்.

அமரேஷ் லிக்கர் பாஃக்டரியின் லாபத்தில் பல பங்குகளைச் சர்ச் பாஃதர் அந்தோனியின் மூலமாக பல்லாயிரம் ஆதரவற்ற குழந்தைகளின் வாழ்க்கைக்காக அற்பணித்து இருக்கிறாள். கண்களை இழந்த பல நூறு குழந்தைகளுக்கு பார்வை திரும்பக் கிடைக்கப் பெற செய்திருக்கிறாள்.

இப்படி கணக்கிலடங்கா உதவிகளைக் கண்களுக்குத் தெரியாமல் செய்திருக்கிறாள். அவள் இறந்த பின்பும் கூட அந்த நிறுவனத்தின் ஒரு பங்கு லாபத்தை ஆசிரமத்திலுள்ள குழந்தைகளுக்கென அற்பணித்திருக்கிறாள். இந்த அறியாத உண்மை உலகையே மெய் சிலிர்க்க வைத்தது.

 அவளுடைய மரணத்திற்குப் பிறகு பிரான்ஸிலிருந்து வந்த தாய் வழி உறவினர்கள் அடக்கம் செய்தனர். அந்த இடத்தில் புல்லே முளைத்துவிட்ட நிலையில் தமிழ்நாடு போலீஸ் அவளுக்கான நீதியை வழங்கவில்லை. அவளுக்காகக் கேள்வி கேட்போர் இல்லாததினால் அவளின் மரணம் மர்மமாய் போனது.

அந்தக் கடைசி வரி கேத்ரீனின் இறப்பிற்கான நீதியை வழங்க பல லட்சோபலட்ச மக்கள்,தொண்டு நிறுவனங்களைக் குரல் கொடுக்கச் செய்தது. அந்தக் குரல் சென்னை மாநகரித்திலும் ஒலித்தது.

அவளின் இறப்பில் ஒளிந்துள்ள உண்மையைக் கண்டுபிடிக்க மறு விசாரணைக்குத் தமிழ்நாடு போலீஸ் ஏற்பாடு செய்தது. அதனால் திருச்சியிலிருந்து இன்வஸ்டிகேஷனில் திறமை மிகுந்த ஆபிஸர் வேணு மகாதேவனை இந்தக் கேஸில் இறக்கியது. கூடவே இன்ஸ்பெக்டர் சிவாவும் விசராணையின் உதவிக்காகப் போடப்பட்டுள்ளது நாம் அறிந்த விஷயமே.

ஹோட்டல் ஆதித்தியா!

மீண்டும் அறை எண். 603ல் அந்த ட்ரூத் நாளிதழை கையில் சுருட்டி வைத்துக் கொண்டு வேணுவும்அவரோடு சிவாவும் கேத்தரீன் இறப்பு கொலைக்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து கொண்டிருந்தனர்

பத்து மாசத்திற்குப் பிறகும் இந்த அறையை ஹோட்டல் நிறுவனம் ஏன் பூட்டியே வைச்சிருக்கனும்?” என்றார் வேணு.

மீடியாக்கள்தான்… ரூம் நம்பர். 603 டெத் என ஒயாம புலம்பி அதை மக்கள் மனசில பதிய வைச்சிட்டாங்க” என்றான் சிவா.

பாயின்ட் சிவா… மீடியாக்களுக்குத் தேவை வெறும் பரபரப்புதான்

சிவா அவள் விழுந்த பால்கனியின் வழியே எட்டிப் பார்த்தான்.

வெறும் ஐந்தரை அடி இருக்கும் பெண் குடிபோதையால் தவறி விழுந்திருக்க வாய்ப்பே இல்லை சார். இட்ஸ் அ மர்டர். யாராவது பின்னாடி இருந்து தள்ளி விட்டிருக்கணும்… இல்லைனா… கால வாரி விட்டிருக்கலாம்?”

அப்போ உள்ளே ஆள் இருந்திருக்கணும் … இல்லை அவளோடு பின்னாடியே நுழைந்திருக்கலாம்… என்ன சிவா?”

உள்ளே ஆள் இருக்க அவன் இந்தக் கதவை சாவி இல்லாம திறந்திருக்கணும்… பட் ஹோட்டல் நிறுவனம் அதுக்கு வாய்ப்பில்லைனு சொல்றாங்களே. செகண்ட் திங் பின்னாடியிருந்து வந்திருந்தா சீசிடிவியில் அவன்/அவள் பின்னோடு வருவது பதிவாயிருக்கணும். 

இருவருமே ஒரு புள்ளியில் வந்து மீண்டும் குழப்பத்தில் நின்றனர்.

ஒய் நாட்? அவன் இந்தப் பால்கனி வழியா வந்து கதவுக்குப் பின்னாடி நின்னுட்டிருந்தா?”

நாட் பாஸிபில் சிவா. அதுவும் ரொம்ப ரிஸ்கி. நாம இந்த கேஸை வேற இடத்திலருந்து ஸ்டார்ட் பண்ணனும்” என்றார் வேணு.

எங்கிருந்து?”

கோவா… வேலட்டீனா கேத்ரீனின் சொந்த ஊர்” என்று வேணு முடிவெடுக்க அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய இருவரும் புறப்பட்டனர்.

இருளில் ஒளிர்ந்திருந்த மின்விளக்குள்… திடீரென ஆறாவது மாடியிலிருந்து ஒரு பெண் தவறி விழுகிறாள். அவள் முகமெல்லாம் இரத்தம் தோய்ந்திருக்க,

கேத்ரீன்…” என அலறியபடி எழுந்து கொண்டான் ஆதித்தியா.

அவனின் அலறல் சத்தம் விந்தியாவிற்கும் கேட்க அவள் ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டாள். ஆதித்தியா எதையோ கண்டு மிரட்சியாக நெற்றியில் வியர்வை துளிகள் படிந்தபடி அமர்ந்திருந்தான்.

ஆதித்தியா… ஆதித்தியா…” என்று விந்தியா தொடர்ச்சியாக அழைத்தும் அவன் பதிலின்றி அமர்ந்திருந்தான்.

விந்தியா போர்வையை விலக்கி கொண்டு அவன் அருகில் வந்து ஆதித்தியா’ என்று அழைத்தாள். அப்பொழுதும் பதில் இல்லை. பக்கத்திலிருந்த தண்ணீர் ஜக்கிலிருந்த தண்ணீரை சுரீலென அவன் முகத்தில் தெளித்தாள்.

முகத்தை அசைத்தபடி நினைவுக்கு வந்தவனாய் அவன் அருகில் தண்ணீர் ஜக்கோடு நின்றிருந்தவளை நிமிர்ந்து பார்த்தான்.

பைத்தியமாடி நீ?” என்று முகத்தைத் துடைத்தபடி கேட்டான்.

அத நான் கேட்கணும்…” என்று சொல்லிவிட்டு தண்ணீரை அவன் கைகளில் கொடுத்தாள்.

முதல்ல தண்ணி குடிங்க மிஸ்டர்… நிம்மதியா தூங்கிட்டிருந்தேன்… ஏதோ கெட்ட கனவு கண்டு அலறிட்டு… இப்போ என்னைப் பாத்து பைத்தியம்னு சொல்றீங்க” என்றாள் விந்தியா கோபமாக!

கனவா?”

அதுவே தெரியலயாநான் தூங்கப் போறேன். திரும்பியும் அலறினீங்க தண்ணிய தெளிக்க மாட்டேன்… மொத்தமா ஜக்கோட ஊத்திடுவேன்” என்று சொல்லிவிட்டு போர்வையை முகத்தில் போட்டுக் கொண்டு படுத்துக் கொண்டாள்.

ஆதித்தியாவால் அதை கனவு என்று நம்பமுடியவில்லை. உறக்கமின்றி எழுந்து நடந்தவனின் கால்களில் ஏதோ தட்டுப்பட அவன் அதைக் கைகளில் எடுத்துப் பார்த்தான். அது வேறொன்றுமில்லை.ட்ரூத்’ மேகஸின்.

விந்தியா அவன் அறையில் அதைப் படிக்க வைத்திருந்தாள். காலையில் அதை அவன்தான் பார்த்துவிட்டு தூக்கி விசிறி அடித்தான். அந்த ஞாபகம்தான் கனவாக மாறியிருப்பதை உணர்ந்தான்.

அந்த இதழின் அட்டை படத்தில் அவார்ட்டுடன் கேத்ரீன் நின்று கொண்டிருப்பதைப் பார்த்த ஆதி கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டவனாய்,

ஐம் சோ சாரி கேத்ரீன்” என்றான்.

அவன் மூளைச் சூடேற அவனுடைய சிகரெட் பாக்கெட்டை இருளில் தேடினான். அந்த சோபாவின் அருகிலிருந்த மேஜையில் கைகளை வைத்துத் தடவினான்.

அது கிடைக்காமல் போகவே நிமிர்ந்தவன் சோபாவில் படுத்திருத்த விந்தியாவின் மீது தவறி விழுந்து விட விந்தியா அம்மா” என்று அலறினாள்.

17

வேல் விழிகளோ!

ஆதித்தியா எதிர்பாராமல் விந்தியாவின் மீது விழுந்துவிட, தூங்கி கொண்டிருந்தவள் பயந்து போனாள். ஆதித்தியா கொஞ்சம் சுதாரித்து எழுந்து கொண்டான். விந்தியா சோபாவிலிருந்து போர்வையை விலக்கி எதிர்பாராத அந்த அதிர்ச்சியைச் சமாளித்து எழுந்தாள்.

அர் யூ மேட்?” என்று விந்தியா கேட்க ஆதித்தியா தன் செயலை நினைத்து தானே சிரித்துக் கொண்டான்.

ஐம் சாரி” என்று சொல்லிக் கொண்டே சிரித்தான்.

விந்தியா கண் கொட்டாமல் அவன் சிரிப்பதையே பார்த்து கொண்டிருந்தாள். அவன் மீது அளவில்லாத எரிச்சல் ஏற்பட்டது.

என்ன டிரை பண்றீங்க ஆதிதிடீர்னு அலறீங்க… திடீர்னு மேல விழறீங்க… என்னை டிஸ்டர்ப் பண்றதுதான் உங்க மோட்டிவா?”

சத்தியமா இல்லை…” என்று விந்தியாவின் தலையில் கை வைத்தான் ஆதித்தியா. அவனின் கைகளைத் தட்டி விட்டாள்.

ஏதோ தப்பா இருக்கு…” என்று கேட்டுவிட்டு விந்தியா கூர்மையாகப் பார்த்தாள்.

நீ நினைக்கிற மாதிரி தப்பான எண்ணத்தில் எல்லாம் விழல… கால் தடுக்கிடுச்சு

அப்போ தப்பான எண்ணம் வேற இருக்கா?”

நானே வாயக் கொடுத்து சிக்குறேன். இதப் பாரு என்னோட பொருள் ஒண்ண இருட்டில தேடிட்டிருந்தேன். கால் தடுக்கி உன் மேல விழுந்துட்டேன்… தட்ஸ் இட். வேணும்டே பண்ணியிருந்தா … இப்படி உன்கிட்ட பேசிட்டா இருந்திருப்பேன்?”

ஹெலோ… எதை தேடுறுதுனாலும் லைட்ட போட்டு தேடுங்க… திரும்பியும் வேற ஏதாவது லூசு மாதிரி பண்ணாதீங்க” என்று சொல்லிக் கொண்டே தலையணையை எதிர்புறம் திருப்பி வைத்துக் கொண்டு படுத்துக் கொண்டாள்.

இனிமே தூக்கம் எப்படி வரும்?” என்று விந்தியா புலம்பஆதித்தியா அறையை வெளிச்சமாக்கி விட்டு மீண்டும் தேட ஆரம்பித்தான்.

விந்தியாவை நோக்கி, நீ என்னோட சிகரெட் பாக்கெட்டை பார்த்தியா?” என்று கேட்டதும் விந்தியா திருதிருவென்று விழித்து விட்டு, “நான் எடுக்கலை…” என்று சொல்லியபடி போர்வையை எடுத்து முகத்தை மூடிக் கொண்டாள்.

விந்தியாவின் செயலைப் பார்த்துச் சந்தேகம் கொண்டவனாய், ‘எப்பவும் நான் வைக்கிற பொருள் இடம் மாறினதேயில்லை… இன்னைக்கு எப்படிக் காணோம்இவள தவிர வேற யாரும் எடுத்திருக்க முடியாது’ என்று யோசித்துவிட்டு விந்தியாவின் போர்வையை முகத்திலிருந்து விலக்கினான்.

எங்கடி என் சிகரெட் பேக்கெட்?”

விந்தியா சலித்துக் கொண்டு, என்னதான் பிரச்சனை உங்களுக்கு? நான் எடுக்கலை

நீதான் எடுத்திருக்க

என்னைப் பார்த்தா சிகரெட் பிடிக்கிற மாதிரியா தெரியுது?”

அதெல்லாம் எனக்குத் தெரியாது… என் சிகரெட் பேக்கெட் எங்கே?”

நான் எடுக்கல

நிச்சியமா நீதான் எடுத்திருக்க

இல்லை ” என்று கத்தினாள்.

அப்போ நீ எடுக்கலை?”

அதைத்தானே திரும்பத் திரும்ப சொல்றேன்

சரி… நான் ரொம்ப டென்ஷனா இருந்தா மட்டும்தான் சிகரெட் பிடிப்பேன்… இப்போ சிகரெட் இல்லை. இப்ப என் டென்ஷன் குறையணும்

அதுக்கு…

அவன் எதுவும் பேசாமல் அவளை நெருங்கி வந்தான். அவளுக்குப் பதட்டம் அதிகமானது.

ஆதி… ஸ்டே அவே” என்றாள்.

ஆனால் ஆதி அவளின் இதழ்களைப் பார்த்தபடியே நெருங்கி வந்தான். அவனின் நோக்கத்தை விந்தியா புரிந்து கொண்டாள். அவளின் கைகளால் அவனைத் தடுக்க முயற்சி செய்து அதுவும் பலனளிக்கவில்லை.

அவளை மீறிக் கொண்டு அவனை நெருங்க அவனின் அருகாமை விந்தியாவிற்குப் படபடப்பு அளித்தது. அவளின் இதயத்துடிப்பு அவளின் காதுகளுக்கே ஒலித்தது.

திஸ் இஸ் நாட் பேஃர்” என்றாள் படபடப்போடு.

எவ்ரித்திங் இஸ் பேஃர் இன் லவ் அன் வார்… பேபி” என்று சொல்லிவிட்டு காதல் நிரம்பிய புன்னகையோடு அவளை நெருங்கினான்.

விந்தியா தன் கைகளால் உதட்டை மூடிக் கொண்டாள்.

அந்த பேக்கெட் என் கண்ணில பட்டுச்சு. இது ஏன் இங்க இருக்குனு நான்தான் தூக்கிப்போட்டேன்…” என்றாள். இதைக் கேட்டதும் ஆதியின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

ஆதி அவளை தொடவில்லை இருந்தும் அவனின் மூச்சுக் காற்றை விந்தியாவால் உணர முடிந்தது. தன் இமைகளை விரித்து அவனைப் பார்த்தாள். அந்தக் கண்களை நேருக்கு நேர் அத்தனை அருகில் பார்த்தபின் கொஞ்சம் அவன் நிலை தடுமாற அவனே அவளை விட்டு விலகினான்.

விந்தியா பெருமூச்சுவிட்டவளாய் படபடப்பு அடங்காமல் சோபாவில் சாய்ந்து கொண்டாள். எத்தனையோ ஆண்களின் முன்னிலையில் தலைவணங்காமல் இருந்தவள் முதன் முறையாக அவனின் அருகாமையில் பலவீனமாய் உணர்ந்தாள்.

அவனிடம் பெண்களை வசீகரிக்கும் ஏதோ ஒரு ஆற்றல் இருக்கிறது என்பது மட்டும் அவளுக்குப் புரிந்தது.

வேல் விழிகள் என்று சொல்வார்களே… அவை இதுதானா?

நேராக அந்தக் கூர்மையான பார்வை ஈட்டியைப் போல் அவன் இதயத்தில் பாய்ந்தது. ஆதி நிலைகுலைந்தவனாய் பால்கனி கதவை திறந்து கொண்டு வெளியேறினான். முதன் முறையாய் ஒரு பெண் தன்னைத் தடுமாறச் செய்துவிட்டதை உணர்ந்தான்.

தான் விந்தியாவிடம் விட்ட சவாலில் தோற்று விடுவோம் என்று ஆதிக்கு தோன்றிற்று. அழகைத்தாண்டி அவளிடம் ஏதோ இருக்கிறது என்று சிந்தித்தவன்அவளிடம் தானே சரணடைந்து விடுவோமோ என்று பயப்படலானான்.

நோ இட்ஸ் இம்பாஸிபிள்” என்று அவனுக்கு அவனே சொல்லிக் கொண்டான்.

ஆதியிடம் யார் சொல்வது?

வ்ரித்திங் இஸ் பேஃர் இன் லவ் அன் வார்

காதலிலும் போரிலும் யாராவது ஒருவருக்கு தோல்வி நிச்சியம்.

error: Content is protected !!