IM-10-Part2

IM-10-Part2

பார்ட் -2

மீண்டும் பாஸ்கர் சுற்று வேலைகளை கவனிக்க, வெளியே செல்ல… எதிரே….ஹாங் ….அவன் தேவதை….தக்தக்…. தக்தக்..  இமைக்க மறந்து இவன் பார்க்க… அவளோ மூச்சுவிட மறந்து நின்றாள்… இங்கு இவனை எதிர்பாராததால் வந்த அதிர்ச்சி, பின் மகிழ்ச்சி… அதில் அவள் கண்கள் கண்ணிரால்  நிறைந்தது..

முகம் மலர்ந்து, முறுவலுடன், இமை சிமிட்டி நீரை உள்ளிழுத்து , மெதுவாய் மணமக்களை நோக்கி வாழ்த்து சொல்ல சென்றாள். அவள் நகரும்போது தான் பாஸ்கர் பூமிக்கே வந்தான்.. அதற்குள் யாரோ இவனை கூப்பிட… சரி, வேலையை முடித்து லதிகாவை பார்க்கலாம், என அவளுடன் பேசுவதை தள்ளி வைத்தான்.

“இங்க இருக்காரே யாரா இருக்கும்? “, என லதிகாவின்  எண்ணப்போக்கு இருக்க.. “அம்மாக்கு தெரிஞ்சவளா?, அப்படித்தான் இருக்கும் ஒரே பீல்டு இல்ல ? ” என்பது  பாஸ்கரின் யோசனை… 

அவன் எண்ணியது போலவே, தியா, சரண், லதிகா மூவரும் கலகலத்து பேசியதை கண்டு/கேட்டவன் , “ஹப்பா .. லைன் க்ளியர்”, குதூகலித்தான். கூடவே அவள், திருமண வேலைகளிலும் பங்கெடுக்க… “இப்பவே மாமியாருக்கு ஜால்றா- வா ?, நீ நடத்து…” சந்தடி சாக்கில் சைகையில் தெரிவித்தான்.. அவளும் குனிந்தவாறே … நாக்கை பல்லில் கடித்து, ஒற்றை விரலில் “பத்திரம் ” காண்பிக்க…

“லதிகா, ப்ளீஸ். இன்னொரு முறை இப்படி பண்ணாத..”, பேஸ் வாய்ஸில் பாஸ்கர் ஆதித்யா சொல்லி முடிக்கும் முன்,

“நான் என்ன பண்ணினேன்?”, நிமிர்ந்து பார்த்து கேட்டாள்

“உன் நாக்கை பல்லால கடிச்சிட்டு இருந்தயே, அத சொல்றேன். என்னை ரொம்ப டெம்ப்ட் பண்ணுது. பேசாம அக்கா பக்கத்துல நமக்கும் மேடை போட்டுட சொல்லட்டுமா?”, குழைவுடன் பேசியவனை, “ஹேய்…?? பாஸ்கரா… கல்பாவா ?.. லவ்-வாடா ?”.., ஹை பிட்சில் அக்கா அதிதி சந்தியாவின் சந்தோஷ குரல், காதில் இருக்கும் ப்ளூடூத் வழியாக கேட்க…, கூடவே, “ஹா ஹா ஹா “, பரிதியின் சிரிப்பொலியும்…  “அய்யய்யோ , இத மறந்துட்டமே “, தலையில் அடித்து  திருத்திருத்தான்…

“க்கா”,

“காதுல ப்ளூ டூத் மாட்டிட்டு, கான்ஃபரென்ஸ் கால் கட் பண்ணாம, காதல் வசனமா பேசற? , கடங்காரா, பரதேசி, முட்டாள்.”, தியா அவள் ஸ்டைலில் சிரிப்போடு எகிற,

“மச்சான், இந்த மேடையிலேயே இடம் இருக்கு. சொல்லி விட்டா, பத்து நிமிஷத்துல தாலி வரும், சொல்லிட்டுமா ?”, சத்தமான சிரிப்புடன் இளம்பரிதி அவன் பங்குக்கு வார..

அசடுவழிய, நிமிர்ந்து மண மேடையில் இருக்கும் அக்கா, மாமாவை பார்த்து “ஹி ஹி”, பல்லை காமித்து,……. விட்டால் போதும் என தப்பித்தான்… மேடையில் பரிதியும், தியாவும் ஒருவரை ஒருவர் பார்த்து, அழகாய் மனம் விட்டு சிரிக்க… அது ஒரு கேண்டிட் மொமெண்ட்.. போட்டோகிராஃபர், அதை மிஸ் செய்யாது கேமராவிற்குள் பொதிந்தார்.

மேடையின் அருகே இருந்த, லதிகாவை கூப்பிட்டு, “சொல்லவேயில்லை ?..” என்று ஓட்ட .. அப்போதுதான்  அவளுக்கு பாஸ்கர் தியாவின் தம்பி என தெரிந்தது. 

அருகில் அவள் தோழி [அந்த தூசு படிஞ்ச ஆஃபீஸ் இவளோடதுதான்.. ஹா ஹா ஹா ] வர, பேசுவதற்கு வசதியாய் தனியாயினர், இருவரும். ஏதேதோ பேசி முடித்து , கடைசியாய் அவள் கூறியது… “யாரோ இவங்க SIPCOT பாக்டரி மேல கேஸ் போட்ருக்காங்க, அதை காசு கொடுத்து சரி பண்ணலாம்-னு தான், உன்னை கேட்டாங்க, எனக்கு யார் கேஸ் போட்டதுன்னு தெரியாது , சரி கேக்கலாம்-ன்னா சிக்னல் இல்ல.. நீங்களே பேசிக்கோங்க -ன்னு  சொல்லி ஆபிஸ் அட்ரஸ் மெசேஜ்-ல தட்டி விட்டுட்டேன் .. கேஸ் யார் போட்டிருக்கா ?, ஏதாவது தெரியுமா?”, அவள் பேசப் பேச இறுகி இருந்தாள் கல்பலதிகா… இல்லை என தலையசைத்தாள்.. மெதுவாய் “கேஸ் போட்டது அவங்க அம்மா, நம்ம சீனியர் சாயா மேம் “… என்று கூற… “ஆ”-வென சாசராய் வாய் திறந்தாள் அத்தோழி.. 

தோழியின் கைபிடித்து, “விஷ் பண்ணிட்டயா?, போலாமா ?” என்று கேட்டு .. விடுவிடு நடையுடன் வெளியேற எத்தனிக்க, “ஹேய் .. என்னதிது.. கிளம்பிட்ட ?, என்னோட ஜூனியர்ஸ்  இருக்காங்க எல்லாமும் பாத்துப்பாங்க-ன்னு நான் சொல்லி வச்சா.. நீங்க ஹாய்.. பை .. சொல்லறீங்க..? இருந்து எல்லா வேலையும் முடிச்சுத்தான் போகணும். ஓகே?”, மகிழ்ச்சியோடு இருந்த சாயா-வின் மனநிலையை கெடுக்க மனமின்றி, “மேம், இவங்க ஹஸ்பெண்ட்-க்கு .. சின்னதா ஆக்சிடென்ட்”, அருகில் இருந்தவள் கையை அழுத்தி, அவளை அடக்கி .. ” அதான் உடனே போறோம், சாரி மேம்.”, கிளம்பி இருந்தாள்.. 

நகர்ந்தவுடன்.. “அடிப்பாவி.. பொய் சொல்ல என் ஆளுதான் கிடைச்சாராடி…?, இருடீ .. அவருக்கு கால் பண்ணி.. வர்றேன்-ன்னு இன்பார்ம் பண்ணிடறேன் .. “

கைப்பையை எடுத்து, மாட்டியவள் உள்ளம் கொதித்தது.. “பணம் குடுத்து சரி செய்வானாமா? – என்ன ஒரு திமிர்?”

தோழியும் வர, இருவருமாய் வரவேற்பினை கடக்கும்போது, “அருணா.. என் ஜூனியர்ஸ் அவங்க.. தாம்பூல பை கொடுத்து அனுப்பு”… அம்மா சாயாவின் குரல்.  வெளியேதான் இருந்தான், பாஸ்கர் ஆதித்யா…… முதலில் இவர்களை பார்த்தவன்  “என்ன அதற்குள் கிளம்புகிறாளா?”, என்று சின்னதாய் அதிர, ஜூனியர்ஸ் என்ற அம்மாவின் விளிப்பில் …. பாஸ்கர் ஆதித்யாவின் பாதத்தின் கீழ் பூமி நழுவியது…..

மொழிவோம்…

error: Content is protected !!