IM-11

IM-11

IM 11

இளம்பரிதி மிக நிறைவாய் உணர்ந்தான்.. எங்கேயும் எந்த வித சுணக்கங்களோ, முக தூக்கல்களோ இல்லாமல், எவ்விதமான ஆர்ப்பாட்டங்களும் இன்றி அமைதியாய் நடந்தது அதிதிசந்த்யா உடனான,  அவனது  திருமணம். 

திருமணத்திற்கென  வேறு வேறு ஊர்களில் இருந்து வந்தவர்கள், நட்புக்கள், தூரத்து உறவுகள் அனைவரும் அவரவர் ஊர்களுக்கு செல்ல, எஞ்சி இருந்தது நெருங்கிய சொந்தங்கள் மற்றும்  மனிதர்களே.  தம்பதி சமேதராய், திருமலையப்பன் தரிசனம் முடித்து அனைவரும் அங்கிருந்து புறப்படுவதென தீர்மானிக்க.. அனைத்தும் முடித்து புறப்பட…  அந்தி சாயத் துவங்கி இருந்தது. இவர்கள் செல்லவென சொகுசு பேருந்து ஒன்றை வாடகைக்கு அமர்த்தி இருந்தான் பாஸ்கர்ஆதித்யா. 

பேருந்து பயணம், அதிலும் அவன் சுற்றங்களே அதிகம் , இது தியாவிற்கு பிடித்தமா.. இல்லையா என்பது தெரியவேண்டி…பரிதி தியாவிடம், “கஷ்டமா இருந்தா சொல்லு, தனியா கார்-ல போலாம் “, என்று கேட்க..

“இல்ல.. கஷ்டம்லாம் இல்ல.. நான் எப்போவும் கார்லயும் பிளைட்-லையும்  தான் போவேன்… அப்பா-ல்லாம் என்ன பஸ்-ல போக அலோவ்  பண்ண மாட்டாங்க-ன்னு நா கேக்கவே மாட்டேன்.., இது ரொம்ப லைவ்லி யா இருக்கு. அண்ட் எனக்கு உங்க பாட்டி, அத்தை மாமா பேசற  உங்க ஊர் ஸ்லாங் ரொம்ப பிடிச்சிருக்கு மாமோய்.. “, என்று கயலாய் துள்ளிய விழிகளுடன் … மகிழ்ச்சியாய் கூற..  பரிதியின் நிலையோ பரிதாபமானது.. சுற்றம் மறந்து இறுக்கி அணைத்து முத்தம் கொடுக்க மனம் வெகுவாய் விழைய…. “மனுசன பேசியே கொல்றடி ..”, அனல் மூச்சுடன் அவளை கடந்து அருகே அமர்ந்தான்… பேச்சு என்னவோ பொதுவாய் பெரியவர்களிடம் இருந்தாலும், இவர்களுக்குள்ளும் தனியே ஒரு கதை ஓடியது..  

வீடு வந்து சேர பதினொன்றுக்கும் மேல் ஆக, ஆரத்தி கரைத்து மணமக்களை உள்ளே அழைத்து….வந்த விருந்தினர்களுக்கு அறைகளை ஒதுக்கி கொடுத்து.. என வேலை சரியாக இருந்தது, சரணுக்கு.. 

பரிதியின் பாட்டியோ, முற்றத்தில் படுத்து பழக்கமானவர் .. அறையில் ஏ.சி. ஓடினாலும், அப்படி அடைத்துப் போட்டது போல் படுக்க அவர் இஷ்டப்படவில்லை. எனவே ஹாலில் அழகாய் பாய் விரித்து படுக்க.. அவரது மகன் வயிற்று பேரன்-களையும் [ 5, 7 வயது]  அழைத்து படுக்க வைக்க முயல…. பரிதியும் வந்து அவர்களுடன் அமர்ந்து, “என்ன பாட்டி?, குட்டிங்க இன்னும் தூங்கலையா? “என்று கேட்டான்.

“அது எ…ங்க?, வரும்போது பூரா எதுக்காத்து, நல்லா அஞ்சு மணி நேரம் தூங்கிட்டாய்ங்க.. இப்போ வந்து படுங்கடா-ன்னா இந்த அலப்பர பண்ணிட்டு திரியுதுங்க… உன் மாமெம் புள்ளையும், அவெம் பொஞ்சாதியும், அதேன் இதுக அப்பாம்மா, விடுப்பு இல்ல, அதெல்லா வர முடியாது-ன்னு உரண்டைய கிளப்பினாங்க. என் பேரனையே பாத்துகிட்டே. அவன் புள்ளைங்களை விட்ருவோமா?… நானாச்சு பாத்துக்கிறே-ன்னு சொல்லி கூட்டியாந்துட்டேன்..”, என்றார் சிரித்தவாறே.. மேலும் ஏதேதோ பேசிக்கொண்டிருக்க… 

சிறிது நேரத்தில் பரிதியை தேடி, தியாவும் வந்து .. பாட்டியின் அருகில் அமர , பரிதி, தியா, அனைவரும் குழந்தைகளுக்கு சமமாய் பேசி விளையாடி… பின் களைத்து அனைவரும் அப்படி அப்படியே உறங்கினர்…. பாட்டியின் மடியருகே பரிதி, குறுக்கே ஒரு குழந்தை, பாட்டியின் கையை தலையணையாய் வைத்து தியா, அவள் வயிற்றின் மேல் சிறியவன் படுத்துறங்க..பார்க்கவே அவ்வளவு ரம்யமாய் இருந்தது… சத்தமே காணோமே? என்று வந்து பார்த்த சரணுக்கு .. அன்றுதான் வீடு நிறைந்தாற்போல் இருந்தது.  

அதையே .. நரேனை கூட்டி வந்து காட்ட, மகள் தரையில் பாயில் படுத்திருக்கிறாள், ஆனால், முகத்தில் எவ்வளவு பூரிப்பு?, என்று மனதுள் நினைத்து.. “வாவ்.. எனக்கும் இதேமாதிரி நட்ட நாடு ஹால்ல குழந்தைங்களோட படுக்கனும்போல ஆசையா இருக்கு”, என சின்னதாய் பெருமூச்சுடன் கூற….

“ஆமாங்க , எனக்கும் அப்படித்தான் தோணுது..”, என்றால் உணர்ச்சி மிகுதியில்.. ஏனோ , சின்ன சின்ன மகிழ்ச்சிகளை வேலை வேலை என்று தொலைத்து விட்டோமோ என்ற சிந்தனை…

சரண் முகத்தையே பார்த்த SNP , “சரி வா.. ரெடி பண்ணலாம்”, என்று கூற..

“எதை?” .. புரியாமல் கேட்டாள் ..

“நீதானடி சொன்ன.. ஹால்ல குழந்தைங்களோட படுக்கணும்-னு.. தியாவும், பாஸ்கரும் சரி வர மாட்டாங்க… அதுக்குதான் வா ரெ… டட்ட் …டி…… ..” , சரண் கையால் நரேன் வாயை பொத்தி…. தர தர வென அறைக்கு இழுத்து போய் …

நரேன் வாயிலிருந்து கையை எடுத்து , “கொஞ்சமாச்சும் வெக்கம் இருக்கா?, பொண்ணுக்கு கல்யாணம் முடிச்சு வீட்டுக்கு வந்திருக்கோம், பேசற பேச்சை பாரு?”, அவள் வருத்தம் காணாமல் போய்… இயல்பாகி இருந்தாள் ..

அதை புரிந்த நரேன், அனிச்சையாய் அவள் தோள் மேல் கை போட்டு.. அருகே இழுத்து .. “பொண்டாட்டிகிட்ட எவனாவது வெக்கப்படுவானாடி?, அதுவும் இவ்வளவு அழகா இருக்கிற உன்ன மாதிரி பொண்டாட்டி கிட்ட ?..”, என்றது, இன்னும் இவளை லஜ்ஜையாக்க…. செக்கச் சிவந்தாள்..  

“உங்களுக்கு இன்னிக்கு என்னமோ ஆச்சு …,”, இடைவிட்டவள், இடைவெளியும் விட்டாள் .. “நான், தியா   இவங்ககிட்ட  எப்படி ஈஸியா ஒட்டிகிட்டா  பாருங்க-ன்னு சொல்ல வந்தா… கண்டதையும் பேசிட்டு இருக்கீங்க.. “, “நாளன்னிக்கி முகூர்த்தத்தை இங்க வச்சுக்கலாமா இல்ல அடையார்-ல யா ?, தெரிஞ்சா அதுக்கேத்தா மாதிரி அரேன்ஜ் பண்ணனும்..”

“காலைல எழுந்து பாத்துக்கலாம் விடு.. , இப்போ கொஞ்ச நேரமாவது தூங்கி ரெஸ்ட் எடு”, என்றவாறே படுத்தான் SNP .. ஆழ்ந்த குரலில்.. “திரும்பி வர வாய்ப்பில்லாத நேத்திக்கு பத்தியும், வருமான்னு தெரியாத நாளைக்கு பத்தியும் எப்பவும் யோசிக்காத, சரண்”, என்று சொல்ல.. கணவன் தன நினைவை அறிந்த மகிழ்ச்சியில், அவன் தோள் வளைவில் தலை வைத்து உறங்க முயல.. “ஹேய்.. நீ நிஜமாவே ரெடியா?”…என சிரிக்க… “யோவ்.. வாய மூடிட்டு படுய்யா “, என்றால் இவளும் சிரிப்பில் இணைந்து..   

இருவருக்கும் அலைச்சல் அதிகமென்பதால்….., பெரிய கடமையை முடித்த நிம்மதியில் ..படுத்த நொடியில் தூங்கினர், இருவரும்…

ஆம்.. பரிதி, தியாவிற்கான, பிரத்யேக முஹூர்த்தம், இரு நாளைக்கு பிறகு என்று ஜோஸ்யர் சொன்னதை.. தியாவிற்கு சொல்லவே சரண் அவ்வளவு தயங்கினாள்… இதைப்போய் நான் எப்படி சொல்ல? என….எப்படியோ  ஒருவாறாய் சொல்லி முடிக்க… தியாவோ, அவ்வளவு தானே ? என்பதை போல் பார்த்து, “நான் பரிதிட்ட சொல்லிடறேன் மா” என்றாள்..  பெண் வளர்ந்து விட்டாள் என்றே தோன்றியது..  இப்போது புகுந்த வீட்டினரோடு பொருந்தி போகையில், இன்னும் அதிகமாய் தன் பெண்ணை பிடித்தது.. சரன்யுசாயா-விற்கு தெரியாது.. இவள் செய்ததைத்தான் தியா பின்பற்றி நடக்கிறாள் என்பது.. ஆம், அம்மாக்களின் சொல்லைவிட, நடவடிக்கைகளையே பெண்கள் அதிகம் பின்பற்றுகிறார்கள். அம்மாக்கள் அன்பால் நிறைந்திருந்தால், அவர்களின் பெண்கள் புகுந்த வீட்டில் கோலோச்சுவார்கள்.. 

++++++++++++++++++++++++++++++++

பரிதிக்கு சுபம் தள்ளிப் போனதெல்லாம் ஒரு விஷயமே இல்லை… கிடைக்கவே மாட்டாள் என நினைத்து…. அந்தஸ்தில் ஏரோபிளேன் வைத்தாலும் சரியாகாத உயரத்தில் இருப்பவளிடம், காதலை கூட சொல்ல தவிர்த்து … எட்டி நின்று பார்த்து ரசித்த, தியா, அருகில் கைக்கெட்டும் தூரத்தில், அவன் மனைவியாய்  இருக்கிறாள் என்ற உணர்வே அப்படி ஒரு மகிழ்ச்சியை கொடுத்தது.. 

பேசினான்.. பேசினான்… அவ்வளவு பேசினான்.. இதுவரை பேசாததை எல்லாம் சேர்த்து வைத்து.. சிறுவயதில் இவன் படித்தது, அம்மா தவறியது, அதில் .. அப்பா உள்ளுக்குள் இறுகி…  வேலையில் மட்டுமே கவனமானது, அன்று பள்ளி மைதானத்தில் நடந்தது, அதன் பின் அந்த கால்பந்தை பத்திர படுத்தியது, “ஊருக்கு போகும்போது, பரண்-ல இருக்கிற foot ball -ஐ உனக்கு காமிக்கிறேன்” என்று ஆழ்ந்து கூற.. அமைதியாய் பார்த்திருந்தாள் அதிதிசந்த்யா.. அவன் குரலின் ஆழம், இவள் மீதான காதலை சொல்லாமல் சொல்லியது..  

“ஆனாலும், அன்னிக்கு என் வண்டில நீங்க மோதலைன்னா.. வந்திருக்க மாட்டீங்க தானே?”, தியா, அவள் சந்தேகத்தை கேட்டாள்.

மௌனமாய் அவளை பார்த்தவன்.. “மே பி .. ம்ஹூம்… மே பி நாட்…, இதுக்கு உண்மையான பதில் ..  தெரியல-ங்கிறதுதான் .. நீ … உன் படிப்பு, உன் அந்தஸ்து பார்த்து தள்ளி நின்னாலும்.. ஒரு நம்பிக்கை நீ எனக்கானவள்-ன்னு..  ஆக்சிடென்ட் ஆன அன்னிக்கு….  என் மேல  ட்ரங்கர்ட் -ன்னு கேஸ் போட்ருக்காங்க-ன்னு அப்போதான் கேள்விப்பட்டேன், கண் மண் தெரியாத கோபம்… நேரா அந்த பொலிடீஷியன் வீட்டுக்கு போய் த்வம்சம் செய்யற வேகம்.. ஆனா, ஒட்றகுச்சி-ன்னு உன் குரல்.. என்னை ஃபிரீசாகிச்சு..  உன்னை பாத்தோடனே .. டோட்டல் சரண்டர் .. எனக்கு first aid பண்ணும்போது,… அன்னிக்கு குவார்ட்டர்ஸ்-ல விடும்போது.. நீ என்ன பாத்த பார்வை.. பேசினது.. எல்லாம் சேர்த்து தான்.. எனக்கு தைரியம் கொடுத்து.. “போய் பேசி பாப்போமே”-ன்னு நேரா உங்க வீட்டுக்கே வந்தேன்.. “

“உங்கப்பா ஓகே சொன்னது ஷாக்கிங் சர்ப்ரைஸ்.. “, ஆழ மூச்சினை இழுத்து விட்டு “இப்போ, இந்த நிமிஷத்தை கொடுத்த கடவுளுக்கு நன்றி”, குரல் கமற பேசியவன்  நிறைய உணர்ச்சிவசப் பட்டிருந்தான்.. அவளுமே அமைதியாய் பார்த்துக் கொண்டுதான் இருந்தாள்.. விட்டால் இன்னும் பேசுவான், என்பதை அறிந்து, அவனை மாற்ற எண்ணி… “நாமளே கடவுள் ஆகலாமா-ன்னு யோசிக்க வேண்டிய நேரத்துல .. நன்றி சொல்லிட்டு இருக்கு பாரு பக்கி ..” , அவனுக்கு கேட்க  வேண்டுமென்றே சத்தமாய் முணுமுணுத்தாள்..

பின்னே..? அவர்கள் பேசிக்கொண்டிருப்பது, இவர்களின் அடையார் வீட்டில்.. அதுவும் இவளது அறையில்.. அந்தரங்களை உலகுக்கு அறிவிப்பதில் பிரியப்படாத தியா…அனாவசிய அலங்கரிப்புகள் வேண்டாம் என்று கூறியதால்.. மிக தேவையான ஸம்ப்ரதாயங்களே….

அங்கு தான் பரிதியின் மேற்கூறிய பேச்சுக்கள் எல்லாம்…

தியாவின் முணுமுணுப்பில், சற்று திகைத்து.. பின் கடகட-வென சிரித்து…. “ஸாரி .. ரொம்ப பேசறேனோ?”….

“ம்ம்ம்ம்… ரொம்…ப்ப்….ப….”.. சிரிப்புடன்…தியா சொல்ல…

“அப்போ .. கடவுளாக முயற்சிக்கலாமா .. ?”, என கிசுகிசுக்க….தியா… திருமதி இளம்பரிதியானாள்.. 

இனி பேச நேரமேது?

+++++++++++++++++++++++++++++++++++++++++++

பாஸ்கர் ஆதித்யா, கொஞ்ச நஞ்சமல்ல ரொம்பவே அப்செட். அதுவும் லதிகா கேட்ட கேள்வி, அவள் கேட்ட விதம்.. இன்னுமதை அவனால் எளிதாய் எடுத்துக் கொள்ளவே முடியவில்லை..

தியா-பரிதி திருமணத்தன்று, லதிகா வேகமாய் கிளம்பியதையும்,, அம்மா சரண்யுசாயா – தான் அவளது சீனியர் என்பதும் தெரியவர, அதிர்ந்து நின்றது சில கணங்களே.. அதிலும் அவனிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் அவள் போகிறாள் என்றதும், கண்மண் தெரியாமல் கோபம் வந்தது, பாஸ்கர் ஆதித்யாவிற்கு… அவளின் சம்மதம் பெறாமலே, உரிமையுடன் சண்டையிட்டவன், இப்போது லதிகாவின் மனதை, அவள் முகமெனும் கண்ணாடி துல்லியமாய் காட்டிய பின்னும் விடுவானா என்ன? .

அவள் பரிசுகளையும், தாம்பூலத்தயும் வாங்கி வெளியே வர காத்திருந்தவன்… வந்ததும், அவளுடன் சேர்ந்து நடந்தவாறே …கைகளை கோர்ப்பதுபோல் இறுக்கி பிடித்து.. “பக்கத்துல ஒரு காஃபி கஃபே இருக்கு.. பேசணும்… போலாம்.., ரோட்-ல எந்த பிரச்சனையும் பண்ண மாட்டேன்-ன்னு நினைக்காதே.. கட்டி தூக்கிட்டு போயிடுவேன் “, என்று மிரட்ட…

அவன் வாய் மொழிக்கு பயந்து அல்லாமல்… கூடவே சென்றாள் லதிகா, அவளுக்கும் சில விஷயங்கள் அவனிடமிருந்து தேவைப்பட்டதால்.. இவள் கோபமாய் இருப்பது அவனுக்கு தெரியாதே?

அவள் ஏதும் சொல்லாமல் கூட வர, பாஸ்கருக்கு, ஓரளவு மனம் சமனப்பட்டது. எதிர் எதிரே அமர்ந்து, இரு கேப்பச்சினோ ஆர்டர் செய்து.. வழக்கு விபரங்கள் கேட்க எத்தனிக்க… அடக்கப்பட்ட கோபத்தினாலோ என்னவோ.. அவள் முகம் செந்தணலாய் இருந்ததை அப்போது தான் கவனித்தான்.. “ஹேய்.. என்ன ப்ராப்ளம்?, ஏன் இவ்ளோ டென்ஷன்?”

“அன்னிக்கு நீங்க பணம் குடுத்து கேஸ் செட்டில் பண்ண வந்தீங்களா?”.. லதிகாவின் குரல் கரகரத்தாலும்.. பதில் சொல்லியே ஆக வேண்டுமென்ற தீர்மானம் தெரிந்தது, அவள் பேச்சில்..

பெருமூச்சுடன்… “ஆமா…”, சற்று நிறுத்தியவன்.. “ஸீ  இட்ஸ் ஆல் இன் தி கேம்.. ப்ராக்டிகலா யோசி.. உனக்கே தெரியும். உன் பீல்டு -ல எத்தனை பேர், காசுக்கு, fame -க்கு ஆசைப்பட்டு இப்படி வெட்டியா கேஸ் போடறாங்கன்னு”..

அதற்குள் குளிர்பானம் வந்ததால், ட்ரே வைக்க ஏதுவாக.. அவன் டேபிளில் இருந்தவற்றை இவளருகில் தள்ளி வைத்தான்… லதிகாவிற்கு ஒரு க்ளாஸ்-ஐ கொடுத்து அவனும் ஒன்றை எடுத்து கொண்டான்..

“அப்போ ஏன் என்கிட்டே கேஷ் பத்தி பேசல?”… தடுமாறினாலும் தெளிவாக கேட்டவளிடம் என்ன சொல்லுவான்? உன்னை பார்த்ததும், மனம் தடுமாறினேன், ஆர்வமானேன் என்றா? சொன்னால், அது பாஸ்கர் ஆதித்யாவா ?

“ஏன் ?.. அதனால என்ன இப்போ?, உனக்கு என்ன பிடிச்சிருக்குதானே?”, திமிர்தான்.. நிச்சயமாய் இது திமிர்த்தனம்..

அப்போது, அவள் அருகினில் இருந்த அவனின் அலைபேசி வேறு விடாது அடிக்க.. கையில் குளிர்பானம் இருக்க… , “எல் போட்டு ஸ்பீக்கர் மோட்-ல பேசு..”, என்று கூறினான்.. ஒன்றும் பேசாது, அவன் சொன்னதை செய்தாள். எதிர்முனை , “சார் நான் குக்கிங் காண்ட்ராக்டர்.. லாஸ்ட் பந்திக்கு ஐஸ் கிரீம் குறையுது.. நிறைய தான் எடுத்து வந்தேன்.. ஆனாலும், ஆளுக்கு ரெண்டு மூணு-ன்னு போனதால .. கட்டல .. பக்கத்துல எங்கயாவது அரேன்ஞ் பண்ணிக்கிட்டா?”

“நோ.. ஹைஜீனிக்கான்னு தெரியாது… காண்ட் டேக் ரிஸ்க்[can’t take risk]… ப்ரூட்ஸ் இருந்தா சாலட் போட்டுடுங்க… மிச்சமிருக்கற ஐஸ் கிரீம்-ஐ டாப்பிங் போட்டு மேனேஜ் பண்ணுங்க…இதெல்லாம் எங்கிட்ட ஏன் கேக்கறீங்க? ஈவண்ட் மேனேஜர் என்ன ஆனார்?”

“சார் சார் அவர்தான் பயந்து போய் என்னை கேக்க சொன்னார்”

“ம்ம்ச்… சரி சொன்னதை செய்ங்க “, அவன் பேசியதும் கட் செய்தாள் ..

“ம்ம். சரி இப்போ சொல்லு.. கேஷ் பத்தி உங்கிட்ட பேசாததினால என்ன தப்பு?, என்ன உன் ப்ராப்ளம்?”, என்று கேட்ட அடுத்த நொடி வெடித்தாள் …

“நீ.. நீதான் என் பிரச்சனை… பாத்த உடனே. டீ -பார் பண்றேன் ன்னு மிரட்டி.. ரெண்டாவது நாள் .. பைலை தூக்கி வீசி… என்னை ஒரு மாரி இன்செக்யூர்ட்-ஆ பீல் பண்ண வைக்கிற நீ…. , இதோ இப்போ கூட, போன எடு-னு மிரட்டற …நானும் ஃபூல் மாதிரி அப்டியே பண்றேன்.., .”, லதிகா இதை சொல்லும்போது கண்களில் கரகரவென கண்ணீர் வழிந்தது… பாஸ்கர் திகைத்தான்.. என்ன இவள் இப்படி அழுகிறாள் ?

“கேஷ் கொடுக்கணும்னு தான வந்த….?, மத்தவங்களுக்கு-ன்னா கேஷ், நான் பொண்ணு.. அதுவும் கொஞ்சம் சிரிச்சு பேசினதால வேற மாதிரி மடக்க பாத்தியா? இப்போகூட பாரு?, பிடிச்சிதான இருக்கு-ன்னு எவ்வளவு திமிரா கேக்கற? என்ன பாத்தா அவ்வளவு சீப்பாவா தெரியுது?”, கேவலுடன் அவள் கதற..

ஹக்…. பாஸ்கருக்கு நிஜமாகவே.. உலகம் நின்றது… ஐஸாலான கத்தியால், அடிவயிற்றில் குத்தியதுபோல் ச்சிலீரென்று உயிர்வரை தாக்கியது.. அவள் பேச்சு…

என்ன சொல்லி விட்டாள் இந்தப் பெண்?, மடக்க பார்க்கிறேன் , சீப்பா தெரியுதா? என்ன வார்த்தைகள் இவை? அதுவும் மனைவியென்று முடிவே செய்தவளிடமிருந்து?

நானா? என்னையா இப்படி நினைத்தாள்? மனம் வெகுவாய் காயப்பட்டது… இப்படிப்பட்ட குற்றச் சாட்டுகள் பாஸ்கரின் வாழ்க்கையில் இதுவரை இல்லை.. இதயம் மரத்துப் போனது…

ஒன்றுமே தோன்றாமல்.. எழுந்தவன் .. இலக்கின்றி.. நடக்க ஆரம்பித்தான்..

லதிகாவோ, அவனை விட குழப்பமாய். இருந்தாள். இவள் குற்றச்சாட்டினை கேட்டு, சட்டென கசங்கிய அவனின் முக பாவங்களை வைத்து எதுவும் புரியாமல், விழித்து… அந்த முகம் என்னவோ செய்ய… அவனையே பார்த்திருக்க.. உலகமே அந்நியமான ஒரு பார்வையுடன் அவன் வெளியேறுவதை பார்த்திருந்தாள்..

பார்த்தே அமர்ந்திருந்தாள் அவன் மறையும்வரை… பேரர் வர, ஐநூறு ரூபாய் தாளினை வைத்தவள், தோழியிடமிருந்து அழைப்பு வர, வருவதாக கூறி பேசியை நிறுத்தி.. செல்ல நினைக்க.. அங்கே அவனின் அலைபேசி இருந்தது… ஒரு நொடி அதை வெறித்து.. இதை மட்டுமல்ல, இனி எதை தேடியும் இங்கு வர மாட்டான் என்பது தெரிந்து… அவனுடைய போனையும் எடுத்து கைப்பையில் வைத்தாள்..

பாஸ்கர் ஆதித்யா என்ற SNP – யின் மகனுக்கு, இதுவரை அவன் கேட்டதெல்லாம் கிடைத்தது, படிப்பு, கார், தொழில்.. அனைத்தும்.. ஆனால் அவன் விரும்பிய பெண்…?

அவனுக்கு தெரியாதது.. காரும், தொழிலும், படிப்பும்.. விருப்பு வெறுப்பற்றவை.. உணர்வில்லாதவை.. தீவிர உழைப்பும், அர்ப்பணிப்பும் மட்டுமே தேவைப்படுபவை..

ஆனால் லதிகா?.. இவன் கேஸை திரும்ப பெற பணம் பற்றி பேசி இருந்தாலாவது, இது உலகத்தில் நடப்பதுதானே என.. இலகுவாய் எடுத்திருப்பாளோ என்னமோ ?, அவனின் மன விருப்பத்தை கூறாது, நீ வேண்டும் என அவன் இலகுவாய் மிரட்டியது… இன்னமும் இவர்களின் உறவை சிக்கலாக்கியது.. “நான் அவ்வளவு ஈஸியா போய்ட்டேனா?, என்ன பாத்தா அலைஞ்சான் மாதிரி தெரியுதா?” , என்ற இந்த யோசனைகள்.. அவளை .. அவளுக்கே கீழிறக்கிக் காட்ட… அவனிடம் கொட்டி விட்டாள்…

பெண்ணின் மனம் மிக நுண்ணிய உணர்வுகளை கொண்டது என இவனிடம் யார் சொல்வார்?

மொழிவோம்…

error: Content is protected !!