IM-3

IM-3

அத்தியாயம் 3

சுந்தர் மதிவண்ணன் M .D. என்ற பெயர்ப்பலகையுடன் இருந்த அறைக்குள், இருமுறை தட்டி உள்ளே நுழைந்தாள், தியா. அங்கே அவளையொத்த மருத்துவர்கள் 4- 5 பேர் அமர்ந்திருந்தனர்..

“குட் நூன், டாக்டர்…”, முதன்மை மருத்துவரான, சுந்தர் மதிவண்ணன், நிமிர்ந்து அதிதி சந்த்யா – வின் முகமனை ஏற்றதாய் ஒரு தலையசைத்து… “வெல்கம்”, உரைத்து, “ப்ளீஸ்”, என்று ஒரு இருக்கையை காண்பித்தார்.

“ப்ரெண்ட்ஸ் “, அங்கிருந்த சின்ன மருத்துவ குழுவை நோக்கி ..எதிரில் இருந்த ஸ்க்ரீனை உயிர்ப்பித்து, ஒரு காணொளியை ஓடவிட்டார். அதிலிருந்த பெண்ணை காண்பித்து,

“ஒரு சேலஞ்சிங் & ரேர் கேஸ்.. இவங்க Mrs.நிர்மலா அப்பாராவ். ஹைதராபாத்லேர்ந்து நாளைக்கு இங்க வர்றாங்க. நாலு முறை இவங்களுக்கு அபார்ஷன்ஸ் ஆகி இருக்கு., நௌ கன்சீவ்ட் . இது தான் அவங்க கடைசி சான்ஸ். [ Fetus ஜேஷ்டஷன் ஏஜ் ] கருவின் வயது, 24 வீக்ஸ் இவங்களுக்கு அம்னியாடிக் ப்ளூயிட் [amniotic fluid – பனிக்குட நீர் ] நிக்கல. கிட்ட தட்ட 6 நாளா, ஹாஸ்பிடல் ஹாஸ்ப்பிடலா அலையறாங்க… நல்ல வேளையா, ப்ளூயிட் கொஞ்சம் கொஞ்சமாத்தான் லீக் ஆகுது.. கண்டிப்பா , 3 டேஸ்-ல ப்ளூயிட் இல்லாம போய்டும். டெலிவரி கன்பார்ம், நார்மல் ஆர் எ சி செக்ஷன் “..

“டாக்டர்…, 24 வீக்ஸ்-ங்கிறது ரொம்ப ஏர்லி, சி செக்க்ஷன் பண்ணினாலும்.. பேபி மூளை-ல ரத்தக் கசிவு வந்தா, காப்பாத்தறது கஷ்டம்.. ஆர்கன்ஸ் முழுமையா வளர்ந்திருக்கான்னு தெரியாம….”, சொன்ன தியாவை கையமர்த்தி நிறுத்தினார்..

“நீங்க நியோ-நேட்டல்-ல குறைபிரசவ குழந்தைகள் பார்த்திருக்கீங்கதானே ?”

“எஸ் டாக்டர் , 26 வீக்ஸ் கம்ப்ளீட் ஆகி இருந்தா, வேற எந்த காம்ப்ளிகேஷனும் இல்லாம இருந்தா, பாசிபிலிட்டிஸ் இருக்கு.. நம்ம ஹாஸ்பிடல்-லேயே ரெண்டு ப்ரீ-மெச்சூர் கேஸ் பாத்திருக்கோம் …”, சொன்னள் தியா.

“வெல் ..இதை நாம சேலஞ்சிங் -கா எடுக்கிறோம், மத்தத மேல இருக்கிறவன் கிட்ட விட்டுடலாம் , ப்ரெண்ட்ஸ் …. இந்த கேசை பொறுத்தவரை, கைனகாலஜிஸ்ட், ப்ரீ-நேட்டல், நியோ நேட்டல், பீடியாட்ரிஷியன், டயட்டிஷியன், அனெஸ்தடிஸ்ட் -ன்னு எல்லாரும் சேர்ந்து வொர்க் பண்ண போறோம்…. “

“நிர்மலா நாளைக்கு அட்மிட் ஆகப்போறாங்க, உங்க எல்லாருக்கும் அவங்க கேஸ் ஹிஸ்டரி மெயில் அண்ட் வாட்ஸ்சப் -ல அனுப்பி இருக்கேன்… .இட்ஸ் கோயிங் டு பி எ பார்ட் ஆஃப் ஹிஸ்டரி.” , இடை நிறுத்தியவர், “வேற ஏதாவது தேவைன்னா கால் மீ… பை…”, சென்றார்.

அந்த மருத்துவ குழு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டது.. தியா அருகில் இருந்த மகப்பேறு மருத்துவரான ப்ரியசகி-யை பார்த்து கேட்டாள்.

“ஃப்ளூயிட் லீக் நிக்க சான்ஸ் இருக்கா?”,

“டவுட் தான், முதல்ல பேஷண்ட் பாத்துட்டுதான் எதையும் தெளிவா சொல்லணும், நாளைக்கு பாக்கலாம், லெவன் ஓ கிளாக். “,

“ஓகே சகி”, என தியா கூற..

ப்ரியசகி, “ஏய்… சகி-ன்னா வைஃப் -ன்னு அர்த்தம் டி…”, என்று சிரிக்க…

“கைனியும், நியோ வும் அப்படிதாண்டி.. “, இவளும் சிரிப்பில் பங்கேற்றாள். வேலை நினைவு வந்தவளாய் மணி பார்த்து, “ஓகே ஸீ யூ டுமாரோ”, என்றவாறு அவளது பிரிவிற்கு சென்றாள். [ரெண்டு பெரும் திக் ப்ரெண்ட்ஸ் -ன்னு நான் சொல்லாமயே  உங்களுக்கு தெரிஞ்சிருக்குமே ?]

அன்றாட பணி முடித்து, சீஃப் டாக்டர் சுந்தர் அனுப்பிய தகவல்களை, அல்ட்ரா சவுண்ட் ரிப்போர்ட்கள், அப்பெண்மணி [நிர்மலா]-வின் பிரச்சனைகள் என அனைத்தையும் தரவிறக்கம் செய்துவிட்டு, ஒருமுறை படித்தாள் . ஓரளவிற்கு தெளிவு வந்தது… வீட்டிற்கு செல்ல முடிவு செய்து, கார் சாவியை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள்… வெளியே வந்தவள் சுற்றும் முற்றும் பார்த்தாள், சில மாதங்களாக, அவளை யாரோ பார்ப்பது போல ஒரு உணர்வு. ஆனால், சுற்றியுள்ளோர் அனைவரும் அவரவர் வேலையை கவனிப்பார்களே தவிர, இவளை பார்ப்பது போல இருக்காது.

இதுபோல, தினமும் தோன்றாது, இது வரை ஐந்தாறு முறை மட்டுமே அதை உணர்ந்துள்ளாள். சரியாக சொல்வதென்றால், இது, பெண்களுக்கேயான ப்ரத்யேக உள்ளுணர்வு. “ஷப்பா…”, இன்று அது போல் எதுவும் இல்லை. சிறிது நிம்மதியோடு, கிளம்பினாள்…

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

சூர்யா நாராயண பிரகாஷ் அலுவலகத்தில், புதிய தொழிற்சாலை வாங்குவதற்கான பணப் பரிவர்த்தனை, மற்றும் அது தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் ஆடிட்டர், எக்ஸிகியூடிவ் டைரக்டர், கம்பெனி செகரெட்டரி அனைவரின் மேற்பார்வை & ஒப்புதலுடன் மிக வேகமாய் நடந்தேறியது.

அனைத்தும் முடிந்தவுடன், அந்த தொழிற்சாலையை விற்றவர், SNP அருகில் வந்து கை குலுக்கி,

“டேக் கேர்.., இது என்னோட இருபது வருஷ உழைப்பு தம்பி… நல்லபடியா பாத்துக்கோங்க. இங்க இருக்கிற எம்ப்பிளாயீஸ், ரொம்ப விசுவாசமானவங்க. ரொம்ப வருஷமா கூட இருக்காங்க. “, கண் கலங்கும் அவரை பார்த்துக்கொண்டிருந்த SNP-க்கு தெரிந்தது, இவர் உணர்ச்சிவசப்பட்டுள்ளார் என்று. ஆதரவாய் அவர் கை பிடித்தான்..

“உடம்பு ஒத்துழைக்காத காரணத்தால தான், இதை கொடுக்கறேன்.”, சொன்னவர், தொண்டையை செருமி ..

“பாத்துக்கோங்க..”, மீண்டும் ஒருமுறை கூற,

SNP , அவருக்கு உத்திரவாதம் அளிக்கும் விதமாக “sure “, சொல்ல, அவர் விடை பெற்றார்..

“சார், ஃபார்மல் விசிட் போயிட்டு வந்துடலாமா?”, ED பரந்தாமன் கேட்க…

“வெயிட் ..பாஸ்கர் வர்றானா கேட்டு வர்றேன். பைவ் மினிட்ஸ்.”..

மகன் பாஸ்கருக்கு அலைபேசியில் அழைப்பு விடுத்து, அவன் எடுத்தவுடன்,

“பாஸ்கரா, ” என்க,

“எஸ் டாட் “

“SIPCOT -ல பேக்டரி வாங்கறதா சொல்லி இருந்தேன்-ல. இன்னைக்கு பைனல் பண்ணி முடிச்சாச்சு. அஃபிஷியல் விஸிட் போலாம்-னு இருக்கேன் … வர்றியா?”

“நோ. டாட் .. இப்போ ஒரு ஒர்க்-ல பிஸியா இருக்கேன்.. பின்னால பாக்கறேன், நீங்க போயிட்டு வந்துடுங்க “,

“ம்ம்.. ஓகே. நோ ப்ராப்ளம்”, மொழிந்து, தொடர்பை துண்டித்திருந்தார்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

பாஸ்கர் ஆதித்யா, காலையில் செய்த டிசைனை மாதிரி செய்து எடுத்து வர சொல்லி இருந்தான்.. அதனை, வடிவமைப்பை மெச்சுதலுடன் பார்த்துக்கொண்டிருந்தான்… ‘இது என் உருவாக்கம்’ என்ற ஒரு த்ருப்தி, மனதுள் வந்து நின்றது… இது.. நானும் ப்ரஹ்மா என்ற இந்த ஒரு உணர்விற்காகத்தான், அவன் இத்துறையை கையில் வைத்திருப்பது…

அவனது தந்தை SNP, “எல்லாத்துக்கும் ஆள போட்டு வேலை வாங்கினாத்தாண்டா திறமையான முதலாளி. அத விட்டு நீயே செய்தா, டைம் வேஸ்ட்… உன் வால்யூ உனக்கு தெரியலை-ன்னு அர்த்தம்..”, என்று வாதாட…

இவனோ “டாட் .. இது எனக்கு ஒரு சாடிஸ்பாக்ஷன் கொடுக்குது…, நான் அட்மின் பாக்காம இருக்கேனா? ஏதாவது ரிப்போர்ட் இருக்கா? எக்ஸ்ப்போர்ட் க்ராப் எப்போதாவது கீழே போச்சா?, மெயின் டிசைன் மட்டும்தானே என் ஸ்கோப்.. ஸ்பசிமன் [மாதிரி வடிவம் ], வந்தா QC போயிட்டு, டையிங், தென் மனுபாக்ச்சரிங் யூனிட்.. இது பீஸ் ஆஃப் கேக்.., டாட். “, என்று முற்றுப்புள்ளி வைத்திருந்தான்..

இவனின் ஒப்புதல் வார்த்தைக்காக நின்று கொண்டிருந்த பொது மேலாளரிடம்,

“இதை குவாலிட்டி கண்ட்ரோல்-க்கு அனுப்பிடுங்க… அஸ் யூசுவல், ப்ராசஸ் பண்ணிடுங்க.. இந்த லாட்… வீக்கெண்ட் -ல முடியனும்”, என்றான்..

“சார், பேட்ச் அதிகம் வரும், டைம் எடுக்கும்…”, என்று இழுத்த GM -மிடம், “இப்போ மூணு ஷிஃப்ட் போகுதில்ல, இதை நாலா மாத்துங்க… ரெகுலரா வர்ற காண்ட்ராக்ட் லேபர்ஸ் வச்சு வேலைய முடிங்க., எல்லாம் ஆட்டோமேட்டட் தானே… நெக்ஸ்ட் மண்டே டெஸ்பாட்ச்-ன்னு சொல்லிட்டேன்… சோ கெட் தி ஒர்க் டன்..”, பாஸ்கர் ஆதித்யா இந்த த்வனி-யில் பேசினால், கண்டிப்பாய் வேலை முடிய வேண்டும் என்று கொள்ளவேண்டும்… புரிந்தவராய் GM ஒரு “எஸ் சார்”, சொல்லி சென்றார்..

மனதுக்குள் சன்னமாய் விசிலடித்தவாறே, அவனது வோல்ஸ்வேகனை ( VW ) எடுத்தான்… இவன் படிக்கும்போது, அப்பா SNP வாங்கி தந்த கார் ..இவனது செண்டிமெண்ட் வாகனம்.. சொல்லப்போனால் அவன் அப்பாவிற்கே FERRARI –யை, போன வருடம் பரிசளித்திருந்தான்… ஆனால், இவன் வாகனம் மட்டும் இன்றுவரை மாற்றியதில்லை.. இனி மாற்றும் எண்ணமும் வருமோ தெரியாது..

ப்ளூ டூத்-தை உயிர்ப்பித்து, ஹான்ட்ஸ்-பிரீ மோட்-க்கு தாவினான்.. மணி ஐந்தேமுக்கால்…, ஸ்வீட்..டீ காலிங் .. என்ற டிஸ்ப்பிளே, பார்த்து.. “ஸ்ஸ்ஸ்ஸ்…, செத்தாண்டா சேகர் ” , மனதுள் உதறல் எடுத்தாலும், வாய் தானாய் “எஸ் மாம்… சொல்லு ஸ்வீட்டி “, என வராத புத்துணர்ச்சியோடு சொன்னது தான் தாமதம்.. அங்கே சரண்யுசாயா, பொரிந்தாள்.. “ஒரு வேலை சொன்னா செய்ய மாட்டியாடா? சும்மா மறந்தா மாதிரி ட்ராமா பண்ணாத.. நீ கிளப்பிட்ட-ன்னு தெரியும்.. அங்க கல்பா வெயிட்டிங்… மகனே, நீ மட்டும் அந்த பைலை எடுத்துட்டு வரல. “, என்று பல்லைக் கடித்து நொட்டென்ற சத்தத்துடன் தொலைபேசியை வைத்திருந்தாள் இவன் மாதாஜி சாயா…

இன்று வேலை சீக்கிரம் முடிந்திருந்தால், ஐநாக்ஸ் சென்று பக்ஷிராஜனையும், மைக்ரோ/ நேனோ பாட்-டையும் பார்க்க திட்டமிட்டு இருந்தான்.. ஆனால், ஸ்வீட்டி சாயா..மாயா-வாகி [அட பேய் -ங்கிறத பேய்பட பேரை வச்சு சிம்பாலிக்கா…செப்பறேன்..] இருந்ததால்.., வண்டியை அன்னையின் அலுவலகம் இருந்த திசையில் திருப்பினான்….

ஐந்து நிமிடத்தில் மீண்டும் அலைபேசி அதிர, “பாஸ்கரா… அர்ஜெண்ட், SIPCOT பேக்டரி -க்கு வா “, கட்டளையாய் வந்தது SNP யின் குரல்.. .

“எஸ் டாட் “, அந்த குரலுக்கு, இந்த பதில் மட்டுமே செல்லுபடியாகும்… தந்தையின் பேச்சில் அடக்கப்பட்ட டென்சன், கவலை, தெரிந்தது. .. என்ன பிரச்சனையா இருக்கும்?…

வண்டியை சிப்காட்-டை நோக்கி திருப்பியவாறே, ED பரந்தாமனுக்கு அழைத்தான்.

“அங்கிள்.. என்ன ப்ராப்ளம்?, அப்பா ஏன் டென்ஷனா இருக்கார்?”,

“நீங்க நேர்ல வாங்க தம்பி சொல்றேன் “

“ல்ல , பரவால்ல.. சொல்லுங்க… “

“இங்க ப்ரோடக்க்ஷன் யூனிட்-ல ஒரு வொர்க்கரோட டெட் பாடி கிடக்கு…”

“வாட்.?? “ ,அதிர்ந்தான். அதை அரை நொடியில், சமாளித்து., “ மை காட்..வர்றேன்” , கூறியவனின் கைகளில் கார் பறந்தது

+++++++++++++++++++++++++++++++++++++++++++

காரில், வீட்டிற்கு சென்று கொண்டிருந்த தியா, சிக்னல் சிகப்பை காண்பிக்க நின்றாள்… நிற்கும் நேரத்தில், ரேடியோ சேனல்கள் மாற்றி, காட்டு கூச்சல் இல்லாத ஸ்டேஷனை தேடினாள்.. அதிலேயே இரண்டு நிமிடமும் கரைய , பச்சை ஒளிர்ந்தது… இவளும் ரேடியோவுடன் போராடுவதை நிறுத்தி, எஞ்சினை ஆன் செய்து வேகமெடுக்க….திடீரென ஒருவன் ரோடை கிராஸ் செய்ய …

“க்க்….ர்ர்ரீ.ரீ.ச்ச்”….

கண் இமைக்கும் நேரத்தில் பிரேக்கில் கால் வைத்திருந்தாள்.. பிரேக்கில் இருந்த கால் இன்னமும் நடுங்கியது தியாவிற்கு.. காரணம் இவள் காரின் முன்.. பாதையை கடக்க வந்தவன் விழுந்து விட, அவனை எழுப்ப இன்னொருவன் முயன்று கொண்டிருந்தான்…

டென்சன், அதனால் விளைந்த கோபம் தலைக்கேற, வண்டியை நிறுத்தி, இறங்கினாள். “வாட் தி ஹெல் ……”, உச்சஸ்தாதியில் ஆரம்பித்தவள்….. விழுந்து எழுந்து கொண்டிருந்த மனிதனை பார்த்து ஸ்தம்பித்தாள்… வாய் தானாக.. “ஒட்றகுச்சி “, என்ற வார்த்தையை துப்பியது. அவன் சட்டென திரும்பி இவளைப் பார்த்தான்… கோவைப்பழமென இருந்த அவ்விருவிழிகள் தனலை கொட்டியது….

மொழிவோம்.

error: Content is protected !!