IM-7

IM-7

IM 07

SNP-யின் தொழிற்சாலையில் தயாரான, அந்த வெண்டிலேட்டர் குழாயை பொருத்துவதற்கு, தியா தயாரான அந்நொடியில், டாக்டர் சுந்தர் அவளைத்தடுத்து.., வேறு ஒரு  ட்யூப்-பினை கொடுத்து,  “தியா…இந்த ட்யூப்.. அதைவிட சின்னது, இந்த மாதிரி பிறந்த குழந்தைங்க வெண்ட்-க்காகவே இம்போர்ட் பண்ணினது, தவிர சாப்ஃட்-ம் கூட.  பேபி உள்ளுறுப்பு ஏதும் சேதம் ஆகாமயும் இருக்கும். இதை இன்ஸெர்ட் பண்ணுங்க…”, என்றார்..

உடனே மறுப்பேதும் கூறாமல், அந்த புதிய குழாயினை கொண்டு வெண்டிலேட்டர் உதவியுடன் அக்குழந்தையின் சுவாசத்தினை சரி செய்யும் வேலையை ஆரம்பித்தாள், தியா எனும் அதிதிசந்த்யா…

+++++++++++++++++++++++++++++++++

வீட்டில் சரண்யுசாயா, கல்பலதிகாவிடம் போனில் பிஸி. “கல்பா, கண்டிப்பா இந்த பொண்ணு கவுத்துடுவா, கேஸ் சூட்கேஸ் தான். “

“என்னாச்சு மேம்?”, கலவரமாய் கல்பா.. சரண்யு கேட்டிருந்த பைலை, அவை நிறைய பக்கங்கள் என்றாலும், பொறுமையாய் அனைத்தையும்,  காலையில் மொத்தமாய் ஸ்கேன் செய்து அனுப்பி இருந்தாள். அவற்றை பார்வையிட்ட பின், சாயா- விடமிருந்து மேற்கூறிய  வார்த்தைகள், அவளின் ஜூனியருக்கு..

“அந்த பொண்ணோட புருஷன் டெபுடேஷன்-ல வேற ஊருக்கு போயிருக்கான்,  வேற எதோ தொடர்பு இருக்கு-ன்னு இவளுக்கு டவுட், இவ ஹைலி பொஸசிவ்.. ரெண்டு பேரும் ஏறுக்கு மாறா பேசி, பிரச்சனையாகி, அவர் கைநீட்டிட்டார்… கூட இருந்த பெரிசுங்க, இதை பெரிய விஷயமாக்கி, கோர்ட்ல கேஸ் போட்டுருக்காங்க.”

“கிட்ட தட்ட நாலு மாசம் ரெண்டு பக்கமும் கப் சிப். அதுக்கப்பறம் பாரு, இவ வீட்டுக்காரர் பெங்களூர் லேர்ந்து வாரம் ஒருமுறை கால் பண்ணி இருக்கார் . முதல்ல மிஸ்ட் கால்ஸ்-ல இருந்தவர் , மூணாவது வாரம், ரிஸீவ்ட் காலு க்கு மாறியாச்சு…. அதே மாதிரி, ரெண்டு பேரும் போன்-ல பேசிக்கறது  5 செகண்ட் லேர்ந்து, 15 நிமிஷமா முன்னேறி இருக்கு.”

“நாளைக்கு நேர்ல பார்த்தா, இந்த பொண்ணே கேஸ் வாபஸ் வாங்க சொல்லிடுவா… இந்த அம்மணி பிளாட்-டோ இல்லையோ, புருஷன், வீட்டம்மா-வை பார்த்தா கால்-ல விழா ரெடி-யா இருக்கார் . ஒரு வாரமா, டெய்லி அவர்கிட்ட இருந்து போன், நம்ம கட்சிக்காரிக்கு, அதுவும் ராத்திரி-ல . “, சொல்லி சிரித்த சரண்யு, தொடர்ந்தாள்…

“முதல் தடவ கோர்ட் வர்றாங்க தான?, ரெண்டு போரையும் சுத்தல் -ல விடு. தானாவே பேசி சரி ஆகிடுவாங்க. இல்லேன்னாலும், சும்மா ரெண்டு அட்வைஸ் பண்ணி மிரட்டி விட்டுடு.. ஓகே ?”, என்று முடிக்க.

“மேம், இது எப்படி உங்களுக்கு தெரிஞ்சது?”

“போன் பில்ஸ் வேணும்னு கேட்டது, எதுக்கு? கால் டீடைல்ஸ்  கண்டுபிடிக்கத்தான் “

“மேம் நீங்க எங்க…யோ…. போ…ய்ட்டிங்க “, என்று ஜனகராஜை பார்த்து, ஒரு கான்ஸ்டபிள் மெய் மறந்து சொல்லும் அதே காமெடி ஸ்லாங்-கில் அவள் சொல்ல.. இருவரும் கலகல….

அம்மா  ஸ்வீட்-டீ  யோடு பேசிக்கொண்டிருப்பது.. முதல் பார்வையில் இவனது மனதை கொள்ளையடித்த ஒல்லி பெல்லி என்று தெரியாமல், ஹாலில் அமர்ந்து பாஸ்கர் ஆதித்யா டீ.வி. பார்த்துக் கொண்டிருப்பது போல்… கற்பனையில் கல்பலதிகா-வுடன் டூயட் பாடி கொண்டிருந்தான்…..

+++++++++++++++++++++++++++++++++

இளம்பரிதி அன்று  நிகழ்ந்த சுகமான நினைவுகளில் மூழ்கி இருந்தான். விடிந்திருந்தது…. அவனும் விழித்தே இருந்தான் .. ஆனால் எழ மனமின்றி…. காலை கதிரவன் ஜன்னலின் வழி …. பரிதியின் முகத்தில் பட்டும் … எதுவும் செய்யத் தோன்றாதவனாய் , தியா, இவனிடம்  வீட்டிற்கு வந்து பேசியவைகள் மட்டுமே.. மனதுள் மத்தாப்பாய்..

நேற்று முன் தின இரவு, தியா, இளம்பரிதி இருவரும் தோளோடு தோள் அனைத்திருக்க, எத்தனை மெதுவாய் நடந்தாலும், வீடு வந்துதானே தீரும்? தியா “கிளம்பட்டா ?”, என்று கேட்க, பரிதி, அவளிடமிருந்து கைகளை விலக்கி, பதிலொன்றும் கூறாமல், மெதுவாய் கதவு நோக்கி நடக்க, தியாவும் “வாய தொறக்கிறானா பாரு?”, மனதுள் வைதவாறே பின் தொடர்ந்து, “நீங்க உள்ள போறீங்களா , இல்ல விழுந்து வைக்கறீங்களா ன்னு பாக்கறேன்.. வேற ஒன்னும் இல்ல..”, என்று வெடித்தாள்.

மறுமொழி சொல்லாமல், பேண்ட் பாக்கெட்டில் இருந்து சாவியை எடுத்து அவளிடம் கொடுத்தான். வாங்கியவள், கதவை திறந்து வைத்து ஒதுங்கி நின்றாள். “உள்ள வா “-என்று பரிதிக்கு கூப்பிட ஒருவித தயக்கம் என்றால்,

தியாவிற்கோ “பேச்சிலர் ரூம்-க்கு நாம போறதா ?”. என்ற எண்ணம்.

ஆனாலும், சும்மாவே விட்டு போக அவள் என்ன சாதாரண பெண்ணா? சட்டென, அவனருகே வந்து பரிதியின் அலைபேசியை வாங்கி, அவளின் நம்பருக்கு கால் செய்து , “இது என் நம்பர்..எதுன்னாலும் நேரா பேசணும், இந்த ஒளிஞ்சு நின்னு பாக்கறது, பேஷண்ட் மாதிரி ஓ.பி.-ல [அவுட் பேஷண்ட்], இருந்து பாக்கறது, அதெல்லாம் கூடாது.. ரெண்டு வாரம் டைம் தர்றேன். அதுக்குள்ள, எங்க எப்போ கல்யாணம் வச்சுக்கலாம்-னு டிசைட் பண்ணி சொல்லறீங்க…  காட் இட் ?”, மிரட்டினாள் …

“ கல்யாணமா?”,  இவனுக்கு வாய் உலர்ந்து போனது, வேறெதுவும் செய்யத் தோன்றாமல், சரி என்பதாய் தலை அசைத்தான். இரண்டு ரொட்டியை வயிற்றில் திணித்து, மாத்திரைகளை போட்டு கொண்டு படுத்தவனுக்கு, இவனின் கனவு தேவதை, தியாவை சந்தித்த நாள், நினைவு வந்தது.

சில வருடங்களுக்கு முன் :

பள்ளி விளையாட்டு மைதானம்:

மிக மும்மரமாய் இவன் கால் பந்தினை எத்தி, பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தான். பரிதியின் தந்தையின் உழைப்பு, இவன் படிப்புக்கு மட்டுமே போதுமானதாய் இருக்க, சேமிப்பு என்று எதுவுமில்லாத ஒரு நடுத்தரமான வாழ்க்கை. பள்ளியே…, இவன் கண்டிப்பாய் மாநில அளவில் ரேங்க் எடுப்பான் என்று கூறுமளவிற்கு, படிப்பாளி. . நல்ல கல்லூரிகளில் அட்மிஷன் கிடைக்க, & போலீஸ் தேர்விலும் பயனுள்ளதாய் இருக்குமே, என்று விளையாட்டுகளிலும் அவன் கவனம் செலுத்தி வந்தான். காரணம் அவன் தற்போது +2 (H.S.C. )

காலுக்கு இடையில் வந்த பந்தினை லாவகமாய் ஒரு பாதத்தில் அடித்து, சற்றே அதை அவன் தலை-வரை எகிற வைத்து, முழு வீச்சோடு தலையால் முட்டி கோல் போஸ்டுக்கு சிதறடிக்க… , போஸ்ட் -ஐ நெருங்கிய கால்பந்து, எங்கிருந்தோ ஓடி வந்த மாணவனின்,முதுகில் பட்டு .. திசை சற்றே மாறினாலும், பந்தின் வேகம் அதிகம் என்பதால், நூலிழையில் கோல் ஆகியிருந்தது.

சுற்றியிருந்த நண்பர்கள் “ஹேய்”, என்று கூக்குரலோடு, பயிற்சியை தொடர, அந்த மாணவன் பந்தின் தாக்கத்தில் கீழே விழுந்தவன் இன்னமும் அப்படியே கிடந்தான்.. அதை பார்த்த இளம்பரிதி, விறுவிறுவென, கையில் ஒரு தண்ணீர் பாட்டிலுடன் சென்றவன், அவனருகில் கால் மடக்கி தரையில் அமர்ந்து, அப்படியே நீரை அவன் தலையில் கவிழ்த்தான். பந்தினால் அடிபட்ட, முதுகு, கழுத்தில் எங்காவது, பிடித்து கொண்டிருக்கிறதா என சோதிக்க ஆரம்பிக்க,

தரையோடு தரையாக குப்புற படுத்து கிடந்த மாணவன், மயக்கம் தெளிந்து முனகி மெல்ல திரும்பினான். திரும்பினா, அது பொண்ணு..!!!! , இப்போது இளா-வுக்கு மயக்கம் வரும் போல் இருந்தது, அவள், டி ஷர்ட், ட்ராக் பேண்ட், பாய் கட், ரெபோக் ஷூ போட்டு இருந்ததால், சத்தியமாய் அவனுக்கு வித்தியாசம் தெரியவில்லை. திரும்பியவள், அவன் மடியில் இருந்தாள்… முகம், முழுதும் இவன் ஊற்றிய தண்ணீர்.

கண் விழித்தவள், எவனோ ஒருவன் மடியில் அவள் இருப்பதை உணர்ந்து எழ முயல, சட்டையும் தலையும் ஈரமாய் இருப்பது தெரிய , இவன் அருகில் பாட்டிலை பார்த்தவள், அதீத டென்சனுடன், ரப்பர் பந்தாய் எழுந்தாள். பரிதியுமே நின்றிருந்தான். “பொறுக்கி “,என்று கூறி அவன் முகத்தை தேட,….. எ..ங்..க? இவள் உயரத்திற்கு, அவன் டீ –ஷர்ட் மார்பும், சட்டையின் இடதுபுறம் போட்டிருந்த லோகோவும் தான் தெரிஞ்சது. அண்ணாந்து பாத்து திட்டினாள், “ஒட்றகுச்சி”.

பரிதிக்கு…. மூக்கு நுனியில் கோபம் வர, வேக நடையுடன் , மைதானத்தில் இருந்து வெளியேறினான். அவனை இதுவரை யாரும் இப்படி திட்டியதில்லை.. மிகப் பொறுப்பானவன். முதன் முதலாய் வாங்கிய அவளின் அந்த திட்டு, கல்வெட்டாய் நின்று மனதை அறுத்தது.அதன் பிறகு அவன், கால் பந்தை தொடவில்லை.

இதை கேள்விப்பட்ட தியா, ஒரு நாள் எதேச்சையாய் பரிதியை பார்க்க, “ஏய் ஒட்றகுச்சி, நீ ஏன் இன்டெர் ஸ்கூல் ஃபுட் பால் மேட்சுக்கு போகல?”, ஒன்பதாம் வகுப்பு மாணவி, +2 மாணவனிடம் இப்படி கேட்டாள். அவளுக்கோ, அவள் மேல் தண்ணீர் ஊற்றியதற்கு இன்னும் ஒரு ஸாரி கூட அவன் தன்னிடம் கேட்கவில்லை என்று கோபம். அதற்கு பதில் தராமல் கடந்தான். “போடா டுபுக்கு.. ஈகோயிஸ்ட் “, அவன் காது படவே திட்டினாள்.

இளமாறனோ மனதுக்குள், ” ஃபுட் பாலை பார்த்தாலே, உன்னோட ஈரமான முகமும், குண்டு குண்டு கண்ணும், நீ என் மடில கிடந்ததும், அழகா கோவமா திட்டினதும் [??] தான் மைண்ட்-க்கு வருது. எனக்கு இப்போ டைவர்ஷன் கூடாது.. நான் என் வழில போறேன். நீ உன் பாதைல போ”, புலம்பினான். முடிந்தவரை அவள் பார்வையில் படாது தவிர்த்தான்.

இதோ, இத்தனை வருடங்களில், எத்தனை பெண்களை கடந்திருப்பான்?, நொடி கூட யாரைப்பார்த்தும் சலனப்படாது… அவன் ஆசைப்பட்ட வேலை கிடைக்கும் வரை, அடங்கியிருந்த மனம், போஸ்டிங்-க்காக சென்னைக்கு வந்த மறு நாள், தியாவை பற்றிய விபரம் சேகரிக்க சொல்லியது. வாரம் ஒரு முறையேனும் அவளுக்கே தெரியாமல், பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான், அவன் கனவு தேவதையை.

இப்போதும் காலையில் விழித்து விட்டான், எழ மனமில்லாமல், கண் மூடி, காதலியை கண்டான். ஈர முகத்தில், நனைந்த இமை முடியுடன், அவன் மடியிலிருந்த தேவதை கண்விழித்து “பொறுக்கி”, என்றாள், இவனோ விழித்ததும் விழித்திராத நிலையில் சிரித்தான்…

இது சொல்லாத காதல்… இதயம் திருடியவளிடம் இதழவிழ்ப்பானா?

பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது – எந்தன் தோட்டத்தில்

விண்மீன் எல்லாம் நிலவாய் போனது –  எந்தன் வானத்தில்

முப்பது நாளும் முகூர்த்தம் ஆனது – எந்தன் மாதத்தில்

முள்ளில் கூட தேன்துளி கசிந்தது – எந்தன் ராகத்தில்

இது எப்படி எப்படி நியாயம்?  எல்லாம் காதல் செய்த மாயம்

நிலவை பிடித்து எறியவும் முடியும், நீல கடலை குடிக்கவும் முடியும்

காற்றின் திசையை மாற்றவும் முடியும் கம்பனை முழுக்க சொல்லவும் முடியும்

ஐ லவ் யூ லவ் யூசொல்லத்தானே ஐயோ என்னால் முடியவில்லை

சுற்றும் உலகின் விட்டம் தெரியும் சூரியன் பூமி தூரமும் தெரியும்

கங்கை நதியின் நீளமும் தெரியும் வங்க கடலின் ஆழமும் தெரியும்

காதல் என்பது சரியா தவறா இதுதான் எனக்கு தெரியவில்லை

ஒற்றை பார்வை உயிரை குடித்தது  கற்றை குழல்(?) கைது செய்தது

மூடும் ஆடை முத்தமிட்டது  ரத்தம் எல்லாம் சுட்டு விட்டது

ஐ லவ் யூ லவ் யூ சொல்லத்தானே ஐயோ என்னால் முடியவில்லை

மீண்டும் வசந்தம் எழுந்துவிட்டது மீண்டும் சோலை கொழுந்துவிட்டது

இதயம் இதயம் மலா்ந்து விட்டது இசையின் கதவு திறந்துவிட்டது

காதல் என்பது சரியா தவறா இதுதான் எனக்கு தெரியவில்லை..

மொழிவோம்…..

error: Content is protected !!