IM – 09

“பரிதி “, தீனமாய் அழைத்தது தியா..

“ம்ம்ம்”, என்றான் .. ஆழமாய் அவளை சுவாசித்து ..

“நாம உள்ள வந்து கால் மணி நேரம் ஆச்சு “

“சரி”

“வெளிய அப்பா அம்மா வெயிட் பண்றாங்க… “,

“ம்ப்ச் … ஒரு பைவ் மினிட்ஸ் அப்படியே இருடா…, உங்கப்பாகிட்ட பேசின டென்சன் இன்னும் தீரலை ..”, அவள் கழுத்து வளைவில் இருந்து சொன்னவன் இன்னமும் அவளை இறுக்கினான்….

“ஒற்றகுச்சி, கால் வலிக்குது “

“ஏன்டா தியாக்குட்டி ?”, இப்போது கன்னத்தின் குழைவை ரசித்தபடி..

“இங்க வந்ததிலேர்ந்து குதிங்கால் -ல தான் நிக்கறேன்”,தெளிவாய் தியா சொன்னாலும் குரலில் வெட்கம் இழையோடியது….

பின்னே, அறையில் நுழைந்த மறு நொடி அவன் அதிரடி ஆளுகையில் .. அவள் சிந்திக்க மறக்க, இடையில் பதிந்த அவன் கைகளில் துவளத்துவங்கியவள் , பிடிமானத்திற்கு [ ??? ] அவன் தோள்களில் கைகளை மாலையாக்கி பிடித்திருந்தாள், கால்களை எம்பியவாறு..

சட்டென பிரிந்து, சிரித்தான்.. ” இனிமே, குனிஞ்சுக்க பழகிக்கறேன் ” .., என்று கூறி இன்னமும் சிரிக்க….

சந்த்யாகால சூரிய சிவப்பு தியாவின் முகத்தில்.. ஆனாலும் விடாமல், ” தேவையில்லை.. நாங்க ஹீல்ஸ் போட்டுப்போம் “, என்று கூற… இப்போது இருவரும் வாய் விட்டு சிரித்தனர்.

[தியா-க்கு கல்யாண சீர்-ல ஹை-ஹீல்ஸ் 4 செட் பார்சே….ல் ]

“பரிதி .. வெளில போலாமா?, அம்மா, அப்பா அன் -ஈஸியா ஃபீல் பண்ணுவாங்க. “

“அவ்ளோ பயமா?”

“இல்ல…. , சொல்ல தெரில”,சற்று நிறுத்தியவள் , “ஆனா அவங்க சங்கடப் பட கூடாது..”

ஆழ மூச்சு விட்டு… , “மாட்டாங்க.. வா, போலாம்.”, அவள் கை கோர்த்தவாறே இருவரும் வெளி வந்து, வீட்டின் பின்புற தோட்டத்திற்கு சென்றனர்…

“நம்பவே முடில .. உங்கப்பா இவ்வளவு வேகமா ஓகே சொல்லுவார்-னு நான் நினைக்கவே இல்ல, பொதுவா எல்லா பணக்கார அப்பா மாதிரி , உனக்கும் என் பொண்ணுக்கும் சரிவராது-ன்னு சொல்லி, வெயிட்டா கேஷ் வெட்டுவார்-னு பாத்தா … டக்-குன்னு மாப்பிள்ளை ன்னுட்டார்..”

“நாங்கூடத்தான், நீ இங்க வருவே-ன்னு நினைக்கல… எனக்கு இன்போர்ம் பன்னிட்டு தான வந்திருக்கணும்?”

“தியா குட்டி..,  அன்னிக்கு நைட் எங்கிட்ட என்ன கேட்ட தெரியுமா? எப்போ, எங்க கல்யாணம் வச்சிக்கலாம்-ன்னு முடிவு பண்ணி சொல்ல சொன்ன…, ஏன் சைடு பெரியவங்க இல்ல.. அதான் உங்கப்பாம்மா கிட்ட கேக்கலாம்-னு நேரா வந்துட்டேன் “

“ம்ஹ்ம் …, அதுக்கு.. என்னை கேட்டுதானே  வந்திருக்கணும் ?”

“நீதான் ஒரு பார்வை-ல ஓகே சொல்லிட்டியேடி”

“ஹேய்… டீ யா ? என்னை யாருமே டி சொன்னதே இல்லை….”

ஆரம்பிச்சிட்டாங்கய்யா.. ஆரம்பிச்சிட்டாங்க….

எவ்வளவு சுட்டு போட்டாலும், இந்த லவ்வர்ஸ் பேச்சு / விஷயமே இல்லாம விடிய விடிய பேசறது… / சிரிப்பே வராத, ஒண்ணுமே இல்லாத காமெடிக்கு ROFL – ரேன்ஜ் -க்கு இவங்க பில்ட் அப் & சிரிப்பு.. இன்னும் இங்க இருந்தா … தெளிவா இருக்கிற நாம… [ ??? ], மறை கழண்டு சுத்த வேண்டி இருக்கும்…

அவங்க காதல் பயிரை வளர்க்கட்டும்….

நாம ஸீனை மாத்துவோம்.

பாஸ்கர், சந்தோஷமான மனநிலையில் இருந்தான். அக்காவிற்கு திருமணம் கூடியதில் அவனுக்கு ஏக த்ருப்தி… அதிலும் அத்தானாகப் போகும் இளம்பரிதி, துப்பறியும் நிறுவனத்தினால் ஆஹா ஓஹோ என்று புகழப்பட…., மனம் நிறைந்தது.. உடனே இதை பகிர வேண்டும் என மனம் உரைக்க, மறு நொடி, லதிகாவின் முகமே தோண்றியது…. பரபர வென அலைபேசி எடுத்தவன், விழித்தான்.. “சட் .. அவ நம்பர் தெரியாது…” சற்றே சுணங்க , உடனே விக்கிரமாதித்யனாய், விட முயற்சியுடன் “ஆனா அந்த ஆஃபிஸ் போன் நம்பர் தெரியுமே?”, சொன்ன மனசாட்சிக்கு தெரியாது, இவனுக்கு அவள் நம்பர் மட்டுமல்ல… பெயர் கூட முழுதாய் தெரியாதென்பது.

இவன் தொடர்பு கொள்ள.. “நீங்கள் தொடர்பு கொண்ட எண் , தற்போது தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளது “, என்று கன்னடத்தில் மொழிந்தது… மீண்டும் முயற்சிக்க தயங்கி.. “நேத்து இந்த நேரம், நான் அங்க வந்தது நினைப்புல இருந்தா,எனக்கு அவளை பார்க்கணும்னு தோணற மாதிரி அவளுக்கும் தோணினா, கண்டிப்பா இன்னிக்கும் வந்துருப்பா”, என்ற ஒரு உந்துதலில்…நேரே அவளை நேற்று சந்தித்த இடத்திற்கு சென்றான்.

இவன் எண்ணியபடியே அங்கே அந்த அலுவலகம் திறந்திருந்தது… கூடவே அவளும் இருந்தாள்… ஆனால், எதோ ஒரு கோப்புக்குள் தலையை விட்டு, வேலையில் மும்மரமாய் இருந்தாள்.. சிறு புன்னகையுடன், கதவை தட்டி, “ஹாய் ..”சொல்ல…

அவளோ கோப்புகளில் இருந்து தலையை எடுத்து, “ஹலோ”, என்றாள் ..

“நீங்க…..”, நெற்றி சுருக்கி , அவனை நினைவு அடுக்குகளில் தேடினாள்.. “ஓஹ் ..யா.. நேத்து கேஸ் விஷயமா பேசணும்-னு வந்துட்டு, ஒன்னும் சொல்லாம போனவர் தான…?”, மறந்தவள் போல் கேட்க …

“ம்ம்ம்ம் .. “, ஏற இறங்க அவளை பார்த்தவன், “அப்போ உனக்கு என்ன தெரில ? … ஞாபகம் இல்ல?, அப்படித்தான?”, உக்கார்ந்து கொண்டே கேட்டான்…

“ஹலோ ஒரு நாளைக்கு ஆயிரத்தெட்டு பேரை பாக்கறோம், எல்லாரையுமா மெமரி-ல வச்சிக்க முடியும் ?”, “சரி இப்போ சொல்லுங்க, என்ன கேஸ்?”, அசுவாரஸ்யமாய் கேட்டாள்.

துளைக்கும் பார்வையுடன், “ஒரு டுவெண்ட்டி போர் ஹவர்ஸ்-ஸா , ஒரு பொண்ணு என்ன மட்டும்தான் யோசிச்சிட்டு இருக்கா.. இப்போ கேட்டா இல்ல-ன்னு சொல்றா. அவளை என்ன கேஸ் போட்டு புக் பண்ணலாம்-னு சொல்லு..”, கத்தியென பாஸ்கரின் வார்த்தைகள்…

“என்ன வம்பு பண்ணனும்-னு வந்திருக்கீங்களா? கண்டதும் காதலா?, இந்த பாத்தோன்ன பத்திக்கறது, தொட்டோன்ன துவள்றது , முணுக்-ன்னா அழறது, மரத்த சுத்தி டூயட் பாடறது.. இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கையே இல்ல… போலீஸ்-க்கு கால் பண்ணவா? இல்ல.. ஒரு ஜஸ்ட் ஒரு பிரஸ் பண்ணா போதும், காவலன் ஆப்-ல ரிப்போர்ட் பண்ண… செய்யவா?”, கல்பலதிகா கிண்டலாய் அதே சமயம்எதிரில் உள்ளவனுக்கு  உரைக்குமாறும் சொல்ல…

விலுக்-கேன பாஸ்கர் ஆதித்யா எழுந்து நின்ற வேகத்தில், அவன் அமர்ந்திருந்த ரோலர் ச்சேர் chair , பின்னோக்கி சென்று சுவற்றில் மோதி நின்றது. “செய்… செய் டீ., பாக்கலாம்,….. யாருன்னு நினச்ச?, என்ன பாத்தா ரோட் சைட் ரோமியோ மாதிரி தெரியுதா? மூஞ்சி பாத்து படிக்க தெரியாது எனக்கு? நான் என்ன அடலோசென்ட் -டா ?” மூச்சு விடாமல் அனல் கக்க பேசியவனை, கல்பலதிகா உறுத்து பார்க்க…. சற்றே நிதானித்து ..

“எனக்கு எப்படி உம்மேல கிரேஸ் இருக்கோ, அதே மாதிரி … உனக்கும் எம்மேல அதே கிரேஸ் , அட்ராக்டின், லஸ்ட், லவ்… என்ன பேர் வேணா வச்சுக்க …. எல்லாம் இருக்கு.. இல்லன்னு பொய் சொல்லாத.. எனக்கு பொய் பிடிக்காது…” , நறநறத்து சொன்னான்.

“அனாவசிய கற்பனைக……”, அவள் சொல்லி முடிக்கும் முன், அந்த டேபிளில் இருந்த பைல்-கள் அனைத்தும் பறந்திருந்தது…

“எது கற்பனை ?, உன் ப்ரெண்ட் ஊர்ல இல்ல, வேற ஸ்டேட்-ல இருக்கா, நீ எனக்காக.. எனக்காக மட்டும்தான் இங்க வந்த, நீ வந்தும் கொஞ்ச நேரம்தான் ஆகுது, உன் வண்டி சைலென்சர் இன்னும் சூடாத்தான் இருக்கு.. அது பக்கத்துலதான் கார் பார்க் பண்ணினேன்.. “, டேபிளில் இரு பக்கமும் கைகளை வைத்து, நின்று கொண்டே அவளை பார்த்து குனிந்து, அனல் வீசும் பார்வையிட்டு பேசும் பாஸ்கரை, அவள் விழி விரித்து பார்க்க…

டேபிளில் விரலை வைத்து இழுத்து, “காலைலேர்ந்து வேலை செய்திருந்தா , இந்த டஸ்ட் போயிருக்கும்… அதோட … குப்பையோட வேலை செய்ய, நீ சோம்பேறி இல்ல..காட் இட் ?”, சிறிது நிறுத்தியவன்….

அதே தூசு படிந்த டேபிளில் அவன் அலைபேசி எண்ணை விரலால் எழுதினான். ஒரு பெருமூச்சுடன் உணர்ச்சிகளை கட்டு படுத்தி, “வெல்.. இது என் நம்பர்.. ஒரு சந்தோஷமான விஷயத்தை ஷேர் பண்ணனும்-னு வந்தேன்.. ம்ப்ச்… சரி விடு…, நீ சொல்ற பாய்ன்ட்டுக்கே நான் வர்றேன்.. ஒரு ஃபிப்ட்டின் டேய்ஸ் நாம பாத்துக்காம இருப்போம்.. இந்த கேப் கூட உனக்காத்தான்.. கொஞ்சம் பிரேக் எடுத்து யோசி.. அப்பறமும் உனக்கு என் நினைப்பே இல்லன்னா, விட்டுட்டு போய்ட்டே இருக்கேன்…”, என்று தலையை கோதியவாறு உரைத்தவன்…. சட்டென விரலை நீட்டி …

“பொய் மட்டும் சொல்லலாம்-னு நினைக்காத, யோசிக்க கூட செய்யாத.. என்னது சுத்தமா பிடிக்காது… அன்ட் நிச்சயமா கண்டுபுடிச்சிடுவேன், ஏன்னா நான் பாஸ்கர் ஆதித்ய பிரகாஷ் ….., வர்ட்டா??” , பேசியபடியே, இவள் கைப்பையில் இருந்து.. இவளது விசிட்டிங் கார்ட் ஒன்றை உருவி, தன் சட்டை பாக்கெட்டில் வைத்து…. புறப்பட்டான்…

புயலடித்து ஓய்ந்தது போல் இருந்தது, கல்பலதிகாவிற்கு… மேஜை மேல் அவன் எழுதி சென்ற எண்களின் மேல் அவள் பார்வை.. கை தானாய், அனிச்சை செயலாய் , அலைபேசி எடுத்து அதனை பதிந்தது… வாய், “தி பாஸ்..[The BOSS].”, செல்லமாய் கூறியது…

+++++++++++++++++++++++++++++++++++++++++++

“என்ன நரேன், இப்படி டக்குன்னு ஓகே சொல்லிடீங்க?”, சரண், நரேனிடம் கேட்டாள், சமையலறையில் இவர்களது திடீரென்று முளைத்த மாப்பிள்ளைக்கு காஃபி கலந்து கொண்டே..

“வேறென்ன பண்ணனும் -னு நினைக்கிற ?, ரெண்டு நாள் முன்ன தான் தியா, இவரைப்பத்தி எங்கிட்ட சொன்னா…. நேத்து நம்ம சாஸ்திரிகள், ஒரு மாசத்துல கல்யாணம் முடியும்-னு சொன்னார்.. இன்னிக்கு இவர் வந்து, உங்க பொண்ணை ரொம்ப வருஷமா காதலிக்கிறேன்.. கட்டி குடுன்னு வந்து நிக்கறார்..”

“அப்படி யார் வந்தாலும் பொண்ண தூக்கி குடுத்துவீங்களா?, இப்படி ஜெட் ஸ்பீட் -ல யாரவது மாப்பிள்ளையை ஓகே சொல்லுவாங்களா?, என்ன விசாரிச்சீங்களோ?, எனக்கு இன்னும் நம்பவே முடில..”

“சரண்.. விசாரிக்கறது இருக்கட்டும், ஊர் பேசறதை, அடுத்தவங்க சொல்றத விடு.. நீ பாத்தவரைக்கும் உனக்கு ஒரு விஷயமாவது அந்த பையன்கிட்ட தப்பா தெரிஞ்சதா?”

“இல்ல … ஆனாலும்….”, ஸ்ருதி குறைந்து வந்தது பதில்…

“உனக்கொன்னு தெரியுமா? நான் பாஸ்கர் அனுப்பின ரிப்போர்ட் இன்னும் சரியா கூட பாக்கல.. ஆனா, மாப்பிள்ளை பேச்சிலே உண்மை இருந்தது.. கொஞ்சம் கூட டென்ஷன் இல்லன்னு காமிச்சிக்கிட்டாலும், நாம முடியாதுன்னு சொல்லிடுவோமோ-ன்னு மனசு ஓரத்துல இருந்த பயம், தியா-வை பார்க்கற பார்வை-ல, இருக்கிற அன்பு ..”, சற்று நிறுத்தி…”நம்ம பொண்ணு ரொம்ப லக்கி.. , கொஞ்சம் அண்டர்ஸ்டாண்ட் ஆகிட்டா… நெஸ்ட் நரேன், சரண் அவங்கதான்….”, என்று இதழில் புன்னகையுடன் முடிக்க….

“ஓஹ் …??” , “போதுமே உங்க பெருமை?”, உதடு சொன்னாலும் உவகை இருந்தது சரண்யுசாயாவின் உள்ளத்தில். ஊரே சொல்வதுதானே? SNP & சரண் made for each other என்று…, ” உங்க திங்கிங் அந்த அளவுக்கு போயாச்சா?”

“ம்ம்ம் , அதுக்கும் மேல .. “, இலகுவாய் கூறி , “சரீ , சரண் .. அடையாறு-ல இருக்கிற டியூப்லெக்ஸ், அவங்களுக்கு வசதியா இருக்குமா?, தியா ஹாஸ்பிடல்-க்கு, பக்கமா…. “

“வெயிட்.. இது நாம டிசைடு பண்ண வேண்டாமே?, அவங்களே முடிவு எடுக்கட்டும்.. இப்போ போய் , ஈவ்னிங், ஸ்னாக்ஸ் சாப்பிட வர சொல்லுங்க., உங்க அருமை மாப்பிள்ளை-யையும் பொண்ணையும்..”

“அது ..”, “வேண்ணா… நீயே கால் பண்ணிக்கோ..”

அட.. இது என்ன ? என்பது போல் புதிதாய் பார்த்தாள் . SNP-க்கு தயக்கமா? கேள்வியாய் கணவனை நோக்க….

ஆழ பெருமூச்சு விட்டு , “என்னதான் தியாவை கட்டிக்க போறவர்ன்னாலும், அவர் உரிமையா நம்ம தியா கூட பேசறதை பாத்தா, லைட்-ஆ கொஞ்சம் ஜெலஸ் வருது “, குறுஞ்சிரிப்புடன் நரேன் கூறினாலும், மகளை பிரிய போகும் வலி அவனையும் அறியாமல் அதில் பிரதிபலித்தது… கண்ணுக்குள் வைத்து பாதுகாத்த பொக்கிஷம் அல்லவா?

அவனை புரிந்தவளாய், “நரேன்… நான் பேசிக்கறேன்.. கார்டன்-ல ஊஞ்சல் போட்டது நல்லதா போச்சு … ” பேச்சை மாற்றினாள்..

“மாம்….”, இவர்களுக்கு கூப்பிடும் வேலை வைக்காது , பெண்ணே வந்தாள். அங்கே அம்மாவுடன் அப்பாவும் இருப்பதை பார்த்து, “டாட்… அவர் உங்க கூட பேசணும்-னு சொன்னார் “, செவ்வரளி கன்னத்துடன் மகள் பேச.., “பத்து நிமிஷத்துல பாஸ்கரும் வந்து்டுவான் .. டைனிங்-க்கு கூட்டிட்டு வாடா .. போ ” , பதில் SNP-யுடையதானது …

சொன்னபடி பாஸ்கர் வீடு வந்திருந்தான், அனைவரும் குழுமி, அறிமுகப்படலாம் முடிந்தவுடன், “மேரேஜ் சீக்கிரம் வச்சிடலாம்-னு இருக்கேன்.. நீங்க என்ன சொல்றிங்க ?”

“ப்ளீஸ் மாமா, போர்மாலிட்டி வேண்டாம், கால் மீ இளா, “, பரிதி..

“ஓகே.. எப்போ வசதிப்படும்?”

சிரித்தவாறே “உங்களுக்கே தெரியும், இப்போ ரெண்டு வாரம் சஸ்பென்ஸன்-ன்னால ..,ப்ரீ, சரியா சொல்லணும்-னா இன்னும் ஒரு பன்னெண்டு நாள்.. அதுக்கப்பறம் ஒன் வீக் லீவ் கிடைக்கும்.. அதுக்குள்ள பண்ண முடியுமா பாருங்க .. மேரேஜ் டேட் உங்க இஷ்டம், ஆனா, சிம்பிளா தான் நடக்கணும், நீங்க உங்க ஸ்டேட்டஸ்-க்கு ஏத்தா மாதிரி ரிசப்ஷன் வச்ச்சுகோங்க , எனக்கு யாரையும் அங்க தெரிய போறதில்ல-ன்னாலும், நோ ப்ராப்ளம்..”

“அப்பறம், சீர், சொத்து, எதுவேணா உங்க பொண்ணுக்கு கொடுங்க.. ஆனா, எனக்கு எதுவும் வேண்டாம். என் பேமிலி-ய எனக்கு பாத்துக்க தெரியும். எந்த காஸ்ட்லீ பொருளும் நாங்க எடுத்துட்டு போகமாட்டோம்.., கொஞ்ச நாள் குவார்ட்டஸ்-ல இருக்கலாம்-னு ஐடியா..”

SNP , சரண்-னை பார்த்து, “எப்படி  நம்ம  மாப்பிள்ளை?”, என்பதாய் புருவம் உயர்த்தி கேட்க, அவள் பெருமையாய் சிரித்தாள்.

“எனக்கு எதையும் கேக்க அவசியமில்லாம, எல்லாம் சொல்லிட்டீங்க.., ஆனா குவார்ட்டஸ்-க்கு போறது வேண்டாம்-ன்னு ஒரு யோசனை… தியா அவ சம்பாதிச்சு வாங்கின, டுயூப்லெக்ஸ் அடையார்-ல இருக்கு.. லோன் போட்டு தான் வாங்கினா.. இன்னும் அதோட மன்த்லி ட்யூ, கட்டிட்டு தான் இருக்கா.. கேட்டட் கம்யூனிட்டி , செக்யூரிட்டி இருக்கு.. கார் பார்க்கிங்..”

இளம்பரிதி , தியாவை பார்க்க, அவள் சம்மதமாய் தலை அசைக்க, “ஓகே நோ இஷ்யுஸ்…”, என்றான் SNP -யை பார்த்து….

இதற்கு மேல் பொறுக்க முடியாது.., “ஹா ஹா ஹா ….யூ ஆர் பர்ஃபெக்ட் டு பி எ ப்ரோபெர் ஹஸ்பென்ட் டு மை சிஸ்டர்…”, என்று வாய் விட்டு சிரிக்க…”எப்போ, நீங்க அவ தலையசைக்கறத பாத்து, மத்தவங்க கேள்விக்கு பதில் சொல்ல ஆரம்பிச்சீங்களோ.. அப்போவே உங்களுக்கு மேரேஜ் க்கு உண்டான அத்தனை தகுதிகளும் வந்தாச்சு… “,என…பாஸ்கர் கேலி பேச….

தியா சிவக்க… சரண் சிரிக்க, பாஸ்கர், பரிதியின் ஆண்மையான நகையொலியும், சேர்ந்து ஒலித்து முன்னிரவு பொழுதை இன்னும் ரம்யமாக்கியது.

மொழிவோம்..

வாரண மாயிரம் சூழவ லம்செய்து,

நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்,

பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,

தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான். 

கல்யாண குணங்கள் நிறைந்த என் மணாளன், ஆயிரம் யானைகள் புடைசூழ, ஊர்வலமாக வருவதால், எதிரே பொன் மயமான பூரண கும்பங்கள் வைத்து, நகர் முழுவதும் தோரணங்கள் நாட்டியிருப்பதாக நான் கனவு கண்டேன் தோழியே!

நாளைவ துவைம ணமென்று நாளிட்டு,

பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்,

கோளரி மாதவன் கோவிந்த னென்பான்,ஓர்

காளைபு குதக்க னாக்கண்டேன் தோழீநான். 

நாளைக்குத் திருமண முகூர்த்தம் என்று நிச்சயித்து, கமுகம் பாளை முதலியவைகளுடன் அலங்காரம் செய்யப்பட்ட பந்தலில், சிங்கம் போன்ற நடையுடன், திருமகள் கேள்வனாகிய கோவிந்தன் என்னும் ஓர் காளை புகுவதை நான் கனவினில் கண்டேன் தோழி!

இந்திர னுள்ளிட்ட தேவர்கு ழாமெல்லாம்,

வந்திருந் தென்னைம கட்பேசி மந்திரித்து,

மந்திரக் கோடியு டுத்திம ணமாலை,

அந்தரி சூட்டக்க னாக்கண்டேன் தோழீநான்.

இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் கூட்டம் இங்கே வந்து, என்னை திருமணப் பெண்ணாக நிச்சயம் பேச, பெண் வீட்டாரும் பிள்ளை வீட்டாரும் கலந்து பேசி, பின் தனித் தனியே சென்று பேசி முடிவு செய்து, வேத மந்திரங்கள் ஓதித் தூய்மையாக்கிய கூறைப் புடவையைக் கொடுத்து என்னை உடுத்தச் செய்து, துர்க்கையான நாத்தனார் மணம் மிகுந்த மாலையை எனக்குச் சூட்டுவதாக கனவு கண்டேன் தோழி!

நாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி,

பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்தி,

பூப்புனை கண்ணிப்பு னிதனோ டென்றன்னை,

காப்புநாண் கட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 

வைதிகச் சடங்குகளில் வல்ல நல்ல அந்தணர்கள் பலரும் நான்கு திசைகளில் இருந்து புண்ணிய தீர்த்தங்களைக் கொண்டு வந்து தெளித்து, உயர்ந்த குரலில் மணமக்களுக்கு மங்களாசாசனம் செய்ய, பூக்களைச் சூடிய புனிதனான அந்தக் கண்ணனுடன் என்னைச் சேர்த்து வைத்து, கங்கணக் காப்பு கட்டுவதாக கனவு கண்டேன் தோழி!

கங்கணக் காப்பு கட்டி, திருமணத்திற்க்கு தயாராய் சூர்யா நாராயண பிரகாஷ்-ன் குடும்பம் தயாராவது போல் .. , நம் தளத்தில் இருக்கும் அணைத்து தோழிகளும், வாழ்க்கையில் ப்ரமோஷன் வாங்க.. எல்லாம் வல்ல இறையை வேண்டி ……

அனைவர்க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் கூறி… விடைபெறுகிறேன்…

error: Content is protected !!