IM14
IM14
IM 14
“சொல்ல சொல்ல இனிக்குதடா .. முருகா …
உள்ளமெல்லாம் உன் பெயரை சொல்ல சொல்ல
இனிக்குதடா…”, தொலைக்காட்சியில் பாட்டினை பார்த்துக் கொண்டிருந்தாள்.. சரண்யுசாயா. மதிய நேரத்தில் இவ்வாறு வேலைகள் இன்றி அமர்ந்திருப்பது அரிது..
தியாவின் திருமண, வரவேற்பு நிகழ்வுகள் இனிதாய் முடிய… பெரிய கடமையை சரிவர நிறைவேற்றிய திருப்தி … வேலைகள் செய்யும்போது தெரியாத அலுப்பு.. இப்பொழுது தெரிந்தது. சோஃபாவில் , சாய்ந்து அமர்ந்தவாறு, தொலைக்காட்சியை துழாவியதில் , இந்த பாட்டு வர பார்த்துக் கொண்டிருக்கிறாள். பெண்ணை பிரிந்து இருப்பது, தனிமையில் தெரிந்தது.. தியா, எப்பொழுதும் வீட்டில் இருப்பவள் இல்லைதான்.. ஆனால், அவளுக்காகவென்று எப்பொழுதும் ஏதாவது ஒன்று மனதுக்குள் ஓடிக்கொண்டேதான் இருக்கும்.. நல்ல டிசைனர் புடவை, சுடிதார், நகை, விருப்பப்பட்ட உணவு .. என்று, நன்றாக சுவையாக இருந்தால் மட்டுமே சாப்பிடும் பெண் கூட… என்னதான் சமையலுக்கென்று தனியாய் ஒருவரை அனுப்பியிருந்தாலும், எந்நேரமும் ஒருவரை சார்ந்தே இருக்க முடியாதல்லவா? இந்த பெண்ணுக்கு அடிப்படை சமையலையாவது கற்று தர வேண்டும், என்று மனதில் எண்ணம் உதிக்க… இடையிட்டது, அலைபேசி..
புத்திர ரத்தினம் அழைத்திருந்தான், அட அதாங்க நம்ம பாஸ்கர் ஆதித்யா…” சொல்லு பாஸ்கரா..”
“ம்மா .. வீட்ல இருக்கீங்களா?”,
“ஆமா சொல்லு. என்ன விஷயம்? “
“வந்து சொல்றேன்”, சொன்னவன் குரல் ஏனோ தீவிரம் காட்டியது..
“என்னடா இது.. காலைல கால்-ல வெந்நீரை கொட்டினா மாதிரி கிடுகிடுன்னு கிளம்பி ஓடினான்.. இப்போ அதிசயமா, மத்தியானம் வர்றான்.. பேச்சும் ரொம்ப சீரியஸ்… அதுவும் அப்பாயின்மென்ட் கேட்டுட்டு…. என்னாச்சு ? என்ன விஷயமா இருக்கும்? ம்ம்ம். சரி ..வரட்டும் பாக்கலாம்.. “, என்ற சிந்தனை வளர்ந்தது சரண்-க்கு…
லதிகாவின் இதழனைத்து விடைபெறும்பொது இல்லாத டென்சன் [ அதுக்கு எதுக்கு டென்ஷன் ??? ].. இப்போது வந்து உட்கார்ந்து கொண்டது.. பாஸ்கருக்கு.. காரில் அமர்ந்ததும், அலுவலகம் செல்ல எத்தனிக்க.. அப்பா SNP -யின் மிஸ்ட் கால் பார்த்து , நெற்றி சுருக்கினான்.. தொடர்ந்து.. மெசேஜ்களை பார்க்க… விஷயம் ஓரளவு தெளிவாகியது.
சிப்காட் வழக்கு குறித்து பேச, அங்கே அழைக்கிறார் என்பது தெரியவர… அப்பொழுதுதான் லதிகா “மேம் கண்டிப்பா வாபஸ் வாங்க மாட்டாங்க ‘”, என்று சொன்னதை அசை போட்டான்… அம்மாவிடம் நேரடியாய் பேசி விட்டால் என்ன? இன்ன விபரம், அந்த தொழிற்சாலை நம்முடையது, வழக்கினை திரும்பப்பெற சொல்லிவிட்டால் பிரச்சனை தீர்ந்தது, என்ற எண்ணத்துடன்… உடனடியாய் சரண்-க்கு அழைத்து நேரில் பேச சென்றான்…
+++++++++++++++++++++++
SNP சிப்காட் -டின் பாக்கேஜிங் செக் ஷனை பார்வையிட்டவாறே , அந்த தொழிற்சாலையின் கட்டமைப்பை உள்வாங்கிகொண்டிருந்தான். அனைத்தும்.. சரியாக இருப்பதாகவே பட்டது.. எனினும்.. உள்ளுணர்வு மட்டும் சின்னதாய் நெருடியது..
ரௌண்ட்ஸ் முடித்து, SNP திரும்ப அவரது அறைக்கு வரும் முன், அந்த நீதிமன்ற அறிவிப்பினை தேடி எடுக்க சொல்லி இருந்தார் மேலாளர்.. காரியதரிசியும், அதை வெகு தீவிரமாய் தேடி.. கோப்புகளை நடுவே இருந்த அந்த கடிதத்தை எடுத்து மேஜையில் வைத்து , “ஹப்பாடா ” என்ற நிம்மதியுடன் அவளது இருக்கைக்கு போனாள் ..
அனைத்து துறையையும் பார்வையிட்டு வந்து அவனது அறையில் அமர்ந்தான் SNP… கண்ணாடி க்ளாஸ்-ல் இருந்த தண்ணீரை, அதன் மூடியை எடுத்து , குடிக்க… அருகில் இருந்த பேப்பர் வெயிட்டிங் கீழ், அந்த கடிதம் காற்றில் படபடத்தது. மெல்ல எடுத்து படித்த SNP -யின் முகம் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்க… மீண்டும் ஒருமுறை படித்ததும்.. முகம் பளிச்…..சின்னதாய் முறுவல் கூட வந்தது.. ஆம்.. SNP, சரண் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு இருப்பது தெரிந்தவுடன், ஒரு நிம்மதி….
காரணம், SNP யை விட சரணை அறிந்தவர் யார்? சரண் சாதாரணமாக ஒரு விஷயத்தில் இறங்க மாட்டாள்.. அதுவும் தக்க ஆதாரமில்லாமல், எந்த ஒரு நடவடிக்கைகளும் எடுப்பவள் அவளில்லை… இந்த தொழிற்கூடத்தை வாங்கியதில் இருந்தே, எதோ ஒரு பிரச்சனையை எதிர்நோக்கி இருந்த மனது.. தற்போது கொஞ்சம் ஆசுவாசமாகியது.. பிரச்சனை இன்னதென்று தெரிந்த பின் , தீர்ப்பது சுலபமல்லவா?
அதுவும் சரணிடம் இது குறித்த விபரங்கள் யார் தந்தார் என விசாரித்து . அந்த முகம் காட்டா எதிரியையும் அறிய எண்ணி, “சரண்.. இந்த அட்ரஸ்-கு வர முடியுமா? ஒரு முக்கியமான விஷயம்.. ” , மெசேஜ் அனுப்பி காத்திருந்தான்.. மனைவி ஒருகால் தூங்கினால், அழைப்பு தொல்லையாக கூடாது இல்லையா? ஆனால், சரண் எப்போதும் மதியம் தூங்கினவள் கிடையாது என்பதை SNP அசைபோடும் முன்பே.. “யா.. ஷுயூர் ஒன் ஹார்-ல வர்றேன்…”, என்ற பதில் வந்தது..
++++++++++++++++++++++++++++++++++++++++++++
அதிதி சந்தியா மருத்துவமனையில்..அவளது வேலையில் பிசியாக இருந்தாள் … ஸ்ரத் இப்பொழுது மிக நல்ல ஆரோக்கியத்துடன் இருந்ததால்.. நிர்மலா தம்பதிக்கு வானளாவிய நிம்மதி.. குழந்தைக்கு நிமோனியா குணமாகியிருந்தது… இன்னமும் சுவாசத்திற்கு .. உபகரணங்களின் உதவி ஸ்ரத்-திற்கு தேவைப்பட்டது.. மற்றபடி அனைத்து உறுப்புகளும் அதனதன் பணியினை செவ்வனே செய்தது.. தீவிர கண்காணிப்பில் இருந்தாலும்.. ஸ்ரத் … சுற்றியுள்ளவர்களுக்கு … நம்பிக்கையுடன் … விடா முயற்சியும், இறை அருளும் இருந்தால்… மரணம் மண்டியிட்டு செல்லும் என்பதை நிரூபித்தான்..
தியா… மற்ற குழந்தைகளை பார்த்து முடித்து .. அவளது அறைக்கு சென்றாள்.. எதையோ எடுக்க அவளது ப்ரத்யேக அலமாரியினை திறக்க… அங்கிருந்த.. ஸ்ரத் -தின் சிகிச்சையின் போது , உபயோகிக்கவென மேலுறை பிரிக்கப்பட்டிருந்த , கிண்டி SNP தொழிற்சாலையில் தயாரான வெண்டிலேட்டர் குழாய் , தியாவின் கையில் பட… பிசிக் ..கென விரல்களில் ஒட்டியது..
ஓஹ் .. மை .. காட்.. !!!!! சற்றே பதட்டமானவள், ….அந்த மேலுறையை அப்படியே திருப்பி.. தயாரிப்பாளர் யார் என பார்த்து, கைபேசியில்.. அந்த கம்பெனியின் ஜாதகம் தெரிந்து கொள்ள… கூகுளை ஏவினாள் ..
ஓர் வினாடிக்கும் குறைவான நேரத்தில்…அது SNP குரூப் ஆப் கம்பெனீஸ் .. என்று பதிலுரைத்தது ..
லப் .. டப் … லப் .. டப் …இதயம் நின்று துடித்தது , தியாவிற்கு..
தியா…. மற்ற எதை குறித்தும் சிந்திக்காமல்… கையில் அந்த வெண்டிலேட்டர் குழாயுடன் .. அந்த முகவரியில் இருந்த .. SNP யின் கம்பெனிக்கு புறப்பட்டாள்…
+++++++++++++++++++++++++++++++++++
அதே நேரத்தில் பாஸ்கர் ஆதித்யாவும் வீடு வந்து சேர, “வா பாஸ்கரா.. லன்ச் ரெடியா இருக்கு.. சாப்பிட உக்காரு .”, என்று சரண் கூற.. பாஸ்கரும் கைகளை கழுவி டைனிங்-ல் அமர்ந்தான்..
பிளேட் வைத்து உணவினை பரிமாறியபடி.., “காலைல அவ்வளவு அவசரமா எங்கடா போன? “, அம்மாவாய் கேட்க… பாஸ்கர் திரு திரு.. [தலைவர்தான் … வீட்டு ஆளுங்க கிட்ட பொய் பேச மாட்டாரே .. ..]
“என்னடா ஆச்சு? ஒரு கேள்வி தானடா கேட்டேன்.. இந்த முழி முழிக்கற?”
“அம்மா.. ஏதாவது ஒரு வேலைய பண்ண விடு..ஒண்ணா சாப்பிடறேன்.. இல்லையா பதில் சொல்றேன் “
“ரொம்ப புத்திசாலித்தனமா பேசறதா நினைப்பு.. சரி பிழைச்சு போ.. சாப்பிடு..”, வழக்கம்போல பிள்ளைகளின் வயிற்றை நிறைக்கும் அம்மா..வானாள் . இரண்டு வாய் சாப்பிட்டவன்.. “நீங்க சாப்டியாம்மா?”, கேட்டான் பெற்றவள் வயிறும் மனமும் குளிர…வாஞ்சையான சிரிப்புடன் , “ஆச்சுப்பா, நீ சாப்பிடு “
பரபரப்பு ஏதும் இன்றி அமைதியாய் உணவினை உண்ணும் மகனை பார்த்திருந்தாள் … “ம்ம் இவன் எதோ சரியில்ல.., என்னவோ மனசுக்குள்ள போட்டு உளப்பறான்.. ஆபிஸ் விஷயமா இருந்தா, நரேன்-ட்ட கேட்டிருப்பான்.. இது வேற எதோ.. சரி .. சாப்பிட்டு முடிக்கட்டும் கேக்கலாம்”, சரண்-னின் மனதுள் சிந்தனை ஓடியது.
பத்து நிமிட நேரத்தில் ஹாலில், கையை துடைத்தவாறே, “ம்மா… நீங்க எப்போவாவது, கிண்டி எஸ்டேட் பக்கம் வந்திருக்கீங் களா ?”,
“ம்ம்.. ரெண்டு மூணு முறை வந்திருப்பேன், உன் அப்பாதான் .. நம்ம பாக்டரி ரொம்ப உள்ள தள்ளி இருக்குன்னு சொல்லி புலம்புவார்.. அதுக்கப்பறம்தான் நிறைய எக்ஸ்பான்ஷன் பண்ணினாரே ? ஒரு ஆறு மாசம் முன்ன கூட.. வேற ஏதோ ஒரு யூனிட் -ம் வாங்கறதா சொன்னார்.. சரியா ஞாபகம் இல்ல…ஏன் கேக்கற?”,
“நீங்க ஒரு கம்பெனி மேல கேஸ் போட்டீங்களே.. ? ஞாபகம் இருக்கா?
“ஆமா… சம் மெடிக்கல் எகியூப்மென்ட்ஸ் தயாரிக்கிற கம்பெனி”
“அது நம்ம கம்பெனி தான் “, என்று பாஸ்கர் ஆதித்யா விஷயத்தை போட்டு உடைக்க…
அதை மெதுவாய் கிரஹித்து ,”ஓஹ் ….”, என்றவள் .. “ஆனா, “நான் கேஸ் போட்டது பிளாஸ்டிக் இண்டஸ்ட்ரி மேலதான ?”
“”மாம்.. நல்ல ரேட்-க்கு கிடைச்சா வாங்க வேண்டியதுதானே மா , நல்ல மெயினான இடம் .. அதான் வாங்கினோம் “
“அது சிங்கிள் ஓனர் கம்பெனியா இல்ல போட்டிருந்தது பாத்தேனே ?”
“நாம வாங்கிற வரைக்கும் அது சிங்கள் ஓனர் கம்பெனிதான் .. இப்போ ரீசன்ட்-டா… தியா மேரேஜ் முன்னால தான் வாங்கினோம் “, என்றான் படபடவென்று..
பொறுமைக்கும் இவனுக்கும் ஜென்மப் பகையோ ?
“ஓ…. சரி அதுக்கு இப்போ என்ன பண்ணணும்ங்கிற ?”,
“ம்மா… அது நம்ம கம்பெனி-ன்னு சொல்லிட்டேன்.. நீங்க என்ன பண்ணனும்-னு கேக்கறீங்க.?”
“அந்த கேஸ் எதுக்காக போட்டு இருக்கோ.. அந்த ப்ரொப்ளம் சால்வ் பண்ணிடீங்களா?”
“அம்மா.. அது….. வந்து … நீங்க ஏன் கேஸ் போட்டீங்கன்னு நா பாக்கவே இல்ல..”
“குட்.. முதல்ல அதைப்பண்ணு , அப்பறம் ரேண்டம் சாம்பிள் பீஸஸ் எடுத்துட்டு போயி லேப் -ல கொடு.., அங்க டெஸ்ட் பண்ணிட்டு எனக்கு சொல்லட்டும், தென்… டிசைட் பண்றேன், கேஸ் வாபஸ் வாங்கணுமா வேண்டாமா-ன்னு.. ஓகே..?”, சரண்யுசாயா, நல்ல அம்மா மட்டுமல்ல, நல்ல வக்கீலும் கூட என்பதை நிரூபித்தாள்.
“அம்மா.. நம்ம ரெப்போ போயிடும் மா…, நம்ம ப்ராடக்ட்-டோட ரிலையபிலிட்டி, குட்வில் போயிடும்.., அப்பா இத்தனை நாள் சேர்த்து வச்ச மதிப்பு போய்டும்…யோசிச்சு பாருங்க..”, மிகத் தீவிரமாக பாஸ்கர் ஆதித்யா பேச…
“கண்ணா.. நான் அம்மாவாத்தான் உன்கிட்ட பேச நினைக்கிறேன்…”, சரண்யு-வின் குரல்… கொஞ்சமும் கூடவில்லை…, கோபமில்லை… ஆனால் தீர்மானம் இருந்தது.. கேட்பவர் கண்டிப்பாய் மறுத்து கூற முடியாத அளவு தீர்மானம்..
“கேஸ் பத்தி பேசணும்-னா .. அப்பாயின்மென்ட் கேளு.. என் ஆபிஸ்-க்கு வா.., நானும் என்ன ஆதாரத்தை வச்சு கேஸ் போட்டேன்-ன்னு டீடைல்ட்-டா சொல்றேன்.., நீ … நான் சொன்னதெல்லாம் தப்புன்னு ப்ரூவ் பண்ணு .. கோர்ட் போகாமையே, நமக்குள்ள முடிச்சுக்கலாம்.. “
“இப்போதான் அப்பா, ஒரு இடத்துக்கு வர சொன்னார்.. ஒரு வேளை இதே விஷயமா இருக்குமோ?”
“ஆமா… என்னையும் அங்கதான் வர சொன்னார்.. நான் இன்னமும் நீங்கதான் கேஸ் போட்டதா அவர் கிட்ட சொல்லல… “, என்று பேசிக் கொண்டே சென்றவன்..”ஓஹ் மை காட்..!!!.. உங்களை கூப்ட்டிருக்காரா? அப்போ அவருக்கு தெரிஞ்சுடுச்சுன்னு அர்த்தம்.., ம்மா.. ஆர்க்யூ பண்ணாம, நான் சொல்றத கேளுங்க.. “
ஒரு சிறிய பெருமூச்சுடன், “பாஸ்கரா.. உன் அப்பா சொல்லி நான் எதையும் தட்டினதில்ல.. ஆனா அவர் எங்கிட்ட கண்டிப்பா… நீ கேட்டா மாதிரி கேஸ் வாபஸ் வாங்க சொல்ல மாட்டார்.. நான் அங்கதான் கிளம்பறேன்.. நீயும் வர்றியா?”
“என்னவோ பண்ணுங்க.. , போலாம் வாங்க…” .. இருவரும் புறப்பட்டனர்….
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இளம்பரிதி அவனது அறையில் இருந்து கணிணி திரைகளை பார்த்துக்கொண்டிருந்தான்… அவனது கட்டுப்பாட்டில் இருக்கும் OMR , ECR சாலைகளை எப்போதும் கண்காணிப்பில் வைத்துக்கொண்டிருந்தான்.. தற்போது .. கூடுதல் பொறுப்பாக போதை பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவையும் ..கொடுத்து… உடனே பொறுப்பேற்குமாறும் மேலிடம் கூற… விடுப்புக்கு விடுமுறை கொடுத்து ..பணியில் அமர்ந்திருந்தான்….. எந்த வேலையும் .. விரும்பி செய்தால் .. இலகுவானதுதானே?…
அப்பொழுது சந்தேகத்துக்கு இடமான வகையில்…. செக்போஸ்ட்-டுக்கு மூன்று கிலோமீட்டருக்கு சற்று முன்பாக ஒரு வாகனம் நின்றது.. அதிலிருந்து நான்கு wooden box [பெட்டிகள்] மட்டும் கீழே இறக்கப்பட்டு வேறொரு பெட்டிகள் மேலே ஏற்றப்பட்டது…அதைக் கண்ட பரிதி.. அதனை ஜூம் [zoom ] செய்து என்ன வண்டி என்று பார்க்க… அது ஒரு டெம்போ ….இறக்குமதி செய்யும் பொருட்களை கொண்டு செல்லும் வாகனம் என்பதற்கு அடையாளமாய் இம்போர்ட்டட் ஒன்லி என்று போட்டிருந்தது அந்த சரக்கு வாகனத்தில்…
ஓட்டுனரோ தெளிவில்லாது, பயமாய் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டிருந்தான்.. ஏதோ தவறு நடப்பதாய் மனம் உந்த.. அந்த வாகனத்தினை பின் தொடர முடிவெடுத்து.. செக் போஸ்ட் அலுவலகத்தில் இருந்து வெளியேறி… அவ்வாகனத்தை தொடர்ந்தான்.. அது நேராக SNP – யின் SIPCOT சென்று நின்றது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அத்தொழிச்சாலையின் உள் வாசலில் சரண், பாஸ்கர் ஆதித்யா ஒரு பக்கம் காரிலிருந்து இறங்க….
மறு பக்கம் அதிதி சந்த்யா, மருத்துவமனையில் இருந்து நேரடியாக அங்கே வர….
இளம்பரிதியும் ..சரக்கு வாகனத்தை பின் தொடர்ந்தவன் .. தொழிற்சாலையின் பெயரை கண்டதும் .. SNP -யுடையதுதானா என்பதை உறுதி செய்யவென உள் நுழைய….
அங்கே……….. அலுவலக வாசலில்….
ஒரு பெண்… புயலென நுழைந்து, அவள் கையில் இருந்த காகிதத்தை சுக்கல் சுக்கலாக கிழித்து , நின்று கொண்டிருந்த SNP -யின் முகத்தில் விட்டெறிந்தாள் ..
அவள் மதுரையை எரித்த கண்ணகியை போல் இருந்தாள் .. கைகளில் காற்சிலம்பு மட்டுமே இல்லை.. அதனை ஈடு செய்யவோ என்னமோ… மாணிக்க பரல்களையொத்த சிவந்த விழிகளில் … அணையா பெரு நெருப்பாய் ரௌத்திரம் தாங்கி நின்றாள்…
பார்த்த இவர்களின் நினைவுகள் ::
ஹக்… இளம்பரிதி…
ஆ…. அதிதி சந்த்யா…
காட் …… பாஸ்கர் ஆதித்யா….
கடைசியாய் ….. அப்பெண்ணின் முகம் பார்த்த சரண்-க்கு பூமி கால்களில் இருந்து நழுவியது….
மொழிவோம்….