IM15

IM15

IM 15

“ஆண்டவா, எதுவும் பிரச்சனையாகாம பாத்துக்கோ “, அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த … கல்பலதிகாவின் வேண்டுதல்.. இறையை சென்று சேருவதற்கு முன்.. அங்கே…. SNP யின் தொழிற்சாலையில்  ஒரு போர்க்களம் உருவாகி இருந்தது.

+++++++++++++++++++++++++++++++++++++++++++

“அப்பா…. நமக்கு இந்த ஃபாக்டரி வேண்டாம் .. விட்டுடுங்க… “, ஒருவித  பயத்துடன்.. வந்தன தியாவின் வார்த்தைகள்.. 

SNP -க்கு … அந்தப்பெண்  யார்? இவளது கோபத்திற்கு காரணம் என்ன? என்ன சொல்லிவிட்டு போகிறாள் ? போன்ற கேள்விகள் மனதுள் ஓடினாலும்… நிறைய கோபம் செக்யுரிட்டிகளின் மேல் தான் வந்தது… ஏனெனில் அவர்கள் ஓடி வந்து கொண்டு இருந்தனர்.. இந்த பெண்ணை பிடிக்கவென..  … “வெளி ஆள் வர்றது கூட தெரியாம என்ன  பண்றீங்க ? “, பற்களை நறநறவென கடித்தவாறே, வார்த்தைகளை  SNP துப்ப…. அவர்கள் இருவரும் வெலவெலத்தனர்… ஆனால்  அவளை கூட்டிக்கொண்டு போவதுற்கு முன் அவளது வசவுகள்.. ??குற்றச்சாட்டுகள்????

“என் புருஷனை கொன்னு… என் குடும்பத்த நடுத்தெருல நிறுத்திட்டு… நீயும் .. உன் புள்ளகுட்டிங்களும் மட்டும் நல்லா இருந்துடுவீங்களா?, இதுல எங்க கேசு போட்டுடுவேனோ-ன்னு பயந்து , எனக்கு வேல வேற போட்டு கொடுத்திருக்க? யாருக்குய்யா வேணும் உம்பிச்சகாசு ? “, SNP கொடுத்த அப்பாயிண்ட்மென்ட் கடிதத்தை கிழித்து முகத்தில் விசிறி அடித்தவாறு .. அப்பெண் பேசியவை இவை…. புயலென வந்தவள்… ஐந்து நிமிடங்களில் , அனைவரின் மனதிலும் ப்ரளயத்தினை ஏற்படுத்தி நின்றிருக்க… செக்யூரிட்டி மூச்சிரைக்க வந்து .. அப்பெண்ணை  வெளியேற்ற… அப்போதும் அவள்  ” நா…….. போக…. வம்ச……து  போக….” [இதை எழுத தேவை இருக்காதுன்னு …. போட்டேன்] , என்று  SNPயை வசைமாரி பொழிந்து கொண்டே தான் சென்றாள் .. 

இதை பார்த்து.. கேட்டதற்கே .. சரண் மயங்கி விழ…. பின்னால் வந்த பாஸ்கர் ஆதித்யா, அந்த பெண்ணின் மீது கவனம் இருந்தாலும்.. அன்னையையும் பார்த்தே வந்ததில், வேகமாய் சரணை தாங்கி பிடித்திருந்தான்… 

இந்த கூச்சலில், அனைத்து தொழிலாளர்களும் , வெளியே குழுமி இருக்க… அப்போதுதான் தியாவின்  “ஃபாக்டரி வேண்டாம் “, என்ற  குரல்….

“ஷட் அப் …. அன்……… ஜஸ்ட் கெட் அவுட் ஆஃப் மை சைட்…….. “, SNP யின் கர்ஜனையான  வார்த்தைகள்….  உக்ர மூர்த்தியாய் நின்ற அவனது தோற்றம் … பார்த்தாலே பயம் கொள்ள வைக்கும் அவனது சிவந்த விழிகள்… தியா விழி விரித்து பார்த்திருந்தாள் .. அவளுக்கு அன்பான அப்பாவாக மட்டுமே தெரிந்த SNP யின் இன்னொரு முகம்… மருண்ட விழிகளுடன்  பார்த்தது பார்த்தவாறு அதிர்ச்சியில் இருந்தாள்… 

தியாவிற்கு அதிர்ச்சி என்றால் , அங்கே நடந்தவற்றை பார்த்துக்கொண்டிருந்த பரிதிக்கு அவமானம்… அங்கு ஏன் வந்தான்? எது அவனை அங்கே வர தூண்டியது ? அனைத்தும் ஒரு பக்கம் போயிருந்தது.. அது எப்படி ?…. அத்தனை கூட்டத்தின் முன்னால் , தன்  மனைவியை ஒருவர் உதாசீனப்படுத்துவதா? 

இளம்பரிதி…. நகர நாகரீக வளர்ப்புதான்  .. ஆனால் உள்ளுக்குள்ளே அவன் கிராமத்தான் …மரியாதை அவனுக்கு மிக முக்கியம்.. [அப்போ சிட்டில இருக்கிறவங்களுக்கு மரியாதை முக்கியமில்லையா-ன்னு கட்டைய தூக்கிட்டு வராதீங்க ப்ரெண்ட்ஸ் ] அதனால்தான், தாய் தந்தை இல்லை என்ற போதிலும்.. அவன் சொந்தங்களுக்கு இவன் முக்கியமானவனாய் தெரிந்தான்.. என்ன கொடுக்கிறோமோ அதுவே திரும்பி வரும் என்ற கொள்கையுடையவன் .. முகம் சுருங்க.. புருவம் நெறிபட…, தியா அருகில் சென்றவன்  “ஒரு வார்த்த பேசாம ..வீட்டுக்கு போ “…. என்றான் அடிக்குரலில்… “அதில்….லை …ங்க…………”, ஆரம்பித்தவள், பரிதியின் முறைப்பில் …… அவள் குரல் …முடிக்கும்போது உள்ளேயே போயிருந்தது… தியா .. மறுசொல் பேசாது.. வந்தபடி வெளியேறினாள் …

பாஸ்கர் “என்னடா நடக்குது இங்க ?”, என வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தான்.. அவனுக்கு புரியாத விஷயங்கள் இவை..  தியா சென்றபின், பரிதி…  பாஸ்கர் ஆதித்யாவை பார்த்து முறைக்க .. “அய்யயோ .. மாமா வேற இவ்…வளவு அன்பா பாக்கறாரே?”, என்று திணறினான்..அவன் கிட்டே வேறு வரவும்… வேறு வழியின்றி.. “அப்பா.. எதோ கோபத்துல…..”.. என்று இழுக்க… “இனி எதுவா இருந்தாலும்.. என் பொண்டாட்டி.. உங்க வீட்டுக்கு வர மாட்டா.. உங்களுக்கு தேவைன்னா அங்க வந்து பேசுங்க…”, பக்கத்தில் இருந்த சரனுக்கும் இது காதில் விழ… அவளுக்கு இன்னும் குழப்பம்…

பாஸ்கருக்கோ.. “யோவ்.. உங்க பொண்டாட்டியா?.. அப்போ எங்களுக்கு அவ யாருய்யா ?.. எங்கிருந்துயா வர்றீங்க.. ? நீங்களும் உங்க மரியாதைகளும்..? ” என்று சுறுசுறு கோபம் வந்தாலும்…. மனைவியை அவள் பிறந்த வீட்டினிடம் கூட விட்டுக்கொடுக்காத பரிதியின் பாங்கு பிடிக்க.. ஒன்றும் சொல்லாது அடங்கினான்.. 

“என்ன வேடிக்கை இங்க? எல்லாம் அவங்கவங்க வேலைகளை பாருங்க.”, பாஸ்கரின் கமேண்டோ குரலில் வள்-ளென்று [அதான பாத்தேன்… எங்கடா இன்னும் கத்தக்காணோமே -ன்னு நினச்சேன் ] விழ … அவரவர்… விழிப்பாகி… நகரத் துவங்க… ” நல்லா போயிட்டிருந்த கம்பெனி.. அந்த மகராசன் வித்துட்டு போனாரு.. இனி நம்ம கெதியெல்லாம் என்னாகப்போகுதோ ?”, ஒரு சிலர் வெளிப்படையாய் முணுமுணுத்தவாறே கலைந்து சென்றனர்.

இந்த பேச்சுக்கள் இன்னமும் SNP யின் டென்ஷனை  அதிகமாக்க… , “அம்மாவை உள்ள  கூட்டிட்டு வா “, என்றவாறு வேகநடை போட்டு அவனது அறைக்குள் நுழைந்தான். இவனும் சரணும் பின்னூடே சென்றனர்.. “ஏதாவது குடிக்கிறாயா சரண்?”, கேட்டவாறு.. ஃபிரிட்ஜை திறந்து குளிர்பானத்தை எடுத்து கொடுக்க… பாஸ்கருக்கு அபத்தமாய் பரிதி-தியா நினைவு வந்தது.  ம்ம்… அப்பாவுக்கேத்த மருமகன்தான்…

“சரண் ரொம்ப டையர்டா தெரியற…நீ வேணா வீட்டுக்கு போறியா?… இங்க கொஞ்சம் செட்டில் பண்ணிட்டு நா வர்றேன்”…SNP ..

பாட்டில் பானத்தை  ஒரே மூச்சில் குடித்த சரண் கேட்ட முதல் கேள்வி “யாரு அந்த பொண்ணு?”, என்பது தான்…

இவர்களுக்கே பதில் தெரியாத கேள்வி .. உடனே … SNP , இன்டெர்காமில் ஜெனரல் மேனேஜரை அறைக்கு வருமாறு பணித்தான் …

“யார் அது ? என்ன விஷயம் ?”, கேள்வியும் ஜெட் வேகத்தில் வந்தது…

“அது சார்… ப்ரொடக்ஷன் யூனிட்-ல செத்து போனானே  ஒருத்தன்… அவனோட வொய்ப் இந்த பொண்ணு.. அவ புருஷன நாமதான் கொலை பண்ணிட்டோம்-னு …. யார் சொன்னாங்கன்னு தெரில… அவங்க காஸ்ட்-ல.. புருஷன் செத்து . கொஞ்ச நாளு வெளில வர கூடாது.. இப்போதான் வரலாம் போல.. அதான் நேரா… இங்க வந்து கத்திட்டு போறாங்க… இதெல்லாம் பெரிசா எடுக்காதீங்க சார்..”

“அப்படி ஒரு டவுட் ஏன் வந்தது ?”

“அது…. அது.. தெரில சார்…”, என்று மென்று முழுங்க…..

“சீக்கிரமா தெரிஞ்சுக்கோங்க…., நீங்க போலாம்”…

“பாஸ்கரா…. அந்த பொண்ணு டீடெயில்ஸ்….இப்படி ரியுமர் கிளம்ப என்ன காரணம் ?, யாரு இதுக்கு பின்னாடி இருக்கா ? எல்லாமும் நமக்கு தெரியணும்.. ரொம்ப சீக்கிரம் தெரியணும்… காட் இட் ?”, என்றான் கட்டளையாய் SNP .

“எஸ் டாட்…”.இது பாஸ்கரின் பதில்…. அலைபேசியில், விவரங்கள்…. இவர்கள் எப்போதும் அணுகும் துப்பறியும் நிறுவனத்திற்கு , அனுப்ப ஆரம்பித்து இருந்தான்…

“சரண்.. ஆர் யூ ஆல் ரைட்?”, அடுத்து மனைவியிடம் விசாரணை..

“யா… சம்வாட் ஓகே… சொல்லுங்க நரேன்…”, என்றாள் சற்றே மனதை சமன் செய்து….

“இந்த கம்பெனி ப்ரோடக்ட்  பத்தி உனக்கு எப்படி தெரியும்?, கேஸ் யாரு கொடுத்தது?”

“குறிப்பிட்டு யாரும் கொடுக்கல.. இந்த கம்பெனி பத்தி ஒரு அனாமதேய போன் கால்… பொது நல வழக்கா ….நாங்க தான் போட்டோம்…”

“நாங்க-ன்னா ?”, 

“நானும் கல்பா-வும் “

“ஒரு போன் கால் வச்சு கேஸ் போடுவீங்களா…  என்ன? கொஞ்சம் பிஷ்ஷியா இல்ல ? “, கொக்கி போட்டான்…

கேலியா  என நிமிர்ந்து பார்த்தவள்… அவன் சீரியஸ்  என்பது தெரிய…, “இல்ல நிச்சயமா இல்ல…, நாங்க தூண்டி துருவி .. ஆதாரம் இருந்தா மட்டும்தான் … அடுத்த ஸ்டேஜ் போவோம்.. ரேண்டமா… ஏழு எட்டு எடத்துல .. இந்த ப்ரோடக்ட்  வாங்கி.. ரெண்டு மூணு லேப் -ல டெஸ்டிங் கொடுத்து .. கடைசியா… ஷண்மதி கிட்டயும் ஒரு ஒப்பீனியன் கேட்டுட்டுதான் .. இதை ப்ராசஸ் பண்ணினோம்..”

“சரி.. இப்போ என்ன பண்ண போற..?”, சிந்தனையாய்  SNP கேட்க….

“நீங்க.., நான்  என்ன செய்யணும்-ன்னு எதிர் பாக்கறீங்க ?”, சரண் வக்கீல் என்பதை நிரூபித்தாள் ..

“உன்னிஷ்டம்..  ஒரே ஃபேமிலி-ல இப்படி எதிரும் புதிருமா … இருக்க சட்டம் சம்மதிக்குமா ? [NOC] நோ அப்ஜெக்சன் கொடுக்கணும்-ன்னாலும் சரி… கொடுக்கறேன்.. பட் .. என் சைட்-ல சென்ட்ரல்-லேர்ந்து … லீடிங் லாயரா பாத்துதான் உனக்கு எதிரா வாதாட வைப்பேன்…… “, இப்போதும் அவன் முகம் சீரியஸ்தான் ..

பாஸ்கர்தான் “ஞே ” என்று விழித்து பார்த்தான்… இவரு என்ன சொல்ல வர்றாரு? அம்மாவை  வாதாட சொல்றாரா? வேணாம்னு சொல்றாரா? ஒன்றும் புரியவில்லை…

“ஊர் உலகத்துக்கெல்லாம் .. நமக்குள்ள சண்டைன்னு …. காட்சி பொருளா நிக்கறது எனக்கு இஷ்டமில்லை…, ஆனா நீங்க சொல்ற பெரிய்….. ய்ய.. வக்கீலுக்கெல்லாம் பயந்து …. வாதாடாம பின்வாங்கலை…”, என்றாள்  சரண்  கடினமாய் ..

“ஓகே… எனக்கும் நாம முட்டிகிறதுல  இஷ்டமில்லை…., “, SNP -யும்  முறைப்பாய் சொல்லி முடிக்கும் முன்…., “அப்போ கேஸ் வாபஸ் வாங்கிடுங்கம்மா …”, பாஸ்கர் அவசரக்குடுக்கையாய்  கருத்து கூற.., அம்மா அப்பா இருவரும் சேர்ந்து அவனை முறைத்தனர்….

“ஆனா கேஸை நான் வாபஸ் வாங்க சொல்ல மாட்டேன்.. வழக்கமா நான் அட்டென்ட் பண்ணாத கேஸ் -களை  கல்பாதான் பாப்பா….” , மீண்டும் … அதிபுத்திசாலியாய்…. “நான் சொல்றேன்மா.. லத்திகா கிட்ட… நான் சொன்னா நிச்சயம் கேப்பா…”

இப்போதும் பாஸ்கர் ஆதித்யாவை , இருவரும் முறைத்தனர்… கோபமாய் அல்லாது “எப்போதிருந்து இது ??”, என்பதுபோல ஆராய்ச்சியாய்…  

SNP சரணை “எனக்கு ஏன் சொல்லல? “, என்பது போல …. கண்டனமாய் பார்க்க… அவளோ வேகமாய் தலையை இடவலமாய் ஆட்டி “எனக்கும் தெரியாது “, என்று சைகையாய் சொன்னாள் ..

“டேய்… உன்னை … என்ன பண்றதுன்னே தெரில…..”, வழக்கம்போல மனசாட்சி பாஸ்கரை கிழி கிழியென கிழிக்க…”அது வந்தும்மா… இப்போதான்… தியா மேரேஜ்-க்கு அப்பறம்தான்…. ” உளறி கொட்டி கிளறி மூட…

“போதும் வழியாத.. ரொம்ப முக்கியம் உன் காவிய காதல் இப்போ ?”

“ம்மா….”

“இதுல , அவளைப்பத்தி ரொம்ப தெரிஞ்சா மாதிரி.. வாபஸ் வாங்கிடுவான்னு வேற சொல்ற.. கேட்டு பாரு… மொகரைய பேத்திடுவா …. “, என பொரிந்து … 

“இதிலேர்ந்து ஈஸியா வெளில வரனும்-னா “…..  சற்றே ஸ்திரப்படுத்தி கொண்டவள் .. SNP இடம் திரும்பி  “இது நமக்கு வேண்டாம்… வித்துடுங்க..” என்பதுதான்….

சரண்… 

“ஒரு வார்த்தை வெல்லும்.. ஒரு வார்த்தை கொல்லும் ” , என்ற கொள்கையில் மிகுந்த பிடிப்புடையவள்.. எதிர்மறை சொற்களே அவளிடமிருந்து வராது…அப்படிப்பட்ட சரணுக்கு … அப்பெண்ணின் வசைகள், இவளையோ , SNP குறித்தோ எதை கூறியிருந்தாலும் தாங்கி இருப்பாளோ என்னவோ ?..  வாரிசுகள் இல்லாமல் போவார்கள் என்ற அப்பெண்ணின்  சாபம் … இவள் உயிர்வரை சென்று தாக்கி , அவளை அசைத்து இருந்தது….. காரணம் அப்பெண்ணின் முகத்தில் இருந்த ஆவேசம்… 

அடுத்து , இங்கு தயாரிக்கப்படும் பொருட்களின் தரம் குறித்த இவள் கைவசம் இருந்த ஆதாரங்கள்..

“இத்தனைக்கும் காரணம் இந்த தொழிற்சாலைதானே? விட்டு விட்டால் தான் என்ன?”, என்று தோன்றியது…. அவளுக்கு..

அவரவர் கோணங்கள்.. அவரவர் பார்வைகள்..

++++++++++++++++++++++++++++

SNP யின் மனதில் கோபம்  கனன்று கொண்டிருந்தது… .. கண் மண் தெரியாத கோபம் … எப்படி இந்த வார்த்தைகளை, சரண் சொல்லலாம்.. ?இதில் இந்த தியா வேறு .. வேலையாட்கள் அனைவரும் சுற்றி இருக்க அதையே சொல்லியது நினைவில் வர.. முகம் பாறை போல் இறுகியது… 

“பாஸ்கரா.. உடனே உங்கம்மா-வ வீட்ல விட்டுட்டு வா…  , கிளம்பு “. என…

“ஏன்.. ? நான் ஏன் வீட்டுக்கு போகணும்?, இங்க என்ன நடக்குதுன்னு தெரியாம.. யாரு எப்போ வந்து என்ன சாபம் கொடுப்பாங்கன்னு நிமிஷத்துக்கு நிமிஷம் பயந்து அங்க உக்காந்துகிட்டு இருக்கணுமா? “, என்று கத்த… அதே நேரம் ஜி. எம். உள்ளே வர….

“என்னய்யா?” ஹை -டெசிபலில் … SNP ஏகமாய் எகிற….

“சார்.. சார்.. வக்கீல்.. ரொம்ப நேரமா செல்-லுல கூப்பிடறார்…. நீங்க அட்டென்ட் பண்ணலியா… அதான் லேண்ட் லைன்-கு கூப்பிட்டு இருக்கார்… பேசிடுங்க…. “, விளக்கம் சொல்லி… ஓட்டமும் .. நடையாய் வெளியேறினார்… போனை கையில் எடுத்தவன், 

“சொல்லுங்க ….ஏதாவது அவசரமா?”

“இல்ல அதெல்ல்லா  இல்லை .. பேமென்ட்  ரிமைண்டர் காக… சீனியர் கால் பண்ண சொல்லி இருந்தார்.. அதான்…”

“சரி சொல்லிடீங்கள்ல… நாளைக்கு நெப்ட் -ல [NEFT ] வந்துடும்…. வச்சுடுங்க…”, அவர் அங்கே வைக்கும் முன் .. SNP….  கட் செய்திருந்தான்… “சரண்யுசாயா … இனி ஒரு தடவ .. தொழில் செய்யற இடத்துக்கு வந்து… வித்துடு…  விட்டுடு -ன்னு யாராவது சொன்னீங்க… என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது…”

“எல்லாம் விளையாட்டா போச்சா உங்களுக்கு?, ஒரு தொழில் ஆரம்பிக்கறதுன்னா என்ன கஷ்டம்-னு யோசிச்சு பாத்திருக்கீங்களா? நாப்பது இடத்துல லோனுக்கு அலைஞ்சு.. பத்து கவெர்மென்ட் ஆபீசுக்கு நடையா நடந்து அப்ரூவல், லைசென்ஸ், வெயிட்ஸ் ன் மஷர்ஸ், சேல்ஸ் டாக்ஸ்   … இப்போ லேட்டஸ்ட்-டா …GST .. எல்லாம் வாங்கி… ஆர்டர்க்கு நாய் மாதிரி காத்து கிடந்து … ஒரு வேலைய எடுத்து பன்றோம்-னா .. ஏன்? அது அந்த வேலை  மேல இருக்கிற வெறி… ” …

 “நம்ம பார்வைல… இது … நமக்கு இருக்கிற எத்தனையோ பாக்டரி-ல ஒன்னு…  இங்க வேலை பாக்கிற ஒரு ஒருத்தனுக்கும்… இதுதான் வயித்துப்பாடு.. இதை நம்பி .. அவனவன் ….. வீடு லோன் … படிப்புக்கு லோன்…. தங்கச்சி கல்யாணம்…. பொண்டாட்டி பிரசவம்-ன்னு ஆயிரம் கனவு வச்சிருப்பான்… எனக்கும் உனக்கும் வேணா இது வழக்கா தெரியலாம்… ஆனா இங்க இருக்கிற ஓரொரு எம்ப்ளாயிக்கும் … இது வாழ்க்கை…, அதைத்தான் இந்த கம்பெனியோட எக்ஸ்-பாஸூம் சொல்லிட்டு போனாரு…”

“அப்படின்னா… தயாரிப்பையாவது நிறுத்துங்க… தரமில்லாத பொருளை மார்க்கெட்-ல கொடுக்கறது மட்டும் நியாயமா?, அதை சட்டம் மூலமா தடுத்தா அது தப்பாமா?”, என்று கருப்புச்சட்டைக்காரியாய் சரண் வாதாட…

பாஸ்கருக்கு “இப்படித்தான் நானும் லதிகாவும் அடிச்சிகிட்டே இருப்போமோ?”, எதிர்காலம் பற்றிய பயத்தில் கண்ணில் பூச்சி பறந்தது….அவன் கவலை அவனுக்கு…. 

“எஸ்.. தரமில்லாத பொருளை கொடுக்கறது தப்புதான்…”, சொல்லும்போது SNP குரல் உள்ளே போயிருந்தது.. 

“அப்போ ப்ரொடக்சனை நிறுத்துங்க.. அங்க வேலை பாக்கறவங்க … வெட்…டியா  சம்பளம் வாங்கினாலும் பரவாயில்லைன்னு… கொடுங்க….”, கொஞ்சம்  அலட்சியம் இருந்ததோ.. பேச்சில் ?

“சரண்.. இன்னொரு முறை தொழிலாளிகளை பத்தி கேவலமா ஒரு வார்த்த வந்தது…. …”, என்று உறும ….

சர்வமும் பதறியது சரணுக்கு…. “சாரி….”

” சாரி… யாருக்குடீ வேணும் உன் ஸாரி ? எலக்சன் நேரத்துல காசும் , எலக்சன் முடிஞ்சதும்  இலவசமும் வாங்க க்யூ-ல நிக்கிற  சாதாரண கூட்டம்தானே -ன்னு … இளக்காரமா போச்சு.. இல்ல? .” 

“இங்க…அப்படியில்லை…  ஒரு நாள் வேலை இல்லன்னா ஒத்துப்பான்… போனா போகுது ரெண்டு நாள் இருப்பான்… அடுத்த நாள் வர்றதுக்கு யோசிப்பான்..  ஏன்னா…. அவனவன் வேலைங்கிறது அவனோட நம்பிக்கை… நான் என் குடும்பத்தை காப்பாத்த உழைக்கிறேன்-ங்கிற கர்வம்…. , இந்த உழைப்பு கொடுக்கிற நிம்மதி…. இது எவ்வ்ளோ பிச்சை போட்டாலும் /வாங்கினாலும் வராது…. “

“இப்போ நீ வீட்டுக்கு போலாம் “, பாஸ்கர் முன் நடக்க… சரண் மெதுவாய் எழுந்தாள்… “நான் பிச்சைங்கிற அர்த்ததுல சொல்லல., நரேன் .. “, கண்களில் இருந்து நீர் விழட்டுமா என கேட்க…., நிமிர்ந்து பார்த்தவனின் மனம் வலித்தது… 

“ம்ம்ம்ம்… ஹூம் “, பெருமூச்சொன்றை விட்டு,  “சரிம்மா…  சரி .. சாயங்காலம் ஆச்சு …வீட்டுக்கு போ…சீக்கிரம் வர பாக்கிறேன்….”, மனைவியை தேற்றி அனுப்பி வைத்தான்….

 ++++++++++++++++++++++++++++++++++++++++++++

“என்ன மாப்பிள்ளை… ? புருஷனும் பொண்டாட்டியும் ..சொல்லாம கொள்ளாம வந்தீங்க… உடனே மாயமாயிட்டிங்க?”, அலைபேசியில் பேசுவது SNP … கேட்பது.. வேற யாரு? புது மாப்பிள்ளைதான்… சரனை பாஸ்கருடன் அனுப்பிவிட்டு .. தியாவுடன் பேச  நம்பரை அழுத்தி இருந்தான் … என்ன இருந்தாலும் செல்ல மகளாயிற்றே ??

“ரொம்ப மரியாதை செஞ்சுட்டிங்க மாமா.. அதான்…. முடியாம வந்துட்டோம்…”, இளம்பரிதி  முறுக்க…

“அப்பாட்ட இப்படித்தான் பேசுவீங்களா?… கொடுங்க….”, பரிதி    வீட்டம்மா-வின் கட்டளையை  கேட்டு… 

“இரு ஸ்பீக்கர்-ல போட்டு தர்றேன்… ஏதாவது ஏடாகூடமா பேசினாரு …. அப்பறம் என்னை  குறை சொல்லாத..” இருவரும் ரகசியமெல்லாம் பேசவில்லை.. எதிராளிக்கு தெரிய வேண்டுமென்ற பேச்சு… 

“இல்லம்மா.. நான் மாப்பிள்ளை கிட்ட பேசத்தான்  கால் பண்ணினேன்… அவர் பொண்டாட்டிய எல்லார் முன்னாடியும் பேசினது தப்புதான்… ஆனா, அத்தனை பேருக்கு சாப்பாடு போடற கம்பெனியை… அங்க வேலை பாக்கறவங்க முன்னாலேயே மூடிடுங்க -ன்னு, அவர் பொண்டாட்டி சொன்னது சரியா? ன்னும் யோசிக்க சொல்லு…”

“ப்பா… அவர் தான் ஏதோ புரியாம பேசுறார்னா.. நீங்களும் ஏன்பா?…சாரிப்பா..  புரிஞ்சுக்காம சொல்லிட்டேன்… ஆமா… அம்மா வீட்டுக்கு போயிட்டாங்களா ? அந்த பொம்பள யாரு டாட்? கன்னா பின்னா-ன்னு கத்திட்டு போகுது?.. “

“அதெல்லாம் அம்மாட்ட அப்பறம்  நிதானமா கேட்டுக்கோம்மா .., இப்போ நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு வராம.. ஏன் இங்க வந்தீங்க?, எப்படி இந்த இடம் உங்களுக்கு தெரியும்? “, வரிசையாய் கேள்விகளை அடுக்க….

அவளும், மருத்துவ மனையில் நடந்தது.. முகவரி பார்த்து , அங்கே வந்தது …. போன்றவற்றை சொல்லி  முடிக்க… “அப்போ… நீ மட்டும் தனியாதான் வந்தியா?.. அதே நேரத்துல … மாப்ளை எப்படி டான்-ன்னு வந்தாரு? “…

“அது மாமா.. உங்களோட .இறக்குமதியாற ….பொருட்களை…  வழிலேயே  கடத்தி.. லோக்கல் பொருளை உள்ள வைச்சு .. இங்க வருது… நீங்களும் அதை   மார்க்கெட்-ல  சப்ளை பண்றீங்க…. அந்த வண்டிய ஃபாலோ பண்ணி வந்தா…. அங்க உங்க பொண்ணு நிக்கறா [ டேய்.. இப்போ மட்டும் உன் பொண்டாட்டி …. என் பொண்ணு ஆகிட்டாளா?]. எனக்கு முதல்ல..ஒன்னுமே புரியலை.. “

“அப்பறம் கொஞ்சம் புரிஞ்சது… ஆனா… சொல்லத்தேவை இல்லன்னு போயிட்டிங்க? அப்படித்தானே மாப்பிள்ளை ? “, என குற்றம் சாட்டும் குரலில் வினவவும் வும் “சாரி மாமா….., அது அந்த நிஷத்துல வர்ற கோபம்…”

“இருக்க வேண்டியதுதான்… ஆனா  மொத்தமும் தெரிஞ்சுக்கிட்டதுக்கு அப்பறம் காமிச்சு இருக்கணும்…. “

“ஒரு டிஸ்கஷன் பண்ணனும்.. சாப்பிட்டு எட்டு மணி வாக்குல வர முடியுமா?”

“ஓ.எஸ் .. கண்டிப்பா… ஆனா, மாமா , இனிமே இளா -ன்னே கூப்புடுங்க….”

“ஹா ஹா ஹா… உங்க கோபம் போச்சா…?சரி … சீக்கிரம் வாங்க…”, பேசியை நிறுத்தி … என் பொண்டாட்டி.. டக்குனு உங்க பொண்ணு ஆயிட்டாளே ?

போனை வைத்த பரிதியோ , இழைந்து கொண்டு இருந்தான்… “கதவை லாக் பண்ணிக்கோ… நான் வந்து பெல்-லை ரெண்டு தடவ அழுத்தினத்துக்கு அப்பறம் தான் கதவை தொறக்கணும்….”

“உங்கப்பனுக்கு அறிவே இல்லடீ… புதுசா கட்டிக்கிட்டவங்களாச்சே… ன்னு ஒரு இங்கிதம் வேணாம்? “

“கரெக்ட்… இரு கேக்கறேன்…”, என்று தியா போனை எடுக்க… “ஏய்… ஏண்டீ… வொய் திஸ் கொலைவெறி?” நீ மட்டும் இத கேட்ட…  ஒரு ஒரு முறை பேசும்போதும் இதையே சொல்லி காட்டுவாருடீ… உங்கப்பா.., அந்தாளு எனக்கு வில்லனா? ஹீரோவாண்னே தெரியல… “…

இளம்பரிதியின் புலம்பலில்.. தியா வாய்விட்டு சிரிக்க… “மொத்த குடும்பமும் சேர்ந்து நம்மள காமெடி பீஸாக்குது ….. நீ சிரிக்கிற…? உன்னை எப்படி ஆஃப் பண்ணனும்-ன்னு எனக்கு தெரியும்டி.. என் தியாக்குட்டி…” என்று அவளை இறுக்கி ….. 

முகத்தில்  இதழால் கோலம் போட….. அவளும் மயங்க ஆரம்பிக்க.. வாய் மட்டும்… “அப்பா அங்க வெயிட் பண்ணுவாங்க”, என்று முணுமுணுக்க…. “நான் .. உன்னை  பாத்திட்டு .. அப்பறம் உங்கப்பாவை பாக்கிறேன்… “, என்ற பரிதியின் உதட்டினை அவசரமாய் மூடினாள் .. 

மொழிவோம்….

error: Content is protected !!