“ம்மா… இந்த மதி எங்க… இன்னுமா எழல…” என்று கடமை உணர்வோடு ஜீவா கேட்க… அதை விஷ்வா குறுஞ்சிரிப்பாக பார்க்க… கார்த்தியாயினி சிரித்து கொண்டே,
“ஜீவா… விஷ்வா… வேணாம்… நைட் ரொம்ப நேரம் கண் முழிச்சு படிச்சுட்டு இருந்ததா… ஒழுங்கா நீங்க ரெண்டு பேரும் கிளம்பற வழிய பாருங்க…” மிரட்டுவது போல இருவரையும் கிளப்ப பார்க்க,
“அதெப்படி… அப்படியே விட்டுட்டு போனா நம்ம கெத்து என்னாகறது?” என்று சிரித்து கொண்டே அவளது அறைக்குள் பூனை பாதம் வைத்து நுழைந்தான் ஜீவா! அதற்கு பக்கவாத்தியம் விஷ்வா…
“டோன் டோடைங் டோடைங்…” விஷ்வாவுடன் படுக்கை அருகே சென்ற ஜீவா… பெட் ஷீட்டை கழுத்து வரை இழுத்து போர்த்தி கொண்டு பூ போல உறங்கி கொண்டிருந்த மதியை ஒரு நிமிடம் பார்த்து விட்டு… அருகே இருந்த தண்ணீர் குடுவையை எடுத்தபடி, மீண்டும் விஷ்வாவை பார்த்து குறும்பாக கண்ணடித்து புன்னகைத்தான்!
தண்ணீரை மதியின் தலையில் கவிழ்க்க… இதை சற்றும் எதிர்பாராத மதி அடித்து பிடித்து எழுந்தாள்! இருவரையும் ஒன்றும் புரியாமல் தூக்க கலக்கம் கலையாமல் பேயை பார்ப்பது போல பார்க்கவும்… மிச்சம் இருந்த தண்ணீரையும் ஜீவா அவள் தலையில் கவிழ்த்து,
“ஹெய்ய்ய்ய்யி… எப்பா இன்னைக்கு கோட்டா முடிக்காம போகனுமான்னு கவலையா இருந்துச்சு… சூப்பர் மேக்கப்டி குண்டு கத்தரிக்கா…” ஜீவாவும் விஷ்வாவும் சப்தமாக சிரித்தவுடன் தான் அவளுக்கு சிறிது தூக்க கலக்கம் கலைந்தது. இருவரையும் கொலைவெறியோடு பார்த்தவள், பல்லைக் கடித்துக் கொண்டு,
“அத்தை…” என்று கத்தினாள். அவளது கத்தலை கேட்டவர், தான் இருந்த இடத்திலிருந்தே,
“டேய் என்னடா புள்ளைகிட்ட வம்பிழுத்தீங்க?” என்று கத்த,
“உங்க புள்ளைய நீங்க தானே எழுப்ப சொன்னீங்க?” பதிலுக்கு விஷ்வா கத்த,
“அதுக்கு?”
“எழுப்பி விட்டு குளிக்க வைக்கறோம்…” ஜீவா கத்தினான்.
“டேய்… வந்தேன்னா அவ்வளவுதான் தான்டா…” கார்த்தியாயினி திரும்பவும் கத்தினார்.
அவரது கத்தல்களுக்கு எல்லாம் கொஞ்சமும் அசைந்து கொடுக்காமல், இன்னொரு ஜக் நீரை கையில் எடுத்துக் கொண்ட ஜீவா,
“பாப்பா… அரைகுறையா குளிக்க கூடாது…” என்றவாறு அவளை நோக்கி போக, அவள் சிரித்துக் கொண்டிருந்த விஷ்வாவை பார்த்து,
“அடேய் எருமை… நீயெல்லாம் ஒரு அண்ணனாடா? இந்த எருமை என் மேல தண்ணிய ஊத்துது… அதை பார்த்துட்டு சிரிக்கிறியே பக்கி…” விஷ்வாவின் மேல் தலையணையை ஏறிய,
“ஏய் ஆடிக்கொருதரம் அமாவாசைக்கு ஒரு தரம் குளிக்கற உன்னை, குளிப்பாட்டி விட்டு இருக்கோம்ன்னு சந்தோஷப்படு…” விஷ்வா அதற்கும் மேல் அவளை வம்பிழுக்க,
“காட்டேரி… உன்னை முதல்ல கொல்லனும்டா…” என்றவளின் மேல் மற்றொரு ஜக்கை கவிழ்த்தான் ஜீவா. மதியின் கண்களில் கொலைவெறி தாண்டவமாடியது.
“டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்யி எருமை மாடு… பரதேசி…” என்று கத்தி கொண்டு எழுந்தவள் கையில் கிடைத்த தலையனையை எடுத்து கொண்டு ஜீவாவை துரத்தினாள்!
“டேய் எருமை… ஒழுங்கா நில்லு…”
“எதுக்கு?உன்கிட்ட நான் அடி வாங்கவா… போடி…” சிக்காமல் அவளுக்கு போக்கு காட்ட,
“பேயே… பிசாசே… நீயெல்லாம் மனுஷனா… தூங்கற பச்சை குழந்தை மேல தண்ணீ ஊத்தி வைக்கற…” என்று அவனை பிடிக்க முயல அவளிடம் சிக்காமல்,
“யாருடி பச்ச குழந்தை?” என்று விஷ்வா கேட்க,
“வேற யார்? இதோ இந்த ரத்த காட்டேறிதான்…” என்றான் ஜீவா.
இருவருக்குமிடையில் கபடி போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
கிண்டலாக கூறியவன் லாவகமாக தப்பித்து ஓட, அவனது காலை இடறி விட்டாள் மதி… சோபாவில் பொத்தென்று விழுந்தவனை கோழி அமுக்குவது போல அமுக்கியவள்,
“அத்தை… சீக்கிரம் இங்க வா… அப்படியே தண்ணீ கொண்டு வா…” அவளது அத்தையை நோக்கி கத்தியவளை கலவரமாக பார்த்தான் ஜீவா!
“ஏய் விடுடி… ஹாஸ்பிடல் கிளம்பனும்… டேய் விஷ்வா… இந்த எருமை கிட்ட சொல்லுடா… ஐயோ… இவ வெய்ட்ட வேற தாங்க முடியலையே… குண்டு கத்தரிக்கா…” என்று கத்தியவனை தலையணையால் அடித்தாள். கார்த்தியாயினி சிரித்து கொண்டே தண்ணீர் கொண்டு வந்தார்.
“அம்மா… நீயெல்லாம் ஒரு அம்மாவா…” ஜீவா கத்த…
“ஏன்… நீ அவ கிட்ட வம்பிழுக்காம ஒழுங்கா போயிருந்தா இந்த நிலைமை இல்லையே… நீ பண்ணதுக்கு வாங்கி கட்டற…” அவர் தப்பித்து கொள்ள… சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல் என்று அவளிடம் சரணடைந்தான்!
“சர்… ஒரு ஆப்ளிகேஷன்…” அவர் தயங்கி கொண்டு ஆரம்பிப்பது புரிய,
“சொல்லுங்க…” சற்று அழுத்தமாக கேட்டான்.
“சர்… எனக்கு தெரிஞ்ச ஒரு பேமிலி… கிட்னி ட்ரான்ஸ்பிளான்டேஷன்க்காக வெய்ட் செய்றாங்க… கெடாவர் ஸ்பெக் எல்லாம் அவருக்கு ஒத்துபோகுது… கிட்னி ட்ரான்ஸ்ப்ளான்டுக்கு அவங்களை கன்சிடர் பண்ணலாமா?” வெகு இயல்பான குரலில் கேட்டார்.
முந்தைய தினம் தான் அந்த கெடாவரின் ஸ்பெக்ஸ் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்து கொண்டிருப்பவர்களில் யாருடன் எல்லாம் ஒத்து போகிறது என்பதை பார்த்து முடிவு செய்துவிட்டு, உறுப்புக்களை அறுவடை செய்யும் பணி துவங்கியிருந்தது. இருதய அறுவை சிகிச்சையை உடனடியாக நடத்த முடிவு செய்து விட்டவர்கள், மற்றதை சற்று தள்ளி வைத்திருந்தனர். அதிலும் சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு ஆட்களை தேர்ந்துஎடுத்தும் விட்டாகிவிட்ட நிலையில் இவர் ஏன் குட்டையை குழப்புகிறார் என்று புரியாமல் பார்த்தான்.
(கெடாவர் என்பது இறந்த பிணத்தை குறிப்பது… மூளை சாவு ஏற்பட்டவர்களின் பாகங்களை இறந்த பின் பலருக்கும் உபயோகமாக தானம் கொடுப்பது ஆர்கான் டொனேஷன்… )
“ஓஹோ… அப்படியா? நேற்று நைட் எல்லாரும் உட்கார்ந்து டிஸ்கஸ் பண்ணித்தானே டிசர்வ்ட் பேஷன்ட்ஸ டிசைட் பண்ணினது… அப்போவே சொல்லியிருக்கலாமே ராமகிருஷ்ணன்?” சாந்தமாக அதே சமயம் சரியான புள்ளியை பிடித்து அவன் கேட்டபோது அவரால் பதிலளிக்க முடியவில்லை! காரணம் அப்போது பேரம் அவருக்கு ஏற்றார் போல படிந்து வந்திருக்கவில்லை. சற்று பெரிய தலையான அந்த நோயாளி இப்போது எவ்வளவு வேண்டுமானாலும் தர தயாராக இருந்தார்.
“சார்… அப்போவே சொல்லி இருப்பேன்… சட்டுன்னு நினைவுக்கு வரலை…” வாய்க்கு வந்ததை உளறினார் ராமகிருஷ்ணன்! அவரது அந்த உளறலை கேட்டவனுக்கு எரிச்சலாக இருந்தது. ஜீவாவை பொறுத்தவரை செய்யும் தொழிலில் நேர்மையை எதிர்ப்பார்ப்பவன். சில விழுமியங்களிலிருந்து தவறக் கூடாது என்று நினைப்பவன். அவனும் இவரது இந்த கோல்மால்களை பற்றி கேள்விப்பட்டு இருந்தான். விஷ்வாவுடன் விவாதித்துமிருந்தான்.
“சர்… என்ன சொல்றீங்க?” ஒன்றும் தெரியாதவர் போல கேட்டார்.
“டோன்ட் ப்ளே வித் மீ… இங்க ஆர்கான் ட்ரேடிங் பண்ண கூடாது… திஸ் இஸ் நாட் தி பிளேஸ் பார் ஆர்கான் ட்ரேடிங்… என்னோட ஸ்ட்ரிக்ட் ஆர்டர் இது… அதை மீறி ப்ரோக்கர்ஸ் கூட பார்ட்னர்ஷிப் வெச்சுகிட்டு உங்க இஷ்டத்துக்கு ட்ரேட் பண்ண நினைச்சா சரி இல்ல ராமகிருஷ்ணன்… ஐ வார்ன் யு…” மிக மிக கடுமையாக அவன் கூற,
“ப்ளீஸ்… ரொம்ப பெரிய இடம் சர்… எவ்வளவு பணம் வேணும்னாலும் தர ரெடியா இருக்காங்க… இந்த மாதிரி ஆப்பர்ச்சுனிட்டிஸ விடறது புத்திசாலித்தனம் இல்ல… என்னோட அனுபவம் உங்க வயசு…” ராமகிருஷ்ணனின் குரலில் ஒரு அழுத்தம் வந்திருந்தது!
“என்ன ராமகிருஷ்ணன்… மிரட்டி பார்க்கறீங்களா… உங்க சேவை இனிமே இந்த ஹாஸ்பிட்டல்க்கு தேவை இல்லை… நான் கிளம்பி வந்துட்டு இருக்கேன்… கெட் ரெடி டூ வைண்ட் அப்…” என்று கூறி விட்டு கோபமாக செல்பேசியை வைத்தான் ஜீவா!
பேசிய அனைத்தையும் கேட்டு கொண்டிருந்த விஷ்வா,
“ச்சே… பிணம் தின்னி கழுகுங்க… பிணத்தை கூட சேல்ஸ் பண்ற நாய் கூட்டம்… குள்ளநரிங்க…” உள்ளுக்குள் கொதித்த கோபத்தை வார்த்தைகளால் வெளியிட்டான்! ஒரு பெரிய மூச்சை உள்ளே இழுத்து கொண்டு விஷ்வாவின் முதுகை தட்டி கொடுத்தான் ஜீவா!
“பார்த்துக்கலாம் விடு…”
“ஏன் ஜீவா இப்படி இருக்காங்க?… இவங்களை நம்பித்தானே மக்கள் அவங்களோட உயிரை ஒப்படைக்கறாங்க… ஒரு உயிரை காப்பாற்ற வேண்டிய நிலைல இருக்க டாக்டர்ஸ் இப்படியெல்லாம் செய்யலாமா? டாக்டர்சை கடவுளா பார்க்கறாங்க மக்கள்… ஆனா இவங்க இந்த மாபியா கும்பலோட சேர்ந்துகிட்டு… ச்சே…” குரலில் அதிகபட்ச சூடு வந்திருந்தது விஷ்வாவிற்கு!
“போய் கவனிச்சுக்கலாம் விஷ்வா… கண்டிப்பா இதுக்கு ஒரு புல் ஸ்டாப் வெச்சே ஆகணும்…”
“ட்ரை பண்ணுவோம் விஷ்வா… கிணத்துல குதிச்சு பார்த்தாதான் ஆழம் தெரியும்…” மிகவும் தீவிரமான குரலில் ஜீவா கூற… அதை கேட்டவனின் முகத்தில் குறும்பு புன்னகை வந்திருந்தது.
“சரி சரி… நீ இந்த ஆழத்தையாவது பாரு…” நக்கலாக சிரித்தவனின் முதுகை தட்டிய ஜீவா, காரில் ஏறும் முன் சுற்றும் முற்றும் பார்த்தான்!
“என்ன மாமா பாக்கற?”
“இல்ல… நீ ஏ ஏ வா கடிக்கறதை யாராவது கேட்டுட்டா… அதான்…” சிரித்தான்!
“பாஸ்… நான் கம்பேர் பண்ணது மனசு… நீ என்ன அர்த்தம் எடுத்துகிட்ட…” அவனது குறும்பு எக்கச்சக்கமாக கூடி இருக்க,
“டேய்… வேணாம்டா… நான் சீரியஸ் மூடுக்கு போயிட்டேன்… அதனால தப்பிச்ச…” சிரித்து கொண்டே கூறினான் ஜீவா!
விஷ்வா இப்படித்தான்!… ஜீவா எவ்வளவு டென்ஷனாக இருந்தாலும் அந்த சூழ்நிலையை அப்படியே மாற்றி விடுவான்… இவனை திருமணம் செய்யும் பெண் மிகவும் கொடுத்து வைத்தவள் என்று பல முறை இவனிடமே கூறி இருக்கிறான் ஜீவா… ஆனால் திருமணம் அவனை பொறுத்தவரை…
லைசென்ஸ் வாங்கிய விபச்சாரம்!
இப்படி ஒரு கருத்தை கொண்டிருப்பவனை என்ன செய்ய?வீட்டில் வாய் திறக்க மாட்டானே ஒழிய அவனது திருமணம் குறித்தான மதிப்பீடுகள் மிகவும் குறைவானதுதான்! காரணம் இல்லாமல் இல்லை…
மேகங்கள் கூடி இருக்க… குளிர் காற்று இருவரின் முகத்தையும் தொட்டு விட்டு சென்றது… ஆழ்ந்து சுவாசித்து கொண்டே காரில் சாவியை சொருகியவனின் கைகளில் பட்டு தெறித்தது மழைத்துளி!
நிமிர்ந்து பார்த்தான் ஜீவா… வானம் வாரி வழங்க ஆயத்தமாகி கொண்டு இருந்தது… பார்த்து கொண்டிருக்கும் போதே சட சடவென மழை தூவ தொடங்க… கன்னத்திலும் உதட்டிலும் பட்ட மழை துளியை சுவைத்தான்… இனித்தது!… இன்னும் கொஞ்ச நேரம் என்று மனம் கேட்டது! மன கண்களில் ஏதேதோ தோற்றம் தோன்றி அலைகழிக்க… நின்று தோட்டத்தை பார்க்க… குளிரில் நடுங்கியபடி நின்றிருந்தது ஒரு குட்டி அணில்… முகம் புன்னகையில் விகசித்தது!
செல்பேசி மீண்டும் அழைக்க… மனமே இல்லாமல்… கிளம்பினான்!
Leave a Reply
Please use the coupon code DISC20 for 20%discounts on all products Dismiss