IMTP–EPI 18

அத்தியாயம் 18

பினாங்கு, மலேசியா

ட்ரேக்டரை வளைத்துத் திருப்பினான் முத்து.

“ஏப்பா, சீக்கிரம் செம்பணை குலைங்கள ஏத்துங்கப்பா. நான் கம்பேனியில இறக்கிட்டு அடுத்த நடை வரனும். இப்பவே மழை இருட்டுது.” என வேலை செய்பவர்களை துரிதப்படுத்தினான் முத்து.

அப்போழுது அங்கே வந்த மண்டோரை பார்த்தவன்,

“மண்டோர்! நானும் இங்க வந்து பல மாசம் ஆச்சு. லீவும் குடுக்க மாட்டிக்கறீங்க. எனக்கும் ஆத்தா, கட்டிக்கப் போற பொண்ணு எல்லாம் இருக்குல்ல. நான் ஒரு எட்டுப் போய் பார்த்துட்டு வரேனே” கெஞ்ச ஆரம்பித்தான்.

“என்னப்பா உன்னோட பெரிய தொல்லையா போச்சு! இங்க ட்ராக்டர் ஓட்ட ஆள் பத்தலன்னு தானே துரை செலாங்கூர்ல(சுப்புவும், முத்துவும், துரையும் இருக்கும் மாநிலத்தின் பெயர்) இருந்து உன்ன இங்க அனுப்பி வச்சிருக்காரு. போறேன் போறேன்னு குதிச்சா, இங்க மாத்துக்கு ஆளு வேணாமா? கொஞ்சம் பொறுப்பா. ஆள் கிடைச்சதும் உங்க எடத்துக்கே அனுப்பறேன்” சொல்லியவர் கிளம்பிவிட்டார்.

‘வேலையாச்சு மசுராச்சுன்னு தூக்கிப் போட்டுட்டு போலாம்னா, வயசான ஆத்தாக்கு கஞ்சிக்கு எங்க போறது? நமக்கு தெரிஞ்சது இந்த ட்ராக்டர் ஓட்டற வேலைதான். நல்ல சம்பளம் வேற. அப்பன் வாங்கன கடன எல்லாம் இப்போதான் அடைச்சேன். இனி தானே கண்ணாலத்துக்கு காசு சேர்க்கனும். நாலு காசு இருந்தாதானே சுப்பு புள்ளய கண் கலங்காம பாத்துக்க முடியும்.’

அவளை நினைக்கும் போதே நெஞ்சுக்குள் ஜில்லென சாரல் அடித்தது.

“சீக்கிரமா வரேன் புள்ள. வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன, கட்டிக்கிட்டு வந்துரறேன். என் வீட்டுலயே, என் கண்ணு முன்னாலயே மொள்ளமா வயசுக்கு வா. மாமன் காத்துருப்பேன். என் லெச்சுமிடி நீ” முனகிக் கொண்டான்.

 

“எதுக்கு வேலைக்குப் போவாம என் பின்னாலேயே சுத்திட்டு இருக்கீங்க துரை?”

துணி துவைக்கும் கல்லில், எட்வர்டின் சட்டையைத் துவைத்தவாறே கேட்டாள் சுப்பு. அவள் அருகிலேயே அமர்ந்து அவள் வேலை செய்யும் அழகை ரசித்துக் கொண்டிருந்தான் எட்வர்ட்.

அவள் கேட்டது போல இந்த ஒரு வாரமாக அவளை விட்டு அங்கே இங்கே நகரவில்லை எட்வர்ட். அவள் வேலை செய்யும் போது அவள் அருகிலேயே இருப்பான். சமைக்கும் போது உதவுவான். மொத்தத்தில் பூனைக்குட்டி மாதிரி அவளை உரசிக் கொண்டே சுற்றினான். இரவில் கட்டிப் பிடித்துக் கொண்டு படுத்துக் கொண்டான். முதலில் அவன் கட்டிப்பிடிப்பதற்கு முரண்டினாலும், சில நாட்களில் அந்த இதத்திற்கும் பழகிக் கொண்டாள் சுப்பு. அதை தாண்டி ஒரு எட்டு கூட அவன் எடுத்து வைக்கவில்லை.

“இப்பத்தானே நமக்கு கல்யாணம் ஆகி ஒரு வாரம். அதுக்குள்ள எப்படி வேலைக்குப் போகறது ப்ளேக்கி? பொண்டாட்டி கூட பேசி பழக வேணாமா?” குறும்புடன் கேட்டான் எட்வர்ட்.

“நான் இங்க வேலைக்கு வந்ததுல இருந்து தான் பழகறோம். இப்போ மட்டும் என்ன புதுசா?” அவனைத் திரும்பி பார்க்காமலே வேலையில் கவனமாய் இருந்தாள் சுப்பு.

“அப்ப இருந்ததும், இப்ப இருக்கறதும் சமமா ப்ளேக்கி? அப்போ நீ வெறும் ப்ளேக்கி, இப்போ என் டார்லிங் ப்ளேக்கியாச்சே!”

“டார்லிங்னா?” வேலையை நிறுத்தி விட்டு அவன் முகத்தைப் பார்த்து கேட்டாள் சுப்பு.

“டார்லிங்னா எப்படி சொல்லறது? ஹ்ம்ம் அன்பே, உயிரே, செல்லமே இப்படி நிறைய அர்த்தம் வரும் ப்ளேக்கி”

“அன்பே, உயிரே, செல்லமே எல்லாம் நானா துரை?” கண்கள் விரிய ஆர்வமாக கேட்டாள் சுப்பு.

“நீதான் ப்ளேக்கி. என் பொண்டாட்டி தானே நீ? அப்போ அதெல்லாம் நீ தான்.”

“நீங்க என்னை டார்லிங்குன்னு கூப்பிட்டா, நான் உங்கள எப்படி கூப்பிடட்டும்?”

“நீயும் டார்லிங்கு அப்படின்னு கூப்புடு ப்ளேக்கி. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்” முறுவலித்தான்.

“ச்சேச்சே! அப்படிலாம் கூப்புடக் கூடாது. ஆத்தா எங்க அப்பார மாமான்னு கூப்புடுவாங்க. புருஷன அப்படிதான் கூப்டனும். உங்களுக்கு ஒன்னும் தெரியல!”

“ஹ்ம்ம்! எனக்கு ஒன்னும் தெரியல? எல்லாம் என் நேரம் ப்ளேக்கி! டார்லிங்னு கூப்புடு ப்ளெக்கி. என் செல்லம்ல!” ஆசையாக கேட்டான் எட்வர்ட்.

“நீங்க என்னை கட்டிக்கிட்டாலும் எப்பவுமே எனக்கு துரைதான். வேணும்னா துரைலிங்னு கூப்டவா?”

வாய்விட்டு சிரித்தான் எட்வர்ட்.

“இதுவும் நல்லாதான் இருக்கு. அப்படியே கூப்பிடு”

“துரைலிங்!”

“ஹ்ம்ம்”

“துரைலிங்”

“சொல்லு ப்ளேக்கி”

“சும்மாதான் கூப்புட்டு பாத்தேன். கன்றாவியா இருக்கு. போங்க துரை! நான் துரைன்னுதான் உங்கள கூப்டுவேன். அதுதான் எனக்குப் புடிச்சிருக்கு. அன்னிக்கு உங்க முழு பேரு சொன்னீங்களே, அது என்ன? ஈங்கிலுசுல இருக்கவும் எனக்கு மறந்துப் போச்சு”

“அடிப்பாவி! என்னைக் கல்யாணமே பண்ணிக்கிட்டே, இன்னும் என் பேரு தெரியாதா?”

“நான் வந்ததுல இருந்து துரைன்னுதானே கூப்புடறேன். என் பேரு, ஊரு, என் குடும்பம் பத்திலாம் நான் தான் வாய் ஓயாம பேசுறேன். நீங்க என்னிக்காச்சும் பேர தவிர வேற எதாச்சும் சொல்லிருக்கீங்களா? ஆரம்பத்துல பட்டு அக்காட்ட கேட்டேன். எட்டுன்னு சொன்னாங்க. இம்புட்டு அழகா இருக்கீங்க, உங்களுக்குப் போய் எட்டுன்னு பேரு வச்சிருக்காங்களேன்னு கவலையா இருந்துச்சு தெரியுமா!”

அமைதியாக அவளையேப் பார்த்திருந்தான் எட்வர்ட். அவனிடம் இருந்து சத்தம் வராததால் துணி அலசுவதை விட்டுவிட்டு அவனை நிமிர்ந்துப் பார்த்தாள் சுப்பு. வேதனையில் கசங்கி இருந்த அவன் முகத்தைப் பார்த்ததும் இவளுக்கு திக்கென இருந்தது. அவள் பார்ப்பத்தைப் பார்த்ததும் முயன்று தன் முகபாவத்தை மாற்றிக் கொண்டான் எட்வர்ட்.

“என்னைப் பத்தி எதுவுமே சொல்லாம உன்னைக் கல்யாணம் செஞ்சதுல உனக்கு கோபம் இல்லையா ப்ளேக்கி?”

“உங்க கிட்ட நான் கோபப்படுவேனா துரை? எனக்கு சொன்னா புரியாதுன்னு சொல்லாம விட்டுருப்பீங்க.”

“அப்படி இல்ல ப்ளேக்கி. என் குடும்பத்த பத்தி சொல்லறதுக்கு எனக்குப் பிடிக்கல. சந்தோஷமா ஆரம்பிக்க வேண்டிய நம்ம வாழ்க்கைய எதுக்குப் பழைய குப்பைலாம் கிளறி நரகமாக்கிக்கனும்னு தான் சொல்லல.”

வேதனை கலந்து ஒலித்தது அவன் குரல். சொல்லி வாய் மூடுவதற்குள், பளிச்சென தண்ணீர் அவன் முகத்தில் வாரி அடிக்கப் பட்டது.

பதறி போய் முகத்தைத் துடைத்தவன் முன்னே, சிரித்த முகத்துடன் நின்றிருந்தாள் சுப்பு.

“ஏ ப்ளேக்கி! என்ன பண்ண இப்போ?”

“தெரியல? உங்க சோக மொகம் எனக்குப் பிடிக்கல. அதான் தண்ணி ஊத்தி கழுவுனேன்” விழுந்து விழுந்து சிரித்தாள்.

அவள் சிரித்து முடிப்பதற்குள் தொப்பலாக நனைந்திருந்தாள். நிமிர்ந்து பார்த்த போது சிரித்த முகத்துடன் நின்றிருந்தான் எட்வர்ட்.

“இப்போ எதுக்கு என்னை குளிப்பாட்டி விட்டீங்க துரை?” கோபமாக கேட்டாள் சுப்பு.

“நீ முகம் கழுவி விட்டா, நான் ஒரு படி மேல போய் குளிக்க வைக்கனும்ல. அதான் இப்படி பண்ணேன். இனிமே இந்த விளையாட்ட என் கிட்ட வச்சிக்குவ?” மிதப்பாக கேட்டான்.

அவன் பேசி முடிப்பதற்குள் அவன் மேல் சவர்க்கார தண்ணீரை ஊற்றி இருந்தாள் சுப்பு. தலை உடலெல்லாம் சவர்க்கார நுரையோடு சுப்புவை முறைத்துப் பார்த்தான் எட்வர்ட்.

“என்னைய தண்ணி மட்டும் தானே ஊத்து குளிபாட்டுனீங்க. நான் உங்கள சவக்காரம் போட்டு குளிப்பாட்டிட்டேன். எப்புடி?” கலகலவென நகைத்தாள் அவள்.

அங்கே ஆரம்பித்தது இரண்டு பேருக்கும் சண்டை. கையில் வைத்திருந்த சின்ன வாளியால், தொட்டியில் பிடித்து வைத்திருந்த தண்ணீர் முடியும் வரை மாற்றி மாற்றி ஒருவர் மேல் ஒருவர் ஊற்றிக் கொண்டனர்.

கடைசியாக கொஞ்சம் தண்ணீர் மட்டும்தான் இருந்தது. யார் அதை அள்ளுவது எனும் போட்டியில் இருவரும் நின்றிருந்தனர்.

“போதும் விடுங்க துரை. நான் தோத்துட்டேன். எனக்கு குளிருது வேற.” என உடல் நடுங்க நின்றிருந்தாள் சுப்பு.

“சரி வா, துவட்டிக்க சுப்பு” என அவன் வாளியைக் கீழே போடவும், சட்டென மீதமிருந்த நீரை வாரி அவன் மேல் அடித்தவள், நாக்கைத் துருத்தி அழகு காட்டிவிட்டு ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தாள்.

“ச்சீட்டர்! இரு வரேன்.” என அவளைத் துரத்தினான் எட்வர்ட். வீட்டை சுற்றி சத்தமிட்டு சிரித்தப்படியே அவள் ஓட,

“என் கையில மட்டும் கிடைச்ச ப்ளேக்கி, இன்னிக்கு உனக்கு அடிதான்” என கத்தியபடியே துரத்தினான் எட்வர்ட். அவளை நெருங்கியவன், காற்றில் பின்னோக்கி பறந்த தாவணியை பற்றி இழுத்தான். அது அவன் கையோடு வந்தது. இருவரின் ஓட்டமும் பட்டென நின்றது.

அவனை நோக்கி மெல்ல எட்டு எடுத்து வைத்து நடந்து வந்தாள் சுப்பு. கைகள் தாமாக தாவணிக்காக நீண்டன. அவள் அசைந்து நடந்து வரும் அழகை கண் இமைக்காமல் பார்த்திருந்தான் எட்வர்ட். எட்வர்டின் கண்கள் போன திசையைப் பார்த்த சுப்புவுக்கு எங்கிருந்துதான் வெட்கம் வந்தது என தெரியவில்லை. மார்பின் குறுக்காக இரு கைகளையும் கட்டிக் கொண்டவள், அவனுக்கு முதுகு காட்டி நின்றுக் கொண்டாள்.

“துரை!” கோபமாக அழைப்பதாக நினைத்துக் கொண்டு சிணுங்கலாக அழைத்தாள்.

“ஹ்ம்ம்” அவனின் காலடி ஓசை மட்டும் தான் கேட்டது.

“ஏன் என்னை அப்படி பாக்கறீங்க?”

காலடி இன்னும் நெருங்கியது.

“எப்படி பார்க்கறேன் ப்ளேக்கி?”

“வயிறு திகு திகுன்னு பசிக்கறப்போ, கோழி கறிய பார்க்கற மாதிரி”

சடாரென நெருங்கியவன், தாவணியைப் போட்டு அவள் உடலை மூடி, பின்னாலிருந்து இறுக்கி அணைத்துக் கொண்டான். அவள் கழுத்தில் தாடையைப் பதித்துக் கொண்டவன், அவள் இடுப்பை சுற்றி இரு கைகளையும் இறுக்கிக் கொண்டான். முகம் மட்டும் சிரிப்பில் மலர்ந்திருந்தது.

“எப்படி ப்ளேக்கி என்னோட மனநிலைய சட்டு சட்டுன்னு மாத்தி விட்டுருற? சொட்ட சொட்ட நனைஞ்சி போய் தாவணி இல்லாம நின்ன உன்ன பாத்து நான் என்ன நிலமைல இருந்தேன் தெரியுமா? இப்பவே உன் புருஷனா ஆகிறனும்னு வெறில இருந்தேன். பட்டுன்னு என்னை சிரிக்க வச்சு, மறுபடியும் உனக்கு ஒரு காவலனா தள்ளி நிக்க வச்சிட்டீயே! என்னால முடியல ப்ளேக்கி!”

கழுத்தோரமாய் வீசிய மஞ்சள் வாசத்தை ஆழ்ந்து சுவாசித்தவன், மென்மையாய்  அங்கொரு முத்தத்தைப் பதித்தான்.

அவனது செய்கையில் நெளிந்தாள் சுப்பு.

“துரை, கூசுது. விடுங்க”

“கொஞ்ச நேரம் இப்படியே நில்லு ப்ளேக்கி. ப்ளீஸ். வேற ஒன்னும் பண்ண மாட்டேன். இப்படியே நில்லு போதும்”

சொன்ன மாதிரியே வேறொன்றும் செய்யாமல் மென்மையாய் அணைத்தப்படி நின்றான் எட்வர்ட். தொப்பலாக நனைந்திருந்தவள், குளிருக்கு இதமாய் இருந்த அணைப்பில் அமைதியாக நின்றிருந்தாள். ஜோனி வந்து சுப்புவின் காலை சுரண்டும் வரைதான் அவளின் அமைதி நிலைத்திருந்தது.

“துரை, தூக்குங்க. என்னை தூக்குங்க! ஜோனி, ஜோனி!” என அவள் கத்த ஆரம்பிக்கவும் அலேக்காக அவளைத் தூக்கிக் கொண்டான் எட்வர்ட்.

“ஜோனி கிட்ட என்ன பயம் ப்ளேக்கி? என்னை மாதிரியே அதுக்கும் உன் மேல மயக்கம். அதான் சந்தர்ப்பம் கிடைக்கறப்பல்லாம் உன்னை வம்பிழுக்குது” சிரித்தான் எட்வர்ட்.

என் ஆள எதுக்கு நீ தூக்கி வச்சிருக்க என்பது போல எட்வர்டைப் பார்த்தது ஜோனி.

“ஷீ இஸ் மைன் ஜோனி! நவ் கோ டு யுவர் ப்ளேஸ்” என்றான் எட்வர்ட்.

எம்பி சுப்புவின் காலை நக்கிக் கொடுத்து விட்டு, இப்ப என்ன செய்வ என்பது போல பார்த்து விட்டு அதன் இடத்துக்குப் போனது ஜோனி.

எட்வர்டுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

“ஐயே! என் கால எச்சிப் பண்ணிட்டு போயிருச்சு. ராங்கி பிடிச்ச ஜோனி”

தூக்கிப் பிடித்திருந்தவளை சிரித்தபடியே நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் எட்வர்ட்.

“உன் கிட்ட என்னமோ மேஜிக் இருக்கு ப்ளேக்கி”

“மேஜிக்னா?”

“மாயம், மந்திரம்!”

“க்கும். அது ஒன்னுதான் குறைச்சலா இருக்கு என் கிட்ட. போங்க துரை”

“நெஜமா ப்ளேக்கி. உன்ன சுத்தி உள்ளவங்கள எப்பொழுதும் சந்தோஷமா வச்சிக்கிற மேஜிக் உன் கிட்ட இருக்கு. இந்த ஜென்மத்துல என்னால இந்த மேஜிக்ல இருந்து விடுபட முடியுமான்னு தெரியல.” லேசாக அவளைத் தூக்கி அவள் உதட்டில் பட்டும் படாமல் தன் உதட்டை உரசினான் எட்வர்ட்.

“துரை, அன்னிக்கு படத்துல அந்த அண்ணா அக்காவுக்கு அஞ்சு நிமிஷம் உதட்டுல ஒத்தடம் குடுத்தாறே! நீங்க மட்டும் ஏன் வச்சதும் எடுத்துருறீங்க? அன்னிக்கு உங்க கோயில்லயும் இப்படிதான் செஞ்சீங்க” வம்பை தானே விலைக்குப் பேசினாள் சுப்பு.

அவளைத் தூக்கி வந்து வீட்டினுள் விட்டவன்,

“ப்ளேக்கி டார்லிங்! நீ தெரிஞ்சு தான் பேசறியா இல்லை புரியாம பேசறியானே எனக்கு விளங்கல. ரொம்ப நேரம் உதட்டுக்கு ஒத்தடம் கொடுத்தா, அப்படி இப்படி ஆகி, நமக்கு பூவுக்கு பதிலா புள்ள பொறந்திரும் ப்ளேக்கி!” என சொல்லி சிரித்தான்.

“போங்க துரை! நீங்க எப்போ பாரு என்னைக் கிண்டல் பண்ணறீங்க. நம்ம உதடு ஒட்டிக்கறப்போ எனக்கு ஜிவ்வுன்னு பறக்கற மாதிரி இருக்கு தெரியுமா?  பட்டுன்னு நீங்க விலகி போறப்போ தொபுக்கடீர்னு கீழ விழுந்துடற மாதிரி இருக்கு. இன்னிக்கு ரொம்ப நேரம் ஒத்தடம் குடுங்க துரை!” கெஞ்சினாள் சுப்பு.

“இதுக்குலாம் கெஞ்சக் கூடாது ப்ளேக்கி. குடுடான்னு சொல்லு குடுக்கறேன். இப்போ போய் துணி மாத்திக்க. ராத்திரி நெறைய குடுக்கறேன்” என சிரித்தமுகமாக அவளை உள்ளே அனுப்பி வைத்தான். இவனும் நனைந்திருந்த உடைகளை மாற்றி வரவும், வெளியே ஆட்கள் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

எஸ்டேட்டில் இருந்து மூன்று பேர் வந்திருந்தனர். அவர்களை பங்களாவின் பக்கவாட்டில் இருந்த காலி மனைக்கு அழைத்து சென்று, தோட்டம் வைக்க கொத்தி விட சொன்னான் எட்வர்ட். அவர்கள் வேலை செய்வதை பார்த்துக் கொண்டிருக்கும் போதே முனியனும் அங்கே வந்தான்.

“துரை, நீங்க கேட்ட சூரியகாந்தி பூ விதை. நீங்க சொன்ன எஸ்டேட்டுக்கு போய் வாங்கிட்டு வந்தேன். அப்படியே நீங்க கேட்ட சூரியகாந்தி பூவும் பறிச்சுட்டு வந்தேன்”

எடுத்து வந்திருந்த பூக்களை எட்வர்டிடம் நீட்டினான். இதுவரை அவர்கள் முன் முதலாளித்துவத்துடன் நின்றிருந்தவன் முகம் அந்தப் பூக்களைப் பார்த்ததும் புன்னகையைப் பூசிக் கொண்டது. அவற்றை கையில் வாங்கி மெல்ல வருடிக் கொடுத்தான் எட்வர்ட். அவன் முக மாற்றத்தை அதிசயமாக பார்த்திருந்தான் முனியன்.

“முன்யா, நீயே கூட இருந்து பாத்துக்கோ. நல்லா தோண்டி, இடம் விட்டு விதைய தூவி, தண்ணி விட சொல்லு. அப்பப்போ ஒரு ஆள் வந்து தோட்டத்த பாத்துக்க சொல்லு. சூரியகாந்தி தோட்டம் அழகா வரனும்.” கறாராக சொன்னான்.

“கண்டிப்பா துரை. நீங்க கவலைப்படாம போங்க. நாங்க பாத்துக்கறோம்.” குனிந்து கும்பிட்டான் முனியன்.

பூக்களுடன் பங்களாவின் உள்ளே நுழைந்தான் எட்வர்ட். சுப்பு பார்ப்பதற்குள் அவற்றை கட்டிலின் அடியில் மறைத்து வைத்தான்.

அன்றிரவு சாப்பிட்டு முடித்து எப்பொழுதும் போல ஹாலில் அமர்ந்து தேநீர் அருந்தினர் இருவரும். இப்பொழுதெல்லாம் ஒரு மாற்றம். அவளை மேலே அவனுடன் அமர சொல்லி, முடியாமல் போகவும் எட்வர்டும் கீழே அமர்ந்து தான் தேநீர் அருந்துகிறான்.

சில விஷயங்களை அவன் எடுத்து சொல்லவும் ஏற்றுக் கொள்ள முடிந்த சுப்புவால் பல விஷயங்களை ஏற்று கொள்ள முடியவில்லை. இன்னும் அவனை கணவனாக பார்ப்பதை விட துரையாக தான் பார்த்தாள். அவள் அவன் நிலைக்கு ஏறி வர முடியாத போது, அவன் அவள் நிலைக்கு இறங்கி வந்தான்.

“ப்ளேக்கி, நான் கப்லாம் கழுவி வச்சிட்டு வரேன். நீ போய் நம்ம ரூம்ல உட்காரு. ரொம்ப முக்கியமான நாள் இன்னைக்கு” சிரிப்புடன் சொன்னான்.

“என்ன, என்ன துரை?” அவன் சிரிப்பைப் பார்த்து இவளுக்கும் உற்சாகம் தோற்றிக் கொண்டது.

“நீ போய் உட்காரு. நான் வரேன்” அனுப்பி வைத்தான்.

ஏற்கனவே இருவரும் தேநீர் அருந்தி இருந்ததால் கொஞ்சமாக பால் சூடு செய்து ஒரு கப்பில் எடுத்துக் கொண்டு ரூமுக்கு சென்றான்.

அவனை எதிர்பார்த்து காத்திருந்தவள், அவன் கையில் பாலோடு வரவும்,

“எதுக்கு துரை பாலு? இப்பொதானே டீயி குடுச்சோம்!’ என கேட்டாள்.

பாலை மேசையில் வைத்தவன்,

“ப்ளேக்கி இன்னிக்கு நமக்கு மொத ராத்திரி. நீ சொன்ன மாதிரியே நடக்க போகுது” என சிரித்தான்.

“ஐ நெஜமாவா? பூவ காணோம்!”

“வரும், வரும்! முதல்ல என்ன செய்யனும்? பால் குடிக்கனும் கரெக்டா?”

“இல்ல, நீங்க தப்பு தப்பா செய்றீங்க! சாமி கண்ண குத்தும். பொண்ணுதான் பால் எடுத்துட்டு வரனும்”

“ஓஹோ! சரி, இந்தா பால். ரூம் வெளிய போய்ட்டு மறுபடியும் எடுத்துட்டு வா”

தலையாட்டியவள், பால் கப்பை எடுத்துக் கொண்டு வெளியேறினாள். சிரிப்புடனே பார்த்திருந்தான் எட்வர்ட். அவள் திரும்பி வந்து, பாலை அவனிடம் நீட்டினாள்.

“பல்லு படாம குடிங்க துரை”

“அப்படிலாம் எனக்கு குடிச்சு பழக்கம் இல்ல ப்ளேக்கி” அவள் சொல்லிக் கொடுத்த மாதிரி மேலே தூக்கி ஒழுக விட்டு குடித்தான் எட்வர்ட். வாயைத் துடைத்துக் கொண்டு மீதி பாலை அவளிடம் நீட்டினான்.

அவளும் குடித்து விட்டு, அவன் காலில் விழுந்து வணங்கினாள்.

“இப்போ என்ன செய்யனும் ப்ளேக்கி?”

“தீர்க்காயுசா இருன்னு சொல்லி தூக்கி விடுங்க. கால் வலிக்குது. சீக்கிரம்.”

“இரு இரு! அவசரப்படாதே. தீர்க்காயுசா இரு ப்ளேக்கி” தூக்கி விட்டவன், அப்படியே அவளைக் கட்டிக் கொண்டான்.

“கட்டிப்பிடிக்காதீங்க! அப்படி செய்யக் கூடாது!”

“ஓஹோ! சரி கட்டிப்பிடிக்கல” சிரிப்பை கஸ்டப்பட்டு அடக்கிக் கொண்டான் எட்வர்ட்.

“இப்போ நான் உன் காலுல விழுந்து கும்புடவா ப்ளேக்கி?”

“ஐயோ எதுக்கு துரை?” பதறினாள் சுப்பு.

“நீ விழுந்தயே, நான் விழறது இல்லையா?”

“பொம்பள தான் விழனும். ஆம்பள விழவே கூடாது. தப்பு!”

“ஓஹோ! சரி விடு. அடுத்து என்ன ப்ளேக்கி?”

“பூ எங்க துரை?”

“அஸ்தலவிஸ்தா!” விரல்களை சொடுக்கியவன், கட்டிலின் கீழே குனிந்து பூக்களை எடுத்தான்.

“ஐ சூரியகாந்தி பூ! அப்போ நமக்கு நெஜமா மொத ராத்திரி தான்” குதூகலித்தாள் சுப்பு.

“அப்புறம் நான் இவ்வளவு நேரமா விளையாடறேன்னு நினைச்சியா ப்ளேக்கி? பூ எப்பவோ ரெடி, நானும் ரெடி. நீ ரெடியா? தயாரா இருக்கியான்னு கேட்டேன்”

“ரெடி, ரெடி”

கட்டிலில் அவளை அருகே அமர்த்திக் கொண்டான் எட்வர்ட். ஒரு பூவை அவளிடம் கொடுத்தவன், இன்னொரு பூவை அவன் எடுத்துக் கொண்டான்.

“ப்ளேக்கி, இந்த பூ தான் என்னோட உதடாம். அந்தப் பூ தான் உன்னோட உதடாம். இப்போ ரெண்டும் நீ சொல்லிக் குடுத்த மாதிரி முத்தா குடுத்துக்கப் போகுதாம். நீ மட்டும் எங்கயும் அசையாம என் கண்ணயே பாக்கனும். சரியா? ஒன்னு, ரெண்டு, மூனு!” என எண்ணியவன் தன் பூவை அவள் பூவுடன் ஒட்ட வைத்தான். பார்வையை மட்டும் அவள் கண்களில் இருந்து அகற்றவில்லை எட்வர்ட். பேச வாய் திறந்தவளின் உதட்டை இன்னொரு கையின் விரல் கொண்டு மூடினான். பேசக்கூடாது என சைகை காட்டினான். உதட்டை மூடிய ஆட்காட்டி விரல், அப்படியே நில்லாமல் அவளின் உதட்டை மெல்ல வருடியது.

அவனின் உறைய வைக்கும் பார்வையும், விரலின் மென் தீண்டலும் சுப்புவை ஒரு வித மயக்க நிலைக்கு தள்ளியது. அவள் கையில் இருந்த சூரியகாந்திப் பூ மெல்ல நழுவி கீழே விழுந்தது. அவனின் நெருக்கத்திலும், தீண்டலிலும் உடலில் ஏற்பட்ட ரசாயன மாற்றங்கள் அவளை திக்குமுக்காட வைத்தன.

பார்வையை விலக்காமல் இன்னும் நெருங்கியவன், தன் ஒற்றை விரல் செய்த மாயத்தைத் தன் உதட்டால் செய்ய ஆரம்பித்தான். மென்மையாக ஆரம்பித்த அவனின் இதழ் ஒற்றல், அவளின் ஆர்வத்தில் வலுப்பெற்று இதழ் யுத்தமாக மாறியது. அவள் மூச்சுக்கு திணறவும், விலக்கி அமரவைத்தான் எட்வர்ட்.

கண்களில் ஆச்சரியம் பொங்க,

“இதுதான் உதடும் உதடும் ஒத்தடம் கொடுக்கறதா துரை? நம்ம உதடு ரெண்டு தானே ஒட்டிக்கிச்சு, எனக்கு ஏன் அடிவயித்துல பூரான் ஊறுற மாதிரி குறுகுறுன்னு இருக்கு?” அந்த நேரத்திலும் சந்தேகம் கேட்டாள் சுப்பு.

அவளை அணைத்துக் கொண்டவன்,

“அப்படிதான் இருக்கும் ப்ளேக்கி. இன்னும் கொஞ்சம் மேல போனா, நெருப்புல முங்கி எழுந்திருக்கற மாதிரி இருக்கும். இன்னிக்கு இவ்வளவு போதும். மத்ததெல்லாம் மெல்ல பாத்துக்கலாம்” என விலகி எழுந்தவன் கையைப் பற்றி அமர வைத்தாள் சுப்பு. எக்கி தன் இரு கைகளால் அவன் கன்னத்தைத் தாங்கியவள்,

“இன்னும் ஒத்தடம் வேணும் துரை!” என கேட்டாள்,

“வேணா ப்ளேக்கி. சொன்னா கேட்கனும். திரும்பவும் ஆரம்பிச்சா என்னால நிறுத்த முடியாது. வேணா ப்ளேக்கி, ப்ளீஸ்” கைகளை விலக்க முனைந்தான்.

“நீங்க குடுக்கலைனா போங்க! நான் குடுக்கறேன்” என தன் உதட்டை அவன் உதட்டுடன் பொருத்தினாள். அது மட்டும் தான் அவளுக்கு ஞாபகம் இருந்தது.

“எல்லாத்துலயும் பிடிவாதம்! சொன்ன பேச்சே கேட்கறது இல்ல! சின்ன புள்ளன்னு பார்த்தா எல்லாத்துலயும் ஆர்வக்கோளாறு!” மூச்சு வாங்க, உதடுகள் விலகும் போதெல்லாம் செல்லமாக திட்டிக் கொண்டே மீண்டும் மீண்டும் முத்தமிட்டான் எட்வர்ட்.

அடுத்தக் கட்டத்துக்கு செல்லும் போது, ரொம்பவே பயந்தாள் சுப்பு. பயப்படுகிறாள் என விட்டுவிட்டால், மறுநாள் தன் பக்கமே வரமாட்டேன் என முரண்டுவாள் என நன்கறிந்த எட்வர்ட், அவளே ஆரம்பித்து வைத்த விளையாட்டை முடித்துவிட தீர்மானித்தான். கதவுக்குப் பின்னால் இருப்பது பயந்து நடுங்க வைக்கும் பூதமில்லை, ரசித்து மூழ்க வேண்டிய நாதம் என அவளுக்கு உணர்த்த விரும்பினான்.

ஆறுதலாய் அணைத்து, அன்பாய் பேசி, அவள் மறுக்கும் போதெல்லாம் முத்தமிட்டு, மெல்ல மெல்ல தன் வசப்படுத்தினான்.

அவள் கூச்சங்களை மதித்து, அவள் சிணுங்கல்களை ரசித்து, அவள் மறுப்புக்களை உணர்ந்து, அவள் வலியில் இவன் துடித்து, மென்மையாக அவளைக் கையாண்டான் எட்வர்ட். அவசரமேப்படாமல், காமத்தை ஒதுக்கி காதலை மட்டும் சாறாக்கி அவன் படைத்த அமுதத்தில், மதி மறைந்து பகலவன் எட்டிப் பார்க்கும் தருணத்தில் மெல்ல அவன் வசம் தன்னை ஒப்படைத்தாள் சுப்பு. 

கூடல் முடித்து கண்ணீர் கரையுடன், பயந்துப் பார்த்தவளை ஆதுரத்துடன் அணைத்துக் கொண்டான் எட்வர்ட்.

“துரை, என்னை என்ன பண்ணீங்க?”

“காதல் பண்ணேன் ப்ளேக்கி. என்னோட ப்ளேக்கிய என் காதலால் குளிப்பாட்டுனேன்” முகத்தை நிமிர்த்தி நெற்றியில் முத்தமிட்டான். கன்னத்தில் காய்ந்திருந்த கண்ணீர் கரையைத் துடைத்து விட்டான்.

“எனக்கு இப்படி புடிக்கல துரை”

“சரி, உனக்கு புடிக்கலைனா இனிமே காதல் பண்ண வேணாம்! இப்படியே வாழ்நாள் முழுக்க கட்டிப் புடிச்சுட்டே படுத்துக்கலாம். ஒன்னும் செய்ய வேணாம்.”

கண்ணீர் வழிய,

“நெஜமாவா துரை?” என கேட்டாள் சுப்பு.

“நெஜமா தான் ப்ளேக்கி. இனிமே சூரியகாந்தி பூ வேணும்னு நீயா கேக்கற வரை இது நடக்காது. சத்தியமா ப்ளேக்கி. இப்போ அழாத!” கண்களைத் துடைத்து விட்டான்.

“முத்தா மட்டும் வேணும்! குடுப்பீங்களா?”

“எத்தனை கேட்டாலும் குடுப்பேன்.” மென்மையாக அவள் இதழில் முத்தமிட்டான்.

“எங்கயாச்சும் வலிக்குதா ப்ளேக்கி?”

“இல்ல துரை”

“அப்போ தூங்கு” நெஞ்சில் போட்டுத் தட்டிக் கொடுத்தான்.

அவள் தூங்கிய பிறகும் வெகு நேரம் விழித்திருந்தான் எட்வர்ட். இவ்வளவு தானா உன் கட்டுப்பாடு என மனசாட்சி இடித்துரைத்தாலும், இந்த நிகழ்வு அவளை இன்னும் தன்னுடன் ஆத்மார்த்தமாக பிணைக்கும் என மூளை சமாதானப்படுத்தியது.

அவன் கண்ணயரும் போது மனதில் இருந்தது,

‘இப்படி ஒரு சத்தியம் பண்ணி உனக்கு நீயே ஆப்பு வச்சிக்கிட்டியே! இனி அவளை தொடாம உன்னால இருக்க முடியுமா?” என்பதுதான்.

எட்வர்ட் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தான். அவனுக்கு முன்னே எழுந்து, ஓசை எழுப்பாமல் எட்வர்டின் ரூமில் இருந்து வெளியே வந்தாள் சுப்பு. லேசாக வீங்கிய உதடும், சிவந்திருந்த முகமும், விரிந்திருந்த கூந்தலும், கசங்கிய துணியுமாக, வாடிப் போய் வந்தவள் முன்னே பத்ரகாளியாக நின்றிருந்தார் பட்டு.