Jeevan 16

Jeevan 16

பகுதி 16

எல்லோருக்கும் வணக்கம்
எல்லோருக்கும் வணக்கம்

என்ன பார்க்க வந்த
எல்லோருக்கும் டப்புள் வணக்கம்
வணக்கம்..

ஹேய் பட்டி தொட்டி ஒலிக்கும்
பட்டி மன்றம் நடக்கும்
என்ன மாட்டி விட்ட எல்லோருக்கும்
அடி கிடைக்கும், கிடைக்கும்…

மச்சி தல இந்தா மாலை
உன்ன பார்த்த மனசு ஹெப்பி ஆச்சுடா
ரிலேக்ஸ் மாமு ரிலீஸ் நானே
இனி ஊரே என் கிட்ட மாட்டிக்குச்சுடா

Am a Bad Bad Bad Bad Boy…
am a Bad boy, am a Bad boy……………

ஆரனின் தொலைபேசி தொல்லை பேசியாய் ஒலிக்க….

ஹாலில் அமர்ந்திருந்த சாம்வேலுக்கு தன் மகனின் ரிங்டோன் கேட்டு சிரிப்பு வந்தாலும், தன்னருகே அமர்ந்து தன்னையே முறைத்து கொண்டிருக்கும் தன் சரிபாதியை நினைத்து தன் முகத்தை படித்துக்கொண்டிருந்த பேப்பரின் உதவியுடன் மறைத்து கொண்டார்.

“ஏங்க! பாருங்க உங்க புள்ள லட்சனத்த, அவனே அவன பொறுமையா சொல்ற மாதிரியே இருக்கு. பேட் பாயாம் பேட் பாய்.!”என நொடித்துக் கொண்டே,

“இதுவரைக்கும் நல்லா இருந்த முடிய வேற போய் கலரிங் பண்ற ன்னு கன்ராவியா மாத்திட்டு வந்திருக்கான். இது பத்தாதுன்னு ஒரு காதுல கம்மலு வேற! தூர இருந்து பார்த்தா பொம்பள புள்ள மாதிரி இருக்கு. எல்லாம் தலை எழுத்து ” என தன் ஆருயிர் மகனின் பெருமைகளை பொங்க வைக்க..

இப்போது ஆரனுக்கு சப்போர்ட் செய்தால் அடுத்த பொங்கல் தனக்கு தான் என தெரியாதவராக சாம்வேல்,

“ஜெனிம்மா, அவன் பண்றத பார்த்தா எனக்கு பயங்கற கோபம் வருது. இரு அவன் மட்டும் இப்ப எழுந்து வரட்டும் என்ன பண்றேன்னு மட்டும் பா….. ரு…. !!” என வீராப்பாய் பேசிக் கொண்டிருந்தவர் இறுதி வார்த்தையை முடிக்கும் நேரம்,

“டேய் வாடா! நா ரெடியா தான் இருக்கேன்” என கொட்டாவி விட்ட படியே  பொய்யை உரைக்கும் தன் மகனை பார்த்தவரின், வார்த்தை உள்ளேயே அடங்கியது.

அவன் அவரை பார்த்தவுடன் இதுவரை காட்டிய பொய்யான கோப முகம் மறைய,  “செல்லம் இப்ப தான் எழுந்தியா? என்னடா இன்னைக்கு ஞாயிறு தானே, இவ்வளவு சீக்கிரமா எழுந்துட்ட ! ”  என்றதும், மானசீகமாய் தலையில் அடித்து கொண்டார் ஜெனீபர், காரணம் அப்போது காலை ஒன்பது மணி!!

“டாட்!  இது உனக்கே ஓவரா இல்லையா?! மாம், நீ வரவர சரியா டாடிய கவனிக்கறதில்லைன்னு நெனக்கறேன்?  அதான் என்ன வம்பிழுக்கறார் உன் வீட்டுகாரர். கொஞ்சம் என்னன்னு கவனி !” என்றவுடன்…

ஆர்வமாக ஜெனிபரை பார்த்த சாம்வேல் “கவனிச்சா நல்லா தான்டா இருக்கும்! ஊகூம், எங்க இங்க தான் கவனிப்பே சரியில்லையே! ” என பெருமூச்சோடு, ஒரு மார்க்கமாய் பார்த்தவாரே சொல்ல, இப்போது நேரடியாகவே தலையில் அடித்து கொண்டார் ஜெனி.

“ஏங்க உங்களுக்கு என்ன இன்னும் இளமை ஊஞ்சல் ஆடுதோ! வயசு பையன வச்சிட்டு, நடு ஹாலுல அறிவே இல்ல! ” என தன் வெக்கத்தை அதிகாரத்தால் மறைத்தவர்.

“டேய் செல்லம் நீ வாடா , அந்த கிழவன் கிட்ட என்ன வெட்டி பேச்சு. ஆமா யார் போன்ல எங்கையாவது வெளிய போறையா?” என தன் மகனை செல்லம் கொஞ்சிக் கொண்டே விசாரணை நடத்தும் ஜெனியை பார்த்தவர் எண்ணமெல்லாம்,

‘கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் அப்படி பேசிட்டு இருந்தா! இப்ப தடாலுன்னு மாத்தி கொஞ்சிட்டு இருக்கா! சாமூ , இத்தன வருஷமாகியும் பொண்ணுங்க மனச புருஞ்சுக்க முடியலையே, எப்ப எப்படி மாறி போவங்கன்னு தெரியாலையே!’  என காண்டான சாம்வேலோ, மீண்டும் தன் வேலையை தொடர்ந்தார் (அதாங்க பேப்பர் படிக்காற மாதிரி நடிக்கறது தான், ஏன்னா பையன் சொல்ற பதில் அவருக்கும் தெரியனுமில்ல!)

” ஆமா, மாம், கௌதம் தான் போன்ல,  காலேஜ் ஓப்பன் ஆகுதே அதனால கொஞ்சம் பர்ச்சேஸ் பண்ணனுமாம். அவனுக்கு இன்னைக்கு தான் கொஞ்சம் ப்ரீ.  நாளைக்கு மீட்டிங் இருக்காம். அதான் மால் போறோம்.”

” ஏன் ஆரா இப்ப முழுசா கௌதம் தான் கம்பெனிய பாத்துக்குதா?!”

“எஸ் மாம். பட் சதா அங்கிள் இருக்கறதால அவன் இன்னும் காலேஜ் வந்துட்டு இருக்கான்”  

“சதா அங்கிளால காலேஜ் வர்றானா! என்னடா சொல்ற?!”

“ஆமா மாம், கௌதமோட தாத்தா இறக்கும் போது கௌதம் அப்ப தானே ஸ்கூலிங் முடிச்சிருந்தான். அவனோட தாத்தா கூடவே அவன் இருந்ததால அவனுக்கு பிஸ்னஸ் பத்தி நல்லாவே தெரிஞ்சிருந்துச்சு.

அவன் அப்பவே அவங்க தொழில எடுத்து நடத்தற அளவுக்கு தெளிவா இருந்தாலும்,  அவன் அதுக்குள்ள போயிட்டா மெஷின் மாதிரி ஓடியே ஆகணும். அத்தன பிஸ்னஸ் அவனோட பேர்ல அவங்க தாத்தா உருவாக்கி வச்சிருக்காறே.

அவனோட வாழ்க்கையில அவன் அடைஞ்சத விட இழந்தது தான் அதிகம். இந்த வயசுக்கு உண்டான சந்தோஷத்தையும் சேர்த்து அவன் இழக்கனுமா ன்னு அவரு.. யூஜி, பீஜி ரெண்டும் முடிச்ச பின்னாடி முழு பொறுப்பையும் ஏத்தக்க சொல்லிட்டாரூ.

முக்கியமான மீட்டிங், ஏதாவது கையெழுத்து போடறது இருந்தா காலேஜ்ல இருந்து அந்த டைமுக்கு போற மாதிரி காலேஜ் கரஸ்பாண்டன்ட் கிட்டையே அனுமதி வாங்கிட்டான். டெய்லியும் காலேஜ் முடிஞ்சா கொஞ்ச நேரம் அவனோட ஹெட் ஆப்பீஸ் போய் கணக்கு வழக்கு பார்த்துட்டு தான் வீட்டுக்கே போவான்” என சொல்லிவிட்டு,

“மாம், கதை கேட்டது போதும்! ஒரு டம்ளர் காபி கிடைக்குமா ?!” என கேட்டதுக்கு பிறகே,  அவருக்கும் ஆரன் எழுந்து இதுவரை தான் எதுவும் கொடுக்காமல் இருக்கும் மடத்தனத்தை நொந்தவாறே கிச்சனை நோக்கி சென்றார்.

ஜெனி கிச்சனுக்கு சென்றதை உறுதி செய்து கொண்ட சாமுவேல், “ஆரா  வெள்ளிக்கிழமை நைட் என்னடா ஆச்சு?! நேத்து முழுக்க உன் முகமே சரியில்ல. நானும் கேட்க நேரமில்லாம அர்ஜன்ட் மீட்டிங் ன்னு போயிட்டேன்?” என்ற தந்தையை பார்த்தவன்,

“டாட், ரொம்ப நாளா கேட்கணுமின்னு நினச்சேன். அதெப்படி என்னோட சின்ன சின்ன அசைவ வச்சு கூட என்னோட மனநிலைய சரியா கெஸ் பண்ணறீங்க?! லைக் கௌதம் கூட இப்படி தான்… “

“டேய் செல்லம், அதெல்லாம் அளவுக்கு அதிகமா பாசம் வச்சா தன்னால தெரிஞ்சிடும் டா. அதவிடு அன்னைக்கு என்ன ஆச்சு அத சொல்லு?” என விடாமல் கேட்பவரிடம்,

அன்று கிளப்பில் நடந்த அனைத்தையும் சொன்னவன், “பாவம்ப்பா அவன், நல்லவனா எந்த தப்பும் செய்யதவனா இருக்கறது ஒரு குத்தமா? அவன் சொன்ன விதம் பார்க்கணுமே கொலவெறி தான். கௌதம பார்க்கணுமேன்னு விட்டுட்டு வந்தேன். மறுபடியும் அவன் மட்டும் என் கையில மாட்டட்டும் அப்ப இருக்கு கச்சேரி.

கௌதம் தான், தனியா ரொம்பவும் கஷ்டப்படறான். அவனுக்கு நம்மளே பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிடலாமா, டாட்!”என ஆர்வமாக சொல்லிக் கொண்டிருக்கும் போதே வந்த  ஜெனி, “யாருக்கு டா பொண்ணு பார்க்கற.?!” என கேட்டு காபியை அவனிடம் கொடுக்க, அவனோ அதை அங்கிருந்த டீபாய் மேல் வைத்தவன்,

தன் தாயை சீண்ட கிடைத்த வாய்ப்பை விடாமல், “நீ தான் சாமூவ சரியா கவனிக்க மாட்டிங்கறையாம்! பாவம் மனுஷன் ஓயாம புலம்பிட்டே இருக்காறே,  அதான் ஒரு நல்ல பொண்ணா பாத்து கட்டி வச்சிடலாமின்னு” என சொல்லி நமுட்டு சிரிப்பை உதிர்க்க, அவன் எதிர்பார்த்தது போலவே, ஜெனி சாமுவேலை முறைக்க,

“ஜெனிம்மா சத்தியமா நா சொல்லலடா! ப்ராமிஸ்ஸாடா! அவன் வேணுமின்னே விளையாட்டுக்கு சொல்றான். நீயும் அத நம்பற. இந்த வயசுக்கு மேல யார் வருவா? ” என கெஞ்ச ஆரம்பிதார் தனது மனவாட்டியை,

அவர் அதுவரை பேசியதை கிடப்பில் போட்டவர், அவர் இறுதியில் சொன்னதை மட்டுமே கவனித்தது போல, “ஓ! அப்ப யாராச்சும் வந்தா கட்டிப்பீங்க!” என கோபத்தோடு கேட்க,

“அச்சோ! அப்படி சொல்லம்மா !” என தந்தை தாயை சமாளிக்க முடியாமல் முழிப்பதை பார்த்து அடக்கமாட்டாமல் சிரித்துக் கொண்டிருக்கும் ஆரனை பார்த்தவர்,

“உன்னால தான்டா இவ்வளவும், செய்யற செஞ்சிட்டு சிரிக்கவா செய்யற, உன்ன!”  என துரத்த , அவனும் அவருக்கு போக்கு காட்டி, அந்த அறையில் உள்ள இருக்கையை சுற்றியும் ஓட, அந்த இடமே கொஞ்ச நேரத்தில் ரணகலமாய் மாறி போனது ஆரனின் அட்டகாசத்தில்..

சாமுவேலின் வயதால், அவரால் நீண்ட நேரம் ஓட இயலாது அமர, தன் தாய் அமர்ந்திருந்த நீள் சோப்பாவில் படுத்தவன் ஹேயாக தன் காலை தன் தந்தை மடியில் வைத்துக்கொள்ள,  தாயோ அவனின் தலையை தாங்கியிருந்தார்.

கௌதம் தன் இல்லத்தில்…..

போனை வைத்துவிட்டு,தனக்குள் சிரித்து கொண்டே, “எரும, இன்னும் ரெடியாகாமயே என்கிட்ட என்னமா பொய் சொல்லறான், கேடி! எனக்கு தெரியாத அவன பத்தி. பக்கி மறுபடியும் தூங்குனாலும் தூங்கும். எப்படி தான் ஒன்பது மணி வரைக்கும்  தூங்கறானோ?!

எனக்கு மட்டும் எப்படி ஐஞ்சு மணிக்கு மேல தூக்கமே வரமாட்டிங்குது. ஹும்ம்ம்,  நம்ம டிசைன் இப்படி, அவன் டிசைன் அப்படி !” என நினைவு எங்கும் ஆரனை சுற்றினாலும், கண்கள் தன் முன் இருந்த லேப் டாப்பை பார்க்க, கைகளோ அதன் கீ போர்டில் விளையாண்டு கொண்டிருந்தது.

கௌதமிற்கு பத்து வயது ஆகும் போதே தன் தாத்தாவுடன் விடுமுறையில் தங்கள் தொழில்சாலைகளுக்கு வந்தவன், அது பிடித்துவிட அப்போதிருந்தே அவன் நிர்வாகத்தை பற்றியும் கற்றுக்கொள்ள துவங்கினான்.

அவனின் வேகத்திற்கு தீனி அங்கே கிடைக்க, அவனின் பொழுதுபோக்கு போல ஆகிவிட்டது அந்த தொழில்.  தாத்தாவிற்கும் அது தேவையாய் இருக்க, அவரும் முழு ஈடுபாடுடன் அதை அவனுக்கு கற்று கொடுத்ததால் இப்போது கல்வி, தொழில் இரண்டையும் ஒரே நேரத்தில் சமாளிக்கும் திறன் பெற்றிருந்தான் கௌதம் சக்ரவர்த்தி.

அதை விடுத்து அவனுக்கு நிறைவை கொடுக்கும் இரு விசயம் ஒன்று நீச்சல், மற்றொன்று டேன்ஸ். அழகாய் அனைத்து வித நடனமும் முறையாய் பயின்றவன். அவனுக்கு ஒரே இடத்தில் அமர்ந்து செய்யும் செயல் எதுவும் ஆகாது.

பள்ளி முதல் இப்போது படிக்கும் கல்லூரி வரை எல்லாமே கௌதமை பின்பற்றியே தொடரருவான் ஆரன். இப்போதும் ஜெனிக்கு தங்கள் வசதியை கொண்டு அவனை வெளிநாட்டிற்கு அனுப்பி படிக்க வைக்க ஆசை தான்.

ஆனால் அதில் இரண்டு சிக்கல். முதலாவது கௌதமால் தனது தொழிலை பார்க்காமல் முழுதாய் இரு வருடம் வெளிநாட்டிலேயே தங்கிட முடியாது. அதனால் கௌதம் போக மாட்டான். கௌதமை விட்டு ஆரன் செல்வது நிச்சயம் நடக்காத ஒன்று. அடுத்து ஜெனியாலும் ஆரனை விட்டு இருக்க இயலாது. இதுவரை கௌதம் வீட்டில் கூட அவர் தங்க அனுமதித்தது இல்லை தனியாக…  

கௌதமின் மாளிகை இருக்கும் இடத்திலிருந்து கொஞ்ச தூரத்திலேயே ஆரனின் பிடிவாதத்தால் வீடு வாங்கி குடிவந்தாலும், போக்குவரத்துக்கு தடைவிதிக்காத ஜெனி அங்கு போய் தங்குவதை அனுமதிப்பதே இல்லை.

கௌதம் தன் வேலைகளை முடித்து ரெடியாகி, தன்னை சரி படுத்தி கொண்டு நேரத்தை பார்க்க, அது பத்து மணிக்கும் மேல் ஆகியிருந்தது.

இப்போது போனால் சரியாக இருக்கும்,  என நினைத்தவன் , வீட்டில் நிற்கும் பல வெளிநாட்டு கார்களையும் விடுத்து, தன் டுக்காட்டியை எடுத்தான். அது அவனின் தாத்தா கொடுத்த அன்பு பரிசு. ஆரன், கௌதம் இருவருக்கும் ஒரே மாதிரி ஒரே நிறத்தில்…

அவன் தனது உயரத்தை, தனது அடையாளத்தை மறைக்க இது போன்ற வாகனத்தில் செல்வது தான் வழக்கம். தனது வசதியை எப்போதும், எதற்கும் பயன்படுத்தி கொள்ள மாட்டான் தேவையில்லாத போது…

தன் வண்டியை ஆரன் வீட்டு போர்டிகோவில் நிறுத்தி விட்டு உள்ளே வந்தவன் பார்த்த காட்சி, இன்னும் சயன கோலத்தில் ஆரன் இருக்க, தலையை ஜெனிபரும் காலை சாம்வேலும் பிடித்துவிட்டுக் கொண்டிருந்ததை தான்.

“தனக்கு மட்டும் இப்படியான வாழ்க்கை ஏன் அமையவில்லை?!” என எப்போதும் எழும் எண்ணம் எழுந்தாலும், அதை வெளியே காட்டாத முகபாவத்துடன் கதவில் சாய்ந்து அக்காட்சியை ரசித்து கொண்டிருந்தான், கௌதம்.

சிறிது நேரம் கழித்தே அவனின் வரவை கவனித்த சாமுவேல், “வா கௌதம், ஏன் அங்கையே நின்னுட்ட, உள்ள வாப்பா, நம்ம வீட்டுக்குள்ள வர என்ன இப்படி யோசனை! ” என அழைக்க,

அவரின் அழைப்புக்கு மதிப்பளித்து புன்னகை முகமாக உள்ளே வந்தவன் அந்த சோப்பாவிற்கு நேரெதில் அமர,  தந்தையின் சத்தத்தில் கண்விழித்த ஆரனுக்கு தன் முன் அமர்ந்திருந்த கௌதமின் முகம் தெரிய,

அடித்து பிடித்து எழுந்தவன், “டேய் வாடா, இப்ப தான் வர்றதா?! பாரு எவ்வளவு நேரமாச்சுன்னு, நானும் உனக்காக பாத்து பாத்து டையர்டாகி மறுபடியும் தூங்கிட்டன்னா பாறேன்! ” என சொன்னவனை பார்த்து முறைத்த படியே,

” நீ…! ரெடியாகி, காத்திட்டு இருந்து,  டையர்டு ஆகி, தூங்கிட்ட, அடிங்க….!! ஏன்டா எரும, நைட் போட்ட ஷ்சாட்ஸ்ல இன்னும் இருந்துட்டு எப்படி பில்டப் கொடுக்கற நீ?!”

“டேய் ரெடியானேன் டா. நீ வரலையா!  அதான் அதே ட்ரஸ்ல தூங்குனா அது கசங்கிடுமில்ல, அப்புறம் எப்படி அத போட, கலட்டி பத்திரமா வச்சிட்டு வந்து தூங்கிட்டேன்.  இல்ல டாட்?! ” என தனது பொய்க்கு, தன் தந்தையை கூட்டு சேர்க்க..

கௌதமிடம் தன் மகனின் சமாளிப்பிகேஷனை ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்த சாமுவேல், “அடப்பார்ரா! அண்டப்புளுகு ஆகாச புளுகாவில்ல இருக்கு!” என நினைத்தவர்,

“ஆமா கௌதம், நீ வருவன்னு நைட்டே குளிச்சு ரெடியாகிட்டான்னா பாரேன்!” என அதிசயம் போலவே சொல்லி, தன்னை வாரிய தந்தையை பார்த்தவன்,

‘டாட், மாம் கிட்ட மாட்டிட்டு முழிக்க வச்சும் நீங்க மாறல. இருக்கட்டும் மறுபடியும் சிக்கும் போது வச்சு செய்யறேன்!’  என்பதாய் பார்வையை பார்த்து வைக்க, அவரோ, ‘போடா! போடா! அதெல்லாம் சமாளிக்க தெரியாமையா இத்தன வருஷம் குடும்பம் நடத்தறேன்!’ என கெத்தாய் மறுபார்வை வீசினார்.

ஆரன் ரெடியாக சென்ற நேரத்தில்,சாமுவேல், “கௌதம் சாப்பிட்டையா? வேலை, படிப்புன்னு மத்த விசயத்துல கவனமில்லாம இருக்க கூடாது!” என அக்கரையாய் கேட்டவரின் பாசத்தில் நெகிழ்ந்த கௌதம்,

“ஆச்சுப்பா,  வேலை எல்லாமே சதா அங்கிள் கூட இருக்கறதால, பெருசா பிரச்சனை இல்ல. அதோட மூனு தலைமுறை வேலைகாரங்க தான் எங்ககிட்ட வேலை பார்க்கறவங்க. சோ அது எப்பவும் போல ஸ்மூத்தா போயிட்டு இருக்கு” என்றவன்,

“ஆரன் எதாவது சாப்பிட்டானா, அப்பா?” என கேட்க, “எங்கே! நீ வர்ற வரை ஆட்டம் போட்டுட்டு தூங்கிட்டு தான் இருந்தான்!” என்றவர், ஜெனிபரை நோக்கி,

“ஜெனி போ ! கௌதமுக்கு குடிக்க எதாவது கொடு” என்றதும், எழுந்து செல்ல போன ஜெனியை பார்த்தவாறே, “அப்பா பரவாயில்ல வேணாம். லேட் ஆகிடும்” என்று தனது மறுப்பை காட்ட,  “அவன் கிளம்பி வர்றதுக்குள்ள அதெல்லாம் குடிக்கலாம். போ ஜெனி கொண்டு வா!” என்றவரின் வார்த்தையில், ‘நீ குடித்தே ஆகவேண்டும்!’ என்ற தோனி இருக்க, மேலும் மறுக்காமல் , ‘சரி’ யென தலையசைத்தான்.

சாமுவேலின் வார்த்தைகாக, ஜெனிபர் கொண்டு வந்து கொடுத்த ஜூஸை குடித்து முடிப்பதற்குள், ‘குளித்தேன் ‘ என்று பேருக்கு தண்ணிரை தெளித்து வந்தவனை  காரி துப்பாத குறையாய் பார்த்தவன், ” அங்கிள், இவனுக்கு இப்ப சாப்பிட எதுவும் கொடுக்காதீங்க. அது தான் இவன் பண்ற அலப்பரைக்கு சரியான பனிஷ்மெண்ட்”  என அறிவித்தவனை பார்த்து,

தனது அப்பாவி முகபாவத்துடன், “டேய் இன்னும் அம்மா கொடுத்த காபி கூட குடிக்கலடா பசிக்குது ” என அங்கே தனக்கென கொண்டு வந்து, கேட்பாரற்று இருந்த காபி கப்பை காட்டி, சிறு குழந்தையாய் கெஞ்ச,  

அவனின் பசி புரிந்தாலும், “போற வழியில வாங்கி தர்றேன் கொட்டிக்க… இப்ப விட்டா நீ ஆன்டிய ஊட்ட சொல்லி சாப்பிட்டு வர எப்படியும் ஒரு மணி நேரம் ஆக்கிடுவ, வா”என இழுத்து சென்றான்.

கௌதம் சொல்வதும் சரிதான். வெளியே எப்படியோ வீட்டிலிருந்தால் ஜெனிபரை ஒரு வழியாக்கி கொண்டு, தன் தந்தை இருந்தால் வம்பிழுத்து அவன் சாப்பிட நிச்சயம் ஒரு மணிக்கு மேல் ஆகும்.  அவனை நன்கு அறிந்தவன் அதற்கு விடுவானா!

அவர்கள் சென்றதும் சாமுவேலை பார்த்த ஜெனி, “கௌதம் செய்யறது சரியில்லங்க. பாவம் குழந்த பசிக்குது சொல்றான். சாப்பிட கூட விடாம இழுத்துட்டு போறான்!” என கடுப்பாக சொல்ல,

சமீபமாக, ஜெனிபர் நடவடிக்கையில் தெரியும் மாற்றம் புரிந்தாலும், வேறு வழியில்லாமல், “ஜெனி! கௌதமுக்கு ஆரன பத்தி நல்லா தெரியும், அவன் பசி தாங்க மாட்டாங்கறது தெரியாதா?! நீ கவலைபடவே வேணாம். கௌதம் சொன்ன மாதிரி அவனுக்கு முதல்ல சாப்பாடு வாங்கி கொடுத்துட்டு தான் வேற வேலைய பார்ப்பான்”

“க்கும்.. அதென்ன அவன் வாங்கி கொடுத்து நம்ம புள்ள சாப்பிடறது. அவன்கிட்ட மட்டும் தான் பணமும் வசதியும் இருக்கா?! நம்மகிட்ட இல்லையா?!

எப்பவும் அப்பா புள்ள ரெண்டு பேருக்கும் கௌதம் தான் ஒசத்தி. என்னமோ பண்ணிக்கோங்க” என வெடுக்கென சொல்லி செல்லும் ஜெனிபரை பார்க்கும் போது , இது சரியில்லையே,

‘இந்த வசதியும், அந்தஸ்தும் கிடைக்க காரணம் அந்த கௌதம் தான் என்பதையே மறந்து, இப்படி பேசி செல்லும் மனைவியிடம் எப்படியாவது  சொல்லி புரிய வைக்க வேண்டும். இல்லாவிட்டால் இது என்றும் நன்மையாக இருக்காது!’ என நினைத்தவர் அதை செயல்படுத்தி இருந்தால் பின்னால் பல பிரச்சனைகளை எளிதாக தீர்த்திருக்கலாமோ?!

தங்களின் வாழ்க்கையையே மாற்ற போகும் சிலரை அங்கே சந்திப்போம் என தெரியாமல் ஒருவரை ஒருவர் வாறிக்கொண்டு மாலை (Mall) நோக்கி தனது டுக்காட்டியை விரட்டினான் கௌதம் , ஆரனுடன்…

error: Content is protected !!