jeevan 18

jeevan 18

உன்னோடு தான் …. என் ஜீவன்….

பகுதி 18


ஆரன் தான் தேடி வந்தவனை, அந்த மால் முழுவதும் அலசியும் அகப்படாமல் போக, ‘ச்ச தப்பிச்சிட்டானா?! மகனே! நீ என் கையில மாட்டுற அப்ப இருக்கு, கச்சேரி!’ என நினைத்துக்கொண்டே, கௌதமிடம் குறிப்பிட்ட அந்த மேன்ஸ் வேர் சென்று கிட்டத்தட்ட அரை மணி நேரம் சென்றும் அவன் வராது போக ,

‘என்னடா இவ இன்னுமா சாப்பிடறான் ! அப்படி என்னத்த சாப்பிடறான்? இவ்வளவு டைம் எடுத்துக்க மாட்டானே?!’  என்ற எண்ணம் தோன்ற, மீண்டும் புட்கேர்ட்டில் பார்த்தவன், அங்கு கௌதம் இருப்பதற்கான சாயலே இல்லாது இருப்பதை கண்டு,

‘எங்க போய் தொலஞ்சான்! நா பாட்டுக்கு வீட்டுல தூங்கிட்டு இருந்தேன். வந்து அள்ளி போட்டு வந்து இப்ப எங்க போனானோ?!’ என பொருமியவனாய், தன் தொலைபேசியை எடுத்து கௌதமிற்கு அழைத்தான்.

கௌதமிற்கு, ஆரன் கால் வரும் நேரம் தான், காயத்ரியும் அவனின் கேள்விக்கு பதிலை சொல்ல அதிர்ந்து, “வாட்!!” என்றவரே, வண்டியை ஓரம் கட்ட,  அவன் அதிர்வை கவனித்தாலும் அதை பற்றி கேட்க இயலாமல் கௌதம் சட்டென போனை எடுக்க, பேசி முடிக்கும் தருணத்திற்காக காத்திருந்தாள்.

அவசரமாக தனது போனை எடுத்த கௌதம் அதில், ஆரனின் எண்ணை கண்டதும், தன் தவறு உணர்ந்து, ” டேய்..! டேய் ..! சாரிடா ஆரா..! ” என அவன் தனது கேள்வியை ஆரம்பிக்கும் முன்னே தனது மன்னிப்பை கேட்டவன், “ஒரு முக்கியமான வேல வந்திடுச்சி, அதான் அங்கிருந்து வந்துட்டேன்..! ” என்ற பதிலில்…

முதலில் மன்னிப்புக்கு கெத்தாக நின்றவன், அடுத்து அவன் சென்றுவிட்டதாக சொல்ல.. “என்ன்ன்ன்னனது .. !!!!! போயிட்டையா? எருமை, ஏன்டா ஒருத்தன கூட்டிட்டு வந்தமே,  ஒரு வார்த்த சொல்லிட்டு போகனுமின்னு கூட தெரியாதா?! நானும் இந்த மால் முழுசா உன்ன தேடிட்டு இருக்கேன். ” என வாய் ஓயாமல் திட்ட…

தன் தவறை உணர்ந்தவன்.. “அதன் முக்கியமான வேல ன்னு சொல்றனேடா…! ப்ளீஸ் … என் செல்லக்குட்டியில்ல ஒரு ஆட்டோ பிடிச்சு வீட்டுக்கு போயிடுடா…” என…

” பாவி…. நல்லவேளடா பர்ஸ் கொண்டுவந்தேன். இல்ல நடந்தே வா ன்னு சொல்லிடுவ. வைடா போன, நா நேருல வந்து வச்சுக்கறேன் உன்ன…!”  என கத்திவிட்டு போனை அனைத்தான்.

அவன் கால் கட் ஆனதும் பிடித்து வைத்த மூச்சை, பெருமூச்சாய் வெளியிட்டவனை, கேள்வியாய் காயூ நோக்க…” உன்ன பார்த்துட்டு, கூட வந்த ப்ரண்ட விட்டுட்டு வந்துட்டேன்… அதான் !” என அசடு வழிய…

சிறிது நேரம் முன்பு ஸ்வேதா குழுவை பார்த்த பார்வையில் இருந்த அனல் என்ன?! தன்னை நெருங்கிய போது அதே கண்களில் வழிந்த நேசம் என்ன ?!  இப்போது காட்டும் அசட்டு தனம் என்ன?! என சிந்தித்தவளுக்கும் சிரிப்பு தான் வந்தது.

அவளின் புன்னகையை பார்த்தவனுக்கு மனதுக்கு அவ்வளவு நெகிழ்வாய் இருந்தது. காலையிலிருந்து பல பாவங்களை அவள் முகத்தில் பார்த்தாலும் இந்த புன்னகை முகம் அவன் அடி மனம் வரை ஆழமாய் பதிந்தது.

“ஹலோ மேடம்! என் நிலம உனக்கும் சிரிப்பா இருக்கு இல்ல?!”  என பொய்யாய் முகத்தை திருப்ப…

“ஏன்னா..  இப்படி சொல்றேன்?! ” என்ற அவள் பதிலில்..

” என்ன.. அண்ணாவா ?!!!! ” என நெஞ்சில் கை வைத்தவன், அப்போது தான் அவள் ‘மாமி ‘ என்பது நியாபத்தில் எழ “ஓய்! நீ அய்யராத்து மாமி தான் , அதுக்கு இப்படி பட்டுன்னு அண்ணாங்காத!  பக்குன்னு ஆயிடுச்சு! ” என அவன் அதிர்வு நிறைந்த குரலிலேயே சொல்ல, அவளின் முகம் கூம்பி விட்டது.


‘தான் அவனை தனக்குரியவனாய் எண்ணியது போல அவனுக்கு இல்லையோ?! அல்லது அவனின் உதவியை தான் தவறாக பயன்படுத்துவதாக நினைக்கிறானா?! என்னை நெருங்கிய போது, அவன் கண்ணில் கண்டது வெறும் கனிவா காதல் இல்லையா?!’ என்ற சிந்தனையிலேயே கண்கள் பனிக்க நிமிர்ந்து அவனை பார்க்க…

அவளின் பார்வையில் புரிந்து கொண்டவன், “ஏய்! இது நீ நினைக்கற மாதிரி இல்ல. நீ திடீர்ன்னு அண்ணான்னு சொன்னதும் ஜர்க் ஆகிட்டேன்டீ..! மத்தபடி வேற ஒன்னுமில்ல. இப்ப என்ன என்னை அப்படி கூப்பிடனுமா? கூப்பிடு.. சரியா?!” என்றதும் தான் அவன் எடுத்து கொண்ட அர்த்தம் புரிந்தவள்.

தன் கண்ணிரை உள்ளிழுத்த வண்ணம், “நேக்கு எப்பவும் என்ன நடந்தாலும் நீங்க மட்டும் தான்…. பார்த்த இந்த கொஞ்ச நேபத்தில, உங்கள பத்தி எதுவும் தெரியாட்டாலும் என் மனசு சொல்றது, அவர் இப்ப இல்ல காலம் காலமா உன்னோட தான் இருக்கார் உனக்காகன்னு. நா வணங்கற அந்த அரங்கனுக்காக காத்திருந்த ஆண்டாள் போல உங்கள சேர தான் நா ஸ்ரீரங்கத்திலிருந்து இங்க வந்தேனோ..?! எல்லாமே அந்த அரங்கன் செயல் தான்னு நா நம்பறேன்னா!”  என்றதும்…

அவளின் அந்த நம்பிக்கையை என்றும் உடைக்காமல் காக்க வேண்டும் என்ற தீர்மானித்தான் கௌதம். ஆனால் அதை உடைக்கும் நாளும் வரும் என அவனுக்கு அப்போது தெரியாதே!


அப்போது தான்  , கௌதமின் கேள்வி நியாபத்தில் மீண்டும் வந்தது காயத்ரிக்கு!

வண்டியை செலுத்திக் கொண்டிருந்தவன்… “காயூ! உன் அட்ரஸ் சொல்லு? நா விட்டுட்டு போறேன் . உன் ஊர் எது?!”  என கேட்டான், லிப்ட்க்கு காத்திருக்கும் போது சுமி சொன்ன சில விசயங்களை மனதில் கொண்டு…

“எங்க வீடு ஸ்ரீரங்கத்தில இருக்கு. நா இங்க சிட்டி காலேஜ்ல என்ஜினியரிங் 2 வருஷம் படிக்கறேன். அங்க ஹாஸ்டல்ல இருக்கேன். நீங்க என்ன அங்க விட்டுடுங்கோ… ” என்றதும் தான், அதிர்ந்து வண்டியை நிறுத்தியிருந்தான். காரணம் அவனும் அதே கல்லூரியில் தானே படிக்கிறான். தன்னவளை இனி எப்படி சந்திக்க?  தன்னால் அவளை பார்க்காமல் இருக்க முடியுமா?!’ என ஏங்கியவன் இன்பமாய் அதிராமல் எப்படி?!

‘அடப்பாவி ! இப்படி ஒரு வருஷத்த வேஸ்ட் பண்ணிட்டையே கௌதம். நீ இருக்கற அதே கேம்பஸ்ல ஒரு வருஷமா ரெண்டு பேரும் இருந்தும்,  இப்ப தான் மீட் பண்ணியிருக்க! இதுல உனக்கு ஆறு மாசம் தானே இருக்கும் கேம்பஸ். அடுத்து ப்ராஜெக்ட் ன்னு போக போறது இல்லையே! ச்ச…’ என்ற சிந்தனையை கலைத்தாள் காயத்ரி.

“ஏன்னா! வண்டிய நிறத்தறச்ச, எதுக்கு “வாட் !!” ன்னு கேட்டு நிறுத்தினேள்?!” என்றதும், அவளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் எண்ணம் தோன்ற,

“அதுவா! நீ காலேஜ் ஹாஸ்டல் சொன்னியா! நா கூட நீ இன்னைக்கு நடந்தத பாக்க, (அவளின் லாலிபாப் மிட்டாய் நினைவில்..)ஏதோ ஸ்கூல் புள்ளையோ ன்னு நினச்சேன்! அதான்! ” என ஒற்றை கண் சிமிட்டி அவளை வாற…
“போங்கோன்னா!” என சினுங்கியவளின் மீது பித்தாகி நின்றவனை பார்த்தவள்,

” நீங்களும் என்ன கிண்டல் செய்யறேள் பாத்தீங்களா..? நா என்ன செய்யட்டும்?! அவ பெரிய இடத்து பொண்ணு…  அவ அப்பா, அண்ணா எல்லாமே பெரிய ரவுடி ன்னு எல்லாருமே அவளுக்கு பயப்படும் போது, நானெல்லாம் அவாள எதிர்த்துண்டு இருக்கமுடியுமோன்னோ! அதான் அவா செய்யறத பொறுத்துண்டு இருக்கேன். நேக்கும் கஷ்டமா தான் இருக்கு. அதற்காக அவ கூட மோதி ஜெயிக்க முடியுமோ?! சொல்லுங்கோ!” என ஆதங்கத்தோடு கேள்வியாய் , அவளின் நியாயத்தை சொல்ல….

மனதில், ‘இனி நானும் உன் கூட தானே இருப்பேன். யார் உன்கிட்ட வம்பிழுக்கறான்னு பார்க்கறேன்! அவங்ககிட்ட இருந்து உன்ன எப்படி ப்ரட்டக்ட் பண்ணனுமின்னு எனக்கு தெரியும்!’ என நினைத்தவன், அதற்கு செய்ய வேண்டிய வழிகளை மனதிலேயே போட்டு முடித்திருந்தான் சிறந்த தொழில் அதிபனாய்..!

“விடு, எதாவது செய்யலாம் !” என எதையும் வெளிக்காட்டா பாவத்தில் சொல்ல, அவளின் முகம் தெளியாமல் வாடி இருப்பதை பார்த்தவன்,

” காயூ! நா சும்மா விளையாட்டுக்கு ஸ்கூல் புள்ளன்னு பேசினா, இப்படி தான் அதுக்கு விளக்கம் கொடுப்பியா?!  என ஆறுதலாய் கேட்டு அவளின் கரம் பற்ற,

நடுங்கும் கரத்தோடு, “ஏன்னா! , நிஜமாவே நேக்கு பயமா தான் இருக்கு. இன்னைக்கு நீங்க வந்தேள். ஆனா நாளைக்கு காலேஜ்க்கு நா போகனுமே, அவ என்ன செய்வாளோ ன்னு இருக்கு..!.”  என அவளின் மனதில் உள்ளதை கூற, அவளின் பயம் எதனால் என்பது நன்கு புரிந்ததால்,

“காயூ! இங்க பாரூ. யாரும் இனி உன்ன, என்ன மீறி நெருங்க முடியாது! நீ தைரியமா காலேஜ்க்கு வா. நா பார்த்துக்கறேன், சரியா?!”  என தீர்மானமாய் சொல்ல…

“க்கும் நீங்க. ! நல்லா பாப்பேளே..!. நீங்க உங்க வேலய விட்டுடு வந்துடுவேளா..!போங்கோ… பொய் பேசிண்டு!”என சிணுங்க…


அவள் சிணுங்களில் மீண்டும் அழகாய் தொலைந்தவன், “இனி இப்படி சிணுங்கினா… லிப்ட்ல கொடுத்த கிப்ட் தான்…”  என நமுட்டு சிரிப்போடு கூற ..

புரியாமல் விழித்தவள், புரிந்த நொடி, சட்டென தன் இரு கைகளால் தன் வாயை இறுக மூடியவள் தலை, தானாக ‘வேண்டாம்!’ என்பதாய் அசைந்தது. எனினும் அவள் கன்னங்களில் வந்த சிவப்பு அவளின் வெக்கத்தை கூற…

அவளின் அவசரமான தலையசைப்பில், ஆர்ப்பாட்டமாக சிரிக்க ஆரம்பித்தவன், அவளின் முகத்தில் வந்த வெக்கத்தால்,
அவனுக்கோ, மனதில் அவ்வாறு மீண்டும் பரிசளிக்கும் எண்ணம் தான் வந்தது. ‘நடு வீதியில் இது என்ன அசட்டு தனம்!’ என்று கருதியவன், தன் எண்ணத்திற்கு தடை போட்டு…

” ஓகே ஜோக்ஸ் அபார்ட்! நா சீரியஸ்ஸாவே தான் சொல்றேன் காயூ! நீ தைரியமா காலேஜ் போ. உன்னைய யாரும் எதுவும் செய்ய முடியாது. அப்படி எதாவது வம்பு பண்ணா, என்ன மனசுல நினச்சுக்கோ. அடுத்த நிமிஷம் உன்கிட்ட நா இருப்பேன் ” என வாக்களித்தான்.

அவன் வார்த்தையில் இதுவரை இருந்த விளையாட்டு தனம் மீறி, அதில் தெறித்த உறுதியை கண்டவள், அவன் மீதான நம்பிக்கையுடன் அவர்களை தைரியமாக எதிர் கொள்ள தயாரானாள். அந்த தைரியம் அவர்களை காணும் போது நிலைக்குமா?!

***

ஹாஸ்டல் வரும் வழியிலேயே மிகவும் பெரிய சைவ உணவகத்திற்கு வண்டியை விட்டவன், “காயூ, நீ எதுவுமே சாப்பிடல இல்ல. காலைல நீ சாப்பிட்டதும் அவளுங்க பண்ண கூத்துல போச்சு! இங்க எதாவது லைட்டா சாப்பிடு, அப்புறம் நா உன்ன ஹாஸ்டல்ல விடுறேன். சரியா?!” என அக்கரையாய் கேட்க…

அவளுக்கோ மறுபடியும் அதே உணர்வு தோன்றிடுமோ?! என்ற பயம் வந்து மீண்டும் அவளை மிரட்ட, அதை அப்படியே அவனிடம் வெளிப்படுத்த….

“இங்க பாரூ! அதையே யோசிச்சா தான் அப்படி இருக்கும்.  நா தான் அதுக்கு மாத்து ஏற்பாடு செஞ்சுட்டேனே! சாப்பிடும் போது அத மட்டும் மனசுல வச்சிட்டு சாப்பிடு, அதுக்கும் மேல வருங்கற?!”  என கண் சிமிட்ட…


“ஏன்னா! சும்மா இருக்க மாட்டேளா?! அதையே சொல்லிண்டு இருக்கறேள். இப்படியே பேசினா, நா கிளம்பி போயிடுவேன் பாத்துக்கோங்கோ.. !” என வீம்பாய் பேசுவதாய் நினைத்து குழைய…

அவனுக்கோ அவளின் பேச்சில் சிரிப்பு தான் வந்தது, அவளின் குழந்தை பிடிவாதத்தை பார்த்து,  “நீ ரொம்பவும் வீம்புகாரி தான் தெரியுது. வா, இனி அப்படி பேசல, போதுமா?! உனக்கு எதுவும் ஆகாது. அப்படி எதாவதுன்னாலும் பார்த்துக்கலாம்! ” என்றவன் ,அவளை உள்ளே அழைத்து சென்று, மிகவும் எளிமையாய் ஜீரனமாகும் உணவை வரவழைத்து, அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை அவளின் சிந்தனையை மாற்ற, அவளை பற்றியும், அவள் குடும்பத்தை பற்றியும் கேட்க…அவளோ தன்னையே மறந்தாற் போல தன் தந்தை,  தாய், அண்ணா… இப்போது அண்ணனுக்கு நிச்சயத்திருக்கும் பெண் வரை எல்லாவற்றையும் சுவாரஸ்யமாய் பேச… அதற்கிடையே கொண்டுவந்த அனைத்து உணவும் உள்ளே சென்றிருந்தது அவளிறியாமலே….

அவளை பற்றிய அனைத்து விசயத்தையும் அறிந்தவன், “அவளின் ஆச்சரமான குடும்பத்தில் தன்னை ஏற்பார்களா?! ” என்ற எண்ணம் தோன்றினாலும்…


‘என்னை மீறி அவளை யார் கரம்பிடிப்பார்கள்?! அதற்கு தான் விடுவேனா?! அவர்கள் ஜாதி, கலாச்சாரம் வேண்டுமானால் வேறாக, இருக்கலாம். மற்றபடி அவர்களுக்கு பெண் கொடுக்க தடையாய் என்னிடம் எதுவுமில்லையே!’ என்ற வீராப்பும், பிறவி முதலே இருக்கும் பிடிவாதமும் தெளிவை கொடுத்தது அவன் உள்ளுக்குள்…

ஹாஸ்டல் வாசலில் காயத்ரியை இறக்கிவிட்டவன் மனமே இல்லாது அங்கிருந்து கிளம்பினான். அவளுக்கும் அவனின் பிரிவு மனதை அழுத்த அவன் அங்கிருந்து மறையும் வரை அவனின் முதுகையே வெறித்திருந்தாள்.

அவன் சென்றதும் தன் அறைக்கு வந்தவள், தன்னுடன் தங்கியிருப்பவரின் வித்தியாசமான பார்வையை கூட உணராது.. ‘நானா இது..!!! பார்த்து இன்னும் முழுதாய் பன்னிரண்டு மணி நேரம் கூட ஆகாத நிலையில்,  அவனை விட்டு பிரிந்த இந்த நிலையை தாங்க முடியாது தவிப்பது… !!!’ என்று நினைத்தவள்…


அவனை பார்த்த கணம், ‘தனக்கு உதவ என்று, தன் பைக்காக ஒருவனை துரத்தி சென்றது, அவன் வரும் வரை கூட பொறுக்காமல் தன்னை கட்டாய படுத்தி அழைத்து செல்ல வைத்து, தன் ஏழ்மையை குத்தி காட்டி பேசி, தன் உணவு பழக்கம் அறிந்தும், தன்னை வேதனை படுத்தி சந்தோஷம் கொண்டவரிடம் அவன் கொண்ட கோபம், அவளின் துன்பம் கண்டு, தானும் வேதனை கொண்டது, அவளுக்காய் பார்த்து பார்த்து செய்தது ..’ என அனைத்தையும் சேர்த்து பார்த்தால்…

‘இவன் உன்னவன் என்ற உள்ளுணர்வு சொன்னது தான், ஒரே நாளில் அவனை தான் இந்த அளவுக்கு தான் தன்னை நெருங்க வைத்ததோ…! தன் குடும்பத்தை தவிர யாரிடமும் அடைக்கலம் தேடா தான் , இன்று உரிமையுடன் அவன் அழைத்த போது சென்றது அதனாலா?!’ என்று தனக்குள் யோசித்தவள் முடிவில், ‘தன்னை மனதால் மட்டுமல்ல, தன்னையும்  தீண்டிய முதல் ஆண்மகன் அவன் தான்! இனி அவன் தான் தன் எதிர்காலம்!’ என்ற தீர்க்கமான முடிவுக்கு வந்திருந்தாள்.

துண்டை எடுத்துக்கொண்டு அங்கிருந்த பாத்ரூமுக்கு சென்றவள், தன்னை சுத்தப்படுத்தி வெளியே வர, அப்போது தான்,  அவனின் மேலாடையை தான் அணிந்திருக்கும் நினைவே வந்தது. அதை கழட்டியவள் தன் பொருட்களுடன் பத்திரபடுத்திவிட்டு திரும்ப,

 

அவ்வளவு நேரமும் அவளின செய்கையை வியப்பாய் பார்த்துக் கொண்டிருந்த சுமி அவளருகே வந்து, “காயு, என்னடீ! இப்படி வந்து நிக்கற?! ஆளே ஒரு மார்க்கமா! அவளுங்களுக்காக பயந்து இங்க ஹாஸ்டல் வந்த பின்னாடி தான், உன் பர்ஸ், போன் நியாபகமே எனக்கு வந்துச்சு. நீ எப்படி வந்து சேர்வ? அவளுக உன்ன என்ன பண்ணாங்களோன்னு பயந்துட்டு உக்காந்தா, ஏதோ பிரம்மை புடுச்சவ மாதிரி வர்ற. என்ன ஆச்சு அங்க?! அவளுங்க என்னத்த பண்ணி வச்சாங்க?!”  என படபட பட்டாசாய் கேள்வியை தொடுக்க,அவளின் அக்கரையை நினைத்து நெகிழ்ந்தவள், “சுமி, நேக்கு ஒன்னுமில்ல. நா நன்னா தான் இருக்கேன். நீ சொன்ன மாதிரியே ஒருத்தர் வந்து என்ன அவாகிட்ட இருந்து காப்பாத்திட்டா! என்றவள், கௌதம் அவர்களிடமிருந்து காத்ததையும், இங்கே கொண்டு வந்து விட்டதையும் மட்டும் கூறி, “ரொம்ப டையர்டா இருக்கு சுமி. நா போய் தூங்கறேன்” என்றவள், அடுத்து அவளின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் தப்பிக்க உறங்க நினைத்தவள், இன்றைய அசதியில் படுத்ததும், தூங்கியும் போனாள்.*********


இரவின் தனிமையில் கௌதமிற்கோ இன்று பார்த்த தன்னவள் முகமே தோன்றி இம்சித்தது. எப்போதும் படுத்த சிறிது நேரத்திற்கெல்லாம் உறங்கிடும் அவனுக்கு இன்று நித்ராதேவியின் கருணை சுத்தமாய் இல்லை போலும்…


அவளை திசை திருப்ப, தந்த இதழ் முத்தம்… இப்போது தன்னை  இம்சிப்பதை எப்படி தாங்க.! மீண்டும் அவள் மென்னையான ஸ்பரிஷம் வேண்டும், அவளின் இதழ் தேன் வேண்டுமென அடம் பிடிக்கும் தன் இளமையை எவ்வாறு கட்டுப்படுத்த! என்பது புரியாமல் தவித்து தான் போனான்…

“டேய் கௌதம் , என்னடா ஆச்சு உனக்கு…? இந்த வருஷமா தூங்கனுமின்னு நினச்சதும் வந்த தூக்கம், இப்ப இப்படி வராம படுத்துதே.. ! அதோட எங்க பாத்தாலும் அவ வந்து உக்காந்திட்டு இருக்கற மாதிரியே இருக்கே! ” என நொந்தவன்,

 

“எல்லாமே உன்னால வந்தது! உன்னோட அந்த முட்டகண்ணு வச்சு வசியம் செஞ்சிட்ட!  கிஸ் பண்ணும் போது பார்த்த கண்ணுல அப்படியே மயங்கி போயிட்டேன்! உன் தூக்கி என் மடியில வச்சு செல்லம் கொஞ்சனும் போல இருக்கு…!” என சொல்லி கொண்டே போனவன், நிறுத்தி மீண்டும், “செல்லம்…! செல்லம்.. !” என சொல்லி பார்த்தவன், “வாவ்! ஐ காட் இட் ! இனி நீ எனக்கு செல்லம்மா.. ஓகே வா?! இனி அப்படி தான் நா கூப்பிட பேறேன். எல்லாரும் கூப்பிடற மாதிரி கூப்பிட்டா என்ன கிக்….?!” என அவளின் பிம்பத்திடம் கேட்க, அதை கேட்டு அவளின் முகம் காட்டிய வர்ணஜாலத்தில்,

 

“செல்லம்மா!, மை டால்!, மை லவ்!” என புலம்பிய படியே அவளை அனைக்க போக, அதுவரை நிஜமாய் இருந்த உருவம் மறைந்து அந்த இடம் வெறுமையை கூட்ட,  அதன் தாக்கம் தாளாமல், தன்னையும், தன் உணர்வையும் கட்டுப்படுத்த அங்கிருந்த நீச்சல் குளத்தில் தஞ்சமடைந்தான்.இன்று அவள் குரல் கேட்டது… அடுத்து அவளின் அப்பாவி தனமான விளக்கம்… அவளுக்கு நடந்த கொடுமை , அதை கண்டு தனக்கு வந்த கோபம் , அவளை தான் அணுகிய போது அவளின் கண்கள் காட்டிய வித்தை,  இறுதியாய் அவளை விட்டு விலக முடியாது தன்னையே பார்த்திருந்தவளை , தன் வண்டி கண்ணாடி வழியே பார்த்தவாரே வந்தது என அனைத்தும் படம் போல ஓட ..“அவள அப்பவே கூட்டிட்டு வந்திருக்கனும் கௌதம் நீ தப்பு பண்ணிட்ட! ” என்று மனம்  சொல்ல, அவனின் புத்தியோ, ” கௌதம், அது சொல்ற கேக்காத ! அவ படிக்க வேண்டிய புள்ள, அவ எடுத்த மார்க் வச்சி தான் இவ்வளவு தூரம் வந்திருக்கா. உன் காதல் அவளோட வளர்ச்சிக்கு உதவனும்.. தடையா இருக்க கூடாது !”.என்று வாதிட…மனதிற்கும் மூளைக்கும் இடையில் போராடியவன், முடிவில், ‘இப்போதைக்கு அவளுக்கு பாதுகாப்பாய் மட்டும் இருக்கவேண்டும். காலம் வரும் போது, அவளின் கரம் பற்றுவது குறித்து யோசிக்கலாம்!’ என தீர்மானித்து, குளத்திலிருந்து வெளிவந்தவன், நேராய் சென்று தன் அறையில் தஞ்சமடைந்தான்.இதுவரை தன்னை இம்சித்த உணர்வுகளும்,  எண்ணமும் நேர்பட நிம்மதியான உறக்கம் கை கூடியது.


***********யாருக்கும் காத்திருக்காமல் கௌதம் , ஆரன் இருவரும் கல்லூரி செல்லும் நாளும் புலந்தது. காலை எழுந்ததும் முதல் வேலையாக ஆரனுக்கு அழைத்தவன் ஆயிரம் மன்னிப்பு கேட்டு அவனை சமாதானம் செய்தவன்,

 

அடுத்து தனது கம்பெனியை முன்னின்று நடத்தும் சதா அங்கிளுக்கு அழைப்பை விடுத்தவன்,

 

“ ஹாய் அங்கிள்! குட் மார்னிங்”

 

“குட் மார்னிங், கௌதம். இந்த வருஷத்தோட பஸ்ட் டே காலேஜ். என்ஜாய் அண்ட் ராக் மை பாய். ஆல் தி பெஸ்ட்” என எப்போதும் போல இன்றும் வாழ்த்த..

 

“தேங்க்ஸ் அங்கிள், எனக்கு சில டீட்டெய்ல்ஸ் வேணும். அத எனக்கு மெயில் பண்ணறீங்களா?! ப்ளீஸ்” என கேட்க,

 

“கௌதம்! நீ தான் எங்க முதலாளி. நீ சொல்றத செய்ய வேண்டிய இடத்தில இருக்கறவன்கிட்ட போய் இப்படி கேட்கற?!” என்றதும்,

 

“அங்கிள் நீங்க உங்க வொர்க் மட்டும் செஞ்சிட்டு இருந்தா நானும் பாஸ் ங்கற முறையோட நடந்திட்டு இருந்திருப்பேன். நீங்க தாத்தா காலத்துல இருந்தே என் மேலையும், எங்க கம்பெனிஸ் மேலையும் வச்சிருக்கற அபிமானமும், அன்பும், உங்க உழைப்பும் தெரிஞ்சிட்டு உங்கள ஸ்டாப்பா மட்டும் பார்க்க முடியாது”  என சொன்னவனின் வார்த்தையில் இருந்தது எல்லாமே பாசம் மட்டுமே..

 

அதை உணர்ந்தவர், “சாரி கண்ணா! சொல்லு, என்ன டீடெய்ல்ஸ்?” என்றவருக்கு பதில் சொன்னவன், “அப்புறம் அங்கிள்! இன்னைக்கு உங்கள பார்க்க அமுதன்னு ஒரு பையன் வருவான். அவன ஈவினிங் நா வர்ற வரை வெயிட் பண்ண சொல்லுங்க. அதோட அவன் நடவடிக்கையை வாட்ச் பண்ணி வைங்க” என சொன்னவனின் வார்த்தைகளில் நிச்சயம் எதாவது காரணம் இருக்கும் என்பதை நன்கு அறிந்தவர் அவன் சொன்னதை செயல்படுத்த அயத்தமானார்.

**********

கௌதம், ஆரன் , காயத்ரி மூவரின் மனதிலும் வெவ்வேறு சிந்தனையுடன் கல்லூரிக்கு சென்றனர்.

கௌதமிற்கு , தன் செல்லம்மாவின் தரிசனம் கிட்டும் என்ற மகிழ்ச்சியும் , திடீரென தான் போய் நின்று, அங்கே தான் ‘நானும் படிக்கிறேன்’ என சொல்லும் போது,  அவள் முகம் காட்டும் பாவங்களை காண ஆசையும் சேர உற்சாகமாகவே கிளம்பினான்.ஆரனுக்கோ, இதுவரை விடுமுறையில் காலை, நேரமாவது தெரியாது தூங்கி ஜாலியாய் இருந்தவன், இனி நேரமே எழுந்து செல்ல வேண்டும் என்ற எரிச்சல் இருந்தாலும், பல்வேறு விதமான பெண்களும் பவனி வரும் இடத்திற்கு என்பதால் உற்சாகமாகவே கிளம்பினான்.


எப்போதும் கௌதம், ஆரன் இருவரும் ஒன்றாய் சென்றாலும், கௌதமிற்கு சில சமயம் வரும் அலுவலை கொண்டு கல்லூரிக்கு நேரடியாக வந்தும் சந்திப்பதுண்டு.இன்று தன்னவளை முன்பே சென்று சந்திக்க நினைத்த கௌதம் , ஆரனுக்கு காலையிலேயே அழைத்து, மன்னிப்பை பெற்றவன், உடன், “ஆரா , எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு … முடிச்சிட்டு காலேஜ் வந்திடுறேன்… நீ வெயிட் பண்ணாம போயிடு…. ஓகே… ?!” என முதன் முறையாக அவனிடம் பொய் உரைப்பதால் வந்த தடுமாற்றத்தோடு சொல்ல,அவனின் உள்ளத்தை அறியாமல், அவன் சொல்வது உண்மை என்று கருதி, “ஓகே டா, நீ முடிஞ்ச வரை சீக்கிரம் வர பாரு. முதல் நாள்! செம ஜாலியா இருக்கும். மிஸ் பண்ணிடாத. நீ வந்த பிறகு தான் நா கிளாஸ்க்கு போவேன்,  நா வெளிய நம்ம ப்ளாக் பக்கத்துல வெயிட் பண்றேன்” என கூறியதை கேட்ட கௌதமிற்கு..

‘ச்ச, ஆரன்கிட்ட உண்மையான காரணத்த சொல்லியிருக்கலாமோ! அவன் நெஜமாவே எனக்கு வேல இருக்குன்னு நம்பி பேசும் போது கஷ்டமா இருக்கு! ஓகே , இன்னைக்கே செல்லம்மாவ  காட்டி உண்மைய சொல்லிடலாம்! ” என்ற முடிவுடன் தனியாக கல்லூரிக்கு விரைந்தான்.தன் எண்ணம் போல அல்லாமல்,  தான் சொல்லும் முன்பே, ஆரன் தெரிந்து கொள்ளும் சூழல் உருவாகும் என்பதை அப்போது கௌதம் அறிந்திருக்க நியாயமில்லையே.காயத்ரிக்கோ கல்லூரி செல்வதை நினைத்தாலே பயம் அதிகமானதே  தவிர குறையவில்லை. கௌதம் அருகே இருந்த போது இருந்த தைரியம் இப்போது நிச்சயம் அவளிடம் இல்லை. இரவில் இருந்த தைரியம், நம்பிக்கை இரண்டும் இருக்கும் இடம் தெரியாமல் போக, முழு மனதையும் பயமே ஆக்கரமித்திருந்தது.


தான் வணங்கும் அரங்கனின் முன் வந்து நின்றவள், “நேக்கு ரொம்ப பயமா இருக்கு பெருமாளே! அவா கிட்ட பேசலாமின்னா, அவா நெம்பர் வாங்காம விட்டுட்டேன். எப்படின்னாலும் அவா முன்னாடி,  நா போகாம இருக்க முடியாது ! நேக்கு, என்ன பண்ணறதுன்னே புரியலையே ?! ”

” பெருமாளே! அவரூ சொன்னது மாதிரி வருவாரா?! அவர்கிட்ட இருந்தா போறும். நா சமாளிச்சிடுவேன். ப்ளீஸ்! அவர வர வச்சிடு.  நா ஊருக்கு வாரச்ச உனக்கு பிடிச்ச பிரசாதத்தை நெய்வேத்தியமா படைக்கறேன்” என அவசரமாக பெருமாளிடம் டீல் வைத்தவள், அதன் பிறகே கல்லூரிக்கு கிளம்பினாள்.கல்லூரியை நெருங்கும் போதே , அங்கு தனக்காக காத்திருந்த ஸ்வேதாவையும்,  அவளின் படையையும் பார்த்தவள்,
‘போச்சு!  இன்னைக்கு நீ காலி காயூ! அவா என்ன பண்ண போறாளோ?! அவா அவர பத்தி கேட்டா என்னடீ பண்ணுவ?! ஏன்னா! வந்திடுங்கலேன்!’ என தன் மன போக்கில் நினைத்த படியே அவர்களை கடந்து செல்ல விளைந்தவளை….

“ஏய் நில்லுடீ.. ! எவ்வளவு தைரியமா எங்கள தாண்டி போற நீ.? என அதிகாரமாய் ஆரம்பித்தவள், “ஹம்ம்! யாருடி அது ..?! உன் புருஷன்னு கைய புடிக்கறான்?! என்னையவே அடிக்கற மாதிரி பார்த்து வைக்கறான்?!” என கேட்டால்,  கௌதம் பற்றிய எதாவது தகவலை சொல்வாளோ?! என பார்க்க..

 

காயத்ரியோ எதுவும் பேசாமல் மௌனமாய் தலை குனிந்து கௌதமை மட்டுமே நினைத்து ஜெபம் போல் அவன் பெயரை மனதுள் உச்சரித்தவளை, பார்த்து மேலும் கடுப்பான ஸ்வேதா, அவளை சீண்டி விட்டாலாவது உண்மையை சொல்வாளோ என தோன்ற,

 

“அவ்வளவு தைரியமா உன் கைய புடிக்கறான்னா, அவன்  கைய மட்டும் தான் பிடிச்சானா?! இல்ல, உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல… ம்ம்ம்ம்… ம்ம்….ம்ம்…! ” என வெளியே கேட்டவள் மனதில், அப்படி எதாவது இருந்தால், இப்போதே காயத்ரியை எரிக்கும் அளவு ஆங்காரம் இருந்தாலும், அதிகாரமாய் ஆரம்பித்து , நக்கலாய் கேட்ட ஸ்வேதாவின் வார்த்தையில்….  

 

கோபம் வந்தாலும் , இதுவரை தான் யாரையும் எதிர்த்து பழக்கம் இல்லாமையும், ஸ்வேதாவின் வசதி மற்றம் அவளின் பின்புலத்தையும் நினைத்தவள், மெல்லமாக “இங்க பாரூங்கோ! , நா தப்பு செய்யல… நீங்க தான் என்ன ட்டீஸ் செய்ய பாத்தேல். அவா வந்து ஹெல்ப் பண்ணா! அதோட முடிஞ்சிது! இனி இப்படி செய்யாதேல்!” என கெஞ்சலாக சொன்னவள், ஏதோ ஒரு தைரியத்தில், “அப்படி மீறி செஞ்சா விளைவு விபரீதாம போயிடும் பார்த்துக்கோங்கோ! ” என சொல்லி முடித்த பிறகே தான் சொன்னதன் அர்த்தமும், வீரியமும் விளங்க, மலங்க மலங்க விழித்தவளை நெருங்கிய ஸ்வேதா,இதுவரை தான் எதை பேசினாலும் , வாய் பேசா ஊமையாய் இருந்தவள் , இன்று தன் முன் பேசுவதா?! அதுவும் எதிர்த்து என்று எண்ணித்துடன், “என்னடீ வாய் நீளுது. யார் கொடுத்த தைரியம்?! உன் புருஷன்னு நேத்து ஒருத்தனோட போனையே அவன் கொடுத்தானா?! அப்படி என்ன விளைவு வருமின்னு நானும் பாக்கறேன். வாடி !” என்ற வண்ணம் அவளின் கூந்தலை பற்றி இழுத்து அவளின் கன்னத்தை பதம் பார்க்க இருந்தவள், அடுத்த நொடி “அம்மா.!! ” என்ற வீரிடலுடன் கீழே கிடந்தாள், அங்கே வந்தவனின் கைங்கரியத்தால்…..

 

error: Content is protected !!