Jeevan 21(1)

Jeevan 21(1)

உன்னோடு தான்… என் ஜீவன்…

பகுதி 21

சக்கரவர்த்தி இண்டஸ்ட்ரீஸ் ப்ரைவேட் லிமிடெட்… பல மாடி கட்டடித்தோடு கம்பீரமாய் நகரின் மத்தியில் அமைந்திருந்தது. தன்னை போன்ற நிர்வாகிகளுக்கான பிரத்யேக வழியில் தனது வாகனத்தை செலுத்தி, தனக்கான பகுதியில் நிறுத்தியவனை அந்த நிறுவனத்தின் எம்.டி என சொன்னால் நம்ப இயலாத வகையில் இருந்ததால் தான், அவனின் பின்புலத்தை யாராலும் எளிதில் கண்டுவிட முடியாது இருந்ததோ என்னவோ…!!

அவனின் தனிப்பட்ட லிப்டில் தனது தளத்திற்கு சென்றவன், தனது அறைக்குள் சென்று, அங்கிருக்கும் மற்றொரு அறையில் ரெப்ரஸ் செய்து தயாராய் இருக்கும் தனது வேற்று உடைக்கு மாறி வந்தான்.

ஆரனிடமும், காயத்ரியிடமும் காட்டும் முகத்திற்கும் இப்போது முழு நிர்வாகியாய் மாறி, அதற்குரிய கம்பீரத்தோடும், மிடுக்கோடும் தனது இருக்கையில் ராஜாவாக வீற்றிருக்கும் இந்த கௌதம் சக்கரவர்த்திக்கும் ஆறு இல்லை அறுபது வித்தியாசம் இருந்தது.

தனது இருக்கையில் அமர்ந்ததும், சரியாக, “மே ஐ கம்மின்..!” என்ற சதா அங்கிளின் குரலுக்கு, “கம்மின்…!” என சொன்னவன், அவர் வந்ததும்,

“என்ன அங்கிள் இது! நீங்க கூட பர்மிஷன் கேட்டு தான் வரணுமா?! நானும் தினமும் சொல்லி பார்த்தாச்சு. நீங்க மாறவே மாட்டிங்களா?!” என சலிப்பாக சொல்ல,

“கௌதம், ஆயிரம் இருந்தாலும் இது உன் தாத்தாவோட ரூம். அவர்கிட்ட கேட்டே வந்தே பழகி போன ஒண்ணு. என்னோட ரத்தத்துல ஊறி போச்சுன்னு வேணுமின்னா வச்சுக்கோ!” என மென்மையான சிரிப்போடு சொல்லிட,

“ஆக மொத்தம் நீங்க இத மாத்திக்க மாட்டேன்னு சொல்றீங்க. அப்ப நா வேற கேபின் செட் பண்ணிட்டா?!” என அவரின் பதில் அதற்கும் என்னவாக இருக்கும் என அறிந்தும் கேட்க,

அவனின் எதிர்பார்ப்பை வீணாக்காமல்,
“அப்பவும் உன்னோட பதவிற்கு உண்டான மதிப்பை நா கொடுக்கணும் கௌதம். நா அதை செய்ய தவறினா மத்தவங்களும் அதையே செய்வாங்க. வயசுல பெரியவங்க சின்னவங்க அப்படிங்கறது வீட்டுல தான். இது நிர்வாகம். இதுல பதிவிக்கு தான் மரியாதை இருக்கணும். வயசுக்கு இல்ல” என இதற்கு முன்பே பலமுறை கூறியதை மீண்டும் சொல்லிட,

“அங்கிள் சரண்டர்!” என தனது கையை தூக்கி, சிறு புன்னகையோடு சொன்னவனை கனிவோடு பார்த்தவர், “சாரி கௌதம்! ஒரு சின்ன மிஸ்டேக் ஆகிடுச்சு. அதான் உன்ன இமிடியட்டா வர வைக்க வேண்டியாகிடுச்சு” என்று இதுவரை இருந்த நிலை மாறி குற்றம் செய்தவருக்கே உரித்தான பாணியில் சொன்னவரை பார்த்தவன்,

“கொட்டேஷன் லாஸ்ட் டேட் இன்னைக்கு ஈவினிங் அப்படின்னா நேத்தே சொல்லி சைன் வாங்கியிருக்கலாமே அங்கிள். எப்படி இப்படி லாஸ்ட் மினிட் வரை கவனிக்கல!” என நிர்வாகிக்கே உரித்தான பாணியில் அவனும் கேட்க,

“தப்பு என் மேல தான். என்கிட்ட ரெண்டு நாளைக்கு முன்னாடியே வந்திடுச்சு ஃபைல்” என சொல்லி தலைகவிழ்ந்தவரின் நிலை நன்கு புரிந்தது கௌதமிற்கு…

“சாரி அங்கிள்!” என கௌதம் சொன்னதும், “என்னப்பா! நா தான் சாரி சொல்லனும். நீ சொல்லிட்டு இருக்க” என பதட்டத்தோடு கேட்டவரை கனிவோடு பார்த்தவன்,

“இல்ல அங்கிள், இதே நீங்க வேற கண்ஷன்ல வொர்க் பண்ணிட்டு இருந்திருந்தா இப்ப ரிட்டையர்டு ஆகி ஜாலியா வீட்டுல இருந்திருப்பீங்க. எனக்காக நீங்க இப்பவும் முழுசா இத பார்த்துக்க எவ்வளவு ரிஸ்க் எடுக்கறீங்கன்னு தெரியாதா. அதனால தான் சொல்றேன், நா வேணுமின்னா காலேஜ் போகாம புல்லா இன்சார்ஜ் எடுத்துக்கவா. கொஞ்சம் உங்க ஸ்ட்ரஸ் குறையுமே!” என நடந்த தவறுக்கு அவருக்கு தான் அளித்திருக்கும் அதிகபடியான பதவி அழுத்தமும் அவரின் வயதும் தான் காரணம் என புரிந்து சொல்லிட,

“இன்னும் ஆறு மாசம் தான் இருக்கு கேம்பஸ். அடுத்து நீ எக்ஜாம் மட்டும் தான் எழுத போவ. அதுக்கு அப்புறம் நீயே நினச்சாலும் இந்த வாழ்க்கைய விட்டு போக முடியாது கௌதம். அதனால நீ அந்த மாதிரி முடிவு எடுக்காம, கிடச்சிருக்கற இந்த ஆறு மாசத்த உனக்காக வாழ்ந்துக்கோ. இனி இப்படி ஆகாம இருக்க என்ன பண்ணனுமின்னு நா மாத்து ஏற்பாடு பண்ணிட்டேன்”  என வரும்காலத்தின் நிசர்ஷனத்தை கூறிட, வேறு வழியின்றி எப்போதும் போல அவரின் பாசத்திற்கு கட்டுப்பட்டான் கௌதம் சக்கரவர்த்தி.

“அங்கிள் அமுதன்னு ஒரு பையன்…!” என ஆரம்பிக்க,

“ஆமாம்ப்பா வந்தான். நீ சொன்ன மாதிரியே வெயிட் பண்ண வச்சிட்டு வாட்ச் பண்ணினோம். ஒரு மணி நேரம் அமைதியா இருந்தவன், ரிஷப்ஷன்ல கெஞ்சி கூத்தாடி என்ன மீட் பண்ண வந்துட்டான்.

என்னன்னு கேட்டா, சும்மா ஓரே இடத்தில உக்கார போர் அடிக்குது. எதாவது வேலை, அது ஜஸ்ட் க்ளீனிங் வெர்க்குன்னாலும் கொடுங்க செஞ்சிட்டு இருக்கேன் அப்படின்னு சொன்னான். சரி அவனோட சர்ட்பிகெட்ஸ் பார்த்து முடிவு செய்யலாமின்னு வாங்கி பார்த்தா, மிரண்டு போயிட்டேன். அவ்வளவு நல்லா படிச்ச பையனுக்கு அடுத்து படிக்க வழியில்ல.

அவன் கம்ப்யூட்டர்ல சில கோர்ஸ் முடிச்சு வச்சிருந்தத வச்சு, அது சம்மந்தமா வேலை பார்க்கற இடத்துக்கு அனுப்பி வச்சேன். பையன் செம பாஸ்ட் அவன் போன கொஞ்ச நேரத்துல, அங்க இத்தன நாள் வேல பார்த்தவங்களுக்கு ஈடா வேல பார்க்கறான். நீயே சிசிடிவில பாரு!” என அவன் வேலை செய்யும் பகுதியே ஒளிபரப்ப, ஆர்வத்தோடும், வேகத்தோடும் தனது பணியில் ஈடுபட்டிருந்த அமுதனை பார்த்த போது தனது கணிப்பு தவறாகவில்லை என்ற எண்ணம் பெருமிதத்தை தந்தது.

“அங்கிள், அவன இங்க வேலை பார்க்க வர சொல்லல. அவனோட படிப்ப முடிக்க தேவையானத செஞ்சு கொடுக்க தான் வர வச்சேன். ஏற்கனவே நம்ம டிரஸ்ட் மூலமா படிக்கறவங்க போல இவனோட ஆசை ஆர்வம் எதுலன்னு அனலைஸ் பண்ணிட்டு ஏற்பாடு பண்ணிடுங்க. இப்ப இருந்து அவனோட புல் செலவும் நம்ம டிரஸ்ட் பேர்ல கணக்கு வச்சிடுங்க” என சொல்ல யோசனையோடு அமர்ந்திருந்த சதாசிவத்தை பார்த்தவன்,

“என்ன அங்கிள் யோசனை?!” என்றவனுக்கு, “கௌதம் ஏற்கனவே நம்ம டிரஸ்ட்ல படிக்க வைக்க படற ஆட்கள் அதிகமா தான் இருக்கு. அவங்களுக்கு, நம்ம வேலைகாரங்களுக்கு கொடுக்கற சலுகைன்னு செய்யறதுல, நம்ம எடுக்கற லாபத்தோட அளவு கம்மி தான். இதுல மறுபடியும்… ” என இழுக்க…

“புரியுது அங்கிள், நீங்க சொல்ல வர்ற விசயம். ஆனா ஒருவேளை சாப்பாடு போடறத விட, இந்த மாதிரி திறமை உள்ளவங்க படிச்சா, அவன் மட்டுமில்லாம அவன சார்ந்தவங்களையும் அவனே பார்த்துப்பான். அதோட நம்ம வெர்க்கர்ஸ்க்கு தேவையானத நானே செய்யலைன்னா யார்கிட்ட கேட்பாங்க. இன்னும் லாபத்தை சம்பாரிச்சு வச்சு என்னத்த செய்ய.

என்ன பண்ட் தான் ப்ராபளம் ஆகும் ன்னு நீங்க நினச்சா, அதுக்கும் தீர்வு இருக்கு, ஆனா அத நீங்க எப்படி எடுத்துப்பீங்கன்னு.. ”  என சொல்லி நிறுத்த,

“கௌதம் தயங்காம சொல்லு! அதுல உள்ள ப்ளஸ், மைனஸ் அனலைஸ் பண்ணிட்டு டிசைட் பண்ணலாம்” என மூத்த நிர்வாகியாய் சொல்லிட…

“ஏன் அங்கிள் நம்ம பைனான்ஸ் கம்பெனி ஸ்டார்ட் பண்ண கூடாது?! மக்கள் கொடுக்கற பணத்த வச்சே நம்ம ரொட்டேஷன் பண்ணலாமே!” என்றதும்,

“கௌதம் இதுல ரிஸ்க் அதிகம். அதனால தான் உன்னோட தாத்தா பல தொழில் செஞ்சாலும் இதுல வரல. கொஞ்சம் ஏமாந்தாலும் சிக்கல் தான். உன்கிட்ட இருக்கற பணத்துக்கு நீ ரிஸ்க் எடுக்கலாம். ஆனாலும் ஏதோ மனசுக்கு உறுத்துது… “என சொல்ல,

“அங்கிள், இதுல ரிஸ்க் இருந்தாலும், எத்தனையோ பேர் கஷ்டப்பட்டு சம்பாரிச்ச பணத்த மோசடி கும்பல்கிட்ட இழந்துட்டு நிக்கறாங்க. நம்ம கம்பெனி மேல குட்வில் நல்லா இருக்கும் வரை, நம்மள நம்பி வர்றவங்களுக்கு ஒரு நல்லது செய்யறதாவும் இருக்குமே.

சில பேருக்கு லோன் கேட்டு பேங்க் போனா, அவன் கேட்கற ஸ்யூரிட்டீல இருந்து டாக்குமெண்ட் வரை கொடுக்கறதுக்குள்ள அவங்க படுற பாடு. அப்பவும் உறுதியா கிடைக்குமா தெரியாது. அவங்க சில வட்டிக்கு கொடுக்கறவங்ககிட்ட மாட்டிட்டு கடைசிய உயிரையே விடுற வரை போகுது. இது நம்ம ஆரம்பிக்கற இந்த பைனாஸ் கம்பெனியால குறைக்க முடியுமே?!” என பேசி பேசி, இறுதியில் அவரை ‘சரி !’ என சொல்ல வைத்தவன், அதற்காக செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த நடவடிக்கைகளை ஒரு வாரத்தில் செயல்படுத்தி முடிக்க வேண்டும் என தீர்மானித்து, தான் கையெழுத்து போட் வேண்டியவற்றை பார்வையிட்டு முடித்து, மற்ற வேலையில் மூழ்கியவனை கலைத்தது அங்கிருந்த அவனின் அலைபேசி.

அதனை எடுத்து பேசியவன் மறுமுனையில் வந்த செய்தியில், “வாட்..! எந்த ஹாஸ்பிடல்… ! ஓகே இப்பவே வர்றேன்” என்றவன் சதாசிவத்துக்கு அழைத்து, தனக்கு வந்த தகவலை சொல்லிக்கொண்டே கீழ் தளம் வந்தவன், தனது வாகனத்தை எடுத்து கொண்டு பறந்தான் ஹாஸ்பிட்டலை நோக்கி…

********

பகல் பொழுதில் நன்றாக உறங்கி எழுந்த ஸ்வேதா, துஷ்யந்திடம் சொன்னது போல கௌதம், ஆரன் பொறுப்பை விடுத்து,
இது அத்தனைக்கும் காரணமான ‘காயத்ரியை எதாவது செய்ய வேண்டுமே!’ என்ற எண்ணம் சுழன்று கொண்டே இருக்க, மாலை தனது அறையின் பால்கனியில், தன் தாய் தந்த பழச்சாறை குடித்துக்கொண்டு சிந்தனையில் இருந்தவளை கலைத்தது தொலைபேசி.

போனில் ஒளிர்ந்த எண்ணை பார்த்து கடுப்பானாலும், சட்டென, ‘நா வந்ததுக்கு அப்புறம் என்ன நடந்துச்சுன்னு இவளுங்ககிட்ட கேட்டா தெரியும்?! இவளுங்கள வச்சே அந்த பெக்கர ஒருவழி பண்றேன்!’ என யோசித்து முடிக்க, அது தனது அழைப்பை நிறுத்தியிருந்தது.

ஸ்வேதாவே மீண்டும் அவர்களுக்கு அழைக்க, எடுத்தவுடன், “ஸ்வே இப்ப எப்படி இருக்க. ஆர் யூ ஆல் ரைட்? அவன் உன்ன அடிச்சதும் எங்களுக்கு வயித்த கலக்கிடுச்சுடீ! நீயும் உடனே போயிட்டையா … !” என பேசிக்கொண்டே சென்றவளின் பேச்சில் உள்ள அக்கரையை பார்க்காமல், ‘ச்சை! இதுங்களோட!’ என எரிச்சல் வந்தாலும், தனக்கு வேண்டிய காரியத்தை நிறைவேற்றி கொள்ள,

“யேய்… ஐ ஆம் ஆல்ரெட் நைவ். நாளைக்கு காலேஜ் வந்திடுவேன். ஆமா நா வந்ததும் அந்த பெக்கர விட்டுட்டு அவன் போனானா இல்ல.. !” என எரிச்சலை வெளிப்படுத்தா பாவத்தில் தனக்கு தேவையானதை கேட்க,

அதற்காகவே காத்திருந்தது போல, ஸ்வேதாவின் வயிற்றெரிச்சலில் மேலும் பல லிட்டர் பெட்ரோலை அள்ளிக் கொட்டி அனலை கூட்டிய அவர்கள், “மதியம் லன்ச் கூட ரெண்டும் ஒண்ணா தான் சாப்பிட்டுச்சுங்கன்னா பார்த்துக்கோ!” என சொல்லி நிறுத்த,

“நீ சொல்றத வச்சு பாத்தா, அப்ப அவனும் நம்ம காலேஜ் தான் போலவே!” என தனது சந்தேகத்தை கேட்க,

“நிச்சயமா நம்ம காலேஜ் தான். இல்லாட்டி எப்படி சரியா காலேஜ்க்கு வந்தான்?! மதியமும் கேண்டீன்ல இருந்தானுங்களே!
இப்ப… அவன் அந்த மாமிய பார்க்க வந்திருந்தா, அந்த ஆரன் எதுக்கு வர்றான்?!

இதுங்க தான் ஜோடி புறாவா திரியற கேஸ் ஆச்சே ஸ்வே. ரெண்டும் ஒண்ணா நம்ம காலேஜ்ல இருக்குங்கன்னா, அவனுங்க இங்க தான் படிக்கறாங்க. அது கண்பார்ம்?!” என தனது கணிப்பை சொன்னவளின் புத்திகூர்மையை மனதில் மெச்சியவள், வெளியே, “சரி ! சரி ! ஓவரா புத்திசாலி மாதிரி பேசாத. நா சொல்றத செய்யறதுல முடுஞ்சா, உன் புத்திசாலி தனத்த காட்டு!” என உசுப்பேத்தும் வகையில் பேசியவள்,

“அந்த பெக்கர் காயு இன்னைக்கு நிம்மதியா தூங்க கூடாது. அவள இந்த காலேஜ் விட்டு போற மாதிரி செய்யனும். இல்ல, நா நாளைக்கு பார்க்கும் போது, எப்பவும் விட என்னை விட்டு நாலு அடி விலகி ஓடவாவது செய்யணும். அவளுக்கு சப்போர்ட்டுக்கு வர்றவன வரவிடாம செய்ய வேண்டியத என்னோட அண்ணன வச்சு நா செஞ்சிடுறேன். காட் இட் !” என சொல்ல

எப்போதும் அவளின் பேச்சை மட்டுமே கேட்டு, அதை தவிர வேறு வேதமில்லை என்பது போல திரியும் அவர்கள், ‘அவள் இட்ட கட்டளையை நிறைவேற்றியே தீருவோம்!’ என்ற சபதத்தோடு ஹாஸ்டல் வந்தனர்.

ஸ்வேதாவின் கட்டளையை நிறைவேற்றும் பொருட்டு என்ன செய்யலாம் என கூட்டு சதிதிட்டம் நடத்த, “அவள நைட் பாத்ரூம் போகும் போது வெளிய வச்சு லாக் பண்ணிடலாம். நைட் புல்லா பாத்ரூம்ல அவ கிடந்தா தான் அறிவு வரும்” என ஒருத்தி சொல்ல,

“இல்ல, அது சரி வராது. பகல்ல காலேஜ் போற அவசரத்துல யாரும் பாத்ரூம் வெளிய லாக் ஆகியிருந்தா கவனிக்க மாட்டாங்க. குளிச்சிட்டு வந்தா அடுத்து அவங்க அந்த சைட் போறது ரேர். பட் நைட் அப்படி சொல்ல முடியாது. அதோட ரொம்ப டீப் சைலன்ட்டா இருக்கும் போது கதவ தட்டினா, யாராவது வந்து பார்க்க ச்சான்ஸ் அதிகம்!” என அந்த திட்டத்தின் ஓட்டையை விளக்க, அதுவும் சரி தான் என்பதால், ‘வேறு என்ன செய்யலாம்!’ என்று அறையில் இருந்து யோசிக்க,

அவர்கள் போடும் திட்டம் எதுவும் தன்னவளை பாதிக்காத வகையில் அழகாய் காய் நகர்த்தி, தனது செல்வாக்கையும் கொண்டு, காயத்ரி ஹாஸ்டல் வந்த சிறிது நேரத்திலேயே அவளின் பொருட்கள் அனைத்தும் கீழ் தளத்தில் வார்டன் அறைக்கு அருகே மாற்றப்பட்டிருந்தது, உடன் சுமியையும் சேர்த்து.. கௌதமினால்…

தன்னவளுக்கு அளித்த பாதுகாப்பை ஆரனுக்கும் கொடுத்திருந்தால் இப்போது ஆரனும் பத்திரமாக இருந்திருப்பானோ!!!

******

கௌதம் தன்னிடம் சொன்னதற்காக லைப்ரரி வந்த ஆரன் பின் அதில் மூழ்கி போனான். ஆரன் எப்போதும் இப்படி தான். ஒரு வேலையை தானாக எடுத்து செய்ய யோசித்து சோம்பேறி தனமாக இருப்பானே ஒழிய அதை எடுத்து விட்டால் அதை சிறப்பாக செய்திட தன்னால் ஆன வரை முயற்சிப்பான்.

இன்றும் ஆரம்பித்தில் விருப்பமின்றி துவங்கியவன், பின் தன் குணத்தால் செய்வதை திருந்த செய்ய நினைத்து மேலும் அது தொடர்பான பல புத்தகங்களை கொண்டு தனக்கு தேவையான குறிப்புக்களை எடுத்துக்கொண்டவன், லைப்ரரியின் க்ளோஷிங் டைம் வரை இருந்துவிட்டு வெளிய வந்தவன், மெல்லிய இருள் பரவ துவங்க,

தனது டூக்காட்டி அருகே வந்தவன், அதில் உள்ள கண்ணாடியில், அவனை பார்த்து, “ஆரா! நீயாடா இப்படி ?! சின்சியர் ஆகிட்ட. இப்ப நீ எடுத்த நோட்ஸ் மட்டும் கௌதம் பார்த்தா, சும்மா மிரண்டு போயிடுவான்” என சொல்லி, “நீ சமத்துடா!  ஓகே லேட் ஆச்சு, இதுக்கே ஜெனி என்ன சவுண்டு சாமுகிட்ட விட்டுட்டு இருக்கோ…?!” என சொல்லியபடி, மெல்லிய விசில் ஒலியோடு வண்டியை எடுத்தவன், காதில் ஹெட்செட் மாட்டி ஏஆர் ரகுமானின் டேட்டஸ்ட் பாடல்களை ஒலிக்க விட்டு, அதற்கும் மேலே ஹெல்மெட்டை மாட்டி,  சாலையில் போக்குவரத்தோடு கலந்தான் தனக்கான ஆபத்து வழியில் காத்திருப்பதை அறியாமல்…

மாலை நேர ட்ராபிக்கில், அதி வேகமாய் செல்ல இயலாமல் மெல்ல ஊர்ந்தவன் தனது பொறுமை பறக்கும் நொடி எப்போது என்பது போல வெறுப்பில் இருக்க, அன்றைக்கு ஏதோ அரசியல் பிரமுகரின் வரவிற்காக முற்றிலும் வேறு பாதையில் மாற்றி செல்ல வேண்டிய நிலையும் வர,

அதீத கடுப்போடு வந்தவன்,  அவன் வீட்டிற்கு செல்லும் பல வழிகளில், சந்து பாதையாய் இருந்தாலும், ட்ராபிக் தொந்தரவு இருக்காது! என்பதால் அதில் செல்ல, எதிரே வாகனங்கள் வர வாய்ப்பும் இல்லாத நிலையில், தனது வேகத்தை கூட்ட, அந்த சாலை முடிந்து வந்த திருப்பத்தில் திடீரென முளைத்த லாரியை கடைசி நொடியில் கவனித்த ஆரன் தனது வாகனத்தை கட்டுப்படுத்த முயன்று முடியாமல் போக, அந்த லாரியின் உபயத்தால் ரத்த கழறியாகி கிடந்தான் யாருமற்ற சாலையில்…..

error: Content is protected !!