Jeevan 22(1)

உன்னோடு தான்… என் ஜீவன்…

பகுதி 22

காலை நேரத்து காற்றில், அந்த கல்லூரி மரங்களில் பூத்திருந்த பூக்கலெல்லாம் மலர் பாதை அமைத்திருக்க, அங்கு வந்திருக்கும் காளைகள் தங்களுக்கு முன்னே நடைபயிலும் பெண்களை அந்த பூக்களோடு ஒப்பிட்டு கலகலத்துக்கொண்டு துள்ளி திரிந்திடும் வேளையில், தன்னை சுற்றி நடக்கும் எதையும் உணராமல் மனதின் வலி முகத்தில் நன்கு தெரிய, அன்று கௌதமோட இனைந்து முதன்முதலாய் அமர்ந்த கல்மேடையில் அமர்ந்திருந்தாள் காயத்ரி.

‘இன்றோடு கௌதமை தான் சந்தித்து பத்து நாட்கள் தான் கடந்திருந்திருக்கிறதா?!’ என்ற எண்ணம் மேலும் அவளின் முகத்தின் கவலை ரேகையை கூட்டியதே அன்றி குறைக்க இல்லையோ… முதல் நாள் மாயமாய் வந்தவன், வந்தது போலவே மாயமாகி போன விந்தையை நினைக்க அவளின் கண்களோ கண்ணீர் மழையை பொழிய துவங்கியது.

‘ஏன்னா! இப்படி செஞ்சேல். நீங்க யாருன்னு தெரிஞ்சின்ட போது தான், நேக்கு புருஞ்சுது, நா உங்க தகுதிக்கு சமமானவ இல்லன்னு… நீங்க விலகி போனது சரின்னு மூளைக்கு புரியறது, மனசுக்கு புரியலையேன்னா…!
நீங்க தகுதிக்காக விலகி போனேளா?! அல்லது மத்தவா சொல்ற மாதிரியான்னு புரியாம பைத்தியம் ஆகிடுவேனோன்னு இருக்கேன்னா?!

என்கிட்ட நீங்க நடத்துன்ட முறைய வச்சு தப்பானவரா துளியும் நினைக்க முடியலயே. நேக்கு எல்லாமுமா இருப்பேன்னு வாக்கு கொடுத்தேளே மறந்துட்டேளா…! என மனதின் உள்ளேயே கௌதமோட உரையாடியவள், கௌதம் பற்றிய உண்மை அறிந்த தினத்தை நினைக்க, அந்த நாள் வராமலே இருந்திருந்தால் எல்லாம் நன்றாக இருந்திருக்குமோ?! என்று வருந்தினாள்.

******

கல்லூரிக்கு செல்வதற்கு தோதாய் தயாராகி வந்த ஸ்வேதா, அங்கே தன்னை எதிர்நோக்கி காத்திருப்பது போல காத்திருந்த துஷ்யந்திடம் சென்றவள்,

ஸ்வேதா, “டேய் அண்ணா, எனக்கொரு வேலை செய்யனும் நீ” என்றதும், அவளின் கட்டளையை நிறைவேற்றுவதை தவிர வேறு அறியா, துஷ்யந்த், “சொல்லுடா குட்டிம்மா என்ன செய்யனும். நீட்டா செஞ்சிடலாம்” என கேட்க,

ஸ்வேதாவோ, “என்ன செய்வீயோ தெரியாது. அந்த கௌதம் இனி அந்த பெக்கர் தயிர்சாதம் கிட்ட வரகூடாது” என காயத்ரியின் கையை பிடித்திருந்த கௌதமின் நினைவில் கடுப்போடு சொல்லிட,

“குட்டிம்மா, நீ கவலையவிடு, அவன் இனி கொஞ்ச நாளைக்கி காலேஜ் பக்கம் எட்டி கூட பார்க்க மாட்டான்” என்ற துஷ்யந்தின் வார்த்தையில்,

“என்னடா சொல்ற?! எப்படி இவ்வளவு உறுதியா சொல்ற?!” என வியப்போடு கேட்க,

தங்கையை பார்த்து, சிறு சிரிப்போடு, “அவன பத்தி எல்லா டீட்டெய்லும் கிடச்சதுல பார்த்தேன். அவனுக்கு ஆரன் மேல அம்புட்டு பாசமாமே! அதான், உண்மையான்னு டெஸ்ட் பண்ண மாதிரியும் ஆச்சு, உன்ன அடிக்க நினச்ச அந்த ஆரனுக்கு தண்டன கொடுத்த மாதிரியும் ஆச்சுன்னு, நேத்து நைட்டே ஆள தூக்க ஏற்பாடு செஞ்சிட்டேன்” என தனது கீழ்தரமான செயலை விளக்கிட,

“என்ன சொல்ற அவன் இப்ப..?!” என ‘ஆரன் உயிரோடு இல்லையோ?’ என தெளிவு படுத்திக்கொள்ள கேட்ட ஸ்வேதாவை பார்த்து, அதே கோணல் சிரிப்போடு,

“அதெல்லாம் சாகற மாதிரி இல்ல, சும்மா பயம் காட்ட தான். இதுக்கு மேல உன் வழியில வந்தா நேரா பரலோகம் தான்” என கையை மேலே காட்டி சொன்ன துஷ்யந்தை தாவி அனைத்தவள்,

“ச்சோ! ஸ்வீட் அண்ணா…!” என அவனின் கேவலமான செயலுக்கு பாராட்டு பத்திரம் வாசித்தவள், அடுத்து,

“டேய் … அண்ணா…. !” என குழைய, அவளின் குழைவுக்கு காரணம் புரிந்தாலும், “என்னடா குட்டிம்மா…. ?” என கேட்க,

“அது வந்து… அது வந்து.. அந்த கௌதம் பத்தி… ? ” என அவனின் கைவிரலில் செடுக்கொடுத்து கொண்டே கெஞ்சும் குரலில் கேட்க,

‘ஹா…ஹா… ‘ என சிரித்த துஷ்யந்தின் சிரிப்பில், கோபம் போல முகம் திருப்பியவளை கண்டு, “மாப்பிள்ளைய பத்தி என்ன தெரிஞ்சுக்கணும் சொல்லு… ?! என கேட்டதும், ஆச்சர்யமாய் கண்விரித்தவள், “மாப்பிள்ளைன்னு முடிவு பண்ணிட்டையாடா… ?!” என கேட்க,

அவளின் கையை வாஞ்சையோடு பற்றியவன், “நீ ஆசை பட்டாலே, அத கொண்டு வர்ற ஆளு நா.. இதுல அவன பத்தி தெரிஞ்சதும், முடிவே செஞ்சாச்சு அவன் தான் நம்ம வீட்டுக்கு மாப்பிள்ளைன்னு!” என சொல்லி நிறுத்த, புரியாத பாவனை காட்டிய ஸ்வேதாவை கண்டவன், “புரியலையா குட்டிம்மா! இந்தா, இதுல அவன பத்தி எல்லா விசயமும் இருக்கு படுச்சு பாரு !” என ஒரு கோப்பை கொடுக்க,

அதில் இருந்ததை கண்டவளின் கண்கள் முதலில் ஆச்சர்யத்தை காட்டிட, கூடவே மயக்கத்தையும், கனவையும் விதைக்க, ‘அவன் தனக்கு மட்டும் தான் இனி!’ என்ற கர்வத்தையும் காட்டி, “என்னால நம்பவே முடியல… அவனை இந்த அளவு நா எதிர்பாக்கவே இல்ல… அவன எப்ப இந்த வீட்டுக்கு கொண்டு வர போற.. ?! இவ்வளவு வசதி வாய்ப்போட இருக்கறவனுக்கு அந்த பெக்கர் பெட்டர்ஹாப் ஆகிட கூடாது. அவளையும் விலக்கி அவன என் கை பிடிக்க வைக்கணும், சொல்லு இதெல்லாம் எப்படி?!” என கேட்டவளுக்கு,

“குட்டிம்மா! இப்ப நீ அவசரபடக்கூடாது. அவன நேரம் பாத்து தான் நம்ம ரூட்டுக்கு வர வைக்கணும். அதுக்கு கொஞ்சம் டைம் எடுக்கும். நீ பொறுமையா இரு… ” என சில விசயத்தையும், அவனின் தந்திரங்களையும் விளக்கிட,

“டேய் அண்ணா ! நா கூட உன்ன என்னமோன்னு நினச்சேன். பின்னிட்ட போ. திட்டம் போடறதுல சகுனியே உன்கிட்ட தான் பிச்சை எடுக்கனும்!” என சொன்னவளின் குரலில் இருந்தது, பாராட்டா?! அல்லது நக்கலா?! எனும் படியாக இருந்தாலும், தங்கை சொல்வது எப்போதும் பாராட்டாக மட்டுமே எடுத்து கொள்ளும் அந்த மடையனுக்கு புரியவில்லை, அவன் இழுத்து வந்து கட்ட நினைப்பது ஆடு அல்ல, சிங்கம் என்று….
தனக்கான அழிவின் பாதையை ஒருவன் திட்டமிட்ட தொடங்கிவிட்டான் என்பதை அறியாமல் கும்மளமிட்டு கொண்டனர் உடன்பிறப்புகள் இரண்டும்….

****

‘நேற்றை போலவே இன்றும் தன்னை காண கௌதம் வருவானா?!’ என்ற சந்தேகம் இருந்தாலும், ‘வந்தால்…?!’ என்ற ஆவலோடு, விரைவாய் தயாரான காயத்ரி, கண்ணாடியில் திரும்ப திரும்ப தனது முகத்தை பார்த்தவளுக்கு, நேற்று கௌதம் தன்னிடம் கொஞ்சும் குரலில் சொன்ன முதலிரவு, நினைவில் எழ, ரூஸ் போடமாலே அவளின் கன்னம் இரண்டும் சிவந்திட, முகத்தை மூடி மெல்ல சிரித்தவளின் செயலையே பார்த்திருந்த சுமி,

“ஓய் மாமீ! என்னடீ சிரிப்பு, மேக்கப் எல்லாமே கொஞ்சம் ஓவர் டோஸா இருக்கு.. கன்னத்துல என்ன ரூஸ் எக்கச்சக்கமா போட்டிருக்க போலவே?!” என கிண்டலாய் கேட்க,

சுமி இருப்பதை மறந்து தான் செய்த செயல்கள், நினைவில் எழ அவளை பார்க்க வெக்கி தலையை திருப்பியவள், அவள் கன்னத்தை பற்றி சொன்னதும், அது எதனால் என புரிய, “ச்சும்மா கிண்டல் செய்யாதே சுமி! நேக்கு ஒரு மாதிரி இருக்கு…!” என சினுங்கலாய் சொன்னதும்,

“பார்ரா வெக்கத்த… ஊகூம்.. இது சரியே இல்ல…!” என தலையே இருபுறமும் ஆட்டி மெல்லிய சிரிப்போடு சொல்லிட, அவளின் பேச்சிலும், பாவனையிலும் காயத்ரியின் நிலை இன்னும் மோசமாகி போனது.

அவளின் நிலையை புரிந்து கொண்டது போல், இதுவரை இருந்த கேலி பாவம் மாறி, “காயத்ரி, நேத்து நைட் நீ சொன்னத கேட்டா செம இன்ட்ரஸ்ட்டிங் அண்ட் பயங்கற ஷாக்கிங் தான்… இப்படியெல்லாம் நடக்குமான்னு… பட் நீ சொல்ற மாதிரி, இது கடவுளோட சித்தமா இருந்தா, நடக்கறது நல்லதாவே நடக்கும் …” என சொன்னவள் தொடர்ந்து,

“நா சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதே, நீ எதிர்பார்த்து ஏமாந்திட கூடாதேன்னு தான்… !” என ஆரம்பித்தவள், ‘எப்படி சொல்வது, தான் சொல்வதை சரியாக புரிந்து கொள்வாளா?!’ என யோசனையில் நிறுத்த…

“சுமி, நீ தாராளமா மனசுல பட்டத சொல்லுங்கோ.. நா தப்பா எதுக்க மாட்டேன்… ” என காயத்ரியின் வார்த்தையில், தன் மனதில் பட்டதை சொல்லிவிடுவது என்ற முடிவோடு.

“காயூ, இப்படி உக்காரூ ” என தனது அருகே அமர வைத்தவள், “நீ சொன்னது போல நடந்தா கடவுள் சித்தம் தான், ஆனா அதே நேரம் அவர பத்தியோ, அவரோட குடும்பத்த பத்தியோ, உனக்கு எதுவுமே தெரியல. மின்னல் மாதிரி வந்து போயிருக்காரூ… அவர பத்தி தெரிஞ்சுக்காம, நீ அதிகமா ஆசைய வளர்த்திட்டு, அது நிறைவேறாம போயிட்டா… ?!” என கேள்வியாய் நிறுத்த,

சுமியையே பார்த்திருந்த காயத்ரி, அவள் சொன்ன, ‘நிறைவேறாமல் போனால் !’ என்ற வார்த்தையிலேயே கண்ணில் நீர் நிறைந்து விட,

“காயூ பாரு இதுக்கு தான் சொல்றேன். நீ மென்மையானவடா, உன்னால சின்ன ஏமாற்றத்த கூடி தாங்க முடியாது.. சோ நீ எதுக்கும் அவர் இன்னைக்கு வந்தா நல்லா எல்லாத்தையும் தெரிஞ்சிட்டு அடுத்து என்னன்னு யோசி.. ! புரியுதா?!” என நல்ல தோழியாய் சொன்னவள், ‘தான் சொன்னதை பற்றி அவளே யோசித்து முடிவெடுக்கட்டும் !’ என நினைத்து அவளை தனியே விட்டு தானும் கல்லூரிக்கு கிளம்பிட சென்றாள்.

சுமியின் வார்த்தைக்கு பிறகே, ‘தனக்கு அவன் பெயர், வேலை செய்யும் இடம் தவிர வேறு எதுவும் தெரியாமலே, இந்த அளவிற்கு உருகி நிற்கிறோம்!’ என்பது விளங்க, ‘அதனால என்ன?! நேக்கு அவர பத்தி தெரியும். அவரும் ராம் அண்ணா மாதிரி தானே வேலைக்கு போயின்டு இருக்கார். தப்பா அவர பாக்கறச்ச நேக்கு தோணலையே.அவா என்ன எப்பவும் ஏமாத்திட மாட்டா.

ஏமாத்த அவரு என்ன அந்த ஸ்வேதா மாதிரி பணம் படச்சவரா?! பணக்காரங்க தான் சுயநலமா அவங்களுக்கான தேவைய செஞ்சுக்க மத்தவாளா யூஸ் பண்ணிப்பா ன்னு அப்பா அடிக்கடி சொல்வார். பணம் படச்சவங்க கிட்ட ஒதுங்கி போகணும், அவங்க ஆசைபட்டத அடைய எதையும் செய்வாங்க, நம்மள மாதிரி ஆளுங்கள அவங்க ஒரு பொருட்டாவே மதிக்கமாட்டா ன்னும் சொல்லி தானே வளர்த்தார், அதனால நா தேர்ந்தெடுத்தவரும் தப்பா இருக்க மாட்டார்?! ‘ என ஒருவாறு சிந்தை தெளிந்தவள் கௌதமை பற்றி தெரிந்து கொள்ள காத்திருக்க, அவனோ ஆரனின் நிலைக்கு காரணமானவரை என்ன செய்யலாம் என்று திட்டமிட்டுக் கொண்டிருந்ததில், தன் செல்லம்மாவை மறந்து போனான்.

வசதியின் அடிப்படையிலேயே தவறுகள் நடக்கிறது என்று மனதில் ஆழமாய் பதிந்து போன காயத்ரியின் எண்ணத்தை பற்றி தெரிந்திருந்தால் கௌதம் அவனே தன்னை பற்றி சொல்லி இருப்பானோ?! அதை செய்ய தவறியதால் அவன் சொல்லமாலேயே தெரிந்து கொண்ட அவனின் பின்புலம் காயத்ரியை, கௌதமை விட்டு விலக்கிட செய்ய, அவளை தன்னை விட்டு விலக விடுவானா.. அந்த பிடிவாதகாரன்… ?!

*******

ஸ்வேதா கல்லூரி வரும் வழியிலேயே தனது கும்பலுக்கு அழைத்தவள், நேற்று தான் சொன்ன விசயம் குறித்து கேட்க, “சாரி ஸ்வே! நாங்க ப்ளேன் பக்காவா தான் போட்டோம். பட், அவள வார்டன் ரூம் சைடுல ஷிப்ட் பண்ணதால, அத வெர்க்கவுட் பண்ண முடியல!” என சொன்னதை கேட்டு பல்லை வெறித்தவள்,

‘ச்ச, இந்த பெக்கர் இப்படி தப்பிட்டிட்டாளே!’ என்ற கடுப்போடு, ஏற்கனவே தன் அண்ணன் சொன்னதை மனதில் கொண்டு வந்தவள், “ஓகே, நீங்க அவளோட ஏக்டிவிட்டீஸ் மட்டும் நோட் பண்ணி வைங்க. நா வந்துட்டு இருக்கேன். வந்ததும் பார்த்துக்கலாம்! ” என சொல்லி போனை வைத்தவள், ‘எப்படி அவளை கலங்கடிக்கலாம் ?’ என்ற தீவிர சிந்தனையில் வர… அவளின் எண்ணத்திற்கு வலு சேர்ப்பது போல, கௌதம் வராததால் அவனை எதிர்பார்த்து சோகமே உருவாய் அமர்ந்திருந்தாள் காயத்ரி.

ஸ்வேதா வந்ததும், காயத்ரி வந்தது முதல் அந்த கல்மேடையில் அமர்ந்து, வாயிலை பார்ப்பதும், போனை பார்ப்பதுமாய் இருப்பதை சொல்ல, அவள் கௌதமிற்காக காத்திருப்பது புரிந்து தனக்குள் சிரித்துக்கொண்டவள், ‘தேடு தேடு அவன நல்லா தேடு.. அவன் திரும்ப வர்றதுக்குள்ள, நீ அவன விட்டு ஓட வைக்கறனா இல்லையா பாரு…?! அமுக்கினி மாதிரி இருந்துட்டு, கோடீஸ்வரி ஆக போறையா! அதுக்கு நா விடுவேனா?!’ என சிந்தித்தவளுக்கு தெரியாதே, கௌதமின் பின்புலம் அறிந்து காயத்ரி அவனுக்காய் காத்திருக்கவில்லை, அதை அறிந்து கொள்ளவே காத்திருக்கிறாள் என்பது, அதை தெரிந்து கொண்ட நேரம் ஸ்வேதா செய்ய நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்காமல் விடுவாளா???

காயத்ரி கௌதமிற்காக காத்திருந்தவள், ‘அவருக்கு இன்னைக்கு வேலை இருந்திருக்கும் போல! நேத்தே என்னால வேலைக்கு போகல. கால் பண்ணி பேசவாச்சும் செய்யலாமின்னா, ஒருமாதிரி கூச்சமா இருக்கே! பெருமாளே! என்ன செய்ய.. ?!’ என சிந்தித்தவள், அவளின் வகுப்பு துவங்கும் நேரம் நெருங்க, வேறு வழியில்லாமல் அந்த இடத்தை விட்டு சென்றாள் மனதில் எழுந்த ஏமாற்றத்தோடு….

அடுத்த இரு நாட்கள், ஸ்வேதா குழு தன்னை கவனிப்பது தெரியாமல், அன்று போலவே அவனுக்காய் காத்திருந்தவள், ஒரு முடிவோடு கௌதமிற்கு அழைத்திட வந்தது அவனின் பேசியின், ‘பிசி …’ என்ற தகவலே…

திரும்ப பலமுறை முயற்சித்தும் லைன் பிசி என வர, ‘அவருக்கு வேலைல எதோ சிக்கல் போல, என்னோட கால பார்த்தா திரும்ப கூப்பிடுவாரூ’ என மீண்டும் மனதை தேற்றிக்கொண்டு சென்றவளின் சோர்வான முகம் பார்த்து, சந்தோஷம் கொண்டது ஸ்வேதாவின் ஜால்ராக்கள்.

******

ஹாஸ்பிடலில் ஆரனோ, அனைவரையும் எவ்வளவு தூரம் படுத்த முடியுமோ, அதை சிறப்பாக செய்து கொண்டிருந்தான். தூங்கும் நேரம் தவிர மற்ற நேரத்தில் அவன் கௌதமை தன்னைவிட்டு விலகி செல்ல அனுமதிக்கவே இல்லை. அவனின் அன்றைய விபத்து கொடுத்த தாக்கம், அவனை அவ்வாறு செய்ய வைத்ததோ, என்னவோ, அவன் தன் தாயை விட அவனை அருகே இருத்தி வைத்தது, ஜெனியின் கடுப்பை அதிகரிக்க, அங்க அமைதியாய் ஒரு பனிப்போர் ஆரன் அறியாமல் நடந்து கொண்டிருந்தது.

சாமுவேல் ஆரனிடம் மெதுவாக, “செல்லம், கௌதம் வேலைய பார்க்கணுமே . நாங்க கூட இருக்கோம் அவன் போயிட்டு வரட்டும்” என சொல்ல,

சாமுவேலை முறைத்தவன், மனமே இல்லாமல், கௌதமை வேலையை பார்க்க செல்ல அனுமதிக்க, அவனின் நிலை புரிந்த கௌதம், ஆரன் உறங்கும் நேரம் மட்டும் அங்கேயே, தனது மொத்த வேலையையும் ஒரு அறையை ஒதுக்கி பார்க்குமாறு வைத்துக்கொண்டான்.

அவனின் சிறு சிறு தேவையையும் பார்த்து பார்த்து கவனிப்பது, தனது புதிதான பைனான்ஸ் கம்பெனி அதே வாரத்தில் துவங்க இருப்பதால் அது குறித்த வேலைகள் , ஆரன் நிலைக்கு காரணமானவர்களுக்கு கொடுக்க வேண்டிய பதிலடிக்கு தேவையானதை செய்வது என கௌதமிற்கு ஓய்விற்கும் நேரமில்லாது இருக்க,

அவனின் செல்லம்மாவின் தவறிய அழைப்பை பார்த்தவன், ‘சாரி செல்லம்மா! இப்ப இருக்கற ஸ்விட்சுவேஷன்ல, நா உன்கூட பேசினா, அடுத்த செக்கண்ட் உன்ன பார்க்க தோணும். அது இப்ப சாத்தியமே இல்ல. ஆரன் வீட்டுக்கு போகட்டும். உடனே உன்ன வந்து நேருல பார்க்கறேன்’ என மானசீகமாய் உரையாடியவன், அவளுக்கு அழைக்காமலேயே காலம் கடத்தினான்.

நாட்கள் செல்ல செல்ல, காயத்ரியின் நடவடிக்கைகளை வைத்து சுமி, ‘இவள இப்படியே விடக்கூடாது. இன்னைக்கு பேசி அவள சரி செய்யணும்’ என்ற முடிவோடு அவளுடனே கிளம்பி வந்தவள், அவளின் செயல்களுக்கு தடைவிதிக்காமல் பார்த்திருக்க,

எப்போதும் போலவே அந்த கல்மேடையில் அமர்ந்தவள், சிறிது நேரத்தில் கௌதமிற்கு அழைப்பதும், அது எடுக்கப்படாமல் போக கண்ணில் நீர் கோர்க்க வாயிலை பார்ப்பதும், மீண்டும் தொலைபேசியில் முயற்சிப்பதுமாய் இருக்க, பொறுமையிழந்த சுமி,

“காயத்ரி நீ செய்யறது சுத்த மடத்தனமா தெரியல. யாரோ ஒருத்தன் வந்தான் மனச பரிகொடுத்தேன்னு சொல்லிட்டு திருஞ்சே. இப்போ அவன் வந்து போன தடமே இல்லாம இருக்கு. நீ விடாம அவன தேடற அவன் வர்றதா இருந்தா இவ்வளவு நாள் ஆகியுமா வராம இருப்பான்?!” என கேட்கும் போதே, ஏதோ சொல்ல வாய் திறந்த காயத்ரியை கை காட்டி நிறுத்தியவள்,

“சரி வரமுடியாத அளவு வேலையாவே இருக்கட்டும், அட்லிஸ்ட் ஒரு கால் பண்ணி பேச கூட முடியாத அளவு பிசியா இருக்க, அவன் என்ன பெரிய கம்பெனி எம் டீ யா?! இல்ல சீ ஈ ஓ வா… ?! ஒரு சாதாரண வெர்க்கர்… அவன் உன்ன அவாய்ட் பண்றது நல்லா தெரிஞ்சும், நீ இப்படி உன்ன வருத்திட்டு காத்திருக்கறது வேஸ்ட்.. போய் கண்ணாடில பாரு உன்ன. எப்படி மாறி போயிருக்க இந்த ரெண்டு மூனு நாள்ல..?!” என கோபமாய் ஆரம்பித்து, ஆதங்கத்தோடும், அக்கரையோடும் பேசியவளின் பேச்சில் உள்ள நியாயம் புரிந்தாலும், மனதால் அதை ஏற்க முடியாது தவித்தவள் கண்ணீரில் மூழ்க…

“ச்சை! முதல்ல அழுறத நிறுத்து. எதுக்கெடுத்தாலும் அழுதுட்டு இருந்து மனுஷிய கொலைவெறி ஆக்காத, அவனோட பேர், வேலை பார்க்கற இடம் ரெண்ட வச்சு அங்க போய் விசாரிக்கலாமான்னு அடுத்து யோசிச்சு வச்சிருந்தா, அத இதோட மறந்திடு…! ஏன்னா அவன் அங்க வேலை பார்க்கறானான்னு எனக்கு இப்ப டவுட்டா இருக்கு. போ, போய் ஒழுங்க மூஞ்சிய கழுவிட்டு, அதோட அவன பத்தின எண்ணத்தையும் சேர்த்து கழுவிட்டு வந்து, எந்த காரணத்திற்காக இங்க வந்தையோ அத பாரு” என சொல்லி கையோடு அவளை ரெஸ்ட்ரூம் நோக்கி இழுத்து சென்றாள் சுமி.

இவர்கள் பேச ஆரம்பிக்கும் போதே, எப்போதும் போல காயத்ரியின் நிலையை கண்டு சந்தோஷம் கொள்ளவென தன் குழுவோடு வந்த ஸ்வேதாவின் காதுகளில் சுமியின் பேச்சு விலவும்,

‘அடப்பாவி! உனக்கு கௌதம் பத்தி எதுவும் தெரியாமையா இப்படி பைத்தியம் மாதிரி அவனுக்காக காத்திட்டு இருக்க. நா கூட நீயும் பணத்த வச்சு மயங்கிட்டையோ ன்னு நினச்சேன். பரவாயில்ல, நீ அதே அம்மாஞ்சி ன்னு ப்ரூப் பண்ணிட்ட..’ என நினைத்தவள்,

‘ஸ்வேதா, சரியான டைம் ! இப்ப கரெக்ட்டா, ப்ளே பண்ணா , ஜோடி புறாவ திரிய வேண்டிய ரெண்டையும், அழகா வெட்டி விட்டுடலாம்’ என முடிவு செய்தவள், அதற்காக என்ன என்ன செய்ய வேண்டும். எதை எப்போது ஆரம்பிக்க வேண்டும் என்பதை தனது குழுவிற்கு சொல்லி வைத்து தக்க நேரத்திற்கு காத்திருந்தாள்.

error: Content is protected !!