கௌதம் மற்றும் ஆரனின் இன்டன்ஷிப் வேறு துவங்கியதால், கௌதம் தனது நிறுவனத்திலும், ஆரன் அவர்களின் நிறுவனத்திலும் தொடர்ந்து இருக்கவேண்டிய நிலையில் அவர்களும் முன்பு போல எப்போதும் உடன் இருக்க முடியாது போனது.

காயத்ரி தேர்வு முடிந்த உடன் ஸ்ரீரங்கம் செல்ல, கௌதம் ஆயிரம் பத்திரம் கூறி.. அவளை பேருந்து நிலையம் வரை அழைத்து வந்தவன்.. “செல்லம்மா.. உன்ன ஊருக்கு தனியா அனுப்ப எனக்கு இஷ்டமே இல்ல.. நா வேணுமின்னா, இப்படியே கார்ல கொண்டு போய் விடவா… ?!” என்றவனுக்கு, சிறு முறைப்பை பதிலாக தந்தவள், ‘அடிவிழும்… போய் ஒழுங்கா வேலைய பாருங்க.. ஓப்பி அடிக்காம!’ என சைகையால் பதில் சொல்லி இறங்க போனவளை தடுத்தவன்…

“நா .. உன்ன ரொம்ப மிஸ் பண்ணுவேன் செல்லம்மா… போகணுமா கண்டிப்பா…?!” என மீண்டும் கேட்க..

காயத்ரிக்கோ.. தனக்கு விபத்து நடந்த போது வந்த அவளின் தாய், ஊருக்கு வந்து சில நாட்கள் இருக்க கேட்ட போதும், தனது தேர்வை முன்னிட்டு மறுப்பு தெரிவித்து விட்டு, இப்போதும் போகாமல் இருந்தால் நன்றாக இருக்காது… அதோடு கௌதம் விசயத்தை சொல்லாமல் இருப்பதும் ஒரு வித உறுத்தலை கொடுக்க… தனது போனில், “நா எப்படியும் போயிட்டு பத்தே நாளுல திரும்ப வரபோறேன். என்னோட ப்ராஜக்ட் விசயமா… அப்புறம் ஏன் இப்படி… ?! ஜஸ்ட் பத்து நாள் தானே…” என டைப் செய்து கேட்க….

“என்ன ஜஸ்ட் பத்து நாளா… ப..த்..து.. நாள்!!!”  என இழுத்து சொன்னவன்… “போடீ.. வர.. வர உனக்கு, என் கூட இருக்க பிடிக்கல போல, அதான் விட்டுட்டு போறதுல குஷியா இருக்க…” என முகம் சுருக்கி, சிறு பிள்ளையாய் பேசுபவனை பார்க்கும் போது, அவன் சொன்ன வார்த்தையை தப்பான விதத்திலோ, அல்லது அதற்கு கோபம் கொள்ளவோ காயத்ரியால் முடியவில்லை.. மாறாக சிரிப்பே வந்தது…


அவனின் தாடையை பிடித்து செல்லம் கொஞ்சுவது போல ஆட்டியவள் கண் பாவனையிலேயே, “ப்ளீஸ்.. என்னோட அம்மூ இல்ல.. போயிட்டு உடனே வந்திடுவேன்.. நீங்க அதுவரை சமத்தா வேலைய பாருங்க !” என சொல்ல…

அவளின் செய்கையிலும், கண்ணின் பாவத்திலும் மயங்கியவன், “இப்படியெல்லாம் பண்ணிட்டு.. போறேன்னு சொன்னா.. வேணாமுன்னு சொல்ல தோணல தான்…! சரி போயிட்டு வா..  ஆனா, தினமும் நீ ஒரு பத்து நிமிஷமாவது வீடியோ கால் வர்ற.. நைட்… நீ கால் பண்ணல.. அடுத்த நாள் விடியல்ல உன் வாசல்ல வந்து நிற்பேன்.. டீலா? நோ டீலா?” என கேட்டவனுக்கு ,

“சரி… டீல்!” என கையால் குறி காட்டியவள், காரிலிருந்து இறங்க.. உடன் நடந்தபடியே… “செல்லம்மா, நீ அங்க என்ன நடந்தாலும், என்கிட்ட மறைக்க கூடாது. அது எந்த மாதிரியான விசயமா இருந்தாலும் சரி.. கண்டிப்பா சொல்றேன்னு வாக்கு கொடு” என கேட்க…

“உங்ககிட்ட மறைக்க, எனக்கு எதுவுமே இல்ல.. கண்டிப்பா சொல்றேன்” என எழுதி காட்டியவள், அவனின் ஏக்கப்பார்வையை தவிர்த்து, தனது தாய்வீடு சென்றாள்… அங்கே காத்திருக்கும் இம்சையை பற்றி அறியாது…

திருச்சி பேருந்து நிலையத்திற்கே  அழைத்து போக வந்த ராமை பார்த்து மிகவும் ஆச்சர்யமாகி போனது காயத்ரிக்கு.. ஆனால் உடன் ஒரு இம்சையோடு வந்ததை அறிந்த போது முதலில் வந்த இதம் மறைந்து, ‘யார் கூப்பிட வர சொன்னா?!’ என்ற எண்ணமே தோன்றியது…

மாலதியின் அண்ணன் என அறிமுகம் செய்யப்பட்ட மாருதியை பார்த்ததும், அந்த பெயருக்கு தகுந்த உருவம் தான் தோன்றியது காயத்ரிக்கு.. அவனின் பார்வை வேறு காயத்ரிக்கு அறுவறுப்பையே தந்தது. அவள் மற்றவரின் பார்வை பற்றி இதுவரை ஆராய்ந்ததில்லை என்றாலும், இந்த மாருதியின் பார்வை அவளுக்கு ஒரு வித அவஸ்த்தையை கொடுத்தது என்னவோ உண்மை.

காதலாக பார்த்தாலும், கௌதம் கண்ணில் எப்போதும் இது போன்ற கயமை இருந்தது இல்லை. அதே போல ஆரன் கண்ணில் பாசத்தை தவிர வேறு இதுவரை அவள் கண்டதில்லை.

வீட்டிற்கு வந்த அன்று சொந்தங்களும், அக்கம் பக்கம் இருப்பவர்களும், அவளை வார்த்தையால் பாடாய் படுத்தி விட்டு செல்ல, அதிலேயே ஓய்ந்து போனாள் காயத்ரி..

இரவு கௌதமுக்கு கொடுத்த வாக்கு படி அழைக்க, அவன் பார்த்தவுடனே கண்டு கொண்டு.. “இதுக்கு தான், நா போக வேணாமுன்னு சொன்னேன்! கொஞ்ச பேச்சா பேசினாங்க ஹாஸ்பிடல்ல..?! இங்கையே இப்படி! அங்க அதவிட பேசுவாங்கன்னு தான் போக வேணாமுன்னு சொன்னேன். கேட்டையா?!” என ஆத்திரம் தீர கத்திவிட்டே ஓய்ந்தான்..

கத்தி முடித்த போது தான், அவளின் ஓய்ந்த தோற்றம் மனதில் உறுத்த.. “சாரி செல்லம்மா.. விடு, போ போய் நல்லா தூங்கு.. ரெஸ்ட் எடு.. நா நாளைக்கி கூப்பிடுறேன்..” என அவளின் ஓய்வுக்காக அழைப்பை துண்டித்தவன், டென்ஷனில் இப்போதெல்லாம் வரும் தலைவலி வேறு படுத்த, தலையை கையால் தங்கிய படியே படுக்கையில் சரிந்தான்.

அடுத்த இரு நாட்களும், ஒரு வித அமைதியில் கழிய.. மாருதி காயத்ரியிடம் வழிய வந்து பேசுவதும், சில சமயத்தில் கையை பிடிப்பதும் நடக்க, அதை அவள் தாயிடம் சொல்ல வரும் போது, மாலதி வழி மறைத்து சொன்ன தகவலில் காயத்ரிக்கு தலை சுற்றி போனது.

“காயும்மா, அவரு என்னோட அண்ணா தானே..  அப்போ உனக்கு கட்டிக்கற முறை.. நல்ல வேலைல இருக்கான்.. அவருக்கு சொந்தமுன்னு சொல்லிக்க, எங்க குடும்பம் மட்டும் தான்..

உன்னோட குறை தெரிஞ்சுமே, கட்டிக்க சம்மதம் சொல்லிட்டான். உன் அண்ணாக்கு  இப்பவே கல்யாணத்த முடிக்க ஆசை தான்… மாமி, தான் அவ படிப்பு முடியட்டுமின்னு தள்ளி போட்டுன்டு இருக்கா, கட்டிக்க போற பொண்ணுகிட்ட பேசறதும் பழகறதும் தப்போ..?!” என அவளின் தலையில் நெருப்பை கொட்டிவிட்டு செல்ல, ‘இந்த நிலையில் எப்படி கௌதம் பற்றி சொல்வது?!’ என புரியாது விழி பிதுங்கி நின்றாள்.

இருந்தாலும் விடாது அவளின் ‘தாயிடமாவது சொல்லிட வேண்டும்!’என எடுத்த முயற்சிகளை அனைத்தையும், மாலதி தடுத்துவிட.. அவள் போட்டு வந்த திட்டம் அனைத்தும் பாழாகி போனது.

கௌதமிற்கு, அவளின் சோர்ந்த தோற்றம், அங்கு எதோ சரியில்லை என்பதை காட்ட, பலமுறை அழுத்தி கேட்ட போது, வேறு வழியில்லாமல் நடந்த அனைத்தையும் மெசேஜாக அனுப்பி வைக்க..

“லூசு.. இதுக்கா இவ்வளவு அப்செட்டா இருக்க.. ?! இப்ப என்ன வீட்டுல பேசியிருக்காங்க அவ்வளவு தானே..! உன்னோட அம்மா தான் உன் படிப்பு முடியற வரை இந்த கல்யாணம் வேணாமுன்னு சொல்லிட்டாங்க தானே..!

விடு நமக்கு இன்னும் டைம் இருக்கு.. அதுக்குள்ள உனக்கு பேச்சு வர செய்யற, ட்ரீட்மெண்டும் சரியா வந்தா, நீயே தயங்காம உன்னோட விருப்பத்த சொல்லிடலாமே…!!

எப்பவும் என்ன நம்பு… இப்ப போயி மிச்சம் இருக்கற நாலு நாள, அம்மா கூட ஜாலியா என்ஜாய் பண்ணு… அப்புறம் வந்துட்டு அம்மாவ மிஸ் பண்ணறேன்னு சொன்னா அவ்வளவு தான்…!” என தைரியப்படுத்தி வைத்தவன்..

“செல்லம்மா.. நீ கவலையே படாத அடுத்த முறை, நீ தைரியமா .. அவங்க முன்னாடி இந்த கல்யாணம் நடக்காதுன்னு சொல்லற மாதிரி செய்ய வேண்டியது என்னோட பொறுப்பு…” என வாய்விட்டு சொன்னவன்.. அடுத்தடுத்து, ‘எப்படி செய்வது?’ என திட்டமிட்டு, காயத்ரியின் வருகைக்காக காத்திருந்தான்.

இப்போது தான் செய்யும் செயலே தன்னிடமிருந்து காயத்ரியை பிரிக்கும் என அறிந்திருந்தால் செய்யாது விட்டுருப்பானோ…?!

******

காயத்ரியை தினமும் பார்க்க முடியாத ஏக்கத்தை தீர்ப்பதற்காகவும், அவளின் இப்போதைய நிலையில் வெளியே எங்கும் செய்வது சரிவராது என்பதாலும், அவளின் ப்ராஜெக்ட்டை செய்ய கௌதமின் நிறுவனத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நேற்று இரவே ஸ்ரீரங்கத்திலிருந்து வந்தவள், அன்று தான் முதன் முறையாக அவளவனின் நிறுவனத்திற்கு வந்தாள். அதன் அமைப்பிலும், அதன் கம்பீரத்திலும் மிரட்சி அடைந்து நின்றவளை, அவள் வரவை எதிர்பார்த்திருந்த கௌதம் அவனின் அறையின் சிசிடிவி மூலம் பார்க்க, அவளின் மிரட்சி சிறு புன்னகையையே தந்தது.

தனது உயரம் பற்றி நன்கு அறிந்தவள், அவனின் நிறுவனம் குறித்தும் அறிந்து வைத்திருப்பவள், ஒவ்வொரு முறையும், அது அனைத்தும் இன்னும் சிறிது காலத்தில் அவளுக்கானது என்பது நன்றாக தெரிந்தும், இப்படி பார்ப்பது…. அவளின் குணத்தை அழகாய் வெளிபடுத்தியது. பணத்திற்காக எத்தனையோ பேர், தன்னிடம் வழிய வந்து பேச முயற்சிப்பதும், நெருங்க நினைத்ததும் பார்த்து பழகிய அவனுக்கு, அவனின் செல்லம்மாவின் இந்த மிரட்சி கூட பெருமையாகவே இருந்தது.

கௌதமின் உத்தரவு படி, அவனின் பிஏ நேராக காயத்ரியை கௌதமின் அறைக்கே அழைத்து வர, இதுவரை பார்க்காத புது கௌதமை கண்ட காயத்ரி அசந்து, சிலையாகி நின்றாள். கௌதமிடம் இயல்பாகவே ஒரு வித கம்பீரம் இருக்கும்.. ஆனால் அது, அந்த இடத்தில், அவன் அமர்ந்திருக்கும் விதத்தில்.. மேலும் பல மடங்கு கூடி தான் தெரிந்தது அவளுக்கு….

அவள் நின்ற விதத்தில்… சிரிப்பு வந்தாலும், “ஹலோ மேடம்… என்ன ப்ரீஸ் ஆகி நிக்கறீங்க..?! ஒரு முதலாளிய பார்த்தா, விஸ் பண்ணற பழக்கம் கிடையாதா?!” என கேட்க,

அவனின் கேள்விக்கு பதிலாக, கையால் ஒரு சல்யூட் அடித்தவள், பாவனையில், “இது போதுமா.. இல்ல வேற மாதிரி வணக்கம் வைக்கணுமா?!”  என கிண்டலாய் கேட்க, வாய்விட்டு சிரித்தவன்,

“இந்த மாதிரி சேட்டை எல்லாம், என்கிட்ட மட்டும் தான்.. வெளிய அம்மாஞ்சி மாதிரி மூஞ்சிய வச்சிட்டு…  ஊர் உலகத்த ஏமாத்திட்டு இருக்க.. நீ!” என சொல்ல, அவனின் அருகே வந்தவள், அடிக்க கை ஓங்கிட, சட்டென அவள் கையை பிடித்து அவளை திருப்பியவன், அவனின் மடியில் அமர்த்தி, அனைத்திருந்தான் அவளின் வாயிறோடு கை போட்டு….

நிமிடத்தில் நடந்த முடிந்ததில், “என்ன ஆச்சி இப்ப…!” என குழம்பி போய் விழித்தவள், அவனின் மடியில் அமர்ந்திருப்பது உணர, அவனிடமிருந்து விலகி செல்ல செய்த அனைத்து முயற்சியும், வீணாகி போக, “பிடிவாதத்துக்குன்னே பிறந்தவர்கிட்ட போராட நினச்ச என்னை சொல்லணும்…!” என்றபடி அமைதியாய் அமர்ந்துவிட்டாள்.

“இது நல்ல புள்ளைக்கு அழகு. செல்லம்மா.. நானா நினைக்காம என்கிட்ட இருந்து, நீ விலகி போக முடியாது!” என சொன்னவனின் வார்த்தை தந்த அழுத்தத்தில், அவனை கேள்வியாய் பார்க்க,

அதை சொன்ன போது இருந்த முகத்தின் கடுமையை நொடியில் மாற்றியவன், “புரியலையா செல்லம்மா..! நா கைய எடுக்காம… நீயா, என்ன செஞ்சாலும் இங்க இருந்து நகர முடியாது இல்ல.. அத சொன்னேன்”என… சந்தேகமாகவே அப்போதும் பார்த்தவளை….

“அட நம்பு செல்லம்மா…!” என சொல்ல… “விடுங்க இது ஆஃபீஸ், யாராவது வந்தா என்ன செய்ய…?! தப்பா நினைப்பாங்க!” என ஜாடையாய் சொல்ல…

“செல்லம்மா… இந்த ரூம்,  ஐயாவோட கோட்டை..! இங்க யாருமே என்னோட பர்மிஷன் இல்லாம வரமாட்டாங்க…” என்றவாரே, அவளை தன்னோடு இறுக்கியவன், அவளின் கன்னத்தில் இதழ் பதிக்க, அவனின் மார்பிள், தனது முதுகு பகுதி நன்றாக பதிய வாகாக சாந்தவள், அடுத்த நொடி கீழே விழுந்திருந்தாள் கௌதமினால்…


கௌதம், காயத்ரி கன்னத்தில் இதழ் பதித்த நேரம், சரியாக கதவை திறந்து  சதா அங்கிள் உள்ளே நுழைய.. பதட்டத்தில் எழுந்தவன், காயத்ரியின் மோன நிலை உணராது இருக்க.. அவனின் வேகத்திற்கு, நிற்க இயலாது… கீழே விழுந்தாள் காயத்ரி.. அவளின் இப்போதைய பேசா தன்மை கௌதமிற்கு உதவியாகி போனது.

சதாசிவம், அறைக்குள் வரும் போது, நல்ல வேளையாய், கையில் வைத்திருந்த ஃபைல் கீழே விழ, கௌதம் காயத்ரி நிலை அவருக்கும் தெரியவில்லை.

கௌதமிற்கோ… ‘அச்சோ.. அங்கிள்! தட்டி பர்மிஷன் கேட்காதீங்கன்னு, சொன்னப்ப எல்லாம் விட்டுட்டு… இப்படியா தடலடியா செய்வாறூ… ?! கொஞ்சம் சுதாரிக்காம போயிருந்தா … டேட்டலா மானம் ப்ளைட் ஏறியிருக்கும்…!’ என நினைத்தவன்..

அப்போது தான் காயத்ரி நினைவில் வர.. அவளை அவசரமாக பார்க்க, அவளோ தரையில் இருந்த படியே அவனை முறைத்துக்கொண்டிருந்தாள்.

‘போச்சு.. போச்சு.. முறைக்கறாளே.. இதுக்கு எத்தன அடிவிழுமோ..  கெத்தா அவகிட்ட சொன்ன நேரத்துலையா… அங்கிள் சொதப்பனும்….!’ என புலம்பியவன், ‘ப்ளீஸ்.. செல்லம்மா! அவரு போனதும், நீ என்ன சொன்னாலும் கேட்கறேன். இப்ப காட்டி கொடுக்காத…’ என விழியால் இரஞ்ச…

அதற்கும் முறைப்பையே பரிசாக்கினாள் அவனின் செல்லம்மா… அதற்குள் கீழே விழுந்த அனைத்து பேப்பர்களையும், எடுத்து நிமிர்ந்த சதாசிவம், கௌதம் நின்றிருக்கும் விதம் பார்த்தவர்,

“என்ன ஆச்சு கௌதம்?! எதுக்கு இப்படி நிக்கற..?! ஏன் இப்படி வேர்த்திருக்கு..?! ஏசி சரியா வேலை பார்க்கலையா?!” என கேட்ட படியே வந்தவரின் கண்ணுக்கு, அப்போது தான் காயத்ரி தெரிய, “யார் கௌதம், இந்த பொண்ணு?! நிலத்துல உக்காந்து என்ன செய்யறா?!” என கேட்க….

“அது ஒண்ணுமில்ல அங்கிள்… சும்மா… அது… வந்து…” என பேசியபடியே யோசித்தவன்… “அங்கிள் இந்த பொண்ணு தான்… ப்ராஜெக்ட் செய்ய கேட்டிருந்தாங்களே… என்னோட காலேஜ் ஜீனியர் அவங்க… இப்ப தான் வந்தாங்க… அவங்களால பேச முடியாதா.. அதான் கிரவுண்ட் ப்ளோர்ல இருக்கற கேபினான்னு கேட்க…  கீழ உக்காந்து ஜாடை காட்டிட்டு இருக்காங்க… அதான் நானும் எழுந்து பார்த்துட்டு இருந்தேன்..!” என ஏதோ சொல்லி சமாளித்தான்..


“மிஸ் காயத்ரி.. நீங்க சரியா சொன்னீங்க. கீழ போயி, லெப்ட்ல திரும்பினா ,அங்க சர்மா ன்னு ஒருத்தர் இருப்பாரு. மத்த டீட்டெயில்ஸ், நா அவர்கிட்ட பேசிட்டேன். நீங்க போலாம்…” என கடகடவென சொல்லிவிட்டு, “அங்கிள் நீங்க என்ன விசயமா வந்தீங்க…?!” என பேச்சை திசை மாற்றியவனிடம்…

“அதுவா கௌதம்.. அந்த பைனான்ஸ் கம்பெனியில சின்ன சிக்கல்.. சில விசயம் குழப்பமா இருந்துச்சு.. அதான் உன்கிட்ட கிளியர் செஞ்சிட்டு போலாமின்னு வந்தேன்!” என்றபடி அமர…

வேறு வழியில்லாது, கௌதமை அவர் அறியாதவாறு முறைத்தபடி.. வெளியோறினாள் காயத்ரி. கௌதமின் மனமோ… ‘எல்லாம் இவளால தான்..! நானே ஒழுங்கா.. நீ தான், இங்க அடுத்த முதலாளின்னு முக்கியமானவங்களுக்கு அறிமுகப்படுத்தி..  அப்புறம் உன் வேலைய செய்யுன்னு, சொன்னா… கேட்டாளா…!


இப்பவே தெரிஞ்சா.. என்னால கத்துக்க முடியாது.. எல்லாரும் ஒரு டிஸ்டன்ஸ் விட்டு பழகுவாங்க.. தப்பா இருந்தாலும், அதை சரின்னு சொல்லிட்டா, கத்துக்கவே முடியாதுன்னு ஆர்யூ செஞ்சா…!

இப்ப பாரு, அதனால அங்கிளுக்கு தெரியாம, திருட்டு தனம் செய்ய வேண்டி ஆகிடுச்சு…” என அவனின் செல்லம்மாவை திட்டியவனுக்கு, அவளின் வார்த்தையையும் மீறி, அவளின் உண்மை அடையாளத்தை காட்டி இருந்தாள், அவள் அடைய போகும் பெரும் துயரில் இருந்து காத்திருக்கலாம் என்பது தெரியவில்லையே….!!!!!
Written by

Ardent reader, kirukkufying something, want to travel with characters around me.

error: Content is protected !!